யதார்த்த நிலைமீது அதிகமாய்க் கவனம் செலுத்துங்கள்

தேவனால் பரிபூரணப்படுத்தப்படும் சாத்தியக்கூற்றை ஒவ்வொரு நபரும் கொண்டுள்ளார், எனவே தேவனின் நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் தேவனுக்குச் செய்யும் எந்த வகையான ஊழியம் சிறந்தது என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் என்னவென்று பெரும்பாலான ஜனங்களுக்குத் தெரிவதில்லை, அவர்கள் அவரை ஏன் விசுவாசிக்க வேண்டும் என்றும் அவர்களுக்குப் புரிவதில்லை—அதாவது, தேவனுடைய கிரியையைப் பற்றியோ அல்லது அவருடைய மேலாண்மை திட்டத்தின் நோக்கத்தைப் பற்றியோ பெரும்பாலானவர்களுக்கு புரிதல் இல்லை. இன்றைய நாட்களில், பெரும்பான்மையான ஜனங்கள், தேவனில் விசுவாசம் கொள்ளுதல் என்பது, பரலோகத்திற்குச் செல்லுதல் மற்றும் தங்கள் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டிருத்தல் என்பவற்றைப் பற்றியது மட்டும்தான் என்று இன்னமும் நினைக்கின்றனர். அவர்கள், தேவனை விசுவாசிப்பதன் மிகச்சரியான முக்கியத்துவத்துவத்தை அறியாதவர்களாக, மேலும் தேவனுடைய மேலாண்மைத் திட்டத்தில் மிகவும் முக்கியமான கிரியை என்ன என்பது பற்றிய புரிந்துகொள்ளுதல் எதையும் கொண்டிராதவர்களாக உள்ளனர். ஜனங்கள் பல்வேறு விதமான தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, தேவனுடைய கிரியையில் எவ்விதமான ஆர்வமும் கொண்டிருப்பதில்லை, மேலும் அவர்கள் தேவனுடைய நோக்கங்கள் அல்லது மேலாண்மைத் திட்டம் பற்றிச் சிந்திப்பதில்லை. தேவனுடைய முழு மேலாண்மைத் திட்டத்தின் நோக்கம் என்ன, அவர் நீண்ட காலமாக நிறைவேற்றியவை பற்றிய உண்மைகள், இந்த ஜனக்கூட்டத்தை அவர் ஏன் தேர்ந்தெடுத்தார், அவர்களைத் தேர்ந்தெடுப்பதன் நோக்கம் மற்றும் பொருள் என்ன, இந்தக் கூட்டத்திடம் அவர் எதை அடைய விரும்புகிறார் என்பவற்றை இந்தக் கூட்டத்தில் தனிநபர் என்ற வகையில் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் தேசத்தில், குறிப்பிடத்தக்கவர்களாக இராத இப்படிப்பட்டதொரு ஜனக்கூட்டத்தை எழுப்பத் தேவனால் முடிந்துள்ளது, மற்றும் அவர் இதுவரையிலும் தொடர்ந்து கிரியை செய்துள்ளார், திரளான வார்த்தைகளைப் பேசி, அதிகமான கிரியைகளை நடப்பித்து, பல சேவிக்கும் பொருட்களைக் கொடுத்து முயற்சி செய்து எல்லா வழிகளிலும் அவர்களைப் பரிபூரணமாக்குகிறார்—தேவன் மட்டுமே இவ்வளவு பெரிய கிரியையைச் செய்திருக்கிறார் என்பது அவரது கிரியை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காண்பிக்கிறது. இந்த நேரத்தில், நீங்கள் இதை முழுமையாக மதிக்க இயலாத நிலையில் இருக்கிறீர்கள். எனவே, தேவன் உங்களில் நடப்பித்துள்ள கிரியையை அற்பமானதாக நீங்கள் கருதக்கூடாது; இது சிறிய விஷயமல்ல. தேவன் இன்று உங்களுக்கு வெளிப்படுத்தியதுகூட, அதன் ஆழத்தைக் கண்டுணர்ந்து அறிந்துகொள்ள உங்களுக்குப் போதுமானதாகவே இருக்கிறது. நீங்கள் இதை உண்மையாகவும் முழுமையாகவும் புரிந்துகொண்டால் மட்டுமே, உங்கள் அனுபவங்கள் ஆழமாகச் செல்லவும் உங்கள் வாழ்வு வளரவும் முடியும். இன்றைய நாட்களில், ஜனங்கள் புரிந்துகொள்வதும் செயல்படுவதும் மிகவும் குறைவு; அவர்கள் தேவனுடைய நோக்கங்களை முழுமையாக நிறைவேற்ற இயலாதவர்களாக இருக்கிறார்கள். இது மனிதனின் குறைபாடாகவும் கடமையை நிறைவேற்றுவதில் அவர்களின் தோல்வியாகவும் உள்ளது, இவ்வாறு அவர்கள் விரும்பிய பலனை அடைய இயலாதவர்களாக உள்ளனர். ஜனங்களில் பலர், தேவனுடைய கிரியை பற்றி ஆழமற்ற புரிதல் கொண்டவர்களாக இருப்பதாலும், தேவனுடைய வீட்டின் ஊழியத்தைச் செய்கையில் அதை மதிப்பு மிகுந்ததாக கருத மனமில்லாது இருப்பதாலும், அவர்களிடத்தில் கிரியை நடப்பிக்கப் பரிசுத்த ஆவியானவருக்கு வழி எதுவும் இல்லை. அவர்கள் வெறுமென சமாளிப்பதற்காக, எவ்விதமாறுதலும் இல்லாது பாசாங்கு செய்கின்றனர், இல்லையெனில் பெரும்பான்மையானோரைப் பின்பற்றுகின்றனர் அல்லது வெறும் பார்வைக்காக கிரியை செய்கின்றனர். இன்று, இந்த ஜனக்கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரும், தங்கள் கிரியைகளிலும் செயல்களிலும், தங்களால் இயன்ற அனைத்தையும் செய்திருக்கிறார்களா, எல்லா அளவிலான முயற்சியையும் கொடுத்திருக்கிறார்களா என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். ஜனங்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தவறிவிட்டனர், பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையை நடப்பிக்காததினால் அல்ல, ஆனால் ஜனங்கள் தங்கள் கிரியைகளைச் செய்யாததால்தான், பரிசுத்த ஆவியானவர் அவருடைய கிரியையை நடப்பிக்கச் சாத்தியமற்றுப்போயிற்று. தேவனிடம் சொல்வதற்கு இனியும் வார்த்தைகள் எதுவும் இல்லை, ஆனால் ஜனங்கள் எல்லாவற்றையும் கைக்கொள்ளவில்லை, அவர்கள் மிகவும் பின்னான தொலைவிலேயே விழுந்துபோயுள்ளார்கள், அவர்கள் ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளை நெருங்கிப்பின்பற்ற இயலாதவர்களாக, ஒவ்வொரு அடிவைப்பிலும் நெருங்கிநிற்க முடியாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் எவற்றில் நிலைத்திருக்க வேண்டுமோ, அவற்றில் நிலைத்திருக்கவில்லை; அவர்கள் எவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமோ, அவற்றை நடைமுறைப் படுத்தவில்லை; அவர்கள் எவற்றிற்காக ஜெபித்திருக்க வேண்டுமோ, அவற்றிற்காக ஜெபித்திருக்கவில்லை; அவர்கள் எவற்றைப் புறம்பே ஒதுக்கியிருக்க வேண்டுமோ, அவற்றைப் புறம்பே ஒதுக்கியிருக்கவில்லை. இந்த விஷயங்களில் எதையும் அவர்கள் செய்யவில்லை. எனவே, விருந்தில் கலந்து கொள்ளும் இந்தப் பேச்சு வெறுமையாக உள்ளது; இது உண்மையான அர்த்தம் எதுவும் இல்லாமல் உள்ளது, மற்றும் எல்லாம் அவர்களின் கற்பனையில் உள்ளது. இன்று முதல் பார்க்கும்போது, ஜனங்கள் தங்கள் கடமையைச் சிறிதும் செய்திருக்கவில்லை என்றே கூறலாம். ஒவ்வொரு விஷயமும் தேவனின் கிரியை நடப்பித்தல் மற்றும் அவர் விஷயங்களைக் கூறுதல் ஆகியவற்றையே சார்ந்துள்ளது. மனிதனின் செயல்பாடு மிகவும் சிறியது; ஜனங்கள் தேவனுடன் ஒத்துழைக்க இயலாதவர்களாக, பயனற்ற குப்பையாக இருக்கின்றனர். தேவன் நூற்றுக்கணக்கான மற்றும் பல்லாயிரக்கணக்கான வார்த்தைகளைப் பேசியுள்ளார், இருப்பினும் அவற்றில் எதையும் ஜனங்கள் நடைமுறைப் படுத்தவில்லை—அது மாம்சத்தைக் கைவிடுதல், கருத்துக்களை நிராகரித்தல், பகுத்தறிதலை வளர்த்துக்கொண்டு நுண்ணறிவை ஆதாயப்படுத்தும் வேளையிலேயே எல்லாவற்றிலும் தேவனுக்குக் கீழ்ப்படிதலை நடைமுறைப்படுத்துதல், தங்கள் இருதயங்களில் ஜனங்களுக்கு இடம்கொடாதிருத்தல், தங்கள் இருதயங்களில் இருந்து விக்கிரகங்களை நீக்கிப்போடுதல், தங்கள் தவறான நோக்கங்களுக்கு எதிராகப் போராடுதல், உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படாதிருத்தல், செயல்களை நியாயமாக மற்றும் பட்சபாதம் இன்றிச் செய்தல், தேவனுடைய சித்தத்தையும் தாங்கள் அவற்றைப் பேசுகையில் பிறர்மீதான அவற்றின் செல்வாக்கைப் பற்றியும் பெரிதும் சிந்தித்தல், தேவனுடைய கிரியை பயனுள்ளவற்றை அதிகமாகச் செய்தல், தாங்கள் செய்யும் செயல்கள் யாவற்றிலும் தேவனுடைய வீடு அதிகப் பயன்பெற வேண்டும் என்பதைச் சிந்தையில் காத்துக் கொள்ளுதல், தங்கள் உணர்வெழுச்சிகள் தங்கள் நடக்கைகளை ஆள அனுமதியாதிருத்தல், தங்கள் சுயமாம்சம் விரும்பும் விஷயங்களை ஒழித்துப்போடுதல், சுயநலமான பழைய கருத்துக்களை நீக்கிப்போடுதல் போன்றவைகளை ஜனங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. மனிதன் செய்யும்படி தேவன் கேட்டுக்கொள்கிற இவையாவற்றிலும், சிலவற்றை அவர்கள் உண்மையில் புரிந்துகொள்கின்றனர், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த மனவிருப்பம் அற்றவர்களாய் இருக்கின்றனர். தேவன் வேறு என்ன செய்யக்கூடும்? அவர் வேறு எவ்விதமாய் அவர்களை அசைக்கக்கூடும்? தேவனுடைய கண்களில் கலகக்காரப் பிள்ளைகளாயிருப்பவர்கள், அவரது வார்த்தைகளை எடுத்துக்கொள்ளவும் அவற்றைப் பாராட்டவும் இன்னமும் தைரியம் கொண்டவர்களாயிருக்க முடிவது எப்படி? தேவனுடைய போஜனத்தில் பங்குபெற அவர்கள் தைரியம் கொள்வது எப்படி? ஜனங்களின் மனச்சாட்சி எங்கே உள்ளது? அவர்கள் தாங்கள் நிறைவேற்ற வேண்டிய மிகக்குறைந்த அளவு கடமைகளைக்கூட நிறைவேற்றாமல் உள்ளனர், அவர்கள் தங்களின் அதிகபட்சமான செயல்களைச் செய்தல் பற்றிக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் ஒரு கனவுலகில் வாழ்கிறார்கள், இல்லையா? நடைமுறையின்றி யதார்த்தத்தைப் பற்றிப் பேச முடியாது. இது பகல் போன்று தெளிவானதொரு உண்மையாக உள்ளது.

நீங்கள் மிகவும் யதார்த்தமான பாடங்களைக் கற்க வேண்டும். ஜனங்கள் ரசிக்கிற உயர்ந்தபட்சமான சத்தம், வெறுமையான பேச்சு ஆகியவற்றிற்கு அவசியம் இல்லை. அறிவைப் பற்றி பேசும்போது, ஒவ்வொரு நபரும் தங்கள் முன்பாக இருப்பவரைக்காட்டிலும் உயர்வானவராக இருக்கிறார், ஆனால் அவர்கள் இன்னும் நடைமுறைக்கான பாதையைக் கொண்டிருக்கவில்லை. நடைமுறையின் கொள்கைகளை ஜனங்களில் எத்தனை பேர் புரிந்துகொண்டுள்ளனர்? உண்மையான பாடங்களை எத்தனை பேர் கற்றுக்கொண்டுள்ளனர்? யதார்த்தத்துடன் யார் ஐக்கியமாயிருக்கக்கூடும்? தேவனுடைய வார்த்தைகளைப் பேசக்கூடிய வகையில் இருத்தல் என்பது நீ உண்மையான நிலையை உடையவனாக இருப்பதாக அர்த்தப்படாது; அது நீ திறமைசாலியாகப் பிறந்தாய், நீ வரம் பெற்றவனாக இருக்கிறாய் என்பதை மாத்திரம் காண்பிக்கிறது. உன்னால் பாதையைச் சுட்டிக்காட்ட முடியாவிட்டால், விளைவு ஒன்றுமிராது, மற்றும் நீ பயனற்ற குப்பையாக இருப்பாய்! நடைமுறைக்கான உண்மையான பாதை பற்றி நீங்கள் எதுவும் சொல்ல முடியாதென்றால், நீங்கள் போலியாக நடிக்கிறீர்கள் அல்லவா? மற்றவர்கள் அறியக்கூடிய வகையில் அல்லது அவர்கள் பின்பற்றக்கூடிய வகையில், நீங்கள் உங்களுக்குச் சொந்தமான உண்மை அனுபவங்களைப் பிறருக்கு வழங்க முடியாவிட்டால், நீங்கள் போலியாகச் செயல்படுபர் அல்லவா? நீங்கள் ஓர் உண்மையற்ற நபரல்லவா? உங்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அத்தகைய நபர் “பொது உடைமைக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர்” என்ற பங்கை மட்டுமே வகிக்க முடியும், “பொது உடமையைக் கொண்டுவருவதற்குப் பங்களிப்பவர்” அல்ல. யதார்த்தமின்றி இருத்தல் என்பது சத்தியமில்லாது இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது ஒன்றுக்கும் பயனற்றதாக இருப்பதாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது நடைப் பிணமாயிருத்தலாகும். யதார்த்தம் இல்லாமல் இருப்பது என்பது குறிப்பு மதிப்பு இல்லாத “மார்க்சிச-லெனினிச சிந்தனையாளராக” இருப்பதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் கோட்பாட்டைப் பற்றி வாயை மூடிக்கொண்டு, நிஜமான, உண்மையான மற்றும் உறுதியான கட்டமைப்பு உடைய ஒன்றைப் பற்றி பேசும்படி வேண்டுகிறேன்; சில “நவீனக் கலைகளைப்” படியுங்கள், யதார்த்தமான சிலவிஷயங்களைச் சொல்லுங்கள், உண்மையான ஒன்றைப் பங்களியுங்கள், அர்ப்பணிப்பின் ஆவியைக் கொண்டவர்களாயிருங்கள். நீ பேசும்போது யதார்த்தத்தை எதிர்கொள்; ஜனங்களை மகிழ்ச்சியுணர்வு கொண்டவர்களாக ஆக்குவதற்காகவோ அல்லது அவர்கள் அமர்ந்து உன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காகவோ யதார்த்தமற்ற மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பேச்சில் ஈடுபட வேண்டாம். அதில் மதிப்பு எங்கே உள்ளது? ஜனங்கள் உன்னை இதமாக நடத்துவதைப் பெறுவதில் உள்ள கருத்து என்ன? நீங்கள் ஒரு மோசமான செல்வாக்காய் மாறிப்போகாதபடிக்கு, உங்கள் பேச்சில் கொஞ்சம் “கலைநயத்துடன்” இருங்கள், உங்கள் நடத்தையில் இன்னும் சற்றுக்கூடுதலான நியாயத்துடன் இருங்கள், நீங்கள் விஷயங்களைக் கையாளும் விதத்தில் இன்னும் சற்றுக்கூடுதலான அறிவிற்கு ஏற்புடைய வகையில் இருங்கள், நீங்கள் கூறும்வகையில் இன்னும் சற்று நடைமுறைக்குரியவராக இருங்கள், உங்கள் செயல் ஒவ்வொன்றினாலும் தேவனுடைய வீட்டிற்குப் பிரயோஜனம் கொண்டுவருதலைப் பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது, உங்கள் மனச்சாட்சியைக் கவனியுங்கள், தயவுக்குக் கைமாறாக வெறுப்பைத் திருப்பித்தராதீர்கள் அல்லது தயவுக்குக் கைமாறாக நன்றியின்மையைக் காட்டாதீர்கள், மற்றும் ஒரு மாயக்காரரைப்போல் இருக்காதீர்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, அவற்றை யதார்த்தத்துடன் மிக நெருக்கமாக இணைக்கவும், நீங்கள் பேசும்போது, யதார்த்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள். ஆணவத்துடன் இருக்காதீர்கள்; இது தேவனைத் திருப்திப்படுத்தாது. மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளில், இன்னும் கொஞ்சம் சகிப்புத்தன்மையுடனும், சற்று அதிக பலந்தரும் வகையிலும், இன்னும் சற்று அதிகமாகக் கண்ணியத்துடனும் இருங்கள், மற்றும் “பிரதமரின் ஆவி”[அ] யிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மோசமான சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போது, மாம்சச்சிந்தையை அதிகமாகக் கைவிடப் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் வேலைசெய்யும்போது, யதார்த்தமான பாதைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றும் அதி உயர்ந்த நிலைக்குச் செல்லாதீர்கள், அப்படி நீங்கள் சென்றால் நீங்கள் பேசுவதன் கருத்து ஜனங்களைச் சென்றடையாது. குறைவாக மகிழ்வை அனுபவித்தல், அதிக பங்களிப்பு—இவை அர்ப்பணிப்புக்கான உங்கள் சுயநலமற்ற ஆவியைக் காண்பிக்கிறது. தேவனுடைய நோக்கங்களின்மீது அதிக கவனமாயிருந்து, உங்கள் மனசாட்சி கூறுவதை அதிகமாய்க் கவனியுங்கள், அதிக கவனத்துடன் இருங்கள், மேலும் தேவன் ஒவ்வொரு நாளும் உங்களிடம் பொறுமையாகவும் ஊக்கமாகவும் பேசுவதை மறந்துவிடாதீர்கள். “பழைய பஞ்சாங்கத்தை” அடிக்கடி வாசியுங்கள். மேலும் அதிகமாய் ஜெபியுங்கள், அடிக்கடி ஐக்கியம் கொள்ளுங்கள். அதிகமாய்க் குழப்பிக்கொள்வதை நிறுத்துங்கள்; நடைமுறை அறிவைக் காண்பித்து மனதினால் அறியும் திறனைச் சற்றே ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பாவமான கை வெளியே வரும்போது, அதைப் பின்னால் இழுங்கள்; அதை அதிகதூரம் சென்றடைய விடாதீர்கள். இதனால், எந்தப் பயனும் இல்லை, சாபங்களைத் தவிர வேறு எதையும் நீங்கள் தேவனிடமிருந்து பெற இயலாது, எனவே கவனமாக இருங்கள். உங்கள் இதயம் மற்றவர்கள் மீது பரிதாபப்படட்டும், எப்போதும் கையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு தாக்கிக்கொண்டிருக்க வேண்டாம். சத்தியத்தைப் பற்றி அறிகிற அறிவைப் பற்றி அதிகமாகப் பேசுங்கள், மற்றும் ஜீவனைப் பற்றி அதிகம் பேசுங்கள், மற்றவர்களுக்கு உதவும் ஆவியைப் பேணுங்கள். அதிகமாகச் செயல்படுங்கள், மற்றும் குறைவாகப் பேசுங்கள். நடைமுறையில் அதிகம் செயல்படுங்கள், மற்றும் ஆராய்ச்சி, பகுப்பாய்வு ஆகியற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினவரால் அதிகமாய் அசைக்கப்பட உங்களை அனுமதியுங்கள், மற்றும் அவர் உங்களைப் பரிபூரணப்படுத்த அதிகம் வாய்ப்பளியுங்கள். அதிகமான மனிதக்கூறுகளை நீக்கிப்போடுங்கள்; நீங்கள் மனிதரீதியாகச் செயல்படும் வழிகளை இன்னமும் அதிகமாய்க் கொண்டிருக்கிறீர்கள், மற்றும் விஷயங்களைச் செய்யும் உங்களின் மேலோட்டமான செயற்பாங்கும் நடத்தையும் இன்னும் பிறருக்கு வெறுப்புக்குரியதாக உள்ளது: இவற்றில் அதிகமானவற்றை நீக்கிப்போடுங்கள். உங்கள் மன நிலை இன்னும் வெறுக்கத்தக்கதாக உள்ளது; அதைத் திருத்துவதற்கு அதிக நேரம் செலவிடுங்கள். நீங்கள் இன்னும் ஜனங்களுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுக்கிறீர்கள்; தேவனுக்கு அதிக அந்தஸ்தைக் கொடுங்கள், நியாயமற்றவர்களாக இருக்காதீர்கள். “ஆலயம்” எப்போதும் தேவனுக்குச் சொந்தமானது, அதை மக்கள் கையகப்படுத்தக்கூடாது. சுருக்கமாகக் கூறுவதென்றால், நீதியில் அதிகமாகவும், உணர்ச்சிகளில் குறைவாகவும் கவனம் செலுத்துங்கள். மாம்சச்சிந்தையை நீக்கிப்போடுவது மிகச்சிறந்ததாகும். யதார்த்தத்தைப் பற்றி அதிகம் பேசுங்கள், அறிவைப் பற்றி குறைவாகப் பேசுங்கள்; எதுவுமே சொல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறந்தது. நடைமுறையின் பாதையைப் பற்றி அதிகம் பேசுங்கள், பயனற்ற பெருமைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். இப்போதே கைக்கொள்ளத் தொடங்குவது நல்லது.

ஜனங்களிடம் தேவன் கேட்டுக்கொள்பவைகள் அவ்வளவு எட்டாதவைகள் அல்ல. ஜனங்கள் அக்கறையுடனும் கருத்துடனும் கடைபிடிக்கும் வரை, அவர்கள் “தேர்ச்சியின் தரத்தைப்” பெறுவார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், சத்தியத்தைக் குறித்தப் புரிதலையும், அறிவையும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனையும் பெறுவது என்பது சத்தியத்தைக் கடைபிடிப்பதை விட மிகவும் சிக்கலானதாகும். முதலில் நீ எவ்வளவு புரிந்து கொள்கிறாயோ அவ்வளவு கடைபிடி, மேலும் உனக்குப் புரிந்திருப்பதைக் கடைபிடி. இவ்வாறு, நீ படிப்படியாக சத்தியத்தைக் குறித்த மெய்யான அறிவையும் புரிதலையும் அடைய முடியும். இவைகளே பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும் படிகளும் வழிமுறைகளுமாகும். நீ இவ்வாறு கீழ்ப்படிதலைக் கடைபிடிக்கவில்லை என்றால், உன்னால் எதையும் சாதிக்க முடியாது. நீ எப்போதும் உன் சொந்த விருப்பப்படி செயல்பட்டு, கீழ்ப்படிதலைக் கடைபிடிக்கவில்லை என்றால், பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்வாரா? பரிசுத்த ஆவியானவர் உன் விருப்பப்படி கிரியை செய்கிறாரா? அல்லது உன் குறைகளுக்கு ஏற்றபடியும், தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையிலும் அவர் கிரியை செய்கிறாரா? இதில் நீ தெளிவற்றிருந்தால், சத்தியத்தின் யதார்த்த நிலைக்குள் உன்னால் பிரவேசிக்கக் கூடாமல் போய்விடுவாய். தேவனின் வார்த்தைகளைப் படிக்க பெரும்பாலான ஜனங்கள் அதிக முயற்சி செய்திருப்பதும், ஆனால் வெறும் அறிவைப் பெற்றுள்ளதும் அதன்பின்னர் உண்மையான பாதையைப்பற்றி எதுவும் கூறமுடியாத நிலையில் இருப்பதும் ஏன்? அறிவைக் கொண்டிருப்பது சத்தியத்தைக் கொண்டிருப்பதற்குச் சமம் என்று நீ நினைக்கிறாயா? அது ஒரு குழப்பமான பார்வை அல்லவா? ஒரு கடற்கரையில் உள்ள மணல் போல உன்னால் அதிக அறிவுடன் பேச முடிந்தாலும், அதில் எதுவுமே உண்மையான பாதையைக் கொண்டிருக்கவில்லை. இதைச் செய்வதன் மூலம் நீங்கள் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லையா? அதை ஆதரிக்க எந்த பொருளும் இல்லாமல், நீங்கள் ஒரு வெற்றுக் காட்சியை உருவாக்கவில்லையா? அத்தகைய நடத்தை அனைத்தும் ஜனங்களுக்கு தீங்குநிறைந்ததாக இருக்கிறது! கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அவ்வளவாய் அது யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது, அவ்வளவாய் ஜனங்களை யதார்த்தத்திற்குள் கொண்டுச்செல்ல இயலாததாயிருக்கிறது; கோட்பாடு எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ, அவ்வளவாய் அது நீ தேவனுக்குக் கீழ்ப்படியாமல் அவரை எதிர்க்கவும் வைக்கிறது. ஆவிக்குரிய கோட்பாட்டிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம்—அதனால் எந்தப் பயனும் இல்லை! சிலர் பல தசாப்தங்களாக ஆவிக்குரிய கோட்பாட்டைப் பற்றிப் பேசி வந்திருகின்றனர், மேலும் அவர்கள் ஆவிக்குரிய அரக்கர்களாக மாறியிருக்கின்றனர், ஆனால் இறுதியில், அவர்கள் இன்னும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கத் தவறுகிறார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்திருக்கவோ அல்லது அனுபவித்திருக்கவோ இல்லை என்பதால், அவர்களுக்குக் கடைப்பிடிப்பதற்கான எந்தக் கொள்கைகளோ அல்லதுபாதைகளோ இல்லை. இப்படிப்பட்டவர்கள் தங்களுக்குள்ளாகவே சத்தியத்தின் யதார்த்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள், அப்படியிருக்கும் போது, அவர்களால் எப்படி தேவனை விசுவாசிப்பதற்கான சரியான பாதையில் மற்றவர்களைக் கொண்டுவர முடியும்? அவர்களால் ஜனங்களைத் தவறான பாதையில் வழிநடத்திச் செல்ல மட்டுமே முடியும். இது மற்றவர்களுக்கும் தங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக இல்லையா? குறைந்த பட்சம், உன் முன் இருக்கும் யதார்த்தமான பிரச்சனைகளை நீ தீர்க்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அதாவது, நீ தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிக்கவும் அனுபவிக்கவும் கூடியவனாகவும், சத்தியத்தைக் கடைபிடிக்கக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இது மட்டுமே தேவனுக்குக் கீழ்ப்படிவதாகும். நீ ஜீவனுக்குள் பிரவேசித்திருக்கும்போது மட்டுமே நீ தேவனுக்காகக் கிரியை செய்யத் தகுதியுடையவனாய் இருக்கிறாய், மேலும் நீ உண்மையாக தேவனுக்கு அர்ப்பணித்திருந்தால் மட்டுமே நீ தேவனால் அங்கீகரிக்கப்பட முடியும். எப்பொழுதும் மாபெரும் அறிக்கைகளையும் டம்பமான கோட்பாடுகளையும் பற்றிப் பேச வேண்டாம்; இது உண்மையல்ல. ஜனங்கள் உன்னைப் பாராட்டும்படி ஆவிக்குரிய கோட்பாட்டை எடுத்துரைப்பது தேவனுக்குச் சாட்சி கொடுப்பது அல்ல, மாறாக உன்னையே பறைசாற்றிக்கொள்வதாகும். இதனால் ஜனங்களுக்கு முற்றிலும் எந்தப் பயனுமில்லை, அவர்களுக்கு பக்திவிருத்தியை ஏற்படுத்துவதுமில்லை, மேலும் அவர்கள் ஆவிக்குரிய கோட்பாட்டை வழிபடுவதற்கும், சத்தியத்தைக் கடைபிடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் எளிதில் வழிநடத்தக் கூடும்—இது ஜனங்களைத் தவறாக வழிநடத்துவது இல்லையா? தொடர்ந்து இப்படிச் செய்வது, ஜனங்களைக் கட்டுப்படுத்தி சிக்க வைக்கும் எண்ணற்ற வெற்றுக் கோட்பாடுகளையும் விதிகளையும் தோற்றுவிக்கும்; அது உண்மையிலேயே இழிவானதாகும். எனவே உண்மையை அதிகமாகச் சொல்லுங்கள், உண்மையிலேயே இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேசுங்கள், யதார்த்தமான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சத்தியத்தைத் தேட அதிக நேரம் செலவிடுங்கள்; இதுதான் மிக முக்கியமானது. சத்தியத்தைக் கடைபிடிக்கக் கற்றுக்கொள்வதற்குத் தாமதிக்க வேண்டாம்: இதுவே யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதையாகும். மற்றவர்களின் அனுபவத்தையும் அறிவையும் உங்கள் சொந்தச் சொத்தாக எடுத்துக் கொண்டு, மற்றவர்கள் போற்றும் வகையில் அதைப் பற்றிக்கொள்ள வேண்டாம். ஜீவனுக்கான உன் சொந்தப் பிரவேசத்தை நீ பெற்றிருக்க வேண்டும். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும் தேவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் மட்டுமே ஜீவ பிரவேசத்தை நீ பெற்றிருப்பாய். ஒவ்வொரு நபரும் கடைப்பிடித்துக் கவனம் செலுத்த வேண்டியது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

உன்னோடு ஐக்கியப்பட்டிருத்தல் என்பது, ஜனங்கள் கைக்கொள்ள ஒருபாதையை வழங்க முடியுமென்றால், அது நீ கொண்டுள்ள யதார்த்தத்திற்கு இன்னும் அதிக மதிப்பைச் சேர்க்கிறது. நீ என்ன சொன்னாலும், நீ ஜனங்களை நடைமுறைபடுத்துகிறவர்களாக்க வேண்டும், மேலும் அவர்கள் பின்பற்றக்கூடிய ஒரு பாதையை அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்களுக்கு அறிவைக்கொண்டிருத்தல் மாத்திரம் போதும் என்றிருக்க அனுமதிக்காதீர்கள். பின்பற்ற ஒருபாதை இருப்பது அதைவிட முக்கியமானதாகும். ஜனங்கள் தேவனை நம்புவதற்கு, அவர்கள் தேவனுடைய கிரியையில் தேவனால் நடத்தப்படும் பாதையில் நடக்க வேண்டும். அதாவது, பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் நடக்கும் செயல்முறையே தேவனில் நம்பிக்கை கொள்ளும் செயல்முறையாக உள்ளது. அதன்படி, நீங்கள் நடக்கக்கூடிய ஒரு பாதையைக் கொண்டிருக்க வேண்டும், என்ன நேர்ந்தாலும், தேவனால் பூரணப்படுத்தப்பட்ட பாதையில் நீங்கள் அடிவைத்தாக வேண்டும். மிகவும் பின்னாக வீழ்ந்துவிட வேண்டாம், பல்வேறு காரியங்களில் உங்களைப் பற்றி கவலை கொண்டிருக்க வேண்டாம். குறுக்கீடுகளை ஏற்படுத்தாமல் நீங்கள் தேவன் வழிநடத்துகிற பாதையில் நடந்தால் மட்டுமே, நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெறவும் நுழைவின் பாதையை உடமையாகக் கொண்டிருக்கவும் முடியும். இது மாத்திரமே தேவனுடைய விருப்பங்களுக்கு ஏற்றவகையில் இருப்பதாகவும் மனிதகுலத்திற்குக் கடமையை நிறைவேற்றுவதாகவும் எண்ணக்கூடியதாக உள்ளது. இந்தப் பிரவாகத்தில் ஒரு தனிநபராக, ஒவ்வொரு நபரும் தங்கள் கடமையைச் சரியாக நிறைவேற்ற வேண்டும், ஜனங்கள் எதைச் செய்யவேண்டுமோ அதையே அதிகமாகச் செய்ய வேண்டும், சுயவிருப்பத்தின்படி செயல்படக்கூடாது. ஊழியம் செய்கிறவர்கள் தங்கள் வார்த்தைகளைத் தெளிவுபடுத்த வேண்டும், பின்பற்றும் மக்கள் கஷ்டங்களைத் தாங்குவதற்கும் கீழ்ப்படிவதற்கும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும், மேலும் அனைவரும் தங்கள் இடத்திலேயே இருக்க வேண்டும், ஆனால் வரிசையில் இருந்து வெளியேறக்கூடாது. ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் அவர்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும், எந்தச் செயல்பாட்டை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் பாதையில் செல்லுங்கள்; தடம்மாறிப் போகாதீர்கள் அல்லது தவறாகப் போகாதீர்கள். இன்றைய வேலையை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டியது என்னவென்றால், இன்றைய கிரியைக்கான வழிமுறையில் பிரவேசித்தல் என்பதேயாகும். இதுவே நீங்கள் பிரவேசிக்க வேண்டிய முதல் விஷயமாக உள்ளது. மற்ற விஷயங்களில் இனிமேலும் வார்த்தைகளை வீணாக்காதீர்கள். தேவனுடைய வீட்டின் இன்றைய ஊழியத்தைச் செய்தல் என்பது உங்கள் பொறுப்பாக உள்ளது, இன்றைய கிரியையின் செயல்முறைக்குள் பிரவேசித்தல் என்பது உங்கள் கடமையாக உள்ளது, மற்றும் இன்றைய சத்தியத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது உங்கள் பாரமாக உள்ளது.

அடிக்குறிப்பு:

அ. பிரதமரின் ஆவி: பரந்த மனப்பான்மை மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தரமான சீன வழக்குச்சொல்.

முந்தைய: தேவனுடனான உனது உறவு எப்படி உள்ளது?

அடுத்த: கற்பனைகளைக் கைக்கொள்ளுதலும் சத்தியத்தைக் கடைப்பிடித்தலும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக