அத்தியாயம் 21

இப்போது பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஒரு புதிய வானத்திற்குள்ளும் புதிய பூமிக்குள்ளும் உங்களைக் கொண்டு வந்துள்ளது. எல்லாக் காரியமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. என் கரங்களில் எல்லாக் காரியமும் இருக்கிறது. எல்லாக் காரியமும் புதிதாகத் தொடங்குகிறது! ஜனங்களுடைய எண்ணங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை மற்றும் அது அவர்களுக்கு அர்த்தமற்றதாக இருக்கிறது. எனினும் நான் தான் கிரியை செய்து கொண்டிருக்கிறேன், என் ஞானம் அதற்குள் இருக்கிறது. ஆகையால், உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் விட்டுவிடுவதைக் குறித்தும், தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணித்து அதைப் புசித்துக் குடிப்பதைக் குறித்தும் மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும். எந்தவிதமான சந்தேகங்களும் வேண்டாம். நான் இவ்வாறு கிரியை செய்வதால், ஒரு பரிசுத்தமான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வேன். உண்மையில், ஜனங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, தேவன் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். அவர் தம்முடைய சர்வ வல்லமையை வெளிப்படுத்துகிறார். தேவனைக் குறித்து பெருமை பாராட்டாமல் ஜனங்கள் தற்பெருமை கொள்ள மாட்டார்கள். இல்லையெனில், நீ இழப்பைச் சந்திப்பாய். தேவன் ஏழைகளைப் புழுதியிலிருந்து தூக்குகிறார். தாழ்மையானவர்கள் உயர்ந்தவர்களாக உயர்த்தப்பட வேண்டும். உலகத் திருச்சபையை ஆளவும், எல்லா ஜனங்களும் எனக்குள்ளாக இருக்க அவர்களையும் எல்லா தேசங்களையும் ஆளவும், திருச்சபையில் உள்ள நீங்கள் அனைவரும் எனக்குக் கீழ்ப்படிவதற்கும் நான் என் ஞானத்தை எல்லா விதங்களிலும் பயன்படுத்துவேன். இதற்கு முன் கீழ்ப்படியாதவர்கள் இப்போது எனக்கு முன்பாகக் கீழ்ப்படிந்து, ஒருவருக்கொருவர் அடிபணிந்து, ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஜீவிதங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டு உங்கள் சொந்த பலவீனங்களை ஈடுகட்ட மற்றவரின் வலுவான காரியங்களை அணுகுங்கள். இவ்வாறு திருச்சபை கட்டப்படும் மற்றும் சாத்தான் சுரண்டுவதற்கு வாய்ப்பு இல்லாதிருக்கும். அப்போது தான் எனது நிர்வாகத் திட்டம் தோல்வியடையாமல் இருக்கும். இன்னொரு நினைவூட்டலை இங்கே தருகிறேன். உன்னில் தவறான புரிதல்கள் எழ அனுமதிக்காதே, ஏனென்றால் அத்தகைய வழியில் இருக்கும் அல்லது செயல்படும் மனிதனாக நீ இருக்கையில், இதன் விளைவாக நீ உன் ஆவிக்குரிய நிலைக்குள் சீரழிந்து போகிறாய். நான் அதைப் பொருத்தமற்ற மற்றும் ஒரு பயனற்ற விஷயமாகப் பார்க்கிறேன். நீ நம்புகிறவர், தேவன் அல்லவா? அது சில மனிதர்கள் அல்ல. அவை ஒரே செயல்பாடுகள் அல்ல. ஒரு உடல் உள்ளது. ஒவ்வொன்றும் தனது கடமையைச் செய்கின்றன. ஒவ்வொரு தீப்பொறிக்கும் ஒரு ஒளிரும் வெளிச்சம் இருப்பது போல ஒவ்வொன்றும் தன்தன் இடத்தில், மிகச் சிறந்ததைச் செய்கின்றன, ஜீவிதத்தில் முதிர்ச்சியைத் தேடுகின்றன. இவ்வாறு நான் திருப்தி அடைவேன்.

எனக்கு முன் அமைதியாக இருப்பதற்காக மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும். என்னுடன் நெருக்கமான ஐக்கியத்தில் இருங்கள். உங்களுக்குப் புரியாத இடங்களில் அதிகமாகத் தேடுங்கள். ஜெபங்களை ஏறெடுங்கள். என் நேரத்திற்காகக் காத்திருங்கள். எல்லாவற்றையும் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் தெளிவாகப் பாருங்கள். உங்களைத் தவறாக வழிநடத்துவதைத் தடுக்க, பொறுப்பற்ற முறையில் செயல்பட வேண்டாம். உண்மையில், இவ்வாறு நீ என் வார்த்தைகளைப் புசித்துக் குடிப்பது மட்டுமே பலனைத் தரும். என் வார்த்தைகளை அடிக்கடிப் புசித்துக் குடியுங்கள். நான் சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். என் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்துங்கள். என் வார்த்தைகளின் யதார்த்தத்தை வெளிப்படுத்துங்கள். இது முக்கியமான காரியமாகும். திருச்சபையைக் கட்டியெழுப்பும் செயலானது ஜீவிதத்தின் வளர்ச்சியினுடைய கிரியை ஆகும். உங்கள் ஜீவிதம் வளர்வதை நிறுத்தினால், நீங்கள் கட்டப்பட மாட்டீர்கள். நீங்கள் எத்தகைய சிறப்புடன் இருந்தாலும், இயல்பான தன்மையை, மாம்சத்தை, வைராக்கியத்தை, பங்களிப்புகளை, தகுதிகளை என இந்த விஷயங்களை நீங்கள் நம்பினால் நீங்கள் கட்டப்பட மாட்டீர்கள். நீங்கள் ஜீவ வார்த்தைகளுக்குள் ஜீவிக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் பிரகாசம் மற்றும் வெளிச்சத்திற்குள் ஜீவிக்க வேண்டும். உங்கள் உண்மையான நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். மாற்றம்பெற்ற மனிதராக இருக்க வேண்டும். நீங்கள் ஆவியிலும் அதே நுண்ணறிவைக் கொண்டிருக்க வேண்டும். புதிய பிரகாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். புதிய வெளிச்சத்தைப் பின்பற்ற திறனுடன் இருக்க வேண்டும். நீங்கள் இடைவிடாமல் என்னுடன் நெருங்கி வரவும், என்னுடன் தொடர்பு கொள்ளவும், அன்றாட ஜீவிதத்தில் உங்கள் செயல்களை என் வார்த்தைகளில் அடித்தளமாகக் கொண்டிருக்கவும், எல்லா வகையான மனிதர்களையும், நிகழ்வுகளையும், விஷயங்களையும் என் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு சரியாகக் கையாளும் திறனுடன் இருக்க வேண்டும். என் வார்த்தைகளை உங்கள் தரமாகக் கொண்டிருங்கள். உங்கள் ஜீவிதத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் என் மனநிலையை வெளிப்படுத்துங்கள்.

நீங்கள் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால், என் வார்த்தைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். விஷயங்களை அவசரப்பட்டுச் செய்ய வேண்டாம். நான் ஏற்றுக் கொள்ளாத அனைத்தும் மோசமான முடிவைச் சந்திக்கும். நான் அங்கீகரிக்கும் காரியங்களில் மட்டுமே ஆசீர்வாதம் வருகிறது. நான் சொன்னால், அது நடக்கும். நான் கட்டளையிட்டால், அது உறுதியாக நிற்கும். என்னைக் கோபப்படுத்துவதைத் தவிர்க்க, நான் அனுமதிக்காததை நீங்கள் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். நீ இதைச் செய்தால், நீ வருந்த வேண்டிய நேரம் வராது!

முந்தைய: அத்தியாயம் 20

அடுத்த: அத்தியாயம் 22

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக