அத்தியாயம் 67

என் குமாரர்கள் வெளிப்படையாகவும் அனைத்து ஜனங்களுக்கு முன்பும் தோன்றுகிறார்கள். அவர்களை வெளிப்படையாக எதிர்க்கத் துணியும் எவரையும் நான் கடுமையாகச் சிட்சிப்பேன்; அது நிச்சயம். இன்று, எழுந்து திருச்சபையை வழிநடத்த முடிந்த அனைவரும் முதற்பேறான குமாரன் என்ற நிலையை அடைந்துள்ளனர், மற்றும் அவர்கள் இப்போது என்னுடன் மகிமையில் உள்ளனர்—என்னுடைய அனைத்தும் உங்களுடையதுமாகும். ஊக்கத்துடன் எனக்கு அடங்கியிருக்கும் அனைவர் மீதும் நான் ஏராளமான கிருபையை அருளி, மற்ற மனிதர்களின் பலத்திற்கு அப்பாற்பட்ட பலம் கொண்டவனாக உன்னை மாற்றுவேன். என் சித்தம் முழுவதும் என் முதற்பேறானக் குமாரர்களான உங்களுக்காக பரிவிரக்கமடைகிறது, மற்றும் முடிந்த அளவு விரைவாக முதிர்ச்சி அடைந்து நான் உங்களிடம் ஒப்படைத்ததைச் செய்து முடிக்க வேண்டும் என்று மட்டும் தான் நான் விரும்புகிறேன். இதைத் தெரிந்து கொள்ளவும்! நான் உங்களிடம் ஒப்படைப்பது தான் என் நிர்வாக திட்டத்தின் இறுதி திட்டமாகும். உங்களின் முழு இருதயம், மனது, மற்றும் பலத்துடன், உங்களை எனக்கு முழுதாக வழங்கி, அவை அனைத்தையும் எனக்கு ஒப்புக் கொடுக்க முடியும் என்று மட்டும் தான் நான் நம்புகிறேன். உண்மையில் நேரம் எந்தவொரு மனிதருக்காகவும் காத்திருக்காது, மற்றும் எந்தவொரு நபராலும், நிகழ்வாலும், அல்லது விஷயத்தாலும் என் கிரியையைத் தடுக்க முடியாது. இதைத் தெரிந்து கொள்ளவும்! ஒவ்வொரு அடியிலும் எந்தவொரு தடங்கலுமின்றி, என் கிரியையானது சீராக முன்னேறுகிறது.

பிரபஞ்சம் முழுவதும் மற்றும் பூமியின் எல்லைகள் வரை என் காலடிகள் அடியெடுத்து வைக்கின்றன, ஒவ்வொரு நபரையும் என் கண்கள் தொடர்ந்து ஆராய்கின்றன, மேலும், பிரபஞ்சத்தை நான் முழுமையாகக் கூர்ந்து நோக்குகிறேன். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு மூலையிலும் என் வார்த்தைகள் உண்மையில் கிரியை செய்கின்றன. எனக்காக ஊழியம் செய்யத் துணியாத யாராகிலும், என் மீது விசுவாசமற்றவராய் இருக்கத் துணியும் யாராகிலும், என் நாமத்தின் மீது நியாயத்தீர்ப்பு வழங்கத் துணியும் யாராகிலும், மற்றும் என் குமாரர்களை நிந்திக்கவும் பழி கூறவும் துணியும் யாராகிலும்—இத்தகைய விஷயங்களை உண்மையிலேயே செய்யக்கூடியவர்கள் கடுமையான நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். என் நியாயத்தீர்ப்பானது முழுமையாக நடக்கும், அதாவது, இப்போது நியாயத்தீர்ப்பின் சகாப்தமாகும், மேலும் கவனமாகக் கூர்ந்து நோக்குவதன் மூலம், பிரபஞ்ச உலகம் முழுவதும் என் நியாயத்தீர்ப்பு விரிவடைவதை நீங்கள் காண்பீர்கள். நிச்சயமாக, என் வீடு விதிவிலக்காகாது; யாருடைய எண்ணங்கள், வார்த்தைகள், அல்லது செயல்கள் எனது சித்தத்திற்கு இணங்கவில்லையோ அவர்கள் மீது என் நியாயத்தீர்ப்பு வரும். இதைப் புரிந்து கொள்ளுங்கள்! என் நியாயத்தீர்ப்பானது ஒட்டுமொத்தப் பிரபஞ்ச உலகை நோக்கியது தானே தவிர, ஒரு ஜனக்குழு அல்லது பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. இதை நீங்கள் உணர்ந்தீர்களா? மனதின் ஆழத்தில், என்னைப் பற்றிய உன் எண்ணங்களில் நீ முரண்படுகிறாய் என்றால், உடனடியாக உட்புறத்தில் நீ நியாயந்தீர்க்கப்படுவாய்.

என் நியாயத்தீர்ப்பானது அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் வருகிறது. இதைத் தெரிந்து கொள்ளவும்! பிரபஞ்ச உலகின் தனித்துவமான மற்றும் ஞானமுள்ள தேவன் நானே! எதுவும் என் வல்லமைக்கு அப்பாற்பட்டவையல்ல. என் நியாயத்தீர்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டன: உங்களின் எண்ணங்களில் என்னைக் குறித்து நீங்கள் முரண்பட்டால், ஒரு எச்சரிக்கையாக, நான் உன்னைப் பிரகாசிப்பிப்பேன். நீ கேட்கவில்லை என்றால், நான் உன்னை உடனடியாகக் கைவிடுவேன் (என் நாமத்தில் சந்தேகம் கொள்வதைப் பற்றி இதில் நான் குறிப்பிடவில்லை, ஆனால் சரீர இன்பங்களுடன் தொடர்புடைய வெளிப்புற நடத்தைகளைக் குறிப்பிடுகிறேன்). என்னைப் பற்றிய உன் எண்ணங்கள் இணக்கமற்றதாக இருந்தால், நீ என்னிடம் புகார் செய்தால், சாத்தானின் யோசனைகளை நீ மீண்டும் மீண்டும் ஏற்றுக் கொண்டால், மற்றும் வாழ்க்கையின் உணர்வுகளை நீ பின்பற்றவில்லை என்றால், பின்னர் உன் ஆவி அந்தகாரத்தில் இருக்கும் மற்றும் உன் மாம்சம் வலியை அனுபவிக்கும். நீ எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மட்டும் உன்னால் உன் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியாது, மற்றும் உன் வாழ்க்கையானது வெளிப்படையாகப் பின்தங்கியிருக்கும். பேச்சில் ஒழுக்கம் கெட்டவர்களாக இருப்பவர்களுக்கு, உங்கள் வாய்கள் மற்றும் நாவுகளைத் தண்டித்துத் திருத்துவேன், மற்றும் உங்களின் நாவுகள் கையாளப்படுவதற்கு உட்படுத்துவேன். செயல்களில் கட்டுப்பாடின்றி ஒழுக்கம் கெட்டவர்களே, உங்களின் ஆவிகளில் நான் உங்களை எச்சரிக்கிறேன், மேலும், கேட்காதவர்களை நான் கடுமையாகச் சிட்சிப்பேன். என்னை வெளிப்படையாக நியாயந்தீர்த்து எதிர்ப்பவர்கள், வார்த்தையிலோ செயலிலோ கீழ்ப்படியாமையை வெளிப்படுத்துபவர்கள், நான் முற்றிலுமாக அவர்களைப் புறம்பாக்கிப்போட்டு, கைவிடுவேன், அதன் மூலம் அவர்கள் அழிந்து, உயர்வான ஆசீர்வாதங்களை இழக்கச் செய்வேன்; தெரிந்துகொள்ளப்பட்ட பின்னர் புறம்பாக்கப்படுபவர்கள் இவர்கள் தான். அறியாமையில் இருப்பவர்கள், பார்வைகளில் தெளிவில்லாமல் இருப்பவர்கள், நான் இன்னும் அவர்களைப் பிரகாசிப்பித்து அவர்களை இரட்சிப்பேன்; இருப்பினும், சத்தியத்தைப் புரிந்து கொண்ட பிறகும் அதைப் கடைப்பிடிக்காதவர்கள், அவர்கள் அறியாமையில் இருப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மேற்கூறிய விதிகளின்படி நிர்வகிக்கப்படுவார்கள். ஆரம்பத்திலிருந்தே தவறான நோக்கங்களைக் கொண்ட அந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் என்றென்றைக்கும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாதபடி நான் செய்வேன், மேலும், இறுதியில், அவர்கள் படிப்படியாக ஒவ்வொருவராக புறம்பாக்கப்படுவர். என் ஏற்பாட்டின்படி அவர்கள் இப்போது இருக்கிறார்கள் என்றாலும், ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள் (ஏனென்றால், விஷயங்களை நான் அவசரகதியில் செய்வதில்லை, ஆனால் ஒழுங்கான முறையிலேயே நான் செய்கிறேன்).

என் நியாயத்தீர்ப்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டது; இது தங்களுக்குரிய இடங்களை எடுக்க வேண்டிய பல்வேறு மக்கள் அனைவரையும் குறிப்பிடுகிறது. ஜனங்கள் எந்த விதிகளை மீறியுள்ளார்கள் என்பதன் அடிப்படையில் நான் அவர்களை நிர்வகித்து நியாயந்தீர்ப்பேன். இந்தப் பெயரில் இல்லாதவர்கள் மற்றும் கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு, ஒரே ஒரு விதி தான் பொருந்தும்: என்னை எதிர்ப்பவர்கள் எவரானாலும், அவர்களின் ஆவிகள், ஆத்துமாக்கள், மற்றும் சரீரங்களை நான் உடனடியாக எடுத்து, அவர்களைப் பாதாளத்திற்குள் தள்ளுவேன்; யாரெல்லாம் என்னை எதிர்க்கவில்லையோ, இரண்டாம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு முன் நீங்கள் முதிர்ச்சியடைவதற்காக நான் காத்திருப்பேன். என் வார்த்தைகள் அனைத்தையும் முழுமையானத் தெளிவுடன் விளக்குகின்றன, மேலும், எதுவும் மறைக்கப்படவில்லை. உங்களால் எப்போதும் அவற்றை மனதில் வைத்திருக்க முடியும் என்று மட்டும் நான் நம்புகிறேன்!

முந்தைய: அத்தியாயம் 66

அடுத்த: அத்தியாயம் 68

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக