பாதை … (8)

மனிதகுலத்துடன் தொடர்பு கொள்ளவும் ஜனங்களுடன் வாழவும் தேவன் பூமிக்கு வந்து வெறும் ஓரிரு நாட்கள் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை, இந்த நேரத்தில், ஜனங்கள் தேவனைப் பற்றிய அதிகமான அறிவை அடைந்து, ஒருவேளை அவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றி சில நுண்ணறிவுகளை அதிகமாகவே பெற்று, மேலும் அவர்கள் தேவன் மீதான நம்பிக்கையில் அனுபவம் பெற்றவர்களாக ஆகிறார்கள். எதுவாக இருந்தாலும், ஜனங்கள் தேவனுடைய மனநிலையை அதிகமாகவோ அல்லது கொஞ்சமாகவோ புரிந்துகொள்கிறார்கள், மேலும் அவர்கள் தங்கள் சொந்த மனநிலையை எண்ணற்ற வழிகளில் வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நான் அதைப் பார்க்கும் விதத்தில், ஜனங்களின் வெவ்வேறு வெளிப்பாடுகளானது தேவன் மாதிரிகளாகப் பயன்படுத்த போதுமானவையாக இருக்கின்றன, மேலும் அவர்களின் மன செயல்பாடுகள் அவர் குறிப்பிற்காகப் பயன்படுத்தப் போதுமானவைகளாக இருக்கின்றன. இது மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஓர் அம்சமாக இருக்கலாம், அது மனுஷனுக்குத் தெரியாத ஒன்று, தேவனால் இயக்கப்பட்ட இந்தச் செயல்பாட்டை மிகவும் தெளிவானதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது. இந்த நாடகத்தின் ஒரு பொது இயக்குனராக இருந்து என் சகோதர சகோதரிகளிடம் நான் இந்த விஷயங்களைச் சொல்கிறேன்—இதைச் செயல்படுத்திய பிறகு நம்மில் ஒவ்வொருவரும் நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் பேச முடியும், மேலும் இந்த நாடகத்திற்குள் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறோம் என்பதைப் பற்றி அரட்டை அடிக்கலாம். அதோடுகூட நம் இருதயங்களைத் திறந்து, நம் நாடகக் கலைகளைப் பற்றிப் பேசுவதற்கும், மேலும் தேவன் ஒவ்வொரு தனிநபரையும் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதைப் பார்ப்பதற்கும் முற்றிலும் புதிய வகையான கருத்தரங்கத்தைப் பெற்றிருக்கலாம், இதனால் அடுத்த கட்ட காட்சியில், நாம் நம்முடைய உச்சக்கட்டமான கலையை வெளிப்படுத்த முடியும், மேலும் ஒவ்வொருவரும் இயன்றவரை மிக அதிகமாக நம்முடைய பங்கை ஆற்ற முடியும், மேலும் தேவனை ஏமாற்றாமல் இருக்க முடியும். எனது சகோதர சகோதரிகள் இதை முக்கியமானதாக எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். யாரும் அதை லேசாகக் கருதக்கூடாது, ஏனென்றால் ஒரு பகுதியை நன்றாக நடிப்பது என்பது ஓரிரு நாட்களில் அடையக்கூடிய ஒரு விஷயமல்ல; அது, நாம் வாழ்க்கையை அனுபவித்து, நீண்ட காலத்திற்கு நம் யதார்த்த வாழ்க்கைக்குள்ளாக ஆழமாக செல்ல வேண்டும் என்பதையும், மேலும் வாழ்க்கையின் பல்வேறு வகையான நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அப்போதுதான் நாம் மேடையில் ஏற முடியும். எனது சகோதர சகோதரிகள் மீதான நம்பிக்கையினால் நான் நிறைந்திருக்கிறேன். தேவன் என்ன செய்தாலும் நீங்கள் மனமுடைந்துபோகவோ அல்லது சோர்வடையவோ மாட்டீர்கள் என்றும், நீங்கள் முடிவுபரியந்தம், தேவனுடைய கிரியை முழுமையாக வெளிப்படும் வரை, தேவன் இயக்கும் நாடகம் அதன் இறுதி முடிவுக்கு வரும் வரை ஒரு போதும் அனல் குறைந்து போகாமல், இறுதிவரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிற அக்கினிக் கலனைப் போல இருப்பீர்கள் என்றும் நான் நம்புகிறேன். நான் உங்களிடம் வேறு எதையும் கேட்பதில்லை, நீங்கள் சகித்துக் கொள்வீர்கள், முடிவுகளுக்காக நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்கள், நான் செய்ய வேண்டிய கிரியையை நன்றாகச் செய்யும்படி நீங்கள் என்னுடன் ஒத்துழைப்பீர்கள், மற்றும் ஒருவரும் குறுக்கீடுகளையோ அல்லது தொந்தரவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்று நான் நம்புகிறேன். கிரியையின் இந்தப் பகுதி முடிந்ததும், தேவன் உங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்துவார். என் கிரியை முடிந்தவிட்ட பிறகு, தேவனுக்குக் கணக்குக் ஒப்புவிப்பதற்காக உங்கள் மதிப்பீட்டை அவருக்கு முன்பாக நான் சமர்ப்பிப்பேன். அது சிறந்ததல்லவா? நமது சொந்த குறிக்கோள்களை அடைய ஒருவருக்கொருவர் உதவுதல்—இது அனைவருக்கும் மிகச்சரியான தீர்வு அல்லவா? இப்போது ஒரு கடினமான நேரம், நீங்கள் விலைக்கிரயம் செலுத்த வேண்டியதான ஒன்றாக இருக்கிறது. நான் இப்போது இயக்குநராக இருப்பதால், உங்களில் ஒருவரும் இதனால் எரிச்சல் அடைவதில்லை என்று நம்புகிறேன். நான் செய்யும் கிரியை அப்படிப்பட்டது. ஒருவேளை, ஒரு நாள், நான் மிகவும் பொருத்தமான “கிரியை அலகுக்கு” மாறுவேன், இனிமேல் உங்களுக்கு விஷயங்களைக் கடினமானதாக ஆக்கமாட்டேன். நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன் மற்றும் நீங்கள் எதைக் கேட்க விரும்புகிறீர்களோ அதை உங்களுக்கு அளிப்பேன். ஆனால் இப்போது இல்லை. இன்றைய கிரியையானது இந்தக் கிரியையே, நான் உங்களுக்கு இலவச கடிவாளத்தைக் கொடுக்க முடியாது மற்றும் நீங்கள் விரும்பும் எதையும் செய்ய அனுமதிக்க முடியாது. அது என் கிரியையைக் கடினமாக்கும்; உண்மையைச் சொல்வதானால், அது எந்தக் கனியையும் தராது, அதிலிருந்து உங்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. எனவே இன்று, நீங்கள் “அநீதியைச்” சகித்துக்கொள்ள வேண்டும். நாள் வரும்போது, என் கிரியையின் இந்தக் கட்டம் முழுமையடைந்ததும், நான் சுதந்திரமாக இருப்பேன், நான் இத்தகைய பாரத்தை சுமக்க மாட்டேன், மேலும் நீங்கள் என்னிடம் என்ன கேட்டாலும் நான் அதற்கு இணங்குவேன்; அது உங்கள் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் வரை, நீங்கள் கேட்பதை நான் நிறைவேற்றுவேன். இன்று, நான் ஒரு பெரிய பொறுப்பை எடுத்திருக்கிறேன். பிதாவாகிய தேவனுடைய கட்டளைகளுக்கு எதிராக என்னால் செல்ல முடியாது, எனது கிரியைக்கான திட்டங்களை என்னால் முடக்க முடியாது. எனது தனிப்பட்ட விவகாரங்களை தொழில் விவகாரங்கள் மூலமாக என்னால் நிர்வகிக்க முடியாது—மேலும் நீங்கள் அனைவரும் என்னைப் புரிந்துகொண்டு மன்னிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் நான் செய்வது எல்லாம் பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படிதான்; அவர் எனக்காக எதை வைத்திருக்கிறாரோ அதையே செய்கிறேன், அவர் எதை விரும்பினாலும், அவருடைய கோபத்தையோ அல்லது அவருடைய உக்கிரத்தையோ நான் தூண்டிவிடமாட்டேன். நான் செய்ய வேண்டியதை மட்டுமே செய்கிறேன். எனவே, பிதாவாகிய தேவனுடைய சார்பாக, இன்னும் சிறிது காலம் பொறுத்துக்கொள்ளுமாறு நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஒருவரும் கவலைப்படத் தேவையில்லை. நான் செய்ய வேண்டியதை நான் செய்து முடித்த பிறகு, நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதைச் செய்யலாம் மற்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதைப் பார்க்கலாம்—ஆனால் நான் செய்ய வேண்டிய கிரியையை நான் நிறைவேற்ற வேண்டும்.

கிரியையின் இந்தக் கட்டத்தில் நம்மிடமிருந்து மிகுந்த விசுவாசமும் அன்பும் கேட்கப்படுகிறது. சிறிதளவு கவனக்குறைவினால் கூட நாம் தடுமாறலாம், ஏனென்றால் கிரியையின் இந்தக் கட்டம் முந்தைய எல்லாவற்றிலுமிருந்தும் வேறுபட்டது: தேவன் பூரணப்படுத்துவது மனிதகுலத்தின் விசுவாசத்தையே, இது கண்ணுக்கும் தெரியாது மற்றும் தொட்டுணரவும் முடியாது. தேவன் செய்வது என்னவென்றால், வார்த்தைகளை விசுவாசமாகவும், அன்பாகவும், ஜீவனாகவும் மாற்றுவதுதான். ஜனங்கள் நூற்றுக்கணக்கான சுத்திகரிப்புகளை சகித்து, யோபினுடையதை விட அதிகமான விசுவாசத்தைக் கொண்டிருக்கும் நிலையை அடைய வேண்டும். அவர்கள் ஒருபோதும் தேவனை விட்டு விலகாமல் மிகக் கடினமான துன்பங்களையும் சகலவிதமான சித்திரவதைகளையும் தாங்கிக்கொள்ள வேண்டும். மரணபரியந்தம் அவர்கள் கீழ்ப்படிக்கிறவர்களாய் இருந்து, தேவன் மீது மிகுந்த விசுவாசத்தைவைத்திருக்கும்பொழுது, தேவனுடைய கிரியையின் இந்தக் கட்டம் முழுமையடைகிறது. இது நான் எடுத்துக்கொண்ட கிரியை, எனவே என் சகோதர சகோதரிகள் என் இக்கட்டான நிலையைப் புரிந்துகொள்ளக் கூடும் என்றும், என்னிடமிருந்து வேறு எதையும் கேட்க மாட்டார்கள் என்றும் நம்புகிறேன். இது எனக்கான பிதாவாகிய தேவனுடைய கோரிக்கையாகும், இந்த யதார்த்தத்திலிருந்து என்னால் தப்பிச் செல்ல முடியாது; நான் செய்ய வேண்டிய கிரியையை நான் செய்ய வேண்டும். நீங்கள் கட்டாய வாதங்களையும், வக்கிரமான தர்க்கத்தையும் செய்வதில்லை என்றும், நீங்கள் மிகவும் நுண்ணறிவுள்ளவர்களாய் இருக்கிறீர்கள், மேலும் விஷயங்களை மிகவும் எளிதாகப் பார்ப்பதில்லை என்றும் மட்டுமே நான் நம்புகிறேன். உங்கள் சிந்தனை மிகவும் குழந்தைத்தனமானது, மிகவும் அப்பாவித்தனமாக உள்ளது. தேவனுடைய கிரியையானது நீங்கள் நினைப்பது போல் எளிதல்ல, அவர் என்னவெல்லாம் விரும்புகிறாரோ அதை அவர் அப்படியே செய்வதில்லை; அவர் அப்படிச் செய்தால், அவருடைய திட்டம் பாழாகிவிடும். நீங்கள் அவ்வாறு சொல்ல மாட்டீர்களா? நான் தேவனுடைய கிரியையைச் செய்கிறேன். நான் வெறுமனே ஜனங்ளுக்காக அற்பமான வேலைகளைச் செய்வதில்லை, நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதையே செய்கிறேன் மற்றும் எதையாவது செய்கிறேனா இல்லையா என்பதை நான் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்கிறேன். இன்று விஷயங்கள் அவ்வளவு எளிதல்ல. நான் இயக்குனராக செயல்பட பிதாவால் அனுப்பப்பட்டிருக்கிறேன்—இதை நானே ஏற்பாடு செய்து நானே தேர்ந்தெடுத்தேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மனுஷனின் யோசனைகள் பெரும்பாலும் தேவனுடைய கிரியையைக் குறுக்கிட முனைகின்றன, அதனால்தான், நான் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு கிரியை செய்த பிறகு, ஜனங்களிடமிருந்து வருகிற அநேக கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போகிறது, மேலும் ஜனங்கள் என்னைக் குறித்த சிந்தைகளை மாற்றிக்கொள்கின்றனர். உங்களுடைய இந்த யோசனைகள் பற்றி நீங்கள் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும். நான் அவைகளைத் தனித்தனியாக கொண்டு வரப் போவதில்லை, நான் செய்யும் கிரியையை மட்டுமே என்னால் விளக்க முடியும். எனது உணர்வுகள் இதனால் பாதிக்கப்படவே இல்லை. நீங்கள் அதைப் புரிந்துகொண்டவுடன், எப்படியெல்லாம் நீங்கள் அதை விரும்புகிறீர்களோ அப்படியெல்லாம் நீங்கள் அதைப் பார்க்கலாம். நான் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டேன், ஏனென்றால் தேவன் இப்படித்தான் செயல்படுகிறார்; அதையெல்லாம் விளக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை. வார்த்தைகளின் கிரியையைச் செய்வதற்காகவும், கிரியை செய்து வார்த்தைகளுடைய இயக்கத்தின் வழியே இந்த நாடகம் நடத்தப்பட அனுமதிப்பதற்காகவும் நான் வந்துள்ளேன். எனக்கு வேறு எதையும் பற்றிப் பேசத் தேவையில்லை, என்னால் வேறு எதையும் செய்யவும் முடியாது. நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் நான் விளக்கியிருக்கிறேன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை, அது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் தேவனுடைய கிரியை நீங்கள் நினைப்பது போல் எளிமையானது அல்ல என்பதை நான் இன்னும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஜனங்களின் எண்ணங்களுடன் அது எவ்வளவு குறைவாக ஒத்துப்போகிறதோ, அதன் முக்கியத்துவம் அவ்வளவு ஆழமானது; மேலும் இது ஜனங்களின் எண்ணங்களுடன் எவ்வளவு அதிகமாக ஒத்துப்போகிறதோ, அவ்வளவு குறைந்த மதிப்புடையதாய் இருக்கிறது, அது உண்மையான முக்கியத்துவத்தை மிகவும் குறைவாகப் பெற்றிருக்கிறது. இந்த வார்த்தைகளை கவனமாகக் கருத்தில் கொள்ளுங்கள்—அதைப் பற்றி நான் சொல்வது இதுதான். மீதமுள்ளவற்றை நீங்களே பகுப்பாய்வு செய்யலாம். நான் அதை விளக்கிக் கூற மாட்டேன்.

தேவன் ஒரு குறிப்பிட்ட வழியில் காரியங்களைச் செய்கிறார் என்று ஜனங்கள் கற்பனை செய்கிறார்கள், ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக, தேவனுடைய கிரியையைப் பற்றி நாம் பார்த்த மற்றும் அனுபவித்தவை உண்மையில் மனுஷீக எண்ணங்களுக்கு ஏற்ப இருக்கின்றனவா? உலகத்தின் சிருஷ்டிப்பு முதல் இப்போது வரை, தேவனுடைய கிரியையின் படிகளை அல்லது விதிகளை ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களால் முடிந்தால், இன்று தேவன் இப்படித்தான் கிரியை செய்கிறார் என்பதை அந்த மதத் தலைவர்கள் ஏன் புரிந்துகொள்ளவில்லை? இன்றைய யதார்த்தத்தை மிகக்குறைவான ஜனங்கள் மட்டுமே புரிந்துகொள்வது ஏன்? தேவனுடைய கிரியையை ஒருவரும் புரிந்து கொள்வதில்லை என்பதை இதிலிருந்து நாம் காணலாம். ஜனங்கள் அவருடைய ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி மட்டுமே செயல்பட வேண்டும்; அவர்கள் அவருடைய கிரியைக்கு விதிகளைக் கடுமையாகப் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் இயேசுவின் ரூபத்தையும் கிரியையையும் எடுத்து தேவனுடைய தற்போதைய கிரியையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது யூதர்கள் இயேசுவை யேகோவாவுடன் ஒப்பிட்டுப்பார்க்க முயற்சிப்பது போன்றதாகும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் தோற்றுப்போவதில்லையா? கடைசி நாட்களில் தேவனுடைய கிரியை எப்படி இருக்கும் என்பதை இயேசு கூட அறியவில்லை; அவருக்குத் தெரிந்ததெல்லாம், அவர் சிலுவையில் அறையப்பட வேண்டியதாகிய கிரியையை செய்து முடிக்க வேண்டும் என்பது மட்டுமே. அப்படியிருக்க மற்றவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? எதிர்காலத்தில் தேவன் என்ன கிரியை செய்யப்போகிறார் என்பதை அவர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்? சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட மனுஷர்களுக்கு தேவன் எவ்வாறு தனது திட்டத்தை வெளிப்படுத்த முடியும்? இது முட்டாள்தனம் இல்லையா? அவருடைய சித்தத்தை நீ அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவன் கேட்கிறார். அவருடைய எதிர்காலக் கிரியையை நீ கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்கவில்லை. நாம் தேவன் மீதான விசுவாசத்தில் நம்மைக் குறித்த அக்கறையுடனும், அவருடைய வழிகாட்டுதலின்படி செயல்பட்டு, உண்மையான கஷ்டங்களைக் கையாள்வதில் நடைமுறைக்கு ஏற்ப இருந்து, தேவனுக்கு விஷயங்களைக் கடினமானதாக ஆக்கிவிடாமல் அவருக்குத் தொந்தரவை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும்; தேவனுடைய தற்போதைய கிரியைக்குள் நம்மால் இருக்க முடிந்தால், அதுவே போதும்! நான் உங்களுக்கு வழிகாட்டும் பாதை இதுதான். நாம் தொடர்ந்து முன்நோக்கிச் செல்வதில் மட்டுமே கவனம் செலுத்தினால், தேவன் நம்மில் ஒருவரையும் தவறாக நடத்த மாட்டார். உங்கள் கடந்த வருட அசாதாரண அனுபவங்களில், நீங்கள் அநேக மேலான விஷயங்களைப் பெற்றுள்ளீர்கள்; நீங்கள் அதை மிகவும் கடினமாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் உங்களை வழிநடத்தும் பாதையானது எனது கிரியை மற்றும் எனது ஊழியமாக இருக்கிறது, அது நீண்ட காலத்திற்கு முன்பே தேவனால் நியமிக்கப்பட்டது, அதாவது இன்று வரை நாம் இவ்வளவு தூரம் வருவோம் என்று முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. நம்மால் இதைச் செய்ய முடிந்திருக்கிறது என்பது நமது மிகப்பெரிய ஆசீர்வாதமாகும், அது ஒரு மென்மையான பாதையாக இல்லாவிட்டாலும், நமது நட்பு என்றென்றும் உள்ளது, மேலும் இது பல காலங்களாகக் கடந்து வந்திருக்கிறது. மகிழ்ச்சியும் சிரிப்புமாக இருந்தாலும் சரி அல்லது சோகமும் கண்ணீருமாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் ஓர் அழகான நினைவாக மாறட்டும்! எனது கிரியையின் நாட்கள் மிகக் குறைவானது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். என்னிடம் பல கிரியைகளின் திட்டங்கள் உள்ளன, நான் அடிக்கடி உங்களுடன் கூட வர முடியாது. நீங்கள் என்னைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்—ஏனென்றால் நம் உண்மையான நட்பு மாறிவிடவில்லை. ஒருவேளை ஒரு நாள் நான் மீண்டும் ஒரு முறை உங்கள் முன் தோன்றுவேன், மேலும் நீங்கள் காரியங்களை எனக்கு மிகவும் கடினமானதாக ஆக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். எப்படி இருந்தாலும், நான் உங்களிடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறேன். நான் என் கிரியைக்காக எல்லா இடங்களுக்கும் பயணம் செய்கிறேன், நான் சொகுசான அறைகளில் சும்மா இருந்து என் வாழ்க்கையை வாழவில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நான் செய்ய வேண்டியதை நான் செய்கிறேன். கடந்த காலத்தில் நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் நமது நட்பின் மலராக மாறும் என்று நான் நம்புகிறேன்.

இந்தப் பாதை என்னால் திறந்து வைக்கப்பட்டது என்று சொல்லலாம், மேலும் கசப்பாக இருந்தாலும் சரி, இனிப்பாக இருந்தாலும் சரி, நான் வழிநடத்தியிருக்கிறேன். இன்று நாம் ஒவ்வொரு தருணத்திலும் வெற்றிகரமாக இதுவரைக்கும் வந்திருப்பது தேவனுடைய கிருபையே ஆகும். எனக்கு நன்றி சொல்பவர்கள் சிலர் இருக்கலாம், மேலும் என்னைப் பற்றி குறை கூறுபவர்களும் இருக்கலாம்—ஆனால் அதில் எதுவுமே முக்கியமில்லை. நான் பார்க்க விரும்புவதெல்லாம் இந்த ஜனங்களின் குழுவில் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்தாயிற்று. இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். எனவே, எனக்கு எதிராகக் குறைகூறுபவர்கள் மீது நான் வெறுப்பைக் கொண்டிருப்பதில்லை. நான் விரும்புவதெல்லாம் தேவனுடைய இருதயம் விரைவில் ஓய்வெடுக்க வேண்டும் என்பதற்காக எனது கிரியையை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதேயாகும். அந்த நேரத்தில், நான் எந்தவொரு அதிக பாரத்தையும் சுமக்க மாட்டேன், மேலும் தேவனுடைய இருதயத்தில் எந்தவிதக் கவலையும் இருக்காது. உங்கள் ஒத்துழைப்பை அதிகப்படுத்த நீங்கள் தயாரா? தேவனுடைய கிரியையை சிறப்பாகச் செய்வதை இலக்காகக் கொள்வது நல்லதல்லவா? இந்தக் காலகட்டத்தில், நாம் எண்ணற்ற கஷ்டங்களைத் தாங்கியிருக்கிறோம், ஒவ்வொருவிதமான மகிழ்ச்சியையும் துக்கத்தையும் அனுபவித்திருக்கிறோம் என்று சொல்வது நியாயமானது. ஒட்டுமொத்தமாக, உங்கள் ஒவ்வொருவரின் செயல்திறனும் அடிப்படையில் தரத்தை உருவாக்கியிருக்கிறது. ஒருவேளை, எதிர்காலத்தில், உங்களிடமிருந்து சிறந்த கிரியை கோரப்படும், ஆனால் என்னைப் பற்றிய எண்ணங்களை விட்டு விட வேண்டாம்; நீங்கள் செய்ய வேண்டியதை மட்டும் செய்யுங்கள். நான் செய்ய வேண்டியதை கிட்டத்தட்டசெய்துவிட்டேன் நீங்கள் எல்லா நேரங்களிலும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பீர்கள், மேலும் நீங்கள் என் கிரியையைப் பற்றி பழைமையான நினைவைக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் ஒரு கட்ட கிரியையை மட்டுமே முடிக்க வந்திருக்கிறேன், மேலும் நிச்சயமாக தேவனுடைய அனைத்து கிரியையையும் செய்வதற்கு வரவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் அதைப் பற்றித் தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும் அதைப் பற்றிய வேறு யோசனைகளைக் கொண்டிருக்க வேண்டாம். தேவனுடைய கிரியையை முடிக்க இன்னும் பல வழிமுறைகள் தேவைப்படுகின்றன; நீங்கள் என்னையே எப்போதும் சார்ந்து கொண்டிருக்க முடியாது. யேகோவா அல்லது இயேசுவைப் பிரதிநிதித்துவம் செய்யாத ஒரு கிரியையின் ஒரு பகுதியை மட்டுமே நான் செய்ய வந்திருக்கிறேன் என்பதை ஒருவேளை நீங்கள் ஏற்கனவே உணர்ந்திருக்கலாம்; தேவனுடைய கிரியை பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் மிகவும் கடினமானவர்களாக இருக்கக்கூடாது. நான் கிரியை செய்யும் போது, நீங்கள் நான் சொல்வதைக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும், தேவனுடைய கிரியை மாறுகிறது; எப்போதும் ஒரே மாதிரியான வகையாய் இருக்காது, மற்றும் எப்போதும் மாறாமல் இருக்காது. ஒவ்வொரு கட்டத்திலும் அவரது கிரியை காலத்திற்கு ஏற்றதாக இருக்கிறது, மற்றும் காலம் ஒரே மாதிரியாக இல்லாததால் மாறுகிறது. எனவே, நீ இந்தக் காலத்தில் பிறந்திருப்பதால், நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவும், மேலும் இந்த வார்த்தைகளைப் படிக்கவும் வேண்டும். எனது கிரியை மாறும் ஒரு நாள் வரலாம், அந்தத் தருணத்தில் நீங்கள் செய்ய வேண்டியபடி, முன்னோக்கித் தொடர வேண்டும்; தேவனுடைய கிரியை தவறாக இருக்க முடியாது. வெளி உலகம் எப்படி மாறுகிறது என்பதைப் பொருட்படுத்த வேண்டாம்; தேவன் செய்வது தவறாக இருக்க முடியாது, மேலும் அவருடைய கிரியையும் தவறாக இருக்க முடியாது. சில சமயங்களில் அவருடைய பழைய கிரியை கடந்து சென்றுவிடுகிறது, அவருடைய புதிய கிரியை தொடங்குகிறது. இருப்பினும், புதிய கிரியை வந்திருப்பதால், பழைய கிரியை தவறு என்று அர்த்தமாகிவிடாது. அது ஒரு பொய்! தேவனுடைய கிரியை சரியா அல்லது தவறா என்று சொல்ல முடியாது, அது முந்தையதா அல்லது தாமதமானதா என்று மட்டுமே சொல்ல முடியும். தேவன் மீதான ஜனங்களுடைய நம்பிக்கைக்கு இதுவே வழிகாட்டியாகும், அதை லேசாகக் கருதிவிடக் கூடாது.

முந்தைய: பாதை … (7)

அடுத்த: விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக