அத்தியாயம் 56

தீமை செய்பவர்களையும், அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்களையும் தேவனுடைய குமாரர்களை துன்புறுத்துபவர்களையும் தண்டிக்க நான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டேன். இனிமேல், எனது ஆட்சிமுறை ஆணைகளின் கரமானது தங்கள் இருதயங்களில் என்னை மறுப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும். இதை அறிந்து கொள்ளுங்கள்! இது என் நியாயத்தீர்ப்பின் ஆரம்பமாகும், யாருக்கும் எந்த இரக்கமும் காண்பிக்கப்பட மாட்டாது, யாரும் தப்பிப் போகவும் முடியாது, ஏனெனில் நான் நீதியைச் செயல்படுத்துகிற பாரபட்சமற்ற தேவனானவர்; இதை நீங்கள் அனைவரும் கண்டுணர்ந்து கொள்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

தீமை செய்பவர்களை நான் தண்டிக்க விரும்புகிறேன் என்பதல்ல: மாறாக, இது அவர்கள் தங்கள் சொந்தத் தீமையான செயல்களால் தங்களுக்குத் தாங்களே வருவித்துக் கொண்ட தகுந்த தண்டனையாகும். நான் யாரையும் தண்டிக்க அவசரப்படுவதில்லை, யாரையும் அநியாயமாகவும் நடத்துவதில்லை, நான் அனைவருக்கும் நீதியுள்ளவர். நான் நிச்சயமாக என் குமாரர்களை நேசிக்கிறேன், என்னை எதிர்க்கிறவர்களை நான் நிச்சயமாக வெறுக்கிறேன்; இதுவே என் செயல்களுக்குப் பின்னால் உள்ள கொள்கையாகும். எனது ஆட்சிமுறை ஆணைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் சில உட்பார்வை இருக்க வேண்டும்; அப்படி உங்களுக்கு இல்லையென்றால், உங்களுக்கு துளியளவு பயமும் இருக்காது, எனக்கு முன்பாக நீங்கள் கவனக் குறைவாகச் செயல்படுவீர்கள். நான் எதை அடைய விரும்புகிறேன், நான் எதை நிறைவேற்ற விரும்புகிறேன், நான் எதைப் பெற விரும்புகிறேன், அல்லது என் ராஜ்யத்திற்கு எந்த மாதிரியான நபர் தேவை என்பதையும் நீங்கள் அறிய மாட்டீர்கள்.

எனது ஆட்சிமுறை ஆணைகளாவன:

1. நீங்கள் யார் என்பது முக்கியமல்ல, உங்கள் இருதயத்தில் என்னை மறுத்தால், நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.

2. என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் எந்த ஒரு தவறான சிந்தனைக்காகவும் உடனடியாக ஒழுங்குபடுத்தப்படுவார்கள்.

3. என்னை நம்பாதவர்களை ஒரு பக்கமாக வைப்பேன். நான் அவர்களை முழுமையாகத் தண்டித்து, ஒழுங்குபடுத்தும்போது அவர்கள் பேசவும், இறுதிவரை கவனக் குறைவாக செயல்படவும் நான் அவர்களை அனுமதிப்பேன்.

4. என்னை எப்போதும் நம்புபவர்களை நான் கவனித்துப் பாதுகாப்பேன். எல்லா நேரங்களிலும் நான் அவர்களுக்கு இரட்சிப்பின் மூலம் ஜீவனை வழங்குவேன். இந்த ஜனங்கள் என் அன்பைக் கொண்டிருப்பார்கள், அவர்கள் நிச்சயமாக வீழ்ச்சியடையவோ தங்கள் பாதையை இழக்கவோ மாட்டார்கள். அவர்களிடம் உள்ள எந்தப் பெலவீனமும் தற்காலிகமாக மட்டுமே இருக்கும், நான் அவர்கள் பலவீனங்களை நிச்சயமாக நினைவில் கொள்ள மாட்டேன்.

5. நம்புவதாகக் காட்டிக்கொண்டு, ஆனால் உண்மையில் அவ்வாறு செய்யாதவர்கள், ஒரு தேவன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆனாலும் கிறிஸ்துவைத் தேடாதவர்கள், இன்னும் எதிர்க்காதவர்கள் கூட, இவர்கள் மிகவும் பரிதாபகரமான ஜனங்கள், என் செயல்களின் மூலம், நான் அவர்களைத் தெளிவாகக் காண வைப்பேன். எனது செயல்களின் மூலம், அத்தகையவர்களை நான் இரட்சித்து அவர்களை மீண்டும் கொண்டுவருவேன்.

6. முதற்பேறான குமாரர்களாகிய என் நாமத்தை முதலில் ஏற்றுக் கொண்டவர்கள், ஆசீர்வதிக்கப்படுவார்கள்! நான் நிச்சயமாக உங்களுக்குச் சிறந்த ஆசீர்வாதங்களை வழங்குவேன், உங்கள் இருதயங்களின் திருப்திக்கு அவற்றை அனுபவிக்க உங்களை அனுமதிப்பேன்; இதை ஒருவரும் தடுக்கத் துணிய மாட்டார்கள். இவை அனைத்தும் உங்களுக்காக முழுமையாக ஆயத்தமாக உள்ளன, ஏனென்றால் இது எனது ஆட்சிமுறை ஆணையாகும்.

ஒவ்வொரு விஷயத்திலும் என் கரத்தின் அனைத்துச் செயல்களையும் என் இருதயத்தின் அனைத்து எண்ணங்களையும் உங்களால் பார்க்க இயல வேண்டும். இது எல்லாம் உங்களுக்காக இல்லையா? உங்களில் யார் எனக்கானவர்? உங்கள் இருதயங்களில் உள்ள எண்ணங்களை அல்லது உதடுகளில் உள்ள வார்த்தைகளை ஆராய்ந்திருக்கிறீர்களா? இந்தக் காரியங்களுக்கு நீங்கள் மனசாட்சியுள்ள அணுகுமுறையை மேற்கொண்டீர்களா? குழப்பவாதிகளே! ஒழுக்கங்கெட்டவர்களே! நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் தடைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் மீண்டும் மீண்டும் என் குரலை உனக்குள் வெளிப்படுத்துகிறேன், ஆனாலும் அது எந்த எதிர்வினையையும் இன்னும் கொண்டு வரவில்லை. இனியும் கூர் மழுங்கி இருக்காதே! என் சித்தத்தைப் புரிந்து கொள்வதே உன் கடமையாகும்; மேலும் நீ நுழைய வேண்டிய பாதையும் இதுவே. நீ குழம்பிப் போகிறாய், உனக்கு எந்த உட்பார்வையும் இல்லை, நான் உன்னில் எதை நிறைவேற்ற விரும்புகிறேன் அல்லது உன்னிடமிருந்து பெற விரும்புகிறேன் என்பதை நீ தெளிவாகப் பார்க்கவில்லை! என் சித்தத்தைப் புரிந்துகொள்ள, என்னிடம் நெருங்கி வந்து என்னுடன் அதிகமாகத் தொடர்பு கொள்வதன் மூலம் நீ தொடங்க வேண்டும். என் சித்தத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீ எப்போதும் கூறுகிறாய். நீ ஏற்கனவே உன் சொந்தக் காரியங்களால் நிரப்பப்பட்டிருந்தால், நான் எவ்வாறு உன்னிடம் கிரியை செய்ய முடியும்? நீ முயற்சி எடுக்காமல் மேலும் என் முன் வராமல், வெறுமனே காத்திருந்து, செயலற்று இருக்கிறாய். நீ ஒரு புழுவைப் போலிருக்கிறாய் என்று நான் சொல்லுகிறேன், ஆனாலும் நீ தவறாக நடத்தப்படுவதாக உணர்கிறாய் மேலும் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய். இந்த நேரத்தில் நீ எழுந்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்! செயலற்று இருக்காதே! அது உன் வாழ்க்கையை பின்னுக்குத் தள்ளிவிடும்! செயல்திறனுடன் இருப்பது உனக்கு நன்மைகளைத் தருமே அல்லாமல் மற்றவர்களுக்கு அல்ல. நீ இன்னும் அதைக் கண்டுணர்ந்து புரிந்து கொள்ளவில்லையா? என் சித்தம் தொடர்ந்து உன்னில் வெளிப்படுகிறது. நீ அதை உணரவில்லையா? நீ ஏன் அதில் கவனம் செலுத்தவேயில்லை? என் சித்தத்தை நீ ஏன் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியவில்லை? என் சித்தத்தைப் புரிந்து கொள்வது உண்மையிலேயே உனக்கு எந்த நன்மையும் தராதா?

நீ எல்லா வகையிலும் என் சித்தத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இதனால் உன் மூலம், எனக்கு முன்னோக்கி ஒரு வழியும் இளைப்பாற ஒரு வீடும் இருக்கும். இனி என்னைத் தடை செய்யாதே, அது மிகவும் இதயமற்றதாகும்! என் வார்த்தைகளைப் பற்றி உனக்கு எந்தப் புரிதலும் இல்லை, அவற்றுக்கு எந்தப் பதிலும் கொடுப்பதில்லை. இப்போது நேரம் என்ன என்று பார்; இனி காத்திருக்க முடியாது! நீ எனது அடிச்சுவடுகளை கவனமாகப் பின்பற்றாவிட்டால், பின் அது மிகவும் தாமதமாகிவிடும், நீ அதை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லாமல் போகும்.

முந்தைய: அத்தியாயம் 55

அடுத்த: அத்தியாயம் 57

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக