முகவுரை

அநேக ஜனங்கள் தேவனை விசுவாசிக்கிறார்கள் என்றாலும், தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல் என்றால் என்ன மற்றும் தேவனின் சித்தத்திற்கு இணங்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை சிலர் மட்டுமே புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், “தேவன்” என்ற வார்த்தையையும் “தேவனின் கிரியை” போன்ற சொற்றொடர்களையும் ஜனங்கள் அறிந்திருந்தாலும், அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை, அதற்கு மேலாக அவருடைய கிரியையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்படியானால், தேவனை அறியாதவர்கள் அனைவரும் அவரை விசுவாசிப்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை, இதற்குக் காரணம் தேவனை விசுவாசிப்பது என்பது அவர்களுக்கு மிகவும் அறிமுகமில்லாததாகவும், மிகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இவ்வாறாக, அவர்கள் தேவனின் கோரிக்கைகளை முழுமையாக நிவர்த்தி செய்வதில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜனங்கள் தேவனை அறியாவிட்டால், அவருடைய கிரியையை அறியாவிட்டால், அவர்கள் தேவன் பயன்படுத்துவற்கு தகுதியற்றவர்களாகிறார்கள், மேலும் அவர்களால் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற முடிவதில்லை. “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்பது தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது ஆகும்; இதுவே தேவனை விசுவாசிப்பது குறித்த மிகவும் எளிமையான கருத்தாகும். மேலும், தேவன் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பது, உண்மையாக தேவனிடத்தில் விசுவாசம் வைப்பதற்குச் சமமானதல்ல; மாறாக, இது வலுவான மத மேலோட்டங்களைக் கொண்ட ஒரு வகையான எளிய விசுவாசம் ஆகும். தேவனிடத்தில் உண்மையான விசுவாசம் வைத்தல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கிறது: தேவன் எல்லாவற்றிற்கும் மேலான ராஜரீகத்தைக் கொண்டிருக்கிறார் என்ற விசுவாசத்தின் அடிப்படையில், ஒருவன் தேவனின் வார்த்தைகளையும் அவருடைய கிரியைகளையும் அனுபவிக்கிறான், ஒருவனின் சீர்கெட்ட மனநிலையைத் தூய்மைப்படுத்துகிறான், தேவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான், மேலும் தேவனை அறிந்துகொள்கிறான். இந்த வகையான ஒரு பிரயாணத்தை மட்டுமே “தேவனிடத்தில் விசுவாசம் வைத்தல்” என்று அழைக்கலாம். ஆயினும், ஜனங்கள் பெரும்பாலும் தேவனிடத்திலான விசுவாசத்தை ஓர் எளிமையான மற்றும் அற்பமான விஷயமாகவே பார்க்கிறார்கள். இவ்வழியில் தேவனை விசுவாசிப்பவர்கள் தேவனை விசுவாசிப்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டிருக்கிறார்கள், கடைசி வரை அவர்கள் தொடர்ந்து விசுவாசித்தாலும், அவர்கள் ஒருபோதும் தேவனின் அங்கீகாரத்தைப் பெறப்போவதில்லை, ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். எழுத்துக்களின்படியும், வெற்றுக் கோட்பாட்டிலும் தேவனை விசுவாசிப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேவனிடத்திலான விசுவாசத்தின் சாராம்சம் அவர்களிடம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியாது, மேலும் அவர்களால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற முடியாது. அப்படியிருப்பினும் அவர்கள் இரட்சிப்பிற்கான ஆசீர்வாதங்களுக்காகவும், போதுமான கிருபைக்காகவும் தேவனிடம் ஜெபிக்கிறார்கள். நாம் நிதானித்து, நம் இருதயங்களை அமைதிப்படுத்திக் கொண்டு, நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்: தேவனை விசுவாசிப்பது என்பது உண்மையில் பூமியில் எளிதான விஷயமாக இருக்க முடியுமா? தேவனை விசுவாசிப்பது என்பது தேவனிடமிருந்து அதிகக் கிருபையைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று இருக்க முடியுமா? தேவனை அறியாமலேயே அவரை விசுவாசிப்பவர்களும் அல்லது தேவனை நம்புகிறவர்களும் அவரை எதிர்த்தால், அவர்களால் உண்மையில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியுமா?

தேவனையும் மனுஷனையும் சமமாகக் கருத முடியாது. அவரது சாரமும் அவரது கிரியையும் மனுஷனால் எவ்வகையிலும் ஆழங்காண முடியாதவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை. மனுஷ உலகில் தேவன் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யாமலும், தன் வார்த்தைகளைப் பேசாமலும் இருந்தால், மனுஷனால் ஒருபோதும் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, தங்கள் முழு ஜீவிதத்தையும் தேவனுக்காக அர்ப்பணித்தவர்களால் கூட அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. தேவன் கிரியை செய்யத் தொடங்கவில்லை என்றால், மனுஷன் எவ்வளவு நன்றாகச் செயல்பட்டாலும், அவை அனைத்தும் பயனற்றதாகவே இருக்கும், ஏனென்றால் தேவனின் எண்ணங்கள் எப்போதும் மனுஷனின் எண்ணங்களை விட உயர்ந்தவையாக இருக்கின்றன, மேலும் தேவனின் ஞானம் மனுஷனின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆகவே, தேவனையும் அவருடைய கிரியையையும் “முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்” என்று கூறுபவர்கள் தகுதியற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; அவர்கள் அனைவரும் மிகைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அறிவற்றவர்கள் ஆவர். தேவனின் கிரியையை மனுஷன் வரையறுக்கக் கூடாது; மேலும், தேவனின் கிரியையை மனுஷனால் வரையறுக்க முடியாது. தேவனின் பார்வையில், மனுஷன் ஓர் எறும்பு போல அற்பமானவன்; ஆகையால் தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? “தேவன் இவ்வாறாக அல்லது அவ்வாறாகச் செயல்படமாட்டார்,” அல்லது “தேவன் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர்,” என்று கூச்சலிட விரும்புவோர், ஆணவத்துடன் பேசவில்லையா? மாம்சத்திலிருந்து வந்த மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். தேவனை எதிர்ப்பதே மனுஷகுலத்தின் இயல்பாக இருக்கிறது. மனுஷகுலம் தேவனுக்கு இணையாக இருக்க முடியாது, தேவனின் கிரியைக்கு அறிவுரை வழங்குவது என்பது மனுஷகுலத்திற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. தேவன் மனுஷனை வழிநடத்துவது என்பது தேவனின் கிரியையாக இருக்கிறது. இந்த அல்லது அந்தக் கருத்தை எதிர்க்காமல் மனுஷன் கீழ்ப்படிய வேண்டும் என்பது பொருத்தமானது தான், ஏனென்றால் மனுஷன் என்பவன் வெறும் மண்தான். தேவனைத் தேடுவது நம்முடைய நோக்கம் என்பதால், தேவனின் எண்ணப்படியான அவரது கிரியை மீதுள்ள நம் கருத்துக்களை நாம் மிகைப்படுத்தக் கூடாது, தேவனின் கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பதற்கு நம்முடைய சீர்கேடான மனநிலையை அதிகம் பயன்படுத்தவே கூடாது. அப்படிச் செய்வது நம்மை அந்திக்கிறிஸ்துக்களாக மாற்றாதா? அத்தகையவர்கள் எப்படி தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பார்கள்? தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் விசுவாசிப்பதால், அவரைத் திருப்திப்படுத்தவும் அவரைப் பார்க்கவும் நாம் விரும்புவதால், நாம் சத்தியத்தின் வழியைத் தேட வேண்டும், மேலும் தேவனுடன் ஒத்துப்போக ஒரு வழியைத் தேட வேண்டும். நாம் அவரை எதிர்ப்பதில் வணங்காக் கழுத்துள்ளவர்களாக இருக்கக்கூடாது. அத்தகைய செயல்களால் என்ன நன்மை வரக்கூடும்?

இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார். உன்னால் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், அவை உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உன் இயல்புகளை நீ வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் தேவனுக்கு முன்பாக நீதிக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொண்டவர்களால் மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும், உண்மையான பக்தியுள்ளவர்களால் மட்டுமே அவரால் அறிவூட்டப்பட முடியும். சச்சரவு மற்றும் சண்டையுடன் இல்லாமல், நிதானமான அமைதியுடன் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் முடிவுகள் பெறப்படுகின்றன. “இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார்,” என்று நான் கூறும்போது, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். ஒருவேளை இந்த வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாமல் போகலாம்; ஒருவேளை நீ அவற்றை வெறுக்கலாம்; அல்லது அவற்றின் மீது உனக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவன் தோன்றுவதற்கு உண்மையிலேயே ஏங்குகிற அனைவருமே அந்த உண்மையை எதிர்கொண்டு, அதைப் பற்றிய முடிவுகளுக்குச் செல்வதை விட, அவர்கள் அதனைக் கவனமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; ஒரு புத்திசாலி செய்ய வேண்டியது அதுதான்.

அத்தகைய ஒரு விஷயத்தை விசாரிப்பது கடினம் அல்ல, ஆனால் இந்த ஒரு சத்தியத்தை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்: தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் சாரத்தைக் கொண்டிருப்பார், மேலும் தேவனின் மனுஷ அவதாரமாக இருப்பவர் தேவனின் வெளிப்பாட்டைக் கொண்டிருப்பார். தேவன் மாம்சமாகிவிட்டதால, அவர் செய்ய விரும்பும் கிரியையை செயலாக்குவார், தேவன் மாம்சமாகிவிட்டதால், அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறுவார், மேலும் சத்தியத்தை மனுஷனிடம் கொண்டு வரவும், அவனுக்கு ஜீவனை வழங்கவும், அதற்கான வழியை சுட்டிக்காட்டவும் செய்வார். தேவனின் சாராம்சம் இல்லாத மாம்சம் என்பது நிச்சயம் மனுஷனாக அவதரித்த தேவனாக இருக்க முடியாது; இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை மனுஷன் விசாரிக்க விரும்பினால், தேவன் வெளிப்படுத்தும் மனநிலை மற்றும் அவர் பேசும் வார்த்தைகளிலிருந்து இதை உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை உறுதிப்படுத்தவும், இது சத்தியத்திற்கான வழி இல்லையா என்பதை உறுதிப்படுத்தவும், ஒருவன் தனது சாராம்சத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட வேண்டும். எனவே, இது தேவனின் மனுஷ அவதார மாம்சம் என்பதை தீர்மானிப்பதில் முக்கியமானது, வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டிலும், அவரது சாராம்சத்தில் (அவரது கிரியை, அவரது வார்த்தைகள், அவரது மனநிலை மற்றும் பல அம்சங்களில்) அமைந்துள்ளது. மனுஷன் தேவனின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே ஆராய்ந்து, அதன் விளைவாக அவரது சாராம்சத்தைக் கவனிக்கத் தவறுகிறான் என்றால், அந்த மனுஷன் மூடனாகவும் அறியாமையிலிருப்பதையும் காட்டுகிறது. வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு சாராம்சத்தைத் தீர்மானிக்க முடியாது; மேலும், தேவனின் கிரியை ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களுடன் ஒத்துப்போக முடியாது. இயேசுவின் வெளிப்புறத் தோற்றம் மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக இருக்கவில்லையா? அவருடைய உண்மையான அடையாளத்தைப் பற்றி எந்த தடயங்களையும் வழங்க அவரது முகம் மற்றும் உடைக்கு முடியவில்லை, இல்லையா? ஆரம்பக்கால பரிசேயர்கள் வெறுமனே இயேசுவின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் பார்த்து, அவருடைய வாயில் உள்ள வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்க்கவில்லையா? தேவன் தோன்றுவதை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சகோதர சகோதரியும் இந்த வரலாற்றுச் சோகத்தை மீண்டும் நிகழ்த்த மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. நீங்கள் நவீன காலத்தின் பரிசேயர்களாக மாறி, தேவனை மீண்டும் சிலுவையில் அறையக் கூடாது. தேவனின் வருகையை எவ்வாறு வரவேற்பது என்பதை நீங்கள் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் சத்தியத்திற்குக் கீழ்ப்படியும் ஒருவராக எப்படி இருக்க வேண்டும் என்பதில் உங்களுக்கு தெளிவான மனம் இருக்க வேண்டும். இயேசு ஒரு மேகத்தின் மீது வருவார் என்று காத்திருக்கும் அனைவரின் பொறுப்பும் இதுதான். நம்முடைய ஆவிக்குரிய கண்களைத் தெளிவுபடுத்துவதற்காகவே நாம் அவற்றைத் தேய்க்க வேண்டும், மிகைப்படுத்தப்பட்ட கற்பனையின் வார்த்தைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது. தேவனின் நடைமுறையான கிரியைகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், மேலும் தேவனின் நடைமுறையான அம்சத்தைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து, திடீரென்று உங்களிடையே இறங்கி, அவரை ஒருபோதும் அறியாத அல்லது பார்த்திராத மற்றும் அவருடைய சித்தத்தைச் செயல்படுத்தத் தெரியாத உங்களை அழைத்துச் செல்வார் என்பது போன்ற பகல் கனவுகளில் அந்த நாளுக்காக ஏங்கி உங்களை நீங்களே இழக்க வேண்டாம். மேலும் நடைமுறையான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது நல்லது!

நீ இந்தப் புத்தகத்தை ஆராய்ச்சியின் நோக்கத்திற்காகவோ அல்லது ஏற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காகவோ திறந்திருக்கலாம்; உன் மனப்பான்மை என்னவாக இருந்தாலும், நீ இதை இறுதிவரை வாசிப்பாய் என்றும், இதை ஒதுக்கி வைக்க மாட்டாய் என்றும் நம்புகிறேன். ஒருவேளை, இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு, உன் மனப்பான்மை மாறும், ஆனால் அது உன் நோக்கம் மற்றும் உன் புரிதலின் அளவைப் பொறுத்தது. எவ்வாறாயினும், நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: தேவனின் வார்த்தையை மனுஷனின் வார்த்தையாக மாற்ற முடியாது, மேலும் மனுஷனின் வார்த்தையை தேவனின் வார்த்தையாக மாற்ற முடியாது. தேவனால் பயன்படுத்தப்பட்ட ஒரு மனுஷனானவன் மனுஷனாக அவதரித்த தேவன் அல்ல; மனுஷ அவதாரமான தேவன், தேவனால் பயன்படுத்தப்பட்ட மனுஷன் அல்ல. இதில், ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. ஒருவேளை, இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு, இவை தேவனின் வார்த்தைகள் என்று நீ ஒப்புக் கொள்ள மாட்டாய், ஆனால் மனுஷன் பெற்ற அறிவூட்டலாக மட்டுமே ஒப்புக் கொள்வாய். அவ்வாறான நிலையில், நீ அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறாய். தேவனின் வார்த்தைகள் எப்படி மனுஷன் பெற்ற அறிவூட்டலைப் போலவே இருக்க முடியும்? மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகள் ஒரு புதிய யுகத்தைத் திறக்கின்றன, மனுஷகுலம் முழுவதற்கும் வழிகாட்டுகின்றன, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்றன, மேலும் புதிய யுகத்தில் மனுஷன் செல்ல வேண்டிய திசையையும் காட்டுகின்றன. மனுஷனால் பெறப்பட்ட அறிவூட்டல் என்பது கடைபிடிக்கக் கூடிய அல்லது அறிவுக்கு எளிய வழிமுறைகளாக இருக்கிறது. இதனால் மனுஷகுலம் அனைத்தையும் ஒரு புதிய யுகத்திற்கு வழிநடத்தவோ அல்லது தேவனின் மறைபொருட்களை வெளிப்படுத்தவோ முடியாது. எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, தேவன் தேவனாகவும், மனுஷன் மனுஷனாகவும் இருக்கிறான். தேவனுக்கு தேவனின் சாராம்சம் இருக்கிறது, மனுஷனுக்கு மனுஷனின் சாராம்சம் இருக்கிறது. தேவன் பேசும் வார்த்தைகளை பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெறப்படும் எளிமையான அறிவூட்டலாக மனுஷன் கருதினால், அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக் கொண்டால், அது மனுஷனின் தவறு. எதுவாக இருந்தாலும், நீ ஒருபோதும் சரியானதையும் தவறானதையும் குழப்பிக்கொள்ளக் கூடாது, அல்லது குறைவானதை உயர்வாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அல்லது மேலோட்டமானவற்றை ஆழ்ந்த விஷயம் கொண்டதாக எடுத்துக்கொள்ளக் கூடாது; எதுவாக இருந்தாலும், சத்தியம் என்று உனக்குத் தெரிந்ததை நீ ஒருபோதும் வேண்டுமென்றே மறுக்கக்கூடாது. தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நம்பும் ஒவ்வொருவரும் சரியான நிலைப்பாட்டில் இருந்து பிரச்சினைகளை விசாரிக்க வேண்டும், மேலும் தேவனின் புதிய கிரியையையும் அவருடைய புதிய வார்த்தைகளையும் அவர் சிருஷ்டித்த கண்ணோட்டத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையெனில், அவர்கள் தேவனால் புறம்பாக்கப்படுவர்.

யேகோவாவின் கிரியைக்குப் பிறகு, இயேசு மனுஷரிடையே தனது கிரியையைச் செய்ய மாம்சத்தில் வந்தார். அவருடைய கிரியை தனிமையில் மேற்கொள்ளப்படவில்லை, ஆனால் யேகோவாவின் கிரியையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. நியாயப்பிரமாணத்தின் காலம் முடிந்தபின் தேவன் செயல்படுத்திய ஒரு புதிய யுகத்திற்கான கிரியை இது. இதேபோல், இயேசுவின் கிரியை முடிந்தபின், தேவன் அடுத்த யுகத்திற்காகத் தனது கிரியையைத் தொடர்ந்தார், ஏனென்றால் தேவனின் முழு ஆளுகையானது எப்போதும் முன்னேறியபடியே இருக்கிறது. முதுமையடைந்த யுகம் கடந்து செல்லும் போது, அதற்குப் பதிலாக ஒரு புதிய யுகம் வரும், மேலும் பழைய கிரியை முடிவடைந்ததும், தேவனின் ஆளுகையைத் தொடர புதிய கிரியை ஒன்று இருக்கும். இந்த மனுஷ அவதாரம் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் ஆகும், இது இயேசுவின் கிரியையைப் பின்பற்றுகிறது. நிச்சயமாக, இந்த மனுஷ அவதாரம் சுயாதீனமாக ஏற்படாது; இது நியாயப்பிரமாணத்தின் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றிற்குப் பிறகான கிரியையின் மூன்றாம் கட்டம் ஆகும். ஒவ்வொரு முறையும் தேவன், கிரியையின் புதிய கட்டத்தைத் தொடங்கும்போது, எப்போதும் ஒரு புதிய ஆரம்பம் இருக்க வேண்டும், மேலும் அது எப்போதும் ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும். தேவனின் மனநிலையிலும், அவர் கிரியை செய்யும் முறையிலும், அவருடைய கிரியை செய்யப்படும் இடத்திலும் மற்றும் அவரது நாமத்திலும் அதற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படியானால், புதிய யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்வது மனுஷனுக்கு கடினம் என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தேவன் மனுஷனால் எவ்வாறு எதிர்க்கப்படுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் எப்போதும் தனது கிரியையைச் செய்கிறார், எப்போதும் மனுஷகுலம் முழுவதையும் முன்னோக்கிக் கொண்டுசெல்கிறார். இயேசு மனுஷனின் உலகத்திற்கு வந்தபோது, அவர் நியாயப்பிரமாணத்தின் யுகத்தை முடித்துவைத்து கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். கடைசிக்காலத்தில், தேவன் மீண்டும் மாம்சத்தில் வந்தார், இந்த மனுஷ அவதாரத்தில் அவர் கிருபையின் யுகத்தை முடித்துவைத்து, ராஜ்யத்தின் யுகத்தை அறிமுகப்படுத்தினார். தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைவருமே ராஜ்யத்தின் யுகத்திற்கு வழிநடத்தப்படுவார்கள், மேலும் அவர்களால் தேவனின் வழிகாட்டலைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவும் முடியும். இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

கிருபையின் யுகத்திலேயே ஜனங்கள் சிக்கிக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் தங்களது சீர்கெட்ட மனநிலையிலிருந்து விடுபட மாட்டார்கள், ஒருபுறம் தேவனின் ஆழ்ந்த மனநிலையை மட்டும் தெரிந்துகொள்வார்கள். ஜனங்கள் எப்பொழுதும் ஏராளமான கிருபையின் மத்தியில் ஜீவிக்கிறார்கள், ஆனால் தேவனை அறிந்து கொள்ளவோ அல்லது அவரைத் திருப்திப்படுத்தவோ அனுமதிக்கும் ஜீவவழி இல்லை என்றால், அவர்கள் ஒருபோதும் தேவனிடத்திலான விசுவாசத்தில் உண்மையாக எதையும் பெறமாட்டார்கள். இந்த வகையான விசுவாசம் உண்மையில் பரிதாபகரமானது. நீ இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்ததும், ராஜ்யத்தின் யுகத்தில் மனுஷனாக அவதரித்த தேவனின் ஒவ்வொரு படியையும் நீ அனுபவித்து முடிக்கும்போது, பல ஆண்டுகளாக நீ கொண்டிருந்த ஆசைகள் இறுதியாக உணரப்பட்டுள்ளன என்பதை நீ உணருவாய். இப்போதுதான் நீ உண்மையிலேயே தேவனை நேருக்கு நேர் பார்த்திருக்கிறாய் என்று நீ உணருவாய்; இப்போதுதான் நீ அவருடைய முகத்தைப் பார்த்திருக்கிறாய், அவருடைய தனிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டிருக்கிறாய், அவருடைய கிரியையின் ஞானத்தைப் பாராட்டியிருக்கிறாய், அவர் எவ்வளவு உண்மையானவர் மற்றும் சர்வவல்லமையுள்ளவர் என்பதை உண்மையிலேயே உணர்ந்திருக்கிறாய். கடந்த காலங்களில் ஜனங்கள் பார்த்திராத அல்லது வைத்திருக்காத பல விஷயங்களை நீ பெற்றிருக்கிறாய் என்பதை நீ உணருவாய். இந்த நேரத்தில், தேவனிடத்தில் விசுவாசம் வைப்பது என்றால் என்ன, தேவனின் சித்தத்திற்கு இணங்குவது என்றால் என்ன என்பதை நீ தெளிவாக அறிந்து கொள்வாய். நிச்சயமாக, நீ கடந்த காலக் கருத்துக்களுடன் ஒட்டிக்கொண்டு, தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரத்தின் உண்மையை நிராகரிக்கிறாய் அல்லது மறுக்கிறாய் என்றால், நீ வெறுங்கையுடன்தான் இருப்பாய், எதையும் பெறமாட்டாய், இறுதியில் தேவனை எதிர்த்ததற்காக நீ குற்றவாளி என்று அறிவிக்கப்படுவாய். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய கிரியைக்கு அடிபணியக்கூடியவர்கள் தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரமான சர்வவல்லவர் என்ற பெயரில் உரிமை கோரப்படுவார்கள். அவர்களால் தேவனின் தனிப்பட்ட வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள முடியும், மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தையும், உண்மையான ஜீவனையும் அவர்கள் பெறுவார்கள். கடந்த கால ஜனங்களால் இதுவரை கண்டிராதவற்றை அவர்கள் காண்பார்கள்: “அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது” (வெளிப்படுத்தல் 1:12-16). இந்தக் காட்சி தேவனின் முழு மனநிலையின் வெளிப்பாடாகும், மேலும் அவருடைய முழு மனநிலையின் வெளிப்பாடும் அவருடைய தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனுடைய கிரியையின் வெளிப்பாடுமாகும். ஆக்கினைத்தீர்ப்புகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளின் ஓட்டங்களில், மனுஷகுமாரன் தனது ஆழமான மனநிலையை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார், அவருடைய ஆக்கினைத்தீர்ப்பையும் நியாயத்தீர்ப்பையும் ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண அனுமதிக்கிறார், இது யோவானால் காணப்பட்ட மனுஷகுமாரனின் முகத்தின் உண்மையுள்ள சித்தரிப்பு ஆகும். (நிச்சயமாக, இவை அனைத்தும் ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கண்ணுக்குத் தெரியாததாக இருக்கும்.) தேவனின் உண்மையான முகத்தை மனுஷ மொழியைப் பயன்படுத்தி முழுமையாக வெளிப்படுத்த முடியாது, ஆகவே, தேவன் தம்முடைய ஆழ்ந்த மனநிலையை வெளிப்படுத்தும் வழிகளை மனுஷனுக்குத் தனது உண்மையான முகத்தைக் காட்ட பயன்படுத்துகிறார். மனுஷகுமாரனின் ஆழ்ந்த மனநிலையைப் பாராட்டிய அனைவருமே மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் தேவன் மிகப் பெரியவர், மனுஷ மொழியைப் பயன்படுத்தி அவரை முழுமையாக வெளிப்படுத்த முடியாது. ராஜ்யத்தின் யுகத்தில், மனுஷன், தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு அடியையும் அனுபவித்தவுடன், விளக்குகளின் மத்தியில் மனுஷகுமாரனைப் பற்றிப் பேசிய யோவானின் வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அவன் அறிந்து கொள்வான்: “அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.” அந்த நேரத்தில், இவ்வளவு சொல்லியிருக்கும் இந்த சாதாரண மாம்சமானது தேவனின் இரண்டாவது மனுஷ அவதாரம் என்பதை நீ சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துக்கொள்வாய். மேலும், உண்மையிலேயே நீ எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்து, நீயே உன்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவாய். இந்த ஆசீர்வாதத்தை ஏற்க நீ தயாராக இல்லையா?

இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி “ஆதியில் கிறிஸ்துவின் வெளிப்பாடுகள்” என்பதாகும். இந்த வார்த்தைகள் கிருபையின் யுகத்தின் முடிவிலிருந்து ராஜ்யத்தின் யுகத்தின் தொடக்கத்திற்கு மாறும் முறையைக் குறிக்கின்றன, மேலும் அவை திருச்சபைகளுக்கு மனுஷகுமாரனுக்கான பரிசுத்த ஆவியானவரின் பொதுவான சாட்சியாகும். வெளிப்படுத்துதலில் உள்ள இந்த வார்த்தைகளின் நிறைவேறுதலும் இவைதான்: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” இந்த வார்த்தைகள் ராஜ்யத்தின் யுகத்தில் தேவன் தொடங்கிய கிரியையின் ஆரம்பக் கட்டத்தைக் குறிக்கின்றன. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியானது, மனுஷகுமாரன் தன்னை முறையாக வெளிப்படுத்திய பின்னர் தனிப்பட்ட முறையில் பேசும் வார்த்தைகளால் ஆனது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் தீர்க்கதரிசனம், மறைபொருட்களின் வெளிப்பாடு மற்றும் ஜீவவழி போன்ற பல வகையான வசனங்களும் வார்த்தைகளும் உள்ளன, இவற்றின் உள்ளடக்கம் மிகவும் மதிப்பு மிகுந்தவை. இதில் ராஜ்யத்தின் எதிர்காலத்திற்கான கணிப்புகள், தேவனுடைய ஆளுகைத் திட்டத்தின் மறைபொருட்களின் வெளிப்பாடுகள், மனுஷ இயல்பின் பகுப்பாய்வு, அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள், கடுமையான நியாயத்தீர்ப்புகள், ஆறுதலான இதயப்பூர்வமான வார்த்தைகள், ஜீவிதத்தைப் பற்றிய விவாதம், பிரவேசம் பற்றிய சொற்பொழிவு மற்றும் பல உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் எதைக் கொண்டிருக்கிறார், அதேபோல் தேவனின் மனநிலை ஆகிய அனைத்தும் அவருடைய கிரியையிலும் அவருடைய வார்த்தைகளிலும் வெளிப்படுத்தப்படுகின்றன. நிச்சயமாக, தற்போதைய மனுஷ அவதாரத்தில் தேவனின் கிரியை முதன்மையாக ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலம் அவருடைய மனநிலையை வெளிப்படுத்துவதாகும். இந்த அஸ்திபாரத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம், அவர் மனுஷனிடம் அதிக சத்தியத்தைக் கொண்டுவருகிறார், மேலும் கடைப்பிடிப்பதற்கான பல வழிகளையும் அவனுக்குச் சுட்டிக்காட்டுகிறார், இதன் மூலம் மனுஷனை ஜெயங்கொண்டு அவனது சொந்த சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை இரட்சிக்கும் அவரது நோக்கத்தை அடைகிறார். ராஜ்யத்தின் யுகத்தில் தேவனின் கிரியைக்குப் பின்னால் இருக்கும் விஷயம் இதுதான். நீ புதிய யுகத்திற்குள் நுழைய விரும்புகிறாயா? உன் சீர்கெட்ட மனநிலையிலிருந்து உன்னை விடுவிக்க விரும்புகிறாயா? நீ உயர்ந்த சத்தியத்தைப் பெற விரும்புகிறாயா? மனுஷகுமாரனின் உண்மையான முகத்தைக் காண நீ விரும்புகிறாயா? இந்த ஜீவிதத்தை முறையாக ஜீவிக்க நீ விரும்புகிறாயா? நீ தேவனால் பரிபூரணப்படுத்தப்பட விரும்புகிறாயா? அப்படியெனில் இயேசுவின் வருகையை நீ எவ்வாறு வரவேற்கப் போகிறாய்?

அடுத்த: முன்னுரை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக