துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீதியைக் கடைப்பிடிக்கிறீர்களா மற்றும் உங்கள் செயல்கள் அனைத்தும் தேவனால் கண்காணிக்கப்படுகின்றனவா என்று உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்: தேவனை விசுவாசிப்பவர்கள் தங்கள் காரியங்களைக் கையாளும் முறை இதுதான். உங்களால் தேவனைத் திருப்திப்படுத்த முடியும் என்பதாலும், தேவனின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் நீங்கள் ஏற்றுக்கொள்வதாலும், நீங்கள் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவீர்கள். தேவனின் பார்வையில், தேவனின் கவனிப்பு, பாதுகாப்பு மற்றும் பரிபூரணம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டவர்கள், அவரால் ஆதாயப்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே நீதிமான்கள், அவர்கள் அனைவரையுமே அவர் விலையேறப்பெற்றவர்களாகக் கருதுகிறார். தேவனின் தற்போதைய வார்த்தைகளை நீங்கள் எவ்வளவு அதிகமாக ஏற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் தேவனின் சித்தத்தைப் பெறவும், புரிந்துகொள்ளவும் முடியும், மேலும் நீங்கள் இன்னும் அதிகமாக தேவனின் வார்த்தைகளை நிறைவேற்றவும் அவருடைய தேவைகளை திருப்தி செய்யவும் முடியும். இதுதான் உங்களுக்கான தேவனின் கட்டளை, மற்றும் இதை நீங்கள் அனைவரும் அடைய முடிய வேண்டும். தேவன் அசையாத களிமண் சிலையாக இருக்கிறார் என்பது போல அவரை மதிப்பிடவும் வரையறுக்கவும் உங்கள் சொந்தக் கருத்துகளைப் பயன்படுத்தினால், நீங்கள் வேதாகமத்தின் எல்லைக்குள் தேவனை முழுவதுமாக வரையறுத்து, ஒரு குறிப்பிட்ட வேலை வரம்பிற்குள் அவரை அடக்கி வைத்தால், நீங்கள் தேவனை நிந்திக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த யூதர்கள், தேவனை அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் ஓர் உருமாறாத சிலையாக வைத்திருந்தார்கள், தேவனை மேசியா என்று மட்டுமே அழைக்க முடியும், மேசியா என்று அழைக்கப்படுபவர் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்றும், தேவனை ஒரு (உயிரற்ற) களிமண் சிலை போலக் கருதி அவருக்கு மனிதகுலம் ஊழியம் செய்து வணங்கியதால், அவர்கள் அந்தக் காலத்தில் வந்த இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள், அவருக்கு மரண தண்டனை அளித்தார்கள். குற்றமற்ற இயேசு இவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவொரு குற்றத்திற்கும் தேவன் பாத்திரமற்றவர், ஆனாலும் மனுஷன் அவரைக் காப்பாற்ற மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி வற்புறுத்தினான், அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். தேவன் எப்போதும் மாறாதவர் என்று மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான், வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அவரை வரையறுக்கிறான், தேவனின் ஆளுகையைப் பற்றி மனுஷனுக்கு ஒரு முழுமையான புரிதல் இருப்பதைப் போலவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் மனுஷன் தன் உள்ளங்கையில் வைத்திருப்பதைப் போலவும் விசுவாசிக்கிறான். ஜனங்கள் மிகவும் புத்தியீனமானவர்கள், மிகவும் ஆணவக்காரர்கள், அவர்கள் அனைவருக்கும் மிகைப்படுத்திக் கூறும் ஓர் இயல்பான திறமை உள்ளது. தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தேவனை அறியவில்லை என்றும், நீங்கள் தேவனை மிகவும் எதிர்க்கும் ஒருவர் என்றும், தேவனை நிந்திக்கிறீர்கள் என்றும் நான் இன்னும் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் தேவனின் செயலுக்குக் கீழ்ப்படிந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட பாதையில் நடக்கவும் முற்றிலும் திரணியில்லாதவர்கள். மனுஷனின் செயல்களில் தேவன் ஏன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை? ஏனென்றால், மனுஷனுக்கு தேவனைத் தெரியாது, ஏனென்றால் அவனுக்குப் பல கருத்துகள் உள்ளன, மேலும் தேவனைப் பற்றிய அவனுடைய அறிவு எந்த வகையிலும் யதார்த்தத்துடன் உடன்படவில்லை, மாறாக, ஒரே கருத்தை ஒரே மாதிரியாக மாறுபாடின்றி மீண்டும் மீண்டும் சொல்கிறான், மேலும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரே அணுகுமுறையைப் பயன்படுத்துகிறான். எனவே, தேவன் இன்று பூமிக்கு வந்தால், மீண்டுமொருமுறை மனிதனால் சிலுவையில் அறையப்படுவார். என்ன ஒரு கொடூரமான மனிதகுலம்! சதிக்கு உடந்தையாயிருத்தல் மற்றும் சூழ்ச்சி, ஒருவரிடமிருந்து ஒருவர் அபகரித்துக்கொள்ளுதல் மற்றும் பிடுங்குதல், புகழ் மற்றும் அதிர்ஷ்டத்திற்கான போராட்டம், பரஸ்பரப் படுகொலை ஆகியவை எப்போது முடிவுக்கு வரும்? தேவன் பேசிய நூறாயிரக்கணக்கான வார்த்தைகள் இருந்தபோதிலும், யாரும் அவர்களின் உணர்வுக்கு வரவில்லை. ஜனங்கள் தங்கள் குடும்பங்கள், மகன்கள் மற்றும் மகள்களுக்காக, தங்கள் தொழில், எதிர்கால வாய்ப்புகள், பதவி, வீண்புகழ்ச்சி மற்றும் பணம் ஆகியவற்றிற்காகவும், உணவு, உடை மற்றும் மாம்சம் ஆகியவற்றிற்காகவும் செயல்படுகிறார்கள். ஆனால், தேவனுக்காக உண்மையிலேயே எவருடைய செயல்களும் உள்ளனவா? தேவனுக்காகச் செயல்படுபவர்களில் கூட, தேவனை அறிந்தவர்கள் மிகக் குறைவு. எத்தனை பேர் தங்கள் சொந்த நலன்களுக்காகச் செயல்படவில்லை? தங்கள் சொந்த அந்தஸ்தைப் பாதுகாப்பதற்காக எத்தனை பேர் மற்றவர்களை ஒடுக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை? ஆகவே, எண்ணத்தகாத முறையில் தேவன் பலவந்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார், எண்ணற்ற காட்டுமிராண்டித்தனமான நீதிபதிகள் தேவனை குற்றப்படுத்தி அவரை மீண்டும் சிலுவையில் அறைந்தார்கள். தேவன் நிமித்தம் உண்மையிலேயே செயல்படுவதால் எத்தனை பேர் நீதிமான்கள் என்று அழைக்கப்படுவார்கள்?

ஒரு பரிசுத்தவானாக அல்லது நீதிமானாக தேவனுக்கு முன்பாகப் பரிபூரணமாக இருப்பது அவ்வளவு எளிதானதா? “இந்தப் பூமியில் நீதிமான்கள் இல்லை, நீதிமான்கள் இந்த உலகில் இல்லை” என்பது ஓர் உண்மையான கூற்று. நீங்கள் தேவனுக்கு முன்பாக வரும்போது, நீங்கள் அணிந்திருப்பதைக் கவனியுங்கள், உங்கள் ஒவ்வொரு வார்த்தையையும், செயலையும் கவனியுங்கள், உங்கள் ஒவ்வொரு சிந்தனையையும், யோசனையையும் கவனியுங்கள், ஒவ்வொரு நாளும் நீங்கள் காணும் கனவுகளைக் கவனியுங்கள்—அவை அனைத்தும் உங்கள் சுயத்திற்காகவே. இது காரியங்களின் உண்மையான நிலை அல்லவா? “நீதி” என்றால் மற்றவர்களுக்கு தர்மம் செய்வது என்று அர்த்தமல்ல. உங்களைப் போல் பிறனிடத்திலும் அன்புகூறுவது என்று அர்த்தமல்ல, மேலும் சண்டைகள் மற்றும் தகராறுகள் அல்லது கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவற்றில் ஈடுபடாமல் விலகியிருப்பது என்று அர்த்தமல்ல. நீதி என்றால் கர்த்தராகிய இயேசு செய்த எல்லாவற்றையும் போலவே, நேரத்தையும் இடத்தையும் பொருட்படுத்தாமல் தேவனின் கட்டளையை உங்கள் கடமையாக எடுத்துக்கொள்வதும், தேவனின் ஒழுங்கையும், ஏற்பாடுகளையும் பரலோகத்திலிருந்து அருளப்பட்ட உங்கள் தொழிலாகக் கடைப்பிடிப்பதுமாகும். தேவன் பேசிய நீதி இதுவே. லோத்து நீதிமான் என்று அழைக்கப்படலாம், ஏனென்றால் தேவன் அனுப்பிய இரண்டு தேவதூதர்களையும் அவன் தனது சொந்த ஆதாயத்தையும், இழப்பையும் கருத்தில் கொள்ளாமல் காப்பாற்றினான்; அந்த நேரத்தில் அவன் செய்ததை நீதியானது என்று அழைக்கலாம், ஆனால் அவனை நீதிமான் என்று அழைக்க முடியாது. லோத்து தேவனைக் கண்டதால்தான், தேவதூதர்களுக்கு ஈடாகத் தனது இரண்டு மகள்களையும் கொடுத்தான், ஆனால் அவன் கடந்த காலத்தில் கொண்டிருந்த நடத்தைகள் அனைத்தும் நீதியைக் கொண்டிருக்கவில்லை. எனவே நான் சொல்கிறேன் “இந்தப் பூமியில் நீதிமான்கள் இல்லை” மீட்பின் பாதையில் இருப்பவர்களிடையே கூட, யாரையும் நீதிமான்கள் என்று அழைக்க முடியாது. உங்கள் செயல்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும், தேவனின் பெயரை மகிமைப்படுத்த நீங்கள் எப்படித் தோன்றினாலும், மற்றவர்களை அடிப்பதோ, சபிப்பதோ இல்லை என்றாலும், மற்றவர்களிடமிருந்து கொள்ளையடிப்பதும், திருடுவதும் இல்லை என்றாலும், உங்களை இன்னும் நீதிமான்கள் என்று அழைக்க முடியாது, ஒரு சாதாரண மனுஷன் கொண்டிருக்கும் திறன் இதுதான். இப்போது முக்கியமானது என்னவென்றால், நீங்கள் தேவனை அறியவில்லை. தற்போது உங்களிடம் சாதாரண மனிதநேயம் கொஞ்சம் இருக்கிறது என்று மட்டுமே கூற முடியும், ஆனால் தேவன் கூறும் நீதியின் எந்த அம்சங்களும் இல்லை, எனவே நீங்கள் செய்யும் எதுவும் தேவனை நீங்கள் அறிவீர்கள் என்பதை நிரூபிக்க இயலாது.

இதற்கு முன்பு, தேவன் பரலோகத்தில் வீற்றிருந்தபோது, மனுஷன் தேவனை வஞ்சிக்கும் விதத்தில் செயல்பட்டான். இன்று, தேவன் மனுஷர்களிடையே இருக்கிறார்—எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்பது யாருக்கும் தெரியாது—ஆனாலும் காரியங்களைச் செய்வதில் மனுஷன் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறான் மற்றும் அவரை முட்டாளாக்க முயற்சிக்கிறான். மனுஷன் தன் சிந்தனையில் மிகவும் பின்தங்கியவனல்லவா? யூதாஸிடமும் அப்படித்தான் இருந்தது: இயேசு வருவதற்கு முன்பு, யூதாஸ் தன் சகோதர சகோதரிகளைப் பொய்களைச் சொல்லி வஞ்சித்து வந்தான், இயேசு வந்த பிறகும் அவன் மாறவில்லை; அவன் இயேசுவை அறிந்திருக்கவில்லை, இறுதியில் அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். இது அவன் தேவனை அறியாததால் அல்லவா? இன்று, நீங்கள் இன்னும் தேவனை அறியவில்லை என்றால், நீங்கள் மற்றொரு யூதாஸாக மாற வாய்ப்புள்ளது, இதைத் தொடர்ந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருபையின் காலத்தில் இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட பெருந்துயரம் மீண்டும் நடைபெறும். இதை நீங்கள் நம்பவில்லையா? இது ஓர் உண்மை! தற்போது, பெரும்பான்மையான ஜனங்கள் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ளனர். இதை நான் கொஞ்சம் விரைவில் சொல்லிக்கொண்டிருக்கலாம். அத்தகையவர்கள் அனைவரும் யூதாஸின் பாத்திரத்தை ஏற்று நடிக்கின்றனர். நான் முட்டாள்தனமானவற்றைப் பேசவில்லை, ஆனால் உண்மையின் அடிப்படையில் பேசுகிறேன். உங்களால் முடியாது, ஆனால் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆயினும் பலர் மனத்தாழ்மையாக இருப்பதாகப் பாசாங்கு செய்தாலும், அவர்களின் இருதயங்களில் பயனற்ற நீர் திரண்டிருக்கும், அது துர்நாற்றம் வீசும் நீரைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது தேவாலயத்தில் இதுபோன்றவர்கள் பலர் உள்ளனர், இது எனக்கு முற்றிலும் தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இன்று, என் ஆவி எனக்காகத் தீர்மானிக்கிறது, எனக்காகச் சாட்சியம் அளிக்கிறது. எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா? உங்கள் இருதயங்களுக்குள் இருக்கும் மோசமான எண்ணங்கள், உங்கள் இருதயங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் விஷயங்கள் எதுவும் எனக்குப் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? தேவனிடமிருந்து சிறந்ததைப் பெறுவது அவ்வளவு எளிதானதா? நீங்கள் விரும்பும் விதத்தில் அவரை நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? கடந்த காலத்தில், நீங்கள் கட்டுப்படுத்தப்படாமல் இருக்க நான் கவலைப்பட்டேன், எனவே நான் உங்களுக்குச் சுதந்திரம் அளித்துக்கொண்டே இருந்தேன், ஆனால் நான் அவர்களுக்கு நல்லவராக இருக்கிறேன் என்று மனுக்குலத்தால் சொல்ல முடியவில்லை, நான் ஒரு அங்குலம் கொடுத்தபோது அவர்கள் ஒரு முழத்தை எடுத்துக்கொண்டார்கள். உங்களுக்குள்ளேயே கேட்டுப்பாருங்கள்: நான் கிட்டத்தட்ட யாரையும் ஒருபோதும் கையாண்டதில்லை, யாரையும் லேசாகக் கண்டித்ததில்லை, ஆனாலும் மனுஷனின் உள்நோக்கங்கள் மற்றும் கருத்துகள் குறித்து நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். தேவனைக் குறித்து சாட்சியம் அளிக்கும் தேவன் ஒரு முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த விஷயத்தில், நீங்கள் பெரிய குருடர் என்று நான் சொல்கிறேன்! நான் உங்களை அம்பலப்படுத்த மாட்டேன், ஆனால் நீங்கள் எவ்வளவு துன்மார்க்கம் நிறைந்தவராவீர்கள் என்று பார்ப்போம். உங்கள் புத்திசாலித்தனமான சிறிய உத்திகள் உங்களைக் காப்பாற்ற முடியுமா, அல்லது தேவனை நேசிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்தாலும், உங்களைக் காப்பாற்ற முடியுமா என்பதைப் பார்ப்போம். இன்று, நான் உங்களைக் கண்டிக்க மாட்டேன்; தேவனுடைய காலத்தில், அவர் உங்கள்மீது எவ்வாறு பழிவாங்குவார் என்பதைப் பார்ப்போம். உங்களுடன் இப்போது சும்மா வீண் அரட்டை செய்ய எனக்கு நேரமில்லை. மேலும் எனது பெரிய ஊழியத்தை உங்கள் நிமித்தம் தாமதப்படுத்த நான் விரும்பவில்லை. உங்களைப் போன்ற ஒரு புழுவைக் கையாள தேவன் நேரத்தைச் செலவிடுவதற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. எனவே நீங்கள் எவ்வளவு நெறிதவறிப் போவீர்கள் என்பதைப் பார்ப்போம். இதுபோன்றவர்கள் தேவனைப் பற்றிய அறிவைச் சிறிதளவும் பின்பற்றுவதில்லை, அவர் மீது சிறிதளவும் அன்பு கொண்டிருக்கவில்லை, இன்னும் தேவன் அவர்களை நீதிமான்கள் என்று அழைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், இது நகைச்சுவையல்லவா? ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஜனங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்பதால், நான் தொடர்ந்து மனுஷனுக்கு வாழ்க்கை வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். இன்று நான் செய்து முடிக்க வேண்டியதை மட்டுமே நான் செய்து முடிப்பேன், ஆனால் எதிர்காலத்தில் ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் செய்ததைப் பொறுத்து நான் தகுந்த தண்டனையைக் கொண்டுவருவேன். நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன், ஏனென்றால் இது துல்லியமாக நான் செய்யும் செயல். நான் செய்யக்கூடாததை அல்ல, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே செய்கிறேன். ஆயினும்கூட, நீங்கள் பிரதிபலிபலனாக அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்: தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு உண்மை? நீங்கள் தேவனை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறையும் ஒருவரா? என் இறுதி வார்த்தைகள் இதுவே: தேவனைச் சிலுவையில் அறைகிறவர்களுக்கு ஐயோ!

முந்தைய: பரிபூரணப் படுத்தப்பட்டிருக்கிறவர்களுக்கான வாக்குத்தத்தங்கள்

அடுத்த: ஓர் இயல்பான நிலைக்குள் பிரவேசிப்பது எப்படி?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக