வேதாகமத்தைக் குறித்து (2)

பழைய மற்றும் புதிய ஏற்பாடு எனவும் வேதாகமம் அழைக்கப்படுகிறது. “ஏற்பாடு” என்பது எதைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள “ஏற்பாடு” என்பது யேகோவா எகிப்தியர்களைக் கொன்று இஸ்ரவேலரைப் பார்வோனிடமிருந்து இரட்சித்தபோது, அவர் இஸ்ரவேல் ஜனங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையிலிருந்து வருகிறது. நிச்சயமாகவே, இந்த உடன்படிக்கைக்கான ஆதாரமாக வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டங்களில் பூசப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் இருந்தது, இதன் மூலமாக தேவன் மனிதனுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார், இதில் ஒன்று, வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டங்கள் மற்றும் வாசலின் பக்கவாட்டு நிலைக்கால்கள் ஆகியவற்றின் மீது ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைக் கொண்டிருக்கிற அனைவரும் இஸ்ரவேலர் என்றும், இவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும், இவர்கள் அனைவரும் யேகோவாவால் கொன்றுபோடப்படமாட்டார்கள் (ஏனென்றால், எகிப்தின் முதற்பேறான குமாரர்கள், முதற்பேறான ஆடு, மிருகஜீவன்கள் அனைத்தையும் யேகோவா கொன்றுபோடவிருந்தார்) என்றும் சொல்லப்பட்டது. இந்த உடன்படிக்கை இரு நிலையிலான அர்த்தங்களைக் கொண்டுள்ளது. எகிப்தின் ஜனங்கள் அல்லது மிருகஜீவன்கள் என ஒருவரும் யேகோவாவால் விட்டுவைக்கப்பட மாட்டார்கள்; அவர்களுடைய முதற்பேறான குமாரர்கள், ஆடு மற்றும் மிருகஜீவன்கள் தலையீற்றனைத்தையும் அவர் கொன்றுபோடுவார். இவ்வாறு, யேகோவாவினுடைய உடன்படிக்கையின் காரணமாக எகிப்தியர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்று பல தீர்க்கதரிசன புத்தகங்களில் முன்னறிவிக்கப்பட்டது. இது உடன்படிக்கையின் முதல் நிலை அர்த்தமாகும். யேகோவா எகிப்தின் முதற்பேறான குமாரர்களையும் அதன் மிருகஜீவன்களின் தலையீற்றையும் கொன்றுபோட்டார், இஸ்ரவேலர் அனைவரையும் அவர் தப்பிக்கப் பண்ணினார். இதன் அர்த்தம் என்னவென்றால் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் யேகோவாவால் பேணி பாதுகாக்கப்பட்டனர், அவர்கள் அனைவரும் கொல்லப்படாமல் தப்புவிக்கப்பட்டார்கள்; அவர் அவர்களிடம் நீண்டகாலம் கிரியை செய்ய விரும்பினார், மேலும் அவர் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பயன்படுத்தி அவர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து, யேகோவா இஸ்ரவேலரைக் கொன்றுபோடாமல், அவர்கள் என்றென்றும் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று சொன்னார். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் நடுவே, அவர் நியாயப்பிரமாண காலம் முழுவதுக்குமான தமது கிரியையைத் துவங்கி, அவர் தமது நியாயப்பிரமாணங்கள் எல்லாவற்றையும் இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தி, அவர்களுக்கு மத்தியில் தீர்க்கதரிசிகளையும் நியாயாதிபதிகளையும் தெரிந்துகொண்டார், இவர்களே அவருடைய கிரியையின் மையமாக இருந்தனர். யேகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்: காலம் மாறாத வரை, அவர் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் நடுவே மட்டுமே கிரியை செய்தார். யேகோவாவின் உடன்படிக்கை மாறாததாக இருந்தது. ஏனென்றால், இந்த உடன்படிக்கை இரத்தத்தில் செய்துகொள்ளப்பட்டது, இது அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களுடன் ஏற்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, முழு காலத்திற்கும் அவருடைய கிரியையைத் துவங்குவதற்கான பொருத்தமான நோக்கத்தையும் இலக்கையும் அவர் தேர்ந்தெடுத்தார், ஆகவேதான் ஜனங்கள் உடன்படிக்கையை விசேஷித்த முறையில் முக்கியமானதாகக் கருதினர். இது உடன்படிக்கையின் இரண்டாம் நிலை அர்த்தமாகும். உடன்படிக்கை ஏற்படுத்தப்படுவதற்கு முன்பே இருந்த ஆதியாகமத்தைத் தவிர, பழைய ஏற்பாட்டிலுள்ள மற்ற எல்லா புத்தகங்களும் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பிறகே இஸ்ரவேலர் நடுவே தேவன் செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. நிச்சயமாகவே, புறஜாதியார் பற்றிய சில விவரங்கள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்தமாக, பழைய ஏற்பாடானது இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியையையே ஆவணப்படுத்துகிறது. இஸ்ரவேலருடன் யேகோவா செய்துகொண்ட உடன்படிக்கையின் காரணமாக, நியாயப்பிரமாண காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இஸ்ரவேலருடன் யேகோவா செய்துகொண்ட உடன்படிக்கையே அவற்றுக்குப் பெயராக சூட்டப்பட்டுள்ளன.

இயேசு சிலுவையில் சிந்திய இரத்தம் மற்றும் அவரை விசுவாசித்த அனைவருடனும் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையே புதிய ஏற்பாட்டிற்குப் பெயராக சூட்டப்பட்டுள்ளது. இயேசுவின் உடன்படிக்கை இதுதான்: அவர் சிந்திய இரத்தத்தின் காரணமாக ஜனங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர்கள் அவரை விசுவாசிக்க வேண்டியதிருந்தது, இவ்வாறு அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள், அவர் மூலமாக மறுபடியும் பிறப்பார்கள், இனிமேலும் பாவிகளாக இருக்க மாட்டார்கள்; ஜனங்கள் அவருடைய கிருபையைப் பெறுவதற்கு அவரை விசுவாசிக்க வேண்டியதிருந்தது, ஆனால் அவர்கள் மரித்த பிறகு நரகத்தில் துன்பப்பட மாட்டார்கள். கிருபையின் காலத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் எல்லாமே இந்த உடன்படிக்கைக்குப் பிறகு வந்தவையாகும். இவை அனைத்தும் அதில் உள்ள கிரியையையும் வார்த்தைகளையும் ஆவணப்படுத்துகின்றன. இவை கர்த்தராகிய இயேசுவின் சிலுவை மரணத்திலான இரட்சிப்பு அல்லது உடன்படிக்கையைத் தாண்டிச் செல்வதில்லை. இவை அனைத்துமே கர்த்தருக்குள் அனுபவங்களைப் பெற்ற சகோதரர்களால் எழுதப்பட்ட புத்தகங்களாகும். ஆகவே, இந்த புத்தகங்களுக்கும் உடன்படிக்கை என்று பெயரிடப்பட்டுள்ளன: இவை புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏற்பாடுகளிலும் நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் மட்டுமே அடங்கும், இறுதிக் காலத்துடன் இதற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. ஆகவே, கடைசி நாட்களைச் சேர்ந்த இன்றைய ஜனங்களுக்கு வேதாகமம் பெரிதாக ஒன்றும் பிரயோஜனமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு தற்காலிக குறிப்பாக செயல்படுகிறது, ஆனால் இது அடிப்படையில் குறைவான பயன்பாட்டு மதிப்பைக் கொண்டுள்ளது. ஆனாலும், மதவாத ஜனங்கள் இதை இன்னும் மாபெரும் பொக்கிஷமாகக் கருதுகின்றனர். அவர்களுக்கு வேதாகமத்தைப் பற்றி தெரியாது. வேதாகமத்தை எவ்வாறு விளக்குவது என்று மட்டுமே அவர்களுக்கு தெரியும், அது உருவான விதங்கள் பற்றி அடிப்படையில் அவர்களுக்கு எதுவுமே தெரியாது. வேதாகமத்தைப் பற்றிய அவர்களுடைய மனநிலை: வேதாகமத்திலுள்ள எல்லாமே சரி, அதில் எந்தவிதமான தவறுகளோ அல்லது பிழைகளோ கிடையாது. வேதாகமம் சரியானது மற்றும் பிழையில்லாதது என்று அவர்கள் முதலில் தீர்மானித்திருப்பதால், அவர்கள் அதை மிகுந்த ஆர்வத்துடன் படித்து ஆராய்கின்றனர். இன்றைய கட்ட கிரியைப் பற்றி வேதாகமத்தில் முன்னறிவிக்கப்படவில்லை. ஜெயங்கொள்ளுதல் கிரியையைப் பற்றி ஒருபோதும் ஓர் இடத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஏனென்றால் இதுதான் சமீபத்திய கிரியையாகும். கிரியையின் காலம் வேறுபட்டிருப்பதால், கடைசி நாட்களில் செய்யப்படும் இந்தக் கட்ட கிரியையைப் பற்றி இயேசுவே கூட அறிந்திருக்கவில்லை. அப்படியானால் வேதாகமத்தை ஆராய்வதன் மூலம் எப்படிக் கடைசி நாட்களின் ஜனங்களால் இந்தக் கட்ட கிரியையை வேதாகமத்தில் கண்டுபிடிக்க முடியும்?

வேதாகமத்தை விளக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் தர்க்கரீதியான ஊகத்தையே பயன்படுத்துகின்றனர், உண்மையான பின்புலத்தைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. பல விஷயங்களை ஊகிக்க இவை தர்க்கத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. இத்தனை ஆண்டுகாலமாக, வேதாகமத்தைப் புறக்கணிக்கவோ அல்லது வேதாகமம் “வேண்டாம்” என்று சொல்லவோ ஒருவரும் துணிந்ததில்லை, ஏனென்றால் இப்புத்தகம் “புனித நூல்” ஆகும் மற்றும் ஜனங்கள் அதை தேவனாக ஆராதிக்கின்றனர். இதுவே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது. ஒருவரும் தேவனுக்கு செவிசாய்க்கவில்லை, மேலும் வேதாகமத்தின் உள் கதையை கண்டுபிடிக்கவில்லை. வேதாகமத்தைப் பொக்கிஷமாகக் கருதுவதை விக்கிரக ஆராதனை என்று நாங்கள் சொல்கிறோம், ஆனால் அந்த பக்தியுள்ள விசுவாசிகளில் ஒருவரும் அதை இவ்விதமாகப் பார்க்கத் துணியவில்லை, அவர்கள் உன்னிடம் சொல்வார்கள்: “சகோதரனே! அப்படிச் சொல்லாதே, அது மோசமானது! உன்னால் எப்படி தேவனுக்கு எதிராக தேவதூஷணம் சொல்ல முடிகிறது?” அடுத்தது அவர்கள் ஒரு வேதனையான வெளிப்பாட்டை பின்பற்றுவார்கள்: “ஓ இரக்கமுள்ள இயேசுவே, இரட்சிப்பின் கர்த்தாவே, நீர் அவனுடைய பாவங்களை மன்னித்தருளும்படியாக நான் உம்மிடம் கெஞ்சுகிறேன், ஏனென்றால் நீர் மனிதனை நேசிக்கும் கர்த்தர், நாங்கள் எல்லோரும் பாவம் செய்தோம். தயவுசெய்து எங்கள் மீது மிகுந்த இரக்கம் காட்டும், ஆமென்.” அவர்கள் இவ்வாறுதான் “பக்தியுள்ளவர்களாக” இருக்கின்றனர். சத்தியத்தை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு எப்படி எளிதாக இருக்கும்? நீ சொல்வது அவர்களை முட்டாள்தனமாகவே பயமுறுத்தும். மனித எண்ணங்கள் மற்றும் மனித கருத்துக்கள் மூலம் வேதாகமம் கறைப்படுத்தப்படலாம் என்று ஒருவரும் சிந்திக்கத் துணிய மாட்டார்கள், இந்தக் கறையை ஒருவராலும் பார்க்க முடிவதில்லை. வேதாகமத்தில் உள்ளவற்றில் சில தனிநபர்களின் அனுபவங்களும் அறிவுமாகும். அவற்றில் சில பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியுமாகும். மனித அறிவாற்றல் மற்றும் சிந்தனையினாலான கலப்படமும் உள்ளன. தேவன் இந்த விஷயங்களில் ஒருபோதும் தலையிட்டதில்லை, ஆனால் ஒரு வரம்பு உள்ளது: இந்த விஷயங்கள் சாதாரண ஜனங்களின் சிந்தனையை மிஞ்ச முடியாது. அவை அவ்வாறு மிஞ்சினால், அவை தேவனுடைய கிரியையில் குறுக்கிட்டு இடையூறு செய்கின்றன. சாதாரண ஜனங்களின் சிந்தனையை மிஞ்சுவது சாத்தானின் கிரியையாகும், ஏனென்றால் அது ஜனங்களை தங்களுடைய கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறது, இது சாத்தானின் கிரியையாகும், இது சாத்தானால் வழிநடத்தப்படுகிறது. மேலும், இந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் உன்னை இவ்விதமாகச் செயல்பட அனுமதிக்க மாட்டார். சில சமயங்களில், சில சகோதர சகோதரிகள் சொல்கின்றனர்: “நான் இத்தகையதொரு விதத்தில் கிரியை செய்வது சரியா?” நான் அவர்களுடைய வளர்ச்சியைப் பார்த்து சொல்கிறேன்: “சரிதான்!” இவ்வாறு சொல்லும் சிலரும் உள்ளனர்: “நான் இத்தகையதொரு விதத்தில் கிரியை செய்தால், என் நிலை சாதாரணமானதாக இருக்கிறதா?” நான் சொல்கிறேன்: “ஆமாம்! அது சாதாரணமானதாகத்தான், மிகவும் சாதாரணமானதாகத்தான் இருக்கிறது!” மற்றவர்கள் சொல்கின்றனர்: “நான் இவ்விதமாக கிரியை செய்வது எனக்கு சரியாக இருக்கிறதா?” நான் சொல்கிறேன்: “இல்லை!” அவர்கள் சொல்கின்றனர்: “அவருக்கு சரியாக இருக்கிறது, எனக்கு ஏன் சரியாக இல்லை?” நான் சொல்கிறேன்: “ஏனென்றால் நீ செய்வது சாத்தானிடமிருந்து வருகிறது, இது ஒரு தொந்தரவாகும். மேலும், உனது நோக்கத்தின் மூலக்காரணம் தவறானதாகிறது.” கிரியைகள் வெகுதூரம் செல்லாத தருணங்களும் உள்ளன, சகோதர சகோதரிகளுக்கு இது தெரிவதில்லை. ஒரு குறிப்பிட்ட விதத்தில் கிரியை செய்வது சரியா என்று சிலர் என்னிடம் கேட்கின்றனர். அவர்களுடைய செயல்கள் எதிர்காலக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது என்பதை நான் பார்க்கும்போது, அது நன்றாக இருக்கிறது என்று நான் சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் கிரியை ஜனங்களுக்கு ஒரு நோக்கத்தைக் கொடுக்கிறது. ஜனங்கள் பரிசுத்த ஆவியின் விருப்பங்களைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டியதில்லை. ஏனென்றால், ஜனங்கள் சாதாரணச் சிந்தனையையும் பெலவீனத்தையும் கொண்டிருக்கின்றனர், அவர்களுக்கு சில மாம்சப் பிரகாரமான தேவைகள் உள்ளன, அவர்களுக்கு உண்மையான பிரச்சினைகள் உள்ளன, மேலும் அவர்களுடைய மூளையில் அவர்களால் அடிப்படையில் கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லாத சிந்தனைகள் உள்ளன. நான் ஜனங்களிடம் கேட்கும் எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது. சிலர் எனது வார்த்தைகள் புரிந்துகொள்ள முடியாதவையாக இருப்பதாக நம்புகின்றனர், ஆகையால் நான் அவர்களிடம் எவ்விதத்திலும் செயல்படுமாறு சொல்கிறேன். ஏனென்றால், எனது கோரிக்கைகளுக்கு ஒரு பொருத்தமான நோக்கம் இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை. அது நீ கற்பனை செய்வதுபோல இருந்தால், நான் எல்லா ஜனங்களிடமும் விதிவிலக்கு இல்லாமல் ஒரே கோரிக்கைகளை வைத்து, எல்லோரையும் ஒரே மாதிரியான வளர்ச்சியை அடையுமாறு அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தால், இது வேலைக்கு ஆகியிருக்காது. இது சாத்தியமற்றதைக் கேட்பதாகும், இது மனித கிரியையின் கொள்கையாகும், தேவனுடைய கிரியையின் கொள்கை அல்ல. தேவனுடைய கிரியையானது ஜனங்களின் உண்மையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப செய்யப்படுகிறது மற்றும் இது அவர்களுடைய உள்ளார்ந்த திறனை அடிப்படையாகக் கொண்டதாகும். சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான கொள்கையும் இதுதான்: நீ மெதுவாக பின்தொடர வேண்டும், இயற்கையை அதன் வழியில் செல்ல அனுமதிக்க வேண்டும். நீ ஒருவரிடம் சத்தியத்தைப் பேசும்போது மட்டுமே அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள், மேலும் அந்த நேரத்தில் மட்டுமே அவர்களால் வேதாகமத்தை ஒதுக்கி வைக்க முடியும். தேவன் இந்தக் கட்ட கிரியையைச் செய்யவில்லை என்றால், யாரால் வழக்கமான முறையை உடைக்க முடியும்? யாரால் புதிய கிரியையைச் செய்ய முடியும்? யாரால் வேதாகமத்திற்கு வெளியே ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்க முடியும்? ஜனங்களுடைய பாரம்பரியக் கருத்துக்கள் மற்றும் நிலப்பிரபுத்துவ நெறிமுறைகள் அருவருப்பானவையாக இருப்பதனால், இந்த விஷயங்களைத் தாங்களாகவே தூக்கி எறியும் திறன் அவர்களுக்கு இல்லை, அவ்வாறு செய்வதற்கு அவர்களிடம் தைரியமும் இல்லை. இன்றைய ஜனங்கள் வேதாகமத்திலுள்ள சில உயிரற்ற வார்த்தைகளால், தங்கள் இருதயங்களை ஆக்கிரமித்துள்ள வார்த்தைகளால் எவ்வாறு சிறைபிடிப்பட்டுள்ளனர் என்பது பற்றி எதுவும் கூற முடியாது. அவர்களால் எப்படி வேதாகமத்தை விட்டுவிட தயாராக இருக்க முடியும்? வேதாகமத்திற்கு வெளியே உள்ள ஒரு வழியை அவர்களால் எப்படி எளிதில் ஏற்றுக்கொள்ள முடியும்? வேதாகமத்தின் உள் கதையையும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக் குறித்த கொள்கைகளையும் உன்னால் தெளிவாகப் பேச முடியாத வரை, எல்லா ஜனங்களும் அதை முழுமையாக நம்புகின்றனர், இது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், மதத்திற்குள் உள்ள எல்லோரும் வேதாகமத்தை ஆராதிக்கின்றனர், அதை தேவனாக ஆராதிக்கின்றனர். அவர்கள் தேவனை வேதாகமத்திற்குள் அடக்கி வைக்கவும் முயற்சி செய்கின்றனர். மேலும், அவர்கள் தேவனை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்தவுடன் மட்டுமே அவர்கள் தங்கள் நோக்கங்களை அடையும் நிலையாகவும் இது இருக்கிறது.

முந்தைய: வேதாகமத்தைக் குறித்து (1)

அடுத்த: வேதாகமத்தைக் குறித்து (3)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக