அத்தியாயம் 30

தேவனின் வார்த்தைகளில் சிலருக்குக் கொஞ்சம் உட்பார்வை இருக்கலாம், ஆனால் அவர்களில் யாரும் தங்கள் உணர்வுகளை நம்புவதில்லை; அவநம்பிக்கையில் விழுந்து விடுவோமோ என்று அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். எனவே, அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிக்கும் சோகத்திற்கும் இடையில் மாறி மாறி இருக்கிறார்கள். எல்லா ஜனங்களின் வாழ்க்கையும் சோகத்தால் நிரம்பியுள்ளது என்று சொல்வது நியாயமானது; இதை இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்ல, அனைத்து ஜனங்களின் அன்றாட வாழ்விலும் புடமிடுதல் இருக்கிறது, ஆயினும் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆவியில் யாரும் எந்த விடுதலையும் அடையவில்லை என்று என்னால் சொல்ல முடியும், மேலும் அது மூன்று பெரிய மலைகள் அவர்களின் தலைகளை அழுத்துவது போல் உள்ளது. அவர்களில் ஒருவர்கூட வாழ்க்கையில் நாள் முழுவதும் சந்தோஷத்துடனும் களிப்புடனும் இல்லை—அவர்கள் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலும் கூட, அவர்கள் வெறுமனே தோற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களின் இருதயங்களில், ஜனங்கள் எப்போதுமே ஏதோ முடிக்கப்படாத ஒரு உணர்வுடன் இருக்கிறார்கள். இதனால், அவர்கள் இருதயத்தில் உறுதியாக இல்லை; இந்த வழியில் வாழ்வதில், விஷயங்கள் வெறுமையாகவும் நியாயமற்றதாகவும் தெரிகின்றன, மேலும் தேவன் மீதான விசுவாசம் என்று வரும்போது, அவர்கள் பரபரப்பாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களுக்கு நேரம் குறைவாக இருக்கிறது, இல்லையெனில் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ண அவர்களுக்கு நேரம் இல்லை, அல்லது அவர்களுக்கு தேவனின் வார்த்தைகளை முறையாகப் புசித்துப் பானம்பண்ணத் தெரியாது. அவர்களில் ஒருவர் கூட இருதயத்தில் அமைதியாகவும், தெளிவாகவும், உறுதியாகவும் இல்லை. அவர்கள் எப்போதும் மேகமூட்டமான வானத்தின் கீழ் வாழ்ந்திருந்தது போல், அவர்கள் ஆக்ஸிஜன் இல்லாத இடத்தில் வாழ்வது போல் இருக்கிறது, இது அவர்களின் வாழ்க்கையில் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளது. தேவன் எப்போதும் ஜனங்களின் பலவீனங்களைப் பற்றி நேராகப் பேசுகிறார், அவர் எப்போதும் அவர்களின் முக்கியமான பலவீனத்தில் அவர்களைத் தாக்குகிறார்—முழுமையாய் அவர் பேசிய தொனியை நீங்கள் தெளிவாகப் பார்க்கவில்லையா? தேவன் ஒருபோதும் மனந்திரும்பும் வாய்ப்பை ஜனங்களுக்கு வழங்கவில்லை, மேலும் அவர் அனைத்து ஜனங்களையும் ஆக்ஸிஜன் இல்லாமல் “நிலவில்” வாழ வைக்கிறார். ஆரம்பத்திலிருந்து இன்று வரை, வெளிப்படையாய் தேவனின் வார்த்தைகள் மனுஷனின் இயல்பை வெளிப்படுத்தின, இருப்பினும் இந்த வார்த்தைகளின் சாராம்சத்தை யாரும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. மனுஷனின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதன் மூலம், ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்கிறார்கள், இதனால் தேவனை அறிகிறார்கள் என்பதுபோல தோன்றுகிறது, இருப்பினும் சாராம்சத்தில் இது பாதை அல்ல. தேவனின் வார்த்தைகளின் தொனி மற்றும் அதிக ஆழம் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. அவர்களின் உணர்வுகளில், இது ஜனங்களை தேவன் அடைய முடியாதவர் மற்றும் அணுக முடியாதவர் என்று தன்னுணர்வற்ற நிலையில் நம்ப வைக்கிறது; தேவன் எல்லாவற்றையும் திறந்த நிலைக்குக் கொண்டுவருகிறார், மேலும் தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவில் அது வழக்கமாக எப்படி இருந்ததோ அந்த நிலைக்கு யாராலும் திரும்பக் கொண்டு வர முடியவில்லை என்று தோன்றுகிறது. தேவனின் அனைத்துப் பேச்சின் நோக்கமும் அனைத்து ஜனங்களையும் “கவிழ்க்க” வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், அதன் மூலம் அவருடைய கிரியையை நிறைவேற்றுவதும்தான் என்று பார்ப்பது கடினம் அல்ல. இவையே தேவனின் கிரியையில் உள்ள படிகள். இருப்பினும், ஜனங்கள் தங்கள் மனதில் நம்புவது இதை அல்ல. தேவனின் கிரியை அதன் உச்சத்தை நெருங்குகிறது, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வெல்லக் கூடிய வகையில், அதாவது சபைகளைச் செழிக்கச் செய்து, மனுஷ ரூபமான தேவனைப் பற்றி யாருக்கும் கருத்து இல்லாமல் அல்லது அனைத்து ஜனங்களும் தேவனை அறிந்துள்ள வகையில் அதன் மிகத் தெளிவான விளைவை அது நெருங்குகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆயினும் தேவன் கூறுவதை நாம் வாசிப்போம்: “தேவன் தேவனாக இருக்கிறார், அவரிடம் எளிதில் ஈடுபட முடியாது, அதே நேரத்தில் மனுஷன் மனுஷனாக இருக்கிறான், எளிதில் ஒழுக்கங்கெட்டுப் போகக் கூடாது என்று ஜனங்களின் மனதில் உள்ளது. … இதன் விளைவாக, அவர்கள் எப்போதும் எனக்கு முன் தாழ்மையுடனும் பொறுமையுடனும் இருக்கிறார்கள்; அவர்கள் என்னுடன் இணக்கமாக இருக்க இயலாது, ஏனென்றால் அவர்களுக்கு நிறைய கருத்துக்கள் உள்ளன.” இதிலிருந்து, தேவன் என்ன சொன்னாலும் அல்லது மனுஷன் என்ன செய்தாலும், ஜனங்கள் தேவனை அறிய முற்றிலும் இயலாது இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்; ஏனென்றால், அவர்களின் சாராம்சம் வகித்த பாத்திரத்தின் காரணமாக, அது என்னவாக இருந்தாலும், முடிவில் அவர்கள், தேவனை அறிய இயலாமல் இருக்கிறார்கள். இவ்வாறு, ஜனங்கள் தங்களை நரகத்தின் குமாரர்களாகப் பார்க்கும்போது தேவனின் கிரியை முடிவடையும். தேவன் தனது உக்கிரக் கோபத்தை ஜனங்கள் மீது கட்டவிழ்த்துவிடவோ அல்லது நேரடியாகக் கண்டிக்கவோ அல்லது இறுதியில் அவரது முழு நிர்வாகத்தையும் முடிவுக்குக் கொண்டு வர மரண தண்டனை விதிக்கவோ தேவையில்லை. அவர் தனது சொந்த வேகத்தில், அவருடைய கிரியையை முடிப்பது தற்செயலானது போல, அவரது ஓய்வு நேரத்தில் சிறிதளவு முயற்சியும் இல்லாமல் சாதிக்கப்பட்டது போலச் சிறிய பேச்சில் ஈடுபடுகிறார். வெளியிலிருந்து பார்த்தால், தேவனின் கிரியையில் சில அவசரம் இருப்பதாகத் தோன்றுகிறது—ஆனாலும் தேவன் எதுவும் செய்யவில்லை, பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. கடந்த காலங்களைப் போலவே, சபைகளுக்கு மத்தியில் செய்யப்படும் கிரியை பெரிய அளவில் இல்லை: தேவன் ஜனங்களைச் சேர்ப்பதில்லை, அல்லது அவர்களை வெளியேற்றுவதில்லை அல்லது வெறுங்கையோடு விடுவதில்லை—இத்தகைய காரியம் மிகவும் அற்பமானது. இத்தகைய காரியத்தைச் செய்யத் தேவனுக்கு மனமில்லை போல் தெரிகிறது. அவர் தான் அவசியம் சொல்ல வேண்டியவற்றை வெறும் கொஞ்சமே சொல்கிறார், அதன் பிறகு அவர் திரும்பிச் சென்று தடயங்கள் இல்லாமல் மறைந்துவிடுகிறார்—இது இயல்பாகவே, அவரது உரைகளின் நிறைவடையும் காட்சி. இந்தத் தருணம் வரும்போது, அனைத்து ஜனங்களும் தங்கள் நித்திரையிருந்து விழித்துக்கொள்வார்கள். மனுஷன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சோம்பலான நித்திரையில் இருந்துள்ளான், அவன் இக்காலம் முழுவதும் ஓர் ஆழ்ந்த நித்திரையில் இருந்து வருகிறான். பல ஆண்டுகளாக, ஜனங்கள் தங்கள் கனவுகளில் அங்கும் இங்கும் விரைந்து அலைகின்றனர், மேலும் தங்கள் இருதயத்தின் உள்ளே இருக்கும் அநீதியைப் பற்றிப் பேச இயலாது அவர்கள் தங்கள் கனவுகளில் கூடக் கதறுகிறார்கள். இவ்வாறு, அவர்கள் “தங்கள் இருதயங்களில் சிறிது சஞ்சலத்தை உணர்கிறார்கள்” ஆனால் அவர்கள் எழுந்தவுடன், அவர்கள் உண்மைகளைக் கண்டுபிடித்து, கூச்சலிடுவார்கள்: “எனவே இதுதான் நடந்து கொண்டிருக்கிறது!” இவ்வாறு அது கூறப்படுகிறது, “இன்று, பெரும்பாலான ஜனங்கள் இன்னும் ஆழ்ந்த நித்திரையில் உள்ளனர். ராஜ்ய கீதம் ஒலிக்கும் போது மட்டுமே அவர்கள் நித்திரையிலுள்ள கண்களைத் திறந்து, தங்கள் இருதயங்களில் சிறிது சஞ்சலத்தை உணர்கிறார்கள்.”

யாருடைய ஆவியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை, யாருடைய ஆவியும் கவலையற்றதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததில்லை. தேவனின் கிரியை முழுமையாக முடிந்ததும், ஜனங்களின் ஆவிகள் விடுவிக்கப்படும், ஏனென்றால் ஒவ்வொருவரும் தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுவார்கள், இதனால் அவர்கள் அனைவரும் தங்கள் இருதயங்களில் உறுதியாக இருப்பார்கள். இது, ஜனங்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் சில பயணங்களை மேற்கொள்வது போலவும், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் இருதயங்கள் உறுதியாக இருப்பதைப் போலவும் இருக்கும். வீட்டிற்கு வந்தவுடன், உலகம் இனிமேல் வெறுமையாகவும் நியாயமற்றதாகவும் இருப்பதாக ஜனங்கள் உணர மாட்டார்கள், ஆனால் தங்கள் வீடுகளில் நிம்மதியாக வாழ்வார்கள். எல்லா மனுஷர்களிடையேயும் இதுபோன்ற சூழ்நிலைகள் இருக்கும். இவ்வாறு, தேவன் கூறுகிறார் “ஜனங்கள் ஒருபோதும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை ஒருபோதும் விடுவித்துக்கொள்ள முடியவில்லை.” மாம்சத்தில் இருக்கும் போது இந்த நிலையிலிருந்து யாரும் தங்களை விடுவித்துக்கொள்ள முடியாது. இப்போதைக்கு, மனுஷனின் பல்வேறு உண்மையான நிலைகளைப் பற்றி தேவன் என்ன சொல்கிறார் என்பதை ஒதுக்கி வைத்துவிட்டு, தேவன் மனுஷனுக்கு இன்னும் வெளிப்படுத்தாத மர்மங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். “எண்ணற்ற முறை என் உடல் முட்களால் மூடப்பட்டு அவர்களுக்கு வெறுக்கத்தக்கதாக இருப்பதுபோல், ஜனங்கள் என்னைக் கேலிசெய்யும் கண்களால் பார்த்தார்கள், இப்படியாக ஜனங்கள் என்னை வெறுக்கிறார்கள், நான் மதிப்பில்லாதவன் என்று நம்புகிறார்கள்.” நேர் மாறாக, சாராம்சத்தில், மனுஷனின் உண்மையான நிறங்கள் தேவனின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படுகின்றன: மனுஷன் இறகுகளால் மூடப்பட்டிருக்கிறான், அவனைப் பற்றிச் சந்தோஷப்பட எதுவும் இல்லை, இதனால் மனுஷனின் மீதான தேவனின் வெறுப்பு அதிகரிக்கிறது, ஏனென்றால் மனுஷன் அதைக் குறித்து போற்றத்தக்கது எதுவுமில்லாத முட்களால் மூடப்பட்ட முள்ளம்பன்றிதானே தவிர வேறொன்றுமில்லை. மேலோட்டமாக, இந்த வார்த்தைகள் தேவனைப் பற்றிய மனுஷனின் கருத்துக்களை விவரிப்பதாகத் தோன்றுகிறது—ஆனால் யதார்த்தத்தில், தேவன் அவனது சாயலின் அடிப்படையில் மனுஷனின் படத்தை வரைகிறார். இந்த வார்த்தைகள் மனுஷனைப் பற்றிய தேவனின் உருவரைவு ஆகும், மேலும் இது மனுஷனின் உருவத்தின் மீது தேவன் ஒரு நிலை நிறுத்தியை தெளித்தது போல் உள்ளது; இதனால், மனுஷனின் உருவம் பிரபஞ்சத்தில் உயர்ந்து நிற்கிறது, மேலும் ஜனங்களை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் பேசத் தொடங்கியதிலிருந்து, தேவன் மனுஷனுடன் ஒரு பெரிய போருக்காக தனது படைகளை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பல்கலைக்கழக இயற்கணிதப் பேராசிரியரைப் போல மனுஷனுக்கான உண்மைகளை விரித்துரைக்கிறார், மேலும் அவர் பட்டியலிடும் உண்மைகள் மூலம் என்ன நிரூபிக்கப்படுகிறது என்றால்—சான்றுகள் மற்றும் எதிர் சான்றுகள்—அனைத்து ஜனங்களையும் முழுமையாக நம்ப வைக்கிறது. தேவனின் எல்லா வார்த்தைகளின் குறிக்கோள் இதுதான், இதன் காரணமாகவே தேவன் இந்த மர்மமான வார்த்தைகளை மனுஷனிடம் வீசுகிறார்: “மொத்தத்தில், நான் மனுஷனின் இதயத்தில் முற்றிலும் மதிப்பு இல்லாமல் இருக்கிறேன், நான் கட்டாயத் தேவையில்லாத ஒரு வீட்டுப் பொருள்.” இந்த வார்த்தைகளைப் படித்த பிறகு, ஜனங்கள் தங்கள் இருதயத்தில் ஒரு ஜெபத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது, மேலும் அவர்கள் தேவனிடமான தங்கள் கடன்பட்ட நிலையை அறிந்து கொள்கிறார்கள், இது அவர்கள் தங்களைத் தாங்களே கண்டிக்க வைக்கிறது, மனுஷன் மரித்தே ஆகவேண்டும், மேலும் கொஞ்சம்கூட மதிப்பில்லாதவன் என்று அவர்களை நம்ப வைக்கிறது. தேவன் கூறுகிறார், “இதன் காரணமாகவே நான் இன்று இருக்கும் சூழ்நிலையில் என்னைக் காண்கிறேன்,” இது, இன்றைய உண்மையான சூழ்நிலைகளுடன் இணைத்துப் பார்க்கப்படும்போது, ஜனங்கள் தங்களைத் தாங்களே கண்டிக்கச் செய்கிறது. இது உண்மையில்லையா? உன்னை நீயே அறிந்துகொள்ளச் செய்திருந்தால், “நான் உண்மையிலேயே மரிக்க வேண்டும்!” போன்ற வார்த்தைகள் உன் வாயிலிருந்து வருமா? மனுஷனின் உண்மையான சூழ்நிலைகள் இதுவே, இது அதிகம் சிந்திக்கத் தகுதியற்றது—இது வெறுமனே ஒரு பொருந்தும் உதாரணம்தான்.

ஓர் அர்த்தத்தில், தேவன் மனுஷனின் மன்னிப்பையும் சகிப்புத்தன்மையையும் கேட்டுக் கெஞ்சும்போது, தேவன் தங்களைக் கேலி செய்வதாக ஜனங்கள் அதைப் பார்க்கிறார்கள், மற்றொரு அர்த்தத்தில், அவர்கள் தங்கள் சொந்த கலகத்தன்மையையும் பார்க்கிறார்கள்—தேவன் மனுஷனுக்காக அதிகபட்சமாக வலிந்து தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று வெறுமனே காத்திருக்கிறார்கள். தவிர, ஜனங்களின் கருத்துக்களைப் பற்றிப் பேசும்போது, தேவன் மனுஷனின் வாழ்க்கைக்கான தத்துவம் அல்லது மனுஷனின் மொழியில் தனக்குத் திறமை இல்லை என்று கூறுகிறார். இவ்வாறு, இது ஒரு விதத்தில் ஜனங்கள் இந்த வார்த்தைகளை நடைமுறைத் தேவனுடன் ஒப்பிட வைக்கிறது, மற்றொரு விதத்தில், தேவனின் சித்தத்தை அவருடைய வார்த்தைகளில் காண்கிறார்கள்—தேவன் அவர்களைக் கேலி செய்கிறார், ஏனென்றால் தேவன் மனுஷனின் உண்மையான முகத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், அவர் உண்மையில் தேவனின் உண்மையான சூழ்நிலைகளைப் பற்றி ஜனங்களுக்குச் சொல்லவில்லை. தேவனின் வார்த்தைகளின் உள்ளார்ந்த அர்த்தமானது கிண்டல், பரிகாசம், கேலி மற்றும் மனுஷன் மீதான வெறுப்பினால் நிறைந்துள்ளது. அது, அவன் செய்யும் எல்லாவற்றிலும், மனுஷன் சட்டத்தைப் புரட்டி லஞ்சம் வாங்குவதைப் போல் இருக்கிறது; ஜனங்கள் பரத்தையர், தேவன் பேசுவதற்கு வாயைத் திறக்கும்போது, யாரையும் எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் வெட்கித் தலைகுனியும்படி அவர்களைப் பற்றிய உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்படும் என்று அவர்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள், அதீதமாகப் பயப்படுகிறார்கள். ஆனால் உண்மைகள் உண்மைகள்தான். மனுஷனின் “மனந்திரும்புதலின்” காரணமாக தேவன் தனது பேச்சுக்களை நிறுத்தவில்லை; சொல்ல முடியாத அளவுக்கு ஜனங்கள் அதிகமாக வெட்கத்துக்கும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சங்கடத்துக்கும் ஆளாகும்போது, தேவன் தனது எரியும் பார்வையை அதிகமாக அவர்கள் முகத்தின்மீது வைக்கிறார். அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் மனுஷனின் அசிங்கமான காரியங்கள் அனைத்தையும் விவாதிப்பதற்கு வைக்கின்றன—இது நியாயமாக மற்றும் பாரபட்சமாக இருப்பது, இது சிங்டியன்[அ] என்று அழைக்கப்படுகிறது, இது ஜனங்களின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நியாயத்தீர்ப்பாகும். இவ்வாறு, ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் படிக்கும்போது, அவர்கள் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களின் இரத்த அழுத்தம் உயர்கிறது, இது, அவர்கள் இருதய இரத்தநாள நோயால் பாதிக்கப்பட்டது போல் உள்ளது, அவர்களின் மூதாதையர்களைச் சந்திக்க ஒரு மூளை இரத்தக் கசிவு அவர்களை மீண்டும் மேற்கு சொர்க்கத்திற்கு அனுப்பப்போவது போல உள்ளது—இதுதான் அவர்கள் தேவனின் வார்த்தைகளைப் படிக்கும்போது நிகழும் எதிர்வினையாகும். பல வருட கடின உழைப்பால் மனுஷன் இயலாதவனாக்கப்பட்டிருக்கிறான், அவன் உள்ளேயும் வெளியேயும் சுகவீனமாய் இருக்கிறான், அவனுக்குரிய அனைத்தும் நோய்வாய்ப்பட்டுள்ளது, அவனது இருதயத்திலிருந்து இரத்த நாளங்கள், பெருங்குடல், சிறுகுடல், வயிறு, நுரையீரல், சிறுநீரகங்கள், மற்றும் பல உட்பட அனைத்தும் நோய்வாய்ப்பட்டுள்ளன. அவனது முழு உடலிலும் எதுவும் ஆரோக்கியமாக இல்லை. இவ்வாறு, தேவனின் கிரியை மனுஷனால் அடைய முடியாத நிலையை எட்டவில்லை, ஆனால் ஜனங்கள் தங்களை தாங்களே அறிந்துகொள்ள வைக்கிறது. மனுஷனின் உடல் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவனுக்கு வயதாகிவிட்டதால், அவன் மரிக்கும் நாள் நெருங்கிவிட்டதால், திரும்பிச் செல்ல வழியில்லை. ஆனால் இது கதையின் ஒரு பகுதி மட்டுமே; மனுஷனின் நோயின் மூலாதாரம் தேடப்பட்டு வருவதால், இதன் உள் அர்த்தம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. யதார்த்தத்தில், தேவனின் கிரியை முழுவதுமாக முடிவடையும் நேரம் பூமியில் அவருடைய கிரியை முடிவடையும் நேரம் அல்ல, ஏனெனில் இந்த கிரியையின் கட்டம் முடிவடைந்து விட்டால், மாம்சத்தில் எதிர்கால கிரியைகளைச் செய்ய வழி இருக்காது, மற்றும் தேவனின் ஆவியானவர் அதை முடிக்க வேண்டிய தேவை இருக்கும். இவ்வாறு, தேவன் கூறுகிறார், “நான் சுருளை முறையாகத் திறக்கும்போதுதான், அதாவது பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்கள் சிட்சிக்கப்படுகையில், என் கிரியை உச்சத்தை அடையும் நேரத்தில், அதுவே உலகம் முழுவதும் உள்ள ஜனங்கள் உபத்திரங்களுக்கு உட்படுத்தப்படும் நேரம்.” மாம்சத்தில் கிரியை முடிவடையும் நேரம் தேவனின் கிரியை உச்சத்தை அடையும் நேரம் அல்ல—இந்தக் காலத்தின் உச்சம் இந்தக் கட்டத்தில் கிரியையை மட்டுமே குறிக்கிறது, மேலும் இது முழு நிர்வாகத் திட்டத்தின் உச்சம் அல்ல. இவ்வாறு, மனுஷன் பற்றிய தேவனின் தேவைப்பாடுகள் அதிகமாக இல்லை. அவர் வெறுமனே, ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார், இதனால் தேவனின் சித்தம் அடையப்படும் அடுத்த கட்ட கிரியைக்குச் சேவை செய்யலாம். தேவனின் கிரியை மாறும்போது, ஜனங்களின் “காரிய அலகு” மாற்றம் அடைகிறது. இன்று பூமியில் தேவனின் கிரியையின் கட்டம், எனவே அவர்கள் அடிமட்டத்தில் கிரியை செய்ய வேண்டும். எதிர்காலத்தில், தேசத்தை நிர்வகிப்பது அவசியமாகும், இதனால் அவர்கள் மறுபடியும் “மத்தியக் குழுவுக்கு” நியமிக்கப்படுவார்கள். அவர்கள் வெளிநாடு சென்றால், அவர்கள் வெளிநாடு செல்வதற்கான விதிமுறைகளைச் சமாளிக்க வேண்டும். இதுபோன்ற சமயங்களில் அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து வெகு தொலைவில், வெளிநாடுகளில் இருப்பார்கள்—ஆனால் இது இன்னும் தேவனுடைய கிரியையின் தேவைப்பாடுகளின் காரணமாக இருக்கும். ஜனங்கள் சொன்னது போல், “தேவைப்படும்போது தேவனுக்காக எங்கள் உயிரைக் கொடுப்போம்”—எதிர்காலத்தில் நடக்க வேண்டிய பாதை இதுதான் அல்லவா? இதுவரை அத்தகைய வாழ்க்கையை அனுபவித்தவர் யார்? ஒருவர் நாடு முழுவதும் பயணம் செய்யலாம், வெளிநாடுகளுக்குச் செல்லலாம், கிராமப்புறங்களில் வழிகாட்டுதலை வழங்கலாம், சாதாரண ஜனங்களிடையே தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம், மேலும் அவர்கள் நாட்டின் முக்கிய விஷயங்களை உயர் மட்ட அமைப்புகளின் உறுப்பினர்களுடன் பேசலாம்; மற்றும் தேவைப்படும்போது, அவர்கள் தனிப்பட்ட முறையில் நரகத்தில் வாழ்க்கையை ருசிக்க முடியும், அதன் பிறகு அவர்கள் திரும்பி வந்து இன்னும் பரலோக ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்—இவை மனுஷனின் ஆசீர்வாதங்கள் இல்லையா? இதுவரை தேவனுடன் ஒப்பிட்டப்பட்டவர் யார்? இதுவரை எல்லா தேசங்களிலும் முழுவதுமாகப் பயணம் செய்தவர் யார்? உண்மையில், ஜனங்கள் தேவனின் சில வார்த்தைகளை எந்தவிதமான குறிப்புகளோ அல்லது விளக்கங்களோ இல்லாமல் புரிந்து கொள்ள முடியும்—இது வெறுமனே தங்கள்மீதே தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதாகும், தேவனின் கிரியையை இன்று வரை நீட்டித்துள்ளது இதுவேயாகும். ஏனென்றால், ஜனங்களுக்கு அதிகமாக போதாமை உள்ளது—தேவன் சொன்னது போல், “அவர்களிடம் எதுவும் இல்லை”—இன்றைய காரியம் அவர்களுக்குப் பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது; மேலும் என்னவென்றால், அவர்களின் பலவீனம், இயற்கையாகவே, தேவனின் வாயைக் கட்டுப்படுத்தியது—இவை துல்லியமாக தேவனின் கிரியைக்குத் தடையாக இருக்கின்றன அல்லவா? இதை இன்னும் நீங்கள் பார்க்க முடியவில்லையா? தேவன் சொல்கிற அனைத்துக்கும் மறைவான அர்த்தம் இருக்கிறது. தேவன் பேசும் போது, அவர் நடக்கப்போகும் பிரச்சனையை எடுத்துக்கொள்கிறார், மேலும் ஒரு நீதிக்கதை போல, அவர் பேசும் அனைத்து வார்த்தைகளும் ஆழமான செய்தியைக் கொண்டுள்ளன. இந்த எளிய வார்த்தைகள் ஆழமான பொருளைக் கொண்டிருக்கின்றன, இதனால் முக்கியமான பிரச்சினைகளை விளக்குகின்றன—இதில் தேவனின் வார்த்தைகள் சிறப்பானவை அல்லவா? இது உனக்குத் தெரியுமா?

அடிக்குறிப்பு:

அ. சிங்டியன்: இந்த வார்த்தை சீனாவின் பேரரசு சார்ந்த ஆட்சிக் காலத்தில் ஒரு நியாயமுள்ள நீதிபதியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

முந்தைய: அத்தியாயம் 29

அடுத்த: அத்தியாயம் 31

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக