ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது

இந்த ஜனக்கூட்டத்தின் மத்தியில் தேவன் செய்யப்போகும் கிரியை என்னவென்று பார்த்திருக்கிறீர்களா? தேவன், ஆயிரம் வருட அரசாட்சியிலும் கூட ஜனங்கள் அவருடைய பேச்சுக்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஒருமுறை சொன்னார், மேலும் எதிர்காலத்தில், நல்ல கானான் தேசத்தில் மனிதனுடைய ஜீவிதத்தை தேவனுடைய வார்த்தைகள் நேரடியாக வழிநடத்தும். மோசே வனாந்தரத்தில் இருந்தபோது, தேவன் அவனிடம் நேரடியாக அறிவுறுத்தினார், பேசினார். ஜனங்கள்அனுபவிக்க, ஆகாரம், தண்ணீர் மற்றும் மன்னாவைப் வானத்திலிருந்து அனுப்பினார், இன்றும் அவ்வாறே உள்ளது: ஜனங்கள் அனுபவிக்க, அவர்கள் புசிக்கவும் குடிக்கவும் வேண்டியவற்றை தேவன் தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார், மேலும் ஜனங்களை சிட்சிப்பதற்காக அவர் தனிப்பட்ட முறையில் சாபங்களை அனுப்பியுள்ளார். எனவே, அவருடைய கிரியையின் ஒவ்வொரு படியும் தனிப்பட்ட முறையில் தேவனால் செய்யப்படுகிறது. இன்று, ஜனங்கள் உண்மைகளின் நிகழ்வைத் தேடுகிறார்கள், அவர்கள் அடையாளங்களையும் அதிசயங்களையும் நாடுகிறார்கள், மற்றும் இதுபோன்றவர்கள் அனைவரும் தூக்கி எறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது, ஏனென்றால் தேவனுடைய கிரியையானது அதிகமாக நடைமுறைக்கு மாறி வருகிறது. தேவன் பரலோகத்திலிருந்து இறங்கியிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது மேலும் தேவன் ஆகாரத்தையும் ஊட்டச்சத்தையும் வானத்திலிருந்து அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், தேவன் உண்மையில் இருக்கிறார், ஜனங்கள் கற்பனை செய்யும் ஆயிரம் வருட அரசாட்சி எழுப்புதலான காட்சிகளும் தேவனுடைய தனிப்பட்ட வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இது உண்மையாகும் மற்றும் இதுதான் தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது என்று அழைக்கப்படுகிறது. தேவனோடு பூமியில் ஆட்சி செய்வது மாம்சத்தைக் குறிக்கிறது. மாம்சமாக இல்லாதவை பூமியில் இல்லை, இதனால் மூன்றாம் வானத்திற்குச் செல்வதில் கவனம் செலுத்துபவர்கள் அனைவரும் வீணாக அப்படிச் செய்கிறார்கள். ஒரு நாள், முழு பிரபஞ்சமும் தேவனிடம் திரும்பும் போது, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அவருடைய கிரியையின் மையம் அவருடைய பேச்சுக்களைப் பின்பற்றும். மற்ற இடங்களில், சிலர் தொலைபேசியைப் பயன்படுத்துவார்கள், சிலர் விமானத்தில் செல்வார்கள், சிலர் படகில் கடல் கடந்து செல்வார்கள் மற்றும் சிலர் தேவனுடைய வார்த்தைகளைப் பெற ஒளிக்கதிர்களைப் பயன்படுத்துவார்கள். எல்லோரும் போற்றுவார்கள், மற்றும் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள், அவர்கள் அனைவரும் தேவனிடம் நெருங்கி வருவார்கள், தேவனை நோக்கிக் கூடிவருவார்கள், அனைவரும் தேவனை வணங்குவார்கள், இவை அனைத்தும் தேவனுடைய செயல்களாக இருக்கும். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் நிச்சயமாக வேறு எங்கும் தொடங்க மாட்டார். தேவன் இந்த உண்மையை நிறைவேற்றுவார்: உலகம் முழுவதிலும் உள்ள எல்லா ஜனங்களையும் தனக்கு முன்பாக வரச் செய்து, பூமியிலுள்ள தேவனை வணங்கச் செய்வார், மற்றும் மற்ற இடங்களில் அவருடைய கிரியை நிறுத்தப்படும், மற்றும் ஜனங்கள் மெய்யான வழியை நாட வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். அது யோசேப்பைப் போலவே இருக்கும்: எல்லோரும் ஆகாரத்துக்காக அவனிடம் வந்து, அவனை தலை வணங்கினார்கள் ஏனென்றால், உண்பதற்கு ஆகாரம் அவனிடம் இருந்தது. பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, ஜனங்கள் மெய்யான வழியைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மத சமூகமும் கடுமையான பஞ்சத்தை அனுபவிக்கும். இன்றைய தேவன் மட்டுமே ஜீவத்தண்ணீரின் ஊற்றாவார், தேவன் மட்டுமே மனிதனுடைய இன்பத்திற்காக எப்போதும் சுரக்கும் ஊற்றைக் கொண்டவர், மேலும் ஜனங்கள் வந்து அவரைச் சார்ந்து இருப்பார்கள். தேவனுடைய செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு, தேவன் மகிமையை அடையும் காலமாக அது இருக்கும்: பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைத்து ஜனங்களும் இந்தக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத “மனிதனை” வணங்குவார்கள். அது தேவனுடைய மகிமையின் நாளாக இருக்காதா? ஒரு நாள், பழைய போதகர்கள் ஜீவத்தண்ணீரின் ஊற்றிலிருந்து தண்ணீரைத் தேடி தந்திகளை அனுப்புவார்கள். அவர்கள் முதியவர்களாக இருப்பார்கள், ஆனாலும் தாங்கள் தாழ்வாகப் பார்த்த இந்த நபரை வணங்க அவர்கள் வருவார்கள். அவர்கள் தங்கள் வாயால் அவரை ஒப்புக்கொள்வார்கள், மனதால் அவரை நம்புவார்கள்—இது ஓர் அடையாளமும் ஆச்சரியமும் அல்லவா? முழு ராஜ்யமும் சந்தோஷப்படும் நாள் தேவனுடைய மகிமையின் நாளாக இருக்கும், மேலும் உங்களிடம் வந்து தேவனுடைய நற்செய்தியைப் பெறுபவர் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார், அவ்வாறு செய்யும் நாடுகளும் ஜனங்களும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவார்கள். எதிர்காலத்தின் போக்கு இவ்வாறு இருக்கும்: தேவனுடைய வாயிலிருந்து பேச்சுக்களைப் பெறுபவர்களுக்கு பூமியில் நடக்க ஒரு பாதை இருக்கும் மற்றும் அவர்கள் வணிகர்களாக அல்லது விஞ்ஞானிகளாக, அல்லது கல்வியாளர்களாக அல்லது தொழிலதிபர்களாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகள் இல்லாதவர்களுக்கு ஓர் அடி கூட எடுத்து வைப்பது கடினமானதாக இருக்கும் மற்றும் அவர்கள் மெய்யான வழியை நாடக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். இதன் பொருள்தான், “சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது” என்பதாகும். உண்மைகள் பின்வருமாறு உள்ளன: தேவன் முழு பிரபஞ்சத்திற்கும் கட்டளையிட மற்றும் மனிதகுலத்தை ஆள, ஜெயம்கொள்ள இந்த வழியைப் (அதாவது அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் குறிக்கிறது) பயன்படுத்துவார். தேவன் செயல்படும் வழிமுறைகளில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக ஜனங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறார்கள். தெளிவாகச் சொல்வதானால், தேவன் ஜனங்களைக் கட்டுப்படுத்துவது வார்த்தைகளின் மூலம்தான், மேலும் நீ செய்ய விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் அவர் சொல்வதை நீ செய்ய வேண்டும். இது ஒரு புறநிலையான உண்மையாகும். எல்லோராலும் கீழ்ப்படியப்பட வேண்டிய ஒன்றாகும், எனவே, இது தவிர்க்கமுடியாததும், எல்லோருக்கும் தெரிந்ததும் ஆகும்.

பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்கு ஓர் உணர்வைத் தருகிறார். தேவனுடைய வார்த்தைகளைப் படித்த பிறகு, ஜனங்கள் தங்கள் இருதயங்களில் உறுதியையும் சமாதானத்தையும் உணர்கிறார்கள், அதே நேரத்தில், தேவனுடைய வார்த்தைகளைப் பெறாதவர்கள் வெறுமையாக உணர்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளின் வல்லமை இதுதான். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் படிக்க வேண்டும், படித்த பிறகு அவர்கள் சத்துவம் பெறுகிறார்கள், மற்றும் அவை இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அது, ஜனங்கள் அபின் எடுப்பதைப் போன்றதாகும். அது அவர்களுக்குப் பெலனைத் தருகிறது, அது இல்லையெனில், அவர்கள் அதன் வல்லமை வாய்ந்த ஈர்ப்பை உணர்கிறார்கள், அவர்களுக்கு எந்தப் பெலனும் இல்லை. இன்றைய ஜனங்கள் மத்தியில் இது போன்ற போக்குதான் இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளைப் படிப்பது ஜனங்களுக்குப் பெலனைத் தருகிறது. அவர்கள் அவற்றைப் படிக்கவில்லை என்றால், அவர்கள் மந்தமாக உணர்கிறார்கள், ஆனால் அவற்றைப் படித்த பிறகு, அவர்கள் உடனடியாகத் தங்கள் “வியாதிப் படுக்கைகளிலிருந்து” எழுகிறார்கள். இது பூமியில் அதிகாரத்தைப் பயன்படுத்தும் தேவனுடைய வார்த்தை ஆகும் மற்றும் தேவன் பூமியில் ஆளுகை செய்வதாகும். சிலர் வெளியேற விரும்புகிறார்கள் அல்லது தேவனுடைய கிரியையில் சோர்ந்துவிடுகிறார்கள். எப்படி இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகளிலிருந்து அவர்களால் தங்களை பிரிக்க முடியாது; அவர்கள் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின்படி வாழ வேண்டும் மற்றும் அவர்கள் எவ்வளவு கலகக்காரர்களாக இருந்தாலும், தேவனுடைய வார்த்தைகளை விட்டு வெளியேற அவர்கள் துணிவதில்லை. தேவனுடைய வார்த்தைகள் உண்மையிலேயே அவற்றின் வல்லமையைக் காட்டும்போது, தேவன் ஆளுகை செய்து அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்; இப்படித்தான் தேவன் செயல்படுகிறார். மொத்தத்தில் எப்படியிருந்தாலும், இது தேவன் கிரியை செய்யும் வழிமுறையாகும், மேலும் யாரும் அதை விட்டுவிட முடியாது. தேவனுடைய வார்த்தைகள் எண்ணற்ற வீடுகளில் பரவும். அனைவருக்கும் அவை தெரிய வரும் மற்றும் அதன்பின் தான் அவருடைய கிரியை பிரபஞ்சம் முழுவதும் பரவும். அதாவது, தேவனுடைய கிரியை முழு உலகத்திலும் பரவ வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகள் பரப்பப்பட வேண்டும். தேவனுடைய மகிமையின் நாளில், தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் வல்லமையையும் அதிகாரத்தையும் காண்பிக்கும். ஆதிகாலம் முதல் இன்று வரை சொல்லப்பட்ட அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேறும், அது நடக்கும். இவ்வாறு, பூமியில் தேவனுக்கு மகிமை இருக்கும்—அதாவது, அவருடைய வார்த்தைகள் பூமியில் ஆளுகை செய்யும். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் துன்மார்க்கர் அனைவரும் சிட்சிக்கப்படுவார்கள், நீதிமான்கள் அனைவரும் அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையாக்கப்படுவார்கள். அவர் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்த மாட்டார். அவருடைய வார்த்தைகளால் அனைத்தும் நிறைவேறும். அவருடைய வார்த்தைகள் உண்மைகளை உருவாக்கும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டாடுவார்கள், அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண், பெண், வயதானவர்கள் அல்லது இளைஞர்கள் என யாராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மாம்சத்தில் வெளிப்படும், பூமியிலுள்ள ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தெளிவாக உயிரோட்டமுடையதாய்ப் பார்க்க அனுமதிக்கிறது. இதுவே வார்த்தை மாம்சமாக மாறுவதன் பொருள் ஆகும். “வார்த்தை மாம்சமாக மாறுகிறது” என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார், அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும், மேலும் ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய மனுவுருவின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் நிறைவேற்றப்படுகிறது. இதுதான் “வார்த்தை மாம்சமாகிறது” மற்றும் “மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்” என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தைப் பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாகப் பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் மனுவுருவான தேவனில் தெளிவாக்கப்படுகின்றன, மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விதிவிலக்கு இல்லை, அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த பேச்சுக்களிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து பேச்சுக்களைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மனுவுருவின் மாம்சத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மதப்போதகர்கள் கூட இந்த வார்த்தைகளைப் பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றைத் தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மனுவுருவின் மாம்சத்தில் அல்ல, ஆனால், மாம்சமான தேவனுடைய வாயிலிருந்து வரும் பேச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் இதைச்செய்வார். இதுவே மாம்சமான வார்த்தையாகும், இதுவே மாம்சம் வார்த்தையாகத் தோன்றுவதாகும். ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிகக் கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்குப் பயபக்திகொள்வார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால், அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார், ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியில் வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும். உண்மையில், நான் விளக்க வேண்டிய அவசியமில்லை, ஆயிர வருட அரசாட்சியின் வருகையானது பூமியில் தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். பரலோகத்திலிருந்து புதிய எருசலேமின் இறக்கமானது, மனிதர்களிடையே ஜீவிக்கவும், மனிதனுடைய ஒவ்வொரு செயலுடனும், அவனது உள்ளார்ந்த எண்ணங்களுடன் துணை செய்யவும் வந்த தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். இது தேவன் நிறைவேற்றும் ஓர் உண்மையும் ஆகும். இதுவே ஆயிர வருட அரசாட்சியின் அழகு ஆகும். இது தேவன் வகுத்த திட்டம் ஆகும்: அவருடைய வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றும். அவை அவருடைய செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும், பூமியில் அவர் செய்த எல்லா கிரியைகளையும் நிறைவு செய்யும், அதன் பிறகு மனிதகுலத்தின் இந்த நிலை முடிவுக்கு வரும்.

முந்தைய: புதிய காலத்திற்கான கட்டளைகள்

அடுத்த: தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக