சபை வாழ்க்கை மற்றும் யதார்த்த வாழ்க்கையை விவாதித்தல்
ஜனங்கள் சபைக்குள்ளான வாழ்க்கையில் மட்டுமே அவர்கள் மாற்றம் அடைய முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் சபை வாழ்க்கையில் இல்லை என்றால், யதார்த்த வாழ்க்கையில் மாற்றத்தை அடைய முடியாது என்பது போல, தாங்கள் மாற்றம் அடைய முடியவில்லை என்று நினைக்கிறார்கள். இதில் உள்ள சிக்கலை உங்களால்பார்க்க முடிகிறதா? தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டுவருவது பற்றி நான் முன்பு விவாதித்திருக்கிறேன்; தேவனை நம்புபவர்களுக்கு, இது தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிப்பதற்கான பாதை. உண்மையில், சபை வாழ்க்கை என்பது ஜனங்களை பூரணமாக்குவதற்கான ஒரு வரையறுக்கப்பட்ட வழி மட்டுமே. ஜனங்களைப் பூரணப்படுத்துவதற்கான முதன்மைச் சூழல் யதார்த்த வாழ்க்கையாகத்தான் இன்னும் காணப்படுகிறது. இதுதான் நான் பேசிய உண்மையான நடைமுறை மற்றும் உண்மையான பயிற்சி. இது இயல்பான மனித வாழ்க்கையை அடையவும், அன்றாட வாழ்க்கையின் போது ஓர் உண்மையான நபரின் தோற்றத்தை வெளிப்படுத்தவும் ஜனங்களை அனுமதிக்கிறது. ஒருபுறம், ஒருவரின் சொந்தக் கல்வி நிலையை மேம்படுத்தவும், தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவும், அதை ஏற்றுக்கொள்ளும் திறனை அடையவும் ஒருவர் படிக்க வேண்டும். மறுபுறம், சாதாரண மனிதகுலத்தின் நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவை அடைவதற்கு ஒரு மனிதனாக வாழத் தேவையான அடிப்படை அறிவை ஒருவர் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் இதைப் பொறுத்தவரையில் ஜனங்கள் கிட்டத்தட்ட குறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதிலும் அதிகமாக, சபை வாழ்க்கையின் மூலம் தேவனுடைய வார்த்தைகளை ருசிக்க ஒருவர் முன்வர வேண்டும், மேலும் படிப்படியாக சத்தியத்தைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெற வேண்டும்.
தேவனை விசுவாசிக்கும்போது, ஒருவர் தேவனை யதார்த்த வாழ்க்கைக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஏன் கூறப்படுகிறது? இது ஜனங்களை மாற்றும் சபை வாழ்க்கை மட்டுமல்ல; மிக முக்கியமாக, ஜனங்கள் நிஜ வாழ்க்கையில் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். நிஜ வாழ்க்கையில் பல விஷயங்களைக் கடைப்பிடிப்பதைப் புறக்கணிக்கும்போது மற்றும் அவற்றுக்குள் நீங்கள் பிரவேசிப்பதைப் புறக்கணிக்கும்போது, உங்கள் ஆவிக்குரிய நிலை மற்றும் ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி நீங்கள் எப்போதும் பேசுவீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் எழுதினீர்கள், ஒவ்வொரு நாளும் கவனித்தீர்கள், ஒவ்வொரு நாளும் வாசித்தீர்கள். நீங்கள் சமைத்துக்கொண்டிருக்கும்போது கூட ஜெபம் செய்தீர்கள்: “தேவனே! நீர் எனக்குள் என் ஜீவனாக மாறுவீராக. இருப்பினும் இன்று கடந்துபோகிறது, தயவுசெய்து என்னை ஆசீர்வதித்து எனக்கு அறிவூட்டுவீராக. இன்று நீர் எதைப் பற்றி எனக்கு அறிவூட்டினாலும், தயவுசெய்து, இந்த தருணத்தில் அதைப் புரிந்துகொள்ள என்னை அனுமதிக்கவும், இதனால் உம்முடைய வார்த்தைகள் என் ஜீவனாக செயல்படக்கூடும்.” நீங்கள் இரவு உணவை சாப்பிடும்போது கூட ஜெபம் செய்தீர்கள்: “தேவனே! இந்த உணவை நீர் எங்களுக்கு வழங்கியுள்ளீர். நீர் எங்களை ஆசீர்வதிப்பீராக. ஆமென்! நாங்கள் உம்மால் வாழ்வோமாக. நீர் எங்களுடன் இருப்பீராக. ஆமென்!” நீங்கள் இரவு உணவை முடித்துவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த போது, நீங்கள் சத்தம் போட ஆரம்பித்தீர்கள்: “ஓ, தேவனே, நான் இந்தக் கிண்ணம். நாங்கள் சாத்தானால் அசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம், பயன்படுத்தப்பட்ட கிண்ணங்களைப் போல காணப்படுகிறோம், அவைகள் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட வேண்டும். நீரே தண்ணீர், உம்முடைய வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு வழங்கப்படுகிற ஜீவ தண்ணீர்.” நீங்கள் அதை அறிவதற்கு முன்பு, அது படுக்கைக்கு செல்லும் நேரமாகிவிட்டது, நீங்கள் மீண்டும் புலம்ப ஆரம்பித்தீர்கள்: “தேவனே! நீர் என்னை ஆசீர்வதித்து நாள் முழுவதும் என்னை வழிநடத்தியுள்ளீர். நான் உமக்கு உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். …” இப்படித்தான் நீங்கள் உங்கள் நாளைக் கழித்தீர்கள், பின்னர் நீங்கள் கண்ணயர்ந்தீர்கள். பெரும்பாலான ஜனங்கள் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் வாழ்கிறார்கள், இப்போது கூட அவர்கள் உண்மையான பிரவேசித்தலைப் புறக்கணிக்கிறார்கள், தங்கள் ஜெபங்களில் உதட்டளவில் சேவையைச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். இது அவர்களின் முந்தைய வாழ்க்கை—அவர்களின் பழைய வாழ்க்கை. பெரும்பாலானவர்கள் இது போல காணப்படுகிறார்கள்; உண்மையிலேயே அவர்கள் போதுமான பயிற்சி இல்லாதவர்கள்; மேலும் அவர்கள் மிகச் சில உண்மையான மாற்றங்களுக்கு உட்படுகின்றனர். அவர்கள் தங்கள் ஜெபங்களில் உதட்டளவில் மட்டுமே சேவை செய்கிறார்கள். தேவனிடம் தங்கள் வார்த்தைகளால் மட்டும் நெருங்கி வருகிறார்கள்; ஆனால் அவர்களின் புரிதலில் ஆழம் இல்லை. உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கான எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். உங்கள் வீடு அலங்கோலமாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்; எனவே நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபிக்கிறீர்கள்: “தேவனே! சாத்தான் என்மீது கொண்டுவந்த சீர்கேட்டைப் பார்ப்பீராக. நான் இந்த வீட்டைப் போலவே அழுக்காக இருக்கிறேன். ஓ தேவனே! நான் உண்மையிலேயே உம்மைத் துதித்து நன்றி கூறுகிறேன். உமது இரட்சிப்பும் போதனையும் இல்லாமல் இந்த உண்மையை நான் உணர்ந்திருக்க மாட்டேன்.” நீங்கள் அங்கேயே உட்கார்ந்து, பிதற்றுகிறீர்கள், நீண்ட நேரம் ஜெபிக்கிறீர்கள்; பின்னர் நீங்கள் பிதற்றுகிற ஒரு வயதான பெண்மணியைப் போல எதுவும் நடக்கவில்லை என்பது போல் செயல்படுகிறீர்கள். உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை யதார்த்தத்திற்குள்ளாக்கும் உண்மையான பிரவேசத்தில் இல்லாமல், பல மேலோட்டமான நடைமுறைகளுடன் நீங்கள் கடந்து செல்கிறீர்கள்! உண்மையான பயிற்சியில் பிரவேசிப்பது என்பது ஜனங்களின் உண்மையான வாழ்க்கையையும் அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் உள்ளடக்கியது. அவர்கள் மாறும் ஒரே வழி இதுதான். யதார்த்த வாழ்க்கை இல்லாமல், ஜனங்களை மாற்ற முடியாது. ஜெபத்தில் உதட்டளவில் சேவை செய்வதின் பயன் என்ன? மனுஷ இயல்பைப் புரிந்து கொள்ளாமல், இவை அனைத்தும் நேரத்தை வீணடிப்பதாகும்; பயிற்சிக்கான பாதை இல்லாமல் எல்லாமே வீண் முயற்சியாகும்! இயல்பான ஜெபம், ஜனங்கள் தங்கள் இயல்பான நிலையை நிலைநிறுத்திக் கொள்ள உதவும். ஆனால் அவர்களால் முழுமையாக மாற முடியாது. மனுஷனின் சுயநீதி, இறுமாப்பு, கர்வம், தற்பெருமை, மனுஷனின் சீர்கெட்ட மனப்பான்மை ஆகியவற்றை அறிதல்—இவற்றைப் பற்றிய அறிவு ஜெபத்தின் மூலம் வருவதில்லை. அவை தேவனுடைய வார்த்தைகளை ருசித்துப் பார்ப்பதன் மூலம் கண்டறியப்படுகின்றன. மேலும் அவை, யதார்த்த வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரால் போதிக்கப்படுவதன் மூலம் அறியப்படுகின்றன. இப்போதெல்லாம் ஜனங்கள் அனைவரும் நன்றாக பேசக் கூடியவர்கள், மேலும் அவர்கள் மிகப் பெரிய பிரசங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள்—யுகயுகமாக மற்றவைகளை விட உயர்ந்தவைகள்—ஆனாலும் உண்மையில், அதில் மிகக் குறைந்த அளவே அவர்களின் யதார்த்த வாழ்க்கையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கூற வேண்டுமானால், அவர்களின் யதார்த்த வாழ்க்கையில் தேவன் இல்லை; மாற்றத்திற்குப் பிறகு, ஒரு புதிய நபரின் வாழ்க்கையை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் யதார்த்த வாழ்க்கையில் சத்தியத்தை வெளிப்படுத்துவதில்லை; தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டு வருவதில்லை. அவர்கள் நரகத்தின் பிள்ளைகளைப் போல வாழ்கிறார்கள். இது வெளிப்படையான விலகல் அல்லவா?
ஒரு சாதாரண மனுஷனின் சாயலை மீட்டெடுப்பதற்காக, அதாவது சாதாரண மனிதத் தன்மையை அடைவதற்கு, ஜனங்கள் தங்கள் வார்த்தைகளால் மட்டும் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. அவ்வாறு செய்வதால் அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவிக்கிறார்கள். மேலும் அது அவர்களின் பிரவேசம் அல்லது மாற்றத்திற்கு பலனளிக்காது. எனவே, மாற்றத்தை அடைய, ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அவர்கள் மெதுவாகப் பிரவேசிக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகத் தேட வேண்டும், ஆராய வேண்டும், நேர்மறையில் இருந்து பிரவேசிக்க வேண்டும், சத்தியத்தின் நடைமுறை வாழ்க்கையை வாழ வேண்டும்; அதாவது ஒரு புனித வாழ்க்கை. அதன்பிறகு, யதார்த்த விஷயங்கள், யதார்த்த நிகழ்வுகள் மற்றும் யதார்த்த சூழல்கள் மக்களுக்கு நடைமுறைப் பயிற்சி பெற அனுமதிக்கின்றன. ஜனங்கள் எந்தவித உதட்டளவிளான சேவையையும் செய்யத் தேவையில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் யதார்த்தமான சூழலில் பயிற்சி பெற வேண்டும். ஜனங்கள் முதலில் அவர்கள் திறமையில் பெலவீனமுள்ளவர்கள் என்பதை உணர்ந்து, பின்னர் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைச் சாதாரணமாகப் புசித்து, குடிக்கிறார்கள். மேலும் சாதாரணமாகப் பிரவேசித்து பயிற்சி செய்கிறார்கள்; இந்த வழியில் மட்டுமே அவர்கள் யதார்த்தத்தைப் பெற முடியும். மேலும் பிரவேசம் இன்னும் விரைவாக நிகழக்கூடும். ஜனங்களை மாற்றுவதற்கு சில நடைமுறைகள் இருக்க வேண்டும்; அவர்கள் யதார்த்தமான விஷயங்கள், யதார்த்தமான நிகழ்வுகள் மற்றும் யதார்த்தமான சூழல்களில் பயிற்சி செய்ய வேண்டும். சபை வாழ்க்கையை மட்டும் நம்பி ஒருவர் உண்மையான பயிற்சியைப் பெற முடியுமா? இந்த வழியில் ஜனங்கள் யதார்த்தத்தில் பிரவேசிக்க முடியுமா? இல்லை! ஜனங்கள் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க முடியாவிட்டால், அவர்களுடைய பழைய வாழ்க்கை முறையையும், விஷயங்களைச் செய்யும் வழிகளையும் மாற்ற முடியாது. இது முற்றிலும் ஜனங்களின் சோம்பேறித்தனம் மற்றும் அதிக அளவிலான சார்புநிலை காரணமாக இல்லை; மாறாக, ஜனங்கள் வாழ்வதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு, மேலும், ஒரு சாதாரண மனுஷனின் சாயலைப் பற்றிய தேவனுடைய தரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தவொரு புரிந்துகொள்ளுதலும் இல்லை என்பதையும் காட்டுகிறது. கடந்த காலங்களில், ஜனங்கள் எப்போதும் பேசிக் கொண்டிருந்தார்கள், உரையாடினார்கள், எடுத்துரைத்தார்கள்—அவர்கள் “சொற்பொழிவாளர்களாக” கூட மாறினர்—ஆனால் அவர்களில் எவரும் தங்கள் வாழ்க்கையில் மனநிலை மாற்றத்தைத் தேடவில்லை; மாறாக, அவர்கள் கண்மூடித்தனமாக ஆழ்ந்த கோட்பாடுகளைத் தேடினார்கள். ஆகவே, இன்றைய ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் தேவன் மீதான இந்த மத நம்பிக்கைப் பாணியை மாற்ற வேண்டும். ஒரு நிகழ்வு, ஒரு விஷயம், ஒரு நபர் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்கள் நடைமுறையில் பிரவேசிக்க வேண்டும். அவர்கள் அதைக் குறிக்கோளாகக் கொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் விளைவுகளைப் பெற முடியும். ஜனங்களின் மாற்றம் அவர்களின் சாராம்சத்தின் மாற்றத்துடன் தொடங்குகிறது. இந்த வேலை ஜனங்களின் சாராம்சம், அவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சோம்பல், சார்பு மற்றும் அடிமைத்தனத்தை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
சபை வாழ்க்கை சில பகுதிகளில் விளைவுகளைத் தரக்கூடும் என்றாலும், யதார்த்த வாழ்க்கையே ஜனங்களை மாற்றும் என்பதே முக்கியம். ஒருவரின் பழைய சுபாவத்தை யதார்த்த வாழ்க்கை இல்லாமல் மாற்ற முடியாது. உதாரணமாகக், கிருபையின் காலத்தில் இயேசுவின் கிரியையை எடுத்துக் கொள்வோம். இயேசு முந்தைய நியாயப்பிரமாணங்களை ஒழித்து, புதிய காலத்துக் கட்டளைகளை நிறுவியபோது, யதார்த்த வாழ்க்கையிலிருந்து உண்மையான உதாரணங்களைப் பயன்படுத்திப் பேசினார். இயேசு தம்முடைய சீஷர்களை ஓர் ஓய்வு நாளில் கோதுமை வயல் வழியாக அழைத்துச் செல்லும்போது, அவருடைய சீஷர்கள் பசியோடு, சாப்பிட தானியக் கதிர்களைப் பறித்தனர். இதைப் பார்த்த பரிசேயர்கள், அவர்கள் ஓய்வுநாளை ஆசரிக்கவில்லை என்று சொன்னார்கள். ஓய்வு நாளின் போது எந்த வேலையும் செய்யக்கூடாது என்றும், ஓய்வு நாளின் போது குழிக்குள் விழுந்த கன்றுகளைக் காப்பாற்ற ஜனங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினர். புதிய காலத்தின் கட்டளைகளைப் படிப்படியாக அறிவிக்க இந்தச் சம்பவங்களை இயேசு மேற்கோள் காட்டினார். அந்தச் சமயத்தில், அவர் புரிந்துகொள்ளவும் மாறவும் ஜனங்களுக்கு உதவக்கூடிய பல நடைமுறை விஷயங்களைப் பயன்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் தம்முடைய கிரியையைச் செய்வதற்கான கொள்கை இதுதான், ஜனங்களை மாற்றக்கூடிய ஒரே வழி இதுவே ஆகும். நடைமுறை விஷயங்கள் இல்லாமல், ஜனங்கள் ஒரு தத்துவார்த்த மற்றும் அறிவார்ந்த புரிதலை மட்டுமே பெற முடியும்—இது மாறுவதற்கான சிறந்த வழி அல்ல. பயிற்சியின் மூலம் ஒருவர் ஞானத்தையும் நுண்ணறிவையும் எவ்வாறு பெறுகிறார்? ஜனங்கள் கவனித்தல், வாசித்தல் மற்றும் தங்கள் அறிவில் முன்னேறுதல் மூலம் ஞானத்தையும் நுண்ணறிவையும் பெற முடியுமா? அவ்வாறு எப்படி இருக்க முடியும்? யதார்த்த வாழ்க்கையில் ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும்! ஆகவே, ஒருவர் பயிற்சி பெற வேண்டும். மேலும் ஒருவர் யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலகக்கூடாது. ஜனங்கள் வெவ்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும், மற்றும் பல்வேறு அம்சங்களில் பிரவேசிக்க வேண்டும்: கல்வி நிலை, வெளிப்படுத்தும் தன்மை, விஷயங்களைக் காணும் திறன், பகுத்தறிதல், தேவனுடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் திறன், பொது அறிவு மற்றும் மனிதத் தன்மையின் விதிகள், மற்றும் மனிதத் தன்மை தொடர்பான பிற விஷயங்களில் ஜனங்கள் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும். புரிதலைப் பெற்றுக்கொண்ட பிறகு, ஜனங்கள் பிரவேசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும், அப்போதுதான் மாற்றம் அடைய முடியும். யாராவது புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருந்தாலும், அவர்கள் நடைமுறையைப் புறக்கணித்தால், மாற்றம் எவ்வாறு நிகழும்? தற்போது, ஜனங்கள் அதிகம் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்கள் யதார்த்தமாக வாழவில்லை. இவ்வாறு, தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அத்தியாவசியமான புரிதலை அவர்கள் கொண்டிருக்கவில்லை. நீ ஓரளவு மட்டுமே போதிக்கப்பட்டிருக்கிறாய்; நீங்கள் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து ஒரு சிறிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறீர்கள்; ஆனாலும் உங்களுக்கு யதார்த்த வாழ்க்கையில் எவ்வித பிரவேசமும் இல்லை—அல்லது நீ பிரவேசிப்பதைப் பற்றி அக்கறை கூட கொள்ளாது இருந்திருக்கலாம். இப்படி, உன்னுடைய மாற்றம் குறைவுபட்டிருக்கிறது. இவ்வளவு காலம் கழித்து, ஜனங்கள் அதிகம் புரிந்துகொள்கிறார்கள். அவர்களது கோட்பாடுகளைப் பற்றிய அவர்களின் அறிவைப் பற்றி நிறைய பேச முடிகிறது. ஆனால் அவர்களின் வெளிப்புற மனநிலை அப்படியே இருக்கிறது; அவர்களின் அசல் பண்பும் அப்படியே இருக்கிறது; சிறிதளவும் முன்னேறவில்லை. இப்படி இருந்தால், நீ இறுதியாக எப்பொழுது தான் பிரவேசிப்பாய்?
சபை வாழ்க்கை என்பது தேவனுடைய வார்த்தைகளை ருசிக்க ஜனங்கள் கூடும் ஒரு வகையான வாழ்க்கை மட்டுமே; மேலும் இது ஒருவரது வாழ்க்கையின் ஒரு சிறிய துணுக்கு மட்டுமே. ஜனங்களின் யதார்த்த வாழ்க்கையும் அவர்களின் சபை வாழ்க்கையைப் போலவே இருக்க முடியுமானால், சாதாரண ஆவிக்குரிய வாழ்க்கை உட்பட, பொதுவாக தேவனின் வார்த்தைகளை ருசிப்பது, ஜெபிப்பது மற்றும் தேவனுடன் நெருக்கமாக இருப்பது, தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்தும் கொண்டு செல்லப்படும் ஒரு யதார்த்த வாழ்க்கையை வாழ்வது, எல்லாமே சத்தியத்திற்கு ஏற்றபடி நடக்கிற யதார்த்த வாழ்க்கை வாழ்வது; ஒரு யதார்த்த வாழ்க்கையை வாழ்தல் என்பது ஜெபத்தைப் பயிற்சி செய்தல், தேவனுக்கு முன்பாக அமைதியாக இருக்கப் பயிற்சி செய்தல், கீர்த்தனைப் பாடல்களைப் பாடுவதற்கும் நடனம் ஆடுவதற்கும் பயிற்சி செய்தல்—அப்படியானால், இதுதான் தேவனுடைய வார்த்தைகளின் ஜீவனுக்குள் கொண்டு வரும் ஒரு வாழ்க்கை. பெரும்பாலான ஜனங்கள் தங்கள் சபை வாழ்க்கையின் பல மணிநேரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். அந்த மணிநேரங்களுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையை “கவனித்துக் கொள்ளாமல்”, அதில் அவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லாதது போல் இருக்கிறார்கள். தேவனின் வார்த்தைகளைப் புசிக்கும்போது, பருகும்போது, கீர்த்தனைப் பாடல்களைப் பாடும்போது, அல்லது ஜெபிக்கும்போது மட்டுமே பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் பிரவேசிக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அந்த நேரங்களுக்குப் பின்னர் தங்கள் பழைய நிலைக்குத் திரும்புகிறார்கள். இப்படி வாழ்வதால் ஜனங்களை மாற்ற முடியாது. தேவனை அறிந்து கொள்ள வைப்பது மிகக் குறைந்த அளவில் இருக்கும். தேவனை நம்புவதில், ஜனங்கள் தங்கள் மனநிலையில் மாற்றத்தை விரும்பினால், அவர்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து தங்களை விலக்கி வைக்கக்கூடாது. யதார்த்த வாழ்க்கையில், நீ உன்னை அறிந்து கொள்ள வேண்டும், உன்னை வெறுக்க வேண்டும், சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அதேபோல், நீ படிப்படியாக மாற்றத்தை அடைவதற்கு முன்னர், எல்லாவற்றிலும் கொள்கைகள், பொது அறிவு மற்றும் சுய நடத்தை விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ தத்துவார்த்த அறிவில் மட்டுமே கவனம் செலுத்தி, யதார்த்த வாழ்க்கையில் ஆழமாகச் செல்லாமல், யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்காமல், மதச் சடங்குகளில் மட்டுமே வாழ்ந்தால், நீ ஒருபோதும் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்கமாட்டாய். உன்னை, சத்தியத்தை, அல்லது தேவனை நீ ஒருபோதும் அறியமாட்டாய்; நீ என்றென்றும் குருடனாயும் அறியாமையிலுள்ளவனாயும் இருப்பாய். ஜனங்களை இரட்சிக்கும் தேவனுடைய கிரியை, குறுகிய காலத்திற்குப் பிறகு சாதாரண மனுஷ வாழ்க்கையை வாழ அனுமதிப்பதற்காக அல்ல; அவர்களின் தவறான கருத்துகளையும் கோட்பாடுகளையும் மாற்றுவதற்காகவும் அல்ல. மாறாக, அவருடைய நோக்கம் ஜனங்களின் பழைய மனநிலையை மாற்றுவது, அவர்களின் பழைய வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றுவது, மற்றும் அவர்களின் காலாவதியான சிந்தனை செய்யும் வழிகள் மற்றும் மனதின் நோக்கம் அனைத்தையும் மாற்றுவதாகும். சபை வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவது ஜனங்களின் பழைய வாழ்க்கைப் பழக்கவழக்கங்களை மாற்றாது, அல்லது நீண்ட காலமாக அவர்கள் வாழ்ந்த பழைய வழிகளை மாற்றாது. எதுவாக இருந்தாலும், ஜனங்கள் யதார்த்த வாழ்க்கையிலிருந்து விலக்கப்படக்கூடாது. சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல், யதார்த்த வாழ்க்கையிலும் ஜனங்கள் சாதாரண மனித தன்மையுடன் வாழ வேண்டும் என்று தேவன் கேட்கிறார்; சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் யதார்த்த வாழ்க்கையிலும் அவர்கள் சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்கள்; சபை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் யதார்த்த வாழ்க்கையிலும் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை நிறைவேற்றுகிறார்கள். யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க, ஒருவர் எல்லாவற்றையும் யதார்த்த வாழ்க்கையை நோக்கித் திருப்ப வேண்டும். தேவனை நம்புவதால், யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிப்பதின் மூலம் ஜனங்கள் தங்களை அறிந்து கொள்ள முடியாவிட்டால் யதார்த்த வாழ்க்கையில் சாதாரண மனித தன்மையுடன் வாழ முடியாவிட்டால், அப்பொழுது, அவர்கள் தோல்வியுற்றவர்களாக மாறுவார்கள். தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்கள் அனைவரும் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க முடியாதவர்கள். அவர்கள் அனைவரும் மனிதத் தன்மையைப் பற்றி பேசும் ஜனங்கள். ஆனால் பிசாசின் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் அனைவரும் சத்தியத்தைப் பேசுகிற, ஆனால் அதற்குப் பதிலாகக் கோட்பாடுகளில் வாழ்கிற ஜனங்கள். யதார்த்த வாழ்க்கையில் சத்தியத்தைக்கொண்டு வாழ முடியாதவர்கள் தேவனை விசுவாசிப்பவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் அவரால் வெறுக்கப்படுகிறார்கள் மற்றும் நிராகரிக்கப்படுகிறார்கள். நீ யதார்த்த வாழ்க்கையில் உன்னுடைய பிரவேசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களது சொந்தக் குறைபாடுகள், கீழ்ப்படியாமை மற்றும் அறியாமை ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும்; மேலும் உங்கள் விநோதமான மனிதத் தன்மையையும் பலவீனங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், உன் அறிவு உன்னுடைய யதார்த்த நிலை மற்றும் சிரமங்களுடன் ஒன்றிணைக்கப்படும். இந்த வகையான அறிவு மட்டுமே உண்மையானது மற்றும் உன் சொந்த நிலையை உண்மையாகப் புரிந்துகொள்ளவும், மனநிலையில் மாற்றத்தை அடையவும் உன்னை அனுமதிக்கும்.
இப்போது ஜனங்களைப் பூரணப்படுத்துவது முறையாக ஆரம்பமாகிவிட்டது. நீங்கள் யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்க வேண்டும். எனவே, மாற்றத்தை அடைய, நீங்கள் யதார்த்த வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதிலிருந்து தொடங்க வேண்டும். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக மாற வேண்டும். நீ சாதாரண மனுஷ வாழ்க்கையைத் தவிர்த்து, ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி பேசுவதால் மட்டுமே, விஷயங்கள் வறண்டு, பொருளற்றுப் போகின்றன; அவை நம்பத்தகாதவையாகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், ஜனங்கள் எவ்வாறு மாற முடியும்? உண்மையான அனுபவத்திற்குள் பிரவேசிப்பதற்கான ஓர் அடித்தளத்தை அமைப்பதற்காக, நீ பயிற்சி பெற யதார்த்த வாழ்க்கையில் பிரவேசிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறாய். ஜனங்கள் செய்ய வேண்டியவற்றின் ஓர் அம்சம் இது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை முக்கியமாக வழிகாட்டுவதாகும். மீதமுள்ளவை ஜனங்களின் நடைமுறை மற்றும் பிரவேசித்தலைப் பொறுத்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு பாதைகள் மூலம் யதார்த்த வாழ்க்கையின் பிரவேசத்தை அடையலாம். அதாவது அவர்கள் தேவனை யதார்த்த வாழ்க்கையில் கொண்டு வர முடியும். மேலும் உண்மையான சாதாரண மனிதத் தன்மையுடன் வாழ முடியும். அர்த்தமுள்ள ஒரு வகையான வாழ்க்கை இதுதான்!