அத்தியாயம் 114

பிரபஞ்ச உலகத்தை நான் சிருஷ்டித்தேன்; மலைகள், நதிகள் மற்றும் எல்லாவற்றையும் நான் படைத்தேன்; பிரபஞ்சத்தையும் பூமியின் கடையாந்தரங்களையும் நான் வடிவமைத்தேன்; என் குமாரர்களையும் என் ஜனங்களையும் நான் வழிநடத்தினேன். எல்லா பொருட்களுக்கும் வஸ்துகளுக்கும் நான் கட்டளையிட்டேன். இப்போது, நான் வசிக்கும் இடத்துக்குத் திரும்பிச் செல்ல, நான் என் சீயோன் மலைக்கு என் முதற்பேறான குமாரர்களை மீண்டும் வழிநடத்திக் கொண்டு செல்வேன், மேலும் இது என் கிரியையின் கடைசிப் படிநிலையாக இருக்கும். நான் செய்தவை எல்லாம் (சிருஷ்டிப்பின் காலம் முதல் இதுவரை செய்தவை அனைத்தும்) என் கிரியையின் இன்றைய கட்டத்துக்காகவே, மேலும் கூறுவதென்றால், நாளைய அரசாட்சிக்காக, நாளைய ரஜ்யத்துக்காக, மற்றும் நானும் என்னுடைய முதற்பேறான குமாரர்களும் நித்திய காலமாக அனுபவித்து மகிழ்வதற்காக. எல்லாவற்றையும் சிருஷ்டித்ததற்கான என்னுடைய இலக்கு இதுவே, மேலும் என் சிருஷ்டிப்பின் மூலம் இறுதியாக நான் அடைவதும் இதுவே. நான் கூறுவதிலும் செய்வதிலும் ஒரு நோக்கமும் திட்டமும் உள்ளன; ஒன்றும் ஏனோ தானோவென்று செய்யப்படுவதில்லை. என்னிடம் இருப்பதெல்லாம் சுதந்திரமும் விடுதலையும் என்று நான் சொன்னாலும், நான் செய்வதெல்லாம் கொள்கை அடிப்படையிலானது, நான் செய்வதெல்லாம் என்னுடைய ஞானத்தையும் மனநிலையையும் அடிப்படையாகக் கொண்டவை. உங்களுக்கு இதில் ஏதாவது நுண்ணறிவு உள்ளதா? சிருஷ்டிப்பில் இருந்து இன்று வரை, என்னுடைய முதற்பேறான குமாரர்களைத் தவிர்த்து, யாரும் என்னை அறிந்து கொள்ளவில்லை, ஒருவரும் என்னுடைய உண்மை முகத்தைப் பார்த்ததில்லை. என் ஆள்தத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் நான் என் முதற்பேறான குமாரர்களுக்கு விதிவிலக்கைச் செய்துள்ளேன்.

நான் உலகத்தைச் சிருஷ்டித்தபோது, என் தேவைகளுக்கேற்ப மனுஷனை நான்கு தர வகைகளாகப் பிரித்தேன். அவை: என்னுடைய குமாரர்கள், என்னுடைய ஜனங்கள், ஊழியம்செய்பவர்கள், மேலும் அழிக்கப்படுபவர்கள். இந்தப் பட்டியலில் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை? இது ஏனெனில் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அல்லர், மேலும் மனுக்குலத்தைச் சேர்ந்தவர்களும் அல்லர். நான் மாம்சமாகும் முன்னர் என் முதற்பேறான குமாரர்களுக்கு ஏற்பாடுகள் செய்து விட்டேன்; எந்த வீட்டில் அவர்கள் பிறக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு அங்கு யார் ஊழியம் செய்வார்கள்—இந்த விஷயங்கள் யாவும் என்னால் திட்டமிடப்பட்டன. எந்த நேரத்தில் அவர்களில் யார் திரும்பிப் பெறப்படுவார்கள் என்பதையும் நான் திட்டமிட்டேன். முடிவில், நாங்கள் ஒன்றாக சீயோனுக்குத் திரும்பி வருவோம். இவை எல்லாம் சிருஷ்டிப்புக்கு முன்பே திட்டமிடப்பட்டவை, ஆகையால் இதைப் பற்றி யாருக்கும் தெரியாது. மேலும் அது எந்தப் புத்தகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில் இவையெல்லாம் சீயோனின் விவகாரங்கள். மேலும், நான் மாம்சமான போது, நான் மனுஷனுக்கு இந்தத் திறனை அளிக்கவில்லை. எனவே ஒருவருக்கும் அந்த விஷயங்களைப் பற்றி தெரியாது. நீங்கள் சீயோனுக்குத் திரும்பி வரும்போது, கடந்த காலத்தில் எது போல் இருந்தீர்கள், இப்போது எப்படி இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் இந்த ஜீவிதத்தில் என்ன செய்துள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். இப்போது நான் உங்களிடம் இந்த விஷயங்களைப் பற்றி சும்மா வெளிப்படையாகச் சிறிது சிறிதாகச் சொல்லுகிறேன், இல்லாவிட்டால் நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் புரிந்து கொள்ள மாட்டீர்கள், மேலும் என் நிர்வாகத்துக்கு நீங்கள் இடையூறு விளைவிப்பீர்கள். இன்று, மாம்சத்தைப் பொறுத்த வரையில் நான் என் முதற்பேறான குமாரர்கள் பெரிம்பாலோரிடம் இருந்து பிரிந்திருந்தாலும், நாங்கள் ஒரே ஆவியில் இருக்கிறோம், மேலும் எங்கள் தோற்றம் வெவ்வேறாக இருந்தாலும், நாங்கள் முதலில் இருந்து முடிவு வரை, ஒரே ஆவியாக இருக்கிறோம். இருந்த போதிலும், சாத்தானின் சந்ததியார் இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு ஏமாற்றப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எவ்வளவு தூரம் மாறுவேடமிட்டாலும், அது மேலோட்டமானது, மேலும், அதை நான் அங்கீகரிக்க மாட்டேன். ஆகையால், யாரொருவர் மேலோட்டமானதில் கவனம் செலுத்தி என்னைப் போல வெளிப்புறத்தில் என்னைப் போல நடிக்க முற்படுபவர்கள் நூறு சதவீதம் சாத்தான் ஆவார்கள். ஏனெனில் அவர்கள் ஆவி வேறு, அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள் அல்லர், எவ்வளவு தூரத்துக்கு என்னைபோல நடித்தாலும், அவர்கள் ஒருவிதத்திலும் என்னைப் போல் இல்லை. மேலும், என் முதற்பேறான குமாரர்கள் அடிப்படையில் என்னோடு ஒரே ஆவியாக இருப்பதால், அவர்கள் என்னைப் போலச் செய்யா விட்டாலும், அவர்கள் நான் பேசும் அல்லது செயல்படும் விதமாகவே செய்கின்றனர், மேலும் அவர்கள் யாவரும் நேர்மையாகவும், சுத்தமாகவும், திறந்த மனதோடும் இருக்கிறார்கள் (உலக அனுபவம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஞானம் குறைவாக இருக்கிறது, ஆகவே ஞானம் குறைவாக இருப்பது என் முதற்பேறான குமாரர்களில் ஒரு பிழை இல்லை; சரீரத்துக்குத் திரும்பி வரும்போது எல்லாம் சரியாகி விடும்). மேலே விவரிக்கப்பட்ட காரணமாகவே பெரும்பாலான ஜனங்கள் நான் எவ்வளவு தூரம் கையாண்டாலும் தங்கள் பழைய சுபாவத்தை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். என் முதற்பேறான குமாரர்கள் நான் கையாளாமலேயே என்னுடைய சித்தத்துக்கு இணங்குகிறார்கள். இதற்குக் காரணம் நாங்கள் ஒரே ஆவியாக இருப்பதே. எனக்கு முற்றிலுமாக ஒப்புக் கொடுக்க அவர்கள் தங்கள் ஆவியில் ஒரு விருப்பத்தை உணர்கிறார்கள். ஆகவே என் முதற்பேறான குமாரர்களைத் தவிர்த்து, ஒருவரும் உண்மையாகவும் இதயப் பூர்வமாகவும் என் சித்தத்தை எண்ணிப் பார்க்கிறவர்களாக இல்லை; நான் சாத்தானை ஜெயங்கொண்ட பிறகே அவர்கள் எனக்கு ஊழியம் செய்ய விரும்புகிறார்கள்.

என்னுடைய ஞானம் மற்றும் என்னுடைய முதற்பேறான குமாரர்கள் அனைத்துக்கும் மேலாக நிற்கிறார்கள், எல்லாவற்றையும் வெற்றி பெறுகிறார்கள் மேலும் எந்தப் பொருள் அல்லது நபர் அல்லது வஸ்துவும் தடுக்கத் துணிவதில்லை. மேலும், அவர்களை எந்த ஒரு நபரும், அல்லது பொருளும் வெற்றி கொள்ள முடியாது, ஆனால் அதற்குப் பதிலாக எல்லாம் என் ஆள்தத்துவத்துக்கு முன்னால் தாழ்மையாகக் கீழ்ப்படியும். இது ஒருவரின் கண்ணெதிரே நிகழும் ஓர் உண்மையாகும், மேலும் நான் ஏற்கனவே சாதித்து விட்ட உண்மையாகும். யாரொருவராவது தொடர்ந்து கீழப்படியாமல் இருந்தால் (கீழ்ப்படியாதவர்கள் இன்னும் சாத்தானையே குறிக்கிறார்கள், மேலும் சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள் சந்தேகமில்லாமல் சாத்தானேயன்றி வேறொருவரும் இல்லை), நான் அவர்களின் வேரையும் கிளையையும் அழிப்பேன், ஆகவே எதிர்காலத்தில் பிரச்சினை எதுவும் இருக்காது; என் சிட்சையினால அவர்கள் உடனடியாக மரித்துப் போய் விடுவார்கள், எனக்கு ஊழியம் செய்ய விரும்பாதவர்களே இந்த வகையான சாத்தான்கள். சிருஷ்டிப்பில் இருந்தே இந்த காரியங்கள் எனக்கு இணங்காத எதிர்ப்பாகவே எப்போதும் நின்றன. இன்றும் தொடர்ந்து அவை எனக்குக் கீழ்ப்படியாமல் இருக்கின்றன. (இதை ஜனங்களால் பார்க்க முடியவில்லை ஏனெனில் இவை வெறும் ஆவி சம்பந்தமான விஷயங்களே. இந்த வகையான நபர் இந்த வகையான சாத்தானைக் குறிக்கின்றான்.) எல்லாம் தயாராகும் முன்னரே அவற்றை நான் அழிப்பேன், கடுமையான தண்டனையின் ஒழுக்கத்தை அவர்கள் என்றென்றும் பெற அனுமதிப்பேன். (இங்கு “அழிப்பது” என்பது “இனி அவற்றை இல்லாமல் செய்வது” என்பதில்லை, ஆனால் அதற்குப் பதில் அவை உட்படப் போகும் இரக்கமற்ற தன்மையைக் குறிக்கிறது. இங்கு பயன்படுத்தப்படும் “அழிவு” என்ற வார்த்தையானது அழிக்கப்படுபவர்கள் குறித்து பயன்படுத்தப்படும் “அழிவு” என்பதிலிருந்து வேறானது ஆகும்.) அவர்கள் என்றென்றைக்கும் அழுது பற்கடிப்பார்கள். அதற்கு முடிவே இருக்காது. இந்தக் காட்சியைக் கண்முன் கொண்டு வருவது மனிதனின் கற்பனையால் முற்றிலும் முடியாத ஒன்றாகும். மனிதனின் சாவுக்குரிய சிந்தனையால் ஆவிக்குரிய சிந்தனையை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது, மேலும் நீங்கள் சீயோனுக்குத் திரும்பிய பிறகு தான் புரிந்து கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இருக்கின்றன.

என் எதிர்கால வீட்டில், என்னையும் என் முதற்பேறான குமாரர்களையும் தவிர யாரும் இருக்க மாட்டார்கள், மேலும் அந்நேரத்தில் தான் என் இலக்கு எட்டப்படும், என் திட்டங்கள் நிறைவேறும், ஏனெனில் எல்லாம் தன் ஆதி நிலைக்குத் திரும்பும் மேலும் எல்லாம் தன் வகைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும். என் முதற்பேறான குமாரர்கள் எனக்குச் சொந்தமாயிருப்பார்கள், என்னுடைய குமாரர்களும் ஜனங்களும் சிருஷ்டிகளின் மத்தியில் சொந்தமாக இருப்பார்கள், மேலும் ஊழியம் செய்பவர்களும் அழிக்கப்பட்டவர்களும் சாத்தானுக்குச் சொந்தமாய் இருப்பார்கள். உலகத்தை நியாயந்தீர்த்தப் பிறகு, நானும் என் முதற்பேறான குமாரர்களும் மீண்டும் தெய்வீக ஜீவிதத்தைத் தொடங்குவோம், மேலும் அவர்கள் என்னை ஒருபோதும் விட்டு விலக மாட்டார்கள் மற்றும் எப்போதும் என்னுடன் கூட இருப்பார்கள். மனித மனங்களால் புரிந்து கொள்ளக் கூடிய எல்லா இரகசியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். வரலாறு முழுவதும், எனக்காக இரத்த சாட்சியாய்ப் பலியான எண்ணற்ற ஜனங்கள் இருந்துள்ளனர். அவர்கள் முழுவதுமாக எனக்கு அர்ப்பணித்துள்ளனர். ஆனால் ஜனங்கள் வெறும் சிருஷ்டிகளே, அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்களை தேவன் என்று வகைப்படுத்த முடியாது; இது தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும், மேலும் அதை யாராலும் மாற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறார், ஜனங்கள் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், சாத்தானோ எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய அழிவின் இலக்கு மற்றும் வெறுக்கப்பட்ட என்னுடைய எதிரி—இதுவே பின்வரும் வார்த்தைகளின் உண்மையான அர்த்தம்: “மலைகளும் நதிகளும் நிலைபெயர்ந்து மாறினாலும், ஒருவனுடைய சுபாவம் மாறாது.” இந்த நிலையிலும் இந்தக் கட்டத்திலும் இருப்பது என்பது நானும் என்னுடைய முதற்பேறான குமாரர்களும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம் என்பதற்கான அறிகுறியாகும். இது ஏனெனில் இந்த உலகத்தில் என் கிரியை முற்றிலுமாக முடிந்து விட்டது, மேலும் என் கிரியையின் அடுத்தக் கட்டத்தை முடிப்பதற்காக நான் சரீரத்துக்குத் திரும்ப வேண்டியது அவசியமாகும். இவையே என்னுடைய கிரியையின் படிநிலைகள். இதை நான் நீண்ட காலத்திற்கு முன்னரே திட்டமிட்டுவிட்டேன். இந்தக் கருத்தை தெளிவாகப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும்பாலான ஜனங்கள் என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளை மீறி விடுவார்கள்.

முந்தைய: அத்தியாயம் 113

அடுத்த: அத்தியாயம் 115

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக