அத்தியாயம் 104

எனக்கு வெளியில் இருக்கும் எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் ஒன்றுமில்லாமைக்குள் கடந்து போகும், அதே வேளையில், எனக்குள் இருக்கும் எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் என்னிடம் இருந்து எல்லாவற்றையும் அடைந்து என்னுடன் மகிமைக்குள் பிரவேசிக்கும், என்னுடைய சீயோன் மலையில் பிரவேசிக்கும், என்னுடைய வாசஸ்தலத்தில் பிரவேசிக்கும், என்றென்றைக்கும் என்னுடனேயே இருக்கும். ஆதியில் நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்தேன், மேலும் முடிவில் நான் என் கிரியையைப் பூர்த்தி செய்வேன். நான் இருக்கவும் செய்து மற்றும் இராஜாவாக என்றென்றைக்கும் அரசாளுவேன். இடைப்பட்ட காலத்தில், நான் முழு பிரபஞ்சத்தையும் வழிநடத்தி அதிகாரமும் செலுத்துவேன். ஒருவராலும் என் அதிகாரத்தைப் பறிக்க முடியாது, ஏனெனில் ஒரே தேவன் நானே. மேலும், என்னோடு கூட என்னுடைய முதற்பேறான குமாரர்களும் அரசாளும்படி அவர்களுக்கு என்னுடைய அதிகாரத்தை அளிக்கும் வல்லமை எனக்கு உள்ளது. இந்த விஷயங்கள் என்றென்றும் இருக்கும், அவற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. இது என் ஆட்சிமுறை ஆணைகள். (எங்கெல்லாம் நான் என் ஆட்சிமுறை ஆணைகளைப் பற்றிப் பேசுகிறேனோ, அங்கெல்லாம் என் ராஜ்யத்தில் என்ன நடக்கிறது என்றும் ஒருபோதும் மாற்ற முடியாததாக என்றென்றைக்கும் எது இருக்கும் என்பதையும் குறிப்பிடுகிறேன்.) ஒவ்வொருவரும் முழுமனதாக நம்பி, நான் அன்புகூருகிறவர்களிடத்தில் என் மாபெரும் வல்லமையைப் பார்க்கவேண்டும். ஒருவரும் என் நாமத்தை அவமானப்படுத்த முடியாது; அப்படிச் செய்கிற எவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும்! இது நான் இரக்கம் இல்லாதவராக இருப்பதால் அல்ல, நீ அநீதிக்காரனாக இருப்பதால் தான். என் சிட்சையை நீ மீறினால், நான் உன்னைக் கையாளுவேன் மேலும் நித்தியத்துக்கும் அழிந்து போகும்படி செய்வேன், (நிச்சயமாக. இவையெல்லாம் எனது முதற்பேறான குமாரர்கள் அல்லாதவரை நோக்கிக் கூறுவதாகும்.) இத்தகைய குப்பைகளுக்கு என் வீட்டில் இடமில்லை, ஆகவே சீக்கிரம் இங்கிருந்து வெளியேறு! ஒரு நிமிடம் கூட, ஏன் ஒரு வினாடி கூட தாமதம் செய்ய வேண்டாம்! நான் சொல்லுவதை நீ கேட்க வேண்டும், அல்லது நான் ஒரே வார்த்தையில் உன்னை அழிப்பேன். இன்னும் நீ தயங்காமலும் ஏமாற்ற முயற்சி செய்யாமலும் இருப்பது நல்லது. என் முன்னால் இருக்கையில் நீ அபத்தமானதைச் செய்கிறாய், என் முகத்துக்கு முன்னால் பொய் சொல்லுகிறாய். சீக்கிரமாக வெளியேறு! இப்படிப்பட்டவைக்காக எனது நேரம் குறைவாக உள்ளது. (ஊழியம் செய்ய நேரம் வரும்போது. இந்த ஜனங்கள் ஊழியம் செய்வார்கள், வெளியேறும் நேரம் வரும்போது, அவர்கள் வெளியேறுவார்கள். ஒரு நிமிடம் அல்லது ஒரு வினாடி கூட நேரந்தவறாமல் நான் காரியங்களை ஞனத்தோடு செய்கிறேன்; ஒரு சிறு பொட்டு கூட நேரந்தவறுவதில்லை. என்னுடைய செயல்கள் எல்லாம் நீதியானவை மற்றும் முற்றிலும் துல்லியமானவை.) இருந்தாலும் என்னுடைய முதற்பேறான குமாரர்களைப் பொறுத்த வரையில், நான் முடிவில்லாமல் பொறுமையோடு இருப்பேன், என்னோடு கூட நல்ல ஆசீர்வாதங்களையும் நித்திய ஜீவனையும் அனுபவிக்க ஏதுவாக, உங்களுக்கான என் அன்பு நித்தியமானதாக இருக்கும். அதே வேளையில், நீங்கள் ஒருபோதும் பின்னடைவுகளைச் சகித்துக் கொள்ளவோ என் நியாயத்தீர்ப்புக்கு உட்படவோ மாட்டீர்கள். (நீங்கள் என் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தொடங்கும் வேளையை இது குறிக்கிறது.) நான் இந்தப் பூமியைச் சிருஷ்டித்தபோது என் முதற்பேறான குமாரர்களுக்கு நான் வாக்களித்த முடிவில்லாத ஆசீர்வாதமும் வாக்குத்தத்தமும் இதுவே. அதில் நீங்கள் என் நீதியைப் பார்க்க வேண்டும்: நான் முன்குறித்தவர்களை நான் நேசிக்கிறேன், மேலும் நான் கைவிட்ட மற்றும் புறம்பாக்கியவர்களை, என்றென்றைக்கும் நான் வெறுக்கிறேன்.

என்னுடைய முதற்பேறான குமாரர்களாக, நீங்கள் எல்லாம் உங்கள் கடமைகளைச் செய்து உங்கள் நிலைகளில் உறுதியாக நிற்க வேண்டும். எனக்கு முன்னால் எடுத்துக் கொள்ளப்படும் முதல்பலனான கனிகளாக இருந்து என்னுடைய தனிப்பட்டச் சோதனையை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் என் மகிமையான சாயலின்படி வாழலாம், அதன் மூலம் என்னுடைய மகிமை உங்கள் முகத்தின் வழியாகப் பிரகாசிக்கும், அதன் மூலம் என்னுடைய உரைகள் உங்கள் வாய்களின் வழியாகப் பரவ முடியும், அதனால் என்னுடைய ராஜ்யம் உங்களால் ஆட்சி செய்யப்படக் கூடும், அதனால் என் ஜனங்கள் உங்களால் ஆளுகை செய்யப்படுவார்கள். நான் இங்கு “முதற் பலனான கனிகள்” மட்டுமல்லாது “எடுத்துக்கொள்ளப்படுதல்” போன்ற சொற்களையும் பயன்படுத்துகிறேன். “முதற் பலனான கனிகள்” என்பது என்ன? ஜனங்களுடய கருத்துக்களின்படி, அவர்கள் தங்களை எடுத்துக் கொள்ளப்படும் முதல் தகுதியான ஜனங்கள், அல்லது ஜெயங்கொள்ளப்பட்டவர்கள், அல்லது முதற்பேறான குமாரர்கள் என்று எண்ணிக் கொள்ளுகிறார்கள். இவை எல்லாம் என்னுடைய வார்த்தைகளின் பொய்யான மற்றும் தவறான விளக்கங்கள். என்னிடம் இருந்து வெளிப்பாடுகளைப் பெற்றவர்களும் என்னால் அதிகாரம் வழங்கப்பட்டவர்களுமே முதற்பலனான கனிகள். “முதற்பலனான கனிகள்” என்ற வார்த்தைகள், என் வசம் இருப்பது, என்னால் முன்குறிக்கப்பட்டதை மற்றும் என்னால் தெரிந்தெடுக்கப்பட்டதை குறிக்கிறது. “முதற் பலன்” என்பதற்கு “வரிசையில் முதல்” என்பது அர்த்தமில்லை. “முதற் பலனான கனிகள்” மனுஷக் கண்களால் பார்க்கப்படும் ஜடப் பொருட்கள் அல்ல. “கனிகள்” என்று அழைக்கப்படுபடுகிற இவை நறுமணத்தை அளிக்கின்றன (இது ஒரு குறியீட்டுப் பொருள்); அதாவது, என்னைப் போல ஜீவித்திருப்பவர்களை, என்னை வெளிப்படுத்துபவர்களை, மேலும் என்றென்றும் என்னோடு ஜீவிப்பவர்களை குறிக்கிறது. நான் “கனிகளைப்” பற்றி பேசும்போது, என்னுடைய எல்லா குமாரர்களையும் ஜனங்களையும் குறிப்பிடுகிறேன், ஆனால் “முதற்பலனான கனிகள்” என்னோடு கூட இராஜாக்களாக ஆளுகை செய்யப்போகும் முதற்பேறான குமாரர்களைக் குறிக்கிறது. ஆகையால், “முதற்பலன்” என்பது அதிகாரத்தைக் கொண்டுள்ளதாக விளக்கப்பட வேண்டும்; அதுவே அதன் உண்மையான அர்த்தம். “எடுத்துக்கொள்ளப்படுதல்” என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல, ஒரு தாழ்வான இடத்தில் இருந்து ஓர் உயர்வான இடத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுதல் என்று அர்த்தமாகாது; அது ஒரு பெரிய தவறான கருத்து ஆகும். “எடுத்துக் கொள்ளப்படுதல்” என்பது என் முன்குறித்தலையும் பின்னர் தெரிந்தெடுத்தலையும் குறிக்கிறது. என்னால் முன்குறித்து தெரிந்தெடுக்கப்பட்ட அனைவரையும் நோக்கித் துல்லியமாக குறிவைக்கப்படுகிறது. முதற்பேறான குமாரர்கள் அல்லது குமாரர்கள் என்ற நிலையை அடைந்தவர்கள், அல்லது தேவனுடைய ஜனங்களே எடுத்துக் கொள்ளப்படுபவர் ஆவர். இது ஜனங்களின் கருத்துகளுக்கு முற்றிலும் இணக்கமற்றது. எதிர்காலத்தில் என்னுடைய வீட்டில் ஒரு பங்குடையவர்கள் அனைவரும் எனக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். இது முற்றிலும் உண்மையாகும், ஒருபோதும் மாறாதது மேலும் மறுக்க முடியாதது. இது சாத்தானுக்கு எதிரான எதிர்தாக்குதல். என்னால் முன்குறிக்கப்பட்ட யாரொருவரும் எனக்கு முன்பாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

“பரிசுத்த எக்காளத்தை” ஒருவர் எப்படி விளக்குவார்? இதைப் பற்றிய உங்களுடைய புரிதல் என்ன? அது பரிசுத்தமாக இருக்கிறது என்றும் அது ஏற்கனவே ஊதப்பட்டுவிட்டது என்றும் ஏன் கூறப்படுகிறது? இது என் கிரியையின் படிநிலைகளில் இருந்து விளக்கப்பட வேண்டும் மேலும் நான் கிரியை செய்யும் முறைமைகளில் இருந்து புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். என் நியாயத்தீர்ப்பு பகிரங்கமாக அறிவிக்கப்படுகிற நேரம் எல்லாத் தேசங்களுக்கும் ஜனங்களுக்கும் என் மனநிலை வெளிப்படுத்தப்படும். பரிசுத்த எக்காளம் ஊதப்படும் நேரம் அதுவே. அதாவது, என் மனநிலை பரிசுத்தமானது மற்றும் இடறலுண்டாக்க முடியாதது என்று நான் அடிக்கடி கூறுவேன், அதனால் தான் “எக்காளத்தை” விவரிக்கப் “பரிசுத்தம்” பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் இருந்து “எக்காளம்” என் மனநிலையைக் குறிக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது மேலும் நான் என்னவாக இருக்கிறேன் மற்றும் என்னிடம் என்ன இருக்கிறது என்றும் குறிக்கிறது. ஒவ்வொரு நாளும் என் நியாயத்தீர்ப்பு முன்னேறிச் செல்கிறது, ஒவ்வொரு நாளும் என் கோபம் வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் அன்றாடக அடிப்படையில் என் மனநிலைக்கு இணங்காத ஒவ்வொரு தனிப் பொருள் மீதும் என் சாபம் நேர்கிறது என்று கூட கூறலாம். அப்படியானால் என் நியாயத்தீர்ப்பு தொடங்கும் காலம் தான் பரிசுத்த எக்காளம் ஊதப்படும் காலம் என்று கூறலாம், மேலும் அது ஒரு கணமும் நிற்காமல் மேலும் ஒரு நிமிடம் அல்லது நொடி கூட நிறுத்தப்படாமல் தொனிக்கிறது. அதனோடு பெரும் பேரழிவுகள் நிகழும். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், என் நீதியுள்ள நியாயத்தீர்ப்பின் வெளிப்பாட்டுடன், என் மனநிலையும் அதிகமாகப் பகிரங்கமாக்கப்படும், மேலும் நான் என்னவாக இருக்கிறேனோ மற்றும் என்னிடம் என்ன இருக்கிறதோ அது தொடர்ந்து என் முதற்பேறான குமாரர்களுக்குள் சேர்க்கப்படும். நான் எதிர்காலத்தில் இவ்வாறுதான் கிரியை செய்வேன்: ஒரு பக்கத்தில், நான் அன்புகூருகிறவர்களைத் தாங்கி இரட்சிப்பது, அதே வேளையில் இன்னொரு பக்கம், நான் வெறுக்கிற எல்லோரையும் என் வார்த்தைகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்துவது. நினைவில் வைத்திருங்கள்! இதுதான் நான் கிரியை செய்யும் முறைமை, என் கிரியைகளின் படிநிலைகள், இது முற்றிலும் உண்மை. சிருஷ்டிப்பில் இருந்து இதை நான் திட்டமிட்டு வருகிறேன், மேலும் இதை யாராலும் மாற்ற முடியாது.

ஜனங்களால் புரிந்து கொள்ளக் கடினமான என்னுடைய வார்த்தைகளின் பல பிரிவுகள் இன்னும் இருக்கின்றன, ஆகவே நான் பேசும் பாணியையும் நான் இரகசியங்களை வெளிப்படுத்தும் முறையையும் மேலும் மேம்படுத்தி இருக்கிறேன். அதாவது, நான் பேசும் பாணியானது ஒவ்வொரு நாளும் புதிய வடிவங்கள் மற்றும் முறைகளுடன் மாறியும் மேம்பட்டும் வருகிறது. இவை என் கிரியையின் படிநிலைகள், மேலும் அவற்றை யாராலும் மாற்ற முடியாது. நான் என்ன சொல்லுகிறேனோ அதன்படி மட்டும்தான் ஜனங்கள் பேசவும் செயல்படவும் வேண்டும். இதுதான் முற்றிலுமாக உண்மை. நான் நானாகிய என்னிலும் என் மாம்சத்திலும் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். என் மனிதத்தன்மையின் ஒவ்வொரு நடவடிக்கை மற்றும் செய்கைக்குள்ளும் என் தெய்வீகத்தின் ஞானத்தின் ஓர் அம்சம் வருகிறது. (மனிதகுலம் எந்த ஞானமும் கொண்டிருக்கவில்லை என்பதால், எனது தெய்வீக மனநிலை முதற்பேறான குமாரர்களுக்கு இருக்கிறது என்று சொல்வது, அவர்கள் என் தெய்வீக ஞானத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற காரியத்தைக் குறிக்கிறது.) முதற்பேறான குமாரர்கள் முட்டாள்தனமான காரியங்களைச் செய்தால், அதற்குக் காரணம் உங்களுக்குள் இன்னும் மனுஷக் கூறுகள் இருப்பதுதான். ஆகையால் நீங்கள் இப்படிப்பட்ட மனுஷ முட்டாள்தனங்களை அகற்ற வேண்டும், மேலும் நான் நேசிப்பதை செய்து நான் வெறுப்பதை நிராகரிக்க வேண்டும். என்னில் இருந்து வரும் யாரொருவரும் என்னுள் இருப்பதற்குத் திரும்பி வரவேண்டும், மேலும் என்னில் இருந்து பிறந்த எவரும் எனது மகிமைக்குள் இருக்கும்படி திரும்பி வரவேண்டும். நான் வெறுக்கும் யாவரும் ஒவ்வொருவராக கைவிடப்பட்டு என்னிடம் இருந்து நீக்கப்பட வேண்டும். இவையே என் கிரியையின் படிநிலைகள்; இது என் நிர்வாகம் மேலும் இதுவே ஆறாயிரம் வருட சிருஷ்டிப்பின் திட்டம். நான் கைவிடுபவர்கள் அடங்கிக் கீழ்ப்படிந்து என்னை விட்டு அகல வேண்டும். என்னால் நேசிக்கப்படுகிற எல்லோரும், அவர்கள் மேல் நான் பொழிந்த ஆசீர்வாதத்தின் காரணமாக, என்னைத் துதிக்க வேண்டும், அதன் காரணமாக என் நாமம் இன்னும் மகிமையாக வளரும், மேலும் அதனால் மகிமையான் ஒளி என்னுடைய மகிமையான முகத்தில் சேர்க்கப்படும், அதனால் அவர்கள் என் மகிமையில், என் ஞானத்தால் முழுமையாக நிறைந்திருப்பார்கள், மேலும் எனது மகிமையின் ஒளியில் என்னுடைய நாமத்தை இன்னும் அதிகமாக மகிமைப்படுத்துவார்கள்!

முந்தைய: அத்தியாயம் 103

அடுத்த: அத்தியாயம் 105

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக