பயிற்சி (2)

கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனோடு இருக்கவும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஆவிக்குள் வாழவும் தங்களைப் பயிற்றுவித்தனர். இன்றைய நடைமுறையுடன் ஒப்பிடும்போது, அது ஒரு ஆவிக்குரிய பயிற்சியின் எளிய வடிவம்; இது ஜனங்கள் சரியான வாழ்க்கைப் பாதையில் பிரவேசிப்பதற்கு முன்பான ஆழமற்ற மற்றும் எளிமையான பயிற்சியாகும்; மேலும் இது ஜனங்களுடைய விசுவாசத்தில் பயிற்சியின் முதல் கட்டத்தை ஏற்படுத்துகிறது. ஜனங்கள் எப்போதுமே தங்கள் வாழ்க்கையில் இந்த வகையான பயிற்சியை சார்ந்திருந்தால், அவர்களுக்கு அதிக உணர்வுகள் இருக்கும், மேலும் சர்வசாதாரணமாகத் தவறுகளையும் செய்யக்கூடும், மேலும் அவர்கள் உண்மையான வாழ்க்கை அனுபவங்களுக்குள் பிரவேசிக்க இயலாது. அவர்களால் தங்கள் ஆவிகளைப் பயிற்றுவிக்க மட்டும்தான் முடியும், சாதாரணமாக தங்கள் இருதயங்களில் தேவனிடம் நெருங்கி வர முடியும், மேலும், தேவன் அவர்களுடன் இருப்பதில் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்பார்கள். அவர்கள் தேவனோடு ஒன்றிணைவதற்கு, குறைந்த அளவிற்குத் தங்களை மட்டுப்படுத்திக் கொள்வார்கள், மேலும் அவர்கள் ஆழமான எதையும் நெருங்க முடியாது. இந்த எல்லைகளுக்குள் வாழும் ஜனங்கள் எந்தவொரு பெரிய முன்னேற்றத்தையும் அடைய இயலாதவர்கள். எந்த நேரத்திலும், “ஆ! கர்த்தராகிய இயேசுவே. ஆமென்!” என்று கூச்சலிடக்கூடியவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட நாள்தோறும் இப்படியே இருக்கிறார்கள்; அது ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆவியில் வாழும் பயிற்சியான, கடந்த காலங்களின் பயிற்சியாகும். இது இழிவானதல்லவா? இன்றைக்கு, தேவனுடைய வார்த்தைகளை அலசி ஆராயும் நேரம் வரும்போது, தேவனுடைய வார்த்தைகளை சிந்திப்பதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்; சத்தியத்தைச் செயல்படுத்துவதற்கான நேரம் வரும்போது, சத்தியத்தைச் செயல்படுத்துதில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்; உங்கள் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் வரும்போது, உங்கள் கடமையை மட்டுமே செய்யுங்கள். இவ்வகையான பயிற்சி உண்மையில் விடுதலையானது, அது உங்களை விடுவிக்கிறது. இது பழைய மதவாத மனுஷர்கள் ஜெபித்து அருள் கூறுவதைப் போல அல்ல. நிச்சயமாக, இதற்கு முன்பு, இது விசுவாசமுள்ள ஜனங்களின் பயிற்சியாக இருந்தது. ஆனால் இப்போது இவ்வழியில் செயல்படுவது மிகவும் பின்னோக்கியதாகும் தேவனுடைய கிரியை இப்போது உயர்ந்த நிலையில் உள்ளது; இன்றைய நாட்களில் பேசப்படுவது என்னவென்றால், “தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டுவருவது” என்பது நடைமுறையின் மிக முக்கியமான அம்சமாகும். இதுவே ஜனங்கள் தங்கள் யதார்த்த வாழ்க்கையில் பெற்றிருக்கும்படி எதிர்பார்க்கப்படுகிற சாதாரண மனிதத்தன்மையாகும்; மற்றும் ஜனங்கள் தங்கள் சாதாரண மனிதத்தன்மையில் பெற்றிருக்க வேண்டியவை தேவன் இன்று பேசும் எல்லா வார்த்தைகளுமேயாகும். தேவனுடைய இந்த வார்த்தைகளை யதார்த்த வாழ்க்கையில் கொண்டு வருவதே “தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டுவருவது” என்பதன் நடைமுறை அர்த்தமாகும். இன்றைய நாட்களில், ஜனங்கள் பின்வருவனவற்றால் தங்களை முதன்மையாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: ஒரு வழியில், அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்த வேண்டும், கல்வி கற்க வேண்டும், மேலும் தங்கள் வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளுதலுக்கான திறனை மேம்படுத்த வேண்டும்; மற்றொரு வழியில், அவர்கள் ஒரு இயல்பான நபரின் வாழ்க்கையை வாழ வேண்டும். நீ உலகத்திலிருந்து இப்பொழுது தான் தேவனுக்கு முன்பாக வந்திருக்கிறாய்; தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்க நீ முதலில் உன்னுடைய இருதயத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். இதுவே பயிற்சியின் ஆரம்பம், இதுவே உன் வாழ்க்கை மனநிலையில் மாற்றத்தை அடைவதற்கான முதல் படியுமாகும். சிலர் ஒப்பீட்டளவில் தங்கள் பயிற்சியில் எளிதில் மாற்றமைவு செய்யத்தக்கவர்கள்; அவர்கள் வேலை செய்யும் போது சத்தியத்தை ஆழ்ந்து யோசித்து, யதார்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டிய சத்தியங்களையும் பயிற்சியின் கோட்பாடுகளையும் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு அம்சம் என்னவென்றால், நீ ஒரு இயல்பான மனித வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும், மற்றொன்று சத்தியத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்க்கைக்கான சிறந்த பயிற்சியாகும்.

ஜனங்களின் யதார்த்த வாழ்க்கையினுள் தேவனைக் கொண்டுவருவதற்கு முதன்மையாக அவர்கள் தேவனை ஆராதிக்க வேண்டும், தேவனை அறிய நாட வேண்டும், மேலும் இயல்பான மனுகுலத்திற்குள்ளே தேவனுடைய ஒரு சிருஷ்டியின் கடமையைச் செய்ய வேண்டும். அவர்கள் ஏதாவது செய்யும்போதெல்லாம் நிச்சயமாக தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதும், அவ்வாறு ஜெபம் செய்யாவிட்டால் அது சரியல்ல மற்றும் அவர்கள் அவருக்குக் கடன்பட்டிருக்க வேண்டும் என்றில்லை. இன்றைய நாட்களின் பயிற்சி அப்படி இல்லை; அது மிகவும் தளர்வானதாகவும் எளிமையாகவும் இருக்கிறது! இது ஜனங்கள் உபதேசங்களில் நிலைத்திருக்க வேண்டும் என கோருவதில்லை. மாறாக, ஒவ்வொரு நபரும் தங்களது தனிப்பட்ட நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும்: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தேவனை விசுவாசிக்கவில்லை என்றால், அவர்களை அவிசுவாசிகளாக நடத்துங்கள், அவர்கள் விசுவாசித்தால், அவர்களை விசுவாசிகளாக நடத்துங்கள். அன்பையும் பொறுமையையும் உபயோகப்படுத்தாமல், அதற்குப் பதிலாக ஞானத்தை உபயோகப்படுத்துங்கள். சிலர் காய்கறிகளை வாங்க வெளியே செல்கிறார்கள், அவர்கள் நடந்து செல்லும்போது முணுமுணுக்கிறார்கள்: “தேவனே! இன்று நான் என்ன காய்கறிகளை வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்? உம்முடைய உதவியை நான் கெஞ்சுகிறேன். எல்லாவற்றிலும் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும் என்றும், நாம் அனைவரும் சாட்சி அளிக்க வேண்டும் என்றும் தேவன் கேட்கிறார்; எனவே விற்பனையாளர் எனக்கு அழுகிய ஒன்றைக் கொடுத்தாலும், நான் அப்போதும் தேவனுக்கு நன்றி செலுத்துவேன்; நான் சகித்துக்கொள்வேன். தேவனை விசுவாசிக்கிற நாம், காய்கறிகளில் தரமானதைத் தேர்ந்தெடுத்து பொறுக்கிக்கொள்ள முடியாது.” இதைச் செய்வது சாட்சி என்று அவர்கள் நினைக்கிறார்கள், இதன் விளைவாக அவர்கள் அழுகிய காய்கறிகளை வாங்குவதற்கு பணத்தைச் செலவிடுகிறார்கள், ஆனாலும் அவர்கள் இன்னும் ஜெபித்து: “தேவனே! இந்த அழுகிய காய்கறிகளை நீர் ஏற்கத்தகுந்ததாக காண்கிற வரை நான் இனியும் சாப்பிடுவேன்.” இத்தகைய பயிற்சி அபத்தமானது அல்லவா? இது ஒரு கோட்பாட்டைப் பின்பற்றுவதல்லவா? இதற்கு முன்பு, ஜனங்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஆவியானவருடன் வாழப் பயிற்சி பெற்றனர். இது முன்பு கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையுடன் தொடர்புடையது. பக்தி, தாழ்மை, அன்பு, பொறுமை, எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துதல்—இவை கிருபையின் காலத்தில் இருந்த ஒவ்வொரு விசுவாசிக்கும் தேவைப்பட்டவையாகும். அந்த நேரத்தில், ஜனங்கள் எல்லாவற்றிற்காகவும் தேவனிடம் ஜெபம் செய்தனர்; அவர்கள் துணிகளை வாங்கும்போது ஜெபித்தார்கள், ஒரு கூடுகையைப் பற்றி கேள்விப்படும்போதும், அவர்கள் ஜெபிப்பார்கள்: “தேவனே! நான் அங்கு போகலாமா வேண்டாமா? நான் செல்ல வேண்டும் என்று நீர் விரும்பினால், எனக்கு ஒரு சுமூகமான வழியை உண்டாக்குவீராக. அங்கு நான் செல்வதை விரும்பவில்லை என்றால், என்னுடைய பயணத்தைத் தடை செய்து விடுவீராக.” அவர்கள் ஜெபிக்கும்போது தேவனிடம் மன்றாடுவார்கள், ஜெபித்தபின் அவர்கள் சஞ்சலமாய் உணர்ந்து போகமாட்டார்கள். சில சகோதரிகள், கூடுகைகளிலிருந்து வீடு திரும்பியவுடன், தங்கள் அவிசுவாசியான கணவரிடமிருந்து அடிகளைப் பெற்றுவிடுவோம் என்று அஞ்சுவதால், அவர்கள் ஜெபிக்கும்போது அமைதியில்லாமல் இருப்பார்கள்; எனவே கூடுகைக்குச் செல்ல மாட்டார்கள். இதுவே தேவனுடைய சித்தமாக இருக்கும் என்று நம்பினர். உண்மையில், அவர்கள் சென்றிருந்தாலும், எதுவும் நடந்திருக்காது. இதன் விளைவாக அவர்கள் ஒரு கூடுகையைத் தவறவிட்டார்கள். இவை அனைத்தும் ஜனங்களின் அறியாமையின் விளைவாகும். இவ்வழியில் செயல்படும் ஜனங்கள் அனைவரும் தங்கள் சொந்த உணர்வுகளின்படி வாழ்கின்றனர். இத்தகைய பயிற்சி மிகவும் தவறானது, அபத்தமானது மற்றும் தெளிவற்ற வண்ணம் கொண்டது. அவர்களின் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் அநேகம் இருக்கின்றன. ஒரு கூடுகையைப் பற்றி உனக்கு அறிவிக்கப்பட்டால், அங்கு செல்; தேவனிடம் மேற்கொண்டு ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. இது எளிதல்லவா? இன்று நீ ஒரு துணியை வாங்க வேண்டும் என்றால், அப்போதே சென்று அதை வாங்கு. “தேவனே! நான் போகலாமா? நான் போகும்போது ஒரு சகோதரனோ சகோதரியோ வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று ஜெபிக்க வேண்டாம். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி வந்துவிடக்கூடும் என்று நீ பயப்படுகிறாய், எனவே நீ போவதில்லை. அந்த மாலை நேரம் கடந்து போகிறது, யாரும் வரவில்லை. கிருபையின் காலத்தில் கூட, இத்தகைய பயிற்சி முறை மாறுபட்டதாகவும் தவறானதாகவும் இருந்தது. இவ்வாறு, சென்ற காலங்களைப் போலவே ஜனங்கள் பயிற்சி செய்தால், அவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அவர்கள் வெறுமனே அறியாமலேயே எது வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள், பகுத்தறிவுக்குத் தங்கள் செவிசாய்க்க மாட்டார்கள், கண்மூடித்தனமாக கீழ்ப்படிந்து சகித்துக்கொள்வதைத் தவிர, வேறு எதுவும் செய்ய மாட்டார்கள். அந்த காலத்தில், ஜனங்கள் தேவனை மகிமைப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். ஆனால் தேவன் அவர்களிடமிருந்து எந்த மகிமையையும் பெறவில்லை; ஏனென்றால், அவர்கள் நடைமுறையில் எதையும் வாழவில்லை. அவர்கள் வெறுமனே தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு, தங்கள் தனிப்பட்ட கருத்துக்களின்படி தங்களைத் தாங்களே மட்டுப்படுத்திக் கொண்டனர். மேலும் பல வருடங்களின் பயிற்சி கூட அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. சகித்துக்கொள்ளவும், தாழ்மையுடன் இருக்கவும், நேசிக்கவும், மன்னிக்கவும் மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களிடம் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் சிறிதளவு பிரகாசம் கூட இல்லை. ஜனங்கள் அவ்விதத்தில் தேவனை எப்படி அறிந்து கொள்ளக் கூடும்? மேலும் அவர்கள் தேவனை மகிமைப்படுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்?

ஜனங்கள் தங்கள் யதார்த்த வாழ்க்கைக்குள்ளும், அவர்களின் இயல்பான மனித வாழ்க்கைக்குள்ளும் தேவனைக் கொண்டுவந்தால் மட்டுமே, தேவன் மீதான விசுவாசத்தின் சரியான பாதையில் அவர்கள் பிரவேசிக்க முடியும். தேவனுடைய வார்த்தைகள் இன்று உங்களை வழிநடத்துகின்றன; கடந்த காலங்களைப் போல தேடவும் தடவி அலையவும் தேவையில்லை. தேவனுடைய வார்த்தைகளின்படி உன்னால் நடைமுறைப்படுத்த முடியுமானால், நான் வெளிப்படுத்தியிருக்கிற மனித நிலைகளின்படி உன்னைச் சோதித்துப் பார்த்து, அளவிட முடியுமானால், அப்பொழுது நீ மாற்றத்தை அடைய முடியும். இது உபதேசம் அல்ல; தேவன் மனுஷனிடம் எதிர்பார்ப்பதாகும். இன்று, விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்: என் வார்த்தைகளுக்கேற்ப செயல்படுவதைப் பற்றி மட்டுமே நீ அக்கறை கொள். உனக்கான என்னுடைய கோரிக்கைகள், ஒரு சாதாரண நபரின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. நான் ஏற்கனவே உனக்கு என் வார்த்தைகளைக் கூறி இருக்கிறேன்; நீ அவற்றைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் வரை, தேவனுடைய நோக்கங்களுக்கு ஏற்றபடி காணப்படுவாய். இப்போது தேவனுடைய வார்த்தைகளுக்குள் ஜீவிக்கும் காலம். தேவனுடைய வார்த்தைகள் எல்லாவற்றையும் விளக்கியுள்ளன, அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, மேலும் நீ தேவனுடைய வார்த்தைகளின்படி வாழும் வரை, நீ முற்றிலும் சுதந்திரமான மற்றும் விடுதலையான வாழ்க்கையை வாழ்வாய். கடந்த காலங்களில், ஜனங்கள் தேவனைத் தங்கள் யதார்த்த வாழ்க்கையில் கொண்டு வந்தபோது, அவர்கள் அதிக உபதேசம் மற்றும் சடங்காச்சாரங்களை நடைமுறைப்படுத்திக் கஷ்டங்களை அனுபவித்தார்கள்; சிறிய விஷயங்களுக்காகக் கூட, அவர்கள் ஜெபித்துத் தேடுவார்கள், ஆனால் தெளிவாகக் கூறப்பட்ட தேவனுடைய வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவற்றை வாசிப்பதைப் புறக்கணிப்பார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களது அனைத்துப் பிரயாசங்களையும் தேடுதலுக்கென்று அர்ப்பணிப்பார்கள். இதன் விளைவாக எந்தப் பயனும் இல்லை. உதாரணமாக, உணவு மற்றும் உடைகளின் பிரச்சனைகளை எடுத்துக் கொள்ளுங்கள்: நீ ஜெபம் செய்து இந்த விஷயங்களை தேவனுடைய கரங்களில் வைத்து, தேவன் உனக்காக எல்லாவற்றையும் சரிசெய்யும்படி வேண்டிக்கொள்கிறாய். தேவன் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர் இவ்வாறு கூறுவார்: “இதுபோன்ற அற்பமான விவரங்களில் என்னை நான் வருத்திக் கொள்ள வேண்டுமா? உனக்காக நான் உருவாக்கிய இயல்பான மனிதத் தன்மையும் அறிவும் எங்கே போய்விட்டது?” சில நேரங்களில், யாரோ ஒருவர் தங்கள் செயல்களில் தவறு செய்கிறார்கள்; பின்னர் அவர்கள் தேவனைப் புண்படுத்திவிட்டதாக நம்புகிறார்கள், ஆகவே, அவர்கள் சங்கடத்துக்குள்ளாகிறார்கள். சில ஜனங்களின் நிலைகள் மிகச் சிறந்தவை, ஆனால் அவர்கள் ஏதோ ஒரு சிறிய விஷயத்தைத் தவறாகச் செய்யும்போது, தேவன் அவர்களைச் சிட்சிக்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். உண்மையில், இது தேவனுடைய செயல் அல்ல, மாறாக, இது ஜனங்களுடைய சொந்த சிந்தையின் தாக்கம். சில நேரங்களில், நீ எவ்வாறு உணர்கிறாய் என்பதில் ஒரு தவறுமில்லை, ஆனால் மற்றவர்கள் நீ சரியாக உணரவில்லை என்று கூறுகிறார்கள்; எனவே நீ கண்ணியில் அகப்பட்டவனாகிறாய். நீ எதிர்மறையானவனாகி, உனக்குள் இருளடைந்துவிடுகிறாய். பெரும்பாலும், ஜனங்கள் இவ்வாறு எதிர்மறையாக இருக்கும்போது, அவர்கள் தேவனால் சிட்சிக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள், ஆனால் தேவன் கூறுகிறார்: “நான் உன்னிடத்தில் சிட்சிக்கும் எந்த கிரியையையும் செய்யவில்லை; நீ என்னை எப்படி இவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும்?” ஜனங்கள் மிக எளிதாக எதிர்மறையாக மாறுகிறார்கள். அவர்கள் அடிக்கடி அதிக உணர்ச்சிவசப்படுகிறார்கள், பெரும்பாலும் தேவனைப் பற்றி க் குறை கூறுகிறார்கள். நீ இவ்வாறு கஷ்டப்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் நீ உன்னை அந்த நிலைக்குள் விழ அனுமதிக்கிறாய். அவ்வகையானத் துன்பங்களால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தேவன் செய்த கிரியை ஜனங்களுக்குத் தெரியாது, மேலும் பல விஷயங்களில் அவர்கள் அறியாமையுள்ளவர்களாகவும் தெளிவாகக் காணமுடியாதவர்களாகவும் இருக்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் சொந்தக் கருத்துக்களிலும் கற்பனைகளிலும் அகப்பட்டு, இன்னும் ஆழமாகச் சிக்கிக் கொள்கிறார்கள். எல்லா விஷயங்களும் சமாச்சாரங்களும் தேவனுடைய கரத்தில் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். எனவே ஜனங்கள் எதிர்மறையாக இருக்கும்போது அது தேவனுக்குத் தெரியாதா? நிச்சயமாகவே தேவனுக்குத் தெரியும். நீ மனுஷீகக் கருத்துக்களில் சிக்கிக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் உன்னில் கிரியை செய்ய எந்த வழியும் இல்லை. பெரும்பாலும், சிலர் எதிர்மறையான நிலையில் சிக்கிக் கொள்கிறார்கள், ஆனாலும் நான் இன்னும் என் கிரியையைச் செய்துகொண்டிருக்கிறேன். நீ எதிர்மறையாக இருந்தாலும் அல்லது நேர்மறையாக இருந்தாலும், நான் உன்னால் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆனால் நான் பேசும் பல வார்த்தைகளும், நான் செய்யும் பெரிய அளவிலான கிரியையும் ஜனங்களின் நிலைக்கு ஏற்ப, ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ எதிர்மறையாக இருந்தாலும், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடுக்காது. சிட்சை மற்றும் மரண உபத்திரவத்தின் காலத்தின் போது, ஜனங்கள் அனைவரும் எதிர்மறையான நிலையில் சிக்கிக்கொண்டனர், ஆனால் இது என்னுடைய கிரியைக்குத் தடையாக இருக்கவில்லை. நீ எதிர்மறையாக இருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் மற்றவர்களிடம் செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். நீ ஒரு மாத காலம் பின்தொடர்வதை நிறுத்தலாம், ஆனால் நான் தொடர்ந்து கிரியை செய்கிறேன். நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நீ என்ன செய்தாலும், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தடை செய்ய முடியாது. சில எதிர்மறை நிலைகள் மனித பலவீனத்திலிருந்து வருகின்றன; தேவனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவோ அல்லது அவற்றைப் புரிந்துகொள்ளவோ அவர்களால் உண்மையிலேயே இயலாது என்று ஜனங்கள் நம்பும்போது, அவர்கள் எதிர்மறையாகின்றனர். உதாரணமாக, சிட்சையின் போது, தேவனுடைய வார்த்தைகள் சிட்சையின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு தேவனை நேசிப்பதைப் பற்றிப் பேசின; ஆனால் ஜனங்கள், அது தங்களால் இயலாது என்று நம்பினர். குறிப்பாக, அவர்கள் தங்கள் சரீரம் சாத்தானால் மிகவும் ஆழமாகச் சீர்கெட்டுவிட்டதாகவும், அவர்களுடைய திறமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் துக்கமாக உணர்ந்து புலம்பினர். இந்தச் சூழலுக்குள் தாங்கள் பிறந்திருப்பது அவ்வளவு பரிதாபத்திற்குரியது என்று அவர்கள் உணர்ந்தார்கள். சிலர் தேவனை நம்புவதற்கும் தேவனை அறிந்து கொள்வதற்கும் தாமதமாகிவிட்டதாகவும், அவர்கள் பரிபூரணராவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும் கருதினார்கள். இவை அனைத்தும் சாதாரண மனித நிலைகள் ஆகும்.

மனுஷனின் சரீரம் சாத்தானுக்குரியது, அது கலகத்தனமான மனநிலையால் நிறைந்துள்ளது, அது வருந்தத்தக்க அசிங்கமானது; மேலும் அது அசுத்தமான ஒன்று. ஜனங்கள் சரீர இன்பத்தை அனுபவிக்க அதிக அளவில் இச்சிக்கிறார்கள், மாம்சத்தின் வெளிப்பாடுகள் மிக அதிகம் உள்ளன; இதனால்தான் தேவன் மனுஷனின் மாம்சத்தை குறிப்பிட்ட அளவிற்கு வெறுக்கிறார். சாத்தானின் அசுத்தமான, சீர்கேடு நிறைந்த விஷயங்களை ஜனங்கள் தூக்கி எறியும்போது, அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அசுத்தத்திலிருந்தும் சீர்கேட்டிலிருந்தும் தங்களைத் திருப்பிக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் இன்னும் சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜனங்களிடம் காணப்படுகிற, சூழ்ச்சி, வஞ்சகம் மற்றும் மாறுபாடு இவை அனைத்தும் சாத்தானுடையவை. சாத்தானின் இந்த விஷயங்களிலிருந்து உன்னை விடுவிப்பதே, தேவனுடைய இரட்சிப்பு. தேவனுடைய கிரியை தவறாக இருக்க முடியாது; ஜனங்களை அந்தகாரத்திலிருந்து இரட்சிக்க இவை அனைத்தும் செய்யப்பட்டன. நீ ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு விசுவாசித்து, மாம்ச சீர்கேட்டிலிருந்து உன்னை விலக்கி, மேலும் இந்த சீர்கேட்டால் ஒருபோதும் கட்டப்படாதிருந்தால், நீ இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாயா? நீ சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழும்போது, நீ தேவனை வெளிப்படுத்த இயலாது, நீ ஒரு அழுக்கைப் போல இருக்கிறாய். எனவே தேவனுடைய சுதந்தரத்தைப் பெற முடியாது. நீ சுத்திகரிக்கப்பட்டுப் பரிபூரணப்படுத்தப்பட்டவுடன், நீ பரிசுத்தமாக இருப்பாய், நீ ஒரு இயல்பான மனுஷனாக இருப்பாய், மேலும் நீ தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு தேவனுக்கு மகிழ்ச்சி தருபவனாக இருப்பாய். இன்று தேவன் செய்த கிரியை இரட்சிப்பு, இதிலும் அதிகமாக, அது நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் சபித்தல் ஆகும். இது பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தேவனுடைய வார்த்தைகள், நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, அதோடு கூட சாபங்களையும் உள்ளடக்கியிருப்பதை நீங்கள் அனைவரும் காண்கிறீர்கள். ஒரு விளைவை அடைவதற்கும், ஜனங்கள் தங்களைத் தாங்களே தெரிந்துகொள்வதற்கும் நான் இதைப் பேசுகிறேன், ஜனங்களை மரணத்திற்குள்ளாக்கும்படிக்கு அல்ல. என் இருதயம் உங்களுக்காகத் தான். பேசுதல் நான் கிரியை செய்யும் முறைகளில் ஒன்றாகும்; வார்த்தைகளின் மூலம் நான் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்துகிறேன்; மேலும் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள உனக்கு இடமளிக்கிறேன். உன்னுடைய சரீரம் மரித்துவிடலாம்; ஆனால் உனக்கு ஒரு ஆவியும் ஆத்துமாவும் இருக்கிறது. ஜனங்களுக்கு சரீரம் மட்டுமே இருந்திருந்தால், அவர்களின் விசுவாசத்தில் எந்த அர்த்தமும் இருக்காது, நான் செய்த இந்தக் கிரியையிலும் எந்த அர்த்தமும் இருக்காது. இன்று, நான் ஒரு விதத்திலும், பின்னர் மற்றொரு விதத்திலும் பேசுகிறேன்; ஒரு சமயத்தில் நான் ஜனங்களைக் கடுமையாக வெறுக்கிறேன், பின்னர் ஒரு சமயத்தில் நான் பேரளவாய் நேசிக்கிறேன்; உன்னுடைய மனநிலைகளில் மாற்றத்தை அடைவதற்கும், தேவனுடைய கிரியை குறித்த உன்னுடைய கருத்துக்களை மாற்றுவதற்கும் நான் இவை அனைத்தையும் செய்கிறேன்.

கடைசி நாட்கள் வந்துவிட்டன, உலகமெங்கிலுமுள்ள நாடுகள் கலக்கத்தில் உள்ளன. அரசியல் சீர்குலைவு காணப்படுகிறது, எல்லா இடங்களிலும் பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், ஜலப்பிரளயங்களும், வறட்சிகளும் தோன்றுகின்றன. மனித உலகில் பேரழிவு காணப்படுகிறது; பரலோகமும் பேரழிவை அனுப்பியுள்ளது. இவையே கடைசி நாட்களின் அறிகுறிகளாகும். ஆனால், இது மகிழ்ச்சியும் அற்புதமும் காணப்படும் உலகம் போல ஜனங்களுக்குத் தோன்றுகிறது. இது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, ஜனங்களுடைய இருதயங்கள் யாவும் அதனுள் மூழ்கியிருக்கின்றன. பலர் அதில் சிக்குண்டு, அதிலிருந்து தங்களை விடுவிக்க முடியாமல் காணப்படுகின்றனர். தந்திரம் மற்றும் சூனியம் ஆகியவற்றில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வஞ்சிக்கப்பட்டுப்போவார்கள். நீ முன்னேற்றத்திற்காகப் பாடுபடாவிட்டால், குறிக்கோள்கள் இல்லாதிருந்தால், உன்னை உண்மையான வழியில் நிலை நாட்டவில்லை என்றால், நீ பாவத்தின் பெரிய அலைகளால் அடித்துச் செல்லப்படுவாய். எல்லா நாடுகளைவிட சீனா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; இது சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கும் இடம், விக்கிரகங்களை ஆராதிக்கிற மற்றும் சூனியத்தில் ஈடுபடும் பெரும்பாலான ஜனங்கள் உள்ள ஒரு தேசம். அநேகக் கோயில்கள் உள்ளன, மேலும் இது அசுத்தமான பிசாசுகள் வசிக்கும் இடமாகும். நீ அதிலிருந்து பிறந்திருக்கிறாய், நீ அதிலிருந்து கற்றுக் கொண்டாய், அதன் ஆதிக்கத்தில் மூழ்கிவிட்டாய்; நீ அதனால் சீர்குலைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறாய், ஆனால் விழித்துக்கொண்ட பின்பு நீ அதைக் கைவிட்டு, தேவனால் முழுமையாக ஆதாயப்படுத்திக் கொள்ளப்பட்டாய். இது தேவனுடைய மகிமை, அதனால்தான் கிரியையின் இந்த கட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. தேவன் இவ்வளவு பெரிய அளவிலான கிரியைகளைச் செய்துள்ளார், பல வார்த்தைகளைப் பேசியுள்ளார்; இறுதியில் அவர் உங்களை முழுமையாக ஆதாயப்படுத்திக்கொள்வார். இது தேவனுடைய நிர்வாகக் கிரியையின் ஒரு பகுதியாகும், மேலும் நீங்கள் சாத்தானுடன் நடக்கிற தேவனுடைய யுத்தத்தில் “கொள்ளைப் பொருட்கள்”. நீங்கள் எந்த அளவிற்கு சத்தியத்தைப் புரிந்துகொள்கிறீர்களோ எந்த அளவிற்கு உங்கள் சபை வாழ்க்கை சிறந்ததாயிருக்கிறதோ, அந்த அளவிற்குப் பெரிய சிவப்பான வலுசர்ப்பம் முற்றிலும் தோற்கடிக்கப்படும். இவை அனைத்தும் ஆவிக்குரிய உலகின் விஷயங்கள். அவை ஆவிக்குரிய உலகின் யுத்தங்கள், தேவன் ஜெயம் பெறும்போது, சாத்தான் வெட்கப்பட்டுக் கீழே விழுவான். தேவனுடைய கிரியையின் இந்த நிலை மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தேவன் இவ்வளவு பெரிய அளவில் செயல்படுகிறார், மேலும் இந்த ஜனங்களை முற்றிலும் இரட்சிக்கிறார். எனவே நீங்கள் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பரிசுத்த தேசத்தில் வாழலாம், தேவனுடைய வெளிச்சத்தில் வாழலாம், ஒளியின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலையும் பெறலாம். அப்பொழுது உன் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது. நீங்கள் புசிப்பதும் உடுத்துவதும் அவிசுவாசிகளிடமிருந்து வேறுபட்டதாயிருக்கும்; நீங்கள் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்து அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வீர்கள். அவர்கள் எதை அனுபவிக்கிறார்கள்? அவர்கள் தங்கள் “முன்னோர்களின் பாரம்பரியத்தையும்” அவர்களின் “தேசிய ஆவியையும்” மட்டுமே அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு மனிதத் தன்மைக்கான அடையாளம் சிறிதளவுகூட இல்லை! உங்கள் உடைகள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் அவர்களில் இருந்து வேறுபட்டவை. இறுதியில், நீங்கள் அசுத்தத்திலிருந்து முற்றிலும் தப்பித்துக்கொள்வீர்கள்; இனி சாத்தானின் சோதனையில் சிக்க மாட்டீர்கள்; மேலும் தேவனுடைய அன்றாட ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும், நீங்கள் அசுத்தத்தால் கறைபடாதிருக்கிறீர்கள், உங்களால் தேவனுடைய மகத்தான பாதுகாப்பைப் பெற்று, அவரோடு சேர்ந்து வாழ முடியும். இந்த மஞ்சள் நிலத்தில் உள்ள அனைவரின் மத்தியிலிருந்து தேவன் உங்களைத் தெரிந்தெடுத்துள்ளார். நீங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா? நீ ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினம். நீ நிச்சயமாக தேவனை ஆராதித்து அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தொடர வேண்டும். நீ தேவனை ஆராதிக்காமல், உன்னுடைய அசுத்த சரீரத்திற்குள் வாழ்வாயானால், நீ வெறுமனே மனித உடையில் உள்ள ஒரு மிருகம் அல்லவா? நீ ஒரு மனுஷன் என்பதால், நீ தேவனுக்காக உன்னையே பயன்படுத்தி எல்லா துன்பங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இன்றைய நாளில் நீ உட்படுத்தப்பட்ட சிறிய துன்பங்களை மகிழ்ச்சியுடனும் உறுதியாகவும் ஏற்றுக் கொண்டு, யோபு மற்றும் பேதுருவைப் போல அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும். இந்த உலகில், மனுஷன் பிசாசின் ஆடைகளை அணிந்துகொண்டு, பிசாசிடமிருந்து உணவைப் புசித்து, பிசாசின் கட்டைவிரலின் கீழ் வேலை செய்து, சேவை செய்கிறான், அதன் அசுத்தத்தில் முற்றிலும் நசுக்கப்படுகிறான். நீ வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால் அல்லது மெய்யான வழியைப் பெறாவிட்டால், இப்படி வாழ்வதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நீங்கள் சரியான பாதையைப் பின்பற்றுபவர்கள், முன்னேற்றத்தை நாடுபவர்கள். நீங்கள் பெரிய சிவப்பான வலுசர்ப்பத்தின் தேசத்தில் எழும்பினவர்கள், நீதியுள்ளவர்கள் என்று தேவனால் அழைக்கப்படுபவர்கள். இதுவே மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை அல்லவா?

முந்தைய: பயிற்சி (1)

அடுத்த: மாம்சமாகியதன் மறைபொருள் (1)

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக