அத்தியாயம் 94

நான் என் முதற்பேறான குமாரர்களுடன் சீயோனுக்குத் திரும்புகிறேன்—இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் உண்மையிலேயே புரிந்து கொள்கிறீர்களா? நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறபடி, நீங்கள் விரைவாக வளர்ந்து என்னுடன் ஆட்சி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? இவை அனைத்தும் என் மனுவுருவாதலுடன் நேரடியாகத் தொடர்புடையவை: என்னுடன் ஒரே மனதாய் இருக்கக் கூடிய ஒரு கூட்ட ஜனங்களை மாம்சத்தின் மூலம் ஆதாயப்படுத்திக் கொள்வதற்காக, சீயோனிலிருந்து நான் மாம்சத்தில் உலகத்திற்கு வந்தேன், அவ்வாறு செய்தபின்பு, நான் சீயோனுக்குத் திரும்புவேன். இதன் அர்த்தமானது நாம் இன்னும் மாம்சத்திலிருந்து நிஜ சரீரத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதே ஆகும். “சீயோனுக்குத் திரும்புதல்” என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். இதுவே எனது முழு நிர்வாகத் திட்டத்தின் உண்மையான அர்த்தமும் குறிக்கோளும் ஆகும், மேலும் இது யாராலும் தடை செய்யப்பட முடியாததும், உடனடியாக நிறைவேற்றப்படுவதுமாகிய எனது நிர்வாகத் திட்டத்தின் மிக முக்கியமான பகுதியாகும். மாம்சத்தில் இருக்கும் போது, ஒருவனால் மனுஷீக எண்ணங்களையும் சிந்தனையையும் ஒருபோதும் விட்டுவிட முடியாது, மேலும் பூமிக்குரிய காற்றை அப்புறப்படுத்தவோ அல்லது தூசியை அப்புறப்படுத்தவோ முடியாது, மேலும் ஒருவன் எப்போதும் களிமண்ணாகத் தான் இருப்பான்; சரீரத்தில் மட்டுமே ஒருவன் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் தகுதியுடையவனாக இருக்க முடியும். ஆசீர்வாதங்கள் என்றால் என்ன? உங்களுக்கு நினைவிருக்கிறதா? மாம்சத்தில், ஆசீர்வாதங்களை கருத்தில் கொள்ள முடியாது, எனவே மாம்சத்திலிருந்து சரீரத்திற்கு செல்லும் பாதையே ஒவ்வொரு முதற்பேறான குமாரனும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். மாம்சத்தில், நீங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகிறீர்கள் (இது நீங்கள் வல்லமையைப் பெற்றிராததாலும், எந்த மகிமையையும் பெற்றிருக்கவில்லை என்பதாலுமே ஆகும்), ஆனால் சரீரத்தில், அது மிகவும் வித்தியாசமாக இருக்கும், மேலும் நீங்கள் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். அடக்குமுறையின் நாட்கள் முழுவதுமாக நிறைவடையும், மேலும் நீங்கள் என்றென்றும் விடுவிக்கப்பட்டு, விடுதலையடைவீர்கள். இவ்வாறு மட்டுமே நான் என்னவாக இருக்கிறேனோ அதையும் நான் எதைக் கொண்டிருக்கிறேனோ அதையும் உனக்குள் பொருத்த முடியும். இல்லையெனில், என் குணம் மட்டுமே உங்களுக்கு இருக்கும். ஒரு நபர் மற்றொரு நபரை வெளிப்புறமாக எப்படிப் பின்பற்றினாலும், அவர்களால் அதே மாதிரியாக இருக்க முடியாது. பரிசுத்தமான ஆவிக்குரிய சரீரத்தில் (சரீரத்தை அர்த்தப்படுத்துதல்) மட்டுமே நம்மால் மிகச் சரியாக ஒரே மாதிரியாக இருக்க முடியும் (அனைவரும் பரிசுத்த ஆவிக்குரிய சரீரமாக இருக்கிறபடியால், ஒரே மாதிரியான குணங்களை, ஒரே மாதிரியான தன்மையை, ஒரே மாதிரியான உடைமைகளைப் பெற்றிருப்பது மற்றும் ஒருமனதாக, சேர்ந்து, பிரியாமல் மற்றும் பிரிக்கப்படாமல் இருக்க முடிவது என்பதையே இது குறிக்கிறது).

நீங்கள் ஏன் இப்போது, புசித்தல், உடை உடுத்துதல், மற்றும் எரிச்சலூட்டும் விஷயங்கள் அனைத்துடனும் சேர்த்து அருவருக்கத் தக்கதான உலகை வெறுக்க ஆரம்பித்திருக்கிறீர்கள், அவற்றிலிருந்து விடுபடும்படி காத்திருக்கவும் முடியாது? நீங்கள் ஆவிக்குரிய உலகத்திற்குள் (சரீரம்) பிரவேசிப்பீர்கள் என்பதற்கான அறிகுறி இதுவே ஆகும். நீங்கள் அனைவரும் இதைப் பற்றிய முன்னறிவிப்புகளைப் (அவை அளவில் வேறுபட்டாலும்) பெற்றிருக்கிறீர்கள். எனது மிக முக்கியமான ஊழியக் கட்டத்தில் நான் வெவ்வேறு ஜனங்கள், வெவ்வேறு நிகழ்வுகள் மற்றும் வெவ்வேறு விஷயங்களைப் பயன்படுத்துவேன், இவர்கள் அனைவரும் எனக்காக ஊழியம் செய்வார்கள். நான் அவ்வாறு செய்ய வேண்டும். (நிச்சயமாக, என்னால் இதை மாம்சத்தில் நிறைவேற்ற முடியாது, மேலும் எனது ஆவியானவரால் மட்டுமே இந்தக் கிரியையைச் செய்ய முடியும், ஏனென்றால் நேரம் இன்னும் வரவில்லை.) இது முழு பிரபஞ்ச உலகமும் ஊழியம் செய்யும் செயல்பாட்டின் இறுதிப் பகுதி ஆகும். எல்லோரும் என்னை மகிழ்ச்சியுடன் துதிப்பார்கள் மற்றும் போற்றுவார்கள். என்னுடைய மகத்தான கிரியை முடிவடைகிறது. பிரபஞ்ச உலகத்திற்கும், அனைத்து தேசங்களுக்கும், அனைத்து ஜனங்களுக்கும், மலைகள், ஆறுகள் மற்றும் எல்லா பொருட்களுக்கும்—வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள் என் கரத்திலிருந்து ஊற்றப்படுகின்றன, ஏழு இடிமுழக்கங்களும் முழங்குகின்றன, ஏழு எக்காளங்களும் தொனிக்கின்றன, மற்றும் ஏழு முத்திரைகள் உடைக்கப்படுகின்றன. வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள் என்பவை யாவை? அவற்றின் துல்லியமான இலக்கு என்ன? அவை என் கரத்திலிருந்து ஊற்றப்படும் என்று நான் ஏன் சொல்கிறேன்? எல்லோரும் முழுமையாக நம்புவதற்கு முன்பும், எல்லோரும் முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பும் நீண்ட காலம் செல்லும். நான் இப்போது உங்களிடம் சொன்னாலும், நீங்கள் ஒரு சிறிய பகுதியை மட்டுமே புரிந்து கொள்வீர்கள். மனுஷக் கற்பனையின்படி, வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள் உலகின் அனைத்து நாடுகளையும் ஜனங்களையும் இலக்காகக் கொண்டுள்ளன, ஆனால் உண்மையில் இது அவ்வாறு இல்லை. “வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள்” என்பது பிசாசாகிய சாத்தானின் ஆதிக்கத்தையும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் (எனக்காக ஊழியம் செய்ய நான் பயன்படுத்தும் பொருள்) சதியையும் குறிக்கிறது. அந்த நேரத்தில், குமாரர்களையும் ஜனங்களையும் சிட்சிக்க நான் சாத்தானையும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தையும் விடுதலை செய்வேன், அதன் மூலம் குமாரர்கள் யார், ஜனங்கள் யார் என்பது வெளிப்படும். வஞ்சிக்கப்பட்டவர்கள் என்னுடைய முன்குறித்தலுக்கு இலக்காகாதவர்களாவர், என்னுடைய முதற்பேறான குமாரர்கள் அந்த நேரத்தில் என்னுடன் ஆளுகை செய்து கொண்டு இருப்பார்கள். இவ்விதமாக நான் குமாரர்களையும் ஜனங்களையும் முழுமைப்படுத்துவேன். வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள் ஊற்றப்படுவது என்பது, எல்லாத் தேசங்கள் மற்றும் எல்லா ஜனங்கள் மீதும் அல்ல, மாறாக, என்னுடைய குமாரர்கள் மற்றும் என்னுடைய ஜனங்கள் மீது மட்டுமேயாகும். ஆசீர்வாதங்கள் எளிதில் கிடைப்பதில்லை; முழுமையான விலைக்கிரயம் செலுத்தப்பட வேண்டும். குமாரர்களும் ஜனங்களும் வளரும்போது, வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்கள் முற்றிலும் அகற்றப்படும், பின்னர் அவை இருக்காது. “ஏழு இடிமுழக்கம்” என்றால் என்ன? இதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமானது அல்ல. நானும் எனது முதற்பேறான குமாரர்களும் சரீரமாக மாறுகிற தருணத்தில் ஏழு இடிகளும் முழங்கும். வானமும் பூமியும் தலைகீழாக மாறுவது போல் இது முழு பிரபஞ்சத்தையும் அதிர வைக்கும். இதை அனைவரும் அறிவார்கள்; யாரும் அதைப் பற்றி அறியாமல் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில், நானும் எனது முதற்பேறான குமாரர்களும் மகிமையில் ஒன்றாக இருந்து அடுத்த கட்ட கிரியையைத் தொடங்குவோம். ஏழு இடிகளின் முழக்கத்தால் பலர் இரக்கத்துக்காகவும் மன்னிப்பிற்காகவும் மண்டியிடுவார்கள். ஆனால் அது இனி கிருபையின் காலமாக இருக்காது: அது உக்கிர கோபத்திற்கான காலமாக இருக்கும். தீமை செய்பவர்கள் அனைவரையும் பொறுத்த வரையில், (விபச்சாரம் செய்பவர்கள், அல்லது அசுத்தமான பணத்தைக் கையாள்பவர்கள், அல்லது எதிர் பாலினத்தவர்களுடன் தெளிவற்ற எல்லைகளை வைத்திருப்பவர்கள், அல்லது எனது நிர்வாகத்தில் குறுக்கிடுபவர்கள் அல்லது சேதப்படுத்துபவர்கள், அல்லது ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள், அல்லது பொல்லாத ஆவிகளால் பிடிக்கப்பட்டவர்கள், மற்றும் பல—என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தவிர), அவர்களில் ஒருவரும் விட்டு வைக்கப்பட மாட்டார்கள், எந்தவித மன்னிப்பும் பெறமாட்டார்கள், மாறாக, அவர்களில் ஒவ்வொருவரும் பாதாளத்திற்குள் தள்ளப்படுவார்கள், அங்கு அவர்கள் என்றென்றும் அழிந்து போவார்கள்! “ஏழு எக்காளங்கள் ஒலிப்பது” என்பது ஒரு பெரிய, விரோதமானச் சூழலைக் குறிக்கவில்லை, அல்லது உலகத்திற்கான எந்தப் பிரகடனத்தையும் குறிக்கவில்லை; இவை முற்றிலும் மனுஷீகக் கருத்துக்களாகும். “ஏழு எக்காளங்கள்” என்பது என் உக்கிரக் கோபமான வார்த்தையைக் குறிக்கிறது. எனது குரல் (மகத்தான நியாயத்தீர்ப்பு மற்றும் கோபமான நியாயத்தீர்ப்பு) வெளிப்படும் போது, ஏழு எக்காளங்கள் ஒலிக்கின்றன. (தற்போதைய சூழலில், என் வீட்டில், இது மிகவும் கடுமையானது, யாராலும் தப்பிக்க முடியாது.) மேலும் பாதாளத்திலும் நரகத்திலும் உள்ள பெரிய மற்றும் சிறிய அனைத்துப் பிசாசுகளும் தங்கள் தலையைத் தங்கள் கைகளில் வைத்து, அழுதுகொண்டே, தங்களது பற்களைக் கடித்துக் கொண்டு, வெட்கப்பட்டு, மறைந்து கொள்ள எங்கும் இடமில்லாமல் எல்லாத் திசைகளிலும் ஓடிவிடும். இந்தத் தருணத்தில், ஏழு எக்காளங்கள் ஒலிக்கத் தொடங்குவதல்ல, மாறாக, யாராலும் தப்பிக்க முடியாத, அனைவரும் அனுபவிக்க வேண்டிய பொங்கி எழும் என் கோபமும் எனது மிகக் கடுமையான நியாயத்தீர்ப்புமாய் இருக்கிறது. இந்த நேரத்தில், வெளிப்படுத்தப்பட்டிருப்பது ஏழு முத்திரைகளின் உள்ளடக்கங்கள் அல்ல. ஏழு முத்திரைகள் என்பது நீங்கள் எதிர்காலத்தில் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களாகும். “உடைத்தல்” என்பது அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதை மட்டுமே குறிக்கிறது, ஆனால் நீங்கள் இன்னும் இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கவில்லை. இந்த ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்கும் போது, ஏழு முத்திரைகளின் உள்ளடக்கங்களை நீங்கள் அறிவீர்கள். இன்னும் முழுமையடையாத ஒரு பகுதியை மட்டுமே நீங்கள் இப்போது தொடுகிறீர்கள். எதிர்காலக் கிரியையின் போது எழும் ஒவ்வொரு கட்டத்தையும் மட்டுமே என்னால் சொல்ல முடியும், எனவே நீங்கள் அதைத் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பீர்கள் மற்றும் ஒப்பிட முடியாத மகிமையை உணருவீர்கள், மேலும் நீங்கள் முடிவில்லாத பரவசமான நிலையில் இருப்பீர்கள்.

முதற்பேறான குமாரர்களின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடிவது என்பது எளிதான விஷயமும் அல்ல, அல்லது சராசரி மனுஷனால் அடையக் கூடிய விஷயமும் அல்ல. நான் எனது முதற்பேறான குமாரர்களிடம் கடுமையான கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, அதிக க் கட்டாயத்துடன் சொல்கிறேன். இல்லையெனில், அவர்களால் என் நாமத்தை மகிமைப்படுத்த முடியாது. உலகில் இழிவானவர்கள் யாராக இருந்தாலும் நான் உறுதியாக நிராகரிக்கிறேன், மேலும் விபச்சாரத்தில் ஈடுபடும் எவரையும் நான் நிராகரிக்கிறேன். (தேவனுடைய ஜனங்களாக மாறுவதில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை—நான் குறிப்பாக இதை வலியுறுத்துகிறேன்.) கடந்த காலத்தில் நீங்கள் செய்தது முடிந்து விட்டது என்று நினைக்காதீர்கள்—இப்படிச் செய்தது ஒரு நல்ல விஷயமாக எப்படி இருக்க முடியும்! முதற்பேறான குமாரன் என்ற அந்தஸ்தைப் பெறுவது அவ்வளவு சுலபமா? எனக்கு எதிராக இருப்பவர்களையும், என் மாம்சத்தில் என்னை அடையாளம் காணாதவர்களையும், என் சித்தத்தை நான் செய்கையில் எனக்கு இடையூறு விளைவிப்பவர்களையும், என்னைத் துன்புறுத்துபவர்களையும், அதைப் போலவே நான் நிராகரிக்கிறேன்—நான் இவ்வளவு கடுமையானவராக இருக்கிறேன். (ஏனெனில், நான் எனது வல்லமையை முழுமையாகத் திரும்ப எடுத்துக் கொண்டேன்)! இறுதியாக, அதேபோல், வாழ்க்கையில் எந்தப் பின்னடைவும் பெற்றிராத எவரையும் நான் நிராகரிக்கிறேன். சிறு துன்பங்களாக இருந்தாலும், என்னைப் போலவே, தங்கள் துன்பங்களில் இருந்து வெளிப்பட்டவர்களையே நான் விரும்புகிறேன். அவர்கள் அப்படி இல்லையென்றால், அவர்கள் நான் நிராகரிக்கும் வகையினர் ஆவர். என் முதற்பேறான குமாரனாக இருக்க விரும்பி, வெட்கமின்றி, என் முன் உன்னைக் காட்சிப்படுத்த வேண்டாம். சீக்கிரத்தில் என்னை விட்டு தூரம் போய்விடு! என் மகிழ்ச்சியைப் பெற முற்பட்டு, நீ முன்பு அற்ப விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறாய்! இது குருட்டுத்தனமாகும்! ஒன்றுக்கும் உதவாத துர்பாக்கியனாகிய உன்னை நான் வெறுக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? உனது கீழ்த்தரமான நடத்தைகள் எனக்குத் தெரியாது என்று நினைக்கிறாயா? நீ மீண்டும் மீண்டும் மறைக்கிறாய்! உன்னுடைய பிசாசு முகத்தைக் காட்டியிருக்கிறாய் என்பது உனக்குத் தெரியாதா? ஜனங்களால் பார்க்க முடியாது என்றாலும், என்னாலும் முடியாது என்று நீ நினைக்கிறாயா? எனக்கு ஊழியம் செய்பவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை; அவர்கள் ஒன்றுக்கும் உதவாத துர்பாக்கியர்களின் கூட்டமாவர். நான் அவர்களைக் கையாள வேண்டும். நான் அவர்களை பாதாளத்திற்குள் எறிந்து போட்டு அவர்களைச் சுட்டெரிப்பேன்!

நீ தெய்வபக்தியற்ற முறையில் பேசுகிறாய், நம்பிக்கையற்ற முறையில் செயல்படுகிறாய், மேலும் மற்றவர்களுடன் சரியாக ஒத்துழைப்பதில்லை; அப்படிப்பட்ட நபராய் இருந்து கொண்டு, இன்னும் ராஜாவாக இருக்க ஆசைப்படுகிறாய்—நீ கனவு கண்டுகொண்டிருக்கவில்லையா? நீ மாய்மாலக்காரன் அல்லவா? நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் என்று பார்ப்பதில்லையா? நீ ஒன்றுக்கும் உதவாத துர்பாக்கியன்! அப்படிப்பட்டவனால் ஏதாவது பயன் உண்டா? என் பார்வையிலிருந்து விரைந்து சென்றுவிடு! நான் சொல்வதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், என் வார்த்தைகளால் ஏவப்பட்டு, எனது சர்வவல்லமையை உணர்ந்து, என் ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் தோன்றியிருக்கிறது என்று அடிக்கடி கூறப்பட்டிருக்கிறது. இறுதியில், பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் தோன்றியிருக்கிறதா இல்லையா என்று நீங்கள் கூறுவீர்களா? நான் பேசுவது வெற்றுப் பேச்சா? பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் என்றால் என்ன? எந்தச் சூழ்நிலைகளில் பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் வாழ்கிறது? மனுஷர்களுக்கு, இது கற்பனை செய்ய முடியாததும் புரிந்து கொள்ள முடியாததுமாக இருக்கிறது. நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நான் குறைபாடற்றவர், என்னில் அனைத்தும் வெளிப்படையாக இருக்கின்றன, எல்லாமே விடுவிக்கப்பட்டிருக்கின்றன (ஏனென்றால் நான் ஞானமாகச் செயல்படுகிறேன், நான் சுதந்திரமாகப் பேசுகிறேன்). எனது செயல்களில், வெட்கக் கேடானது எதுவும் இல்லை, எல்லாமே வெளிச்சத்தில் செய்யப்படுகின்றன, இதனால் எல்லோரையும் முழுமையாக நம்ப வைக்க முடியும். மேலும், எனக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்த எந்த மனுஷனாலும் அவற்றுக்குள் எதையும் பிடித்து வைக்க முடியாது. இது “பரிசுத்த ஆவிக்குரிய சரீரத்தில்” உள்ள “பரிசுத்தம்” என்பதன் விளக்கமாகும். எனவே, வெட்கக் கேடான செயல்களைச் செய்பவர்களை நான் விரும்புவதில்லை என்பதை நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். இது எனது ஆட்சிமுறை ஆணைகளின் ஒரு பொருளாகவும், மேலும் இது எனது மனநிலையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. “ஆவிக்குரிய சரீரம்” என்பது எனது வார்த்தைகளைக் குறிக்கிறது. நான் சொல்வது, எப்போதும் நோக்கத்தை உடையதாகவும், எப்போதும் ஞானமுள்ளதாகவும் இருக்கிறது, ஆனால் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது அல்ல. (நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்கிறேன், அது என்னுடைய ஆவியானவர் தமது குரலை உச்சரிப்பதாக இருக்கிறது, அது என் ஆள்தத்துவம் பேசுவதாகும்.) நான் சொல்வது சுதந்திரமாக வெளியிடப்படுகிறது, அது ஜனங்களின் எண்ணங்களுடன் ஒத்துப் போகாதபோது, அதுதான் ஜனங்களை வெளிப்படுத்தும் நேரமாக இருக்கும். இதுதான் என்னுடைய சரியான ஏற்பாடாக இருக்கிறது. எனவே, ஆள்தத்துவமானவரான நான் பேசும் போதோ அல்லது செயல்படும் போதோ, சாத்தானின் சாராம்சத்தை அம்பலப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆள்தத்துவமானவரான நான் அபிஷேகம் பண்ணப்பட்டவுடன், பரிசுத்த ஆவிக்குரிய சரீரம் வெளிப்படுகிறது. எதிர்காலத்தில், “பரிசுத்த ஆவிக்குரிய சரீரம்” என்பது சரீரத்தைக் குறிக்கும், மேலும் இந்த அர்த்தத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அர்த்தத்தின் ஒரு அம்சமானது தற்போது காணப்படுகிறது, அர்த்தத்தின் மற்றொரு அம்சமானது எதிர்காலத்தில் காணப்படும். ஆனால் எதிர்காலத்தில், பரிசுத்த ஆவிக்குரிய சரீரமானது நிகழ்காலத்தில் இருப்பதிலிருந்து—வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போல மிகவும் வேறுபட்டதாக இருக்கும். அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது, நான் அதைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 93

அடுத்த: அத்தியாயம் 95

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக