அத்தியாயம் 39

உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள், எனது மகத்துவமான வல்லமையை நீங்கள் எல்லா இடங்களிலும் காணலாம்! நீங்கள் எல்லா இடங்களிலும் என்னைப் பற்றி உறுதியாக இருக்கலாம். பிரபஞ்சமும் ஆகாய விரிவும் எனது மகத்துவமான வல்லமையைப் பரப்புகின்றன. நான் பேசியிருக்கின்ற வார்த்தைகள் இதமான வானிலையினாலும், காலநிலை மாற்றத்தினாலும், ஜனங்களுக்குள்ளான அசாதாரண நிலைகளினாலும், சமூக மாற்றங்களின் சீர்குலைவினாலும், ஜனங்களின் இருதயங்களுக்குள் இருக்கும் வஞ்சகத்தினாலும் நிஜமாகியுள்ளன. சூரியன் வெண்மையாகிறது மற்றும் சந்திரன் சிவக்கிறது; இவையெல்லாம் சமநிலையில் இல்லை. நீங்கள் உண்மையிலேயே இந்தக் காரியங்களை இன்னும் காணவில்லையா?

தேவனுடைய மகத்துவமான வல்லமை இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமின்றி, அவர்தாமே ஒரே மெய்தேவன், சர்வவல்லவர், அவரையே ஜனங்கள் பலவருடங்களாகப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்! வெறுமனே வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் காரியங்களை யாரால் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்? நமது சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே. அவர் பேசுகின்ற உடனேயே சத்தியம் தோன்றுகிறது. அவரே மெய்தேவன் என்று உங்களால் எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்?

நீங்கள் எல்லோரும், மனதின் ஆழத்தில், என்னோடு ஒத்துழைக்க விரும்புவதை நான் அறிவேன், மேலும் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட, என்னுடைய அன்பான சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இந்த வகையான உத்வேகம் இருப்பதையும், ஆனால் பிரவேசிக்க அல்லது உண்மையில் கடைப்பிடிக்க மட்டுமே முடியவில்லை என்றும், நிகழும் எதார்த்தங்களை எதிர்கொள்ளும்போது நிதானமாகவும் அமைதியாகவும் இருக்க முடிவதில்லை என்றும் நான் நம்புகிறேன். நீங்கள் ஒருபோதும் தேவனுடைய எண்ணங்களைப் பொருட்படுத்துவதில்லை, மேலும் நீங்கள் உங்களுடைய சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காத்திருக்காமல் உங்கள் சொந்த விருப்பத்தின்படி செயல்படுகிறீர்கள். இத்தகைய வழிமுறை ஒருபோதும் எனக்குத் திருப்தி அளிக்காது என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்! பிள்ளையே! உன்னுடைய இருதயத்தை மட்டும் முழுவதுமாக எனக்குக் கொடு. தெளிவாக இரு! எனக்கு உன் பணம் தேவை இல்லை, உன் உடைமைகளும் தேவையில்லை, மேலும் நீ மிகுந்த ஆர்வத்துடன், வஞ்சகமாக அல்லது குறுகிய எண்ணத்துடன் என்னைச் சேவிக்க என் முன்னால் வரவேண்டியதும் இல்லை. தூய உள்ளத்தோடு அமைதியாக இரு, பிரச்சினைகள் எழும்போது காத்திருந்து தேடு, நான் உனக்கு ஒரு பதிலைக் கொடுப்பேன். சந்தேகப்படாதே! என் வார்த்தைகள் சத்தியமானவை என்று நீ ஏன் ஒருபோதும் விசுவாசிக்காமல் இருக்கிறாய்? உன்னால் ஏன் என் வார்த்தைகளின் மேல் விசுவாசம் வைக்க முடியவில்லை? நீ மிகவும் பிடிவாதமாக இருக்கிறாய், மேலும் இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் கூட நீ இது போலவே இருக்கிறாய்; நீ மிகவும் அறியாமையில் இருக்கிறாய் மற்றும் பிரகாசிக்கப்படவே இல்லை! முக்கியமான சத்தியங்களில் எவ்வளவு நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? அதை உண்மையிலேயே நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது நீங்கள் குழப்பம் அடைந்து பொறுப்பற்றும் அவசரகதியிலும் செயல்படுகிறீர்கள்! இன்று முக்கிய விஷயம் என்னவென்றால் உங்கள் சொந்த இருதயங்கள் பெரும்பாலும் கேள்விகளைச் சிந்திப்பது போலவே, நீங்கள் ஆவியில் பிரவேசித்து என்னோடு அதிகமாக ஐக்கியம் கொள்ளுகிறீர்கள். நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? இதுதான் முக்கியமானது! தாமதமான நடவடிக்கை உண்மையிலேயே ஒரு பிரச்சினை. விரையுங்கள், தாமதம் செய்யாதீர்கள்! என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு தாமதம் செய்யாமல் உடனடியாக அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் பெரிதும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்! நான் உங்களுக்கு இரட்டிப்பாய் அளிப்பேன். கவலைப்படாதீர்கள்! ஒரு வினாடி கூட தாமதம் செய்யாமல் நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்! உங்கள் மனுஷீகக் கருத்துக்கள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கின்றன, நீங்கள் விஷயங்களைத் தள்ளிப்போடுபவர்களாக இருக்கிறீர்கள், இன்றைக்குச் செய்ய வேண்டியதை எப்போதும் நாளைவரைத் தாமதப்படுத்துகிறீர்கள். மிகவும் சோம்பேறித்தனமாகவும் ஒழுங்கற்றும் இருக்கிறீர்கள். வார்த்தைகளால் அதை விவரிக்க முடியாது! நான் மிகைப்படுத்திக் கூறவில்லை—இது உண்மை. நீ இதை நம்பாவிட்டால், உன்னை நீயே கவனமாக ஆராய்ந்து, உன் சூழ்நிலையைச் சரிபார். இது உண்மையிலேயே அப்படித்தான் இருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ளுவாய்!

முந்தைய: அத்தியாயம் 38

அடுத்த: அத்தியாயம் 40

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக