அத்தியாயம் 117

புஸ்தகச்சுருளைத் திறப்பவனும் நீதான், ஏழு முத்திரைகளை உடைக்கிறவனும் நீதான், ஏனென்றால் எல்லா இரகசியங்களும் உன்னிடத்தில் இருந்து வருகின்றன மேலும் எல்லா ஆசீர்வாதங்களும் உன்னால் தான் வெளிப்படுத்தப்படுகின்றன. நித்தியத்துக்கும் நான் உன்னை நேசிக்கக் கட்டுப்பட்டுள்ளேன், எல்லா ஜனங்களையும் உன்னை ஆராதிக்கச் செய்வதற்கு நான் கட்டுப்பட்டுள்ளேன், ஏனெனில் நீ என்னுடைய ஆள்தத்துவமாக இருக்கிறாய்; என் சரீரத்தின் ஓர் இன்றியமையாத பாகமான என் வளமான மற்றும் முழுமையான வெளிப்பாட்டின் ஒரு பாகமாக நீ இருக்கிறாய். ஆகவே, நான் சிறப்பான சாட்சி அளிக்க வேண்டும். என் ஆள்தத்துவத்துக்குள் இருக்கும் ஒருவரைத் தவிர்த்து வேறு யார் என் இருதயத்துக்கு நெருக்கமாக இருக்க முடியும்? உனக்காகச் சாட்சி கொடுப்பது நீ அல்ல, ஆனால் உனக்காகச் சாட்சி கொடுப்பது என்னுடைய ஆவியே, மேலும் உன்னை எதிர்க்கத் துணியும் யாராக இருந்தாலும் நான் நிச்சயமாக மன்னிக்க மாட்டேன், ஏனெனில் இது என்னுடைய ஆட்சிமுறை ஆணைகள் சம்பந்தப்பட்டது. நீ சொல்வதை எல்லாம் நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன், நீ நினைப்பதை எல்லாம் நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளுவேன். யாராவது உன்னிடம் உண்மையாய் இல்லை என்றால், அவர்கள் வெளிப்படையாக என்னை எதிர்க்கிறார்கள், நான் அவர்களை நிச்சயமாக மன்னிக்க மாட்டேன். என்னுடைய குமாரனை எதிர்க்கும் எல்லோரையும் நான் கடுமையாகச் சிட்சிப்பேன், உன்னோடு இணக்கமாக இருப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன். இதுவே நான் உனக்கு வழங்கும் அதிகாரம். கடந்த காலத்தில் பேசப்பட்டதில், அதாவது முதற்பேறான குமாரர்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றில் நீதான் முன்னுதாரணமாக இருக்கிறாய். நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே இருக்கும்படி நான் முதற்பேறான குமாரர்களைக் கோருவேன் என்று இதைக் கூறலாம். இது மனுஷர்கள் செய்யக் கூடிய ஒன்றல்ல, ஆனால் மாறாக இது என்னுடைய ஆவி அவராகவே செய்வதாகும். உனக்குச் சாட்சி அளிப்பது மனுஷர்களே என்று யாராவது நம்பினால், அந்த ஜந்து சந்தேகம் இல்லாமல் என் எதிரியான சாத்தானைப் போன்றவன் தான்! ஆகவே, சாட்சி முடிவாக இருக்கிறது, நித்தியமாக மாற்ற முடியாதது, மேலும் அது பரிசுத்த ஆவியானவரால் உறுதிசெய்யப்படுவது! ஒருவரும் அதை இலகுவாக மாற்ற முடியாது, மேலும் அப்படி யார் செய்தாலும், நான் மன்னிக்க மாட்டேன்! மனுஷர்கள் எனக்குச் சாட்சி அளிக்க முடியாது என்பதனால், என் ஆள்தத்துவத்திற்கு நானே சாட்சி அளிக்கிறேன், மேலும் ஜனங்கள் என் கிரியையில் தலையிடக் கூடாது! இவை கடுமையான நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள், ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்!

நான் கூறுவதில் ஒவ்வொரு விவரத்தையும் நீங்கள் கருத்தில் கொண்டு குறிப்பெடுக்க வேண்டும். என்னுடைய வார்த்தைகளைச் சாதாரணமாகக் கருத வேண்டாம், ஆனால் கவனமாகக் கேளுங்கள். முதற்பேறான குமாரர்கள் என் ஆள்தத்துவம் என்றும் என் ராஜ்யத்தின் இன்றியமையாத பகுதி என்றும் நான் ஏன் கூறுகிறேன்? எல்லா காலங்களுக்கும் முன்னால், நாங்கள் ஒன்றாக ஜீவித்தோம், ஒருபோதும் பிரிக்கப்படவில்லை. சாத்தானின் இடையூறுகளால், நான் முதல் தடவை மனுவுருவெடுத்த பின்னர் சீயோனுக்குத் திரும்பினேன். இதில் இருந்து தொடர்ந்து, நாங்கள் எல்லோரும் இந்த உலகத்துக்குள் வந்தோம், மேலும் கடைசி நாட்களில் நான் ஜெயங்கொண்ட பின்னர்—அதாவது, சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மாம்சத்தில் இருந்து உங்களை நான் மீட்ட பின்னர்—நான் உங்களைச் சீயோனுக்கு மீண்டும் கொண்டு வருவேன், அதனால் என் ஆள்தத்துவம் ஒருபோதும் பிரிக்க முடியாதபடி மறுபடியும் ஒன்று சேருவார். அதற்குப் பிறகு நான் மனுவுருவெடுக்க மாட்டேன், மேலும் நீங்கள் நிச்சயமாக என் சரீரத்தில் இருந்து வெளியே வரமாட்டீர்கள். அதாவது, அதற்குப் பின்னர் நான் உலகத்தை மீண்டும் சிருஷ்டிக்க மாட்டேன், ஆனால் சீயோனில் என்றென்றைக்கும் என் முதற்பேறான குமாரர்களிடம் இருந்து பிரியாமல் இருப்பேன், ஏனெனில் எல்லாம் இப்போது முற்றிலுமாக முடிக்கப்பட்டு விட்டது, மேலும் நான் முழு பழைய உலகத்தையும் முடிக்கப் போகிறேன். என் ஆள்தத்துவம் சீயோனில் இருப்பதால், சீயோனில் தான் புதிய வானம் மற்றும் புதிய பூமியின் ஜீவிதம் இருக்கிறது. இதைத் தவிர்த்து வேறு எந்த புதிய வானமும் புதிய பூமியும் இருக்காது. நானே புதிய வானம், மற்றும் நான் தான் புதிய பூமி, ஏனென்றால் என் ஆள்தத்துவம் முழு சீயோனையும் நிரப்புகிறார். என் முதற்பேறான குமாரர்கள் தான் புதிய வானம், என் முதற்பேறான குமாரர்கள் தான் புதிய பூமி என்றும் சொல்லலாம். என் முதற்பேறான குமாரர்களும் நானும் பிரிக்க முடியாத ஒரே சரீரமாக இருக்கிறோம். என்னைப் பற்றி பேசும் போது அதில் முதற்பேறான குமாரர்களும் தாமாகவே அடங்குகிறார்கள், மேலும் எங்களைப் பிரிக்க முயலும் யாரையும் நான் மன்னிக்க மாட்டேன். எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் என் சிங்காசனத்துக்கு முன்பாக நான் திரும்பி வரச் செய்யும்போது, எல்லாத் சாத்தான்களும் முழுவதுமாக அவமானப்படுத்தப்படுவார்கள் மற்றும் எல்லா அசுத்தமான பேய்களும் என்னை விட்டுப் பின்வாங்கிப் போகும். பின்னர் எல்லா ஜனங்களின் மத்தியிலும் நீதி நிலவுவது நிச்சயம் (என்னுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்கள் மத்தியில் என்று அர்த்தம்), மேலும் எல்லாத் தேசங்களின் மத்தியிலும் சாத்தானின் இடையூறுகள் இருக்காது என்பது நிச்சயம், ஏனெனில் எல்லாத் தேசங்களையும் ஜனங்களையும் நானே அரசாளுவேன், முழு பிரபஞ்ச உலகத்தின் மீதும் அதிகாரம் செலுத்துவேன், மற்றும் எல்லாச் சாத்தான்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டு, மேலும் என் ஆட்சிமுறை ஆணைகளின் தண்டனைகளைப் பெறும்.

எல்லா ஜனங்களின் மத்தியிலும் நான் என்னுடைய கிரியையைத் தொடர்கிறேன், ஆனால் அவர்களுக்கு என் ஆவியின் பிரகாசிப்பித்தல் மட்டுமே உள்ளது, மேலும் அவர்கள் மத்தியில் யாரும் என்னுடைய இரகசியங்களை வெளிப்படுத்தத் தகுதியுடைவர்களாக இல்லை, என்னை வெளிப்படுத்தும் தகுதி யாருக்கும் இல்லை. என்னில் இருந்து வருபவர் மட்டுமே என் கிரியையை செய்யத் தகுதியுடையவராக இருக்கிறார்—மீதி இருப்பவர்களைப் பொறுத்த வரையில், அவர்களை நான் தற்காலிகமாகவே பயன்படுத்துகிறேன். ஒரு நபரின் மீது தன்னிச்சையாக என் ஆவி இறங்குவதில்லை, ஏனெனில் என்னில் இருக்கும் எல்லாம் விலையேறப் பெற்றவை. ஒருவர் மேல் என் ஆவி இறங்குவது, மேலும் ஒருவர் மேல் என் ஆவி கிரியை செய்வது ஆகிய இரண்டும் முற்றிலுமாக வெவ்வேறு விஷயங்கள். எனக்கு வெளியில் இருப்பவர்கள் மேல் என் ஆவி கிரியை செய்கிறது, ஆனால் என்னில் இருந்து வருபவர் மேலேயே என் ஆவி இறங்குகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள். என்னிடம் இருந்து வருகிறவர் பரிசுத்தமானவர், ஆனால் எனக்குப் புறம்பே இருப்பவர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் பரிசுத்தமானவர்கள் அல்லர். என்னுடைய ஆவி யார் மேலேயாவது எந்த ஒரு சிறு காரணத்துக்காகவும் இறங்காது. ஜனங்கள் கவலைப்படத் தேவை இல்லை. நான் தவறு செய்வதில்லை. நான் செய்வதைக் குறித்து எனக்கு நூறு சதவீதம் உறுதி உண்டு. நான் அவருக்குச் சாட்சி அளித்திருப்பதனால், நான் அவரைப் பாதுகாக்கவும் செய்வேன்; அந்த ஒருவர் நிச்சயமாக என்னிடத்தில் இருந்து வருகிறார் மேலும் என் ஆள்தத்துவத்துக்கு இன்றியமையாதவர். ஆகவே, ஜனங்கள் தங்கள் சொந்த எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சாத்தான் கொடுக்கும் எந்த ஆலோசனைகளையும் விட்டுவிட்டு, என்னுடைய ஒவ்வொரு பேச்சும் உண்மை என்று நம்பி, தங்கள் மனதில் சந்தேகங்களுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். இது மனுக்குலத்துக்கு என் கட்டளையாகும், மனுக்குலத்துக்கு என் புத்திமதியாகும். ஒவ்வொருவரும் இந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், ஒவ்வொருவரும் அவற்றிற்கு உண்மையாகக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் ஒவ்வொருவரும் நான் சொல்வதைத் தரநிலையாகக் கொள்ள வேண்டும்.

எல்லாத் தேசங்கள் மற்றும் ஜனங்கள் மத்தியில் நான் என் கிரியையைத் தொடங்குவது மட்டுமல்லாமல், பிரபஞ்ச உலகத்தில் எங்கும் என் கிரியையைத் தொடங்க இருக்கிறேன், இது இன்னும் அதிகமாக நான் சீயோனுக்குத் திரும்பும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைக் காட்டுகிறது (ஏனெனில், எல்லா ஜனங்களுக்கு மத்தியிலும் பிரபஞ்ச உலகம் முழுவதும் என் கிரியையைத் தொடங்கும் முன்னர் நான் சீயோனுக்குத் திரும்புவது அவசியமாக இருக்கிறது). என்னுடைய கிரியையின் படிநிலையையும் நான் கிரியை செய்யும் விதத்தையும் புரிந்து கொள்ளக் கூடியவன் யாராவது இருக்கிறார்களா? ஆவியில் அந்நியர்களைச் சந்திப்பேன் என்று கூறுவதற்குக் காரணம் என்னவென்றால் இதை அடிப்படையில் மாம்சத்தில் செய்ய முடியாது, மேலும் நான் இரண்டாவது முறையாக அபாயங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை. அந்நியர்களிடம் ஆவியில் ஐக்கியப்படுவதற்குக் காரணங்கள் இவையே. இது உண்மையான ஆவிக்குரிய உலகில் இருக்க வேண்டும், மாம்சத்தில் வாழும் அவர்களால் கற்பனை செய்யப்படுவது போல[அ] ஓர் தெளிவற்ற ஆவிக்குரிய உலகத்தில் அல்ல. அந்தச் சமயத்தில் நான் கூறுவது நான் சொல்லும் விதத்தில் மட்டுமே வித்தியாசமானதாக இருக்கும், ஏனெனில் நான் வேறொரு காலத்திற்குள் பேசிக் கொண்டிருப்பேன். ஆகவே, நான் பேசும் விதத்தைக் கவனிக்குமாறு மனுக்குலத்துக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறேன், மேலும் ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாத இரகசியங்கள் நான் சொல்லுவதில் இருக்கும் என்றும் மனுக்குலத்துக்கு நான் நினைவூட்டுகிறேன். ஆனால் நான் ஏன் இந்த விஷயங்களைச் சொல்லுகிறேன் என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது, மேலும் இன்று இதை நான் உங்களுக்குச் சொல்வதால் தான் உங்களால் சற்றே புரிந்து கொள்ள முடிகிறது, ஆனாலும் இன்னும் முழுமையாக இல்லை. (இன்னும் நான் சிலரை இதன் மூலம் புறம்பாக்க விரும்புகிறேன், அதனால் இப்போது நான் எதையும் கூற மாட்டேன்.) என் கிரியையில் இது தான் அடுத்த கட்டத்தின் முறையாகும். ஞானமுள்ள தேவன் நானே என்று ஒவ்வொருவரும் கவனித்துத் தெளிவாகப் பார்க்க வேண்டும்.

அடிக்குறிப்பு:

அ. மூல உரையில் “அவர்களால் கற்பனை செய்யப்படுவது போல” என்ற சொற்றொடர் இல்லை.

முந்தைய: அத்தியாயம் 116

அடுத்த: அத்தியாயம் 118

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக