பாதை … (7)

நம்முடைய நடைமுறை அனுபவங்களில், தேவன் தனிப்பட்ட முறையில் நமக்கு ஒரு பாதையைத் திறந்து கொடுக்கும் பல தருணங்கள் இருப்பதைக் காண்கிறோம், அதனால் நம் பாதங்களுக்குக் கீழே உள்ள பாதை உறுதியாகவும் அதிக உண்மையானதாகவும் இருக்கும். ஏனென்றால் இது பல காலங்களுக்கு முன்னதாகவே தேவன் நமக்காகத் திறந்து கொடுத்த பாதையாகும், மேலும் இது பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நம் தலைமுறைக்கு அனுப்பப்பட்ட பாதையாகும். இவ்வாறு இறுதி வரை நடந்து முடிக்கப்படாத நம் முன்னோர்களின் பாதையில் நாம் செல்கிறோம். அதன் இறுதிக் கட்டத்தில் நடக்க நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளோம். எனவே, இந்தப் பாதை குறிப்பாக தேவனால் நமக்காக ஆயத்தமாக்கப்பட்டதாகும், நாம் ஆசீர்வதிக்கப்பட்டாலும் அல்லது துரதிர்ஷ்டத்தினால் பாதிக்கப்பட்டாலும், வேறு ஒருவராலும் இந்தப் பாதையில் நடக்க முடியாது. இதனுடன் என்னுடைய சொந்த நுண்ணறிவையும் சேர்க்கிறேன்: வேறு இடத்திற்குத் தப்பியோட முயற்சிக்கவோ, அல்லது வேறு பாதையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவோ நினைக்க வேண்டாம், அந்தஸ்துக்கு ஆசைப்பட வேண்டாம், அல்லது உன் சொந்த ராஜ்யத்தை அமைக்க முயற்சிக்க வேண்டாம், இவை அனைத்தும் கற்பனைகளே. என் வார்த்தைகளைக் குறித்து முன்கூட்டியே உருவாக்கிக்கொண்ட சில கருத்துக்களை நீ கொண்டிருக்கலாம், அப்படியிருக்கும் பட்சத்தில் நீ மிகுந்த குழப்பமடைவதை நிறுத்திக் கொள் என்று நான் பரிந்துரைக்கிறேன். நீ இதை மேலும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது; புத்திசாலியாக இருக்க முயற்சிக்காதே, நல்லதையும் தீயதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவனுடைய திட்டம் நிறைவேறியவுடன் நீ வருத்தப்படுவாய். நான் என்ன சொல்கிறேன் என்றால், தேவனுடைய ராஜ்யம் வருகிறபோது, பூமியின் தேசங்கள் அனைத்தும் நொறுங்கிப் போய் விடும். அந்த நேரத்தில் உன்னுடைய சொந்தத் திட்டங்களும் அழிக்கப்பட்டிருப்பதை நீ பார்ப்பாய், மேலும் தண்டிக்கப்பட்டவர்கள் அடித்து நொறுக்கப்படுவார்கள், இவ்விஷயத்தில், தமது மனநிலையை தேவன் முழுவதுமாக வெளிப்படுத்துவார். இவ்விஷயங்கள் எனக்கு மிகவும் தெளிவாக இருப்பதால், நான் அவற்றை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஆகவே நீ என்னைப் பின்பு குற்றஞ்சொல்ல மாட்டாய். இன்றுவரை தேவனால் நியமிக்கப்பட்ட பாதையில் நம்மால் நடக்க முடிந்தபடியால், நீங்கள் ஏதோ விசேஷமானவன் என்றும் நினைக்க வேண்டாம் அல்லது துரதிர்ஷ்டமானவன் என்றும் நினைக்க வேண்டாம், தேவனுடைய தற்போதைய கிரியையைக் குறித்து ஒருவரும் வலியுறுத்த மாட்டார்கள், இல்லையென்றால் நீ துண்டுதுண்டாக நொறுக்கப்படுவாய். நான் தேவனுடைய கிரியையால் பிரகாசமடைந்தேன்: எதுவாக இருந்தாலும், தேவன் இந்த ஜனக்குழுவை முழுமையாக்குவார், அவருடைய கிரியை மீண்டும் ஒருபோதும் மாறாது, தேவன் இந்த ஜனக்குழுவை பாதையின் முடிவுக்கு அழைத்துச் சென்று, பூமியில் தனது கிரியையை முடிப்பார். நாம் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான ஜனங்கள் “முன்னோக்கிப் பார்க்க” விரும்புகிறார்கள், அவர்களின் ஆர்வத்திற்கு முடிவே இல்லை. தேவனுடைய இன்றைய அவசர சித்தத்தை அவர்களில் யாரும் புரிந்து கொள்வதில்லை, அதனால் அவர்கள் அனைவரும் தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் வனாந்தரத்தில் சுற்றித்திரிய விரும்பும் கட்டுப்பாடற்றக் குதிரைகளைப் போன்றவர்கள்; மனித வாழ்க்கையின் வழியைத் தேடுவதற்காக சிலர் கானானின் நல்ல நிலத்தில் குடியேற விரும்புகிறார்கள். பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நுழைந்த பின்பும்கூட, ஜனங்கள் அதை அனுபவிக்கவில்லை என்றால், அவர்களுக்கு இன்னும் என்ன வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கானானின் நல்ல தேசத்தைத் தாண்டி வனாந்திரம் மட்டுமே இருக்கிறது. ஜனங்கள் இளைப்பாறும் இடத்திற்குள் நுழைந்தாலும், அவர்களால் தங்கள் கடமையைச் செய்ய முடிவதில்லை; அவர்கள் வெறும் வேசிகள் இல்லையா? இங்கே தேவனால் பரிபூரணப்படுத்தப்படும் வாய்ப்பை நீ இழந்துபோனால், உன் மீதமுள்ள நாட்களை எண்ணி வருத்தப்படுவாய், உன்னுடைய வருத்தம் எல்லையற்றதாக இருக்கும். கானான் தேசத்தைப் பார்த்தும், அதை அனுபவிக்க முடியாத மோசேயைப் போல நீ இருப்பாய், அவனது கைகள் இறுக மூடிக்கொண்டிருந்தன, அவனுடைய மரணம் வருத்தத்தால் நிறைந்திருந்தது, இது வெட்கக்கேடானது என்று நீ நினைக்கவில்லையா? மற்றவர்களால் கேலி செய்யப்படுவதை நீ சங்கடமாக நினைக்கவில்லையா? மற்றவர்களால் அவமானப்படுத்தப்பட நீ விரும்புகிறாயா? நன்றாக இருக்கவேண்டும் என்று உனக்கு நீயே விரும்பவில்லையா? தேவனால் பரிபூரணமாக்கப்பட்ட ஒரு மதிப்புமிக்க மற்றும் நிமிர்ந்து நிற்கிற நபராக நீ இருக்க விரும்பவில்லையா? நீ உண்மையில் எதை அடையவும் ஆசைப்படவில்லையா? மற்ற பாதைகளில் நடக்க நீ விரும்புகிறதில்லை; தேவன் உனக்காக ஏற்படுத்தின பாதையில் போகவும் நீ விரும்புகிறதில்லையா? பரலோகச் சித்தத்தை எதிர்க்க உனக்கு தைரியம் உள்ளதா? உன்னுடைய “திறமை” எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உன்னால் உண்மையில் பரலோகத்தைக் குற்றப்படுத்த முடியுமா? நாம் நம்மையே சரியாக அறிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது என்று நான் நம்புகிறேன். தேவனிடமிருந்து வரும் ஒரு வார்த்தை பரலோகத்தையும் பூமியையும் மாற்றும், எனவே தேவனுடைய பார்வையில் மெலிந்த சிறிய நபராக இருக்கிறாயா?

என் சொந்த அனுபவங்களில், நீ எவ்வளவு அதிகமாக தேவனை எதிர்க்கிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் தமது மாட்சிமையான மனநிலையைக் காண்பிப்பார், மேலும் உனக்கு “அளிக்கும்” தண்டனையும் அவ்வளவு மோசமானதாக இருக்கும் என்று காண்கிறேன்; நீ எவ்வளவு அதிகமாக அவருக்குக் கீழ்ப்படிகிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்னை நேசிப்பார் மற்றும் உன்னைப் பாதுகாப்பார். தேவனுடைய மனப்பான்மை தண்டனையின் கருவி போன்றது: நீ கீழ்ப்படிந்தால் நீ பாதுகாப்பாகவும் நன்னிலையிலும் இருப்பாய்; நீ கீழ்ப்படியாத போது, நீ எப்போதும் பகட்டாகக் காண்பித்துக்கொள்ள முயற்சிப்பாயானால், எப்போதும் தந்திரங்களைச் செய்து கொண்டிருந்தாயானால், தேவனுடைய மனநிலை உடனடியாக மாறுகிறது. அவர் மேகமூட்டமான நாளில் சூரியனைப் போன்றவர், அவர் உன்னிடமிருந்து மறைந்து அவருடைய கோபத்தை உன்னிடம் காண்பிப்பார். ஆகவே, பல மைல் தூரம் வரையிலும் வானம் தெளிவாக இருக்கையில், நீரோட்டம் திடீரென வேகமடையும் வரை மற்றும் நீரானது அலை வாங்கும் வரையிலும், அலைகள் இருந்தாலும் தண்ணீரின் மேற்பரப்பில் சிற்றலை போன்றேயிருக்கும் ஜுன் மாத வானிலைப் போன்றதே அவருடைய மனநிலையுமாகும். தேவனுடைய இத்தகைய மனநிலைக்கு முன்னால் நீ மிகவும் பொறுப்பற்றிருக்க உனக்கு என்ன தைரியம்? உங்கள் அனுபவங்களில், உங்களில் பெரும்பாலான சகோதர சகோதரிகள் பரிசுத்த ஆவியானவர் பகல் வெளிச்சத்தில் கிரியை செய்யும் போது பார்த்திருக்கிறீர்கள், நீங்கள் விசுவாசம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள், ஆனால், திடீரென, தேவனுடைய ஆவியானவர் உங்களைக் கைவிட்டுவிடுகிறார், நீங்கள் இரவில் தூக்கமில்லாதபடிக்கு, அவருடைய ஆவி மறைந்த திசையை வெகுவாய்த் தேடிக்கொண்டு மிகவும் வேதனைப்படுகிறீர்கள். நீங்கள் என்ன செய்தாலும், அவருடைய ஆவி எங்கே சென்றது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது, ஆனாலும், திடீரென, அவர் மீண்டும் உங்களுக்குத் தோன்றுகிறார், மேலும் பேதுரு திடீரென்று தனது கர்த்தராகிய இயேசுவை மீண்டும் ஒருமுறை பார்த்தபோது பரவசமடைந்தது போல நீங்கள் பரவசமடைகிறீர்கள், கிட்டத்தட்ட பரவசத்தினால் சத்தமிட்டு அழுகிறீர்கள். பலமுறை அனுபவித்த பிறகு, நீ இதை உண்மையாகவே மறந்து விட்டாயா? மாம்சமாகி, சிலுவையில் அறையப்பட்டு, பின்னர் உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு ஏறிப் போன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, கொஞ்ச காலம் எப்போதும் உனக்கு மறைந்திருக்கிறார், பின்னர் கொஞ்ச காலம் அவர் உனக்குத் தோன்றுகிறார். உன் நீதியின் காரணமாக அவர் தம்மையே உனக்கு வெளிப்படுத்துகிறார், மேலும் உன் பாவங்கள் காரணமாக அவர் கோபமடைந்து உன்னை விட்டு விலகுகிறார், ஆதலால் நீ ஏன் அவரிடம் அதிகமாக ஜெபம் செய்யக்கூடாது? பெந்தேகோஸ்தே நாளுக்குப் பிறகு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பூமியில் மற்றொரு பொறுப்பு இருக்கிறது என்பது உனக்குத் தெரியாதா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாம்சமாகி, பூமிக்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டார் என்ற உண்மையை மட்டுமே நீ அறிவாய். நீ முன்பு விசுவாசித்த இயேசு நீண்டகாலத்திற்கு முன்பாகவே தமது கிரியையை வேறொருவரிடம் ஒப்படைத்ததை நீ உணரவே இல்லை, அது நீண்ட காலத்திற்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டது, எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியானவர் மீண்டும் அவரது கிரியையின் மற்றொரு பகுதியைச் செய்யும்படிக்கு மாம்ச ரூபத்தில் வந்திருக்கிறார். நான் இங்கே ஒன்றைச் சேர்க்க விரும்புகிறேன், நீங்கள் தற்போது இந்தத் தொடர் ஓட்டத்தில் இருந்தாலும், உங்களில் சிலர் இந்த நபர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டவர் என்று நம்புகிறீர்கள் என்று தைரியமாய்ச் சொல்கிறேன். உங்களுக்கு அவரை அனுபவிக்க மட்டுமே தெரியும்; தேவனுடைய ஆவி மீண்டும் பூமிக்கு வந்ததை நீங்கள் ஒப்புக்கொள்வதில்லை, இன்றைய தேவன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இயேசுகிறிஸ்து என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வதில்லை. எனவே நீங்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு நடக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன், நீங்கள் எங்கு போய் முடிந்தாலும் அதை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள், நீங்கள் இதைக் குறித்துச் சிறிதும் கவனம் கொள்வதில்லை. இப்படி நீங்கள் இயேசுவை வார்த்தையில் நம்புகிறீர்கள், ஆனால் இன்று தேவன் சாட்சி பகிர்பவரை அப்பட்டமாக எதிர்க்கத் துணிகிறீர்கள். நீ முட்டாள்தனமாக இருக்கிறாய் அல்லவா? இன்றைய தேவன் உன் தவறுகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, அவர் உன்னைத் தண்டிப்பதில்லை. நீ இயேசுவை விசுவாசிப்பதாகச் சொல்கிறாய், அப்படியானால் உன்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னைத் தண்டியாமல் விட்டுவிடுவாரா? உன் கோபத்தை வெளிப்படுத்தவும், பொய் சொல்லவும், வஞ்சிக்கவும் தேவன் உனக்கு ஓர் இடம் என்று நீ நினைக்கிறாயா? உன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தும்போது, நீ இப்போது நடந்து கொள்வதைப் பொறுத்து நீ நீதிமானா அல்லது பொல்லாதவனா என்பதை அவர் தீர்மானிப்பார். பெரும்பாலான மக்கள் நான் “என் சகோதர சகோதரிகள்” என்று குறிப்பிடுவதைப் பற்றிய கருத்துக்களுடன் முடிவடைகிறார்கள், மற்றும் தேவனுடைய கிரியை செய்யும் வழிமுறைகள் மாறும் என்று நம்புகிறார்கள். அத்தகையவர்கள் மரணத்தை வருந்தி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? தேவன் தாமே சாத்தானைத் தேவனென்று சாட்சிப் பகர முடியுமா? இதில், தேவனை நீ நிந்திக்கிறாய் அல்லவா? யார் வேண்டுமானாலும் தேவனாக மாற முடியும் என்று நீ நம்புகிறாயா? நீ உண்மையாய் அறிந்திருந்தால், நீ எந்தக் கருத்துகளையும் கொண்டிருக்க மாட்டாய். வேதாகமத்தில் பின்வரும் பத்தி உள்ளது: எல்லாம் அவருக்காகவே, எல்லாம் அவரிடத்திலிருந்தே வருகிறது. அவர் பல குமாரர்களை மகிமைக்குக் கொண்டுவருவார், அவரே நமது தளபதி…. இதனால் நம்மைச் சகோதரர்கள் என்று அழைப்பதில் அவருக்கு வெட்கமேதுமில்லை. இந்த வார்த்தைகளை நீ எளிதாக மனப்பாடம் செய்ய முடியும், ஆனால் அவை உண்மையில் என்ன அர்த்தம் என்று உனக்குப் புரியவில்லை. நீ உன் கண்களை மூடிக்கொண்டு தேவனை விசுவாசிக்கிறாய் அல்லவா?

முந்தைய தலைமுறையினரால் முடிக்கப்படாத பாதையை எடுத்துக் கொள்ளவும், நம்மிடையே இருப்பவரும், எல்லாவற்றிலும் நிறைந்திருப்பவருமான பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தினவருமான தேவன் மீண்டும் தோன்றுவதைப் பார்க்கவும் முடிந்த நம்முடைய தலைமுறை பாக்கியம் பெற்றது என்று நான் நம்புகிறேன். நீ இந்தப் பாதையில் செல்வாய் என்று கற்பனைகூட செய்திருக்க மாட்டாய், இது உன்னால் முடிந்த ஒன்றா? இந்தப் பாதையானது நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுகிறது, இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஏழு மடங்கு தீவிரப்படுத்தப்பட்ட ஆவியால் வழிநடத்தப்படுகிறது, மேலும் இது இன்றைய தேவனால் உனக்காகத் திறக்கப்பட்டுள்ள பாதையாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தையவரான இயேசு உன் முன் மீண்டும் தோன்றுவார் என்று நீ உன்னுடைய பயங்கரக் கனவுகளில் கூட கற்பனை செய்திருக்க மாட்டாய். நீ மகிழ்ச்சியாக உணரவில்லையா? தேவனுக்கு முன்பாக யாரால் நேருக்கு நேர் வர முடியும்? நாம் தேவனால் ஆதரிக்கப்பட்டு அவரால் ஆதாயப்படுத்தப்படும்படி, தேவனிடமிருந்து பெரிதான ஆசீர்வாதங்களைப் பெற நம்முடைய குழுவிற்காக நான் அடிக்கடி ஜெபிக்கிறேன், ஆனால் நாம் பெரிதான வெளிப்பாடுகளைக் காணும்படி தேவன் நம்மைப் பிரகாசமாக்க வேண்டும் என்று கேட்டு, எண்ணிலடங்காத முறை நான் வருத்தமான கண்ணீர்களை நமக்காக வடித்த நேரங்களும் உண்டு. தேவனைத் தொடர்ந்து முட்டாளாக்க முயலும் மற்றும் எதையுமே அடைய விரும்பாத அல்லது மாம்சத்தைக் குறித்த அக்கறையுள்ள அல்லது நலன்களுக்காகவும் புகழுக்காகவும் தங்களை முக்கியப்படுத்திக் கொள்ள முயலும் நபர்களை நான் பார்க்கும்போது, நான் எப்படி என் இருதயத்தில் மிகுந்த வலியை உணராமல் இருக்க முடியும்? ஜனங்கள் எப்படி இவ்வளவு உணர்ச்சியற்றவர்களாக இருக்க முடிகிறது? எனது கிரியை உண்மையில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லையா? உன் பிள்ளைகள் கலகக்காரர்களாகவும், பிள்ளைகள் காட்டவேண்டிய அன்பை உன்னிடம் கட்டாமல் இருந்தால், அவர்களுக்கு மனசாட்சி இல்லாதிருந்தால், அவர்கள் தங்களை மட்டுமே கவனித்துக் கொண்டு உன் உணர்வுகளை ஒருபோதும் கருத்தில் கொள்ளாவிட்டால், அவர்கள் வளர்ந்தபின் உன்னை வீட்டைவிட்டு வெளியே துரத்தி விட்டால், அந்த நேரத்தில் நீ எப்படி உணர்வாய்? அவர்களை வளர்ப்பதற்காக நீ சிந்திய இரத்தமும், வியர்வையும் மற்றும் செய்த தியாகங்களையும் நினைத்து உன் முகத்தில் கண்ணீர் வடியாதா? இதைப்போலவே நான் எண்ணற்ற முறை தேவனிடம் ஜெபித்து, “அன்பான தேவனே, உம்முடைய கிரியைகளுக்காக நான் பாரத்தைச் சுமக்கிறேனா என்பது உமக்கு மட்டுமே தெரியும். என் செயல்கள் உம்முடைய சித்தத்திற்கு இணங்காத இடத்தில், நீர் என்னை ஒழுங்குபடுத்தும், பரிபூரணப்படுத்தும், மேலும் என்னை விழிப்புணர்வடையச் செய்யும். உம்மிடத்தில் என்னுடைய ஒரே வேண்டுகோள் என்னவென்றால், நீர் இந்த ஜனங்களை அதிகமாக அசைக்க வேண்டும், அதனால் நீர் சீக்கிரத்தில் மகிமையடையவும், அவர்கள் உம்மால் ஆதாயப்படுத்தப்படவும், அதனால் உம்முடைய கிரியையானது உம்முடைய சித்தத்தை அடையவும் மற்றும் உம்முடைய திட்டம் முன்பாகவே முடிக்கப்படவும் வேண்டும்” என்று சொல்லியிருக்கிறேன். தேவன் தண்டனையின் மூலம் ஜனங்களைக் கீழ்ப்படுத்த விரும்புவதில்லை, அவர் ஜனங்களை எப்போதும் அடக்கியாள விரும்பவதில்லை. ஜனங்கள் அவருடைய வார்த்தைகளுக்கும் கிரியைக்கும் ஒழுக்கமான முறையில் கீழ்ப்படிய வேண்டும் என்றும், இதன் மூலம், அவருடைய சித்தத்தைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். ஆனால் ஜனங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை, மேலும் அவர்கள் எப்போதும் அவருக்கு எதிராகக் கலகம் பண்ணுகிறார்கள். அவரைத் திருப்திப்படுத்த அவருடைய எல்லா ஏற்பாடுகளுக்கும் கீழ்ப்படியும் எளிதான வழியைக் கண்டுபிடிப்பது நமக்கு நல்லது என்று நான் நம்புகிறேன். உன்னால் இதை உண்மையாக அடைய முடியுமானால், நீ பரிபூரணப்படுத்தப்படுவாய். இது ஓர் எளிதான, மகிழ்ச்சியான விஷயம் அல்லவா? நீ போகவேண்டிய பாதையில் போ; மற்றவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாதே, மற்றும் அதிகமாக யோசிக்காதே. உன் எதிர்காலமும் உன் தலைவிதியும் உன் சொந்தக் கரங்களிலா உள்ளது? நீ உலகத்தின் பாதையில் செல்ல விரும்பி, எப்போதும் தப்பிக்கப் பார்க்கிறாய், ஆனால் உன்னால் ஏன் வெளியே போக முடியவில்லை? பல வருடங்களாக நீ ஒரு குறுக்கு வழியில் அலைந்து திரிந்து பின்னர் மீண்டும் இந்தப் பாதையை ஏன் தேர்வு செய்கிறாய்? பல வருடங்கள் அலைந்து திரிந்த பிறகு, உன் விருப்பமின்றி இப்போது ஏன் இந்த வீட்டிற்கு திரும்பி வந்துள்ளாய்? இது நீ எடுக்கவேண்டிய முடிவா? இந்தத் தொடர் ஓட்டத்தில் இருப்பவர்களுக்கு, நீ என்னை நம்பவில்லை என்றால் இதைக் கேள்: நீ வெளியேறத் திட்டமிட்டால், தேவன் உன்னை அனுமதிக்கிறாரா என்று பார், பரிசுத்த ஆவியானவர் உன்னை எப்படி அசைக்கிறார் என்று பார், அதை நீயே அனுபவித்துப் பார். வெளிப்படையாகப் பேச வேண்டுமானால், நீ துரதிர்ஷ்டத்தை அனுபவித்தாலும், நீ இந்தத் தொடர் ஓட்டத்தில் அதை அனுபவிக்க வேண்டும், துன்பம் இருக்குமானால், நீ இங்கே, இன்று துன்பப்பட வேண்டும்; நீ வேறு எங்கும் செல்ல முடியாது. இது உனக்குத் தெளிவாகப் புரிகிறதா? நீ எங்கே போவாய்? இது தேவனுடைய நிர்வாக ஆணை. தேவன் இந்த ஜனக்குழுவைத் தேர்ந்தெடுத்ததற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று நீ நினைக்கிறாயா? இன்று அவருடைய கிரியையில், தேவன் எளிதில் கோபம் கொள்வதில்லை, ஆனால் ஜனங்கள் அவருடைய திட்டத்தைச் சீர்குலைக்க முயன்றால், அவருடைய முகம் உடனடியாக மாறி, பிரகாசத்திலிருந்து மப்பும் மந்தாரமாக மாறும். ஆகவே, தேவனுடைய வடிவமைப்புகளுக்கு அடிபணிந்து கீழ்ப்படியவும், உன்னை முழுமையாக்க அவரை அனுமதிக்கவும் நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இதைச் செய்பவர்கள் மட்டுமே புத்திசாலிகளாவர்.

முந்தைய: பாதை … (6)

அடுத்த: பாதை … (8)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக