மோவாபின் சந்ததியை இரட்சிப்பதன் முக்கியத்துவம்

இந்த இரண்டிலிருந்து மூன்றாண்டு கால கிரியையில், உங்கள் மீதான நியாயத்தீர்ப்பின் கிரியையில் எதை அடைந்திருக்க வேண்டுமோ அது அடிப்படையில் அடையப்பட்டுவிட்டது. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் எதிர்கால வாய்ப்புகளையும் விதியையும் விட்டுவிட்டார்கள். இருப்பினும், நீங்கள் மோவாபின் சந்ததி என்று குறிப்பிடப்படும்போது, உங்களில் பலர் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை—உங்கள் முகத்தோற்றங்கள் கோணலாகின்றன, உங்கள் வாய்கள் கோணுகின்றன, மேலும் உங்கள் கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. நீங்கள்தான் மோவாபின் சந்ததியார் என்று நீங்கள் எளிதாக நம்பமுடியாது. சபிக்கப்பட்ட பின் மோவாப் இந்த தேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். அவனது சந்ததி பரம்பரையாய் இன்று வரை தொடர்ந்துவந்திருக்கிறது, மேலும் நீங்கள் எல்லோரும் அவனது சந்ததியாரே. என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை—மோவாபின் குடும்பத்தில்பிறக்க யார் உனக்குக் கூறியது? நான் உனக்காகப் பரிதாபப்படுகிறேன், இது உனக்கு நேரக்கூடாது என்று நான் விரும்புகிறேன், ஆனால் இந்த உண்மையை யாராலும் மாற்றமுடியாது. நீ மோவாபின் ஒரு சந்ததி, மற்றும் நீ ஒரு தாவீதின் சந்ததி என்று என்னால் கூறமுடியாது. நீ யாருடைய சந்ததியாக இருந்தாலும், ஒரு தாழ்ந்த நிலையில் நீ இருந்தாலும், ஒரு தாழ்ந்த பிறப்பை உடைய சிருஷ்டியாக இருந்தாலும், இன்னும் நீ ஒரு சிருஷ்டியே. தேவனுடைய எல்லா கிரியையையும் எல்லா சிருஷ்டிகளும் அனுபவிக்க வேண்டும்; அவர்கள் எல்லோரும் அவரால் ஜெயங்கொள்ளப்படுவதற்கான பொருட்களே, மற்றும் அவர்கள் எல்லோரும் அவருடைய நீதியான மனநிலையைப் பார்க்கவும், அவரது ஞானத்தையும் சர்வவல்லமையையும் அனுபவிக்கவும் வேண்டும். இன்று, நீ ஒரு மோவாபின் சந்ததியாக இருக்கிறாய் மற்றும் இந்த நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; நீ மோவாபின் சந்ததியாக இல்லாமல் இருந்திருந்தாலும் கூட, இந்த நியாயத்தீர்ப்பையும் சிட்சையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கும் அல்லவா? இதைஅறிந்து கொள்! உண்மையில், இன்று மோவாபின் சந்ததியாரிடம் கிரியை செய்வது மிகவும் பயனுடையதும் மிகவும் முக்கியமானதும் ஆகும். உங்களிடம் இந்தக் கிரியை செய்யப்பட்டிருப்பதால், இதற்கு மாபெரும் முக்கியத்துவம் உள்ளது. இந்தக் கிரியை காமின் சந்ததியாரிடம் செய்யப்பட்டிருந்தால், அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்காது, ஏனெனில், மோவாபைப் போலல்லாமல், அவர்கள் கீழான பிறப்பினர் அல்ல. நோவாவின் இரண்டாம் குமாரனாகிய காமின் சந்ததியாரே சபிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்—அவர்கள் வேசித்தனத்தின் மூலம் வந்தவர்கள் அல்லர். நோவா அவர்களை அடிமைகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள் என்று சபித்ததனால் வெறுமனே அவர்கள் கீழான நிலையில் உள்ளனர். அவர்களுக்குக் கீழான நிலை உள்ளது, ஆனால் ஆதியில் அவர்களுடைய மதிப்பு கீழானது அல்ல. மோவாபைப் பற்றி பேசும்போது, அவன் வேசித்தனத்தால் பிறந்ததனால் அவனது ஆதி நிலை கீழானதாக இருந்தது என்று ஜனங்களுக்குத் தெரியும். லோத்தின் நிலை மிக உயர்வாக இருந்தாலும், மோவாப் லோத்துக்கும் அவனது மகளுக்கும் பிறந்தவன். லோத்து நீதிமான் என்று அழைக்கப்பட்டான், ஆனாலும் மோவாப் சபிக்கப்பட்டவனாகவே இருந்தான். மோவாப் கீழான மதிப்பையும் கீழான நிலையையும் கொண்டிருந்தான், மேலும் அவன் சபிக்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட, அவன் இன்னும் இழிந்தவனாகவே இருந்திருப்பான், மேலும் அதனால் அவன் காமில் இருந்து வேறுபட்டவன். அவன் யேகோவாவை அங்கீகரிக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக யேகோவாவை எதிர்த்துக் கலகம் செய்தான்—மேலும் அதனால் அவன் இருளான இடங்களுக்குள் விழுந்தான். இப்போது மோவாபின் சந்ததியாரிடம் கிரியை செய்வது என்பது மாபெரும் இருளுக்குள் விழுந்தவர்களை இரட்சிப்பதற்காகவே. அவர்கள் சபிக்கப்பட்டிருந்தாலும், தேவன் அவர்களிடம் இருந்து மகிமையைப் பெற விருப்பமுள்ளவராக இருக்கிறார், ஏனெனில் முதன் முதலில் அந்த ஜனங்கள் அனைவரின் இருதயங்களிலும் தேவன் இல்லாமல் இருந்தார்; தேவனை தங்கள் இருதயங்களில் கொண்டிராதவர்களை அவருக்குக் கீழ்ப்படிந்து அவரில் அன்புகூருகிறவர்களாக மாற்றுது மட்டுமே உண்மையில் ஜெயங்கொள்ளுதல், மேலும் அத்தகையக் கிரியையின் பலனே மிகவும் மதிப்புள்ளதும் திருப்திகரமானதாகவும் இருக்கும். மகிமையை அடைவது என்பது இதுவே—கடைசி நாட்களில் தேவன் அடைய விரும்பும் மகிமையும் இதுவே. இந்த ஜனங்கள் கீழான நிலையில் உள்ளவர்களாக இருந்தாலும், இப்போது அவர்களால் இத்தகைய மாபெரும் இரட்சிப்பை அடைய முடியும் என்பது உண்மையில் தேவனால் கிடைக்கும் உயர்வேயாகும். இந்தக் கிரியை மிகவும் அர்த்தமுள்ளது, மேலும் நியாயத்தீர்ப்பின் மூலமே அவர் இந்த ஜனங்களைப் பெறுகிறார். இந்த ஜனங்களைத் தண்டிப்பது அவர் நோக்கமல்ல, ஆனால் அவர்களை இரட்சிப்பதேஆகும். கடைசி நாட்களில் அவர் இன்னும் இஸ்ரவேலில் ஜெயங்கொள்ளும் கிரியையை செய்துகொண்டிருந்தால், அது பயனற்றதாக இருக்கும்; அதற்குப் பலன் கிடைத்தாலும் கூட, அதற்கு மதிப்போ அல்லது எந்தவொரு பெரிய முக்கியத்துவமோ இருக்காது, மேலும் அவரால் முழு மகிமையை அடைய முடியாது. மிகவும் இருளான இடங்களில் விழுந்தவர்களான, மிகவும் பின்தங்கி இருப்பவர்களான, உங்களிடம் அவர் கிரியை செய்கிறார். இந்த ஜனங்கள் ஒரு தேவன் இருக்கிறார் என்று அங்கீகரிக்கவில்லை மேலும் ஒரு தேவன் இருக்கிறார் என்று ஒருபோதும் அறிந்திருக்கவும் இல்லை. இந்த சிருஷ்டிகளை சாத்தான் மிகவும் சீர்கெடுத்துவிட்டதால் அவர்கள் தேவனை மறந்துவிட்டார்கள். அவர்களை சாத்தான் குருடாக்கிவிட்டதால் பரலோகத்தில் ஒரு தேவன் இருக்கிறார் என்பதை அவர்கள் சிறிதளவும் அறியவேயில்லை. உங்கள் இருதயங்களில் நீங்கள் எல்லாரும் விக்கிரகங்களை ஆராதிக்கிறீர்கள் மேலும் சாத்தானை ஆராதிக்கிறீர்கள்—நீங்கள் மிகவும் கீழானவர்கள், ஜனங்களில் மிகவும் பின்தங்கியவர்கள் அல்லவா? நீங்கள் எந்த ஒரு தனிப்பட்ட சுதந்திரமும் அற்ற, கீழான மாம்சங்கள், மேலும் நீங்கள் துன்பங்களையும் அனுபவிக்கிறீர்கள். விசுவாசிக்கும் சுதந்திரம் கூட இல்லாமல் இந்தச் சமூகத்தின் கீழான நிலையில் இருக்கும் ஜனங்களும் நீங்களே. உங்களிடம் கிரியை செய்வதன் முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. மோவாபின் சந்ததியாரான உங்களிடத்தில் கிரியை செய்வது உங்களை அவமானப்படுத்துவதற்கு அல்ல, ஆனால் கிரியையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவே. இது உங்களுக்கு ஒரு மாபெரும் உயர்வு. ஒரு நபருக்கு அறிதிறனும் உள்ளுணர்வும் இருந்தால் அவன் கூறுவான்: “நான் மோவாபின் சந்ததி, தேவனால் இத்தகையப் பெரும் உயர்வை, அல்லது இத்தகைய பெரும் ஆசீர்வாதங்களை இன்றைக்குப் பெறுவதற்கு உண்மையிலேயே தகுதியற்றவன். நான் செய்கிற மற்றும் சொல்கிற எல்லாவற்றிலும், எனது நிலை மற்றும் மதிப்பைப் பொறுத்தவரையிலும், இத்தகைய பெரும் ஆசிர்வாதங்களை தேவனிடம் இருந்து பெறுவதற்கு நான் தகுதியுள்ளவனே அல்ல. இஸ்ரவேலர்களுக்கு தேவனிடத்தில் பெரும் அன்பு உண்டு, அவர்கள் அனுபவித்து வரும் கிருபை அவரால் அவர்களுக்கு அருளப்பட்டது, ஆனால் அவர்களது நிலை நம்மை விட மிகவும் உயர்வானதாக இருக்கிறது. ஆபிரகாம் தேவனிடத்தில் மிகவும் பயபக்தியுள்ளவனாக இருந்தான், மேலும் பேதுரு இயேசுவிடம் பயபக்தியுள்ளவனாக இருந்தான்—அவர்களது பயபக்தி நம்மை விட ஒரு நுறு மடங்கு அதிகமானது ஆகும். நம்முடைய செய்கைகளின் அடிப்படையில், தேவனுடைய கிருபையை அனுபவிக்க நாம் முழுமையாகத் தகுதியற்றவர்கள்.” சீனாவில் இருக்கும் இந்த ஜனங்களின் சேவைகளை தேவனுக்கு முன்பாக கொண்டுவரவே முடியாது. அது முற்றிலும் தாறுமாறாகக் கிடக்கிறது; இப்போது நீ அனுபவிக்கும் மிக அதிக அளவிலான கிருபை தேவன் உன்னை உயர்த்தியதால் மட்டுமே! தேவனுடைய கிரியையை எப்போது நீ நாடினாய்? எப்போது நீ உன் ஜீவனை தேவனுக்காகத் தியாகம் செய்தாய்? எப்போது நீ உன் குடும்பம், உன் பெற்றோர், மற்றும் உன் குழந்தைகளை மனமார விட்டுக்கொடுத்தாய்? உங்களில் ஒருவனும் ஒரு பெரிய கிரயத்தைக் கொடுக்கவில்லையே! பரிசுத்த ஆவியானவர் உன்னை வெளியே கொண்டுவரவில்லையானால், உங்களில் எத்தனை பேரால் எல்லாவற்றையும் தியாகம் செய்திருக்க முடியும்? பலவந்தத்தாலும் வலுக்கட்டாயத்தாலும் மட்டுமே நீங்கள் இன்றுவரை பின்தொடர்ந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் பயபக்தி எங்கே? உங்கள் கீழ்ப்படிதல் எங்கே? உங்கள் செய்கையின் அடிப்படையில், நீங்கள் வெகுகாலத்துக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்க வேண்டும்—நீங்கள் யாவரும் சுத்தமாகத் துடைத்தழிக்கப் பட்டிருப்பீர்கள். இத்தகைய பெரும் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களைத் தகுதிப்படுத்துவது எது? நீங்கள் கொஞ்சம் கூடத் தகுதியற்றவர்கள்! உங்களில் யார் தங்கள் சொந்தப் பாதையை உருவாக்கி வெற்றியடைந்தீர்கள்? உங்களுக்குள் யார் சத்திய வழியைத் தாங்களாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள்? நீங்கள் எல்லோரும் சோம்பேறித்தனமான, பெருந்தீனிக்கார, வசதி நாடும் கேவலமானவர்கள்! நீங்கள் பெரியவர்கள் என்று நினைக்கிறீர்களா? தற்பெருமையடித்துக்கொள்ள உங்களிடம் என்ன இருக்கிறது? நீங்கள் மோவாபின் சந்தியார் என்பதைப் புறக்கணித்துவிட்டாலும் கூட, உங்கள் சுபாவம் அல்லது உங்கள் பிறப்பிடம் மிக உயர்ந்த வகையானதா? நீங்கள் அவனுடைய சந்ததியார் என்பதை அலட்சியப்படுத்தினாலும், நீங்கள் எல்லோரும் முற்றிலுமாக மோவாபின் சந்ததிகள் அல்லவா? நிகழ்வுகளின் உண்மைகளை மாற்ற முடியுமா? இப்போது உங்கள் சுபாவத்தை வெளிப்படுத்துவது நிகழ்வுகளின் உண்மைகளைத் தவறாக சித்தரிக்குமா? உங்கள் அடிமைத்தனம், உங்கள் ஜீவிதங்கள், மற்றும் உங்கள் நடத்தைகளை நோக்கிப் பாருங்கள்—மனுக்குலத்தின் மத்தியில் நீங்கள்தான் கீழானவர்களிலும் கீழானவர்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா? தற்பெருமை பேச உங்களிடம் என்ன இருக்கிறது? சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் நிலையை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அதன் கீழ் மட்டத்தில் இருக்கிறீர்கள் இல்லையா? நான் தவறாகப் பேசிவிட்டேன் என்று நீங்கள் நினக்கிறீர்களா? ஆபிரகாம் ஈசாக்கைக் காணிக்கையாகக் கொடுத்தான்—நீங்கள் என்ன காணிக்கை கொடுத்தீர்கள்? யோபு எல்லாவற்றையும் கொடுத்தான்—நீங்கள் என்ன கொடுத்தீர்கள்? சத்திய வழியைத் தேடுவதற்காகப் பல ஜனங்கள் தங்கள் ஜீவனைக் கொடுத்திருக்கிறார்கள், தங்கள் தலையை கொடுத்திருக்கிறார்கள், தங்கள் இரத்தத்தைச் சிந்தியிருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கிரயத்தைச் செலுத்திவிட்டீர்களா? ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இத்தகையப் பெரும் கிருபையை அனுபவிக்க நீங்கள் தகுதியுடையவர்களே அல்லர். நீங்கள் மோவாபின் சந்ததி என்று இன்று கூறுவது தவறா? நீங்கள் உங்களையே மிக உயர்வாகக் கருத வேண்டாம். நீ தற்பெருமையாகக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. இத்தகையப் பெரிய இரட்சிப்பு, இத்தகைய பெரிய கிருபை இலவசமாக உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யவில்லை, ஆனாலும் இலவசமாகக் கிருபையை அனுபவிக்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒன்றை நீங்கள் தேடி நீங்களாகவே கண்டுபிடித்த உண்மையான வழியா இது? இதை ஏற்றுக்கொள்ளும்படி உங்களை வற்புறுத்தியது பரிசுத்த ஆவியானவர் அல்லவா? தேடுகிற இருதயம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை, அதைவிட சத்தியத்தைத் தேடி அதைப் பெரிதும் விரும்பும் இருதயம் உங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. நீங்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு அதை அனுபவிக்கிறீர்கள்; கொஞ்சம் கூட முயற்சி செய்யாமலேயே இந்த சத்தியத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். குற்றம் கூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீ பெரும் தகுதி வாய்ந்தவன் என்று எண்ணுகிறாயா? தங்கள் ஜீவனைத் தியாகம் செய்தவர்களோடும் தங்கள் இரத்தத்தைச் சிந்தியவர்களோடும் ஒப்பிடும்போது குறை சொல்ல உங்களுக்கு என்ன இருக்கிறது? உங்களை இப்போதே அழிப்பது சரியானதும் இயல்பானதுமாக இருக்கும்! கீழ்ப்படிந்து பின்பற்றுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்கள் தகுதியுள்ளவர்களே அல்லர்! உங்கள் மத்தியில் இருந்து பெரும்பாலானோர் அழைக்கப்பட்டீர்கள், ஆனால் உங்கள் சூழல் உங்களை வற்புறுத்தவில்லை அல்லது நீங்கள் அழைக்கப்படவில்லை என்றால், நீங்கள் வெளியே வருவதற்கு முற்றிலுமாக விருப்பம் இல்லாதவர்களாக இருந்திருப்பீர்கள். இத்தகைய விட்டுவிடுதலை ஏற்றுக்கொள்ள யார் விரும்புவார்கள்? மாம்ச இன்பங்களை வீட்டுவிட யார் விரும்புவார்கள்? நீங்கள் எல்லோரும் வசதிகளில் பேராசையோடு களித்து ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடும் ஜனங்கள். நீங்கள் இத்தகைய மாபெரும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறீர்கள்—வேறெதைத்தான் நீங்கள் சொல்ல வேண்டி இருக்கிறது? உங்களிடமுள்ள புகார்கள் என்ன? பரலோகத்தின் மாபெரும் ஆசீர்வாதத்தையும் மாபெரும் கிருபையையும் அனுபவிக்க நீங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள், மேலும் உலகில் இதுவரை செய்யப்படாத கிரியை இன்று உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் ஆசீர்வாதம் இல்லையா? நீங்கள் தேவனை எதிர்த்துநின்று அவருக்கு எதிராகக் கலகம் செய்ததால் இன்று நீங்கள் இவ்வாறு சிட்சிக்கப்பட்டீர்கள். இந்த சிட்சையின் காரணமாக, தேவனின் இரக்கத்தையும் அன்பையும் நீங்கள் கண்டுள்ளீர்கள், அது மட்டுமல்லாமல் மேலும் அவரது நீதியையும் பரிசுத்தத்தையும் கண்டுள்ளீர்கள். இந்த தண்டனையினாலும், மனிதகுலத்தின் அசுத்தத்தினாலும், நீங்கள் தேவனின் மாபெரும் வல்லமையைக் கண்டீர்கள், மற்றும் அவருடைய பரிசுத்தத்தையும் மகத்துவத்தையும் கண்டீர்கள். இது மிக அரிய சத்தியங்கள் இல்லையா? இது அர்த்தமுள்ள ஒரு ஜீவிதம் இல்லையா? தேவன் செய்யும் கிரியை முற்றிலுமாக அர்த்தம் கொண்டது. இவ்வாறு, உங்கள் நிலை தாழ்ந்ததாக இருக்கும் போது, அதிகமாக தேவனால் நீங்கள் உயர்த்தப்படுகிறீர்கள் என்பது நிரூபணமாகிறது, மேலும் இன்றும் உங்களிடமான அவரது கிரியையின் மிகுந்த மதிப்பை அதிகமாக அது நிரூபணம் செய்கிறது. அது தெளிவாக வேறெங்கும் கிடைக்காத விலையேறப்பெற்ற பொக்கிஷம்! இத்தகையப் பெரும் இரட்சிப்பைக் காலங்காலமாக வேறு யாரும் அனுபவிக்கவில்லை. உங்கள் நிலை கீழானது என்ற உண்மை தேவனின் இரட்சிப்பு எவ்வளவு பெரியது என்பதைக் காட்டுகிறது, மேலும் அது தேவன் மனுக்குலத்துக்கு உண்மையுள்ளவர் என்பதையும் காட்டுகிறது—அவர் இரட்சிக்கிறார், அவர் அழிப்பதில்லை.

சீன ஜனங்கள் தேவனை ஒருபோதும் விசுவாசித்தது இல்லை; அவர்கள் ஒருபோதும் யேகோவாவை சேவித்தது இல்லை, மேலும் இயேசுவையும் சேவித்தது இல்லை. அவர்கள் வெறுமனே தரையில் விழுந்து பணிவார்கள், சுகந்தவர்க்கம் எரிப்பார்கள், ஊதுவத்திக் காகிதம் எரிப்பார்கள் மற்றும் புத்தரைத் தொழுவார்கள். அவர்கள் விக்கிரங்களை மட்டும் வணங்குவார்கள்—அவர்கள் எல்லோரும் தீவிரமான கலகக்காரர்கள். ஆகவே, ஜனங்களின் நிலை தாழ்ந்ததாக இருக்கும்போது, அது அதிகமாகக் காட்டுவது என்னவென்றால் உங்களிடம் இருந்து தேவன் அதிகமாக மகிமையைப் பெறுகிறார் என்பதே. தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து சிலர் கூறலாம்: “தேவனே, நீ செய்யும் கிரியை என்ன? இத்தகைய ஓர் உன்னதமான தேவன், இத்தகையப் பரிசுத்தமான தேவனாகிய நீ ஓர் இழிவான தேசத்துக்கு வருவதா? உன்னைப் பற்றி இவ்வளவு குறைவாக நினைக்கிறாயா? நாங்கள் மிகவும் இழிவானவர்கள், ஆனால் நீ எங்களோடு இருக்க விரும்புகிறாயா? நீ எங்களோடு வாழ விரும்புகிறாயா? நாங்கள் மிக தாழ்ந்த நிலையில் இருக்கிறோம், ஆனால் நீ எங்களை முழுமையாக்க விரும்புகிறாயா? மேலும் நீ எங்களை எடுத்துக்காட்டுகளாகவும் மாதிரிகளாகவும் பயன்படுத்துவாயா?” நான் கூறுகிறேன்: நீ என் சித்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. நான் செய்ய விரும்புகிற கிரியை நீ புரிந்துகொள்ளவில்லை என் மனநிலையையும் நீ புரிந்துகொள்ளவில்லை. நான் செய்ய இருக்கும் கிரியையின் முக்கியத்துவம் உன்னால் அடைய முடியாதது. என்னுடைய கிரியை உன் மனுஷீகக் கருத்துக்களுக்கு இணங்கியதாக இருக்குமோ? மனுஷீகக் கருத்துக்களின்படி, என் உயர்நிலையைக் காட்ட, என் மாபெரும் மதிப்பைக் காட்ட, என்னுடைய மரியாதையை, பரிசுத்தத்தை மற்றும் மகத்துவத்தைக் காட்ட, நான் ஒரு சிறந்த நாட்டில் பிறந்திருக்க வேண்டும். என்னை அங்கீகரிக்கும் ஓர் இடத்தில், ஓர் உயர்ந்த குடும்பத்தில் நான் பிறந்திருந்தால், மேலும் உயர்ந்த நிலையிலும் அந்தஸ்திலும் இருந்தால், நான் நன்றாக நடத்தப்பட்டிருப்பேன். அது என்னுடைய கிரியைக்கு நன்மை அளிக்காது, மற்றும் பின்னர் இத்தகைய மாபெரும் இரட்சிப்பு இன்னும் வெளிப்படுத்தப்பட்டிருக்க முடியுமா? என்னைப் பார்க்கும் யாவரும் எனக்குக் கீழ்ப்படிவார்கள், மேலும் அவர்கள் இழிவினால் அசுத்தம் அடைய மாட்டார்கள். நான் இந்த வகையான ஓர் இடத்தில்தான் பிறந்திருக்க வேண்டும். அதைத்தான் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஆனால் அதைப் பற்றி சிந்தியுங்கள்: தேவன் பூமிக்கு வந்திருப்பது அனுபவிப்பதற்காகவா அல்லது கிரியை செய்வதற்காகவா? நான் அத்தகைய சுலபமான, வசதியான இடத்தில் கிரியை செய்தால், நான் என் முழு மகிமையையும் அடைய முடியுமா? நான் என் சிருஷ்டிப்புகள் அனைத்தையும் ஜெயங்கொள்ள முடியுமா? தேவன் பூமிக்கு வந்தபோது, அவர் உலகத்துக்கு உரியவராக இல்லை, மற்றும் உலகத்தை அனுபவிக்க அவர் மாம்சமாக மாறவில்லை. எங்கு அவரது கிரியை அவரது மனநிலையை வெளிப்படுத்துமோ மற்றும் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்குமோ அந்த இடத்தில்தான் அவர் பிறந்தார். அது பரிசுத்தமான தேசமாக இருந்தாலும் சரி அல்லது இழிவான தேசமாக இருந்தாலும் சரி, மற்றும் அவர் எங்கு கிரியை செய்தாலும் சரி, அவர் பரிசுத்தமானவர். சாத்தானால் அனைத்தும் சீர்கெடுக்கப்பட்டிருந்தாலும் பூமியில் உள்ள யாவும் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவையே. இருப்பினும், இன்னும் எல்லா காரியங்களும் அவர்க்கு உரியவையே; அவை எல்லாம் அவருடைய கரங்களிலேயே இருக்கின்றன. அவர் இழிவான ஒரு தேசத்துக்கு வருகிறார், தமது பரிசுத்தத்தை வெளிப்படுத்தும்படி அங்கு கிரியை செய்கிறார்; அவரது கிரியைக்காக மட்டுமே அவர் இதைச் செய்கிறார், இந்த இழிவான தேசத்தின் ஜனங்களை இரட்சிக்கும் பொருட்டு இத்தகையக் கிரியையைச் செய்வதற்காக அவர் பெரும் அவமானத்தைச் சகித்துக்கொள்ளுகிறார் என்பது இதன் அர்த்தம். அனைத்து மனுக்குலத்துக்கும் சாட்சியாக விளங்கும்படி இது செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கிரியை ஜனங்களுக்கு காண்பிப்பது தேவனுடைய நீதி ஆகும். தேவனின் மேலாதிக்கத்தை இதனால் சிறந்த முறையில் காண்பிக்க முடியும். பிறரால் வெறுக்கப்படும் ஒரு தாழ்ந்த மக்கள் குழுவின் இரட்சிப்பில் அவரது மகத்துவமும் நேர்மையும் வெளிப்படுத்தப்படுகின்றன. ஓர் இழிந்த தேசத்தில் பிறந்தது அவரைத் தாழ்ந்தவர் என்று நிச்சயமாக நிரூபிக்கவில்லை; அவரது மாட்சிமையையும், மனுக்குலத்தின் மேல் அவருக்குள்ள உண்மையான அன்பையுமே அது அனைத்து சிருஷ்டிகளும் காண அனுமதிக்கிறது. அவர் இவ்வாறு அதிகமாகச் செய்யும் போது, அது இன்னும் அதிகமாக அவருடைய பரிசுத்தமான அன்பையும், மனுஷனிடம் அவருக்குள்ள மாசற்ற அன்பையும் வெளிப்படுத்துகிறது. தேவன் பரிசுத்தமானவரும் நீதியுள்ளவரும் ஆவார். கிருபையின் காலத்தில் இயேசு பாவிகளோடு வாழ்ந்தது போல, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்திருந்தாலும் கூட, முற்றிலும் இழிவான ஜனங்களோடு அவர் ஜீவித்துவரும் போதும், அவரது கிரியையின் ஒவ்வொரு பகுதியும் முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக வேண்டி செய்யப்படவில்லையா? மனுக்குலம் மாபெரும் இரட்சிப்பை அடைவதற்காக அல்லவா இவை எல்லாம் செய்யப்படுகின்றன? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பல ஆண்டுகள் அவர் பாவிகளோடு வாழ்ந்தார். அது மீட்பின் பணிக்காக. இன்று, அவர் இழிவான, தாழ்ந்த ஒரு ஜனக்குழுவுடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இது இரட்சிப்புக்காக. அவரது கிரியைகள் யாவும் மனுக்குலமாகிய உங்களுக்காக அல்லவா? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், ஒரு மாட்டுக்கொட்டிலில் பிறந்து பல ஆண்டுகள் பாவிகளோடு ஜீவித்து அவர் ஏன் துன்பப்பட்டிருக்க வேண்டும்? மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், அவர் ஏன் இரண்டாவது முறையாக மாம்ச தேகத்துக்குத் திரும்பிவந்து, பிசாசுகள் கூடும் இந்த தேசத்தில் பிறந்து, சாத்தானால் ஆழமாக சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனங்களோடு ஜீவிக்க வேண்டும். தேவன் உண்மையுள்ளவர் இல்லையா? அவருடைய கிரியையில் எந்தப் பகுதி மனுக்குலத்துக்கானது அல்ல? எந்தப் பகுதி உங்கள் விதிக்கானது அல்ல? தேவன் பரிசுத்தமானவர்—இது மாற்ற முடியாதது. அவர் ஓர் இழிவான தேசத்துக்கு வந்திருக்கும் போதிலும் அவர் இழிவானவற்றால் அசுத்தமாக மாட்டார்; மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு மிகமிக சுயநலமற்றது மேலும் அவர் சகித்துக்கொள்ளும் துன்பமும் அவமானமும் மிகமிக அதிகமானது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்! உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் அவர் எவ்வளவு பெரிய அவமானத்தால் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும் ஜனங்களையும் அல்லது பணக்கார மற்றும் வலிமைமிக்க குடும்பங்களின் குமாரர்களையும் இரட்சிப்பதற்கு மாறாக, கீழாகவும் அற்பமாகவும் பார்க்கப்படுபவர்களை இரட்சிப்பதையே அவர் முக்கியமாகக் கருதுகிறார். இவை எல்லாம் அவருடைய பரிசுத்தம் அல்லவா? இவை எல்லாம் அவருடைய நீதி அல்லவா? முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக, அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்து ஒவ்வொரு அவமானத்தையும் தாங்குவார். தேவன் மிக உண்மையானவர்—அவர் பொய்யான கிரியைகளைச் செய்யமாட்டார். கிரியையின் ஒவ்வொரு கட்டமும் இத்தகைய நடைமுறைக்குகந்த வழியில் செய்யப்படவில்லையா? எல்லா ஜனங்களும் அவதூறாக அவர் பாவிகளோடு உண்கிறார் என்று கூறினாலும், ஜனங்கள் எல்லாம் அவரைக் கேலி செய்து அவர் இழிவான மற்றும் கீழான ஜனங்களோடு வாழ்கிறார் என்று சொன்னாலும், அவர் இன்னும் தம்மை சுயநலமில்லாமல் அளிக்கிறார், மேலும் இவ்வாறு அவர் இன்னும் கூட மனுக்குலத்தால் புறக்கணிக்கப்படுகிறார். அவர் சகிக்கும் துன்பம் உங்களுடையதை விடப் பெரிதல்லவா? நீங்கள் செலுத்திய கிரயத்த்தை விட அதிகமான கிரியையை அல்லவா அவர் செய்கிறார்? நீங்கள் இழிவான தேசத்தில் பிறந்தாலும், தேவனின் பரிசுத்தத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் பிசாசுகள் கூடும் தேசத்தில் பிறந்திருந்தாலும், பெரும் பாதுகாப்பைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்தெடுக்க என்ன இருக்கிறது? உங்களுக்கு என்ன குறை இருக்கிறது? நீங்கள் சகித்த துன்பத்தை விட அவர் சகித்த துன்பம் பெரிதல்லவா? அவர் பூமிக்கு வந்து மனித உலகின் இன்பங்களை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. அவர் அத்தகையப் காரியங்களை வெறுக்கிறார். மனிதன் பொருட்களைக் கொண்டு தனக்கு உபசாரம் செய்வதற்காக தேவன் பூமிக்கு வரவில்லை, அல்லது மனிதனின் உணவு, துணி, மற்றும் அணிகலன்களை அனுபவிக்கவும் அவர் வரவில்லை. அவர் இந்தப் பொருட்களைப் பொருட்டாக எண்ணுவதில்லை. அவர் மனிதனுக்காகப் பாடுபடவே பூமிக்கு வந்தார், உலத்தின் செல்வத்தை அனுபவிக்க அல்ல. அவர் துன்பப்படவும், கிரியை செய்யவும், தம்முடைய நிர்வாகத்திட்டத்தை முடிக்கவும் வந்தார். அவர் ஒரு சிறந்த இடத்தை, ஒரு தூதரகத்தில் அல்லது நவநாகரிக தங்கும் விடுதியில் வாழ்வதை அவர் தேர்வுசெய்யவில்லை, அவருக்காகக் காத்திருக்க அவருக்கு பல ஊழியர்களும் இல்லை. நீங்கள் பார்த்தவற்றின் அடிப்படையில், அவர் கிரியை செய்யவா அல்லது அனுபவிக்கவா வந்தார் என்பதை நீங்கள் அறியவில்லையா? உங்கள் கண்கள் பார்க்கவில்லையா? அவர் உங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார்? ஒரு வசதியான இடத்தில் அவர் பிறந்திருப்பாரேயானால், அவரால் மகிமையை அடைய முடியுமா? அவரால் கிரியை செய்ய முடியுமா? அவர் அப்படி செய்திருந்தால் அதற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்திருக்குமா? அவரால் முற்றிலுமாக மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியுமா? இழிவின் தேசத்தில் இருந்து ஜனங்களை அவரால் விடுவிக்க முடியுமா? ஜனங்கள் அவர்களுடைய கருத்தின்படி கேட்கிறார்கள்: “தேவன் பரிசுத்தமாக இருப்பதால், அவர் ஏன் நமது இழிந்த இடத்தில் பிறந்தார்? நீ எங்களை இழிவான மனிதர்கள் என்று வெறுத்து; நீ எங்கள் எதிர்ப்பையும் கலகத்தையும் வெறுக்கிறாய், ஆகவே நீ ஏன் எங்களோடு ஜீவிக்கிறாய்? நீ ஒரு மேலான தேவன். நீ எங்கு வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம், இவ்வாறு நீ ஏன் இந்த இழிந்த தேசத்தில் பிறக்க வேண்டும்? நீ ஒவ்வொரு நாளும் எங்களைச் சிட்சித்து நியாயந்தீர்க்கிறாய், மற்றும் நாங்கள் மோவாபின் சந்ததி என்று தெளிவாக நீ அறிந்திருக்கிறாய், ஆகவே நீ ஏன் இன்னும் எங்களோடு வாழ்கிறாய்? மோவாபின் சந்ததியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நீ ஏன் பிறந்தாய்? அதை ஏன் நீ செய்தாய்?” உன்னுடைய இத்தகைய சிந்தனைகளில் முற்றிலுமாகக் நியாயம் இல்லை! அவரது மாட்சிமையையும், அவரது தாழ்மையையும், மறைந்துகொள்ளுதலையும் ஜனங்கள் பார்க்க இத்தகைய கிரியையே அனுமதிக்கின்றது. அவர் தமது கிரியைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய சித்தமாக இருக்கிறார், மேலும் அவரது கிரியைக்காக எல்லா துன்பங்களையும் சகித்துக்கொண்டார். அவர் மனுக்குலத்தின் பொருட்டும், அதைவிட மேலாக, அனைத்து சிருஷ்டிகளும் அவரது ஆளுகையின் கீழ் அடங்க, சாத்தானை ஜெயங்கொள்ளவும் காரியமாற்றுகிறார். இது மட்டுமே அர்த்தமுள்ள, விலைமதிப்பற்ற கிரியையாக இருக்கிறது. யாக்கோபின் சந்ததியார் இந்த நிலமான சீனாவில் பிறந்திருந்தால், மேலும் அவர்கள் யாவரும் நீங்களாக இருந்தால், உங்களிடம் செய்யப்படும் இந்தக் கிரியையின் முக்கியத்துவம் என்னவாக இருந்திருக்கும்? சாத்தான் என்ன சொல்லுவான்? சாத்தான் கூறலாம்: “அவர்கள் முன்னர் உமக்குப் பயந்தார்கள், அவர்கள் ஆதி முதல் உமக்குக் கீழ்ப்படிந்தார்கள், மேலும் அவர்கள் உமக்குத் துரோகம் செய்ததாக வரலாறு இல்லை. அவர்கள் மனுக்குலத்தில் இருள்மிகுந்த, மிகக்கீழான, அல்லது மிகவும் பின்தங்கியவர்கள் இல்லை.” கிரியை உண்மையில் இந்த வகையில் செய்யப்பட்டிருந்தால், யார் அதை நம்பியிருப்பார்கள்? இந்த முழு பிரபஞ்சத்திலும், சீனர்களே மிகவும் பின்தங்கிய ஜனங்களாக இருக்கிறார்கள். அவர்கள் கீழான நிலையில், மிகக் குறைந்த மேன்மையுடன் பிறந்திருக்கிறார்கள்; அவர்கள் மந்த அறிவுடையவர்களும் உணர்வற்றவர்களுமாவர், மேலும் அவர்கள் இழிந்தவர்களும் தரமற்றவர்களும் ஆவர். அவர்கள் சாத்தானின் மனநிலைகளில் ஊறியவர்கள், இழிந்தவர்கள் மற்றும் கட்டுப்பாடற்றவர்கள். உங்களிடம் இந்த அனைத்து சாத்தானின் மனநிலைகளும் இருக்கின்றன. இந்தக் கிரியை முடிவடைந்தவுடன், ஜனங்கள் இந்தச் சீர்கெட்ட மனநிலையைத் தூக்கி எறிவார்கள் மேலும் அவர்களால் முழுமையாகக் கீழ்ப்படிய முடியும் மற்றும் அவர்கள் பரிபூரணமாக்கப்படுவார்கள். கிரியையின் இத்தகையப் பலனே சிருஷ்டிப்புக்குள் சாட்சியாகும்! சாட்சி என்றால் என்ன என்பதை நீ அறிந்துகொண்டாயா? உண்மையில் சாட்சி எவ்வாறு கொடுக்க வேண்டும்? இந்த வகையான கிரியை உங்களைப் பிரதிபலிப்புப் படலங்களாகவும் சேவிக்கும் பொருட்களாகவும் ஆக்கிவிட்டன; அதற்கு மேலும், அது உன்னை இரட்சிப்புக்கான இலக்காகவும் ஆக்கிவிட்டது. இன்று, நீங்கள் தேவ ஜனங்கள்; பின்னர் நீங்கள் எடுத்துக்காட்டுகளாகவும் மாதிரிகளாகவும் இருப்பீர்கள். இந்தக் கிரியையில், நீங்கள் பலவகையான பங்கை ஆற்றுவீர்கள், மற்றும், முடிவில், நீங்கள் இரட்சிப்பின் இலக்காக இருப்பீர்கள். இதனால் பல ஜனங்கள் எதிர்மறையானவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் முற்றிலுமாக பார்வையற்றவர்கள் இல்லையா? நீ எதையும் தெளிவாகப் பார்ப்பதில்லை! உன்னை இப்படி அழைப்பதே உணர்ச்சியில் மூழ்கடிக்கிறதா? தேவனின் நீதியான மனநிலை என்பது என்னவென்று புரிந்துகொள்ளுகிறாயா? தேவனின் இரட்சிப்பு என்ன என்பதை உன்னால் புரிந்துகொள்ளகிறாயா? தேவனின் அன்பு என்ன என்பதை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறதா? உன்னிடம் நேர்மை இல்லை! நல்ல முறையில் குறிப்பிடப்படும் போது நீ மகிழ்ச்சி அடைகிறாய். மோசமாகக் குறிப்பிடப்படும்போது நீ பின்வாங்குபவனாகவும் விருப்பமற்றவனாகவும் இருக்கிறாய். நீ என்னவாக இருக்கிறாய்? நீ சத்திய வழியை பின்தொடரவில்லை! இப்போதே தேடுவதை நிறுத்து—இது வெட்ககரமானது! இது வெட்கத்தின் ஓர் அடையாளம் இல்லையா, மிக அற்பமான ஒன்று உன்னை உணர்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறதா?

உன்னைப் பற்றி இன்னும் கொஞ்சம் அறிந்துகொள்ள கற்றுக் கொள்ளுவது நல்லது. உன்னையே நீ மிக உயர்வாகக் கருதிக்கொள்ளாதே, மேலும் பரலோகத்துக்கு செல்வதாகக் கனவு காணாதே—பூமியில் ஜெயங்கொள்ளப்பட கடமை உணர்வோடு தேடினாலே போதும். இல்லாததும் யதார்த்தத்துக்கு புறம்பானதுமான கனவுகளைப் பற்றி சிந்திக்காதே. யாராவது ஒருவர் பின்வருவதை போல் ஏதாவது ஒன்றைக் கூறினால், அவை தீர்மானமும் முதுகெலும்பும் கொண்ட ஒரு நபரின் வார்த்தைகள் ஆகும்: “நான் மோவாபின் ஒரு சந்ததியாக இருந்தாலும், நான் தேவனைத் தேட விரும்புகிறேன். எனது பழைய முன்னோருக்கு என் முதுகைக் காட்டுவேன்! அவன் என்னைப் பெற்றான் மேலும் என்மேல் ஏறிமிதித்தான், மேலும் இதுவரை நான் இருளிலேயே வாழ்ந்து வந்திருக்கிறேன். இன்று தேவன் என்னை விடுவித்துவிட்டார், மற்றும் நான் இறுதியாகப் பரலோகசூரியனைப் பார்த்துவிட்டேன். தேவனால் வெளிப்படுத்தப்பட்டதன் வழியாக, நான் ஒரு மோவாபின் சந்தியில் ஒருவன் என்று இறுதியாகக் கண்டுகொண்டேன். முன்னால், எனக்கு கண்மறைப்பு கட்டப்பட்டிருந்தது, மேலும் தேவன் இவ்வளவு கிரியை செய்திருக்கிறார் என்பதை நான் அறியவில்லை, ஏனெனில் நான் பழைய சாத்தானால் குருடாக்கப்பட்டிருந்தேன். நான் அதை நிராகரித்து முற்றிலுமாக அதை அவமானப்படுத்துவேன்!” ஆக, உங்களுக்கு இப்படிப்பட்ட தீர்மானம் இருக்கிறதா? உங்களில் ஒவ்வொருவரும் மனிதனைப்போலத் தோன்றுகிறீர்கள் என்ற உண்மைஇருந்தாலும், நீங்கள் யாரையும் விட துரிதமாக விழுந்து போகிறீர்கள், மேலும் நீங்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள். நீங்கள் மோவாபின் சந்ததி என்று குறிப்பிட்டவுடன், உங்கள் வாய்கள் சுழித்துப் பிதுங்குகின்றன. இது ஒரு பன்றியின் மனநிலை அல்லவா? நீங்கள் தகுதியற்றவர்கள். புகழுக்காகவும் செல்வத்துக்காகவும் நீங்கள் உங்கள் ஜீவனை தியாகம் செய்வீர்கள்! நீ மோவாபின் ஒரு சந்ததியாக இருக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால் நீ அந்த சந்ததிதானே? நீ அதுவாகத்தான் இருக்கிறாய், மேலும் நீ அதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நான் இன்று கூறுகிறேன். நான் உண்மைக்கு மாறாகக் கூறவில்லை. சிலர் இதனால் எதிர்மறையாக இருக்கிறார்கள், ஆனால் இதைப்பற்றி எதிர்மறையாக இருக்க என்ன இருக்கிறது? நீ பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் பிள்ளையாகவும் இருக்கவில்லையா? நீ மோவாபின் ஒரு சந்ததி என்று கூறுவதுஅநியாயமானதா? நீ எப்படி வாழ்கிறாய் என்று உள்ளும் புறம்பாக சற்று நோக்கிப் பார். உன் தலையில் இருந்து பாதம் வரை ஒன்றும் போற்றத்தக்கதாக இல்லை. காமம், இழிவு, குருட்டுத்தன்மை, எதிர்ப்பு, கலகம்—இவை யாவும் உன்னுடைய மனநிலையின் பகுதிகள் இல்லையா? நீ எப்போதும் காமக் களிநிலத்தில் வாழ்கிறாய், மேலும் எந்தத்தீமையையும் செய்யாமல் விடுவதில்லை. நீ அற்புதமான விதத்தில் பரிசுத்தமாக இருப்பதாக எண்ணுகிறாய். நீ செய்த விஷயங்களை நோக்கிப்பார், இருந்தும் உன்னை எண்ணி நீ மகிழ்கிறாய். புகழுக்கு உரியதாக நீ என்ன செய்திருக்கிறாய்? நீ விலங்குகளைப் போல இருக்கிறாய். உனக்கு மனிதத் தன்மை இல்லை! நீ விலங்குகளோடு கூடி, தீய, காம எண்ணங்கள் மத்தியில் வாழ்கிறாய். ஜனங்களாகிய நீங்கள் எவ்வளவு தூரம் குறைபாடோடு இருக்கிறீர்கள்? நீங்கள்தான் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் பிள்ளைகள் என்று ஒத்துக்கொள்ளுகிறீர்கள், மேலும் நீங்கள் ஊழியம் செய்ய தயாராக இருக்கிறீர்கள், ஆனால் பின்னர், நீ மோவாபின் சந்ததியாக இருக்கிறாய் என்று சொன்னபோது, எதிர்மறையாகி விடுகிறாய். இதுதானே உண்மை? உன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிறந்த நீ—அவர்கள் எவ்வளவு தூரம் மோசமானவர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்குப் பிறந்தவன்தானே, அப்படித்தான் இதுவும். உன்னை ஓர் அன்னை தத்தெடுத்து நீ வீட்டை விட்டுச் சென்றாலும் நீ அதன் பின்னரும் உன் ஆதி பெற்றோரின் குழந்தைதானே? அந்த உண்மையை மாற்ற முடியுமா? காரணம் இல்லாமலா நான் உன்னை மோவாபின் சந்ததி என்று அடையாளப்படுத்தினேன்? சிலர் சொல்லுகிறார்கள்: “வேறு ஏதாவது கூறி நீ என்னை அழைக்கக் கூடாதா?” நான் கூறுகிறேன்: “நான் உன்னை ஒரு பிரதிபலிப்புப் படலம் என்று அழைத்தால் என்ன?” அவர்களுக்கு பிரதிபலிப்புப் படலங்களாக இருக்கவும் விருப்பமில்லை. ஆகவே நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்? பிரதிபலிப்புப் படலங்கள், ஊழியம் செய்பவர்கள்—நீங்கள் இப்படித்தானே இருக்கிறீர்கள்? வேறு எதை நீ தேர்ந்தெடுப்பாய்? பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் நாட்டில் பிறந்த ஒரு நபர் இல்லையா நீ? நீ தாவீதின் பிள்ளை என்று எவ்விதத்தில் கூறினாலும், அது உண்மைகளுடன் இணக்கமாய் இல்லை. இது உனக்காக நீயே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஏதோ ஒன்றா? நீ விரும்பும் ஏதாவது ஓர் அழகிய பெயரை உன்னால் தேர்வு செய்துகொள்ள முடியுமா? பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் பிள்ளைகள் என்று குறிப்பிடப்பட்டது சீர்கெட்ட ஜனங்களாகிய நீங்கள் இல்லையா? ஊழியம் செய்பவர்களைப் பொறுத்தவரையில்—அவர்களும் சீர்கெட்ட ஜனங்களாகிய நீங்கள்தான் இல்லையா? ஜெயங்கொள்ளப்பட்டவர்களாய் குறிப்பிடப்பட்ட எடுத்துக்காட்டுகளும் மாதிரிகளும்—நீங்கள் தானே? பரிபூரணப்படுத்தப்படுகின்ற பாதை உங்களுக்காகப் பேசப்பட்டதல்லவா? சிட்சிக்கப்பட்டு நியாயந்தீர்க்கப்பட்ட ஜனங்களும் நீங்கள்தானே; பின்னர் பரிபூரணப்படுத்தப்படும் சிலர் உங்கள் மத்தியில் உள்ளவர்களாக இருக்க மாட்டார்களா? இந்தப் பட்டம் இன்னும் ஒரு விஷயமாக இருக்கிறதா? நீங்கள் மிகவும் அறிவற்றவர்களாக இருக்கிறீர்கள்; இப்படிப்பட்ட அற்பமான விஷயத்தைக் கூட உங்களால் தெளிவாகப் பார்க்க முடியவில்லையா? யார் யாரிடம் இருந்து வந்தார்கள் என்று உனக்குத் தெரியாது, ஆனால் அது எனக்குத் தெளிவாகத் தெரியும், மற்றும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இன்று அதை அறிந்துகொள்ள முடிவது சிறந்ததுதான். எப்போதும் மிகவும் தாழ்ந்தவனாக உணராதே. அதிக அதிகமாக நீ எதிர்மறையாகவும் பின்வாங்குகிறவனாகவும் இருக்கும்போது, நீ சாத்தானின் சந்ததி என்பதை அது அதிகமாக நிரூபிக்கிறது. கீர்த்தனைகளைக் கேட்க வைக்கும்போது இப்படிக் கூறும் சிலரை நீ கேட்டிருக்கலாம்: “மோவாபின் சந்ததியார் கீர்த்தனைகளைக் கேட்கலாமா? நான் கேட்க மாட்டேன்; நான் தகுதியானவன் இல்லை!” அவர்களைப் பாடவைக்கும்போது, அவர்கள் கூறுகிறார்கள்: “மோவாபின் சந்ததியார் பாடினால், தேவன் அதைக் கேட்க விருப்பமாக இருக்கிறாரா? தேவன் என்னை வெறுக்கிறார். தேவனுக்கு முன்பாகச் செல்ல நான் மிகவும் வெட்கப்படுகிறேன், நான் அவருக்கு சாட்சியாக இருக்க முடியாது. நான் பாட மாட்டேன், ஏனெனில் அதைக் கேட்கும் போது தேவன் எரிச்சல் அடைவார்.” இப்படி அதைக் கையாள்வது ஒரு எதிர்மறையான முறை அல்லவா? ஒரு சிருஷ்டியாக நீ ஒரு இழிகாம தேசத்தில் பிறந்தாய், மேலும் நீ பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் ஒருபிள்ளை, மோவாபின் ஒரு சந்ததி; நீ உன் பழைய முன்னோரை விட்டுவிலக வேண்டும் மேலும் பழைய சாத்தானையும் விட்டுவிலக வேண்டும். உண்மையிலேயே தேவனை விரும்புகிற ஒருவன் மட்டுமே இதைச் செய்கிறான்.

ஆதியில், தேவனுடைய ஜனங்கள் என்ற நிலையை நான் உங்களுக்குக் கொடுத்த போது, நீ மற்ற யாரையும் விட அதிக சந்தோஷத்தில் மேலும் கீழுமாகக் குதித்தாய். ஆனால், நீங்கள் மோவாபின் சந்ததியார் என்ற சொன்ன மாத்திரத்திலே, நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்? நீங்கள் நிலைகுலைந்து போனீர்கள்! உங்கள் வளர்ச்சி எங்கே? நிலை பற்றிய உங்கள் கருத்தாக்கம் மிக வலிமையானதாக உள்ளது! பெரும்பாலான ஜனங்களால் தங்களை உயர்த்திக்கொள்ள முடியவில்லை. சிலர் வியாபாரத்துக்குப் போகிறார்கள், மேலும் சிலர் வேலைக்குப் போகிறார்கள். நீங்கள் மோவாபின் சந்ததி என்று நான் கூறியதும், நீங்கள் எல்லோரும் ஓடிப்போக விரும்புகிறீர்கள். இதுவா நீங்கள் நாளெல்லாம் சத்தமிட்டுக் கூறும் தேவனுக்கு நீங்கள் கொடுக்கும் சாட்சி? சாத்தான் இந்த வகையில் திருப்தி அடைவானா? இது ஓர் அவமானத்தின் அடையாளம் அல்லவா? உங்களை வைத்திருப்பதனால் என்ன பயன்? நீங்கள் எல்லோரும் குப்பை! உங்களுக்குத் தவறிழைக்கப்பட்டதாக நீங்கள் உணருவதற்கு எந்த வகையான துன்பத்தை நீங்கள் சகித்துக்கொண்டீர்கள்? உங்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஒருமுறை தேவன் சித்திரவதை செய்திருந்தால், அவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்றும், உங்களை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்க்கவே அவர் வந்தது போலவும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து உங்களை அழித்த பின், அவரது கிரியை முடிந்துவிடும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். இதையா நான் கூறியிருக்கிறேன்? உங்கள் குருட்டுத்தனத்தால் அல்லவா நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்? நன்றாகச் செய்ய நீங்களாகவே முயற்சி செய்யவில்லையா, அல்லது நான் முன்னரே திட்டமிட்டபடி உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறேனா? நான் ஒருபோதும் அதைச் செய்ததில்லை—அது நீங்களாகவே சிந்தித்துக்கொண்ட ஒன்று. அவ்வாறு ஒருபோதும் நான் கிரியை செய்வதில்லை, அதுமட்டும் அல்லாமல் எனக்கு அந்த எண்ணமும் இல்லை. உங்களை உண்மையிலேயே நான் அழிக்க விரும்பி இருந்தால், நான் இத்தகைய துன்பத்துக்குள்ளாக வேண்டுமா? உங்களை உண்மையிலேயே நான் அழிக்க விரும்பி இருந்தால், இவ்வளவு அக்கறையோடு உங்களுடன் நான் பேசவேண்டிய தேவை என்ன இருக்கிறது? என் சித்தம் இதுதான்: உங்களை இரட்சித்தப் பின்னர்தான் என்னால் ஓய்வெடுக்க முடியும். ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு கீழானவனாக இருக்கிறானோ, அவன்தான் அவ்வளவுக்கவ்வளவு என்னுடைய இரட்சிப்பின் இலக்கு ஆவான். அதிக செயல்திறனுடன் உங்களால் உட்பிரவேசிக்க முடியும் போது, நான் மிக மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் அதிகமாய்ப் பின்வாங்கிப் போகும்போது, நான் அதிகமாய் வருத்தம் அடைகிறேன். நீங்கள் எப்போதும் படாடோபமாக சிம்மாசனத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்—அசுத்தத்திலிருந்து உங்களை இரட்சிக்கும் பாதை அதுவல்ல என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். ஓர் அரியாசனத்தில் அமரும் கற்பனை உங்களைப் பரிபூரணப்படுத்தாது; அது யதார்த்தமல்ல. நீ மோவாபின் ஒரு சந்ததி என்று நான் உன்னிடம் கூறும்போது, நீ கவலைப்படுகிறாய். நீ கூறுகிறாய்: “நீ என்னைப் பாதாளத்தில் போட்டால் நான் உனக்கு சாட்சியாக இருக்கமாட்டேன் அல்லது உனக்காகத் துன்பப்பட மாட்டேன்.” இப்படி நீ செய்வது எனக்கு எதிரானது இல்லையா? இதைச் செய்வதனால் அது உனக்கு நன்மையாக இருக்குமா? நான் உனக்கு அதிகமான கிருபையை அளித்திருக்கிறேன்—நீ மறந்துவிட்டாயா? நீ ஓர் அன்பான தாயின் இருதயத்தைப் போன்ற தேவனுடைய இருதயத்தை நிராகரித்து அவமானப்படுத்தியிருக்கிறாய்; இதற்கான விளைவு உனக்கு என்னவாக இருக்கும்? நீ எனக்கு சாட்சியாக நிற்காவிட்டால் நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்—ஆனால் முடிவில் நீ அழிவுக்கு இலக்காக இருப்பாய் என்பதை நீ அறிய வேண்டும். உன்னிடம் இருந்து நான் சாட்சியைப் பெற முடியாவிட்டால் பிற ஜனங்களிடம் இருந்து அதைப் பெறுவேன். எனக்கு அது ஒரு பொருட்டல்ல, ஆனால் முடிவில், நீ வருத்தப்பட்டுவாய், மேலும் அந்நேரத்தில், நீ இருளுக்குள் வீழ்ந்து நீண்ட காலமாகியிருக்கும். பின் உன்னை யாரால் இரட்சிக்க முடியும்? நீ இல்லாமல் கிரியையைச் செய்ய முடியாது என்று எண்ணாதே—நீ இருப்பதால் ஒன்றும் அதிகமாக இருக்கப்போவதில்லை, நீ இல்லாமல் இருப்பதால் ஒன்றும் அதிகமாகக் குறைவுபடவும் போவதில்லை. நீ உன்னையே மிக அதிகமான மரியாதையாகக் கருதாதே. நீ என்னைப் பின்பற்ற விரும்பாவிட்டால், அது உன்னைக் கலகக்காரன் என்றும், மேலும் விரும்பத்தக்கது ஒன்றும் உன்னிடத்தில் இல்லை என்றும் காட்டும். நீ நன்றாகப் பேசுகிறாய் என்றால், நான் என்னுடைய கிரியை மூலம் கொண்டுவந்த வார்த்தைகளை நீ கொண்டிருப்பதனால்தானே? உன்னிடம் இருப்பதில் புகழத்தக்கது என்ன? உன் கற்பனையை உன்னோடு சேர்ந்து பறக்க விடாதே! மோவாபின் சந்ததியாரான உங்களிடம் இருந்து என்னால் மகிமையைப் பெறமுடியாவிட்டால், என் கிரியைக்காக நான் என் மகிமையை அடையும் வரை மோவாபின் சந்ததியில் இருந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது குழுவை தேர்ந்தெடுப்பேன். நீ எனக்கு சாட்சியாக இருக்க விரும்பவில்லை என்றால், போய்விடு! நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்! நீங்கள் இல்லாமல் என்னால் ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாது என்று நினைக்காதீர்கள். இந்த சீன தேசத்தில் முயற்சி இல்லாமலேயே எனது கிரியைக்காகப் பொருத்தமான ஆட்களைக் கண்டுபிடிப்பது சுலபமானதே. இந்த தேசத்தில் வேறு ஒன்றையும் காண முடியாது—இழிவான, சீர்கேடான ஜனங்கள் நிச்சயமாக எல்லா இடத்திலும் இருக்கிறார்கள், மேலும் என்னுடைய கிரியையை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இவ்வளவு பெருமை உள்ளவனாக இருக்காதே! நீ எவ்வளவு பெருமையுள்ளவனாக இருந்தாலும், வேசித்தனத்தின் மூலம் பிறந்த பிள்ளையாகத்தான் இன்னும் இருக்கிறாய். உன்னுடைய மதிப்பை நோக்கிப்பார்—உனக்கு வேறென்ன தேர்வுகள் இருக்கின்றன? ஒரு மாபெரும் உயர்வில் ஜீவிக்க அனுமதிக்கப்பட்டதாலேயே, அதைப் பற்றி இன்னும் கர்வப்படுவதற்கு என்ன இருக்கிறது? காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்னுடைய கிரியை இல்லாமல் இருந்திருந்தால், நீண்ட காலத்துக்கு முன்னரே நீ இயற்கையான மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர்களின் மத்தியில் விழுந்துபோயிருப்பாய் தானே? உன்னால் இன்னும் வசதியாக வாழமுடியுமா? இந்த விஷயத்தைப் பற்றி தொடர்ந்து நீ வாதம் செய்கிறாய். நீ மோவாபின் சந்ததி என்று நான் கூறியதால், நீ எப்போதும் உதட்டைப் பிதுக்குகிறாய். நீ கற்றுக்கொள்ளுவதில்லை, நீ தேவனுடைய வார்த்தைகளை வாசிப்பதில்லை, மேலும் உன்னால் இந்த அல்லது அந்த நபரின் பார்வையை எதிர்கொள்ள முடிவதில்லை. பிற ஜனங்கள் கற்பதை நீ கண்டாயானால், அதைரியப்படுத்தும் விஷயங்களைக் கூறி இடையூறு செய்கிறாய். உனக்கு கொஞ்சம் துணிச்சல் இருக்கிறது! நீ கூறுகிறாய்: “மோவாபின் சந்ததியாருக்கு என்ன கல்வியறிவு இருக்க முடியும்? நான் கவலைப்பட மாட்டேன்.” இது ஒரு மிருகம் சொல்லக் கூடிய ஒன்றல்லவா? உன்னை ஒரு மனிதனாகக் கூட எண்ண முடியுமா? நான் மிக அதிகமாகக் கூறிவிட்டேன், ஆனால் அவற்றால் உன்னிடம் ஒரு பயனும் இல்லை. நான் செய்த இந்தக் கிரியைகள் எல்லாம் வீணா? இந்த வார்த்தைகளை எல்லாம் நான் வீணாகவா கூறினேன்? ஒரு நாய் கூட தன் வாலை ஆட்டும்; இத்தகைய நபர் ஒரு நாயை விடக் கூட நல்லவன் அல்ல! மனிதன் என்று அழைப்பதற்கு நீ தகுதியுள்ளவனா? நான் மோவாபின் சந்ததியைப் பற்றி பேசுகிறபோது, சிலர் வேண்டும் என்றே தங்கள் தரத்தைத் தாழ்த்திக்கொள்ளுகின்றனர். அவர்கள் முன்பை விட வேறுவிதமாக உடையணிகிறார்கள். அவர்கள் மிகவும் அலங்கோலமாக இருப்பதால் அவர்கள் மனிதர்களைப் போலவே இல்லை, மேலும் அவர்கள் முணுமுணுக்கிறார்கள்: “நான் மோவாபின் சந்ததியாக இருக்கிறேன். நான் நல்லவன் இல்லை. ஏதாவது ஆசிர்வாதங்களைப் பெறலாம் என்று எண்ணுவது பகல்கனவாகும். மோவாபின் சந்ததியாரைப் பரிபூரணப்படுத்த முடியுமா?” மோவாபின் சந்ததியாரைப் பற்றி நான் பேசியவுடன், பெரும்பாலானவர்களுக்கு அதற்குப்பின் நம்பிக்கை இருப்பதில்லை; அவர்கள் கூறுகிறார்கள்: “நாம் மோவாபின் சந்ததியார் என்று தேவன் கூறுகிறார்—இது எதைக் குறிக்கிறது? அவர் தழுவிக்கொண்ட தொனியை கவனியுங்கள்—அது மாற்றமுடியாதது! அவரது வார்த்தைகளில் அன்பு இல்லை. நாம் அழிவின் இலக்காக இருக்கிறோமா இல்லையா?” முன்னால் சொல்லப்பட்டதை நீ மறந்துவிட்டாயா? “மோவாபின் சந்ததி” என்ற சொற்கள் மட்டும்தானா நீ இப்போது ஞாபகத்தில் வைத்திருக்கும் விஷயமா? உண்மையில், ஒரு விளைவை அடைய பல வார்த்தைகள் தேவை, ஆனால் அவை நிகழ்வுகளின் உண்மையையும் வெளிப்படுத்துகின்றன. பெரும்பாலானோர் அதை விசுவாசிக்க மாட்டார்கள். இவ்வாறு எனக்காகத் துன்பப்பட நீ விருப்பம் உள்ளவனாக இல்லை. நீ மரணத்துக்குப் பயப்படுகிறாய் மற்றும் எப்போதும் தப்பிக்கவே விரும்புகிறாய். நீ போக விரும்பினால், தங்கி இருப்பதற்கு நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன், ஆனால் நான் இதை உனக்குத் தெளிவாகக் கூறவேண்டும்: ஒரு ஜீவித காலம் முழுவதையும் வீணாக வாழாதே, மேலும் நான் கடந்த காலத்தில் உனக்குச் சொன்ன விஷயங்களை மறக்காதே. ஒரு சிருஷ்டியாக ஒரு சிருஷ்டியின் கடமைகளைச் செய்ய வேண்டும். உன் மனசாட்சிக்கு விரோதமாக செயலாற்றாதே; நீ செய்ய வேண்டியது என்னவென்றால் சிருஷ்டிகர்த்தருக்கு உன்னை அர்ப்பணி. மோவாபின் சந்ததியாரும் சிருஷ்டிக்கப்பட்டவர்களே, அவர்கள் பிரதிபலிப்புப் படலங்களாக இருந்ததால், சபிக்கப்பட்டார்கள், அவ்வளவு தான். எதுவாக இருந்தாலும், இன்னும் நீ ஒரு சிருஷ்டியே. நீ இப்படிக் கூறினால் தூரமானவனாக இருக்கமாட்டாய்: “நான் மோவாபின் சந்ததியில் வந்தவன் என்றாலும், நான் தேவனுடைய அதிகமான கிருபையை அனுபவித்து இருப்பதால் எனக்குக் கொஞ்சம் மனசாட்சி இருக்க வேண்டும். நான் அதை அங்கீகரிப்பேனே தவிர அதையே தொடர்ந்து யோசித்துக் கொண்டு இருக்க மாட்டேன். இந்தத் தொடர்ச்சிக்குள் நான் துன்பம் அடைந்தாலும், நான் முடிவுவரை துன்பம் அடைவேன், மேலும் நான் மோவாபின் ஒரு சந்ததியாக இருந்தால், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். நான் கடைசிவரை பின்தொடருவேன்!” நீ கடைசிவரை பின்தொடரவேண்டும். நீ ஓடிப்போனால், உனக்கு நிச்சயமாக வாய்ப்புகள் இருக்காது—நீ அழிவின் பாதையில் கால்வைத்திருப்பாய்.

உங்கள் தோற்றத்தை நீங்கள் புரிந்துகொள்வதில் நன்மை உள்ளது, மேலும் நீங்கள் மெய்சத்தியத்தைப் புரிந்துகொள்வது கிரியைக்கு நன்மை அளிக்கிறது. இப்படிச் செய்யாமல், விரும்பும் விளைவை அடைய முடியாது. இது ஜெயங்கொள்ளும் கிரியையின் ஒரு பகுதி மற்றும் கிரியையில் இது ஒரு தேவையான படி. அது ஓர் உண்மை. ஜனங்களின் ஆவியை எழுப்புவது, அவர்களின் மனசாட்சியின் உணர்வை எழுப்புவது, மற்றும் இந்த மாபெரும் இரட்சிப்பை அடைய அவர்களை அனுமதிப்பதே இந்தக் கிரியையின் நோக்கம். ஒருவருக்கு மனசாட்சி இருந்தால், அவர்கள் கீழான நிலையில் இருப்பதைக் காணும்போது அவர்கள் தேவனுக்கு நன்றிசொல்ல வேண்டும். அவர்கள் அவரது வார்த்தையைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொள்ள வேண்டும், அவர் அவர்களுக்கு அருளியுள்ள கிருபையுடன் சேர்த்து இறுக்கமாகப் பிடித்துகொள்ள வேண்டும், மேலும் மனங்கசந்து அழுதும் கூறவேண்டும்: “எங்கள் நிலை தாழ்ந்ததாக உள்ளது மேலும் இந்த உலகில் நாங்கள் எதையும் அடையவில்லை. கீழான நிலையில் இருக்கும் ஜனங்களாகிய எங்களை யாரும் நோக்கிப் பார்ப்பதில்லை. நாங்கள் எங்கள் வீட்டுச் சுழலில் துன்புறுத்தப்படுகிறோம், எங்கள் கணவர்கள் எங்களை நிராகரிக்கிறார்கள், எங்கள் மனைவிகள் எங்களை அவமதிக்கிறார்கள், எங்கள் குழந்தைகள் எங்களை இழிவாகப் பார்க்கிறார்கள், மேலும் எங்களுக்கு வயதாகும்போது, எங்கள் மருமகள்களும் கூட எங்களைத் தவறாக நடத்துகிறார்கள். நாங்கள் உண்மையில் துன்பப்பபட்டது கொஞ்சமல்ல, மற்றும் நாங்கள் இப்போது தேவனின் மாபெரும் அன்பை அனுபவிப்பது அவ்வளவு நல்ல அதிர்ஷ்டமே. தேவன் எங்களை இரட்சிக்காமல் இருந்திருந்தால், எங்களால் எப்படி மனிதர்களின் துன்பங்களைத் தெளிவாகப் பார்த்திருக்க முடியும்? நாங்கள் இன்னும் கூட இந்தப் பாவத்தால் சீர்குலைந்து கொண்டிருந்திருப்போமே? இது தேவன் எங்களுக்களித்த உயர்ச்சி அல்லவா? நான் ஜனங்களில் மிகத் தாழ்ந்தவனாக இருக்கிறேன், மற்றும் தேவன் என்னை மிக உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறார். நான் அழிக்கப்பட்டாலும் கூட, அப்போதும் அவரது அன்புக்கு நான் ஈடுசெய்ய வேண்டும். தேவன் நம்மைப் பற்றி உயர்வாக நினைக்கிறார் மேலும் அவர் இப்படிப்பட்ட கீழான ஜனங்களான நம்மோடு முகமுகமாய்ப் பேசுகிறார். அவர் போதிப்பதற்காக என் கரத்தைப் பிடிக்கிறார். தமது வாயால் எனக்கு உணவூட்டுகிறார். அவர் என்னோடு ஜீவித்து என்னோடு துன்பப்படுகிறார். அவர் என்னை சிட்சித்தாலும்—நான் என்ன கூறமுடியும்? சிட்சிக்கப்படுவதும் தேவனால் உயரத்தப்படுவதில்லையா? நான் சிட்சிக்கப்படுகிறேன் ஆனாலும் என்னால் அவர் நீதியைப் பார்க்க முடிகிறது. மனசாட்சி இல்லாமல் என்னால் இருக்க முடியாது—நான் தேவனுடைய அன்புக்கு ஈடுசெய்ய வேண்டும். இனிமேலும் தேவனை எதிர்த்து என்னால் கலகம் செய்ய முடியாது.” தேவனின் நிலையும் அவரது அந்தஸ்தும் ஜனங்களுடையது போன்றதல்ல—அவருடைய துன்பம் மனிதர்களுடைய துன்பம் போன்றதே, அவரது உணவும் உடையும்அவர்களுடையதைப் போன்றதே, ஆனால் எல்லா ஜனங்களும் அவரை மதிக்கிறார்கள், மற்றும் இதுவே ஒரே வித்தியாசம். அவர் அனுபவிக்கும் மீதி எல்லாம் மனிதனைப் போன்றவை இல்லையா? ஆகவே, ஒரு குறிப்பிட்ட வழியில் உன்னை நடத்த வேண்டும் என்று நீ தேவனைக் கேட்பதற்கு உனக்கு எது உரிமையளிக்கிறது? தேவன் இத்தகைய மாபெரும் துன்பங்களை சகித்துக்கொண்டார் மற்றும் இத்தகைய மாபெரும் கிரியையை செய்திருக்கிறார், மற்றும் நீங்கள்—எறும்புகளை விடக் கீழானவர்கள், மூட்டைப்பூச்சிகளை விடக் கீழானவர்கள்—இன்று மிகவும் உயரமாக உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள். உன்னால் தேவனுடைய அன்புக்கு ஈடுசெய்ய முடியாவிட்டால், உன்னுடைய மனசாட்சி எங்கே இருக்கிறது? சிலர் தங்கள் இருதயத்தில் இருந்து கூறுகிறார்கள்: “தேவனை விட்டுவிலக நான் ஒவ்வொரு முறையும் நினைக்கும் போதும், என் கண்கள் கண்ணீரால் நிறைகின்றன மற்றும் என் மனசாட்சி குத்தப்படுகிறது. நான் தேவனுக்குக் கடன்பட்டுள்ளேன். என்னால் இதைச் செய்ய முடியாது. அவரை என்னால் இப்படி நடத்த முடியாது. நான் மரித்து, மரிப்பதன் மூலம் அவரது கிரியைக்கு மகிமை அளிக்க வேண்டும் என்றால் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைவேன். மற்றப்படி, நான் ஜீவித்தாலும் கூட, எனக்குள் சமாதானம் இருக்காது.” இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்—அவை ஒரு சிருஷ்டி நிறைவுசெய்ய வேண்டிய கடமையை விளக்குகின்றன. ஒருவருக்குள் இந்த தரிசனம் எப்போதும் இருந்தால். அவர்கள் தெளிவாகவும் உள்ளுக்குள் சமாதானத்தோடும் இருப்பார்கள்; இந்த விஷயங்களில் நிச்சயத்துடன் இருப்பார்கள். நீ கூறுவாய்: “தேவன் எனக்குத் தீங்கு செய்யவில்லை, மேலும் அவர் வேண்டும் என்றே என்னைப் பார்த்து நகைக்கவில்லை அல்லது அவமானப்படுத்தவில்லை. அவர் கொஞ்சம் கடுமையாகப் பேசினாலும் அது எனது இதயத்தில் குத்தினாலும், அது எனது நன்மைக்காகவே. அவர் கடுமையாகப் பேசினாலும், அவர் இன்னும் என்னை இரட்சிக்கிறார், அவர் எனது பலவீனங்களைக் குறித்து இன்னும் கரிசனை உள்ளவராக இருக்கிறார். உண்மையைப் பயன்படுத்தி அவர் என்னைத் தண்டிக்கவில்லை. தேவனே இரட்சிப்பு என்பதை நான் விசுவாசிக்கிறேன்.” உண்மையிலேயே உனக்கு இந்த தரிசனம் இருந்தால், நீ ஓடிப்போவதற்கு வாய்ப்பில்லை. உன் மனசாட்சி உன்னை விட்டுவிடாது, மற்றும் அதன் கண்டனம் நீ தேவனை அந்த விதத்தில் நடத்தக் கூடாது என்று உனக்குச் சொல்லும். நீ அடைந்த கிருபை முழுவதையும் நீ நினைக்கிறாய். மிக அதிகமாக என் வார்த்தைகளை நீ கேட்டிருக்கிறாய்—நீ அவைகளைக் கேட்டதெல்லாம் வீணா? யார் ஓடிப்போனாலும் பரவாயில்லை, உன்னால் முடியாது. பிறர் விசுவாசிக்கவில்லை, ஆனால் நீ விசுவாசிக்க வேண்டும். பிறர் தேவனை விட்டுவிடுகிறார்கள், ஆனால் நீ தேவனைப் பின்பற்றி அவருக்கு சாட்சியாக இருக்க வேண்டும். பிறர் தேவன் பேரில் அவதூறு கூறுகிறார்கள், ஆனால் உன்னால் முடியாது. தேவன் உன் பேரில் எவ்வளவு தூரம் இரக்கமற்றவராக இருந்தாலும் சரி, நீ அப்போதும் அவரை நியாயமானபடி நடத்த வேண்டும். நீ அவரது அன்பிற்கு ஈடுசெய்ய வேண்டும், மற்றும் உனக்கு ஒரு மனச்சாட்சி இருக்க வேண்டும், ஏனெனில் தேவன் குற்றமற்றவர். மனுக்குலத்தின் மத்தியில் கிரியை செய்வதற்காக அவர் பரலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து ஏற்கனவே பெரும் அவமானங்களை அடைந்துவிட்டார். எள்ளளவும் மாசில்லாத பரிசுத்தர் அவர். அசுத்தமான தேசத்துக்கு வந்ததன் மூலம் அவர் எவ்வளவு அவமானங்களைச் சகித்துக்கொண்டார்? உங்களுக்காகவே அவர் உங்களிடத்தில் கிரியை செய்கிறார். நீ மனசாட்சி இல்லாமல் அவரை நடத்தினால், நீ முன்னதாகவே இறந்துவிடுவது நலமாயிருக்கும்.

தற்போது, தரிசனத்தின் இந்த அம்சத்தில் குறை உள்ளவர்களாகப் பெரும்பான்மையான ஜனங்கள் இருக்கின்றனர்; அவர்களால் இந்தக் கிரியையின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாது மேலும் இதன் மூலம் தேவன் இறுதியாக எதை அடைவதில் நோக்கமாயிருக்கிறார் என்று தெரியாது. குறிப்பாகக் குழப்பம் அடைந்தவர்கள்—அவர்கள் ஒரு சிக்கலான வழிக்குள் நுழைந்து சில திருப்பங்களுக்குப் பின் வழியைத் தொலைத்து விட்டதைப் போல. தேவனின் நிர்வாகத் திட்டத்தின் நோக்கத்தை முற்றிலுமாக நீ விளக்கிச் சொன்னால், அவர்கள் குழப்பம் அடையமாட்டார்கள். பலரால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை, மேலும் தேவனுடைய கிரியை ஜனங்களைச் சித்திரவதை செய்வதற்கே என்று நம்புகிறார்கள். அவரது கிரியையின் ஞானத்தையும் அதிசயத்தையும் அவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை, மேலும் அவரது கிரியை அவரது மாபெரும் வல்லமையை வெளிப்படுத்துவதற்காகவே மற்றும் அதைவிட மேலாக, மனுக்குலத்தை இரட்சிப்பதற்காகவே என்பதை அவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. அவை அனைத்தையும் அவர்கள் பார்ப்பதில்லை; வெறுமனே, அவர்களுக்கு ஏதாவது வாய்ப்புகள் இருக்கின்றனவா, அவர்களால் பரலோகத்துக்குள் நுழைய முடியுமா என்றுதான் பார்க்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: “தேவனின் கிரியை எப்போதும் மிகவும் சுற்றிவளைப்பதாக இருக்கிறது; நாங்கள் உன் ஞானத்தை நேரடியாகப் பார்க்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். நீ இவ்விதம் எங்களைச் சித்திரவதை செய்யக்கூடாது. எங்கள் திறன் மிகக் குறைந்ததாக இருக்கிறது, மேலும் எங்களால் உன் சித்தத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நீ நேரடியாகப் பேசி கிரியை செய்தால் நன்றாக இருக்கும். நாங்கள் ஊகிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய், ஆனால் எங்களால் முடியாது. துரிதமாக உன் மகிமையைக் காண எங்களை அனுமதித்தால் நன்றாக இருக்கும். இப்படி சுற்றிவளைத்து விஷயங்களை செய்யவேண்டியதன் தேவை என்ன?” உங்களுக்கு மிகவும் குறைபாடானது என்னவென்றால் அது மனச்சாட்சிதான். அதிக மனச்சாட்சி கொண்டவர்களாய் இருங்கள். இந்தக் கிரியையின் படிகளை உண்மையில் யார் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைப் பார்க்க உன் கண்களை அகலமாகத் திற. அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். இப்போது, சிறந்த முறையில், நீ அனுபவிக்க வேண்டிய ஜீவிதத்தின் மேலோட்டமான அம்சத்தின் ஏதோ ஒரு விஷயத்தை நீ புரிந்துகொண்டிருக்கிறாய். இன்னும் நீ அனுபவிக்க வேண்டிய பெரும் அளவிலான சத்தியம் உள்ளது, மற்றும் நீ அதை முற்றிலுமாகப் புரிந்துகொள்ளும் அந்த நாள் வரும்போது, அதற்குப் பின் நீ இப்படி பேச மாட்டாய், நீ குறைகூறவும் மாட்டாய். அதுமட்டும் அல்லாமல் விஷயங்களை வரையறுக்க இவ்வளவு அவசரமும் படமாட்டாய். நீ கூறுவாய்: “தேவன் மிகவும் ஞானமுள்ளவர், தேவன் மிகவும் பரிசுத்தமானவர், தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்!”

முந்தைய: தேவனுடைய இரட்சிப்பைப் பெறுவதற்காக திறனை வளர்த்தல்

அடுத்த: பேதுருவின் அனுபவங்கள்: சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அவனது அறிவு

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக