அத்தியாயம் 61

உங்கள் சொந்த நிலைமையை நீங்கள் அறிந்திருக்கும் போது, உங்களால் என்னுடைய சித்தத்தை நிறைவேற்றக் கூடும். உண்மையில், என்னுடைய சித்தத்தைப் புரிந்து கொள்வது கடினமானது அல்ல; கடந்த காலத்தில், நீங்கள் ஒருபோதும் என் சித்தங்களுக்கு ஏற்ப நாடவில்லை என்பதுதான் காரியம். எனக்கு ஜனங்களின் கருத்துகளோ அல்லது எண்ணங்களோ தேவையில்லை, உங்கள் பணம் அல்லது உங்கள் உடைமைககளும் தேவையில்லை. நான் விரும்புவது உங்கள் இருதயத்தை தான். உங்களுக்குப் புரிகிறதா? இது என்னுடைய சித்தம்; மேலும், இதைத் தான் நான் பெற விரும்புகிறேன். ஜனங்கள் எப்பொழுதும் என்னைத் நியாயந்தீர்ப்பதற்கு தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள், மேலும் எனது வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு தங்கள் அளவுகோல்களைப் பயன்படுத்துகிறார்கள். இது தான் மனுக்குலத்திடம் சமாளிப்பதற்கு மிகவும் கடினமான விஷயம், இதை நான் மிகவும் அருவருத்து, வெறுத்து ஒதுக்குகிறேன். இப்போது பார்க்கிறீர்களா? ஏனென்றால் இது சாத்தானின் மிக வெளிப்படையான மனநிலையாகும். மேலும், இவ்வளவு சிறிய வளர்ச்சியுடைய நீங்கள், அடிக்கடி சாத்தானின் வஞ்சகமான திட்டங்களில் விழுகிறீர்கள். நீங்கள் வெறுமனே அவற்றைப் பகுத்துணர முடியாது! சாத்தானால் வஞ்சிக்கப்படக்கூடாது என்பதற்காக, எல்லா நேரங்களிலும் எல்லா விதங்களிலும் ஜாக்கிரதையாக இருக்குமாறு நான் உங்களிடம் பலமுறை கூறியுள்ளேன். இருப்பினும், நான் சொல்வதை நீங்கள் கேட்காமல், சாதாரணமாகப் புறக்கணித்தீர்கள். இதன் விளைவாக, நீங்கள் வாழ்க்கையில் இழப்புகளைச் சந்திக்கிறீர்கள், பின்னர் வருத்தப்படுவது பிரயோஜனமற்றதாகி விடுகிறது. உங்கள் எதிர்காலத் தேடுதலுக்கான பாடமாக இதை எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒரு மிகச் சிறந்த யோசனையாக இருக்காதா? நான் உனக்குச் சொல்லுகிறேன்! எதிர்மறைக்கு ஆளாகி இருப்பது உங்கள் வாழ்க்கையில் மிகவும் தீவிரமான இழப்புகளை ஏற்படுத்தும். இதை அறிந்திருக்கையில், இது நீங்கள் விழிக்க வேண்டிய நேரம் இல்லையா?

உடனடி பலனுக்காக ஜனங்கள் பொறுமையிழந்துள்ளனர், மேலும் அவர்கள் தங்களுக்கு முன்னால் இருப்பதை மட்டுமே பார்க்கிறார்கள். நான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்க ஆரம்பித்து விட்டேன் என்று நான் கூறும்போது, நீங்கள் மேலும் கவலையுள்ளவர்களாகி, “ஏன் அந்த மனிதர்கள் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்? தேவனுடைய வார்த்தைகள் வெறுமையானவை என்று இது அர்த்தப்படுத்துகிறதல்லவா?” என்று கேட்கிறீர்கள். மனிதக் கருத்துக்கள் மிகவும் வேரூன்றியுள்ளன! நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரியவில்லை. நான் தண்டிக்கும் ஜனங்கள் பொல்லாதவர்கள், என்னை எதிர்த்து நிற்பவர்கள், என்னை அறியாதவர்கள், சத்தியத்தைத் தேடாமல் வெறுமனே என்னை விசுவாசிப்பவர்களை நான் புறக்கணிக்கிறேன். நீங்கள் மெய்யாகவே அறியாதவர்களாக இருக்கிறீர்கள்! நான் சொன்னதில் ஒரு சிறிய விஷயத்தைக் கூட நீங்கள் புரிந்து கொள்ளவில்லை! ஆயினும்கூட, நீங்கள் முதிர்ச்சியடைந்து விட்டதாகவும், நீங்கள் விஷயங்களைப் புரிந்து கொள்வதாகவும், என்னுடைய சித்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது என்று நினைத்து, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்கள். எல்லாப் பொருள்களும் விஷயங்களும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கின்றன என்று நான் அடிக்கடி சொல்கிறேன், ஆனால் நீங்கள் இந்த வார்த்தைகளை உண்மையாகப் புரிந்து கொள்கிறீர்களா? அவற்றுக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? நான் யாரையும் அவசரப்பட்டுத் தண்டிப்பதில்லை என்று முன்பே கூறியுள்ளேன். பிரபஞ்ச உலகில் உள்ள ஒவ்வொருவரும் எனது சரியான ஏற்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள். என் தண்டனையின் பொருளாக இருப்பவர்கள், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்பவர்கள் (நான் இரட்சிக்காதவர்கள்), என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், மற்றும் என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆனால் பின்னர் புறம்பாக்கப்பட வேண்டும்—இவை அனைத்தையும் நான் எனது கரங்களில் வைத்திருக்கிறேன், தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக நான் இன்னும் அதிகமாகப் புரிந்து கொண்ட உன்னைக் குறிப்பிடவில்லை. இந்தக் கட்டத்திலும் அடுத்த கட்டத்திலும் நான் செய்யும் அனைத்து விஷயங்களும் எனது ஞானமான ஏற்பாடுகளுக்கு ஏற்ப உள்ளன. நீ எனக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை; வெறுமனே காத்திருந்து களிகூரு! இது உனக்குத் தகுதியான ஒன்று. என்னுடையதை நான் ஆதிக்கம் செலுத்துகிறேன், முறையிடத் துணிந்தவர்களை அல்லது என்னைப் பற்றி வேறு கருத்துக்களைக் கொண்டவர்களை நான் தண்டிக்காமல் விடுவதில்லை. இந்த நாட்களில் நான் அடிக்கடி அதிகக் கோபம் அடைகிறேன், ஆட்சிமுறை ஆணைகளின் திட்டத்துடன் நான் இந்த நிலைக்கு முன்னேறியுள்ளேன். எனக்கு எந்த உணர்வும் இல்லை என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், எந்த ஒரு பொருளும், நபரும் அல்லது நிகழ்வும் எனது முன்னேறத்தைத் தடுக்கத் துணிய முடியாது. நான் சொல்வதைச் செய்கிறேன், இதுதான் நான்; மேலும், இது எனது மனநிலையின் மிகவும் காணக் கூடிய வெளிப்பாடு. நான் எல்லா ஜனங்களையும் ஒரே மாதிரியாக நடத்துகிறேன், ஏனென்றால் நீங்கள் அனைவரும் என் குமாரர்கள், நான் உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். எந்தத் தந்தை தன் மகனுடைய வாழ்க்கைக்குப் பொறுப்பேற்காமல் இருப்பார்? எந்தத் தந்தை தன் மகனின் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் கடினமாக உழைக்காமல் இருப்பார்? உங்களில் யார் இதை அங்கீகரிக்கிறார்கள்? எனது இருதயத்தை யாரால் கவனிக்க முடியும்? நீங்கள் உங்கள் சுய சரீர இன்பங்களுக்காக தொடர்ந்து திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செய்கிறீர்கள், என் இருதயத்தில் இருக்கிறதைக் குறித்து உங்களுக்கு எந்த உணர்வுமில்லை. நான் உங்களுக்காக என் இருதயத்தை நொறுக்கிக் கலங்கினேன், ஆனால் நீங்களோ சரீர இன்பங்களுக்கும், புசிப்புக்கும் குடிப்புக்கும், தூக்கத்துக்கும் மற்றும் ஆடைகளுக்கும் தொடர்ந்து ஏங்குகிறீர்கள். உங்களுக்கு மனசாட்சி சிறிதும் இல்லையா? இப்படி இருந்தால், நீங்கள் மனித வடிவில் இருக்கும் மிருகங்களே. நான் சொல்வது தகாதது அல்ல, இந்த வார்த்தைகளை நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். உங்களைக் இரட்சிக்க இதுவே சிறந்த வழி, மேலும், இங்கு தான் என் ஞானம் இருக்கிறது: சாத்தானுடைய முக்கியமான பலவீனத்தைத் தாக்கி, அதை முற்றிலுமாகத் தோற்கடித்து, முற்றிலும் அழித்து விடு. நீ மனந்திரும்பி, உன் பழைய சுபாவத்தை நீக்கி, ஒரு புதிய நபரின் சாயலுடன் வாழ்ந்திட என்னை சார்ந்து இருப்பதை உறுதிசெய்யும் வரை, நான் முழுமையாகத் திருப்தி அடைவேன், ஏனெனில் இதுதான் சாதாரண மனிதத்தன்மையுடன் வாழ்வது மற்றும் என் நாமத்துக்கு சாட்சிப் பகருவதைக் குறிக்கிறது. வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை.

நீங்கள் எப்போதும் எனக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். நாளுக்கு நாள் என் வேகம் அதிகரிப்பது தெளிவாகிறது. ஒரு நொடிகூட நீங்கள் ஆவிக்குரிய ஐக்கியத்தில் இல்லாவிட்டால், உடனடியாக எனது நியாயத்தீர்ப்பு உங்கள் மீது சுமத்தப்படும். இந்த விஷயத்தில், நீ ஆழ்ந்த உணர்தலைப் பெற்றுள்ளாய். நான் உன்னை நேசிக்காததினால் நான் உன்னைச் சிட்சிக்கவில்லை, மாறாக நான் உன்னை அன்பினால் தண்டித்துத் திருத்துகிறேன். இல்லையெனில், நீ வளர மாட்டாய், மேலும் பரிசுத்த ஆவியின் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் நீ எப்பொழுதும் சீர்கெட்டு இருப்ப்பாய். இது எனது ஞானத்தை மேலும் நிரூபிக்கிறது.

முந்தைய: அத்தியாயம் 60

அடுத்த: அத்தியாயம் 62

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக