அத்தியாயம் 36

எல்லாம் என் கரத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. தாங்கள் விரும்பிய படியெல்லாம் செய்யத் துணிபவர்கள் யார்? யாரால் எளிதாக இதை மாற்ற முடியும்? ஜனங்கள் காற்றில் மிதக்கிறார்கள், தூசியைப் போல நகர்கிறார்கள், அவர்கள் முகங்களில் அழுக்கு படிந்து கறுப்பாகி தலை முதல் பாதம் வரை அவர்களை அருவருக்கத்தக்கவர்கள் ஆக்குகிறது. கனத்த இருதயத்துடன் மேகங்களின் மத்தியில் இருந்து கவனிக்கிறேன்: ஒருகாலத்தில் உற்சாகத்தோடு இருந்த மனுஷன் ஏன் இப்படி மாறிவிட்டான்? இதைக்குறித்து ஏன் அவன் அறியவில்லை, இதைப்பற்றி ஏன் உணர்வற்றவனாக இருக்கிறான்? அவன் ஏன் “தன்னைப் போக விடுகிறான்” மேலும் தான் அழுக்கால் மூடப்பட அவன் ஏன் அனுமதிக்கிறான்? இப்படி தன் மேல் உள்ள அன்பும் மதிப்பும் அவனுக்குக் குறைந்து போய்விட்டது. நான் கேட்பதை மனுஷன் எப்போதும் ஏன் தவிர்க்கிறான்? நான் அவனிடம் உண்மையிலேயே கொடூரமாகவும் மனிதத்தன்மையற்றும் நடந்துகொள்ளுகிறேனா? நான் உண்மையிலேயே சர்வாதிகாரமாகவும் நியாயமற்றும் இருக்கிறேனா? அப்படியானால் ஜனங்கள் ஏன் எப்போதும் கோபக் கண்களோடு என்னைப் பார்க்கிறார்கள்? ஏன் அவர்கள் எப்போதும் என்னை வெறுக்கிறார்கள்? நான் அவர்களைச் சாலையின் முடிவுக்குக் கொண்டுவந்து விட்டேனா? என் சிட்சையினால் மனுஷன் ஒருபோதும் எதையும் கண்டறியவில்லை, ஏனெனில் தன்னுடைய இரு கரங்களால் தன் கழுத்தைச் சுற்றி இருக்கும் நுகத்தைப் பற்றிக்கொள்வதைத் தவிர எதையும் அவன் செய்வதில்லை. ஓர் எதிரியைப் பார்ப்பது போல் இரு கண்களும் என்மேல் நிலைகுத்தி நிற்கின்றன—மேலும் இந்தக் கணத்தில்தான் அவன் எவ்வளவுதூரம் இளைத்துப்போயிருக்கிறான் என்று நான் உணர்கிறேன். ஒருவரும் ஒருபோதும் சோதனைகளின் மத்தியில் உறுதியாக நிற்கவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று நான் கூறுகிறேன். மனுஷனின் உயர்வு துல்லியமாக இதுவல்லவா? அவனுடைய “அளவுகளின்” எண்களை அவனுக்கு நான் சொல்லுவது தேவையா? மனுஷனுடைய “உயரம்” நிலத்தில் நெளிகின்ற ஒரு சிறு புழுவை விட அதிகமானதல்ல, மேலும் அவனுடைய “மார்பு” ஒரு பாம்பின் அகலத்தைப் போன்றதுதான். இதில் நான் மனிதனைச் சிறுமைப்படுத்தவில்லை—அவனுடைய உயர்வின் சரியான அளவு இவை அல்லவா. நான் மனுஷனை இழிவுபடுத்தி விட்டேனா? மனிதன் ஒரு விளையாட்டுத்தனமான குழந்தையைப் போல் இருக்கிறான். விலங்குகளோடு அவன் விளையாடும் சீரான நேரங்கள் உண்டு, ஆனாலும் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்; மேலும் அவன் ஒரு பூனையைப் போல இருக்கிறான், அக்கறையோ அல்லது கவலையோ அற்ற ஒரு வாழ்க்கையை வாழ்கிறான். அது ஆவியின் கட்டுப்பாட்டினாலோ, அல்லது பரலோகத்தில் இருக்கும் தேவனின் பங்காலோ, நான் பூமியில் ஜனங்களின் ஊதாரித்தனமான வாழ்க்கைமுறையால் மிகவும் களைப்படைவதாக உணர்கிறேன். ஓர் ஒட்டுண்ணியைப் போன்ற மனிதனுடைய வாழ்க்கையின் நிமித்தமாக, “மனுஷ ஜீவிதம்” என்ற வார்த்தைகளில் என்னுடைய “ஆர்வம்” ஓரளவு அதிகரித்திருக்கிறது, மேலும் அதனால் நான் மனித வாழ்க்கைக்கு நேராக இன்னும் கொஞ்சம் “பயபக்தியாய்” மாறியுள்ளேன். அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை உருவாக்க மனிதனால் மட்டுமே முடியும், அதேநேரத்தில் இது என்னால் முடியாதது என்று தோன்றும். ஆகவே நான் “மலைகளுக்குத்” திரும்புவேன், ஏனெனில் மனிதனுக்கு மத்தியில் இருக்கும் கஷ்டங்களை என்னால் அனுபவித்துக் கண்காணிக்க முடியவில்லை. இருந்தாலும் மனிதன் அவசரமாக என்னை நிர்பந்தப்படுத்துகிறான்—எனக்கு வேறு வாய்ப்பில்லை. அவனோடு கூட அனுபவங்களைத் தொகுத்து அவனோடு இணைந்து மனுஷ ஜீவிதத்தை மேற்கொண்டு மனிதனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. பரலோகத்தில், நான் ஒருமுறை முழு நகரத்திலும், சுற்றுப்பயணம் செய்தேன், வானத்திற்குக் கீழ் நான் ஒருமுறை எல்லாநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்தேன். ஆனால் என்னை ஒருபோதும் எவரும் கண்டுபிடிக்க முடியவில்லை; நான் அங்குமிங்கும் நகரும் சத்தத்தை மட்டுமே அவர்கள் கேட்டார்கள். ஜனங்களின் கண்களில், நான் எந்தத் தடயமோ அல்லது நிழலோ இல்லாமல் வந்து போகிறேன். அவர்களின் இருதயங்களில் நான் புலனாகாத ஒரு சிலையாகி விட்டது போல் இருக்கிறது, ஆனாலும் ஜனங்கள் அப்படி நம்பவில்லை. இவைகள் எல்லாம் மனுஷனுடைய வாயால் அறிக்கையிட்ட உண்மைகளாக இருக்காதோ? இந்தக் கட்டத்தில் அவர்கள் சிட்சிக்கப்பட வேண்டும் என்று யார் தான் ஒப்புக்கொள்வதில்லை? உறுதியான சான்றுகளுக்கு முன்பாக ஜனங்கள் இன்னும் தலை நிமிர்ந்து நிற்க முடியுமா?

நான் மனுஷனின் மத்தியில் ஒரு “வணிக ஒப்பந்தத்தைச்” செய்கிறேன், நான் அவனுடைய எல்லா அசுத்தங்களையும் அநீதிகளையும் துடைத்து என் மனதுக்குப் பிடித்தவனாக இருக்கும்படி இவ்வாறு அவனை “செயலாக்கம்” செய்கிறேன். இருப்பினும் கிரியையின் இந்தக் கட்டத்திற்கு மனிதனின் ஒத்துழைப்பு இன்றியமையாதது ஆகும், ஏனெனில் அவன் எப்போதும் இப்போதுதான் பிடித்த மீனைப் போல துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறான். ஆகவே, எந்த விபத்தையும் தவிர்க்க, பிடிக்கப்பட்டிருந்த எல்லா “மீனையும்” நான் கொன்றேன், அதன் பிறகு மீன் கீழ்ப்படிதல் உள்ளதாக மாறியது, மற்றும் சிறிதளவு குறைகூறுதலும் இல்லை. எனக்கு மனிதன் தேவைப்படும்போது, அவன் எப்போதும் மறைந்திருக்கிறான். அவன் ஒருபோதும் திகைக்கவைக்கும் காட்சிகளைப் பார்த்திராதது போல, அவன் கிராமப் புறத்தில் பிறந்து நகரத்தின் விஷயங்கள் ஒன்றையும் அறிந்திராதவன் போல இது இருக்கிறது. நான் மனிதனுக்குக் குறைபாடாக இருக்கும் பகுதிகளில் என் ஞானத்தைச் சேர்த்து, அவன் என்னை அறியும்படிச் செய்கிறேன்; ஏனெனில் மனிதன் மிக ஏழையாக இருக்கிறான், நான் தனிப்பட்ட முறையில் மனுஷனுக்கு மத்தியில் வந்து “செல்வத்துக்கான பாதையைக்” கொடுத்து அவன் கண்களைத் திறந்தேன். இதில் நான் அவனை இரட்சிக்கவில்லையா? இது மனிதன் பேரில் எனக்குள்ள இரக்கம் இல்லையா? அன்பு என்பது நிபந்தனை இல்லாமல் கொடுப்பதா? வெறுப்பு என்பது சிட்சித்தலா? பல கண்ணோட்டங்களில் இருந்து நான் மனுஷனுக்கு விளக்கியிருக்கிறேன், ஆனால் அவன் இதை வார்த்தைகளாகவும் கொள்கைகளாகவும் பார்க்கிறான். என்னுடைய பேச்சுக்கள் மனிதனின் கைகளில் தள்ளுபடியாக விற்கப்பட்ட குறையுள்ள பொருட்களைப் போல இருக்கின்றன. இப்படி, மலைக் கிராமத்தை விழுங்க ஒரு பெரும் புயல் வந்துகொண்டிருக்கிறது என்று நான் ஜனங்களிடம் சொல்லும்போது, அதைப் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை, அவர்களில் ஒரு சிலரே தங்கள் இருதயங்களில் சந்தேகத்தோடு வீடுகளை அங்கிருந்து இடமாற்றம் செய்கிறார்கள். மீதிப் பேர் என்னை வானத்தில் இருந்து வந்த தகைவிலான் குருவியாக எண்ணி அலட்சியம் செய்வதுபோல் நகர்வதில்லை—நான் கூறுவதில் ஒன்றையும் அவர்கள் புரிந்துகொள்ளுவதில்லை. மலைகள் நிலைகுலைந்து பூமி இரண்டாகப் பிளந்தால்தான் ஜனங்கள் என் வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறார்கள், அப்போது மட்டும்தான் அவர்கள் தங்கள் கனவுகளில் இருந்து விழிக்கிறார்கள், ஆனால் அந்த நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது, அவர்கள் பெரும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய பிணங்கள் நீர்ப்பரப்பில் மிதந்துகொண்டு இருக்கின்றன. உலகத்தில் உள்ள துன்பங்களைப் பார்த்து, மனிதனின் துரதிர்ஷ்டத்துக்காக நான் ஒரு பெருமூச்சைவிட்டேன். மனிதனின் தலைவிதிக்காக நான் அதிக நேரத்தைச் செலவிட்டேன், பெரும் விலைகிரயத்தைச் செலுத்தினேன். மக்களின் மனதில், எனக்குக் கண்ணீர் நாளங்கள் இல்லை—ஆனால் நான், கண்ணீர் நாளங்கள் இல்லாமலேயே “உணர்ச்சிவசப்பட்டேன்”, மனிதனுக்காகப் பல தடவை அழுதேன். இருந்தாலும் மனுஷனுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது, நான் இல்லை என்பது போல பூமியில் அவன் தன் கையில் உள்ள பொம்மைகளை வைத்து விளையாட மட்டுமே செய்கிறான். இவ்வாறு, இன்றைய சூழ்நிலையில், ஜனங்கள் உணர்வற்று மந்த புத்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் தாங்கள் இன்னும் குகைகளில் இருப்பது போல அஸ்திபாரங்களில் “உறைந்து” போயிருக்கிறார்கள். மனிதனின் செயல்களைப் பார்க்கும்போது, சென்றுவிடுவதுதான் என்னுடைய ஒரே விருப்பம்…

ஜனங்களின் கண்களில், மனிதனுக்கு நன்மையான அதிகமானவைகளை நான் செய்திருக்கிறேன், மேலும் இவ்வாறு அவர்கள் தற்காலத்தின் ஒரு பின்பற்றும் மாதிரியாக என்னைக் காண்கிறார்கள். இருந்தாலும் ஒருபோதும் அவர்கள் என்னை மனித விதியை ஆளுகிறவராகவும் எல்லாவற்றையும் படைத்தவராகவும் கருதியதில்லை. அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்பது போல் இருக்கிறது. ஜனங்கள் ஒருமுறை “புரிதல் நீடுழி வாழ்க” என்று கூக்குரலிட்டாலும், “புரிதல்” என்ற வார்த்தையைப் பகுத்தாய ஒருவரும் அதிக நேரத்தைச் செலவிட்டதில்லை. இது என்னை நேசிக்க ஜனங்களுக்கு விருப்பம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இன்றைய காலத்தில் ஜனங்கள் ஒருபோதும் என்னைப் பொக்கிஷமாகப் பாதுகாத்ததில்லை, எனக்கு அவர்கள் இருதயத்தில் இடமில்லை. வரவிருக்கும் துன்பங்களின் நாட்களில் அவர்களால் என் மீது உண்மையான அன்பைக் காட்ட முடியுமா? மனிதனின் நீதி வடிவம் இல்லாத ஒன்றாக இருக்கிறது, பார்க்கவோ தொடவோ முடியாத ஒன்றாக இருக்கிறது. எனக்கு வேண்டியதெல்லாம் மனிதனின் இருதயமே, ஏனெனில் மனுஷ உடலில் இருதயமே மிகவும் விலையேறப்பெற்றது. என்னுடைய செய்கைகள் மனிதனின் இருதயத்தால் திருப்பிச் செலுத்தத் தகுதி இல்லாதவையா? ஜனங்கள் ஏன் தங்கள் இருதயங்களை எனக்குக் கொடுப்பதில்லை? அவர்கள் ஏன் எப்போதும் தங்கள் சொந்த மார்பகங்களையே கட்டிப்பிடித்துக் கொண்டு விட்டுவிட மனதற்றவர்களாய் இருக்கிறார்கள்? ஜனங்களின் வாழ்க்கை முழுவதும் மனிதனின் இருதயம் அமைதியையும் மகிழ்ச்சியையும் உறுதிசெய்ய முடியுமா? நான் ஜனங்களிடம் கோரிக்கை வைக்கும் போது அவர்கள் ஏன் நிலத்தில் இருந்து கையளவு மண்ணை எடுத்து என் மேல் வீசி எறிகிறார்களா? இது மனுஷனின் வஞ்சகத் திட்டமா? செல்வதற்கு இடம் இல்லாத ஒரு வழிப்போக்கனை ஆசைகாட்டி தங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்று இரக்கமில்லாமல் அவனைக் கொலை செய்யும் முயற்சி போன்றதே இதுவும். ஜனங்கள் எனக்கும் இப்படிப்பட்டவற்றையே செய்ய விரும்புகிறார்கள். யாரோ ஒருவரைக் கண்ணிமைக்கும் முன்னால் கொல்லும் கொலைதண்டனை நிறைவேற்றுபவனைப் போலவும், ஜனங்களைக் கொல்லுவது இரண்டாவது சுபாவமாக இருக்கும் பிசாசுகளின் அரசர்கள் போலவும் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது ஜனங்கள் என் முன்னால் வருகிறார்கள், இத்தகைய வழிமுறைகளை இன்னும் பயன்படுத்த விரும்புகின்றனர்—இருந்தாலும் அவர்களுக்கு அவர்களது திட்டங்கள் இருக்கின்றன, மேலும் என்னிடம் எனது எதிர் நடவடிக்கைகள் இருக்கின்றன. ஜனங்கள் என்னை நேசிக்காவிட்டாலும், இந்த நேரத்தில் என்னுடைய எதிர் நடவடிக்கைகளை எப்படி நான் மனுஷனிடம் பகிரங்கமாக்காமல் இருக்க முடியும்? மனிதனைக் கையாளுவதில் எனக்கு வரம்பற்ற. அளவில்லாத திறன் உள்ளது; அவனது ஒவ்வொரு பகுதியும் என்னால் தனிப்பட்ட முறையில் கையாளப்பட்டு செயலாக்கம் பெற்றது. முடிவாக, அவன் நேசிப்பதில் இருந்து அவனைப் பிரிக்க வேதனையை மனிதன் தாங்கும்படிச் செய்து, அவனை என் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியச் செய்வேன், மற்றும் அந்த நேரத்தில், புகார் செய்ய ஜனங்களுக்கு என்ன இருக்கும்? இவை எல்லாவற்றையும் நான் மனிதனுக்காகச் செய்யவில்லையா? கடந்த காலங்களில், நான் என் கிரியையின் படிநிலைகளை மனிதனிடம் ஒருபோதும் கூறியதில்லை—ஆனால் இன்று, கடந்த காலத்தைப் போல் இல்லாமல் இந்த நேரத்தில், என் கிரியையின் உள்ளடக்கம் வித்தியாசமாக இருப்பதால், இதனால் அவர்கள் விழுந்துவிடாதபடி தடுக்க நான் என் கிரியையை முன்கூட்டியே மக்களுக்குச் சொல்லியிருக்கிறேன். இது மனிதனுக்குள் நான் செலுத்தியிருக்கும் தடுப்பூசி இல்லையா? ஏதோ ஒரு காரணத்துக்காக மக்கள் என் வார்த்தைகளைக் கவனத்துடன் கருதியிருக்கவில்லை; தங்கள் வயிறுகளில் பசி இருப்பது போல இருந்தும், அவர்களுக்குத் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியவில்லை, இது அவர்களது வயிற்றைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. ஆனால் ஜனங்கள் தங்கள் “ஆரோக்கிய உடலமைப்பை” மூலதனமாகக் கொண்டு “மருத்துவரின்” பரிந்துரைகளில் கவனம் செலுத்துவதில்லை. மனிதனின் கல்நெஞ்சைப் பார்த்து நான் அவனுக்காக அக்கறை கொண்டவரானேன். ஜனங்கள் முதிர்ச்சி இல்லாதவர்களாகவும் மனுஷ வாழ்வை இனிமேல்தான் அனுபவிக்க வேண்டியவர்களாகவும் இருப்பதால், அவர்களுக்குப் பயமில்லை; அவர்களுடைய இருதயங்களில், “மனுஷ வாழ்க்கை” என்ற வார்த்தைகள் இல்லை, அவற்றைப் பற்றிய எண்ணம் அவர்களிடம் இல்லை, நான் ஒரு தொணதொணக்கும் கிழவியாகிவிட்டது போல வெறுமனே என் வார்த்தைகளில் களைப்படைகிறார்கள். மொத்தத்தில், எதுவாக இருந்தாலும், ஜனங்களால் என் இருதயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் மனிதனை மரண நிலத்துக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இந்தக் கணத்தில் என் மனநிலை என்னவென்று மனிதனால் புரிந்துகொள்ள முடியும் என்றும், இந்த நேரத்தில் நான் சுமக்கும் பாரத்தைத் துல்லியமாகக் கருத்தில் கொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன்.

ஏப்ரல் 26, 1992

முந்தைய: அத்தியாயம் 35

அடுத்த: அத்தியாயம் 37

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக