அத்தியாயம் 51

ஓ! சர்வவல்லமையுள்ள தேவனே! ஆமென்! உம்மில், அனைத்தும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன, அனைத்தும் விடுவிக்கப்பட்டிருக்கின்றன, அனைத்தும் வெளிப்படையாக இருக்கின்றன, அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன, மேலும் அனைத்தும் பிரகாசமாக உள்ளன, கொஞ்சமும் மறைக்கப்படவில்லை அல்லது மறைத்து வைக்கப்படவில்லை. நீர் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனாக இருக்கிறீர். நீர் ராஜாவாக ஆளுகை செய்திருக்கிறீர். நீர் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறீர்—இனி நீர் ஒருபோதும் இரகசியமானவராக இருப்பதில்லை, ஆனால் நீர் முழுமையாக, என்றென்றைக்குமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறீர்! நான் உண்மையிலேயே முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறேன், நான் பகிரங்கமாக வந்திருக்கிறேன், நான் நீதியின் சூரியனாகத் தோன்றியிருக்கிறேன், ஏனென்றால் இன்று விடிவெள்ளி தோன்றும் காலம் அல்ல, அது இன்னும் மறைத்து வைக்கும் காலகட்டமும் அல்ல. என் கிரியை ஒளிரும் மின்னல் போன்றது; அது இடியின் திடீர் முழக்கத்தைப் போல் விரைவாக நிறைவேற்றப்படுகிறது. எனது கிரியை தற்போதைய இந்த நிலைக்கு முன்னேறியிருக்கிறது, மேலும் யாரெல்லாம் அசதியாக அல்லது சோம்பேறித்தனமாக இருக்கிறார்களோ, அவர்கள் இரக்கமற்ற நியாயத்தீர்ப்பை மட்டுமே சந்திப்பார்கள். குறிப்பாக, நான் மகத்துவமானவர் மற்றும் நியாயந்தீர்ப்பவர் என்பதையும், நீங்கள் கற்பனை செய்வது போல நான் இனி மனதுருக்கமும் அன்பும் இல்லாதவர் என்பதையும் குறித்து நீ தெளிவானப் புரிதலைப் பெற்றிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீ இன்னும் தெளிவாக இல்லை என்றால், நீ பெறுவது நியாயத்தீர்ப்பு மட்டுமேயாகும், ஏனென்றால், நீ ஒப்புக்கொள்ளாதிருந்ததை நீயே ருசி பார்ப்பாய்; இல்லையெனில், தொடர்ந்து நீ சந்தேகங்களைப் பெற்றிருப்பாய், மற்றும் உன்னுடைய விசுவாசத்தில் உறுதியாக இருக்கத் தைரியங்கொள்ள மாட்டாய்.

நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறதைப் பொறுத்தவரை, அதை உங்களால் அர்ப்பணிப்புடன் முடிக்க முடியுமா? எந்தவொரு செயலுக்கும் ஞானம் தேவைப்படுகிறது என்று நான் சொல்கிறேன், ஆனாலும் எதையாவது செய்யும்போது நீங்கள் எத்தனை முறை என் உபதேசங்களைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்த்து, அதற்கு மேலும் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள்? என்னுடைய உபதேசங்களின் ஒரு வார்த்தையைப் பற்றி நீங்கள் ஓரளவு புரிதலைப் பெற்றிருந்தாலும், அதைக் கேட்கும் போது நன்றாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், பின்னர் நீங்கள் அதைப் புறக்கணிக்கிறீர்கள். நீங்கள் அதைக் கேட்கும்போது, உங்கள் சொந்த உண்மையான நிலைமையைக் குறிப்பிடுவதாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் மற்றும் நீங்களே உங்களை இகழ்ந்து கொள்கிறீர்கள்—ஆனால் அதன் பின்னர், அது ஒரு அற்பமான விஷயம் என்று நீங்கள் நம்புகிறீர்கள். இன்றைய கேள்வி என்னவென்றால், உன்னுடைய வாழ்க்கை முன்னேற முடியுமா இல்லையா என்பதுதான்; அது, நீ எவ்வாறு வெளிப்புறமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய் என்பதற்கான கேள்வியல்ல. உங்களில் யாரும் எந்தத் தீர்மானத்தையும் பெற்றிருக்கவில்லை, மேலும் நீங்கள் உறுதியாக இருக்க விருப்பமில்லாது இருக்கிறீர்கள். நீங்கள் விலைக்கிரயம் செலுத்த விரும்புவதில்லை, மேலும் நீங்கள் நிலையற்ற பூமிக்குரிய இன்பத்தை ஒதுக்கித் தள்ளவும் விரும்புவதில்லை, ஆனாலும் நீங்கள் பரலோகத்திலிருந்து வரும் ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும் என்று பயப்படுகிறீர்கள். நீங்கள் எப்படிப்பட்ட நபராய் இருக்கிறீர்கள்? நீ ஒரு முட்டாள்! நீங்கள் சீற்றமடையக் கூடாது; நான் சொல்லியிருப்பது உண்மையல்லவா? நீ ஏற்கனவே நினைத்திருப்பதை இது எளிதாக சுட்டிக்காட்டியிருக்கவில்லையா? நீ மனிதத்தன்மையைப் பெற்றிருக்கவில்லை! ஒரு இயல்பான மனுஷனுடைய தன்மையைக் கூட நீ பெற்றிருக்கவில்லை. மேலும், இது எப்படி இருந்தாலும், நீ இன்னும் உன்னைத் தேவையுள்ளவனாகப் பார்ப்பதில்லை. நீ நாள் முழுவதும் நிதானமாகவும் கவலையற்றும் இருக்கிறாய், மற்றும் முற்றிலும் மனநிறைவுடன் இருக்கிறாய்! உன்னுடைய சொந்தக் குறைபாடுகள் எவ்வளவு அதிகமானவை என்பதோ அல்லது உனக்கு என்ன குறை இருக்கிறது என்பதோ உனக்குத் தெரிவதில்லை. எவ்வளவு முட்டாள்தனம்!

எனது கிரியை ஏற்கனவே இத்தகைய நிலைக்கு வந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறதில்லையா? என் சித்தமெல்லாம் உங்களிடத்தில் உள்ளது. எப்பொழுது அதைப் புரிந்து கொள்ளவும், அதற்குச் சிறிது அக்கறை காட்டவும் உங்களால் இயலும்? நீ சோம்பேறி! நீ விலைக்கிரயம் செலுத்த விருப்பமில்லாமல் இருக்கிறாய், கடினமாக உழைக்க விருப்பமில்லாமல் இருக்கிறாய், நேரம் ஒதுக்க விருப்பமில்லாதிருக்கிறாய், முயற்சி செய்ய விருப்பமில்லாதிருக்கிறாய். நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்! பாடுகளை அனுபவிக்க எவ்வளவு அதிகமாக நீ பயப்படுகிறாயோ, அவ்வளவு குறைவான பலன்களையே உன்னுடைய வாழ்க்கை அறுவடை செய்யும், மேலும், உன்னுடைய வாழ்க்கை வளரும்போது நீ எவ்வளவு அதிகமானத் தடைகளைச் சந்திக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக உன்னுடைய வாழ்க்கை முன்னேற வாய்ப்பு இருக்காது. நான் மீண்டும் ஒருமுறை உனக்கு நினைவுபடுத்துகிறேன் (நான் இதைத் திரும்பவும் சொல்ல மாட்டேன்)! தன் சொந்த வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்காத எவருக்கும் நான் மாறுபடுகிறவராக இருந்து, அவர்களைக் கைவிட்டு விடுவேன். நான் ஏற்கனவே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறேன்; இதை நீ தெளிவாகப் பார்த்திருக்கவில்லையா? இது தொழில் பரிவர்த்தனை அல்ல, இது வர்த்தகமும் அல்ல; இது ஜீவனாக இருக்கிறது. இது தெளிவாகப் புரிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 50

அடுத்த: அத்தியாயம் 52

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக