சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது

தேவன் மாம்சமாக மாறினார், ஏனென்றால் சாத்தானுடைய ஆவியோ அல்லது எந்தவொரு தொட்டுணரமுடியாத காரியமோ அவருடைய கிரியையின் இலக்கு அல்ல, மாம்சமானவனும் சாத்தானால் சீர்கெட்டுப்போனவனுமாகிய மனுஷனே அவருடைய கிரியையின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சீர்கெட்டுப் போயிருப்பதனாலே, தேவன் மாம்சமான மனுஷனைத் தமது கிரியையின் இலக்காக்கியுள்ளார்; மேலும், மனுஷனே சீர்கேட்டின் இலக்காக இருப்பதனால், தேவன் தமது இரட்சிப்பின் கிரியையின் அனைத்துக் கட்டங்களிலும் மனுஷனைத் தமது கிரியையின் ஒரே இலக்காக்கியுள்ளார். மனுஷன் மரணத்திற்கு ஏதுவானவனாக இருக்கிறான், மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கிறான், தேவன் ஒருவரால் மாத்திரமே மனுஷனை இரட்சிக்க முடியும். ஆகையால், தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு மனுஷனைப் போன்ற அதே இயற்பண்புகளைக் கொண்ட ஒரு மாம்சமாக மாற வேண்டும், இதன்மூலம் அவருடைய கிரியை சிறந்த பலன்களை அடையக்கூடும். மனுஷன் மாம்சமுள்ளவனாகவும், பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது மாம்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ இயலாதவனாக இருப்பதனால், தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறியாக வேண்டும். மாம்சமான தேவனுடைய சாராம்சமும் அடையாளமும் மனுஷனுடைய சாராம்சத்திலும் அடையாளத்திலும் இருந்து பெரிதும் வேறுபட்ட போதிலும், அவருடைய தோற்றம் மனுஷனுடைய தோற்றத்திற்கு ஒப்பாகவே உள்ளது. அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய தோற்றமுள்ளவராக இருக்கின்றார், ஒரு சாதாரண மனுஷனுடைய வாழ்க்கையை வாழ்கின்றார், அவரைக் காண்கிறவர்கள் ஒரு சாதாரண மனுஷனுக்கும் அவருக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. சாதாரண மனிதத்தன்மையில் தமது தெய்வீகக் கிரியையை செய்வதற்கு இந்த இயல்பான தோற்றமும் சாதாரண மனிதத்தன்மையும் அவருக்குப் போதுமானவையாக இருக்கின்றன. அவருடைய மாம்சமானது சாதாரண மனிதத்தன்மையில் அவருடைய கிரியையைச் செய்ய அவரை அனுமதிக்கின்றது. மேலும் மனுஷர் நடுவே தமது கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. மேலும் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே இரட்சிப்பின் கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற குழப்பமானது அவருடைய கிரியையின் வழக்கமான பலன்களைப் பாதிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதென்றால், அவருடைய சாதாரண மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்கு மிகப் பெரிய அளவில் பயனை அளிக்கிறதாக இருக்கின்றது. பெரும்பாலான ஜனங்கள் அவருடைய சாதாரணமான மனிதத்தன்மையை ஏற்றுக்கொள்ளாதபோதிலும், அவருடைய கிரியையால் இன்னும் முடிவுகளை அடைய முடியும். மேலும் இந்த முடிவுகள் அவருடைய சாதாரண மனிதத்தன்மை மூலமாகவே அடையப்படுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் மூலம், மனுஷன் தனது சாதாரண மனிதத்தன்மையைப் பற்றி மனுஷர் நடுவே காணப்படும் கருத்துக்களை காட்டிலும் பத்து மடங்கு அல்லது டஜன் கணக்கான மடங்கு அதிகமான காரியங்களைப் பெறுகிறான். இத்தகைய கருத்துக்கள் எல்லாம் இறுதியில் அவருடைய கிரியையால் விழுங்கிப்போடப்படும். அவருடைய கிரியை அடைந்த பலன், அதாவது மனுஷனிடம் அவரைக் குறித்து காணப்படும் அறிவானது அவரைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைக் கற்பனை செய்யவோ அளவிடவோ வழியேதும் கிடையாது, ஏனென்றால் அவருடைய மாம்சம் எந்த மாம்சமான மனுஷனுக்கும் இருப்பது போன்றதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒத்ததாக காணப்பட்டாலும், சாராம்சம் ஒப்பானது அல்ல. அவருடைய மாம்சம் தேவனைப் பற்றி மனுஷர் நடுவில் பல கருத்துக்களை உண்டாக்குகின்றது. ஆனாலும் அவருடைய மாம்சமானது மனுஷன் மிகுந்த அறிவை பெறுவதற்கும் உதவக்கூடும். மேலும் ஒத்த வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரையும் ஜெயங்கொள்ள இயலும். அவர் வெறுமனே மனுஷராக மட்டுமல்லாமல், ஆனால் மனுஷனுடைய வெளிப்புறத் தோற்றத்துடன் தேவனாகக் காணப்படுவதனால், அவரை யாரும் முழுமையாக அறிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது. அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத ஒரு தேவன் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். தேவன் மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆவியாக மாத்திரம் இருப்பாரேயானால், தேவனை நம்புவது மனுஷனுக்கு மிகவும் எளிதான காரியமாகும். ஜனங்கள் தங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடலாம், தங்களைத் தாங்களே மகிழ்விக்கவும், சந்தோஷமாக உணர வைக்கவும் தேவனுடைய உருவமாக அவர்கள் விரும்பும் எந்த உருவத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ஆகையால், ஜனங்கள் தங்கள் சொந்தத் தேவன் மிகவும் விரும்புவதையும், அவர்கள் செய்ய விரும்புவதையும் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் செய்யலாம். மேலும் என்னவென்றால், ஜனங்கள் தாங்கள் தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தையும் பக்தியையும் காட்டிலும் அதிகமாக யாரிடமும் இல்லை என்றும், மற்றவர்கள் எல்லோரும் புறஜாதி நாய்கள் என்றும், தேவனுக்கு விசுவாசமில்லாமல் இருக்கிறார்கள் என்றும் நம்புகின்றனர். தேவன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் தேடுவது தெளிவற்றதாகவும், கோட்பாட்டின் அடிப்படையிலும் இருப்பதாகக் கூறலாம். அவர்கள் தேடுவது எல்லாம் சிறிதளவு மாறுபாடு கொண்ட ஒரே மாதிரியான காரியமாகும். அவர்களின் கற்பனைகளில் மாத்திரமே தேவனுடைய உருவங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றனவே தவிர, அவர்களுடைய சாராம்சம் உண்மையில் ஒன்றுதான்.

மனுஷன் தேவன் மீதான தனது கவலையற்ற நம்பிக்கையைக் குறித்து கவலைப்படாமல், அவனுக்குப் பிரியமான விதங்களிலேயே அவரை நம்புகிறான். இது யாரும் தலையிட இயலாத “மனுஷனுடைய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள்” ஆகியவற்றில் ஒன்றாகும். ஏனென்றால் ஜனங்கள் வேறு யாருடைய தேவனையும் அல்ல, தங்கள் சொந்த தேவனையே நம்புகின்றனர். இது அவர்களுடைய சொந்த தனிப்பட்ட குணமாகும். ஏறக்குறைய எல்லோருமே இந்த வகையான தனிப்பட்ட குணத்தைத்தான் கொண்டிருக்கின்றார்கள். ஜனங்கள் இந்தக் குணத்தை ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷமாகக் கருதுகின்றனர், ஆனால் தேவனையோ இதைவிட மிகவும் இழிவாகவும் அல்லது மதிப்பற்றவராகவும் கருதுகின்றனர், ஏனென்றால் மனுஷனுடைய இந்தத் தனிப்பட்ட குணத்தைக் காட்டிலும் தேவனை எதிர்ப்பதற்குத் தெளிவான அறிகுறிகள் எதுவுமில்லை. மாம்சமான தேவனுடைய கிரியையைச் செய்வதற்காகவே மனுஷனால் காணக்கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய ஒரு உருவத்தில் தேவன் மாம்சமாக மாறுகிறார். அவர் உருவமில்லாத ஒரு ஆவி அல்ல, ஆனால் மனுஷனால் கண்டு, தொட்டுணரக்கூடிய ஒரு மாம்சமாவார். ஆனாலும், ஜனங்களில் பெரும்பாலானவர்கள் உருவமே இல்லாத மாம்சமல்லாத தெய்வங்களை நம்புகின்றனர். ஆகையால், மாம்சமான தேவன் ஆனவர் தேவனை நம்புகிற பெரும்பாலானவர்களுக்குச் சத்துருவாகிவிட்டார். இதுபோலவே தேவன் மனுஷனாக அவதரித்திருக்கிறார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் இதேபோல் தேவனுடைய எதிராளிகளாகிவிட்டனர். மனுஷன் தான் சிந்திக்கும் விதத்தின் காரணமாகவோ அல்லது அவனுடைய கலகத்தன்மையின் காரணமாகவோ அல்ல, ஆனால் மனுஷனுடைய இந்த தனிப்பட்ட குணத்தின் காரணமாகவே கருத்துகளைக் கொண்டிருக்கிறான். இந்தக் குணத்தின் காரணமாகவே பெரும்பாலான ஜனங்கள் மரித்துப்போகின்றனர். இந்தத் தொட முடியாத, பார்க்க முடியாத, நிஜத்தில் காணப்படாத மற்றும் இந்த இல்லாத தெய்வமே மனுஷனுடைய ஜீவனை அழிக்கிறது. மாம்சமான தேவனாலோ, பரலோகத்தின் தேவனாலோ அல்ல, மனுஷனுடைய சொந்தக் கற்பனையான தெய்வத்தினாலேயே மனுஷனுடைய ஜீவனானது பறிக்கப்படுகிறது. சீர்கெட்ட மனுஷனுடைய தேவைகள் தான் மாம்சமான தேவன் மாம்சத்திற்குள் வந்ததற்கு ஒரே காரணமாகும். தேவனுடைய தேவைகள் அல்ல, மனுஷனுடைய தேவைகளே இதற்குக் காரணமாகும். தேவனுடைய தியாகப்பலிகள் மற்றும் பாடுகள் எல்லாமே மனுக்குலத்திற்காகவே ஆகும், அவருடைய நலனுக்காக அல்ல. தேவனுக்கு எந்தச் சாதக பாதகமோ அல்லது வெகுமதிகளோ கிடையாது. சில எதிர்கால அறுவடையை அவர் அறுவடை செய்ய மாட்டார், ஆனால் ஆதியிலேயே அவருக்குக் கடன்பட்டிருந்ததை அறுவடை செய்வார். அவர் மனுக்குலத்திற்காகச் செய்கிற மற்றும் தியாகம் செய்கிற எல்லாம் அவர் சிறந்த வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, முற்றிலும் மனுக்குலத்திற்காகவே ஆகும். மாம்சத்தில் தேவனுடைய கிரியை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல சிரமங்களைக் கொண்டிருக்கிற போதிலும், அது இறுதியில் அடையும் பலன்கள் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியைகளின் பலன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மாம்சத்தின் கிரியை மிகுந்த கஷ்டத்தை உண்டாக்குகின்றது. மேலும் ஆவியானவர் கொண்டிருக்கின்ற அதே மாபெரும் அடையாளத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆவியானவர் செய்கிற அதே தெய்வீகச் செயல்களை மாம்சமானவரால் செய்ய முடியாது. ஆவியானவர் கொண்டிருக்கிற அதே அதிகாரத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆனாலும், சாதாரணமான இந்த மாம்சமானவரால் செய்யப்படும் கிரியையின் சாராம்சமானது ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும். மேலும் இந்த மாம்சமானவரே எல்லா மனுக்குலத்தின் தேவைகளுக்கும் பதிலாக இருக்கின்றார். இரட்சிக்கப்படுகிறவர்களைப் பொறுத்தவரையில், ஆவியானவரின் பயன்பாட்டு மதிப்பானது மாம்சமானவரின் பயன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்: ஆவியானவரின் கிரியையால் எல்லா மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும். ஆனால் மாம்சமானவரின் கிரியை அவர் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபருடனேயே மிகவும் பயனுள்ள முறையில் தொடர்புடையதாக இருக்கின்றது. மேலும் என்னவென்றால், காணக்கூடிய உருவத்திலுள்ள தேவனுடைய மாம்சத்தை மனுஷனால் நன்கு புரிந்துகொள்ளவும் நம்பவும் முடியும். மேலும் தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவை இன்னும் ஆழப்படுத்தவும் முடியும். மேலும் தேவனுடைய உண்மையான செயல்களைக் குறித்த மிகவும் ஆழமான தாக்கத்தை மனுஷனுக்கு ஏற்படுத்தவும் முடியும். ஆவியானவரின் கிரியை மறைபொருளில் மறைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு ஏதுவானவர்களால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாகும். மேலும் அவற்றைக் காண்பதும் கடினமாகும். ஆகவே அவர்கள் வெற்றுக் கற்பனைகளை மாத்திரமே நம்பியிருக்க முடியும். ஆனாலும், மாம்சத்தின் கிரியை இயல்பானது, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வளமான ஞானத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மனுஷனுடைய மாம்சக் கண்ணால் காணக்கூடிய ஒரு உண்மையாகும். தேவனுடைய கிரியையின் ஞானத்தை மனுஷன் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க முடியும். அவனுடைய வளமான கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் துல்லியமாகவும், உண்மையான மதிப்பாகவும் இருக்கிறது. மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவன் கற்பனை செய்வதற்குக் கடினமான காரியங்களை மட்டுமே ஆவியானவரால் செய்ய முடியும். உதாரணமாக, ஆவியானவரின் அறிவொளி, ஆவியானவரின் அசைவு மற்றும் ஆவியானவரின் வழிகாட்டுதல் ஆகியவை மனம் கொண்ட மனுஷனுக்கு எந்தத் தெளிவான அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. அவை ஒரு அசைவையோ அல்லது பரந்த அர்த்தத்தையோ மாத்திரமே கொடுக்கின்றன, வார்த்தைகளாலான ஒரு அறிவுரையை வழங்க முடியாது. ஆனாலும், மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியை பெரிதும் வித்தியாசமானதாகும்: இது வார்த்தைகளின் துல்லியமான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளதோடு, தெளிவான சித்தத்தையும், தேவையான இலக்குகளையும் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷன் தட்டித் தடுமாறவோ அல்லது அவனுடைய கற்பனையைப் பயன்படுத்தவோ, ஊகங்கள் செய்யவோ வேண்டியதில்லை. இது மாம்சத்தில் செய்யப்படும் கிரியைக் குறித்த விளக்கமாகும். இது ஆவியானவரின் கிரியையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். ஆவியானவரின் கிரியையானது ஒரு குறுகிய வரம்பிற்கு மட்டுமே பொருத்தமானதாகும். இது மாம்சத்தின் கிரியைக்கு மாற்றாக முடியாது. மாம்சத்தின் கிரியையானது ஆவியானவரின் கிரியையைக் காட்டிலும் மிகவும் துல்லியமான மற்றும் தேவையான இலக்குகளையும், உண்மையான, மதிப்புமிக்க அறிவையும் மனுஷனுக்குக் கொடுக்கிறது. துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யான கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தையச் சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். ஆவியானவர் தேவனுடைய இயல்பான சாராம்சமாக இருக்கின்றபோதிலும், இத்தகைய கிரியையை அவருடைய மாம்சத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆவியானவர் தனியாகக் கிரியை செய்திருந்தால், அவருடைய கிரியை பயனுள்ளதாக இருக்க இயலாது என்பது ஒரு தெளிவான சத்தியமாகும். இந்த மாம்சத்தின் நிமித்தமாக பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய சத்துருக்களாக மாறியிருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையை முடிக்கும் தருவாயில், அவருக்கு எதிரானவர்கள் அவருடைய சத்துருக்களாக இல்லாமல், அவருடைய சாட்சிகளாக மாறுவார்கள். அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட சாட்சிகளாகவும், அவருடன் இணக்கமாகி அவரிடமிருந்து பிரிக்க முடியாத சாட்சிகளாகவும் மாறுவார்கள். மனுஷனுக்கு மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை அவர் மனுஷனுக்குத் தெரியப்படுத்துவார். மேலும் மனித வாழ்வின் அர்த்தத்தில் இந்த மாம்சத்தின் முக்கியத்துவத்தை மனுஷன் அறிந்துகொள்வான். மேலும் மனித வாழ்வின் வளர்ச்சியில் அவனுடைய உண்மையான மதிப்பை அறிந்துகொள்வான். மேலும் இந்த மாம்சமானது வாழ்வின் நீரூற்றாக மாறும், இதிலிருந்து மனுஷனால் பிரிந்திருக்க இயலாது என்பதை அறிந்துகொள்வான். மாம்சமான தேவனுடைய மாம்சமானது தேவனுடைய அடையாளத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமில்லாததாக இருக்கின்றபோதிலும், மனுஷன் அவருடைய உண்மையான நிலைப்பாட்டுடன் இணக்கமில்லாதவனாக தோன்றுகின்றபோதிலும், தேவனுடைய மெய்யான சாயலையோ அல்லது மெய்யான அடையாளத்தையோ கொண்டிராத இந்த மாம்சத்தினால் தேவனுடைய ஆவியினால் நேரடியாகச் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும். இதுவே தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆகும். மேலும் இந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் தான் மனுஷனால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சகல மனுஷரும் தேவனுடைய ஆவியை மேல்நோக்கிப் பார்க்கிறார்கள், தேவனுடைய மாம்சத்தை கீழ்நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் அவற்றை எவ்வாறு பார்த்தாலும் அல்லது சிந்தித்தாலும், மாம்சத்தின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆவியானவருக்குரியவற்றை காட்டிலும் மிகவும் அதிகமானவையாகும். நிச்சயமாக, இது சீர்கெட்ட மனுக்குலத்துடன் மாத்திரமே தொடர்புடையதாகும். சத்தியத்தைத் தேடுகிற மற்றும் தேவன் தோன்றுவதற்காக வாஞ்சித்து ஏங்குகிற எல்லோருக்கும், ஆவியானவரின் கிரியை ஏவுதலையோ அல்லது தூண்டுதலையோ, விவரிக்க முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அதிசய உணர்வையோ, மகத்துவமான, மேன்மையான மற்றும் போற்றத்தக்க, ஆனாலும் எல்லோராலும் அடைய முடியாத மற்றும் பெற முடியாத உணர்வையோ மட்டுமே கொடுக்க முடியும். மனுஷனும் தேவனுடைய ஆவியானவரும் தங்களுக்கு இடையில் மிகவும் அதிகமான தூரம் இருப்பது போலவே, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் மனுஷனும் தேவனும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பிளவினால் பிரிக்கப்பட்டிருப்பதைப் போலவே, அவர்களால் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உண்மையில், இது ஆவியானவரால் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாயையாகும். ஏனென்றால் ஆவியானவரும் மனுஷனும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல, ஒரே உலகில் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆவியானவர் மனுஷனுக்குரிய எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் மனுஷனுக்கு ஆவியானவர் தேவையில்லை. ஏனென்றால் மனுஷனுக்குப் பெரிதும் தேவைப்படும் கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்குப் பின்தொடர்வதற்கான உண்மையான இலக்குகளையும், தெளிவான வார்த்தைகளையும், அவர் உண்மையானவர், சாதாரணமானவர், அவர் தாழ்மையானவர், இயல்பானவர் என்ற உணர்வையும் கொடுக்கிறது. மனுஷன் அவருக்குப் பயப்படுகின்றபோதிலும், பெரும்பாலான ஜனங்களுக்கு அவர் எளிதாக தொடர்புகொள்ளக் கூடியவராக இருக்கிறார்: மனுஷனால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியும், அவருடைய குரலைக் கேட்க முடியும், அவன் அவரைத் தூரத்திலிருந்து பார்க்க வேண்டியதில்லை. இந்த மாம்சம் மனுஷனால் அணுகக்கூடியதாக உணர்கிறது. இது தொலைவில் இருப்பதாகவோ அல்லது புரிந்துகொள்ள இயலாததாகவோ இல்லாமல், கண்டும் தொட்டும் உணரக்கூடியதாக இருக்கிறது, ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனுடைய அதே உலகில் உள்ளது.

மாம்சத்தில் வாழ்பவர்கள் எல்லோரும், தங்கள் மனநிலையை மாற்றுவதற்கு பின்தொடர்வதற்கான இலக்குகள் தேவைப்படுகின்றன, தேவனை அறிந்துகொள்வதற்கு உண்மையான செயல்களையும், தேவனுடைய உண்மையான முகத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இரண்டையும் மாம்சமான தேவனுடைய மாம்சத்தால் மாத்திரமே அடைய முடியும். மேலும் இரண்டையும் சாதாரண மற்றும் உண்மையான மாம்சத்தால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். இதனால்தான் மனுஷனாக அவதரிப்பது அவசியமானதாகும். இது சீர்கெட்ட மனுக்குலத்திற்கு தேவைப்படுகிறது. ஜனங்கள் தேவனை அறிந்துகொள்ள வேண்டியதிருப்பதால், தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வங்களின் உருவங்கள் அவர்களுடைய இருதயங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சீர்கேடான மனநிலையைப் போக்க வேண்டியதிருப்பதால், அவர்கள் முதலில் தங்கள் சீர்கேடான மனநிலையை அறிந்துகொள்ள வேண்டும். ஜனங்களின் இருதயங்களிலிருந்து தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை அகற்றுவதற்கான கிரியையை மனுஷன் மட்டுமே செய்தால், அவன் சரியான பலனை அடையத் தவறிவிடுவான். ஜனங்களின் இருதயங்களில் காணப்படும் தெளிவற்ற தெய்வங்களின் உருவங்களை வார்த்தைகளால் மாத்திரமே, வெளிப்படுத்தவோ, நீக்கவோ அல்லது முழுமையாக அப்புறப்படுத்தவோ முடியாது. அவ்வாறு செய்தால், ஆழமாக வேரூன்றப்பட்ட இந்த விஷயங்களை ஜனங்களிடமிருந்து அகற்றுவது இன்னும் சாத்தியமாக இருக்காது. நடைமுறை தேவன் மற்றும் தேவனுடைய உண்மையான உருவம் ஆகியவற்றைக் கொண்டும், ஜனங்களைப் படிப்படியாகத் தங்களை அறிந்துகொள்ள வைப்பதன் மூலமாகவும், இந்தத் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை மாற்றுவதன் மூலமாக மட்டுமே சரியான பலனை அடைய முடியும். மனுஷன் தான் கடந்த காலங்களில் தேடிய தேவன் தெளிவற்றவராகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவும் இருப்பதை உணர்ந்துகொள்கிறான். இந்தத் பலனை ஆவியானவரின் நேரடி தலைமையினாலோ, ஒரு குறிப்பிட்ட நபரின் போதனைகளினாலோ அல்லாமல், மாம்சமான தேவனாலேயே அடைய முடியும். மாம்சமான தேவன் தமது கிரியையை அதிகாரப்பூர்வமாகச் செய்யும்போது, மனுஷனுடைய கருத்துக்கள் வெளியரங்கமாக்கப்படுகின்றன. ஏனென்றால் மாம்சமான தேவனுடைய இயல்பான தன்மையும் யதார்த்தமும் மனுஷனுடைய கற்பனையில் காணப்படும் தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட தேவனுக்கு நேர்மாறானவையாக இருக்கின்றன. மாம்சமான தேவனுக்கு நேர்மாறாக இருக்கும்போது மட்டுமே மனுஷனுடைய உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்த முடியும். மாம்சமான தேவனுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், மனுஷனுடைய கருத்துக்களை வெளிப்படுத்த இயலாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிரதிபலிப்புப் படலம் என்ற யதார்த்தம் இல்லாமல், தெளிவற்ற காரியங்களை வெளிப்படுத்த முடியாது. இந்த கிரியையைச் செய்வதற்கு யாராலும் வார்த்தைகளைப் பயன்படுத்த முடியாது. வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த கிரியையை யாராலும் தெளிவாக பேசவும் முடியாது. தேவனால் மாத்திரமே தமது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும். வேறு யாராலும் அவர் சார்பாக இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. மனுஷனுடைய பாஷை எவ்வளவு வளமையாக இருந்தாலும் சரி, தேவனுடைய யதார்த்தத்தையும் இயல்பையும் அவனால் தெளிவாகப் பேச முடியாது. மனுஷனால் தேவனை மிகவும் நடைமுறையில் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். மேலும் தேவன் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் கிரியை செய்து, தமது உருவத்தையும் தாம் உண்டென்பதையும் முழுமையாக வெளிப்படுத்தினால் மாத்திரமே, அவனால் அவரை மிகவும் தெளிவாகப் பார்க்க முடியும். மாம்சத்தாலான எந்த மனுஷனாலும் இந்த பலனை அடைய முடியாது. நிச்சயமாகவே, தேவனுடைய ஆவியானவராலும் இந்தப் பலனை அடைய முடியாது. சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து சீர்கெட்ட மனுஷனை தேவனால் இரட்சிக்க முடியும், ஆனால் இந்தக் கிரியையை தேவனுடைய ஆவியானவரால் நேரடியாக நிறைவேற்ற முடியாது. மாறாக, தேவனுடைய ஆவியானவர் அணிந்திருக்கும் மாம்சத்தினால், மாம்சமான தேவனுடைய மாம்சத்தினால் மட்டுமே செய்ய முடியும். இந்த மாம்சம் மனுஷனாகவும், தேவனாகவும் இருக்கிறது, சாதாரண மனிதத்தன்மை கொண்ட ஒரு மனுஷனாகவும், முழு தெய்வீகத்தன்மை கொண்ட தேவனாகவும் இருக்கிறது. ஆகையால், இந்த மாம்சம் தேவனுடைய ஆவியானவர் இல்லை என்றபோதிலும், ஆவியானவரிலிருந்து பெரிதும் மாறுபட்டது என்றபோதிலும், ஆவியானவராகவும் மாம்சமாகவும் இருக்கும் மாம்சமான தேவனே இன்னும் மனுஷனை இரட்சிக்கிறார். அவர் எவ்வாறு அழைக்கப்பட்டாலும் சரி, இறுதியில் தேவனே மனுக்குலத்தை இரட்சிக்கிறவராக இருக்கிறார். தேவனுடைய ஆவியானவர் மாம்சத்திலிருந்து பிரிக்க இயலாதவராக இருப்பதால், மாம்சத்தின் கிரியையும் தேவனுடைய ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. இந்தக் கிரியை ஆவியானவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி செய்யப்படவில்லை, ஆனால் மாம்சத்தின் அடையாளத்தைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு மனுஷனாக அவதரிக்கத் தேவவையில்லை. மாம்சம் செய்ய வேண்டிய கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சமான தேவனால் மட்டுமே செய்ய முடியும். இந்தக் கிரியைக்கு இதுதான் தேவைப்படுகிறது. இதுதான் சீர்கெட்ட மனுக்குலத்திற்குத் தேவைப்படுகிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களில், ஒரே ஒரு கட்டம் மட்டுமே ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. மீதமுள்ள இரண்டு கட்டங்களும் மாம்சமான தேவனால் செய்யப்படுகின்றன, ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படுவதில்லை. ஆவியானவரால் செய்யப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியை மனுஷனுடைய சீர்கேடான மனநிலையை மாற்றுவதில் ஈடுபடவில்லை. தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவுக்கு எந்த தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. ஆனாலும், கிருபையின் காலத்திலும், ராஜ்யத்தின் காலத்திலும் தேவனுடைய மாம்சத்தின் கிரியையானது மனுஷனுடைய சீர்கேடான மனநிலையுடனும், தேவனைப் பற்றிய அறிவுடனும் தொடர்புடையதாக இருக்கிறது. மேலும் இது இரட்சிப்பின் கிரியையின் முக்கியமான பகுதியாகும். ஆகையால், சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் மாம்சமான தேவனுடைய நேரடி கிரியையும் அதிகமாக தேவைப்படுகிறது. மனுஷனை வழிநடத்துவதற்கும், அவனை ஆதரிப்பதற்கும், அவனுக்குத் தண்ணீர் கொடுப்பதற்கும், அவனைப் போஷிப்பதற்கும், அவனை நியாயந்தீர்ப்பதற்கும் சிட்சிப்பதற்கும் மாம்சமான தேவன் தேவைப்படுகிறார். மேலும் மாம்சமான தேவனிடமிருந்து அவனுக்கு அதிக கிருபையும், மாபெரும் மீட்பும் தேவைப்படுகிறது. மாம்சத்தில் உள்ள தேவனால் மட்டுமே மனுஷனுடைய ஆப்த நண்பராகவும், மனுஷனுடைய மேய்ப்பராகவும், மனுஷனுடைய தற்போதைய சகாயமாகவும் இருக்க முடியும். இவையெல்லாம் இன்றைக்கும் கடந்த காலங்களிலும் மாம்சத்தில் மனுஷனாய் அவதரிப்பதன் அவசியமாக இருக்கிறது.

தேவனுடைய சகல சிருஷ்டிகளிலும் மிகவும் உயர்ந்தவனான மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போயிருக்கிறான். ஆகையால் மனுஷனுக்கு தேவனுடைய இரட்சிப்பு தேவைப்படுகிறது. தேவனுடைய இரட்சிப்பின் இலக்கு மனுஷனே தவிர, சாத்தான் அல்ல. இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமும், மனுஷனுடைய ஆத்துமாவுமே தவிர, பிசாசு அல்ல. தேவன் முற்றிலுமாக நிர்மூலமாக்குவதின் இலக்காக சாத்தான் இருக்கிறான். மனுஷன் தேவனுடைய இரட்சிப்பின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்துள்ளது. ஆகையால் முதலில் இரட்சிக்கப்படுவது மனுஷனுடைய மாம்சமாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சமானது மிகவும் ஆழமாக சீர்கேடடைந்துள்ளது. இது தேவனை எதிர்க்கும் ஒன்றாக மாறிவிட்டது. அவ்வாறே இது தேவன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக எதிர்க்கவும் மறுக்கவும் செய்கிறது. இந்த சீர்கேடான மாம்சம் மிகவும் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. மாம்சத்தின் சீர்கேடான மனநிலையை சரிக்கட்டுவதையோ மாற்றுவதையோ காட்டிலும் கடினமானது வேறு எதுவுமில்லை. தொல்லைகளைத் தூண்டுவதற்காகவே மனுஷனுடைய மாம்சத்திற்குள் சாத்தான் வருகிறான். தேவனுடைய கிரியையைத் தொந்தரவு செய்வதற்காகவும் தேவனுடைய திட்டத்தை நாசமாக்குவதற்காகவும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு மனுஷன் சாத்தானாக மாறி, தேவனுக்கு சத்துருவாகிவிட்டான். மனுஷன் இரட்சிக்கப்படுவதற்கு, அவன் முதலில் வெல்லப்பட வேண்டும். ஏனென்றால் தேவன் ஜெயங்கொள்வதற்காக எழுந்தருளி, தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்வதற்காகவும், சாத்தானுடன் யுத்தம் செய்வதற்காகவும் மாம்சத்திற்குள் வருகிறார். சீர்கெட்டுப்போன மனுஷனுடைய இரட்சிப்பும், அவருக்கு எதிராகக் கலகம் செய்யும் சாத்தானின் தோல்வியும் அழிவுமே அவரது நோக்கமாகும். மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையின் மூலம் அவர் சாத்தானை தோற்கடிக்கிறார், அதே நேரத்தில் சீர்கெட்ட மனுக்குலத்தை அவர் இரட்சிக்கிறார். இவ்வாறு, இது ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களை அடையும் ஒரு கிரியையாக இருக்கிறது. அவர் மாம்சத்தில் கிரியை செய்கிறார், மாம்சத்தில் பேசுகிறார், மனுஷனுடன் சிறப்பாக செயல்படுவதற்கும், மனுஷனைச் சிறப்பாக ஜெயங்கொள்வதற்கும் மாம்சத்தில் எல்லா கிரியைகளையும் செய்கிறார். தேவன் மாம்சமாகும் கடைசி முறையில், கடைசி நாட்களில் அவருடைய கிரியை மாம்சத்தில் முடிவடையும். அவர் எல்லா மனுஷர்களையும் வகைவாரியாக வகைப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகத்தையும் முடிப்பார். மேலும் மாம்சத்தில் அவருடைய கிரியையை எல்லாம் முடிப்பார். பூமியில் அவருடைய கிரியை எல்லாம் முடிந்த பிறகு, அவர் முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். மாம்சத்தில் கிரியை செய்யும் தேவன் மனுக்குலத்தை முழுமையாக ஜெயங்கொண்டு, மனுக்குலத்தை முழுமையாக ஆதாயப்படுத்துவார். அவருடைய முழு நிர்வாகமும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று அர்த்தமல்லவா? தேவன் மாம்சத்தில் தமது கிரியையை முடித்து, சாத்தானை முழுமையாக தோற்கடித்து, ஜெயங்கொண்டவராக இருக்கும்போது, மனுஷனை மோசம்போக்க சாத்தானுக்கு மேற்கொண்டு வாய்ப்பு இருக்காது. மனுஷனை மீட்பதும், மனுஷனுடைய பாவங்களை மன்னிப்பதுமே தேவனுடைய முதல் மனுஷ அவதரிப்பின் கிரியையாகும். இப்போது இது மனுக்குலத்தை ஜெயங்கொண்டு, முழுவதும் ஆதாயப்படுத்தும் கிரியையாக இருக்கிறது, இதனால் சாத்தானுக்கு இனிமேல் அதன் கிரியையைச் செய்ய எந்த வழியும் இருக்காது. அது முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுப் போய்விடும். தேவனே முற்றிலும் ஜெயங்கொள்கிறவராக இருப்பார். இதுவே மாம்சத்தின் கிரியையாகும். இது தேவனால் செய்யப்படும் கிரியையாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் ஆரம்பக் கிரியையானது ஆவியினால் நேரடியாகச் செய்யப்பட்டது, மாம்சத்தால் அல்ல. ஆனாலும், தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் இறுதிக் கிரியையானது மாம்சமான தேவனால் செய்யப்படுகிறது, நேரடியாக ஆவியினாவரால் அல்ல. இடைப்பட்ட கட்டத்தின் மீட்பின் கிரியையும் மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்பட்டது. முழு நிர்வாகக் கிரியைகளிலும், மனுஷனைச் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சிப்பதே மிகவும் முக்கியமான கிரியையாகும். சீர்கெட்ட மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்வதே முக்கியமான கிரியையாகும். இதனால் ஜெயங்கொள்ளப்பட்ட மனுஷனுடைய இருதயத்தில் தேவனுடைய உண்மையான பயபக்தியானது மீட்டெடுக்கப்படுகிறது. மேலும் ஒரு சாதாரண வாழ்க்கையை அதாவது தேவனுடைய ஒரு சிருஷ்டியின் சாதாரண வாழ்க்கையை அடைய அவனுக்கு உதவுகிறது. இந்தக் கிரியை முக்கியமானதாகும், இது நிர்வாகக் கிரியையின் மையப் பகுதியாகும். இரட்சிப்பின் மூன்று கட்டங்களில், நியாயப்பிரமாண காலத்தின் முதல் கட்டமானது நிர்வாகக் கிரியைகளின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. இது இரட்சிப்பின் கிரியையின் சிறிய தோற்றத்தை மாத்திரமே கொண்டிருந்தது. மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை இரட்சிக்கும் தேவனுடைய கிரியையின் ஆரம்பமாக இருக்கவில்லை. முதல் கட்டக் கிரியை ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டது. ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின் கீழ், மனுஷன் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை மாத்திரமே அறிந்திருந்தான், மனுஷனிடம் அதிக சத்தியமில்லை, நியாயப்பிரமாண காலத்தின் கிரியைகள் மனுஷனின் மனநிலையின் மாற்றங்களோடு தொடர்புடையவையாகவும் இல்லை, மேலும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து மனுஷனை எவ்வாறு இரட்சிப்பது என்ற கிரியையைப் பற்றி அக்கறை கொண்டதாகவும் இல்லை. இவ்வாறு தேவனுடைய ஆவியானவர் மனுஷனுடைய சீர்கேடான மனநிலையைப் பற்றி அக்கறை கொள்ளாத மிகவும் எளிதான இந்தக் கட்டக் கிரியையை செய்து முடித்தார். இந்தக் கட்டக் கிரியையானது நிர்வாகத்தின் மையத்துடன் சற்றுத் தொடர்புடையதாக இருந்தது. மேலும் இது மனுஷனுடைய இரட்சிப்பின் அதிகாரப்பூர்வக் கிரியையுடன் பெரிய தொடர்பைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், தேவன் தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் போனது. ஆவியானவரால் செய்யப்படும் கிரியையானது மறைமுகமானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கிறது. மேலும் இது மனுஷனை மிகவும் பயமுறுத்துவதாகவும், அவனால் அணுக முடியாததாகவும் இருக்கிறது. இரட்சிப்பின் கிரியையை நேரடியாகச் செய்வதற்கு ஆவியானவர் பொருத்தமானவர் அல்ல, மனுஷனுக்கு நேரடியாக ஜீவனை அளிப்பதற்கும் பொருத்தமானவர் அல்ல. மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது என்னவென்றால் ஆவியின் கிரியையை மனுஷனுக்கு நெருக்கமான ஒரு அணுகுமுறையாக மாற்றுவதேயாகும். அதாவது, மனுஷனுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்றால் தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு ஒரு சாதாரண, இயல்பான மனுஷனாக மாறுவதேயாகும். தேவன் தமது கிரியையில் ஆவியானவரின் இடத்தைப் பிடிக்க மனுஷனாக அவதரிக்க வேண்டியதிருக்கிறது. மேலும் மனுஷனைப் பொறுத்தவரை, தேவன் கிரியை செய்வதற்கு இதைவிடப் பொருத்தமான வழி இல்லை. இந்த மூன்று கட்டக் கிரியைகளில், இரண்டு கட்டங்கள் மாம்சம் மூலமாகச் செய்யப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு கட்டங்களும் நிர்வாகக் கிரியையின் முக்கியக் கட்டங்களாக இருக்கின்றன. இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒன்றுக்கொன்று இணக்கமுள்ளவையாகும். இவை ஒன்றுக்கொன்று பரிபூரணமாக இணங்கி இருக்கின்றன. தேவன் மனுஷனாக அவதரித்ததின் முதல் கட்டம் இரண்டாம் கட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. மேலும் தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளும் ஒரு முழுமையை உருவாக்குகின்றன எனவும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இல்லை என்றும் கூறலாம். தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு கட்டங்களும் அவருடைய மாம்சமான அடையாளத்தில் தேவனால் செய்யப்படுகின்றன, ஏனென்றால் அவை முழு நிர்வாகக் கிரியைக்கும் மிகவும் முக்கியமானவையாகும். தேவனுடைய இரண்டு மனுஷ அவதரிப்புகளின் கிரியை இல்லாமல், முழு நிர்வாகக் கிரியைகளும் நிறுத்தப்படும், மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை வெற்றுப் பேச்சாக மட்டுமே இருக்கும் என்று ஏறக்குறைய சொல்லலாம். இந்தக் கிரியை முக்கியமானதா இல்லையா என்பது மனுக்குலத்தின் தேவைகள், மனுக்குலத்தின் சீர்கேட்டின் யதார்த்தம் மற்றும் சாத்தானின் கீழ்ப்படியாமையின் கடுமைத்தன்மை மற்றும் கிரியையின் இடையூறு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். கிரியையைச் செய்யக்கூடிய சரியானவர், கிரியை செய்பவர் செய்யும் கிரியையின் தன்மை மற்றும் கிரியையின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கணிக்கப்படுகிறார். இந்த கிரியையின் முக்கியத்துவம் என்று வரும்போது, தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியை அல்லது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியை அல்லது மனுஷனால் செய்யப்படும் கிரியை ஆகியவற்றில் எந்தக் கிரியை முறையைப் பின்பற்றுவது என்பதன் அடிப்படையில், முதலில் அகற்றப்படுவது மனுஷனால் செய்யப்படும் கிரியையாகும். மேலும் கிரியையின் தன்மை மற்றும் மாம்சத்தின் கிரியைகளுக்கு எதிராக ஆவியானவரின் கிரியையின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மாம்சத்தால் செய்யப்படும் கிரியை மனுஷனுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும், அதிக நன்மைகளை வழங்கும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. கிரியையை ஆவியானவர் செய்ய வேண்டுமா அல்லது மாம்சம் செய்ய வேண்டுமா என்று தேவன் தீர்மானித்த நேரத்தில் இதுவே தேவனுடைய சிந்தையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டக் கிரியைக்கும் ஒரு முக்கியத்துவமும் ஒரு அடிப்படையும் உள்ளது. இவை ஆதாரமற்ற கற்பனைகளுமல்ல, இவை தன்னிச்சையாகச் செய்யப்படுபவையும் அல்ல. அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ஞானம் உள்ளது. இதுவே தேவனுடைய எல்லாக் கிரியைகளுக்கும் பின்னால் உள்ள சத்தியமாகும். குறிப்பாக, மாம்சமான தேவன் தனிப்பட்ட முறையில் மனுஷர் நடுவே கிரியை செய்வதனால், இதுபோன்ற ஒரு மகத்தான கிரியையில் தேவனுடைய திட்டம் இன்னும் அதிகமாக உள்ளது. ஆகையால், தேவனுடைய ஞானமும், அவருடைய தன்மையின் முழுமையும் அவருடைய கிரியையில் உள்ள ஒவ்வொரு செயலிலும், சிந்தனையிலும், யோசனையிலும் பிரதிபலிக்கின்றன. இது தேவனுடைய மிகவும் உறுதியான மற்றும் முறையான இருப்பாகும். இந்த நுட்பமான சிந்தனைகளும் கருத்துக்களும் மனுஷனுக்குக் கற்பனை செய்து பார்ப்பதற்கும், நம்புவதற்கும் கடினமானதாகும், மேலும், அறிந்துகொள்வதற்கும் மனுஷனுக்கு கடினமானதாகும். மனுஷனால் செய்யப்படும் கிரியையானது பொதுவான கொள்கையின்படி செய்யப்படுகிறது, இது மனுஷனுக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கின்றது. ஆனாலும், தேவனுடைய கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தேவனுடைய செயல்கள் பெரியவையாகவும், தேவனுடைய கிரியை ஒரு பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், அவற்றின் பின்னால் மனுஷனால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல நுணுக்கமான மற்றும் துல்லியமான திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளன. அவருடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் கொள்கையின்படி செய்யப்படுவது மட்டுமின்றி, ஒவ்வொரு கட்டத்திலும் மனுஷ பாஷையால் பேச முடியாத பல காரியங்களும் உள்ளன. இவை மனுஷனால் பார்க்க முடியாத காரியங்களாகும். இது ஆவியானவரின் கிரியையாகவோ அல்லது மாம்சமான தேவனுடைய கிரியையாகவோ இருந்தாலும், ஒவ்வொன்றும் அவருடைய கிரியையின் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவர் ஆதாரமின்றி கிரியை செய்வதில்லை, அவர் அற்பமான கிரியையைச் செய்வதில்லை. ஆவியானவர் நேரடியாகக் கிரியை செய்யும்போது, அவருடைய இலக்குகளும் உடன் இருக்கின்றன. அவர் கிரியை செய்வதற்காக மனுஷனாக மாறும்போது (அதாவது, அவர் தமது வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும்போது), அதில் அவருடைய நோக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர் வேறு எதற்காகத் தமது அடையாளத்தை உடனடியாக மாற்றுவார்? அவர் வேறு எதற்காகத் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் நபராக உடனடியாக மாறி, பாடுகளை அனுபவிக்க வேண்டும்?

மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை மிகவும் முக்கியமானதாகும், இது கிரியையைப் பற்றி பேசப்படுகிறது. மேலும், கிரியையை இறுதியில் முடிப்பவர் மாம்சமான தேவனேயன்றி, ஆவியானவர் அல்ல. தேவன் அறியப்படாத நேரத்தில் பூமிக்கு வந்து மனுஷனிடம் தோன்றி, அதன்பிறகு அவர் மனுக்குலம் முழுவதையும் தனிப்பட்ட முறையில் நியாயந்தீர்ப்பார், யாரையும் விட்டு வைக்காமல் அவர்களை ஒவ்வொருவராகச் சோதிப்பார் என்று சிலர் நம்புகிறார்கள். இவ்விதமாகச் சிந்திப்பவர்களுக்கு மனுஷ அவதரிப்பின் இந்த கட்டக் கிரியையைத் தெரியாது. தேவன் மனுஷனை ஒவ்வொருவராக நியாயந்தீர்ப்பதில்லை, மனுஷனை ஒவ்வொருவராகச் சோதிப்பதில்லை. அவ்வாறு செய்வது நியாத்தீர்ப்பின் கிரியையாக இருக்காது. சகல மனுஷரின் சீர்கேடும் ஒன்றுபோல இல்லையா? சகல மனுஷரின் சாரம்சமும் ஒன்றுபோல இல்லையா? மனுக்குலத்தின் சீர்கேடான சாராம்சம், சாத்தானால் சீர்கேடடைந்த மனுஷனின் சாராம்சம் மற்றும் மனுஷனுடைய சகல பாவங்கள் ஆகியவையே நியாயந்தீர்க்கப்படுகின்றன. மனுஷனுடைய அற்பமான மற்றும் முக்கியத்துவமில்லாத தவறுகளை தேவன் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பின் கிரியை ஒரு மாதிரியாகும். இது குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்குச் செய்யப்படுவதில்லை. மாறாக, இது மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பையும் குறிப்பிடும் பொருட்டு ஒரு கூட்ட ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும் கிரியையாகும். ஒரு கூட்ட ஜனங்களின் மீது தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்வதன் மூலம், மனுக்குலம் முழுவதின் கிரியையையும் குறிப்பிட மாம்சத்திலுள்ள தேவன் தமது கிரியையைப் பயன்படுத்துகிறார், அதன் பிறகு அது படிப்படியாகப் பரவுகிறது. இவ்வாறும் நியாயத்தீர்ப்பின் கிரியை இருக்கிறது. தேவன் ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜனக்கூட்டத்தையோ நியாயந்தீர்க்க மாட்டார். மாறாக, மனுக்குலம் முழுவதின் அநீதியையும் நியாயந்தீர்க்கிறார். அதாவது, உதாரணமாக, தேவனை மனுஷன் எதிர்ப்பது அல்லது அவர் மீது மனுஷனுக்கு காணப்படும் பக்தியின்மை அல்லது தேவனுடைய கிரியையை மனுஷன் இடையூறு செய்வது மற்றும் இதுபோன்ற பலவற்றை நியாயந்தீர்க்கிறார். தேவனை எதிர்க்கும் மனுக்குலத்தின் சாராம்சமே நியாந்தீர்க்கப்படுகிறது. இந்தக் கிரியை கடைசி நாட்களின் ஜெயங்கொள்ளும் கிரியையாகும். மனுஷனால் சாட்சிகூறப்படும் மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையுமே கடைசி நாட்களில் பெரிய வெண்மையான சிங்காசனத்திற்கு முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பின் கிரியையாகும், இது கடந்த காலங்களில் மனுஷனால் செய்யப்பட்டதாகும். தற்போது மாம்சமான தேவனால் செய்யப்படும் கிரியையானது பெரிய வெண்மையான சிங்காசனத்தின் முன்பாகச் செய்யப்படும் நியாயத்தீர்ப்பாகும். இன்றைய மாம்சமான தேவன் கடைசி நாட்களில் மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம், அவருடைய கிரியை, அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய முழு மனநிலை ஆகியவை சேர்ந்துதான் அவருடைய முழுமையாகும். அவருடைய கிரியையின் எல்லை குறைவாக இருக்கின்றபோதிலும், முழு பிரபஞ்சத்தையும் நேரடியாக ஈடுபடுத்துவதில்லை என்றபோதிலும், நியாயத்தீர்ப்பின் கிரியையின் சாராம்சம் என்பது முழு மனுக்குலத்தின் நேரடி நியாயத்தீர்ப்பாகும். இது சீனாவின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுக்காகவோ அல்லது சிறு எண்ணிக்கையிலான ஜனங்களுக்காகவோ செய்யப்படும் நியாயத்தீர்ப்பு அல்ல. மாம்சத்திலுள்ள தேவன் கிரியை செய்யும் போது, இந்தக் கிரியையின் நோக்கம் முழு பிரபஞ்சத்தையும் ஈடுபடுத்தவில்லை என்றபோதிலும், அது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. மேலும், அவர் தமது மாம்சத்தின் கிரியையின் எல்லைக்குள்ளாகவே கிரியையை முடித்த பிறகு, இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலைத் தொடர்ந்து இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது பிரபஞ்சம் முழுவதும் பரவியதைப் போலவே அவர் இந்தக் கிரியையை உடனடியாக முழு பிரபஞ்சத்திற்கும் விரிவுபடுத்துவார். இது ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும் அல்லது மாம்சத்தின் கிரியையாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் செய்யப்படும் கிரியையாக இருக்கிறது, ஆனால் இது முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் குறிக்கிறது. கடைசி நாட்களில், தேவன் தமது மாம்சமான அடையாளத்தில் தோன்றி தமது கிரியையைச் செய்கிறார். மேலும், மாம்சத்திலுள்ள தேவனே பெரிய வெள்ளைச் சிங்காசனத்தின் முன்பாக மனுஷனை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். அவர் ஆவியானவராக இருந்தாலும் அல்லது மாம்சமாக இருந்தாலும், நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்கிறவர் தான் கடைசி நாட்களில் மனுக்குலத்தை நியாயந்தீர்க்கும் தேவனாக இருக்கிறார். இது அவருடைய கிரியையின் அடிப்படையில் தான் வரையறுக்கப்படுகிறது. இது அவருடைய வெளிப்புறத் தோற்றத்தினாலோ அல்லது பல காரணிகளின்படியோ வரையறுக்கப்படுவதில்லை. மனுஷன் இந்த வார்த்தைகளைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றபோதிலும், மாம்சமான தேவனுடைய நியாயத்தீர்ப்பு குறித்த உண்மையையும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்வதையும் யாராலும் மறுக்க முடியாது. மனுஷன் அதைப் பற்றி என்ன நினைத்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, உண்மைகள் உண்மைகளாகவே இருக்கின்றன. “தேவனால் கிரியை செய்யப்படுகிறது, ஆனால் மாம்சம் தேவன் அல்ல” என்று யாரும் சொல்ல முடியாது. இது முட்டாள்தனம், ஏனென்றால் இந்தக் கிரியையை மாம்சத்திலுள்ள தேவனைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. இந்தக் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டதால், இந்தக் கிரியையைத் தொடர்ந்து, மனுஷர் மீதான தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கிரியை இரண்டாவது முறையாகத் தோன்றாது. தேவன் தமது இரண்டாவது மனுஷ அவதரிப்பில் முழு நிர்வாகத்தின் அனைத்துக் கிரியைகளையும் ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். மேலும், தேவனுடைய கிரியையின் நான்காவது கட்டம் இருக்காது. ஏனென்றால், மாம்சமான மற்றும் சீர்கேடான மனுஷனே நியாயந்தீர்க்கப்படுகிறான், நேரடியாக நியாயந்தீர்க்கப்படும் சாத்தானுடைய ஆவி அல்ல, ஆகையால் நியாயத்தீர்ப்பின் கிரியை ஆவிக்குரிய உலகில் செய்யப்படாமல், மனுஷர் நடுவே செய்யப்படுகிறது. மனுஷனுடைய மாம்சத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்ப்பதற்கான கிரியையைச் செய்வதற்கு மாம்சத்திலுள்ள தேவனை விட வேறு யாரும் பொருத்தமானவராகவும் தகுதியானவராகவும் இல்லை. நியாயத்தீர்ப்பானது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டிருந்தால், அது பரந்ததாக இருந்திருக்காது. மேலும், இதுபோன்ற கிரியையை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கும், ஏனென்றால் ஆவியானவரால் மனுஷனிடம் நேரில் வரமுடியாது. இதன் காரணமாக, பலன்கள் உடனடியாக கிடைக்காது, மனுஷனால் தேவனுடைய இடறலடைய இயலாத மனநிலையை மிகவும் தெளிவாகப் பார்க்கவும் முடியாது. மாம்சத்திலுள்ள தேவன் மனுக்குலத்தின் சீர்கேட்டை நியாயந்தீர்த்தால் மாத்திரமே, சாத்தானை முழுமையாகத் தோற்கடிக்க முடியும். சாதாரண மனிதத்தன்மையைக் கொண்ட மனுஷனைப் போலவே இருக்கும் மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனுடைய அநீதியை நேரடியாக நியாயந்தீர்க்க முடியும். இது அவருடைய இயல்பான பரிசுத்தத்தன்மையின் மற்றும் அவருடைய தெய்வீகத்தன்மையின் அடையாளமாக இருக்கிறது. தேவன் மாத்திரமே மனுஷனை நியாயந்தீர்க்க தகுதியுடையவர், நியாயந்தீர்க்கும் நிலையில் இருக்கிறார், ஏனென்றால் அவர் சத்தியத்தையும் நீதியையும் கொண்டிருக்கிறார், ஆகவே அவரால் மனுஷனை நியாயந்தீர்க்க முடிகிறது. சத்தியமும் நீதியும் இல்லாதிருக்கிறவர்கள் மற்றவர்களை நியாயந்தீர்க்க தகுதியற்றவர்கள். இந்தக் கிரியை தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தால், அது சாத்தான் மீதான ஜெயத்தைக் குறிக்காது. ஆவியானவர் மனுஷர்களை விட இயல்பாகவே உயர்ந்தவர், தேவனுடைய ஆவியானவர் இயல்பாகவே பரிசுத்தமானவர், மாம்சத்தின் மீது வெற்றிசிறக்கிறார். இந்தக் கிரியையை ஆவியானவர் நேரடியாகச் செய்திருந்தால், மனுஷனுடைய கீழ்ப்படியாமை அனைத்தையும் அவரால் நியாயந்தீர்க்க முடியாது, மேலும் மனுஷனுடைய எல்லா அநீதியையும் வெளிப்படுத்த முடியாது. நியாயத்தீர்ப்பின் கிரியையானது தேவனைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்கள் மூலமாகவும் செய்யப்படுவதனால், மனுஷனிடம் ஆவியானவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் கிடையாது. ஆகையால், மனுஷனுடைய அநீதியைச் சிறந்த முறையில் வெளிப்படுத்த ஆவியானவரால் முடியாது, இதுபோன்ற அநீதியை முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. மாம்சமான தேவன் அவரை அறியாத அனைவருக்கும் சத்துருவாக இருக்கிறார். மனுஷனுடைய கருத்துக்களையும், அவரை எதிர்ப்பதையும் நியாயந்தீர்ப்பதன் மூலம், மனுக்குலத்தின் கீழ்ப்படியாமை அனைத்தையும் அவர் வெளிப்படுத்துகிறார். ஆவியானவரின் கிரியையின் பலன்களைக் காட்டிலும் மாம்சத்தில் அவர் செய்த கிரியையின் பலன்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. ஆகையால், மனுக்குலம் முழுவதின் நியாயத்தீர்ப்பும் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படாமல், மாம்சமான தேவனுடைய கிரியையால் செய்யப்படுகிறது. மாம்சத்திலுள்ள தேவனை மனுஷனால் காணவும், தொட்டுணரவும் முடியும். மாம்சத்திலுள்ள தேவனால் மனுஷனை முழுமையாக ஜெயங்கொள்ள முடியும். மாம்சத்திலுள்ள தேவனுடனான தனது உறவில், மனுஷன் எதிர்ப்பிலிருந்து கீழ்ப்படிதலுக்கும், துன்புறுத்துதலிலிருந்து ஏற்றுக்கொள்ளுதலுக்கும், கருத்துக்களிலிருந்து அறிவுக்கும் மற்றும் புறக்கணிப்பதிலிருந்து அன்புக்கும் முன்னேறுகிறான். இவைதான் மாம்சமான தேவனுடைய கிரியையின் பலன்களாகும். மனுஷன் அவருடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மாத்திரமே இரட்சிக்கப்படுகிறான். மனுஷன் அவருடைய வாயின் வார்த்தைகளின் மூலமாக அவரைப் படிப்படியாக அறிந்துகொள்கிறான். மனுஷன் அவரை எதிர்க்கும்போது அவரால் ஜெயங்கொள்ளப்படுகிறான். அவருடைய சிட்சையை ஏற்றுக்கொள்ளும் போது அவர் வழங்கும் ஜீவனைப் பெறுகிறான். இந்தக் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியையாகும், ஆனால் ஆவியானவர் என்ற அடையாளத்திலுள்ள தேவனுடைய கிரியை அல்ல. மாம்சமான தேவன் செய்த கிரியை மாபெரும் கிரியையாகவும், மிகவும் ஆழமான கிரியையாகவும் இருக்கிறது. தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்களின் முக்கியமான பகுதியானது மாம்சமான தேவன் செய்யும் கிரியையின் இரண்டு கட்டங்களாகும். மனுஷனுடைய ஆழமான சீர்கேடானது மாம்சமான தேவனுடைய கிரியைக்குப் பெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக, கடைசிக்கால ஜனங்களின் மீது செய்யப்படும் கிரியைகள் மிகவும் கடினமானவையாகவும், சூழல் விரோதமானதாகவும், ஒவ்வொரு வகையான நபரின் திறமையும் மிகவும் மோசமானதாகவும் இருக்கின்றன. ஆனாலும், இந்தக் கிரியையின் முடிவில், எந்தக் குறைபாடுகளும் இல்லாமல், அது இன்னும் சரியான பலனை அடையும். இது மாம்சத்தின் கிரியையின் பலனாகும். ஆவியின் கிரியையைக் காட்டிலும் இந்தப் பலன் மிகவும் வல்லமையானதாகும். தேவனுடைய கிரியையின் மூன்று கட்டங்கள் மாம்சத்தில் செய்து முடிக்கப்படும். அவை மாம்சமான தேவனால் செய்து முடிக்கப்பட வேண்டும். மிகவும் அத்தியாவசியமான மற்றும் மிகவும் முக்கியமான கிரியை மாம்சத்தில் செய்யப்படுகிறது. மனுஷனுடைய இரட்சிப்பானது மாம்சத்திலுள்ள தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும். மாம்சத்திலுள்ள தேவன் மனுஷனுடன் தொடர்பில்லாதவர் என்று முழு மனுக்குலமும் உணர்கின்றபோதிலும், உண்மையில் இந்த மாம்சமானது மனுக்குலம் முழுவதின் தலைவிதியுடனும் வாழ்வுடனும் தொடர்புடையதாக இருக்கிறது.

தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு மனுக்குலத்துக்காகவும் செயல்படுத்தப்பட்டு, மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துகிறது. இது மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையாக இருக்கின்றபோதிலும், இது இன்னும் முழு மனுக்குலத்தையும் வழிநடத்துகிறது. அவர் முழு மனுக்குலத்திற்கும் தேவனாக இருக்கிறார். சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் சிருஷ்டிக்கப்படாத எல்லா ஜீவராசிகளுக்கும் தேவனாக இருக்கிறார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்றபோதிலும், இந்தக் கிரியையின் நோக்கமும் குறைவாக இருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறும் ஒவ்வொரு முறையும், அவர் தமது கிரியைக்கான ஒரு மிகவும் உயர்ந்த பிரதிநிதித்துவமான நோக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் கிரியை செய்ய எளிய மற்றும் சாதராணமான ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வதில்லை. மாறாக, அவருடைய கிரியைக்கான நோக்கத்திற்காக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியான ஒரு ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான நோக்கம் வரம்புக்குட்பட்டதாக இருப்பதால், குறிப்பாக அவருடைய மாம்சமான மாம்சத்திற்காக ஆயத்தப்படுத்தப்படுவதால், இந்த ஜனக்கூட்டம் தெரிந்துகொள்ளப்படுகிறது, குறிப்பாக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்காகத் தெரிந்துகொள்ளப்படுகிறது. தேவன் தமது கிரியைக்கான நோக்கத்தைத் தேர்ந்தெடுப்பது ஆதாரமற்றது அல்ல, ஆனால் இது கொள்கையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது: கிரியைக்கான நோக்கம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியைக்கு நன்மை பயக்க வேண்டும், மேலும் மனுக்குலம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, இயேசுவின் தனிப்பட்ட மீட்பை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் யூதர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மேலும், மாம்சமான தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மனுக்குலம் முழுவதையும் யூதர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. யூதர்களிள் நடுவே செய்யப்படும் மீட்பின் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் மீட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. சீனர்கள் நடுவில் செய்யப்படும் ஜெயங்கொள்ளுதல் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் ஜெயங்கொள்ளுதல் கிரியையின் முழுமையையும் ஜெயங்கொள்ளுதலையும் வெளிப்படுத்தவில்லை. மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையும் சிறு ஜனக்கூட்டத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில், இந்தச் சிறு ஜனக்கூட்டத்தின் நடுவே அவருடைய கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், அவருடைய வார்த்தை மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துவதாகவும் இருக்கிறது. மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை முடிந்ததும், அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் செய்யும் கிரியையை அவர்கள் நடுவே பரப்ப ஆரம்பிப்பார்கள். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்தக் கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தைச் சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும். தேவன் தம்முடைய மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இனிமேல் இருப்பதும் இல்லாததும் போலத் தோன்றும் காரியங்களைத் தேடி அலைவதில்லை, தெளிவற்ற தேவனுடைய சித்தத்தை ஊகம் செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். தேவன் மாம்சத்தில் தம்முடைய கிரியையைப் பரப்பும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் மாம்சத்தில் செய்த கிரியையை எல்லா மதங்களிலும் மதப் பிரிவுகளிலும் அறிவிப்பார்கள். மேலும், அவர்கள் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனுக்குலத்தின் காதுகளில் எடுத்துரைப்பார்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பெறுபவர்களால் கேட்கப்படுகின்ற அனைத்தும் அவருடைய கிரியையின் உண்மைகளாகவும், மனுஷனால் தனிப்பட்ட முறையில் காணக்கூடிய காரியங்களாகவும் இருக்கும், அவை உண்மைகளாக இருக்குமே தவிர, வதந்தியாக இருக்காது. இந்த உண்மைகள் அவர் கிரியையைப் பரப்புவதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இவை கிரியையைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன. ஜீவித்திருக்கிற உண்மைகள் இல்லாமல், அவருடைய சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் பரவாது. உண்மைகள் இல்லாமல் மனுஷனுடைய கற்பனைகளைக் கொண்டு மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. ஆவியானவர் மனுஷனால் தொட்டுணர முடியாதவராகவும், மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவராகவும் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் வேறு எந்தக் கூடுதல் ஆதாரத்தையோ அல்லது உண்மைகளையோ விட்டுச்செல்ல ஆவியானவரின் கிரியையால் முடியாது. தேவனுடைய உண்மையான முகத்தை மனுஷன் ஒருபோதும் காணமாட்டான். அவன் எப்போதும் இல்லாத ஒரு தெளிவற்ற தேவனையே நம்புவான். மனுஷன் ஒருபோதும் தேவனுடைய முகத்தைக் காணமாட்டான். தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளையும் மனுஷன் ஒருபோதும் கேட்கமாட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷனுடைய கற்பனைகள் வெறுமையாக உள்ளன, தேவனுடைய உண்மையான முகத்திற்கு அவை மாற்றாக முடியாது. தேவனுடைய இயல்பான மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை ஆகியவற்றை மனுஷனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. பரலோகத்திலுள்ள அதரிசனமான தேவனும், அவருடைய கிரியையும் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும் மாம்சமான தேவனால் மட்டுமே பூமிக்குக் கொண்டுவர முடியும். இதுவே தேவன் மனுஷரிடம் தோன்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும், இதில் மனுஷன் தேவனைப் பார்க்கிறான், தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்கிறான். மாம்சமாகாத தேவனால் இதை அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவருடைய கிரியை செய்யப்பட்டதனால், தேவனுடைய கிரியை ஏற்கனவே சிறந்த பலனை அடைந்துள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஜெயமாக இருக்கிறது. மாம்சத்தில் தேவனுடைய தனிப்பட்ட கிரியையானது ஏற்கனவே அவருடைய முழு நிர்வாகத்தின் தொண்ணூறு சதவீத கிரியைகளை முடித்துவிட்டது. இந்த மாம்சம் அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு சிறந்த துவக்கத்தையும், அவருடைய எல்லாக் கிரியைகளுக்கும் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது, மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும் அறிவித்துள்ளது. இந்தக் கிரியைகள் எல்லாவற்றிற்கும் கடைசி முழு நிறைவேறுதலையும் செய்துள்ளது. இனிமேல், தேவனுடைய நான்காவது கட்டக் கிரியையைச் செய்வதற்கு மற்றொரு மாம்சமான தேவன் இருக்க மாட்டார், மேலும் மூன்றாவது மாம்சமான தேவனுடைய எந்த அதிசயமான கிரியையும் ஒருபோதும் இருக்காது.

மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு காலத்திற்கும் அவருடைய கிரியையைக் குறிப்பிடுகிறது. இது மனுஷனுடைய கிரியையைப் போல ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடுவதில்லை. ஆகையால், அவருடைய கடைசி மனுஷ அவதரிப்பின் கிரியையின் முடிவு என்றால் அவருடைய கிரியை ஒரு முழுமையான முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல, ஏனென்றால் அவர் மாம்சத்தில் செய்யும் கிரியை அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்யும் காலத்தை மட்டுமே குறிப்பிடாமல், முழுக் காலத்தையும் குறிப்பிடுகிறது. அவர் மாம்சத்தில் இருக்கும் காலத்தில் அவர் முழுக் காலத்திலும் தமது கிரியையை முடிக்கிறார், அதன்பிறகு அது எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. மாம்சமான தேவன் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றிய பிறகு, அவர் தமது எதிர்காலக் கிரியைகளைத் தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் ஒப்படைப்பார். ஆகையால், முழுக் காலத்திலும் அவருடைய கிரியை தடையில்லாமல் செய்யப்படும். மனுஷ அவதரிப்பு காலம் முழுவதுக்குமான கிரியையானது முழு பிரபஞ்சத்திலும் பரவிய பிறகே முழுமையானதாகக் கருதப்படும். மாம்சமான தேவனுடைய கிரியை ஒரு புதிய யுகத்தைத் துவக்கி வைக்கிறது. அவருடைய கிரியையைத் தொடருபவர்கள் அவரால் பயன்படுத்தப்படுபவர்கள். மனுஷனால் செய்யப்படும் கிரியைகள் எல்லாம் மாம்சத்திலுள்ள தேவனுடைய ஊழியத்திற்குள் உள்ளன. இந்த எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. மாம்சமான தேவன் தமது கிரியையைச் செய்வதற்காக வரவில்லை என்றால், மனுஷனால் பழைய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாது, ஒரு புதிய காலத்தைத் தொடங்கவும் முடியாது. மனுஷனால் செய்யப்படும் கிரியை வெறுமனே மனுஷனால் செய்யக்கூடிய கடமையின் எல்லைக்குள்ளேயே உள்ளது. இது தேவனுடைய கிரியையைக் குறிப்பிடவில்லை. மாம்சமான தேவனால் மட்டுமே அவர் வந்து செய்ய வேண்டிய கிரியையைச் செய்து முடிக்க முடியும். அவரைத் தவிர, அவர் சார்பாக இந்தக் கிரியையை யாராலும் செய்ய முடியாது. நிச்சயமாகவே, நான் மாம்சமான தேவனைக் குறித்தே பேசுகிறேன். இந்த மாம்சமான தேவன் முதலில் மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போகாத கிரியையின் ஒரு படிநிலையைச் செய்கிறார், அதன் பிறகு அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார். மனுஷனை ஜெயங்கொள்வதுதான் கிரியையின் நோக்கமாகும். ஒருபுறம், தேவனுடைய மனுஷ அவதரிப்பு மனுஷனுடைய கருத்துக்களுடன் ஒத்துப்போவதில்லை, அது தவிர அவர் மனுஷனுடைய கருத்துக்களுக்கு இணங்காத அதிக கிரியைகளைச் செய்கிறார், ஆகையால் மனுஷன் அவரைப் பற்றி இன்னும் அதிகமான குறைகூறும் கருத்துக்களை உருவாக்கிக்கொள்கிறான். அவரைப் பற்றி எண்ணற்ற கருத்துக்களைக் கொண்ட ஜனங்கள் நடுவே அவர் ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்கிறார். அவர்கள் அவரை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் தமது ஊழியத்தை நிறைவேற்றியதும், எல்லா ஜனங்களும் அவருடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாவார்கள். இந்தக் கிரியையின் உண்மையானது சீனர்களுக்கு மத்தியில் பிரதிபலிப்பது மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதும் எவ்வாறு ஜெயங்கொள்ளப்படும் என்பதையும் இது குறிப்பிடுகிறது. இந்த ஜனங்கள் மீது அடையப்படும் பலன்கள் மனுக்குலம் முழுவதும் அடையப்படும் பலன்களுக்கு ஒரு முன்னோடியாகும். மேலும், எதிர்காலத்தில் அவர் செய்யும் கிரியையின் பலன்கள் இந்த ஜனங்கள் மீதான பலன்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கும். மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மிகுந்த ஆரவாரத்துடன் தொடர்புடையதுமில்லை, அது தெளிவற்ற நிலையில் வைக்கப்படுவதுமில்லை. இதுதான் நிஜமானது மற்றும் உண்மையானது. இது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது போன்ற வெளிப்படையான கிரியையாகும். இது யாரிடமிருந்தும் மறைக்கப்படவில்லை, இது யாரையும் ஏமாற்றவுமில்லை. நிஜமான மற்றும் உண்மையான காரியங்களையே ஜனங்கள் பார்க்கிறார்கள். உண்மையான சத்தியத்தையும் அறிவையுமே மனுஷன் பெறுகிறான். கிரியை முடிந்ததும், மனுஷன் அவரைப் பற்றிய புதிய அறிவைப் பெற்றிருப்பான். அவரை உண்மையிலேயே பின்தொடர்கிறவர்களுக்கு இனிமேல் அவரைப் பற்றிய எந்தக் கருத்துக்களும் இருக்காது. இது சீனர்கள் மீது அவர் செய்யும் கிரியையின் பலன் மட்டுமின்றி, மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொள்வதில் அவர் செய்த கிரியையின் பலனையும் இது குறிப்பிடுகிறது, ஏனென்றால் இந்த மாம்சம், இந்த மாம்சத்தின் கிரியை மற்றும் இந்த மாம்சத்தைக் குறித்த எல்லாவற்றைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் கிரியைக்கு நன்மைபயக்கக்கூடியது எதுவுமில்லை. இவை இன்று அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கின்றன, எதிர்காலத்திலும் அவருடைய கிரியைக்கு நன்மை பயக்கும். இந்த மாம்சம் மனுக்குலம் முழுவதையும் ஜெயங்கொண்டு, மனுக்குலம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொள்ளும். மனுக்குலம் முழுவதும் தேவனைப் பார்ப்பதற்கும், அவருக்குக் கீழ்ப்படிவதற்கும், அவரை அறிந்துகொள்வதற்கும் இதைக் காட்டிலும் சிறந்த கிரியை எதுவுமில்லை. மனுஷனால் செய்யப்படும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லையை மாத்திரமே குறிப்பிடுகிறது. தேவன் தமது கிரியையைச் செய்யும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பேசாமல், முழு மனுக்குலத்திடமும், அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்பவர்களிடமும் பேசுகிறார். அவர் அறிவிக்கும் முடிவு ஒரு குறிப்பிட்ட நபரின் முடிவு அல்ல, முழு மனுக்குலத்திற்கான முடிவுமாகும். அவர் யாருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிப்பதில்லை, அவர் யாரையும் பாதிப்புக்குள்ளாக்குவதில்லை, அவர் முழு மனுக்குலத்திற்காகவும் கிரியை செய்கிறார், பேசுகிறார். ஆகையால், இந்த மாம்சமான தேவன் ஏற்கனவே முழு மனுக்குலத்தையும் வகையின்படி வகைப்படுத்தியுள்ளார். ஏற்கனவே மனுக்குலம் முழுவதையும் நியாயந்தீர்த்திருக்கிறார். முழு மனுக்குலத்திற்கும் பொருத்தமான இடத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். தேவன் தமது கிரியையை சீனாவில் மாத்திரமே செய்கின்றார் என்ற போதிலும், உண்மையில் அவர் ஏற்கனவே முழு பிரபஞ்சத்தின் கிரியையையும் தீர்த்து வைத்துள்ளார். அவருடைய வெளிப்பாடுகளையும் ஏற்பாடுகளையும் படிப்படியாகச் செய்வதற்கு முன்பு, அவருடைய கிரியை மனுக்குலம் முழுவதும் பரவும்வரை அவரால் காத்திருக்க முடியாது. அது மிகவும் தாமதமாக இருக்காதா? இப்போது அவரால் எதிர்கால கிரியையை முன்கூட்டியே செய்துமுடிக்க முடிகிறது. கிரியை செய்கிறவர் மாம்சத்திலுள்ள தேவனாக இருப்பதால், அவர் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் வரம்பற்ற கிரியையைச் செய்கிறார், அதன் பிறகு மனுஷன் செய்ய வேண்டிய கடமையை மனுஷனைச் செய்ய வைப்பார். இதுவே அவருடைய கிரியையின் கொள்கையாகும். அவரால் மனுஷனுடன் ஒரு காலத்தில் மட்டுமே வாழ முடியும், முழு காலத்தின் கிரியையும் முடிவடையும் வரை அவரால் மனுஷனுடன் இருக்க முடியாது. அவர் தேவன் என்பதால், அவர் தமது எதிர்காலக் கிரியையை முன்கூட்டியே முன்னறிவிக்கிறார். அதன்பிறகு, அவர் தமது வார்த்தைகளால் மனுக்குலம் முழுவதையும் வகைப்படுத்துவார். மனுக்குலம் அவருடைய வார்த்தைகளின்படி அவருடைய படிப்படியான கிரியைக்குள் பிரவேசிக்கும். யாரும் தப்பிக்க மாட்டார்கள், எல்லோரும் இதன்படி நடக்க வேண்டும். ஆகையால், எதிர்காலத்தில் காலம் அவருடைய வார்த்தைகளால் வழிநடத்தப்படும், ஆவியானவரால் வழிநடத்தப்படாது.

மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாம்சத்தில் செய்யப்பட வேண்டும். இது தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்பட்டால், அது எந்தப் பலனையும் தராது. அது ஆவியானவரால் செய்யப்பட்டிருந்தாலும், அந்தக் கிரியைக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது, இறுதியில் அது ஆதாரமற்றதாக இருக்கும். சகல சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் கிரியைக்கு முக்கியத்துவம் உள்ளதா, அது எதைக் குறிப்பிடுகிறது, அது எதற்காகச் செய்யப்படுகிறது, மற்றும் தேவனுடைய கிரியையில் அதிகாரமும் ஞானமும் நிறைந்திருக்கின்றனவா மற்றும் அது மிக உயர்ந்த மதிப்பும் முக்கியத்துவமும் கொண்டதா என்பதை அறிய விரும்புகின்றன. அவர் செய்யும் கிரியையானது மனுக்குலம் முழுவதின் இரட்சிப்புக்காகவும், சாத்தானைத் தோற்கடிப்பதற்காகவும், எல்லாவற்றிற்கு மத்தியிலும் அவருக்கு சாட்சி கொடுப்பதற்காகவும் செய்யப்படுகிறது. ஆகையால், அவர் செய்யும் கிரியை மாபெரும் முக்கியத்துவமுள்ளதாக இருக்க வேண்டும். மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாக்கப்பட்டு இருந்திருக்கிறது மற்றும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சத்தில் கிரியை செய்வதற்கான மிகவும் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய இரட்சிப்பின் நோக்கம் மாம்சத்தாலான மனுஷனாவான், ஏனென்றால் தேவனுடைய கிரியைக்கு இடையூறு செய்ய சாத்தானும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். சாத்தானுடனான யுத்தமானது உண்மையில் மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருக்கிறது. அதே நேரத்தில், மனுஷனும் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கமாக இருக்கிறான். ஆகவே, மாம்சமான தேவனுடைய கிரியை அத்தியாவசியமானதாகும். சாத்தான் மனுஷனுடைய மாம்சத்தைக் கெடுத்தான், இதனால் மனுஷன் சாத்தானின் உருவகமாகி, தேவனால் தோற்கடிக்கப்பட வேண்டிய இலக்காக மாறிவிட்டான். ஆகையால், சாத்தானுடன் யுத்தம் செய்து மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை பூமியில் நடக்கிறது. சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கு தேவன் மனுஷனாக மாற வேண்டும். இதுதான் மிகவும் நடைமுறையான கிரியையாகும். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் உண்மையில் சாத்தானுடன் மாம்சத்தில் யுத்தம் செய்கிறார். அவர் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் ஆவிக்குரிய உலகில் தமது கிரியையைச் செய்து, ஆவிக்குரிய உலகில் தமது கிரியை முழுவதையும் பூமியில் உண்மையானதாக மாற்றுகிறார். அவருக்குக் கீழ்ப்படியாத மனுஷனே ஜெயங்கொள்ளப்படுகிறான், அவருக்கு விரோதமாக இருக்கிற சாத்தானின் உருவமே (உண்மையில், இதுவும் மனுஷன்தான்) தோற்கடிக்கப்படுகிறான், இறுதியில் மனுஷன்தான் இரட்சிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். ஆகையால், ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட மனுஷனாக தேவன் மாறுவது மேன்மேலும் அவசியமானதாக இருக்கிறது, இதனால் அவர் சாத்தானுடன் உண்மையான யுத்தம் செய்யவும் அவருக்குக் கீழ்ப்படியாத, அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மனுஷனை ஜெயங்கொள்ளவும், அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மற்றும் சாத்தானால் தீங்கிற்குள்ளான மனுஷனை இரட்சிக்கவும் முடியும். அவருடைய எதிரி மனுஷன்தான், அவர் ஜெயங்கொள்ளும் இலக்கும் மனுஷன்தான், அவருடைய இரட்சிப்பின் நோக்கமும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் தான். ஆகையால், அவர் மனுஷனாக வேண்டும், இதனால், அவருடைய கிரியை மிகவும் எளிதாகிறது. அவரால் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடிகிறது, மேலும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் முடிகிறது. இந்த மாம்சம் சாதாரணமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கின்றபோதிலும், அவர் பொதுவான மாம்சமல்ல: அவர் மனுஷனாக மட்டுமே உள்ள மாம்சம் அல்ல, ஆனால் மனுஷனாகவும் தெய்வீகமாகவும் உள்ள மாம்சம் ஆவார். இது அவருக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதுதான் தேவனுடைய அடையாளத்தின் குறியீடாகும். இத்தகைய மாம்சத்தால் மட்டுமே அவர் செய்ய விரும்பும் கிரியையைச் செய்யவும், மாம்சத்தில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றவும், மனுஷர் நடுவில் அவருடைய கிரியையை முழுமையாகச் செய்து முடிக்கவும் இயலும். இவ்வாறு இல்லையென்றால், மனுஷர் நடுவே அவருடைய கிரியை எப்போதும் வெறுமையானதாகவும் குறைபாடுள்ளதாகவும் இருக்கும். தேவனால் சாத்தானின் ஆவியுடன் யுத்தம் செய்து ஜெயங்கொள்ள முடியும் என்றாலும், சீர்கேடான மனுஷனுடைய பழைய சுபாவத்தை ஒருபோதும் போக்க முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஒருபோதும் அவருடைய ஆதிக்கத்திற்கு உண்மையாக உட்பட்டிருக்க முடியாது. அதாவது, அவரால் ஒருபோதும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியாது, மனுக்குலத்தை ஒருபோதும் ஆதாயப்படுத்த முடியாது. பூமியில் அவருடைய கிரியைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால், அவருடைய நிர்வாகம் ஒருபோதும் முடிவுக்கு வராது, மனுக்குலம் முழுவதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. தேவன் தமது சிருஷ்டிகள் எல்லாவற்றுடனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்றாலும், அத்தகைய நிர்வாகக் கிரியைக்கு ஒருபோதும் பலன் கிடைக்காது, இதன் விளைவாக தேவனுடைய மகிமை மறைந்துபோய்விடும். அவருடைய மாம்சத்திற்கு அதிகாரம் இல்லையென்றாலும், அவர் செய்யும் கிரியை அதன் பலனை அடைந்திருக்கும். இது அவருடைய கிரியையின் தவிர்க்க முடியாத திசையாகும். அவருடைய மாம்சம் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும், தேவன் தமது கிரியையைச் செய்ய வல்லவராக இருக்கும் வரை, அவர்தாமே தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம் எவ்வளவு இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருந்தாலும், அவர் செய்யவேண்டிய கிரியையை அவரால் செய்ய இயலும், ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனாக மட்டுமின்றி தேவனாகவும் இருக்கிறது. இந்த மாம்சம் மனுஷனால் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய உள்ளான சாராம்சம் எந்தவொரு மனுஷனையும் போல இல்லை. அவரால் மனுஷனை இரட்சிக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய அடையாளம் எந்த மனுஷனுடைய அடையாளத்திலும் இருந்து வேறுபட்டதாகும். இந்த மாம்சம் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அவர் மனுஷனாகவும், இன்னும் அதிகமாக, அவர் தேவனாகவும் இருக்கிறார், ஏனென்றால் சாதாரண மாம்ச மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், பூமியில் அவருடன் சேர்ந்து வாழும் சீர்கேடான மனுஷனை அவரால் இரட்சிக்கவும் முடியும். அவர் மனுஷனைப் போலவே இருந்தாலும், மாம்சமான தேவன் எந்தவொரு மதிப்புமிக்க நபரைக் காட்டிலும் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானவராவார், ஏனென்றால் தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக தேவனுக்குச் சாட்சி கொடுக்க முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஆதாயப்படுத்த முடியும். இதன் விளைவாக, இந்த மாம்சம் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கின்றபோதிலும், மனுக்குலத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும், மனுக்குலம் வாழ்ந்திருப்பதற்கான அவரது முக்கியத்துவமும் அவரை மிகவும் விலையேறப்பெற்றவராக்குகின்றன. மேலும், இந்த மாம்சத்தின் உண்மையான மதிப்பும் முக்கியத்துவமும் எந்த மனுஷனாலும் அளவிட முடியாததாகும். இந்த மாம்சத்தால் சாத்தானை நேரடியாக அழிக்க முடியாது என்கின்றபோதிலும், மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், சாத்தானைத் தோற்கடிக்கவும், சாத்தானைத் தமது ஆதிக்கத்திற்கு முழுமையாக அடிபணியச் செய்யவும் அவர் தமது கிரியையைப் பயன்படுத்த முடியும். தேவன் மனுஷனாக அவதரித்திருப்பதால்தான், அவரால் சாத்தானைத் தோற்கடித்து, மனுக்குலத்தை இரட்சிக்க முடிகிறது. அவர் சாத்தானை நேரடியாக அழிப்பதில்லை, மாறாக சாத்தானால் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாறுகிறார். ஆகையால், அவரால் தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடிகிறது, சீர்கேடான மனுஷனைச் சிறப்பாக இரட்சிக்க முடிகிறது. மாம்சமான தேவன் சாத்தானைத் தோற்கடித்தது தேவனுடைய ஆவியானவரால் சாத்தானை நேரடியாக அழிப்பதைக் காட்டிலும் அதிகமாக சாட்சி பகர்கிறது, அதிக வல்லமையானதாகவும் இருக்கிறது. மனுஷன் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள மாம்சத்திலுள்ள தேவனால் அவனுக்குச் சிறப்பாக உதவ முடியும், தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகர முடியும்.

முந்தைய: தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்

அடுத்த: தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக