அத்தியாயம் 84

என்னைப் பற்றிய அறிவு மனிதர்களுக்குக் குறைவு என்பதால், அவர்கள் எண்ணற்ற தடவைகள் என்னுடைய நிர்வாகத் திட்டத்திற்கு இடையூறு செய்து என்னுடைய திட்டங்களைப் பாழாக்கியிருக்கின்றனர். ஆனால் என்னுடைய முன்னேற்றப் படிநிலைகளை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியவில்லை. இது ஏனெனில் நான் ஞானமுள்ள தேவன். என்னில் முடிவற்ற ஞானம் இருக்கிறது, மேலும் எனக்குள் எல்லையற்றதும் அளக்க முடியாததுமான இரகசியங்கள் இருக்கின்றன. நினைவுக்கு எட்டாத காலத்தில் இருந்து, மனிதர்களால் இவற்றை அளக்கவோ முழுமையாகப் புரிந்து கொள்ளவோ முடிவதில்லை. அப்படித் தானே இல்லையா? நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஞானம் இருப்பதோடு அல்லாமல், ஒவ்வொரு வார்த்தையிலும் என்னுடைய இரகசியங்கள் மறைந்திருக்கின்றன. என்னோடு இருப்பதெல்லாம் இரகசியங்களே; என்னுடைய ஒவ்வொரு பகுதியும் இரகசியமே. இன்று நீங்கள் இரகசியத்தை மட்டுமே கண்டிருக்கிறீர்கள், அதனால் தான் என் ஆள்தத்துவத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்—ஆனால் உள்ளுக்குள் மறைந்திருக்கும் இரகசியத்தை நீங்கள் இன்னும் கண்டறியவில்லை. என்னுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றியே மனுஷர்களால் என்னுடைய ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க முடியும்; இல்லாவிட்டால், பூமியோடுகூட அவர்கள் அழிந்து சாம்பலாவார்கள். நானே முழுமையான தேவன்; நான் தேவன், வேறு யாருமல்ல. “தேவனின் வெளிப்பாடு” போன்ற முந்தைய கூற்றுக்கள் ஏற்கனவே காலாவதியாகிவிட்டன; அவை இனிமேலும் பயன்படுத்த முடியாதபடி தேய்ந்துபோன பழம்பொருட்கள். உங்களில் எத்தனை பேர் இதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்? இதுவரை நான் சொன்னதில் உங்களில் எத்தனை பேர் உறுதியாய் இருக்கிறீர்கள்? அனைவரும் என்னால் தெளிவாக விளக்கப்பட்டு அறிவுறுத்தப்பட வேண்டும்.

சாத்தானின் ராஜ்யம் அழிக்கப்பட்டிருக்கிறது, மற்றும் அதன் மக்கள் எனக்குச் செய்யும் ஊழியம் சீக்கிரத்தில் முடிக்கப்படும். என் வீட்டில் இருந்து அவர்கள் ஒருவர் பின் ஒருவராக துரத்தியடிக்கப்படுவார்கள். பல்வேறு வேடங்களில் நடிப்பவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு அவர்கள் அனைவரும் என் ராஜ்யத்தில் இருந்து துண்டிக்கப்படுவார்கள். மறந்து போகாதே! கடந்த காலத்தில் என்னால் கைவிடப்பட்டவர்கள் உட்பட, இன்றில் இருந்து, என்னால் கைவிடப்படுபவர்களே சும்மா நடிப்பவர்கள், அவர்கள் வெறும் போலிகள்; அவர்கள் எனக்காக ஒரு காட்சியை நடத்திக் கொண்டிருந்தவர்கள், மற்றும் இந்த நாடகம் முடிந்தவுடன், அவர்கள் மேடையை விட்டு அகல வேண்டும். உண்மையிலேயே என் குமாரர்களாக இருப்பவர்கள் என் அன்பைப் பெறவும், உங்களுக்காக நான் ஏற்கெனவே ஆயத்தமாக்கி வைத்திருக்கும் என்னுடைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் அதிகாரப்பூர்வமாக என் ராஜ்யத்துக்குள் இருப்பார்கள். முதற்பேறான குமாரர்கள் பாக்கியவான்கள்! முன்கூட்டியே நீங்கள் என்னால் பயிற்றுவிக்கப்பட்டதனால் இப்போது நீங்கள் நான் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியானவர்களாக இருக்கிறீர்கள். நான் தான் சர்வவல்லமையுள்ள் தேவன் என்பதை விசுவாசியுங்கள். ஜனங்களால் நிறைவேற்ற முடியாத விஷயங்களை என்னால் தங்குதடை இன்றிச் செய்ய முடியும், முற்றிலுமாக இதில் போட்டிக்கு இடமே இல்லை. உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றோ அல்லது உங்களுக்கு என் முதற்பேறான குமாரர்களாக இருக்கத் தகுதி இல்லை என்றோ கருதாதீர்கள். நீங்கள் முற்றிலுமாக தகுதியுள்ளவர்கள்! இது எதனால் என்றால் எல்லாமே செய்யப்படுவதற்காக என்னையே நம்பியிருக்கின்றன; நிறைவேற்றப்படுவதற்காக என்னையே சார்ந்திருக்கின்றன. நீங்கள் இத்தகைய வளர்ச்சி கொண்டவர்கள் என்று நீங்கள் ஏன் இப்போது உணர்கிறீர்கள்? உங்களை உண்மையிலேயே பயன்படுத்துவதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதே இதற்கான காரணம். ஒன்றுமில்லாத விஷயங்களுக்காகப் பெரும் தாலந்துகளைப் பயன்படுத்த முடியாது; உங்களுக்குப் புரிகிறதா? பிரபஞ்ச உலகம் முழுவதும், நீங்கள் வெறும் ஒரு குட்டி சீனாவுக்குள்ளா அடைபட்டிருக்கிறீர்கள்? அதாவது, உங்களால் மேய்க்கப்படுவதற்கும் வழிநடத்தப்படுவதற்கும் முழு பிரபஞ்ச உலகத்தில் உள்ள யாவரும் உங்களிடத்தில் கையளிக்கப்படுவார்கள், ஏனெனில் நீங்கள் தான் முதற்பேறான குமாரர்கள், மேலும் உங்கள் சகோதரர்களை வழிநடத்துவது நிறைவேற்றப்பட வேண்டிய உங்கள் கடமையாகும். இதை அறிந்து கொள்ளுங்கள்! நானே சர்வவல்லமையுள்ள தேவன்! நான் உங்களை நீங்களே அனுபவித்து மகிழ ஒரு தடவை அனுமதிக்கிறேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். நான் ஒருவனே கிரியை செய்கிறேன்—பரிசுத்த ஆவியானவர் எங்கும் கிரியை செய்கிறார், மற்றும் தனிப்பட்ட முறையில் வழிநடத்துகிறார்.

கடந்த காலத்தில், என்னுடைய இரட்சிப்பைப் பற்றி ஜனங்களுக்குப் புரிதல் இல்லாமல் இருந்தது. இப்போது நீ புரிந்து கொள்ளுகிறாயா? என்னுடைய இரட்சிப்பில் பல அம்சங்கள் உள்ளன: ஒன்று என்னவெனில் சில ஜனங்கள் முற்றிலுமாக முன்குறிக்கப்படவில்லை, அதன் அர்த்தம் என்னவென்றால் அவர்களால் என் கிருபையை அனுபவிக்கவே முடியாது; இன்னொன்று என்னவென்றால் தொடக்கத்திலேயே முன்குறிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள், இவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு என்னுடைய கிருபையை அனுபவிக்கிறார்கள், ஆனால் என்னால் முன்குறிக்கப்பட்டுள்ள சில காலம் கழித்து நான் அவர்களைப் புறம்பாக்கி விடுவேன், அதன் பின் அவர்கள் ஜீவிதம் முற்றிலுமாக முடிந்துபோகும். இருப்பினும் இன்னொரு அம்சம் என்னவென்றால் என்னால் முன்குறிக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் உள்ளனர், மேலும் அவர்கள் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவிக்கின்றனர்; முதலில் இருந்து முடிவு வரை அவர்கள் என் கிருபையை அனுபவிக்கின்றனர். இதில் என்னை ஏற்றுக் கொள்ளும் முன்னும் பின்னும் அவர்கள் அடைந்த கஷ்டங்களும் அடங்குவதோடு என்னை ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுக்குக் கிடைத்த பிரகாசமும் ஒளியும் உள்ளடங்கும். இப்போதில் இருந்து அவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தொடங்குவார்கள்—அதாவது, இவர்களே என்னால் முற்றிலுமாக இரட்சிக்கப்படுபவர்கள். என் பெரும் கிரியையின் நிறைவின் வெளிப்படையான வெளிப்படுத்தலே இது. அப்படியானால் ஆசீர்வாதங்கள் எதைக் குறிக்கின்றன? நான் உங்களைக் கேட்கிறேன்: நீங்கள் செய்வதற்கு மிகவும் விரும்புவது என்ன? நீங்கள் எதை மிகவும் வெறுக்கிறீர்கள்? எதைப் பெறுவதற்கு நீங்கள் மிகவும் நம்பிக்கையாய் இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கைகளில் பெருகுவதற்காக என்னை அடையும் பொருட்டு கடந்த காலத்தில் நீங்கள் வலிகள் மற்றும் கஷ்டங்கள் ஊடாகச் சென்றிருக்கிறீர்கள்; இது கிருபையின் ஒரு பகுதியில் அடங்கும். “ஆசீர்வாதங்கள்” என்றால் எதிர்காலத்தில், நீங்கள் வெறுக்கும் காரியங்கள் ஒருபோதும் உங்களுக்கு இருக்காது, அதற்கு அர்த்தம் என்னவென்றால் இந்த காரியங்கள் இனிமேலும் உங்கள் உண்மையான வாழ்க்கையில் இருக்காது; அவை உங்கள் கண்களின் முன்னாலேயே முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கும். குடும்பம், வேலை, மனைவி, கணவன், குழந்தைகள், நண்பர்கள் மற்றும் சொந்தக்காரர்கள் மேலும் நீங்கள் தினமும் வெறுக்கும் மூன்று வேளை உணவு கூட, போய்விடும் (காலத்தால் கட்டுப்படுத்தப்படாமல் மற்றும் மாம்சத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறுதல் என்று இதற்கு அர்த்தம். உங்கள் திருப்தி அடைந்த ஆவி மட்டுமே உங்கள் உடலைப் பராமரிக்கலாம். ஆனால் இது உங்கள் உடலைக் குறிக்கிறதே தவிர மாம்சத்தை அல்ல. நீங்கள் முழுவதும் சுதந்திரமாகவும் எல்லாம் கடந்த நிலையிலும் இருப்பீர்கள். உலகம் சிருஷ்டிக்கப்பட்டதில் இருந்து தேவன் வெளிப்படுத்திவரும் மாபெரும் மற்றும் மிகவும் வெளிப்படையான அதிசயம் இதுவே.) உங்கள் உடலில் இருந்து எல்லா மண் துகள்களும் அகற்றப்படும், நீங்கள் முற்றிலும் பரிசுத்தமான கறையற்ற, பிரபஞ்சம் முழுவதும் பூமியின் கடையாந்தரங்கள் மட்டும் பயணம் செய்யக் கூடிய ஆவிக்குரிய சரீரமாக இருப்பீர்கள். அந்தச் சமயத்தில் இருந்து உபத்திரவமான கழுவுதல் தேய்த்தலை விட்டு விடுவீர்கள் மற்றும் நீங்கள் முழுமையாக உங்களை நீங்களே அனுபவிப்பீர்கள். அதில் இருந்து நீங்கள் திருமணத்தைப் பற்றி எண்ண மாட்டீர்கள் (ஏனெனில் நான் ஒரு காலத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறேன், உலகத்தைச் சிருஷ்டிப்பதில்லை) மற்றும் இனிமேலும் பெண்களுக்குச் சித்திரவதையாக இருந்து வரும் பிரசவ வேதனையே இருக்காது. எதிர்காலத்தில் இனிமேலும் நீங்கள் வேலை செய்யவோ உழைக்கவோ மாட்டீர்கள். என் அன்பின் அரவணைப்பில் நீங்கள் முழுவதுமாக மூழ்கி, உங்கள் மேல் நான் பொழியும் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இது முழுமையானது. இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டு இருக்கும்போதே கிருபை உங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். உங்களுக்காக நான் ஆயத்தப்படுத்தியவை எல்லாம்—அதாவது, உலகெங்கிலும் உள்ள அரிய மற்றும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் எல்லாம்—உங்களுக்குக் கொடுக்கப்படும். இப்போதே, இவற்றையெல்லாம் உங்களால் சிந்தித்துப் பார்க்கவோ அல்லது கற்பனை செய்யவோ முடியாது, மேலும் ஒருவரும் இவற்றை முன்னர் அனுபவித்ததும் இல்லை. இந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் வரும்போது, நீங்கள் முடிவில்லாமல் பரவசப்படுவீர்கள்—ஆனால் இவையெல்லாம் என் வல்லமையால், என் செயல்களால், என் நீதியால் மேலும் இவற்றை விட அதிகமாக என் மாட்சிமையால் வந்தவை என்பதை மறந்து விடாதீர்கள் (யாரிடம் நான் கிருபையாய் இருப்பதைத் தெரிந்துகொள்ளுகறேனா அவர்களிடம் நான் கிருபையாய் இருப்பேன், மேலும் யாரிடம் இரக்கமாய் இருப்பதைத் தெரிந்துகொள்ளுகிறேனோ அவர்களிடம் இரக்கமாய் இருப்பேன்.) அந்த நேரத்தில், உங்களுக்குப் பெற்றோர்கள் இருக்க மாட்டார்கள், மேலும் இரத்த உறவுகள் இருக்காது. நீங்கள் எல்லாம் நான் நேசிக்கும் ஜனங்கள், என்னுடைய நேச குமாரர்கள். அந்த நேரத்தில் இருந்து, யாரும் உங்களை ஒடுக்கத் துணிய மாட்டார்கள். நீங்கள் வயது வந்தவர்களாக வளர வேண்டிய நேரமாக அது இருக்கும், அது மட்டும் அல்லாமல் நீங்கள் தேசங்களை ஓர் இருப்புக் கோலால் ஆளுகின்ற நேரமாகவும் இருக்கும்! என் நேச குமாரர்களைத் தடைசெய்யத் துணிபவன் யார்? யார் அவர்களைத் தாக்கத் துணிவான்? எல்லோரும் என் நேச குமாரர்களை வணங்க வேண்டும், ஏனெனில் என் பிதா மகிமை அடைந்திருக்கிறார். ஒருவரும் ஒருக்காலும் கற்பனை செய்திராத எல்லா விஷயங்களும் உங்கள் கண்களின் முன்னே தோன்றும்; அவை எல்லாம் வரையறுக்கப்படாதவைகளாகவும், தீர்ந்து போகாதவைகளாகவும், முடிவற்றவைகளாகவும் இருக்கும். வெகு சீக்கிரத்தில், நிச்சயமாக நீங்கள் சூரியனால் சுட்டெரிக்கப்பட வேண்டிய தேவை இருக்காது அல்லது சித்திரவதை செய்யும் வெப்பத்தைச் சகிக்க வேண்டிய தேவை இருக்காது, அல்லது நீங்கள் குளிரால் பாதிக்கப்பட மாட்டீர்கள் அல்லது மழை, பனி, காற்று உங்களைத் தொடவோ செய்யாது. இது ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன், மேலும் அது முழுவதுமாக என் அன்பின் உலகமாக இருக்கும். நீங்கள் விரும்புவதை எல்லாம் நான் உங்களுக்குக் கொடுப்பேன், நான் உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் ஆயத்தப்படுத்துவேன். நான் நீதியில்லாதவர் என்று யார் சொல்லத் துணிவார்கள்? நான் உன்னை உடனடியாகக் கொல்லுவேன், ஏனெனில் என் கோபம் (பொல்லாதவர்களுக்கு எதிராக) நித்தியத்துக்கும் நீடிக்கும் என்று முன்னரே கூறியிருக்கிறேன், நான் சிறிதளவும் தளர்வு அளிக்க மாட்டேன். இருப்பினும், என்னுடைய அன்பும் (என் நேச குமாரர்களுக்காக) என்றென்றும் நிலைக்கும்; கொஞ்சமும் நான் அதைப் பிடித்து வைக்க மாட்டேன்.

இன்று, சரியான நிலையில் இல்லாதவர்களே என்னுடைய வார்த்தைகளை நியாயத்தீர்ப்பாகக் கேட்கும் ஜனங்கள் ஆவர். இருந்தாலும், அவர்கள் அதைக் கண்டுபிடிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் அவர்களைக் கைவிட்டிருப்பார். முழு பிரபஞ்ச உலகத்திலும் உங்கள் நடுவில் இருந்து முதற்பேறான குமாரர்கள் தெரிந்துகொள்ளப்படுகிறார்கள், மேலும் உங்களின் சிறு பகுதியினர் மட்டுமே குமாரர்கள் மற்றும் ஜனங்களாக இருக்கின்றனர். முழு பிரபஞ்ச உலகமும் என்னால் வலியுறுத்தப்படுகிறது, அதாவது குமாரர்கள் மற்றும் ஜனங்கள் உலகின் எல்லா தேசங்களில் இருந்தும் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். உங்களுக்குப் புரிகிறதா? முதற்பேறான குமாரர்கள் துரிதமாக வளர்ந்து அந்நியர்களை வழிநடத்தச் செல்ல வேண்டும் நான் ஏன் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? இது ஏனெனில் சீனா நான் சபித்த ஒரு நாடாகும்; அது என்னை மிகவும் துன்புறுத்தியது. அதை நான் மிகவும் வெறுக்கிறேன். என்னுடைய முதற்பேறான குமாரர்களும் நானும் பரலோகத்தில் இருந்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிய வேண்டும் மேலும் நாங்கள் உலகளாவிய ஜனங்கள்; நாங்கள் ஏதோ ஒரு தேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மனிதக் கருத்துக்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருப்பதை நிறுத்துங்கள்! இது ஏனெனில் நான் எனது ஆள்தத்துவத்தை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். எல்லாம் என்னைப் பொறுத்ததே. உங்களால் என் வார்த்தைகளை நினைவுகூர முடிகிறதா? உங்களுக்கு மத்தியில் மிகவும் குறைந்த ஜனங்களே இருக்கிறார்கள் என்றும் மக்கள் தொகை அதிக அதிகமாக சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் நான் ஏன் கூறுகிறேன்? இது ஏனென்றால் என்னுடைய இரட்சிப்பு படிப்படியாகப் பிரபஞ்ச உலகத்தை நோக்கித் திரும்புகிறது. என்னுடைய நாமத்தை ஏற்றுக் கொண்டு புறம்பாக்கப்பட்டவர்கள் முதற்பேறான குமாரர்களைப் பரிபூரணப்படுத்துவதற்காக ஊழியம் செய்தவர்கள். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? அவர்கள் எல்லோரும் என் குமாரர்களுக்காக ஊழியம் செய்தவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன். நீங்கள் இப்போது உண்மையிலேயே புரிந்து கொள்ளுகிறீர்கள், இல்லையா? எண்ணிக்கை உண்மையிலேயே குறைவானது; மிகச் சிலரே இருக்கின்றனர். இருப்பினும், என்னுடைய குமாரர்களால் அந்த ஜனங்கள் கணிசமாக நன்மையை அடைந்திருக்கிறார்கள், மேலும் என்னுடைய கிருபையை அதிகமாக அனுபவித்து இருக்கிறார்கள்—அதனால் தான் மனித இனத்தைக் கடைசி முறையாக நான் இரட்சிக்கிறேன் என்று நான் கூறினேன். இப்போது என்னுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ளுகிறீர்கள்! என்னை எதிர்க்கும் யாரையும் நான் கடுமையாகச் சிட்சிப்பேன், என்னை நியாயப்படுத்துவோர் யாராயிருந்தாலும் அவர்களை நோக்கி என் முகத்தைத் திருப்புவேன். இது ஏனென்றால், ஆதியில் இருந்து, நான் மகத்துவமான மற்றும் நீதியுள்ள தேவனாக இருந்து வருகிறேன், மேலும் எல்லாம் உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். நான் வேகமான அதிசயமான வழிகளில் கிரியை செய்கிறேன், மேலும் விரைவில், மனுஷனால் கற்பனை செய்ய முடியாத அதிசயமான விஷயங்கள் நடக்கும். உடனடியாகவும் விரிவாகவும் என்று நான் கூறுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்களா? தாமதம் இல்லாமல் வாழ்வின் பிரவேசத்தை நாடுங்கள்! என்னுடைய அன்பான குமாரர்களே, எல்லாம் இங்கே உங்களுக்காக இருக்கின்றன, மேலும் எல்லாம் உங்களுக்காகவே நிலைபெற்று இருக்கின்றன.

முந்தைய: அத்தியாயம் 83

அடுத்த: அத்தியாயம் 85

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது,...

சுவிசேஷத்தைப் பரப்பும் கிரியையானது மனிதனை இரட்சிக்கும் கிரியையுமுமாக இருக்கிறது

அனைத்து ஜனங்களும் பூமியில் எனது கிரியையின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறுதியில் நான் எதை அடைய விரும்புகிறேன், இந்தக்...

மாறாத மனநிலையைக் கொண்டிருப்பது தேவனிடம் பகைமையுடன் இருப்பதாகும்

பல்லாயிரம் ஆண்டுகள் சீர்கேட்டுக்குப் பிறகு, மனிதன் உணர்வற்றவனாக, மந்த அறிவுள்ளவனாக இருக்கிறான்; தேவனைப் பற்றின மனிதனுடைய கலகத்தன்மை...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக