அத்தியாயம் 9

ஜனங்களின் கற்பனையில், தேவன் தாமே தேவன் மற்றும் மனுஷர்கள் மனுஷர்கள்தான். தேவன் மனுஷர்களின் மொழியைப் பேசுவதில்லை, அவர்களாலும் தேவனுடைய மொழியைப் பேச முடிவதில்லை. தேவனைப் பொறுத்தவரை, மனுக்குலம் அவரிடம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மிக சுலபமானது—ஒரே நேரத்தில் செய்து முடிக்கக் கூடிய அளவுக்குச் சுலபமானது—அதே சமயம் மனுக்குலத்திடம் தேவன் வைக்கும் கோரிக்கைகள் மனுஷர்களால் அடைய முடியாதவை மற்றும் நினைத்துப் பார்க்க முடியாதவை. இருப்பினும், உண்மை இதற்கு முற்றிலும் எதிரானது: தேவன் “0.1 சதவிகிதம்” மனுஷர்களிடம் மட்டுமே கேட்கிறார். இது ஜனங்களை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமின்றி, அவர்கள் அனைவரும் கடலில் இருப்பதைப் போல மிகவும் குழப்பமாக உணர வைக்கிறது. தேவனுடைய பிரகாசம் மற்றும் கிருபையால் மட்டுமே ஜனங்கள் தேவனுடைய சித்தத்தைப் பற்றிய சிறிதளவு அறிவைப் பெற்றுள்ளனர். எவ்வாறாயினும், மார்ச் 1 அன்று, அனைத்து ஜனங்களும் மீண்டும் ஒருமுறை குழப்பத்தில் ஆழ்ந்து அவர்களின் தலையைச் சொறிந்தனர்; தேவன் தம்முடைய ஜனங்களை மிதந்து செல்லும் மேகங்களைப் போல அல்லாமல், மினுமினுக்கும் பனியை போல இருக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே, இந்தப் “பனி” என்பது எதைக் குறிக்கிறது? மேலும் “மிதந்து செல்லும் மேகங்கள்” எதைக் குறிக்கின்றன? இந்தக் கட்டத்தில், இந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை தேவன் வேண்டுமென்றே வெளிப்படுத்தவில்லை. இது ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது, இதனால் அவர்கள் அறிவைத் தேடும் போது அவர்களின் விசுவாசத்தை அதிகரிக்கிறது—ஏனென்றால் இது தேவனுடைய ஜனங்களால் முன்வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கோரிக்கை, வேறு ஒன்றும் இல்லை; எனவே ஜனங்கள் அனைவரும் அறியாமலேயே இந்தப் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளை யோசிப்பதில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்களின் மூளையில் பலவிதமான யோசனைகள் துளிர்விடுகின்றன, மிதந்து செல்லும் உறைபனிச் சீவல்கள் அவர்களின் கண்களுக்கு முன்பாக பளிச்சிடுகின்றன, மற்றும் வானத்தில் மிதந்து செல்லும் மேகங்கள் உடனடியாக அவர்களின் மனதில் தோன்றுகின்றன. தம்முடைய ஜனங்கள் பனியைப் போல இருக்க வேண்டும் மேலும் மிதந்து செல்லும் மேகங்களைப் போல இருக்கக் கூடாது என்று தேவன் ஏன் கேட்கிறார்? இங்கே உண்மையான பொருள் என்ன? இந்த வார்த்தைகள் குறிப்பாக எதைக் குறிப்பிடுகின்றன? “பனி” இயற்கையை அழகாக்குவது மட்டுமல்லாமல், விவசாய நிலங்களுக்கும் நல்லது; பாக்டீரியாவைக் கொல்வதற்கு இது நல்லது. கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு, அனைத்து பாக்டீரியாக்களும் மினுமினுக்கும் பனியால் மூடப்படுகின்றன, மேலும் முழுப் பகுதியும் உடனடியாக உயிரோட்டமாகிறது. அவ்வாறே, தேவனுடைய ஜனங்கள் மனுவுருவான தேவனை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல், தேவனுடைய மனுவுருவாதல் குறித்த உண்மையின் மீது தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யும்போது, அவர்கள் இயல்பான மனிதத்தன்மையில் வாழ்வார்கள். இப்படித்தான் பனி இயற்கையை அழகாக்குகிறது; இறுதியில், தேவனுடைய ஜனங்களின் முதிர்ச்சி சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும், பூமியில் தேவன் தம்முடைய ராஜ்யத்தை நிறுவி, தேவனுடைய பரிசுத்த நாமத்தைப் பரப்பி மகிமைப்படுத்தும், இதனால் பூமியிலுள்ள முழு ராஜ்யமும் தேவனுடைய நீதியால் நிரப்பப்பட்டு, அவருடைய ஒளிக்கதிர்களால் பிரகாசிக்கும், மற்றும் அவரது மகிமையால் பளிச்சிடும். எங்கும் சமாதானம் மற்றும் மனநிறைவு, மகிழ்ச்சி மற்றும் நிறைவின் காட்சிகள், தொடர்ந்து புதுப்பிக்கப்படும் அழகு காணப்படும். தற்சமயம் நிலவும் பல்வேறு வாதைகள்—அநீதி, பொல்லாப்பு மற்றும் வஞ்சகம், தீய ஆசைகள் இது போன்ற பல சீர்கேடான சாத்தானிய மனநிலைகள் அனைத்தும் அழிக்கப்படும், இதனால் வானமும் பூமியும் புதுப்பிக்கப்படும். “கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு” என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். மிதந்து செல்லும் மேகங்களைப் போல் இருப்பவர்கள், தேவன் குறிப்பிடும் மந்தையைப் பின்பற்றுபவர்களுக்கு ஒப்பானவர்கள்; சாத்தானிடமிருந்து ஏதேனும் சோதனைகள் அல்லது தேவனிடமிருந்து சோதனைகள் வந்தால், அவை உடனடியாக விலகிச் செல்லும், இனி இருக்காது. வெகு காலத்திற்கு முன்பே மறைந்துவிட்ட அவர்களின் எந்தப் பொருளும் கூட உயிர்வாழ்வதில்லை. ஜனங்கள் மிதந்து செல்லும் மேகங்களைப் போல இருந்தால், அவர்கள் தேவனுடைய சாயலை ஒத்து வாழத் தகுதியற்றவர்கள் என்பது மட்டுமல்ல, அவருடைய நாமத்துக்கு அவமானத்தையும் ஏற்படுத்துகிறார்கள், ஏனென்றால் அத்தகைய ஜனங்கள் எந்த நேரத்திலும் அல்லது எந்த இடத்திலும் பறிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்; அவர்கள் சாத்தான் உண்ணும் உணவு ஆவார்கள்—சாத்தான் அவர்களைச் சிறைபிடிக்கும்போது, அவர்கள் தேவனைக் காட்டிக் கொடுத்து சாத்தானுக்குச் சேவை செய்வார்கள். இது தெளிவாக தேவனுடைய நாமத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது, மேலும் எல்லாவற்றிலும் மேலாக இதனையே தேவன் மிகவும் வெறுக்கிறார்; அத்தகையவர்கள் தேவனுடைய எதிரிகளாவர். இவ்வாறாக, அவை இரண்டும் சாதாரண மனுஷர்களின் சாராம்சம் இல்லாமல், எந்த நடைமுறை மதிப்பும் இல்லாமல் இருக்கின்றன. இதன் காரணமாகவே தேவன் தம்முடைய ஜனங்களிடம் இத்தகைய கோரிக்கைகளை வைக்கிறார். எவ்வாறாயினும், இந்த வார்த்தைகளில் ஏதேனும் கொஞ்சம் புரிந்துகொண்ட பிறகு, அடுத்து என்ன செய்வது என்று ஜனங்கள் திணறுகிறார்கள், ஏனென்றால் தேவனுடைய வார்த்தைகளின் தலைப்பு தேவனிடம் தாமே திரும்பியுள்ளது, இது அவர்களைச் சிரமமான நிலையில் வைக்கிறது: “ஏனென்றால், நான் பரிசுத்த தேசத்திலிருந்து வருகிறேன், நான் தாமரையைப் போன்றவன் அல்ல, அதற்கு ஒரு பெயர் மட்டுமே உண்டு, சாரம் இல்லை, ஏனென்றால் அது சேற்றில் இருந்து வருகிறது, பரிசுத்தமான தேசத்தில் இருந்து அல்ல.” தம்முடைய ஜனங்களிடம் தமது தேவைப்பாடுகளைப் பற்றி பேசிய பிறகு, ஏன் தேவன் தமது சொந்தப் பிறப்பை விவரிக்கிறார்? இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருந்திருக்குமா? உண்மையில், அவர்களுக்கு இடையே ஓர் உள்ளார்ந்த தொடர்பு உள்ளது; இல்லை என்றால் தேவன் அதை ஜனங்களுக்குச் சொல்ல மாட்டார். பச்சை இலைகளுக்கு மத்தியில், மென்மையான தென்றலில் தாமரை முன்னும் பின்னுமாக அசைகிறது. இது கண்ணுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் மிகவும் விரும்பப்படுகிறது. ஜனங்கள் அதைப் போதுமான அளவு எளிதாகப் பெற முடியாது, மேலும் ஒரு தாமரை மலரைப் பறிக்க மற்றும் அதை நெருக்கமாகப் பார்க்க தண்ணீரில் நீந்துவதற்குப் பெரிய ஆவல் ஏற்படுகிறது. எனினும், தாமரை சேற்றிலிருந்து வருகிறது, மேலும் அதற்குப் பெயர் மட்டுமே உள்ளது மற்றும் சாராம்சம் இல்லை என்று தேவன் கூறுகிறார்; தேவன் தாமரைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்று தோன்றுகிறது, மேலும் அவைகள் மீது அவருக்கு ஒருவித வெறுப்பு இருப்பதை அவருடைய வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. காலங்காலமாகத், தாமரைகள் அசுத்தத்திலிருந்து கறைபடாமல் வெளிவருவதால், தாமரைகளைப் பலரும் புகழ்ந்திருக்கிறார்கள், மேலும், தாமரைகள் ஒப்பிட முடியாதவை மற்றும் விவரிக்க முடியாத அளவுக்கு அற்புதமானவை என்று கூடச் சுட்டிக் காட்டுகிறார்கள். இருப்பினும், தேவனுடைய பார்வையில், தாமரைகள் மதிப்பற்றவை—இதுவே தேவனுக்கும் மனுஷர்களுக்கும் உள்ள வித்தியாசம். ஆகவே, தேவனுக்கும் மனுஷர்களுக்கும் இடையிலான வேறுபாடு, வானத்தின் உச்சிக்கும் பூமியின் அஸ்திவாரத்திற்கும் இடையிலான தூரத்தைப் போல மிகப் பெரியது என்பதைக் காணலாம். தாமரை சேற்றில் இருந்து வருவதால், அதற்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும்கூட அங்கிருந்தே வருகின்றன. தாமரை தானே வேடமணிந்து கொண்டு, அது வெறுமனே கண்களுக்கு விருந்தளிக்கிறது என்பதாகும். பலர் தாமரையின் அழகிய வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கிறார்கள், ஆனால் உள்ளே மறைந்திருக்கும் அதன் உயிரில் அழுக்கு மற்றும் அசுத்தம் உள்ளது என்பதை யாரும் பார்ப்பதில்லை. எனவே, தேவன் அதற்கு ஒரு பெயர் மட்டுமே உள்ளது மற்றும் சாராம்சம் இல்லை என்று கூறுகிறார்—இது முற்றிலும் சரியானது மற்றும் உண்மையாகும். இன்று தேவனுடைய ஜனங்கள் துல்லியமாக இப்படித்தான் இருக்கிறார்கள், இல்லையா? தேவனிடத்திலுள்ள அவர்களின் கீழ்ப்படிதலும் விசுவாசமும் மேலோட்டமானவை. தேவனுக்கு முன்பாக, அவர்களிடம் அவர் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக முகஸ்துதி செய்து நன்மையடைய ஒன்று சேர்கிறார்கள்; இருப்பினும், அவர்களுக்குள்ளே, சீர்கேடு நிறைந்த, சாத்தானிய மனநிலையால் அவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் வயிறு அசுத்தங்களால் நிரம்பியுள்ளது. அதனால்தான் தேவன் மனுஷர்களிடம் கேள்விகளை முன்வைக்கிறார், தேவனிடம் அவர்கள் காட்டும் விசுவாசம் அசுத்தங்களால் கறைபட்டதா அல்லது அது தூய்மையானதா மற்றும் மனப்பூர்வமானதா என்று கேட்கிறார். அவர்கள் ஊழியம் செய்பவர்களாக இருந்தபோது, பலர் தேவனை தங்கள் குரலால் புகழ்ந்தனர், ஆனால் தங்கள் இருதயங்களில் அவரை சபித்தனர். தங்கள் வார்த்தைகளால், அவர்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்தார்கள், ஆனால் தங்கள் இருதயங்களில், அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களுடைய வாய்கள் எதிர்மறையான வார்த்தைகளை உச்சரித்தன, அவர்களுடைய இருதயங்களில், அவர்கள் தேவனுக்கு எதிரான எதிர்ப்பை வளர்த்துக் கொண்டனர். கூட்டாகச் செயல்படுபவர்களும்கூட அதில் இருந்தனர்: அவர்கள் தங்கள் வாய்களால் இழிவானவைகளைப் பேசி, தங்கள் கைகளால் சைகை செய்து காட்டி, முற்றிலும் ஒழுக்கம் கெட்டு, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் உண்மையான தோற்றத்தின் தெளிவான மற்றும் உயிரோட்டமான வெளிப்பாட்டைக் கொடுத்தனர். அத்தகைய ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் முட்டைக்குஞ்சுகள் என்று அழைக்கப்படுவதற்கு உண்மையிலேயே தகுதியானவர்கள். இருப்பினும், இன்று அவர்கள் உண்மையுள்ள ஊழியம் செய்பவர்களின் இடத்தில் நின்று தேவனுடைய உண்மையுள்ள ஜனங்களாக நடந்துகொள்கிறார்கள்—எவ்வளவு வெட்கமற்றவர்கள்! இருப்பினும் இது ஒன்றும் ஆச்சரியமல்ல; அவர்கள் சேற்றிலிருந்து வருகிறார்கள், அதனால் வேறு வழியில்லை, உண்மையான நிறத்தை அவர்களால் காட்டாமல் இருக்க முடியாது. தேவன் பரிசுத்தமாகவும், தூய்மையாகவும், நிஜமாகவும், உள்ளபடியாகவும் இருப்பதால், அவருடைய மாம்சம் ஆவியானவரிடமிருந்து வருகிறது. இது நிச்சயமானது மற்றும் மறுக்க முடியாதது. தேவன் தமக்குத் தாமே சாட்சி பகர முடிவது மட்டுமல்லாமல், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முடியும்: இவை தேவனுடைய சாராம்சத்தின் ஒரு பக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மாம்சம் ஆவியானவரிடமிருந்து சாயலுடன் வருகிறது என்பதன் அர்த்தம், ஆவியானவர் தம்மை உடுத்திக்கொள்ளும் மாம்சம் மனுஷர்களின் மாம்சத்திலிருந்து கணிசமாக வேறுபட்டது, மேலும் இந்த வேறுபாடு முதன்மையாக அவர்களின் ஆவியில் உள்ளது. “ஒரு சாயலுடன் கூடிய ஆவியானவர்” என்பது, இயல்பான மனிதத்தன்மையால் மூடப்பட்டதன் விளைவாக, தெய்வீகத்தன்மையால் உள்ளே இருந்து கிரியை செய்ய முடிகிறது என்பதைக் குறிக்கிறது. இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, மேலும் மனிதத்தன்மையால் வரையறுக்கப்படவில்லை. “ஆவியானவரின் சாயல்” என்பது முழுமையான தெய்வீகத்தை குறிக்கிறது, மேலும் இது மனிதத்தன்மையால் வரையறுக்கப்படவில்லை. அதுபோல, தேவனுடைய உள்ளார்ந்த மனநிலையும் உண்மையான சாயலும் மனுவுருவான மாம்சத்தில் முழுமையாக வாழ முடியும், இது சாதாரணமானது மற்றும் நிலையானது என்பது மட்டுமல்ல, அது மகத்துவமும் உக்கிர கோபமும் கொண்டது. முதல் மனுவுருவான மாம்சம் ஜனங்கள் மனதில் எண்ணக்கூடிய தேவனை மட்டுமே முன்வைக்க முடியும்; அதாவது, அவரால் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்ய முடியும் மற்றும் தீர்க்கதரிசனங்களைப் பேச முடியும். எனவே, அவர் தேவனுடைய யதார்த்தத்தை முழுமையாக வாழ்ந்திடவில்லை, எனவே ஒரு சாயல் கொண்ட ஆவியானவரின் ஓர் உடம்போடு கூடிய உருவமாக இருக்கவில்லை; ஆனால் அவர் தெய்வீகத்தின் நேரடி தோற்றமாக இருந்தார். மேலும், அவர் இயல்பான மனிதத்தன்மையைக் கடந்து அதற்கும் அப்பால் சென்றதால், அவர் தாமே முழுமையான நடைமுறை தேவன் என்று அழைக்கப்படவில்லை, ஆனால் அவரைப் பற்றி பரலோகத்தில் உள்ள கற்பனை தேவனுடைய பகுதி ஒரு சிறிய அளவு இருந்தது; அவர் ஜனங்களின் எண்ணங்களின் தேவனாக இருந்தார். இதுவே இரண்டு மனுஷரூபமான மாம்சங்களுக்கிடையே உள்ள கணிசமான வேறுபாடு.

பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த இடத்திலிருந்து, தேவன் மனுக்குலத்தின் ஒவ்வொரு அசைவையும் மற்றும் ஜனங்கள் சொல்லும் மற்றும் செய்யும் அனைத்தையும் கண்காணிக்கிறார். அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்கள் அனைத்தையும் கூட அவர் முழுமையான தெளிவுடன் கவனிக்கிறார், அவற்றை ஒருபோதும் கவனிக்காமல் விடுவதில்லை; அதுபோல, அவருடைய வார்த்தைகள் ஜனங்களின் இருதயங்களில் சரியாக ஊடுருவுகின்றன, அவர்களின் ஒவ்வொரு எண்ணத்தையும் தாக்குகின்றன, மேலும் தேவனுடைய வார்த்தைகள் கூர்மதி கொண்டவை மற்றும் பிழையற்றவை. “மக்கள் என் ஆவியை ‘அறிந்திருக்கிறார்கள்’ என்றாலும், அவர்கள் இன்னும் என் ஆவியைப் புண்படுத்துகிறார்கள். என் வார்த்தைகள் எல்லா மக்களின் அசிங்கமான முகங்களையும், அவர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும் தோலுரித்துக் காட்டுகின்றன, மேலும் பூமியிலுள்ள அனைவரையும் என் கண்காணிப்புக்கு இடையில் வருமாறு செய்கின்றன.” மனுக்குலத்திடம் தேவன் வைக்கும் கோரிக்கைகள் மிகவும் வலுக்கட்டாயமானதாக இல்லாவிட்டாலும்கூட, ஜனங்கள் இன்னும் தேவனுடைய ஆவியானவர் சோதித்துப் பார்ப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. “இருப்பினும், அவர்கள் கீழே வீழ்ந்தாலும், அவர்களின் இதயங்கள் என்னிடமிருந்து விலகிச் செல்வதற்குத் துணிவதில்லை. சிருஷ்டிக்கப்பட்ட பொருட்களுக்கு மத்தியில், என் காரியங்களின் விளைவாக என்னை நேசிக்க வாராதவர் யார்?” இது தேவனுடைய முழு ஞானத்தையும் சர்வவல்லமையையும் மேலும் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது, மேலும் தேவனுடைய ஜனங்கள் ஊழியம் செய்பவர்கள் என்ற நிலையில் இருந்தபோது அவர்கள் நினைத்த அனைத்தையும் வெளிப்படுத்துகிறது: ஒரு “வர்த்தகம்” தோல்வியில் முடிந்த பிறகு, அவர்களின் தலையில் இருந்த “இலட்சங்கள்” அல்லது “மில்லியன்கள்” ஒன்றும் இல்லாமல் போனது. இருப்பினும், தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகள் மற்றும் தேவனுடைய மகத்துவம் மற்றும் உக்கிர கோபத்தின் காரணமாக—அவர்கள் துக்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாலும்—அவர்கள் அப்போதும் எதிர்மறையான மனநிலையுடன் தேவனுக்கு ஊழியம் செய்தனர், மேலும் அவர்களின் கடந்தகால நடைமுறைகள் அனைத்தும் வெற்றுப் பேச்சாகி முற்றிலும் மறக்கப்பட்டன. அதற்குப் பதிலாக, தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொள்ளவோ, நேரத்தைக் கடத்தவோ அல்லது விரயம் செய்யவோ, அவர்களையும் மற்ற அனைவரையும் மகிழ்விக்கும் விஷயங்களை அவர்கள் விருப்பப்படி செய்தார்கள். … உண்மையில் இதுதான் மனுஷர்களிடையே நடந்து கொண்டிருந்தது. இவ்வாறு, தேவன் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்திக் கூறுகிறார், “என் வார்த்தைகளின் விளைவாக எனக்காக ஏங்காதவர் யார்? என் அன்பின் விளைவாகப் பாசமான உணர்வுகள் யாரில் பிறக்கவில்லை?” நேர்மையாகச் சொல்வதென்றால், மனுஷர்கள் அனைவரும் தேவனுடைய வார்த்தைகளை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள், அவர்களில் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க விரும்பாதவர்கள் யாரும் இல்லை; தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்க அவர்களால் முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் சுபாவங்களால் தடுக்கப்படுகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, பலரால் அவற்றிலிருந்து பிரிந்து இருப்பதை தாங்க முடியாது, மேலும் தேவன் மீதான அவர்களின் அன்பு அவர்களுக்குள் ஊற்றெடுக்கிறது. இவ்வாறு, தேவன் மீண்டும் ஒருமுறை சாத்தானை சபிக்கிறார், அதன் அசிங்கமான முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறார். “சாத்தான் கலவரத்தை நடத்தும் மற்றும் வெறித்தனமான சர்வாதிகாரமாக இருக்கும் இந்த யுகம் ஆனது” தேவன் பூமியில் தம்முடைய அதிகாரப்பூர்வமான பெரிய கிரியையைத் தொடங்கும் காலமும் ஆகும். அடுத்து, அவர் உலகை அழிக்கும் கிரியையைத் தொடங்குகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தான் எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறானோ, அந்த அளவுக்குச் சீக்கிரம் தேவனுடைய நாள் வரும். இவ்வாறு, தேவன் சாத்தானின் இழிநிலையைப் பற்றி எவ்வளவு அதிகமாகப் பேசுகிறாரோ, அந்த அளவுக்குத் தேவன் உலகை அழிக்கும் அந்த நாள் நெருங்குகிறது. இதுவே சாத்தானுக்குத் தேவனுடைய அறிவிப்பாகும்.

தேவன் ஏன் மீண்டும் மீண்டும் சொன்னார், “… மேலும், என் முதுகுக்குப் பின்னால், அவர்கள் அந்த ‘பாராட்டத்தக்க’ அசிங்கமான நடத்தைகளில் ஈடுபடுகிறார்கள். என்மீது நான் உடுத்திக் கொண்டுள்ள மாம்சத்துக்கு உன் செயல்கள், உன் நடத்தை மற்றும் உன் வார்த்தைகள் எதுவும் தெரியாது என்று நீ நினைக்கிறாயா?” அப்படிப்பட்ட வார்த்தைகளை அவர் ஓரிரு முறை மட்டும் சொல்லவில்லை. அது ஏன்? ஜனங்கள் தேவனால் ஆறுதல் அடைந்து, மனுக்குலத்தின் மீதான தேவனுடைய துக்கத்தைப் பற்றி அறிந்தவுடன், அவர்கள் முன்னோக்கிப் போராடும்போது கடந்த காலத்தை மறந்துவிடுவது அவர்களுக்கு எளிதாகிவிடும். ஆயினும்கூட, தேவன் மனுஷர்களிடம் சிறிதுகூட இரக்கம் காட்டுவதில்லை: அவர்களின் எண்ணங்களை அவர் தொடர்ந்து குறிவைத்துக்கொண்டே இருக்கிறார். எனவே, ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்ளவும், தங்கள் வரம்பு மீறிய ஒழுக்கக்கேட்டை நிறுத்தவும், இனி பாராட்டத்தக்க அசிங்கமான நடத்தைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், மேலும் மாம்சத்தில் இருக்கும் தேவனை ஒருபோதும் வஞ்சிக்கக்கூடாது என்றும் அவர் ஜனங்களுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஜனங்களின் சுபாவங்கள் மாறாவிட்டாலும், ஒரு சில முறை அவர்களுக்கு நினைவுபடுத்துவதில் பலன் உண்டு. இதற்குப் பிறகு, தேவன் அவர்களின் இருதயங்களில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்த மனுஷக் கண்ணோட்டத்தில் பேசுகிறார்: “பல ஆண்டுகளாக நான் காற்றையும் மழையையும் தாங்கிக்கொண்டேன், மனித உலகத்தின் கசப்பையும் நான் அனுபவித்திருக்கிறேன்; இருப்பினும், கவனமான சிந்தனைக்குப்பிறகு, எந்தவிதமான துன்பங்களும் மாம்சமான மனிதர்கள் என்மீது நம்பிக்கை இழக்கும்படிச் செய்யாது, அதுபோலவே எந்தவொரு இனிமையும் மாம்சமான மனிதர்கள் என்மீது வெறுப்பை வளர்த்துக்கொள்ளவோ, மனச்சோர்வடையவோ அல்லது என்னை நிராகரிக்கவோ வழிவகுக்காது என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு உண்மையில் ஒரு துன்பம் இல்லாமை அல்லது ஓர் இனிமையின் குறைபாடு ஆகியவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா?” “சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்தும் வெறுமையாக உள்ளது”—இந்த வார்த்தைகளுக்கு உண்மையில் உள் அர்த்தம் உள்ளது. ஆகவே, எந்தவொன்றும் மனுஷர்கள் அவர்மீது நம்பிக்கையை இழக்கும்படியோ அல்லது அவர் மீதுள்ள ஆர்வம் காலப்போக்கில் குறையும்படியோ செய்ய முடியாது என்று தேவன் கூறுகிறார். ஜனங்கள் தேவனை நேசிக்கவில்லை என்றால், அவர்கள் இறந்தவர்களைப் போன்றவர்கள்; அவர்கள் தேவனை நேசிக்கவில்லை என்றால், பின்னர் அவர்கள் படும் துன்பம் வீணானது மற்றும் அவர்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி வெறுமையானது, மேலும் அவை அவர்களின் பாவங்களுடன் சேர்க்கப்படும். ஏனென்றால், எந்தவொரு மனுஷனும் தேவனை உண்மையாக நேசிப்பதில்லை, அவர் கூறுகிறார், “அவர்கள் என்மீது வைத்திருக்கும் அன்பு உண்மையில் ஒரு துன்பம் இல்லாமை அல்லது ஓர் இனிமையின் குறைபாடு ஆகியவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா?” மனுஷர்களின் உலகில், துன்பமோ இனிமையோ இல்லாமல் ஒருவர் எப்படி இருக்க முடியும்? தேவன் மீண்டும் மீண்டும் கூறுகிறார், “ஒரு மனுஷரும் என் முகத்தை உண்மையாகப் பார்த்ததில்லை அல்லது உண்மையாக என் குரலைக் கேட்டதில்லை, ஏனென்றால் மனுஷர்கள் என்னை உண்மையாக அறியமாட்டார்கள்.” மனுஷர்கள் அவரை உண்மையாக அறிய மாட்டார்கள் என்று தேவன் கூறுகிறார், ஆனால் மனுஷர்களிடம் அவரை அறியும்படி அவர் ஏன் கேட்கிறார்? இது ஒரு முரண்பாடு அல்லவா? தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் உள்ளது. ஏனென்றால் மனுஷர்கள் உணர்ச்சியற்றவர்களாக வளர்ந்துவிட்டார்கள், மனுஷர்கள் ஒவ்வொருவரின் இருதயத்திலும் இறுதியில் 0.1 சதவீதத்தை வைத்திருப்பதற்காக, தமது கிரியையை 100% செய்யும் கொள்கையைத் தேவன் பயன்படுத்துகிறார். தேவன் கிரியை செய்யும் முறை இதுதான், தேவன் தமது குறிக்கோள்களை அடைய இவ்வாறுதான் செயல்பட வேண்டும். துல்லியமாக இதுவே தேவனுடைய வார்த்தைகளிலுள்ள ஞானமும் ஆகும். நீங்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா?

தேவன் கூறுகிறார்: “நான் என் மர்மங்களை நேரடியாக வெளிப்படுத்தி, மாம்சத்தில் என் சித்தத்தைத் தெளிவுபடுத்தும்போது, நீங்கள் கவனிக்கவில்லை; நீங்கள் ஒலிகளைக் கேட்கிறீர்கள், ஆனால் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. நான் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நான் மாம்சத்தில் இருந்தாலும், மாம்ச ஊழியத்தின் கிரியையை என்னால் செய்ய முடியவில்லை.” ஒரு வகையில், அவர்களின் உணர்வின்மை, காரணமாக இந்த வார்த்தைகள் ஜனங்களைத் தேவனுடன் ஒத்துழைக்க முன்முயற்சி எடுக்கச் செய்கின்றன; மற்றொரு வகையில், தேவன் அவரது தெய்வீகத்தன்மையின் உண்மையான முகத்தை மனுவுருவான மாம்சமாக வெளிப்படுத்துகிறார். மனுஷர்கள் தங்கள் வளர்ச்சியில் மிகவும் சிறியவர்களாக இருப்பதால், தேவன் மாம்சத்தில் இருக்கும் காலத்தில் தெய்வீகத்தன்மையின் வெளிப்பாடு அவர்களின் ஏற்றுக்கொள்ளும் திறனுக்கு ஏற்ப மட்டுமே வருகிறது. இந்தக் கட்டக் கிரியையின் போது, பெரும்பாலான ஜனங்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் இருக்கிறார்கள், இது அவர்கள் எவ்வளவு ஏற்புத் திறனின்றி இருக்கிறார்கள் என்று காட்டுகிறது. எனவே, இந்தக் கிரியையின் போது, தெய்வீகத்தன்மையானது அதன் அசல் செயல்பாடு அனைத்தையும் செய்வதில்லை; அதன் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அது செய்கிறது. மனுக்குலத்தின் மீட்பின் நிலைக்கு ஏற்ப, எதிர்கால கிரியையில் தெய்வீகத்தன்மை படிப்படியாக வெளிப்படும் என்பதை இது காட்டுகிறது. இருப்பினும், தெய்வீகத்தன்மை படிப்படியாக வளர்வதில்லை; மாறாக, மனுவுருவான தேவன் சாராம்சத்தில் வைத்திருப்பதாகும், மேலும் இது மனுஷர்களின் வளர்ச்சியைப் போன்றது அல்ல.

தேவன் மனுஷர்களை சிருஷ்டித்ததற்கு ஒரு நோக்கமும் அர்த்தமும் இருந்தது, அதனால்தான் அவர் சொன்னார், “என் கோபத்தால் மனிதர்கள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டால், பரலோகத்தையும் பூமியையும் நான் படைத்ததன் முக்கியத்துவம் என்னவாக இருக்கும்?” மனுஷர்கள் சீர்கெட்டுப்போன பிறகு, தம் மகிழ்ச்சிக்காக அவர்களில் ஒரு பகுதியினரை ஆதாயப்படுத்துவதற்குத் தேவன் திட்டமிட்டார்; அது எல்லா மனுஷர்களும் அழிக்கப்படுவதோ அல்லது தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளை சிறிதளவு மீறினாலும் அவர்களை ஒழித்து விடுவதோ அவருடைய நோக்கமல்ல. இது தேவனுடைய சித்தம் அல்ல; தேவன் சொன்னது போல், அது அர்த்தமற்றதாக இருக்கும். துல்லியமாக இந்த “அர்த்தமற்றவைகளின்” காரணமாகத்தான் தேவனுடைய ஞானம் தெளிவாக்கப்படுகிறது. எல்லா ஜனங்களையும் சிட்சை செய்து, நியாயந்தீர்த்து, அடித்து தண்டித்து, இறுதியில் அவரை உண்மையாக நேசிப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, தேவன் பல வழிகளில் பேசி, கிரியை செய்வதில் இன்னும் அதிகமான முக்கியத்துவம் இல்லையா? துல்லியமாக இந்த முறையில்தான் தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன, எனவே மனுஷர்களைச் சிருஷ்டித்தது இன்னும் குறிப்பிடத்தக்கதாகிறது. இவ்வாறு, தேவனுடைய பெரும்பாலான வார்த்தைகள் அவற்றைக் கடந்து மிதந்து செல்வதாகக் கூறப்படுகிறது; இது ஒரு குறிக்கோளை அடைவதற்காக உள்ளது, மேலும் இதுதான் துல்லியமாக அவருடைய வார்த்தைகளின் ஒரு பகுதியின் யதார்த்தமாகும்.

முந்தைய: அத்தியாயம் 8

அடுத்த: பிற்சேர்க்கை: அத்தியாயம் 1

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக