அத்தியாயம் 70

என் இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட்டதும், பகிரங்கமாகத் தோன்றுவதும், இனி மறைக்கப்பட்டிருக்காது என்பதும், முழுவதுமாக என் கிருபை மற்றும் இரக்கத்தின் காரணமாகவே ஆகும். மேலும், என் வார்த்தை மனிதர்களிடையே தோன்றுகிறதும், இனி மறைக்கப்பட்டிருக்காது என்பதும் கூட என் கிருபை மற்றும் இரக்கத்தினாலேயே ஆகும். எனக்காக உண்மையாகத் தங்களையே பயன்படுத்துபவர்களையும், எனக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன். என்னால் பிறந்தும் கூட என்னை அறியாத, என்னை எதிர்க்கும் அனைவரையும் நான் வெறுக்கிறேன். எனக்காக உண்மையுள்ள எவரையும் நான் கைவிடமாட்டேன்; மாறாக, அந்த நபரின் ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக்குவேன். நன்றியற்றவர்களையும் என் தயவை மீறுபவர்களையும் இரட்டிப்பாகத் தண்டிப்பேன், நான் அவர்களை எளிதில் விட்டுவிட மாட்டேன். என் ராஜ்யத்தில் மாறுபாடோ அல்லது வஞ்சகமோ இல்லை; உலகத்தன்மை இல்லை; அதாவது மரித்தோரின் எந்த ஒரு வாடையும் இல்லை. மாறாக, அனைத்தும் நேர்மையும் நீதியுமாயிருக்கும்; எதுவும் ஒளிக்கப்படாமல் மறைக்கப்படாமல், அனைத்தும் சுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும். எல்லாம் புதியதாக, எல்லாம் இன்பமாக, எல்லாம் பக்திவிருத்திக்கு ஏதுவாக இருக்கும். இன்னும் மரித்தவர்களின் வாடையைக் கொண்டிருக்கும் எவரும் எவ்வகையிலும் என் ராஜ்யத்தில் தொடர்ந்து இருக்க முடியாது, மாறாக என் இருப்புக் கோலால் ஆளப்படுவார்கள். பழங்காலத்திலிருந்து இன்று வரை முடிவில்லாத அனைத்து இரகசியங்களும், கடைசி நாட்களில் என்னால் ஆதாயப்படுத்தப்பட்ட ஜனக்கூட்டமான உங்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. நீங்கள் பாக்கியவான்களாக உணரவில்லையா? அனைத்தும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் நாட்களானது, இன்னும் நீங்கள் என் ஆளுகையைப் பகிர்ந்து கொள்ளும் நாட்களாகும்.

உண்மையிலேயே ராஜாக்களாக ஆட்சி செய்யும் மக்கள் குழுவானது எனது முன்குறித்தல் மற்றும் தெரிந்துகொள்ளுதலைச் சார்ந்ததாகும், அதற்குள் எந்த ஒரு மனித சித்தமும் கிடையாது. இதில் பங்கேற்கத் துணியும் எவரும் என் கையிலிருந்து ஒரு அடியை அனுபவிக்க வேண்டும், மேலும் அத்தகையவர்கள் பொங்கி எழும் அக்கினிக்கானப் பொருட்களாக இருப்பார்கள்; இது எனது நீதியின் மற்றும் மாட்சிமையின் மறுபக்கமாகும். நான் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறேன் என்று கூறினேன், முழு அதிகாரத்தையும் செலுத்தும் ஞானமுள்ள தேவன் நான், நான் யாருக்கும் கருணையுள்ளவராக இருப்பதில்லை; நான் முற்றிலும் இரக்கமற்றவர், தனிப்பட்ட உணர்வுகள் முற்றிலும் இல்லாதவர். நான் எவரையும் (அவன் எவ்வளவு நன்றாக பேசினாலும், நான் அவனைத் தண்டியாமல் விட்டு விடமாட்டேன்) என் நீதியுடனும், நேர்மையுடனும், மகத்துவத்துடனும் நடத்துகிறேன், இதற்கிடையில் எனது செயல்களின் அதிசயத்தையும், அதோடுகூட என் செயல்களின் அர்த்தத்தையும் ஒவ்வொருவரையும் சிறப்பாகக் காணச் செய்கிறேன். அசுத்த ஆவிகள் செய்யும் அனைத்து விதமான செயல்களுக்காகவும் அவை ஒவ்வொன்றையும் பாதாளக்குழிக்குள் எறிந்து, ஒவ்வொன்றாக அவற்றை நான் தண்டித்தேன். இந்தக் கிரியையானது அவற்றை எந்த நிலையும் கொண்டிருக்காமல் செய்த, அவை தங்கள் கிரியைகளைச் செய்ய எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் பண்ணின, காலம் துவங்குவதற்கு முன்பே நான் செய்து முடித்த ஒன்றாகும். என்னால் முன்குறிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, நான் தெரிந்துகொண்ட ஜனங்களில் எவரும், ஒருபோதும் அசுத்த ஆவிகளால் ஆட்கொள்ளப்பட முடியாது, மாறாக எப்போதும் பரிசுத்தமாக இருப்பார்கள். நான் முன்குறிக்காத தேர்வு செய்யாதவர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களைச் சாத்தானிடம் ஒப்படைப்பேன், இனி அவர்களை இருக்க அனுமதிக்க மாட்டேன். எல்லா அம்சங்களிலும், எனது ஆட்சிமுறை ஆணைகள் எனது நீதியையும் எனது மகத்துவத்தையும் உள்ளடக்கியிருக்கும். அவர்களிடம் சாத்தான் கிரியை செய்யும் ஒருவரைக்கூட நான் விட்டுவிட மாட்டேன், அவர்களுடைய சரீரங்களோடுகூட அவர்களைப் பாதாளத்தில் எறிந்து விடுவேன், ஏனென்றால் நான் சாத்தானை வெறுக்கிறேன். நான் எவ்வகையிலும் அதை எளிதில் விட்டுவிட மாட்டேன், அதன் கிரியையைச் செய்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பையும் அனுமதிக்காமல், முற்றிலுமாக அழித்துவிடுவேன். சாத்தானால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சீர்கேடு அடைந்தவர்கள் (அதாவது பேரழிவின் பொருட்களாய் இருப்பவர்கள்) என் சொந்தக் கரங்களின் புத்திசாலித்தனமான ஏற்பாட்டின் கீழ் உள்ளனர். இது சாத்தானின் மூர்க்கத்தனத்தின் விளைவாக நடந்தது என்று நினைக்க வேண்டாம்; நான் பிரபஞ்சத்தையும் எல்லாவற்றையும் ஆளுகிற சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! என்னைப் பொறுத்தவரை, தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை, மேலும் நிறைவேற்ற முடியாத அல்லது சொல்ல முடியாத எந்த வார்த்தையும் இல்லை. மனிதர்கள் எனது ஆலோசகர்களாக செயல்படக்கூடாது. என் கையால் அடிக்கப்பட்டு, பாதாளத்தில் வீசப்படுவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். இதை நான் உனக்குச் சொல்கிறேன்! இன்று என்னுடன் முன்னெச்சரிக்கையாக ஒத்துழைப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்கள் இழப்புகளைத் தவிர்த்து நியாயத்தீர்ப்பின் வேதனையிலிருந்து தப்பிப்பார்கள். இவை அனைத்தும் எனது ஏற்பாடுகள், என்னால் முன்குறிக்கப்பட்டவையாகும். கண்மூடித்தனமான கருத்துக்கள் எதையும் சொல்ல வேண்டாம், நீ மிகவும் பெரியவன் என்று நினைத்துக் கொண்டு தாறுமாறாகப் பேச வேண்டாம். இவை அனைத்தும் எனது முன்குறிக்கப்படுதலினால் தானே நடக்கிறது? எனக்கு ஆலோசகர்களாக இருக்கும் உங்களுக்கு, எந்த வெட்கமும் இல்லை! உங்கள் சொந்த மதிப்பையே நீங்கள் அறியவில்லை; இது எவ்வளவு பரிதாபகரமான ஒன்று! அப்படியிருந்தும், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று நீங்கள் நினைக்கிறீர்கள், உங்களைப் பற்றியே உங்களுக்குத் தெரியவில்லை. அடிக்கடி, என் கடினமான முயற்சிகளை வீணாக்கும்படி நீங்கள் என் வார்த்தைகளைக் கவனிக்க மறுக்கிறீர்கள், அவை என் கிருபையின் மற்றும் இரக்கத்தின் வெளிப்பாடுகள் என்பதைக் கொஞ்சமும் உணர்வதில்லை. மாறாக, உங்கள் சொந்தப் புத்திசாலித்தனத்தை மீண்டும் மீண்டும் காண்பிக்க முயற்சிக்கிறீர்கள். இது உங்களுக்கு நினைவிருக்கிறதா? தாங்கள் மிகவும் புத்திசாலி என்று நினைக்கும் ஜனங்கள் எத்தகைய தண்டனையைப் பெற வேண்டும்? என் வார்த்தைகளைக் குறித்து அலட்சியமாக, விசுவாசமற்று, அவற்றை உங்கள் இருதயங்களில் பொறித்து வைக்காமல், இதையும் அதையும் செய்ய நீங்கள் என்னை ஒரு பாசாங்காகப் பயன்படுத்துகிறீர்கள். தீயவர்களே! உங்களால் எப்போது என் இருதயத்தை முழுமையாகக் கருத்தில் கொள்ள முடியும்? அதைக் குறித்த எந்த அக்கறையும் உங்களுக்கு இல்லை, ஆகவே உங்களைத் “தீயவர்கள்” என்று அழைப்பது உங்களைத் தவறாக நடத்துவதாகாது. இது உங்களுக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

ஒரு காலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விஷயங்களை ஒவ்வொன்றாக இன்று நான் உங்களுக்குக் காட்டுகிறேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் பாதாளக்குழிக்குள் போடப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது, ஏனென்றால் அதை வைத்திருப்பது எந்தப் பயனையும் தரப்போவதில்லை; அப்படி என்றால், அது கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய முடியாது என்பதாகும். இனிமேல் சிவப்பு வலுசர்ப்பம் இருக்காது; படிப்படியாக, அவை ஒன்றுமில்லாமல் பெலவீனப்படும். நான் சொல்வதைச் செய்கிறேன்; இதுவே எனது கிரியையின் நிறைவாகும். மனுஷீகக் கருத்துக்களை அகற்று; நான் சொன்ன அனைத்தையும், செய்து முடித்தேன். யாரெல்லாம் புத்திசாலித்தனமாக இருக்க முயற்சிக்கிறார்களோ, அவர்கள் தங்கள் மேலேயே அழிவையும் அவமதிப்பையும் கொண்டு வருகிறார்கள், அவர்கள் வாழ விரும்பவில்லை. எனவே நான் உன்னைத் திருப்திப்படுத்துவேன், அத்தகையவர்களை நிச்சயமாக வைத்திருக்க மாட்டேன். இனிமேல் மொத்த ஜனத்தொகையும் பெருக்கமடைந்து சிறந்து விளங்கும், அதே சமயம் என்னுடன் முன்னெச்சரிக்கையாக ஒத்துழைக்காத அனைவருமே ஒன்றுமில்லாமல் அழிக்கப்படுவார்கள். என்னால் அங்கீகாரம் பெற்றவர்கள் தான் என்னால் பூரணப்படுத்தப்படுவார்கள், அவர்களில் ஒருவரையும் நான் தூக்கியெறிய மாட்டேன். நான் சொல்வதில் எந்த முரண்பாடுகளும் இல்லை. என்னுடன் முன்னெச்சரிக்கையாக ஒத்துழைக்காதவர்கள் அதிகத் தண்டனையை அனுபவிப்பார்கள், இருப்பினும், இறுதியில், நான் நிச்சயமாக அவர்களை இரட்சிப்பேன். இருப்பினும், அந்த நேரத்தில், அவர்களின் வாழ்க்கையின் நீட்டிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நீ அத்தகைய நபராக இருக்க விரும்புகிறாயா? எழுந்து என்னுடன் ஒத்துழை! எனக்காக தங்களையே உண்மையாகப் பயன்படுத்தும் எவரையும் நான் நிச்சயமாக இழிவாக நடத்த மாட்டேன். என்னிடம் தங்களை ஊக்கமாய் அர்ப்பணிப்பவர்களைப் பொறுத்தவரை, எனது எல்லா ஆசீர்வாதங்களையும் நான் உனக்கு வழங்குவேன். உன்னை முழுவதுமாக எனக்குக் கொடு! நீ உண்பது, நீ உடுத்துவது, உன் எதிர்காலம் அனைத்தும் என் கரங்களில் உள்ளன; ஒருபோதும் நீ உபயோகித்துத் தீர்க்காத, முடிவில்லாத இன்பத்தைப் பெறும்படியாக, நான் எல்லாவற்றையும் ஒழுங்குடன் ஏற்பாடு செய்வேன். இதனால்தான், “எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.” என்று கூறினேன். எனக்காக உண்மையாகத் தன்னையே ஒப்புக்கொடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் எல்லா ஆசீர்வாதங்களும் கடந்து வரும்.

முந்தைய: அத்தியாயம் 69

அடுத்த: அத்தியாயம் 71

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக