அத்தியாயம் 95

அனைத்தும் மிக எளிமையானதாக இருக்க வேண்டும் என்று ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள், உண்மையில் இது அவ்வாறு இல்லை. எல்லாவற்றிற்குள்ளும் மறைந்திருக்கும் இரகசியங்கள் உள்ளன, அதே போல் எனது ஞானமும் எனது ஏற்பாடுகளும் உள்ளன. எந்த விவரமும் கவனிக்காமல் விட்டு விடப்படவில்லை, மேலும் அனைத்தும் என்னாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. என்னை உண்மையாக நேசிக்காத அனைவரின் மீதும் மகா நாளின் நியாயத்தீர்ப்பு வருகிறது (மகா நாளின் நியாயத்தீர்ப்பு இந்த நாமத்தைப் பெறும் ஒவ்வொரு நபரையும் இலக்காகக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்), மேலும், இது அவர்களை அழவும் பற்கடிக்கவும் செய்கிறது. இந்த அழுகைச் சத்தம் பாதாளத்திலிருந்தும் நரகத்திலிருந்தும் வருகிறது; அழுவது ஜனங்கள் அல்ல, பிசாசுகளாகும். எனது நியாயத்தீர்ப்புதான் இந்த அழுகையைக் கொண்டு வருகிறது, இது எனது நிர்வாகத் திட்டத்தின் இறுதி இரட்சிப்பை ஜனங்களுக்குக் கொண்டு வருகிறது. வழக்கமாக, நான் சிலர் மீது சில நம்பிக்கைகளை வைத்திருப்பேன். ஆனால் இப்போது பார்த்தால், நான் இவர்களை ஒவ்வொருவராகக் கைவிட வேண்டும், இது எனது கிரியையை எட்டியிருக்கும் கட்டமாக இருக்கிறது, மேலும் இதை யாராலும் மாற்ற முடியாது. என்னுடைய முதற்பேறான குமாரர்களாகவோ அல்லது என் ஜனங்களாகவோ அல்லாதவர்கள் அனைவரும் கைவிடப்பட்டு என்னிடமிருந்து விலகிச் செல்ல வேண்டும்! சீனாவில், எனது முதற்பேறான குமாரர்கள் மற்றும் எனது ஜனங்களைத் தவிர, மற்ற அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினராக இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சீனா என்னால் சபிக்கப்பட்ட ஒரு தேசமாக இருக்கிறது, மேலும் எனது ஜனங்களில் சிலர் எனது எதிர்காலக் கிரியைகளுக்கு ஊழியம் செய்பவர்களே அல்லாமல் வேறல்ல என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை வேறு விதமாகச் சொல்வதென்றால், என் முதற்பேறான குமாரர்களைத் தவிர, வேறு யாரும் இல்லை—அவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். என் செயல்களில் நான் மிகவும் தீவிரமானவன் என்று நினைக்காதே—இது எனது ஆட்சிமுறை ஆணையாகும். என் சாபங்களால் துன்பப்படுபவர்கள் என் வெறுப்புக்கு உள்ளானவர்களாவர், இது கல்லில் பொறிக்கப்பட்டதைப் போல நிலையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நான் தவறு செய்வதில்லை; என்னைப் பிரியப்படுத்தாத ஒருவரை நான் கண்டால், நான் அவர்களை வெளியே தள்ளிவிடுவேன்; நீ என்னால் சபிக்கப்பட்டவன் என்பதற்கும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததி என்பதற்கும் அதுவே போதுமான சான்றாக இருக்கிறது. நான் மீண்டும் உங்கள் மீது முத்திரையிடுகிறேன்—சீனாவில் எனது முதற்பேறான குமாரர்கள் மட்டுமே உள்ளனர் (ஊழியம் செய்யும் எனது ஜனங்களைத் தவிர), இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும். ஆனால் என் முதற்பேறான குமாரர்கள் மிகக் குறைவானவர்களாய் இருக்கிறார்கள், எல்லாரும் என்னால் ஏற்கனவே முன்குறிக்கப்பட்டிருக்கிறார்கள்—நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். உன் எதிர்மறைத் தன்மைக்கு நான் பயப்படவில்லை, நீ திரும்பி என்னைத் தாக்கி விடுவாய் என்று நான் பயப்படவில்லை, ஏனென்றால், நான் எனது ஆட்சிமுறை ஆணைகளைக் கொண்டிருக்கிறேன், மேலும் நான் உக்கிரக் கோபமுள்ளவராய் இருக்கிறேன். அதாவது, நான் மகாப் பேரழிவுகளை என் கரத்தில் வைத்திருக்கிறேன், நான் எதற்கும் அஞ்சுவதில்லை, அனைத்து விஷயங்களும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று நான் கருதுவதால், அந்த நாள் வரும்போது நான் உன்னை முழுமையாகக் கையாள்வேன். என்னுடைய முதற்பேறான குமாரனாக ஆவதற்கு ஒருவன் மனுஷனால் பரிபூரணப்படுத்தப்படவோ அல்லது பக்திவிருத்தி அடையவோ முடியாது—இந்த விஷயம் முழுவதுமாக எனது முன்குறிப்பில் இருக்கிறது. நான் யாரையெல்லாம் முதற்பேறான குமாரன் என்று சொல்கிறேனோ அவர்களே முதற்பேறான குமாரர்கள்; அதற்காகப் போட்டியிடவோ அல்லது அதைக் கைப்பற்றவோ முயற்சிக்க வேண்டாம். அனைத்தும் சர்வவல்லமையுள்ள தேவனாகிய என்னைச் சார்ந்திருக்கிறது.

ஒரு நாள் எனது ஆட்சிமுறை ஆணைகள் எப்படிப்பட்டது, எனது உக்கிர கோபம் எப்படிப்பட்டது என்பதைப் பார்க்க உங்கள் அனைவரையும் அனுமதிப்பேன் (அனைவரும் எனக்கு முன் முழங்காலை மடக்குவார்கள், அனைவரும் என்னை ஆராதிப்பார்கள், அனைவரும் என்னிடம் மன்னிப்புக்காகக் கெஞ்சுவார்கள், மற்றும் அனைவரும் கீழ்ப்படிகிறவர்களாக இருப்பார்கள்; நான் இப்போது தான், என் முதற்பேறான குமாரர்களை அதன் ஒரு பகுதியை மட்டும் பார்க்க அனுமதிக்கிறேன்). எனது முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதற்காக, நான் அநேகரைப் பலியிடும்படியாக (எனது முதற்பேறான குமாரர்களைத் தவிர மற்ற அனைவரையும்) தெரிந்தெடுத்திருக்கிறேன் என்பதையும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை அதன் சொந்தத் தந்திரமானத் திட்டத்திற்கே இரையாகும்படி விழப் பண்ணியிருக்கிறேன் என்பதையும் நான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அனைத்து சந்ததியினரையும் பார்க்க வைப்பேன். (எனது நிர்வாகத் திட்டத்தில், எனது முதற்பேறான குமாரர்களைத் தவிர—அனைவரும் எனது நிர்வாகத் திட்டத்தில் குறுக்கிடும்படி—சிவப்பான பெரிய வலுசர்ப்பமானது எனக்காக ஊழியம் செய்பவர்களை அனுப்புகிறது, ஆனால் அது அதன் சொந்த தந்திரமான திட்டத்திற்கே இரையாகும்படி விழுந்துபோகிறது, மேலும் அவர்கள் அனைவரும் என் கிரியைக்கு ஊழியம் செய்கிறார்கள். எனது கிரியை, எனக்காக ஊழியம் செய்ய அனைவரையும் அணிதிரட்டுதல் என்பதன் உண்மையான அர்த்தத்தின் ஒரு பகுதி இதுவேயாகும்.) இன்று, அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருக்கும் போது, நான் அனைத்தையும் அப்புறப்படுத்தி, என் காலின் கீழ் நசுக்கி, அதன்மூலம், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை நான் சிறுமைப்படுத்துவேன் மற்றும் அதை முற்றிலும் வெட்கப்படுத்துவேன் (அவர்கள் ஆசீர்வாதங்களைப் பெற தங்கள் வழிகளிலெல்லாம் பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் எனக்காக ஊழியம் செய்வார்கள் என்று ஒருபோதும் அவர்கள் நினைக்கவில்லை)—இதுவே எனது ஞானமாகும். இதைக் கேட்டதும், நான் உணர்வுகளோ இரக்கமோ இல்லாதிருக்கிறேன் என்றும், எனக்கு மனிதத்தன்மை இல்லை என்றும் ஜனங்கள் நினைக்கிறார்கள். நான் உண்மையில், சாத்தானிடம் உணர்வுகளோ இரக்கமோ இல்லாதவராக இருக்கிறேன், மேலும் நான் மனிதத்தன்மையை கடந்து நிற்கும் தேவனாக இருக்கிறேன். நான் மனிதத்தன்மை கொண்ட தேவன் என்று உன்னால் எப்படிச் சொல்ல முடியும்? நான் உலகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது உனக்குத் தெரியாதா? நான் எல்லாவற்றுக்கும் மேலானவர் என்பதும் உனக்குத் தெரியாதா? என் முதற்பேறான குமாரர்களைத் தவிர, என்னைப் போல் ஒருவனும் இல்லை, என்னுடைய மனநிலையை (மனுஷனுடைய மனநிலையை அல்ல, மாறாக தெய்வீக மனநிலையை) உடையவன் ஒருவனும் இல்லை, மற்றும் என் குணங்களைப் பெற்றிருப்பவன் ஒருவனும் இல்லை.

ஆவிக்குரிய உலகத்திற்கான வாசல் திறக்கப்படும் போது, நீங்கள் அனைத்து இரகசியங்களையும் பார்ப்பீர்கள், அது நீங்கள் ஒரு சுதந்திரமான உலகத்திற்குள் முழுவதுமாக பிரவேசிப்பதற்கும், என் அன்பான அரவணைப்பிற்குள் பிரவேசிப்பதற்கும், என் நித்திய ஆசீர்வாதங்களுக்குள் பிரவேசிப்பதற்கும் உதவுகிறது. என் கரங்கள் எப்போதும் மனிதகுலத்தை ஆதரித்திருக்கின்றன. ஆனால் மனிதகுலத்தில் நான் இரட்சிக்கும் ஒரு பகுதியும், நான் இரட்சிக்காத ஒரு பகுதியும் இருக்கிறது. (நான் “ஆதரவு” என்று சொல்கிறேன், ஏனென்றால் எனது ஆதரவு இல்லாமல், முழு உலகமும் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாளத்தில் விழுந்திருக்கும்.) இதை உணருங்கள்! இதுவே எனது நிர்வாகத் திட்டம். எனது நிர்வாகத் திட்டம் என்பது என்ன? நான் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தேன், ஆனால் ஒவ்வொரு தனி மனுஷனையும் ஆதாயப்படுத்த நான் ஒருபோதும் திட்டமிடவில்லை, மனிதகுலத்தின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே ஆதாயப்படுத்த வேண்டும். அப்படியானால் நான் ஏன் அநேக ஜனங்களை சிருஷ்டித்தேன்? என்னால், அனைத்தும் சுதந்திரமாகவும் விடுதலையுடனும் இருக்கிறது, நான் விரும்பியதைச் செய்கிறேன் என்று நான் முன்பே சொல்லியிருக்கிறேன். நான் மனிதகுலத்தைச் சிருஷ்டித்ததே, அவர்கள் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும், அதன் பிறகு, எனது முதற்பேறான குமாரர்களாகவும், என் குமாரர்களாகவும், என் ஜனங்களாகவும் இருக்கக் கூடிய மனிதகுலத்தின் ஒரு சிறு பகுதி உருவாக முடியும் என்பதற்காகத் தான் ஆகும். எனது முதற்பேறான குமாரர்கள், என் ஜனங்கள் மற்றும் எனது குமாரர்களைத் தவிர மற்ற அனைத்து மனுஷர்கள், நிகழ்வுகள் மற்றும் பொருள்கள் அனைத்தும் ஊழியம் செய்பவர்களாக இருக்கின்றனர் என்று கூறலாம், மற்றும் இவை அனைத்தும் அழிய வேண்டும். இவ்வாறு, எனது முழு நிர்வாகத் திட்டமும் முடிவடையும். இது எனது நிர்வாகத் திட்டம், இதுவே எனது கிரியையும் நான் செயல்படும் படிகளும் ஆகும். எல்லாம் முடிவடைந்ததும் நான் முழுமையாக இளைப்பாறுதலில் இருப்பேன். அந்த நேரத்தில் எல்லாம் சரியாகி விடும்; எல்லாம் சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் இருக்கும்.

எனது கிரியையின் வேகம் மனுஷக் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மிகவும் வேகமாக இருக்கிறது. இது நாளுக்கு நாள் மாறுகிறது, அதைத் தொடர முடியாதவர்கள் நஷ்டத்தை அடைவார்கள்; ஒவ்வொரு நாளும் புதிய ஒளியை மட்டுமே ஒருவரால் உறுதியாகப் பிடித்துக் கொள்ள முடியும் (எனது ஆட்சிமுறை ஆணைகளில் எந்த மாற்றமும் இல்லாதிருப்பதைப் போலவே, நான் ஐக்கியங்கொள்ளும் தரிசனங்களிலும் சத்தியத்திலும் இருப்பதில்லை). நான் ஏன் அனுதினமும் பேசுகிறேன்? நான் ஏன் உன்னைத் தொடர்ந்து பிரகாசிப்பிக்கிறேன்? அதற்குள் இருக்கும் உண்மையான அர்த்தம் உனக்குப் புரிகிறதா? பெரும்பாலான ஜனங்கள் இப்போது வரையிலும் சிரிக்கிறார்கள், கேலி செய்கிறார்கள், அவர்களால் சிரத்தையுடன் இருக்க முடிவதில்லை. எதுவாக இருந்தாலும், அவர்கள் என் வார்த்தைகளுக்கு மட்டும் கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அவற்றைக் கேட்கும் போது கடந்து செல்லும் கவலையை மட்டுமே உணர்கிறார்கள். பின்னர், எனது வார்த்தைகள் விரைவில் மறக்கப்படுகின்றன, விரைவில் அவர்கள் தங்கள் சொந்த அடையாளத்தை அறியாமல், அவர்கள் கவனக் குறைவுள்ளவர்களாகி விடுகிறார்கள். உன்னுடைய நிலை என்னவென்று உனக்குத் தெரியுமா? யாரேனும் எனக்காக ஊழியம் செய்தாலும் அல்லது என்னால் முன்னரே முன்குறிக்கப்பட்டுத் தெரிந்தெடுக்கப்பட்டாலும், அது எனது கரங்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது; இதை யாராலும் மாற்றியமைக்க முடியாது—இதை நானே செய்ய வேண்டும், அவர்களை நானே தெரிந்துகொண்டு முன்குறிக்க வேண்டும். நான் ஞானமற்ற தேவன் என்று சொல்ல யாருக்குத் தைரியம் இருக்கிறது? நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும், நான் செய்யும் அனைத்தும் என் ஞானம்தான். மீண்டும் ஒருமுறை எனது நிர்வாகத்தில் குறுக்கிடவோ அல்லது எனது திட்டங்களை அழிக்கவோ யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? நான் நிச்சயமாக அவர்களை மன்னிக்க மாட்டேன்! காலம் என் கரங்களில் இருக்கிறது மற்றும் நான் தாமதிக்க அஞ்சுவதில்லை; எனது நிர்வாகத் திட்டம் எப்போது முடிவடையும் என்ற காலத்தைத் தீர்மானிப்பது நான் அல்லவா? என்னுடைய ஒரே எண்ணத்தில் எல்லாம் இருக்கவில்லையா? செய்தாகி விட்டது என்று நான் சொன்னால் அது செய்து முடிக்கப்பட்டு விட்டது, முடிவடைகிறது என்று நான் சொன்னால் அது முடிவடைகிறது. நான் அவசரப்படவில்லை, நான் உரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். ஜனங்கள் என் கிரியையில் மூக்கை நுழைக்கக் கூடாது, தாங்கள் விரும்பும் வழியில் அவர்கள் எனக்காகக் காரியங்களைச் செய்யக் கூடாது. தன் மூக்கை நுழைப்பவன் எவனையும் நான் சபிக்கிறேன்—இது எனது ஆட்சிமுறை ஆணைகளில் ஒன்றாகும். நானே என் கிரியையைச் செய்கிறேன், எனக்கு வேறு யாரும் தேவையில்லை (அந்த ஊழியம் செய்பவர்களைச் செயல்பட நான் அனுமதிக்கிறேன், இல்லையெனில் அவர்கள் அவசரமாகவோ அல்லது கண்மூடித்தனமாகவோ செயல்படத் துணிய மாட்டார்கள்). எல்லாக் கிரியைகளும் என்னால் ஏற்பாடு செய்யப்படுகின்றன, மேலும் என்னால் தீர்மானிக்கப்படுகின்றன, ஏனென்றால், நான் ஒருவரே தேவனாக இருக்கிறேன்.

உலகின் அனைத்து தேசங்களும் அதிகாரத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன, மேலும் நிலத்திற்காக சண்டையிடுகின்றன, ஆனால் திகிலடைய வேண்டாம், ஏனென்றால், இவை அனைத்தும் என் ஊழியத்தில் உள்ளன. அவை என் ஊழியத்தில் இருக்கின்றன என்று நான் ஏன் சொல்கிறேன்? நான் ஒரு விரலைக் கூட அசைக்காமல் விஷயங்களைச் செய்கிறேன். சாத்தான்களை நியாயந்தீர்க்க, நான் முதலில் அவற்றுக்குள் தகராறு உண்டாக்கி, இறுதியில் அவற்றை நாசம் செய்து, அஅவற்றின் தந்திரமானத் திட்டங்களுக்கே அவை இரையாகும்படி விழப்பண்ணுகிறேன் (அவை அதிகாரத்திற்காக என்னுடன் போட்டியிட விரும்புகின்றன, ஆனால் அவை இறுதியாக எனக்காக ஊழியம் செய்கின்றன). நான் மட்டுமே பேசி, என் கட்டளைகளை வழங்குகிறேன், என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்கிறேனோ, அதையே அனைவரும் செய்கிறார்கள், இல்லையெனில் நான் உன்னை உடனடியாக அழித்து விடுவேன். இவை அனைத்தும் என் நியாயத்தீர்ப்பின் ஒரு பகுதியாகும், ஏனென்றால் நான் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறேன், எல்லாமே என்னால் நியமிக்கப்பட்டவையாக இருக்கின்றன. யாரெல்லாம் எதையாவது செய்கிறார்களோ, அவர்கள் அதை விருப்பமில்லாமல் செய்கிறார்கள், என் சொந்த ஏற்பாட்டினாலேயே அப்படிச் செய்கிறார்கள். விரைவில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளில், உங்களால் என் ஞானத்தால் நிறைந்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். பொறுப்பற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டாம், ஆனால் உங்களுக்கு துன்பங்கள் ஏற்படும் போது அடிக்கடி என்னிடம் நெருங்கி வாருங்கள்; எனது சிட்சையைக் குற்றப்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள், சாத்தானின் தந்திரமான சூழ்ச்சிகளுக்கு இரையாவதைத் தவிர்த்திடுங்கள் எல்லா வகையிலும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். நீங்கள் என் வார்த்தைகளிலிருந்து நுண்ணறிவுகளைப் பெற வேண்டும், நான் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டும், மேலும் நான் எதைக் கொண்டிருக்கிறேன் என்று பார்க்க வேண்டும். என்னுடைய அர்த்தமுள்ள பார்வைக்கு ஏற்ப நீங்கள் காரியங்களைச் செய்ய வேண்டும் மற்றும் பொறுப்பற்ற முறையில் செயல்படக் கூடாது. நான் செய்வதைச் செய்யுங்கள், நான் சொல்வதைச் சொல்லுங்கள். நான் இந்த விஷயங்களை உங்களுக்கு முன்கூட்டியே சொல்கிறேன், அதனால் உங்களால் தவறு செய்வதைத் தவிர்க்கவும், சோதனைக்கு ஆளாகாமல் இருக்கவும் முடியும். “என் தன்மை” மற்றும் “எனது உடைமைகள்” என்றால் என்ன? உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? நான் அனுபவிக்கும் வேதனையானது, என் சாதாரண மனிதத்தன்மையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதுவே என் தன்மையின் ஒரு பகுதியாகும், மேலும் எனது முழுமையான தெய்வீகத்தன்மையிலும் என் தன்மையைக் காணலாம்—இது உங்களுக்குத் தெரியுமா? எனது தன்மை இரண்டு அம்சங்களால் ஆனது: ஒரு அம்சம் எனது மனிதத்தன்மை, மற்றொன்று எனது முழுமையான தெய்வீகத்தன்மையாக இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களும் இணைந்துதான் முழுமையான தேவனை உருவாக்குகின்றன. எனது முழுமையான தெய்வீகத்தன்மை என்பது பல நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது: நான் எந்த நபராலும், காரியத்தாலும் அல்லது பொருளாலும் கட்டுப்படுத்தப்படுவதை அனுபவிப்பதில்லை; நான் எல்லா சூழல்களையும் கடந்து நிற்பவர்; நான் காலம் அல்லது இடம் அல்லது புவியியல் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்; உண்மையிலேயே என் கரத்தின் பின்புறத்தைப் போல எல்லா ஜனங்களையும், காரியங்களையும், விஷயங்களையும் நான் அறிவேன்; ஆனாலும் நான் இன்னும் மாம்சம் மற்றும் எலும்புகளை உடையவராய் இருக்கிறேன், நான் ஒரு நிலையான வடிவத்தில் இருக்கிறேன்; நான் இன்னும் ஜனங்களின் பார்வையில் இந்த ஆள்தத்துவத்தில்தான் இருக்கிறேன், ஆனால் சுபாவம் மாறியிருக்கிறது—அது மாம்சம் அல்ல, சரீரமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமேயாகும். என் முதற்பேறான குமாரர்கள் அனைவரும் எதிர்காலத்தில் இப்படித் தான் இருப்பார்கள்; பயணிக்க வேண்டிய பாதை இதுவேயாகும், அழிவுக்கு நியமிக்கப்பட்டவர்களால் தப்பிச் செல்ல முடியாது. நான் இதைச் செய்து கொண்டிருக்கும் போது, ஏற்கனவே முன்குறிக்கப்படாத அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் (இது என் வார்த்தைகள் துல்லியமானவைகளா என்று பார்க்க சாத்தான் என்னைச் சோதிப்பதாகும்). ஏற்கனவே முன்குறிக்கப்பட்டவர்கள் எங்கு சென்றாலும் அதற்குத் தப்பிக்க முடியாது, மேலும் என்னுடைய இந்தச் செயலின் பின்னணியில் உள்ள கொள்கைகளை நீங்கள் இதன் மூலம் பார்ப்பீர்கள். “எனது உடைமைகள்” என்பது எனது ஞானம், எனது அறிவு, எனது வளம் மற்றும் நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் குறிக்கிறது. எனது மனிதத்தன்மை மற்றும் எனது தெய்வீகத்தன்மை ஆகிய இரண்டும் அதைக் கொண்டிருக்கின்றன. அதாவது, என் மனிதத்தன்மையால் செய்யப்படுகிறவை, அதோடு கூட, என் தெய்வீகத்தன்மையால் செய்யப்படுகிறவை ஆகிய அனைத்தும் என் உடைமைகளாய் இருக்கின்றன; இவற்றை யாரும் எடுத்துச் செல்லவோ அகற்றி விடவோ முடியாது; அவை என் உடைமைகளில் உள்ளன, அவற்றை யாராலும் மாற்ற முடியாது. இது எனது மிகக் கடுமையான ஆட்சிமுறை ஆணை (ஏனென்றால், மனுஷனின் கருத்துக்களில், நான் செய்யும் பல விஷயங்கள் அவர்களின் எண்ணங்களுக்கு ஒத்துப்போவதாக இல்லை மற்றும் மனுஷனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன; இதுவே ஒவ்வொரு தனி நபரும் மிக எளிதாக குற்றம் செய்கிற அளவாகும், இது மிகவும் கடுமையானதாகவும் இருக்கின்றது. அதனால் அவர்களுடைய ஜீவன்கள் அது முதற்கொண்டு இழப்பை சந்திக்கின்றன). நான் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவதை நீங்கள் அக்கறையுடன் செய்யும்படி அணுக வேண்டும்—நீங்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்று நான் மீண்டும் சொல்லுவேன்!

முந்தைய: அத்தியாயம் 94

அடுத்த: அத்தியாயம் 96

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக