அத்தியாயம் 38

மனுஷனால் அனுபவிக்கப்படுவதில் ஒருபோதும் என்னுடைய அடிச்சுவடு எதுவும் இருப்பதில்லை, என்னுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதலும் ஒருபோதும் இருப்பதில்லை. இதன் விளைவாக, நான் எப்போதும் மனுஷனை ஒரு தொலைவிலேயே வைத்திருந்தேன், பின்னர், அவனை விட்டுவிட்டேன். நான் மனுக்குலத்தின் கீழ்ப்படியாமையை வெறுக்கிறேன். ஏனென்று எனக்குத் தெரியவில்லை; ஆரம்பத்தில் இருந்தே நான் மனுஷனை வெறுத்து வந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது, ஆனாலும் அவனுக்காக ஆழமாகப் பரிதாபத்தை உணர்கிறேன். இப்படியே ஜனங்கள் எப்போதும் என்னிடம் இரண்டு சிந்தைகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள்—ஏனெனில் நான் மனிதனில் அன்புகூருகிறேன், மேலும் நான் அவனை வெறுக்கிறேன். மனுஷர்கள் மத்தியில் யார் என்னுடைய அன்பைப் பற்றி உண்மையில் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள்? மேலும் என் வெறுப்பைக் குறித்து யார் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள்? என்னுடைய கண்களில் மனுஷன் ஒரு செத்துப்போன பொருள், ஜீவனற்றவன், எல்லாவற்றிற்கும் மத்தியில் இருக்கும் ஒரு களிமண் சிலை போன்றவன். அவனுடைய கீழ்ப்படியாமையால், மனுஷன் அவ்வப்போது என் கோபத்தைக் கிளறுகிறான். மனுஷர்களின் மத்தியில் வாழும் வேளையில், நான் திடீரென வரும்போது அவர்கள் பலவீனமாகப் புன்னகைக்கிறார்கள், ஏனெனில் நான் பூமியில் மனிதனோடு விளையாடிக் கொண்டிருந்தது போல அவர்கள் எப்போதும் உணர்வுப்பூர்வமாக என்னைத் “தேடுகிறார்கள்”. அவர்கள் ஒருபோதும் என்னைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை, மேலும் என் மீதான அவர்களுடைய மனப்பாங்கின் காரணமாக, மனிதனுக்கான “பணித்தலத்தில்” இருந்து “ஓய்வுபெறுவதைத்” தவிர வேறு வழி எதுவும் எனக்கு இல்லை. இருந்தபோதிலும், நான், “ஓய்வுபெற்றாலும்” என்னுடைய “ஓய்வூதியம்” ஒரு காசு கூட குறையாது என்று நான் கூற விரும்புகிறேன். மனிதனுக்கான “பணித்தலத்தில்” என்னுடைய “முப்புநிலை” யின் காரணமாக, எனக்கு இன்னும் வரவேண்டிய பணத்தைத் தருமாறு நான் தொடர்ந்து அவர்களிடம் கோரிவருகிறேன். அவர்கள் என்னை விட்டுவிட்டாலும், அவர்கள் என் பிடியில் இருந்து எப்படித் தப்ப முடியும்? ஒருமுறை, அவர்கள் தங்கள் மாம்சீக இன்பங்களில் சுதந்திரமாகத் திளைக்க அனுமதித்து ஓரளவுக்கு நான் ஜனங்களின் மேல் இருந்த என் பிடியைத் தளர்த்தினேன்—இதன் காரணமாக அவர்கள் கட்டுக்கடங்காத முறையில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடந்துகொள்ளத் துணிந்தார்கள். இதில் இருந்து அவர்கள் என்னை உண்மையிலேயே நேசிக்கவில்லை என்பதைக் காணலாம், ஏனெனில் அவர்கள் எல்லோரும் மாம்சத்தில் வாழ்கிறார்கள். உண்மையான அன்பை மாம்சத்துக்குப் பதிலாகத் திருப்பி அளிக்க முடியுமா? மனிதனிடம் நான் கேட்பது வெறும் மாம்சத்தின் “அன்பாக” இருக்க முடியுமா? இதுதான் உண்மையான நிலை என்றால் மனுஷனுக்கு என்ன மதிப்பு இருக்கும்? மனிதர்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாத குப்பையாக இருக்கிறார்கள்! என்னுடைய சகிப்புத்தன்மையில் “விசேஷித்த வல்லமைகள்” இல்லாமல் இருந்திருந்தால், நான் மனிதனை விட்டு வெகு காலத்திற்கு முன்னரே சென்றிருப்பேன்—“அடாவடித்தனத்துக்கு ஆட்பட” நான் ஏன் அவர்களோடு தங்கியிருப்பதற்குக் கவலைப்பட வேண்டும்? இன்னும் நான் சகித்துக்கொள்ளுகிறேன். நான் மனுஷனுடைய “காரியங்களை” முழுமையாகக் கண்டறிய விரும்புகிறேன். பூமியில் என் கிரியை முடிவடைந்ததும், எல்லாவற்றிற்கும் “எஜமானனை” நியாயந்தீர்க்க நான் உயர வானத்துக்கு ஏறுவேன்; இதுவே என் முக்கியக் கிரியை, மனுஷனைக் குறித்த என் வெறுப்பு ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டது. தன்னுடைய எதிரியை யார்தான் வெறுக்க மாட்டார்கள்? பரலோகத்தில் சாத்தானே என் எதிரி; பூமியில் மனிதனே என் எதிரி. பரலோகத்திற்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையின் காரணத்தால், ஒன்பதாம் தலைமுறை மட்டும் நான் அவர்கள் எல்லோரையும் குற்றவாளிகளாகத் தீர்க்கிறேன். அவர்களில் ஒருவரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். என்னை எதிர்க்க அவர்களுக்குச் சொன்னது யார்? எனக்குக் கீழ்ப்படிய வேண்டாம் என்று யார் அவர்களுக்குச் சொன்னது? ஜனங்கள் தங்களது விடாப்பிடியான கட்டுகளைத் தங்கள் பழைய சுபாவத்தில் இருந்து வெட்டிவிட முடியாமல் இருப்பது ஏன்? அவர்களுடைய மாம்சம் ஏன் எப்போதும் அவர்களுக்குள் செழித்து வளர்ந்து வருகிறது? இவை எல்லாம் மனிதனை நான் நியாயந்தீர்க்க சான்றாக இருக்கின்றன. உண்மைகளுக்கு யார் கீழ்ப்படிய மறுக்கத் துணிவார்கள்? என்னுடைய நியாயத்தீர்ப்பு உணர்ச்சியின் வண்ணத்தைப் பூசியிருப்பதாகச் சொல்ல யார் துணிவார்கள்? நான் மனிதனில் இருந்து வேறுபட்டவர், ஆகையால் நான் அவனை விட்டுப் போகிறேன், ஏனெனில் சொல்லப்போனால் நான் மனித இனத்தைச் சேர்ந்த ஒருவர் இல்லை.

நான் செய்வதற்கு எல்லாம் ஓர் அடிப்படை, ஓர் அஸ்திவாரம் இருக்கிறது; மனுஷன் தன் வாயால் என்னிடம் “மெய்யான உண்மைகளை” “வெளிப்படுத்தும்” போது, நான் அவனைக் “கொலைக் களத்திற்குக்” கொண்டுசெல்கிறேன், ஏனெனில் என் சிட்சையை நியாயப்படுத்த மனிதனின் குற்றமே போதுமானதாக உள்ளது. நான் சிட்சையைக் கண்மூடித்தனமாக அளிப்பதில்லை, ஆனால் அவர்களுடைய குற்றத்தின் உண்மையான சூழலின் அடிப்படையில் ஜனங்களைச் சிட்சிக்கிறேன். இல்லை என்றால், மனிதர்கள் தங்களுடைய கலகத்தன்மையின் காரணமாக ஒருபோதும் அடிபணிந்து தங்கள் குற்றத்தை என்னிடம் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எல்லா ஜனங்களும் இப்போதைய நிலையை அடைந்ததனால் மட்டுமே தயக்கத்துடன் தலை வணங்குகிறார்கள்—ஆனால் தங்கள் இருதயங்களில் அவர்கள் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கிறார்கள். நான் குடிப்பதற்காக ஜனங்களுக்கு ஒரு “பேரியம் உணவை” அளித்திருக்கிறேன், மேலும் இதனால் அவர்களுடைய் உள்ளுறுப்புகள் நன்றாகவும் தெளிவாகவும் “ஃபுளூரோஸ்கோப்பில்” தெரியும். ஜனங்களின் வயிற்றில் இருந்து அழுக்கும் அசுத்தங்களும் வெளியேற்றப்படவில்லை; அவர்களுடைய நரம்பின் வழியாக எல்லா வகையான அசுத்தப் பொருட்களும் பாய்கின்றன, ஆகவே அவர்களுடைய உடலில் உள்ள நஞ்சு இன்னும் அதிகமாகப் பெருகுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் இத்தகையச் சூழலில் வாழ்ந்துவிட்டதால், அவைகள் அவர்களுக்குப் பழக்கமாகிப் போய்விட்டன. அவைகள் அவர்களுக்கு இப்போதெல்லாம் அந்நியமானவையாகத் தெரிவதில்லை. இதன் விளைவாக, அவர்களுடைய உடலுக்குள் இருக்கும் கிருமிகள் முதிர்ச்சி அடைந்து, அவர்களுடைய சுபாவமாகிறது, மேலும் ஒவ்வொருவரும் அவற்றின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறார்கள். இதன் காரணமாகத்தான் ஜனங்கள் எல்லா இடங்களிலும் காட்டுக் குதிரைகள் போல ஓடித்திரிகிறார்கள். ஆனால் அவர்கள் இதை ஒருபோதும் முற்றிலுமாக ஒப்புக்கொள்வதில்லை; தங்கள் ஒப்புதலைக் காட்ட தங்கள் தலையை மட்டும் அசைக்கிறார்கள். மனிதன் என்னுடைய வார்த்தைகளை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை. நல்ல மருந்து என்று அவர்கள் என்னுடைய வார்த்தைகளை எடுத்துக்கொண்டால், பின் அவர்கள் “மருத்துவரின் கட்டளைகளைப் பின்பற்றுவார்கள்” மற்றும் அவர்களுக்குள் இருக்கும் நோயைக் குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை அனுமதிப்பார்கள். இருப்பினும், அவர்கள் நடந்துகொள்ளும் விதம் என்னுடைய மனதில் இந்த விருப்பத்தை பூர்த்திசெய்ய முடியாது, மேலும் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் “சிரமத்தை சகித்துக்கொண்டு”, அவர்கள் கேட்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பதுதான்: நான் என் கடமையைத்தான் செய்கிறேன். மனிதன் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவித்துமகிழ மனமற்று இருக்கிறான், ஆனால் நரகத்தின் வேதனைகளுக்கு உட்பட தயாராக இருக்கிறான்—அதனால் என்னால் செய்யக் கூடியது எல்லாம் அவர்களது வேண்டுதலுக்கு இணங்குவதுதான். இருந்தாலும், என்னுடைய நாமமும் என்னுடைய ஆவியானவரும் நரகத்தில் வெட்கப்பட்டுப் போகாமல் இருக்க, நான் அவர்களை முதலில் சீர்படுத்துவேன், அதன் பின்னர் அவர்களுடைய விருப்பங்களுக்குக் “கீழ்ப்படிவேன்”. அவ்வாறு செய்வதனால் அவர்கள் “மகிழ்ச்சியால் நிரப்பப்படுவார்கள்”. என்னுடைய கொடியை உயர்த்திப் பிடித்திருக்கும் போது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் மனுஷன் என்னை வெட்கப்படுத்த அனுமதிப்பதை நான் விரும்பவில்லை. இதனால்தான் மீண்டும் மீண்டும் அவ்வப்போது நான் அவனைச் சீர்படுத்தி வருகிறேன். என்னுடைய கடுமையான உரைகளின் கட்டுப்பாடு இல்லாமல் இன்றுவரை மனிதனால் எப்படி என் முன்னால் தொடர்ந்து நின்றுகொண்டிருக்க முடிகிறது? நான் போய்விடுவேன் என்ற பயத்தாலா மக்கள் பாவம் செய்யாமல் இருக்கிறார்கள்? அவர்கள் சிட்சைக்குப் பயப்படுகிறார்கள் என்பதனால் மட்டும்தானே அவர்கள் குறைகூறவில்லை என்பது உண்மை அல்லவா? என் திட்டத்தின் பொருட்டாகத் தீர்மானங்களை எடுத்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்னுடைய தெய்வீகச் சுபாவத்தில் “அறிவின் தரம்” இல்லை என்று எல்லா ஜனங்களும் நினைக்கிறார்கள், ஆனால் என்னுடைய மனிதத்தன்மையில் நான் எல்லாவற்றையும் ஊடுறுவிப்பார்க்க முடியும் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்? ஜனங்கள் கூறுவது போல, “ஓர் ஆணியை அடிக்க ஏன் சம்மட்டியைப் பயன்படுத்த வேண்டும்?” மனிதர்கள் என்னில் “அன்புகூருகிறார்கள்”, அவர்களின் அன்பு உள்ளார்ந்தது என்பதால் அல்ல, ஆனால் காரணம் என்னவென்றால் அவர்கள் சிட்சைக்குப் பயப்படுகிறார்கள். என்னை நேசிப்பவனாகவே பிறந்த மனிதன் மக்கள் மத்தியில் இருக்கிறானா? தன் இருதயத்தை நடத்துவது போல் என்னை நடத்துகிறவன் யாராவது ஒருவன் இருக்கிறானா? ஆகவே மனித உலகுக்கு நான் ஒரு பழமொழியைத் தொகுத்துத் தருகிறேன்: மனிதர்களின் மத்தியில் என்னில் அன்புகூருகிறவன் ஒருவனும் இல்லை.

பூமியில் என் கிரியையை முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புவதால்தான் இவ்வாறு என்னுடைய கிரியையின் வேகத்தைத் துரிதப்படுத்தியுள்ளேன், இல்லாவிட்டால் ஜனங்கள் என்னை விட்டு எல்லையற்ற பெருங்கடலில் விழுமாறு தூரமாக வீசப்படுவார்கள். இதற்குத் துல்லியமாக காரணம் ஏனென்றால் அவர்களுக்கு நான் முன்கூட்டியே விஷயத்தின் உண்மையைக் கூறியதால் அவர்கள் ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இது இல்லை என்றால், புயலடிக்கும் காலநிலையில் படகை ஓட்டக் கூடியவன் யாராவது இருக்கிறானா? பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டே எல்லோரும் வேலையில் இருக்கிறார்கள். அவர்களின் இருதயத்தில் நான் ஒரு திருடனைப் போல் ஆகிவிட்டதாக இது இருக்கிறது. அவர்களின் வீட்டில் இருந்து எல்லாவற்றையும் நான் கைப்பற்றப் போவதாக அவர்கள் பயப்படுகிறார்கள், ஆகவே அவர்கள் தங்கள் பலங்கொண்ட மட்டும் கதவைத் தள்ளிப் பிடிக்கிறார்கள், நான் உடைத்துக்கொண்டு உள்ளே வந்துவிடுவதுபோல் அஞ்சுகிறார்கள். கோழைத்தனமான எலிகளைப் போல அவர்கள் நடந்துகொள்ளுவதைப் பார்த்து நான் அமைதியாக அகன்றுவிடுகிறேன். மக்களின் கற்பனையில், பூமி ஒரு பேரழிவுக்குள் போகப் போவது போல் தோன்றுகிறது, ஆகவே அறிவை மிஞ்சிய அச்சத்தில் அகப்பட்டு அவர்கள் கலைந்து ஓடுகிறார்கள். இந்த மாதிரி சமயத்தில்தான் பூமியின் மீதெங்கும் பேய்கள் அலைந்து திரிவதை நான் பார்க்கிறேன். என்னால் சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. என்னுடைய சிரிப்புச் சத்தத்திற்கு நடுவில் மனிதன் பிரமித்து அச்சத்திற்கு ஆட்பட்டுக் கிடக்கிறான். அப்போதுதான் விஷயத்தின் உண்மையை நான் அறிந்துகொள்ளுகிறேன். ஆகவே நான் என் புன்னகையை அடக்கிக்கொண்டு பூமியில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதை நிறுத்துகிறேன். அதற்குப் பதிலாக எனது மூல திட்டத்தின்படி திரும்பவும் கிரியை செய்கிறேன். என்னுடைய ஆராய்ச்சிக்கான ஒரு மாதிரியாக நான் மனிதனை இனிமேலும் கருதமாட்டேன், ஏனெனில் அவர்கள் குப்பைகளே தவிர வேறொன்றுமில்லை. ஒரு தடவை நான் அவர்களைக் கழித்துப்போட்டால், அவர்களால் அதற்குமேல் எந்த பயன்பாடும் இருக்காது—அவர்கள் வெறும் கழிவுகளே. இந்தக் கட்டத்தில், நான் அவர்களை நிர்மூலமாக்கி அக்கினிக்குள் போடுகிறேன். மனிதனின் மனதுக்குள், என்னுடைய இரக்கமும் அன்பின் கருணையும் என்னுடைய நியாயத்தீர்ப்பு, மகிமை மற்றும் என் கோபத்துக்குள் அடங்கி இருக்கின்றன. வெகு காலத்திற்கு முன்னரே நான் அவர்களுடைய பலவீனத்தைப் புறக்கணித்துவிட்டேன், வெகு காலத்திற்கு முன்னரே என் இரக்கம், என் அன்பின் கருணை ஆகியவற்றைத் திரும்பப்பெற்றுவிட்டேன் என்பதைப் பற்றி அவர்கள் கொஞ்சம் கூட அறியவில்லை, மேலும் அவர்கள் இன்றிருக்கும் நிலைக்கு அதுதான் காரணம். ஒருவராலும் என்னை அறிய முடியவில்லை. அதற்கு மேலாக அவர்களால் என் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவோ, அல்லது என முகத்தைப் பார்க்கவோ, அல்லது என் சித்தத்தை அறிந்துகொள்ளவோ முடியவில்லை. மனிதன் இன்று தன்னைக் காணும் நிலைகள் இவைகள் அல்லவா? பின்னர் எப்படி எனக்கு இரக்கமும் அன்பின் கருணையும் இருப்பதாகச் சொல்ல முடியும்? நான் மனிதனுடைய பலவீனத்தைக் கருத்தில் கொள்ளுவதுமில்லை அவனுடைய போதாமையைக் “கவனிப்பதும்” இல்லை. இது இன்னும் என்னுடைய இரக்கம் மற்றும் அன்பின் கருணையாக இருக்க முடியுமா? அல்லது இது இன்னும் மனிதன் மேலுள்ள என்னுடைய அன்பாக இருக்க முடியுமா? நான் வெற்று “இன்பங்களைப்” பற்றி பேசிக்கொண்டிருப்பதாக ஜனங்கள் எல்லாம் நினைக்கிறார்கள். ஆகவே அவர்கள் நான் பேசும் வார்த்தைகளை விசுவாசிப்பதில்லை. ஆனால் இதை அறிந்த யாராவது ஒருவன் இருக்கிறானா: “இது ஒரு வேறுபட்ட யுகமாக இருப்பதால், இந்தக் காலத்தில் என் இரக்கமும் அன்பின்கருணையும் இருக்காது; இருப்பினும், நான் செய்வேன் என்று சொல்வதை என்றென்றைக்கும் செய்யும் தேவனாக இருக்கிறேன்”? நான் மனிதர்களின் நடுவில் இருக்கும்போது, மக்கள் தங்கள் மனதில் என்னை மிகவும் உன்னதமானவராகப் பார்க்கின்றனர், ஆகவே நான் என் ஞானத்தின் உள்ளிருந்து பேச விரும்புவதாக விசுவாசிக்கிறார்கள். இது என் வார்த்தைகளை அவர்கள் கொஞ்சம் சந்தேகத்தோடே பார்ப்பதற்கு வைக்கிறது. ஆனால் என் பேச்சுக்குப் பின்னால் இருக்கும் விதிகளைப் புரிந்து கொள்ளக் கூடியவன் யாராவது இருக்கிறானா? அல்லது என் வார்த்தைகளின் பிறப்பிடத்தை? நான் உண்மையிலேயே எதை நிறைவேற்ற விரும்புகிறேன் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடிய யாரேனும் ஒருவன் இருக்கிறானா? அல்லது என்னுடைய நிர்வாகத் திட்டத்தின் முடிவை ஊடுறுவிப் பார்க்கக்கூடியவன் யார்? என் நம்பிக்கைக்குப் பாத்திரமாகக் கூடியவன் யாராவது இருக்கிறானா? எல்லாவற்றிற்குள்ளும், என்னைத் தவிர வேறு யாரால் நான் உண்மையில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று அறிந்து கொள்ள முடியும்? என்னுடைய இறுதி நோக்கம் என்ன என்று யாரால் அறிய முடியும்?

ஏப்ரல் 30, 1992

முந்தைய: அத்தியாயம் 37

அடுத்த: அத்தியாயம் 39

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக