வேதாகமத்தைக் குறித்து (1)
தேவன் மீதான நம்பிக்கையில் வேதாகமம் எவ்வாறு அணுகப்பட வேண்டும்? இது கொள்கை குறித்த ஒரு கேள்வியாகும். நாம் ஏன் இக்கேள்வியைக் கேட்கிறோம்? ஏனென்றால் நீங்கள் எதிர்காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்பி, ராஜ்யத்தின் கால கிரியையை விரிவுபடுத்துவீர்கள். தேவனுடைய இன்றைய கிரியைப் பற்றி மட்டுமே பேசக் கூடியது போதுமானதல்ல. அவருடைய கிரியையை விரிவுபடுத்துவதற்கு ஜனங்களுடைய பழைய மதவாதக் கருத்துக்களுக்கும் பழைய நம்பிக்கை முறைகளுக்கும் தீர்வுகண்டு, அவர்களை முற்றிலுமாக நம்பச் செய்து வேதாகமம் தொடர்பான நிலைக்கு அவர்களை உங்களால் கொண்டுசெல்ல முடிவதே மிகவும் முக்கியமாகும். பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தினுடையது) வேதாகமத்தை வாசிப்பதாக இருந்து வருகிறது; வேதாகமத்திலிருந்து வெளியேறுவது என்பது கர்த்தர் மீதான நம்பிக்கை என்று ஆகிவிடாது, வேதாகமத்திலிருந்து வெளியேறுவது மதங்களுக்கு எதிரான கொள்கையும் வழக்கத்திற்கு மாறான நம்பிக்கையுமாக இருக்கிறது. ஜனங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்கும்போதும், இந்தப் புத்தகங்களின் அஸ்திபாரம் வேதாகமத்தைக் குறித்த விளக்கமாக இருக்க வேண்டும். அதாவது, நீ கர்த்தரை விசுவாசித்தால், நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமத்திற்கு வெளியே வேதாகமத்திற்கு தொடர்பில்லாத எந்த புத்தகத்தையும் நீ ஆராதிக்கக்கூடாது. நீ அவ்வாறு செய்தாயானால், நீ தேவனுக்குத் துரோகஞ்செய்கிறாய். வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாகப் பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது. ஆகையால், அவர்கள் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்ததுமே, அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்து, அதை மனப்பாடம் செய்கின்றனர். வேதாகமத்தில் அவர்களால் எவ்வளவு அதிகமாக மனப்பாடம் செய்ய முடிகிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள் மற்றும் மாபெரும் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. வேதாகமத்தை வாசித்து, அதை அடுத்தவர்களிடம் பேசக்கூடியவர்கள் எல்லோரும் நல்ல சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கின்றனர். இத்தனை வருடங்களாக, கர்த்தர் மீதான ஜனங்களின் விசுவாசமும் நம்பிக்கையும் வேதாகமம் குறித்த அவர்களுடைய புரிதலின் அளவிற்கு ஏற்பவே அளவிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் ஏன் தேவனை விசுவாசிக்க வேண்டும், தேவனை எவ்வாறு விசுவாசிக்க வேண்டும் என்று எதுவும் தெரிவதில்லை, ஆனால் வேதாகமத்தின் அதிகாரங்களைப் புரிந்துகொள்ளவதற்கான குறிப்புகளை கண்மூடித்தனமாக தேடுகின்றனர். ஜனங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வழிகாட்டுதலைப் பின்தொடர்ந்தே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் வேதாகமத்தைத் தீவிரமாக வாசித்து ஆராய்ந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை. பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை வேதாகமத்திற்கு வெளியே ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. வேதாகமத்திலிருந்து ஒருவரும் வெளியேறவுமில்லை, அவர்கள் அவ்வாறு செய்யத் துணிவு கொள்ளவுமில்லை. ஜனங்கள் வேதாகமத்தை இத்தனை வருடங்களாக படித்து, பல விளக்கங்களுடன் வந்துள்ளனர், அதற்காகத் தங்கள் கடின உழைப்பைத் தந்துள்ளனர். வேதாகமத்தைக் குறித்த பல கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் கொண்டுள்ளனர், இதை வைத்து முடிவில்லாமல் விவாதிக்கின்றனர், இதன்மூலம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பல்வேறு மதப்பிரிவுகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் எல்லோரும் வேதாகமத்தில் உள்ள சில விசேஷித்த விளக்கங்களை அல்லது மிகவும் ஆழமான இரகசியங்களைக் கண்டுபிடிக்க விரும்புகின்றனர், அவர்கள் அதை ஆராய விரும்புகின்றனர், மேலும் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது யூதேயாவில் இயேசுவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது வேறு ஒருவருக்கும் தெரியாத அதிக இரகசியங்களையோ கண்டுபிடிக்க விரும்புகின்றனர். கருத்து மற்றும் விசுவாசம் ஆகியவற்றில் ஒன்றே வேதாகமம் குறித்த ஜனங்களின் அணுகுமுறையாக இருக்கிறது. வேதாகமத்திலுள்ள சம்பவத்தையோ அல்லது சாராம்சத்தையோ பற்றி ஒருவரும் முற்றிலும் தெளிவாக அறிந்திருக்க முடியாது. ஆகையால், வேதாகமம் என்று வரும்போது ஜனங்கள் இன்றும் வேதாகமத்தைப் பற்றி விவரிக்க முடியாத அதிசய உணர்வைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் மற்றும் அதில் அதிக விசுவாசம் வைத்திருக்கின்றனர். இன்று, எல்லோருமே வேதாகமத்தில் கடைசி நாட்களின் கிரியையைக் குறித்த தீர்க்கதரிசனங்களைக் கண்டறிய விரும்புகின்றனர். மேலும், கடைசி நாட்களில் தேவன் என்ன கிரியை செய்கிறார், கடைசி நாட்களுக்கான என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அவர்கள் வேதாகமத்தை ஆராதிப்பது மிகவும் தீவிரமாகிறது. மேலும், கடைசி நாட்கள் நெருங்க நெருங்க, வேதாகமத்தைக் குறித்த, குறிப்பாக கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மீது அதிக கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்கின்றனர். வேதாகமத்தின் மீது அத்தகைய கண்மூடித்தனமான விசுவாசத்தை, வேதாகமத்தின் மீது அத்தகைய நம்பிக்கையை கொண்டிருப்பதனால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாடுவதில் எந்த விருப்பத்தையும் கொண்டிருப்பதில்லை ஜனங்கள் தங்களுடைய கருத்துக்களில் வேதாகமத்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய தேவனுடைய அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய கிரியையைக் குறித்த இரகசியங்கள் மறைந்துள்ளன என்றும், வேதாகமத்தைத் தவிர வேறு எந்த புத்தகங்களாலோ அல்லது நபர்களாலோ தேவனைப் பற்றிய அனைத்தையும் மற்றும் அவருடைய கிரியை முழுவதையும் தெளிவுபடுத்த முடியாது என்றும், வேதாகமத்தால்தான் பரலோகத்தின் கிரியையை பூமிக்கு கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தால்தான் காலங்களை ஆரம்பித்தும் முடித்தும் வைக்க முடியும் என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பதானால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடுவதற்கு ஜனங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆகையால், கடந்த காலங்களில் வேதாகமம் ஜனங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு ஒரு தடையாகவே மாறியுள்ளது. வேதாகமம் இல்லாமல், வேறு இடங்களிலும் ஜனங்களால் தேவனுடைய அடிச்சுவடுகளைத் தேட முடியும். ஆனாலும் இன்று, அவருடைய அடிச்சுவடுகள் வேதாகமத்தால் உள்ளடக்கி வைக்கப்பட்டுள்ளன, அவருடைய சமீபத்திய கிரியைகளை விரிவுபடுத்துவது இரண்டு மடங்கு கடினமாகவும், மலையளவு பெரிய போராட்டமாகவும் மாறியுள்ளது. வேதாகமத்தின் பிரபலமான அதிகாரங்களும் வசனங்களும் மற்றும் வேதாகமத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் தான் இதற்கெல்லாம் காரணமாகும். வேதாகமம் ஜனங்களுடைய மனதில் ஒரு விக்கிரகமாக மாறியுள்ளது, அவர்களுடைய மூளையில் அது ஒரு புதிராக மாறியுள்ளது. மேலும், வேதாகமத்திற்கு வெளியேயும் தேவனால் கிரியை செய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களால் முடியவில்லை, தேவனை வேதாகமத்திற்கு வெளியேயும் காண முடியும் என்பதை ஜனங்களால் நம்ப முடிவதில்லை, இறுதி கிரியையின்போது தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி புதியதாக ஆரம்பிக்க முடியும் என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இது ஜனங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை, அவர்களால் அதை கற்பனை செய்துபார்க்கவும் முடியவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு வேதாகமம் ஒரு பெரிய தடையாகவும், இந்த புதிய கிரியையை தேவன் விரிவுபடுத்துவதில் சிரமமாகவும் மாறியுள்ளது. ஆகையால், வேதாகமத்திலுள்ள சம்பவத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், உங்களால் சுவிசேஷத்தை வெற்றிகரமாக பரப்பவும் முடியாது, புதிய கிரியைக்கு உங்களால் சாட்சி பகரவும் முடியாது. நீங்கள் இன்று வேதாகமத்தை வாசிக்கவில்லை என்றாலும், நீங்கள் இன்னும் அதன் மீது மிகவும் நேசமாகவே இருக்கிறீர்கள். அதாவது, உங்கள் கைகளில் வேதாகமம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் கருத்துக்களில் பல அதிலிருந்தே வருகின்றன. வேதாகமம் உருவான விதங்கள் அல்லது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிய வேதாகமத்திலுள்ள கதையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வேதாகமத்தை அடிக்கடி வாசிக்கவில்லை என்றாலும், நீங்கள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், வேதாகமத்தைப் பற்றிய சரியான அறிவை நீங்கள் பெற வேண்டும். இவ்விதமாக மட்டுமே உங்களால் தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு கால நிர்வாகத் திட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். ஜனங்களை ஜெயங்கொள்வதற்கும், இந்த பிரவாகம்தான் மெய்யான வழி என்பதை அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதற்கும், இன்று நீங்கள் நடக்கும் பாதைதான் சத்தியத்தின் பாதை, இது பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறது, இது எந்த மனுஷராலும் துவங்கப்படவில்லை என்பதை அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதற்கும் நீங்கள் இக்காரியங்களைப் பயன்படுத்துவீர்கள்.
தேவன் நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைச் செய்த பிறகு, பழைய ஏற்பாடு உருவாக்கப்பட்டது, அப்போதுதான் ஜனங்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார்கள். இயேசு வந்ததற்குப் பிறகு, அவர் கிருபையின் காலத்தின் கிரியையைச் செய்தார், அவருடைய அப்போஸ்தலர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினர். வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகள் இவ்வாறே உருவாக்கப்பட்டன. இன்றும் கூட, தேவனை விசுவாசிக்கிற எல்லோரும் வேதாகமத்தை வாசித்து வருகின்றனர். வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நிச்சயமாகவே, இது தீர்க்கதரிசிகளின் முன்னறிவுப்புகள் சிலவற்றையும் கொண்டுள்ளது, அத்தகைய முன்னறிவுப்பானது எவ்விதத்திலும் வரலாறு ஆகாது. வேதாகமத்தில் பல பகுதிகள் உள்ளன, அதில் வெறும் தீர்க்கதரிசனம் மட்டுமோ, யேகோவாவின் கிரியை மட்டுமோ, பவுலின் நிருபங்கள் மட்டுமே இல்லை. வேதாகமத்தில் எத்தனை பகுதிகள் உள்ளன என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம், யாத்திராகமம்…, மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களும் உள்ளன. இறுதியில், பழைய ஏற்பாடு மல்கியா புத்தகத்துடன் முடிவடைகிறது. இது யேகோவாவால் வழிநடத்தப்பட்ட நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைப் பதிவு செய்கிறது. இது ஆதியாகமம் முதல் மல்கியா புத்தகம் வரையுள்ள நியாயப்பிரமாண காலத்தின் அனைத்து கிரியைகளையும் பற்றிய விரிவான பதிவாகும். அதாவது, நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவால் வழிநடத்தப்பட்ட ஜனங்கள் அனுபவித்த அனைத்தையும் பழைய ஏற்பாடு பதிவுசெய்கிறது. பழைய ஏற்பாட்டு காலத்தின்போது, யேகோவா எழுப்பிய ஏராளமான தீர்க்கதரிசிகள் அவருக்காகத் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் பல்வேறு கோத்திரங்களுக்கும் தேசங்களுக்கும் அறிவுரைகளை வழங்கினர், மேலும் யேகோவா செய்யவேண்டிய கிரியையை முன்னறிவித்தனர். எழுப்பப்பட்ட இந்த ஜனங்கள் அனைவருக்கும் யேகோவாவால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டது: அவர்களால் யேகோவாவிடமிருந்து தரிசனங்களைக் காணவும், அவருடைய சத்தத்தைக் கேட்கவும் முடிந்தது, இவ்வாறு அவர்கள் அவரால் ஏவப்பட்டு தீர்க்கதரிசனத்தை எழுதினர். அவர்கள் செய்த கிரியை யேகோவாவின் சத்தத்தின் வெளிப்பாடாகவும், யேகோவாவின் தீர்க்கதரிசனத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. மேலும், அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையானது ஆவியானவரைப் பயன்படுத்தி வெறுமென ஜனங்களை வழிநடத்துவதாக இருந்தது. அவர் மாம்சமாக மாறியிருக்கவில்லை, ஜனங்கள் அவருடைய முகத்தில் எதையும் காணவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையைச் செய்ய பல தீர்க்கதரிசிகளை எழுப்பி, அவர்களிடம் வேதவாக்குகளைக் கொடுத்தார், அவர்கள் அதை இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் குலத்துக்கும் அறிவித்தனர். தீர்க்கதரிசனம் உரைப்பதே அவர்களுடைய கிரியையாக இருந்தது, அவர்களில் சிலர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக யேகோவாவின் அறிவுரைகளை எழுதினர். யேகோவாவின் அதிசயத்தையும் ஞானத்தையும் ஜனங்கள் காணும்படியாக, தீர்க்கதரிசனம் உரைப்பதற்கும், எதிர்கால கிரியையை அல்லது அந்த நேரத்தில் இன்னும் செய்யப்பட வேண்டிய கிரியையை முன்னறிவிப்பதற்காகவும் யேகோவா இந்த நபர்களை எழுப்பினார். இந்தத் தீர்க்கதரிசன புத்தகங்கள் வேதாகமத்தின் பிற புத்தகங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாக இருந்தன. அவை யேகோவாவிடமிருந்து தரிசனங்கள் அல்லது சத்தத்தைப் பெற்றுக்கொண்டவர்களால் தீர்க்கதரிசன ஆவி வழங்கப்பட்டவர்களால் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாமே யேகோவா தனது கிரியையை செய்து முடித்த பிறகு ஜனங்களால்பதிவு செய்யப்பட்டவைகளாகும். ஆதியாகமம் மற்றும் யாத்திராகமம் ஆகிய புத்தகங்களை ஏசாயா மற்றும் தானியேல் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது என்பது போலவே, யேகோவா எழுப்பிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தையும் இந்த புத்தகங்களால் தவிர்த்து ஒதுக்க முடியாது. கிரியை செய்யப்படுவதற்கு முன்பே தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுவிட்டடன. இதற்கிடையில், கிரியை செய்து முடிக்கப்பட்ட பிறகுதான் மற்ற புத்தகங்கள் எழுதப்பட்டன, இதற்குத்தான் ஜனங்கள் தகுதியானவர்களாக இருந்தனர். அக்கால தீர்க்கதரிசிகள் யேகோவாவினால் ஏவப்பட்டு, சில தீர்க்கதரிசனங்களை உரைத்தனர். அவர்கள் பல வார்த்தைகளைப் பேசினார்கள். மேலும், அவர்கள் கிருபையின் காலத்தின் காரியங்களையும், கடைசி நாட்களில் உலகின் அழிவையும், யேகோவா செய்ய திட்டமிட்ட கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். மீதமுள்ள புத்தகங்கள் அனைத்தும் இஸ்ரவேலில் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. ஆதலால், நீங்கள் வேதாகமத்தை வாசிக்கும்போது, யேகோவா இஸ்ரவேலில் செய்ததைப் பற்றியே பிரதானமாக வாசிக்கிறீர்கள். இஸ்ரவேலை வழிநடத்தும் யேகோவாவின் கிரியை, எகிப்திலிருந்து இஸ்ரவேலரை வழிநடத்த மோசேயை அவர் பயன்படுத்தியது, மோசே ஜனங்களை பார்வோனின் பிடிகளிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றது, அதன் பிறகு அவர்கள் கானானுக்குள் பிரவேசித்தது, இதைத் தொடர்ந்து கானானில் எல்லாமே அவர்களுடைய வாழ்க்கையாக இருந்தது ஆகியவற்றையே வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பிரதானமாக பதிவு செய்கிறது. இது தவிர, எல்லாமே இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையைக் குறித்த பதிவுகளால் ஆனதாகும். பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட எல்லாமே இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாக இருக்கிறது. அது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்த தேசத்தில் யேகோவா செய்த கிரியையாகும். நோவாவிற்குப் பிறகு தேவன் அதிகாரப்பூர்வமாக பூமியிலுள்ள ஜனங்களை வழிநடத்தத் துவங்கியது முதல், பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை அனைத்தும் இஸ்ரவேலின் கிரியையாக இருக்கிறது. இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யப்பட்ட எந்தக் கிரியையும் ஏன் பதிவு செய்யப்படவில்லை? ஏனென்றால், இஸ்ரவேல் தேசமே மனுக்குலத்தின் பிறப்பிடமாக இருக்கிறது. ஆதியில், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்த தேசங்களும் காணப்படவில்லை. மேலும், யேகோவா வேறு எந்த இடத்திலும் கிரியை செய்யவில்லை. இதனால், வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பது முற்றிலும் அந்த நேரத்தில் இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியையாகும். ஏசாயா, தானியேல், எரேமியா, எசேக்கியேல் … ஆகிய தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட வார்த்தைகள் பூமியில் அவருடைய பிற கிரியைகளை முன்னறிவிக்கின்றன. அவை யேகோவா தேவனுடைய கிரியையையே முன்னறிவிக்கின்றன. இவை அனைத்தும் தேவனிடமிருந்து வந்தவையாகும். அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தது. மேலும், இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைத் தவிர, மற்ற அனைத்துமே அந்த நேரத்தில் யேகோவாவின் கிரியையைப் பற்றிய ஜனங்களுடைய அனுபவங்களின் பதிவாகும்.
சிருஷ்டிப்பின் கிரியையானது மனுக்குலம் இருப்பதற்கு முன்பே நடந்தது, ஆனால் ஆதியாகமம் புத்தகமானது மனுக்குலம் இருந்த பிறகே வந்தது. இது நியாயப்பிரமாண காலத்தில் மோசே எழுதிய புத்தகமாகும். இது இன்று உங்கள் மத்தியில் நடக்கும் காரியங்களைப் போலவே இருக்கிறது: அவை நடந்த பிறகு, நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் ஜனங்களுக்குக் காண்பிப்பதற்காகவும், எதிர்கால ஜனங்களுக்காகவும் எழுதுகிறீர்கள். நீ பதிவுசெய்தவை கடந்த காலங்களில் நிகழ்ந்தவையாகும், அவை வரலாறே தவிர வேறொன்றுமில்லை. பழைய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்ட காரியங்கள் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியையாகும். புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை கிருபையின் காலத்தில் இயேசுவின் கிரியையாகும். தேவன் இரண்டு வெவ்வேறு காலங்களில் செய்த கிரியையை அவை ஆவணப்படுத்துகின்றன. நியாயப்பிரமாண காலத்தின்போது தேவன் செய்த கிரியையை பழைய ஏற்பாடு ஆவணப்படுத்துகிறது, ஆதலால் பழைய ஏற்பாடு ஒரு வரலாற்றுப் புத்தகமாகும், அதே நேரத்தில் புதிய ஏற்பாடு கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தயாரிப்பாகும். புதிய கிரியை துவங்கியபோது, புதிய ஏற்பாடும் காலாவதியானது. ஆகையால், புதிய ஏற்பாடும் ஒரு வரலாற்றுப் புத்தகமாகவே இருக்கிறது. நிச்சயமாகவே, புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப் போலவே முறையானதாகவும் இல்லை, அது பல காரியங்களை பதிவு செய்யவும் இல்லை. யேகோவாவால் பேசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயேசுவின் சில வார்த்தைகள் மட்டுமே நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாகவே, இயேசுவும் அநேகக் கிரியைகளைச் செய்தார், ஆனால் அது விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை. இயேசு எவ்வளவு கிரியை செய்தார் என்பது புதிய ஏற்பாட்டில் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் அவர் பூமியில் செய்த கிரியையும், அப்போஸ்தலர்களின் கிரியையும் யேகோவாவின் கிரியையை விட மிகவும் குறைவாகவே இருந்தன. இதனால், பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாட்டில் குறைவான புத்தகங்களே உள்ளன.
வேதாகமம் என்ன வகையான புத்தகம்? பழைய ஏற்பாடானது நியாயப்பிரமாண காலத்தில் தேவன் செய்த கிரியையாகும். நியாயப்பிரமாண காலத்தில் யேகோவா செய்த எல்லா கிரியைகளையும், அவருடைய சிருஷ்டிப்பின் கிரியையையும் வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. இவையனைத்தும் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. மேலும், இது இறுதியாக மல்கியா புத்தகத்துடன் யேகோவா செய்த கிரியையின் கணக்குகளை முடிக்கிறது. தேவன் செய்த இரண்டு கிரியைகளை பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது: ஒன்று சிருஷ்டிப்பின் கிரியையாகும், மற்றொன்று நியாயப்பிரமாணத்தின் கட்டளையாகும். இரண்டுமே யேகோவாவால் செய்யப்பட்ட கிரியையாக இருந்தன. நியாயப்பிரமாணத்தின் காலமானது யேகோவா தேவனின் நாமத்தில் செய்யப்பட்ட கிரியையைக் குறிக்கிறது. இது முக்கியமாக யேகோவா நாமத்தினால் செய்யப்பட்ட முழு கிரியையாகும். இவ்வாறு, பழைய ஏற்பாடு யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கிறது, புதிய ஏற்பாடு பிரதானமாக இயேசுவின் நாமத்தினால் செய்யப்பட்ட இயேசுவின் கிரியையைப் பதிவு செய்கிறது. இயேசுவின் நாமத்தின் முக்கியத்துவமும், அவர் செய்த கிரியையும் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டுக் காலத்தின்போது, யேகோவா இஸ்ரவேலில் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டினார். பூமியில் இஸ்ரவேலரின் ஜீவிதத்தை வழிநடத்தி, அவர்கள் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், பூமியில் தாம் தெரிந்துகொண்ட முதல் ஜனக்கூட்டம், தமது இருதயத்திற்கு ஏற்ற ஜனங்கள், தாம் தனிப்பட்ட முறையில் வழிநடத்திய முதல் ஜனக்கூட்டம் என்பதை நிரூபித்தார். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் யேகோவா முதலில் தெரிந்துகொள்ளப்பட்வையாக இருந்தன. ஆதலால், நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவின் கிரியை முடிவடையும் வரையிலும் அவர் எப்போதும் அவர்களிடமே கிரியை செய்தார். இரண்டாம் கட்ட கிரியையானது புதிய ஏற்பாட்டுக் கிருபையின் காலத்தின் கிரியையாக இருந்தன. மேலும், இது யூத ஜனங்களுக்கு மத்தியிலும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு மத்தியிலும் செய்யப்பட்டது. இயேசு மாம்சமாகிய தேவனாக இருந்ததனால் இக்கிரியையின் எல்லை சிறியதாக இருந்தது. இயேசு யூதேயா தேசம் முழுவதும் மட்டுமே கிரியை செய்தார், மூன்றரை ஆண்டுகள் மட்டுமே கிரியை செய்தார். இதனால், புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரியையின் அளவை விட மிஞ்சியதாக இருக்க முடியவில்லை. கிருபையின் காலத்தைச் சேர்ந்த இயேசுவின் கிரியையானது முக்கியமாக நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஜனங்கள் நடந்த பாதையானது அவர்களுடைய வாழ்வின் மனநிலையில் காணப்பட்ட மிகவும் மேலோட்டமான மாற்றங்களுக்குரியதாக இருந்தது, இவற்றில் பெரும்பாலானவை நிருபங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்தார் என்பதை நிருபங்கள் காண்பிக்கின்றன. (நிச்சயமாகவே, பவுல் சிட்சிக்கப்பட்டாலும் அல்லது துரதிர்ஷ்டத்தால் தாக்கப்பட்டாலும், அவன் செய்த கிரியையில் அவன் பரிசுத்த ஆவியானவரால் அறிவுறுத்தப்பட்டான். அவன் அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஒருவனாக இருந்தான். பேதுருவும் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டான், ஆனால் அவன் பவுல் செய்ததைப் போல அதிகக் கிரியை செய்யவில்லை. பவுல் செய்த கிரியையில் மனுஷரின் அசுத்தங்கள் காணப்பட்டபோதிலும், பவுல் எழுதிய நிருபங்களின் மூலம் பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் எவ்வாறு கிரியை செய்தார் என்பதைக் காண முடிகிறது. பவுல் வழிநடத்திய பாதை சரியான ஒன்றாக இருந்தது, அது சரியானதாக இருந்தது, அது பரிசுத்த ஆவியானவரின் பாதையாக இருந்தது.)
நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யப்பட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். நீ ஏன் இன்று வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாய், வேதாகமத்திலிருந்து தனியாக வேறொரு கிரியை ஏன் இருக்கிறது, தேவன் ஏன் புதிய, மிகவும் விரிவான நடைமுறையை வேதாகமத்தில் தேடுவதில்லை, அதற்குப் பதிலாக வேதாகமத்திற்கு வெளியே அதிக வல்லமையான கிரியை இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான். பழைய மற்றும் புதிய கிரியைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை நீ அறிந்துகொள்ள வேண்டும். நீ வேதாகமத்தை வாசிக்காவிட்டாலும், உன்னால் அதைப் பகுத்தறிய முடிய வேண்டும். இல்லையென்றால், நீ இன்னும் வேதாகமத்தையே ஆராதித்துக் கொண்டிருப்பாய். மேலும், புதிய கிரியைக்குள் பிரவேசிப்பதும், புதிய மாற்றங்களுக்கு உட்படுவதும் உனக்கு கடினமாக இருக்கும். உயர்ந்த வழி இருக்கும்போது, அந்தத் தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது ஜனங்கள் திரும்பிப் பார்க்கிறார்கள் என்ற வரலாறாக மட்டுமே இருக்கிறது. மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது “புனித நூலில்” பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். “புனித நூலில்” அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்.
நீங்கள் வேதாகமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கிரியை மிகவும் அவசியமானதாகும்! இன்று, நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அதில் புதிதாக எதுவும் இல்லை, அது முற்றிலும் பழையது. வேதாகமம் ஒரு வரலாற்றுப் புத்தகமாகும். நீ கிருபையின் காலத்தில் பழைய ஏற்பாட்டை புசித்துக் குடித்திருந்தால் மற்றும் கிருபையின் காலத்தின்போது பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவையானதை நீ கடைபிடித்திருந்தால், இயேசு உன்னைப் புறந்தள்ளி, உன்னைக் கடிந்துகொண்டிருந்திருப்பார். நீ பழைய ஏற்பாட்டை இயேசுவின் கிரியைக்கு பயன்படுத்தியிருந்தால், நீ ஒரு பரிசேயனாக இருந்திருப்பாய். இன்று, நீ பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை ஒன்றாகச் சேர்த்து புசித்துக் குடித்து, அதன்படி நடந்தால், இன்றைய தேவன் உன்னைக் கடிந்துகொள்வார். இன்றைய பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் நீ விழுந்து கிடக்கிறாய்! நீ பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் புசித்துக் குடித்தாயானால், நீ பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே இருக்கிறாய்! இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதைக் கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாணக் காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாணக் காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதைப் பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்குப் பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றிப் பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். ஆகவே, அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை விளக்கவுமில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணக் காலத்தின் வார்த்தைகளின்படி அவர் கிரியை செய்யவுமில்லை. அவர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதை புறக்கணித்தார், அது தமது கிரியையுடன் ஒத்திருக்கிறதா இல்லையா என்று அவர் கவலைப்படவில்லை, மற்றவர்கள் தமது கிரியையைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அதை எவ்வாறு கண்டித்தார்கள் என்பது குறித்தும் கவலைப்படவில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பை பலர் கண்டித்தபோதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர் செய்து வந்தார். அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சைரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு செய்த கிரியையானது புதிய கிரியையைத் துவக்கியது: அவர் பழைய ஏற்பாட்டுக் கிரியையின்படி கிரியை செய்யவில்லை, பழைய ஏற்பாட்டு யேகோவா பேசிய வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவில்லை. அவர் தமது சொந்த கிரியையைச் செய்தார், அவர் புதிய கிரியையையும், நியாயப்பிரமாணத்தையும் காட்டிலும் உயர்ந்த கிரியையை செய்தார். ஆகவேதான், அவர் கூறினார்: “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” ஆகையால், அவர் நிறைவேற்றியவற்றிற்கு ஏற்ப, பல உபதேசங்கள் மீறப்பட்டன. ஓய்வுநாளில் அவர் சீஷர்களை பயிர்வழியே அழைத்துச் சென்றபோது, அவர்கள் கதிர்களைக் கொய்து சாப்பிட்டார்கள். அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.” என்று சொன்னார். அந்த நேரத்தில், இஸ்ரவேலரின் விதிமுறைகளின்படி, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காத எவரும் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். ஆனாலும், இயேசு ஆலயத்திற்குள் செல்லவுமில்லை, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவுமில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தின்போது அவருடைய கிரியையானது யேகோவாவால் செய்யப்படவில்லை. இவ்வாறு, இயேசு செய்த கிரியையானது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தையும் மிஞ்சியது, அது அதைவிட உயர்ந்ததாக இருந்தது, நியாயப்பிரமாணத்தின்படி செய்யப்படவில்லை. கிருபையின் காலத்தின்போது, இயேசு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை, அந்த உபதேசங்களை ஏற்கனவே மீறியிருந்தார். ஆனால் இஸ்ரவேலர் வேதாகமத்தைத் தீவிரமாக பற்றிப்பிடித்துக்கொண்டு இயேசுவைக் கடிந்துகொண்டனர், இது இயேசுவின் கிரியையை மறுக்கவில்லையா? இன்று, மதவாத உலகமும் வேதாகமத்தைத் தீவிரமாய்ப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. “வேதாகமம் ஒரு புனித நூல், அதைக் கட்டாயம் படிக்க வேண்டும்” என்று சிலர் கூறுகின்றனர். “தேவனுடைய கிரியை என்றென்றும் ஆதரிக்கப்பட வேண்டும், பழைய ஏற்பாடு என்பது இஸ்ரவேலர்களுடனான தேவனுடைய உடன்படிக்கையாக இருக்கிறது, அதை புறந்தள்ள முடியாது, ஓய்வுநாள் எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்!” என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லவா? இயேசு ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? அவர் பாவம் செய்தாரா? இதுபோன்ற காரியங்களை யாரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்? ஜனங்கள் வேதாகமத்தை எவ்வாறு வாசித்தாலும், அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறன்களைப் பயன்படுத்தி தேவனுடைய கிரியையை அறிந்துகொள்வது சாத்தியமில்லாததாக இருக்கும். அவர்கள் தேவனைக் குறித்த தூய்மையான அறிவைப் பெறாமல்போவது மட்டுமின்றி, அவர்களுடைய கருத்துக்கள் இன்னும் அதிகமாகப் பயங்கரமானதாகிவிடும், அதாவது அவர்கள் தேவனை எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். இன்று தேவன் மாம்சமாக அவதரிக்காதிருந்தால், ஜனங்கள் தங்கள் சொந்த கருத்துக்களால் அழிந்துபோயிருந்திருப்பார்கள் மற்றும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு மத்தியில் அவர்கள் மரித்துப்போயிருந்திருப்பார்கள்.