அத்தியாயம் 4

தேவனுடைய வாக்கியங்களின் கடைசி அத்தியாயத்தில், தேவன் தமது ஜனங்களிடம் தம்முடைய மிக உயர்ந்த கோரிக்கைகளைப் பற்றி ஒருமுறை பேசியவுடன்—தமது நிர்வாகத் திட்டத்தின் இந்தக் கட்டத்தில் ஜனங்களுக்குத் தமது சித்தத்தைச் சொன்னவுடன், எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாறுதலடைந்த பிறகு, எல்லா ஜனங்களையும் தங்கள் கவனச் சிதறலையும், சுய கட்டுப்பாட்டை இழப்பதையும் தடுப்பதற்காக—இறுதியில் அவர் தமது வார்த்தைகளைச் சிந்திக்கவும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற அவர்களின் மனதைச் செலுத்தவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார். ஜனங்களின் நிலைமைகள் நேர்மறையானதாக இருக்கும்போது, தேவன் உடனடியாகப் பிரச்சினையின் மறுபக்கத்தைப் பற்றி அவர்களிடம் கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார். ஜனங்கள் கண்டுபிடிக்கக் கடினமாக இருக்கும் கேள்விகளை அடுக்கடுக்காக அவர் கேட்கிறார்: “என் மீதான உங்கள் அன்பு தூய்மையற்றதாக இருந்ததா? என்னிடத்தில் உங்கள் விசுவாசம் தூய்மையானதாகவும் முழு மனதுடனும் இருந்ததா? என்னைப் பற்றிய உங்கள் அறிவு உண்மையாக இருந்ததா? உங்கள் இருதயங்களுக்குள் நான் எவ்வளவு இடத்தைப் பிடித்திருந்தேன்?” மற்றும் பல கேள்விகள் உள்ளன. இந்தப் பத்தியின் முதல் பாதியில், இரண்டு கடிந்துகொள்ளுதல்களைத் தவிர, மீதி முழுவதும் கேள்விகளை உள்ளடக்கியிருக்கின்றன. குறிப்பாக, “எனது வார்த்தைகள் உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா?” என்ற ஒரு கேள்வி மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இது உண்மையாகவே ஜனங்களின் இருதயத்தின் ஆழத்தில் உள்ள மிக இரகசியமான விஷயங்களைத் தெளிவாக்குகிறது, தங்களையும் அறியாமலேயே அவர்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளச் செய்கிறது: “தேவன் மீதான என் அன்பில் நான் உண்மையாகவே விசுவாசமுள்ளவனாய் இருக்கிறேனா?” அவர்களின் இருதயங்களில், ஜனங்கள் அறியாமலேயே ஊழியம் செய்வதில் தங்களின் கடந்தகால அனுபவங்களை நினைவுகூறுகிறார்கள்: அவர்கள் சுய மன்னிப்பு, சுய நீதி, சுய முக்கியத்துவம், சுய திருப்தி, மனநிறைவு மற்றும் பெருமை ஆகியவற்றால் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். வலையில் சிக்கிய பெரிய மீனைப் போல அவர்கள் இருந்தார்கள்—வலையில் விழுந்த பிறகு, தங்களை விடுவித்துக்கொள்வது அவர்களுக்கு எளிதாக இருக்கவில்லை. மேலும், அவர்கள் அடிக்கடி கட்டுப்பாடற்றவர்களாக இருந்தனர், அவர்கள் அடிக்கடி தேவனுடைய சாதாரண மனிதத்தன்மையை மறுதலித்தனர், மேலும் அவர்கள் தாங்கள் செய்த எல்லாவற்றிலும் தங்களை முதன்மைப்படுத்தினர். “ஊழியம் செய்பவர்கள்” என்று அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் புதிதாகப் பிறந்த புலிக்குட்டியைப் போல, வலிமை நிறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் வாழ்க்கையின் மீது தங்கள் கவனத்தை ஓரளவிற்குச் செலுத்தியிருந்தாலும், சில சமயங்களில் அவர்கள் மனம்போன போக்கில் மட்டுமே கடந்து சென்றனர்; அடிமைகளைப் போல, அவர்கள் தேவனிடம் அலட்சியமாக நடந்து கொண்டனர். ஊழியம் செய்பவர்களாக வெளிப்பட்ட காலத்தில், அவர்கள் எதிர்மறையாக இருந்தார்கள், அவர்கள் பின்வாங்கினர், அவர்கள் துக்கத்தால் நிரம்பி வழிந்தார்கள், அவர்கள் தேவனைப் பற்றிக் குறைகூறினர், அவர்கள் மனச்சோர்வில் தலை குனிந்தனர், மற்றும் பல உள்ளன. அவர்களின் சொந்த அற்புதமான, மனதைத் தொடும் கதைகளின் ஒவ்வொரு அடியும் அவர்கள் மனதில் நீடித்து நிற்கிறது. தூங்குவது கூட அவர்களுக்குக் கடினமாகிவிடுகிறது, மேலும் அவர்கள் பகலை மயக்கத்தில் கழிக்கிறார்கள். அவர்கள் தப்பிக்க இயலாமல் பாதாளத்தில் விழும்படிக்கு, தேவனால் இரண்டாவது முறையாக புறம்பாக்கப்பட்டதாகத் தெரிகிறது. முதல் பத்தியில் சில கடினமான கேள்விகளை முன்வைப்பதைத் தவிர வேறு எதையும் தேவன் செய்யவில்லை என்றாலும், இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்பதை விட தேவனுடைய நோக்கம் அதிகம் என்பதை அவை காட்டுகின்றன. அவற்றில் இன்னும் விரிவாக விளக்கப்பட வேண்டிய, ஓர் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தேவன் ஒருமுறை, இன்றைய நாள், இன்றைய நாளாகத்தான் இருக்கிறது என்று ஏன் சொன்னார், நேற்றைய தினம் ஏற்கெனவே கடந்துவிட்டதால், கடந்த கால ஏக்கத்திற்கு இடமில்லை, ஆனாலும் இங்கே முதல் வாக்கியத்தில், ஏன் அவர் ஜனங்களிடத்தில் கேள்விகளைக் கேட்டு, கடந்த காலத்தை மீண்டும் சிந்திக்க வைக்கிறார்? இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: ஜனங்கள் கடந்த காலத்தைப் பற்றி ஏக்கம் கொள்ளாமல், கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று தேவன் ஏன் கேட்கிறார்? தேவனுடைய வார்த்தைகளில் தவறு இருக்க முடியுமா? இந்த வார்த்தைகளின் ஆதாரம் தவறாக இருக்க முடியுமா? இயற்கையாகவே, தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்தாதவர்கள் இதுபோன்ற ஆழமான கேள்விகளைக் கேட்க மாட்டார்கள். ஆனால், இப்போதைக்கு இதைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. முதலில், மேலே உள்ள முதல் கேள்வியை—“ஏன்” என்பதை நான் விளக்குகிறேன். நிச்சயமாக, தேவன் வெற்று வார்த்தைகளைப் பேசுவதில்லை என்று கூறியிருப்பது அனைவருக்கும் தெரியும். தேவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் உரைக்கப்பட்டால், அவற்றிற்கு ஒரு நோக்கமும் முக்கியத்துவமும் இருக்கும்—இது கேள்வியின் மையத்தைத் தொடுகிறது. ஜனங்களின் தீய வழிகளையும் மற்றும் அவர்களின் பழைய சுபாவத்தின் கட்டுக்கடங்காத தன்மையையும் மாற்ற இயலாமையே ஜனங்களின் மிகப்பெரிய தோல்வியாகும். எல்லா ஜனங்களும் தங்களைத் தாங்களே இன்னும் முழுமையாகவும், யதார்த்தமாகவும் அறிந்து கொள்ள அனுமதிக்க, அவர்கள் தங்களைப் பற்றி இன்னும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும், தேவனுடைய வார்த்தைகளில் ஒன்று கூட வெறுமையாக இல்லை, மற்றும் தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் வெவ்வேறு நபர்களில் வெவ்வேறு அளவுகளில் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தேவன் முதலில் அவர்களைக் கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறார். கடந்த காலத்தில், தேவன் ஜனங்களுடன் நடந்துகொண்ட விதம் அவர்களுக்கு தேவனைப் பற்றிய ஒரு சிறிய அறிவைக் கொடுத்தது மற்றும் தேவன் மீதான அவர்களின் நேர்மையை இன்னும் கொஞ்சம் இதயப்பூர்வமானதாக மாற்றியது. “தேவன்” என்ற வார்த்தை 0.1 சதவீத ஜனங்களையும் மற்றும் அவர்களின் இருதயங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த அளவுக்குச் சாதித்து, தேவன் ஒரு மகத்தான இரட்சிப்பை செய்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் பயன்படுத்தப்பட்ட மற்றும் சாத்தானால் ஆட்கொள்ளப்பட்ட—தாங்கள் விரும்புகிறபடி செய்யத் துணியாத—ஒரு கூட்ட ஜனங்களிடத்தில் தேவன் இந்த அளவுக்கு சாதித்திருப்பது நியாயமானதுதான். ஏனென்றால், சாத்தானால் ஆட்கொள்ளப்பட்டவர்களின் இருதயத்தின் நூறு சதவிகிதத்தையும் தேவனால் ஆக்கிரமிக்க முடியாது. அடுத்த கட்டத்தின் போது தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவை அதிகரிக்க, தேவன் கடந்த காலத்தில் ஊழியம் செய்பவர்களின் நிலையை இன்றைய தேவனுடைய ஜனங்களுடன் ஒப்பிடுகிறார், இதனால் ஜனங்கள் மிகவும் வெட்கப்படும்படியாக தெளிவான வேறுபாட்டை உருவாக்குகிறார். தேவன் சொன்னது போல், “உங்கள் அவமானத்தை மறைக்க உங்களுக்கு எங்கும் இடமில்லை.”

அப்படியானால், தேவன் வெறுமனே கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை என்று நான் ஏன் சொன்னேன்? ஆரம்பம் முதல் முடிவு வரை கவனமாக வாசித்தால், அது தேவன் எழுப்பிய கேள்விகள் முழுமையாக விளக்கப்படாவிட்டாலும், அவை அனைத்தும் தேவன் மீதான ஜனங்களின் விசுவாசத்தின் அளவையும் தேவனைப் பற்றிய அறிவையும் குறிக்கின்றன என்பதைக் காட்டுகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பரிதாபத்திற்குரியதாகவும், மேலும் அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதற்குக் கடினமாகவும் இருக்கிற, ஜனங்களின் உண்மையான நிலைமைகளை அவைகள் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து, ஜனங்களின் வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதையும், தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானது என்பதையும், அவர் மீதான அவர்களின் விசுவாசம் மிகவும் கறைபடிந்ததாகவும் தூய்மையற்றதாகவும் இருப்பதையும் காணலாம். தேவன் சொன்னது போல், கிட்டத்தட்ட எல்லா ஜனங்களும் கலங்கிய நீரில் மீன்பிடிக்கிறார்கள் மற்றும் எண்ணிக்கைகளை அதிகரிக்க மட்டுமே இருக்கிறார்கள். “நீங்கள் என் ஜனங்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?” என்று தேவன் கூறும்போது, இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், எல்லா ஜனங்களிலும், யாரும் தேவனுடைய ஜனங்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்பதேயாகும். ஆனாலும் அதிக பலனை அடைய, தேவன் கேள்விகளைக் கேட்கும் முறையைப் பயன்படுத்துகிறார். இரக்கமின்றி ஜனங்களைத் தாக்கிய, வெட்டிய மற்றும் அவர்களின் இருதயங்களைக் குத்தும் அளவிற்குக் கொன்ற கடந்த கால வார்த்தைகளை விட இந்த முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. “நீங்கள் எனக்கு விசுவாசமாக இல்லை, உங்கள் விசுவாசம் கறைபடிந்துவிட்டது, உங்கள் இருதயங்களில் நான் முழுமையான இடத்தைப் பிடிக்கவில்லை…. நான் உன்னை உன்னிடமிருந்து மறைந்துகொள்ள இடமளிக்க மாட்டேன், ஏனென்றால், என் ஜனங்களாக இருக்க உங்களில் யாரும் தகுதியானவர்கள் அல்ல” என்று ஆர்வமற்றும் தெளிவற்றும் தேவன் நேரடியாகக் கூறியிருந்தார். நீங்கள் இரண்டையும் ஒப்பிடலாம், அவற்றின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொன்றின் தொனியும் வித்தியாசமாக இருக்கிறது. கேள்விகளைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு, ஞானமுள்ள தேவன் முதல் தொனியைப் பயன்படுத்துகிறார், இது அவர் பேசும் கலைத்திறனைக் காட்டுகிறது. இது மனுஷனால் அடைய முடியாதது, எனவே தேவன், “ஜனங்கள் என்னால் பயன்படுத்தப்படும் பாத்திரங்களேயல்லாமல் வேறல்ல அவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், சிலர் தாழ்மையானவர்கள், சிலர் விலையேறப்பெற்றவர்களாவர்” என்று கூறியதில் ஆச்சரியமில்லை.

ஜனங்கள் படிக்கும்போது, தேவனுடைய வார்த்தைகள் வேகமாகவும் ஏராளமாகவும் வருகின்றன, அவர்களுக்கு மூச்சு விடுவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதில்லை, ஏனென்றால் தேவன் எந்த வகையிலும் மனுஷனை எளிதாகச் செல்ல விடுவதில்லை. ஜனங்கள் மிகுந்த வருத்தத்தை உணரும்போது, தேவன் அவர்களை மீண்டும் ஒருமுறை இவ்வாறு எச்சரிக்கிறார்: “மேலே உள்ள கேள்விகளை நீங்கள் முற்றிலும் பொருட்படுத்தவில்லை எனில், நீ கலங்கிய நீரில் மீன்பிடிக்கிறாய் என்பதையும், எண்ணிக்கையை அதிகரிக்க மட்டுமே நீ இருக்கிறாய் என்பதையும், நான் முன்னரே தீர்மானித்த நேரத்தில் நீ நிச்சயமாக புறம்பாக்கப்பட்டு, இரண்டாவது முறையாக பாதாளத்திற்குள் தள்ளப்படுவாய் என்பதையும் இது காட்டுகிறது. இவை எனது எச்சரிக்கை வார்த்தைகள், இவற்றை இலகுவாக எடுத்துக் கொள்ளும் எவரும் எனது நியாயத்தீர்ப்பால் தாக்கப்படுவார்கள், மேலும் நியமிக்கப்பட்ட நேரத்தில் பேரழிவை சந்திப்பார்கள்.” இப்படிப்பட்ட வார்த்தைகளைப் படிக்கும்போது, ஜனங்கள் எப்போது பாதாளத்தில் தள்ளப்பட இருக்கிறார்கள் என்பதை நினைக்காமல் இருக்க முடியாது: பேரழிவால் அச்சுறுத்தப்பட்டு, தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள், அவர்களின் சொந்த முடிவு அவர்களுக்காகக் காத்திருக்கிறது, நீண்ட காலமான மனச்சோர்வு, மன அழுத்தம், நிம்மதியின்மை காரணமாக, யாரிடமும் தங்கள் இருதயத்தில் உள்ள சோகத்தைப் பற்றி பேச முடியாத நிலை காணப்படுகிறது—இதனுடன் ஒப்பிடும்போது, அவர்கள் தங்கள் மாம்சம் சுத்திகரிக்கப்படுவது நல்லது என்று உணர்கிறார்கள்…. அவர்களின் சிந்தனை இந்த நிலையை அடையும் போது, அவர்களால் மன உளைச்சலைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் கடந்த காலத்தில் எப்படி இருந்தார்கள், இன்று எப்படி இருக்கிறார்கள், நாளை எப்படி இருப்பார்கள் என்று நினைக்கும் போது, அவர்களின் உள்ளங்களில் துக்கம் பெருகுகிறது, அவர்கள் அறியாமலேயே நடுங்கத் தொடங்குகிறார்கள், இதனால் அவர்கள் தேவனுடைய ஆட்சிமுறை ஆணைகளுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். “தேவனுடைய ஜனங்கள்” என்ற வார்த்தையும் பேசுவதற்கான ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றும்போது, அவர்களின் இருதயங்களில் உள்ள மகிழ்ச்சி உடனடியாகத் துக்கமாக மாறுகிறது. தேவன் அவர்களின் அபாயகரமான பலவீனத்தைப் பயன்படுத்தி அவைகளைத் தாக்குகிறார், இந்தக் கட்டத்தில், அவர் தமது கிரியையின் அடுத்த கட்டத்தைத் தொடங்குகிறார், ஜனங்களின் நரம்புகள் தொடர்ந்து தூண்டப்பட்டிருக்கச் செய்து, தேவனுடைய கிரியைகள் புரிந்துகொள்ள முடியாதவை என்றும் தேவனை அடைய முடியாது என்றும், தேவன் பரிசுத்தமானவர் மற்றும் தூய்மையானவர், மேலும் அவர்கள் தேவனுடைய ஜனங்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்ற உணர்வை அவர்களுக்கு அதிகரிக்கச் செய்கிறார். இதன் விளைவாக, அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை இரட்டிப்பாக்குகிறார்கள், பின்வாங்கத் துணிவதில்லை.

அடுத்து, ஜனங்களுக்குப் பாடம் கற்பிக்கவும், அவர்களை தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளச் செய்யவும், தேவனை வணங்க வைக்கவும், தேவனுக்குப் பயப்படச் செய்யவும், தேவன் தமது புதிய திட்டத்தைத் தொடங்குகிறார்: “சிருஷ்டிக்க துவங்கிய காலத்திலிருந்து இன்று வரை, அநேகர் என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல், எனது மீட்பின் பாதையிலிருந்து நீக்கப்பட்டு புறம்பாக்கப்பட்டிருக்கிறார்கள்; இறுதியில், அவர்களின் சரீரங்கள் அழிந்து, அவர்களின் ஆவிகள் பாதாளத்திற்குள் வீசப்படுகின்றன, இன்றும் அவை கடுமையான சிட்சிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. அநேகர் என் வார்த்தைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் என் ஞானத்திற்கும் வெளிச்சத்திற்கும் எதிராகச் சென்றுவிட்டனர் … மேலும் சில உள்ளன….” இவை உண்மையான உதாரணங்களாகும். இந்த வார்த்தைகளில், தேவன் அனைத்து தேவ ஜனங்களுக்கும் காலங்காலமாக உள்ள தேவனுடைய கிரியைகளைக் குறித்து அவர்களை அறியச்செய்யும்படி ஓர் உண்மையான எச்சரிக்கையை வழங்குவது மட்டுமல்லாமல், ஆவிக்குரிய உலகில் என்ன நடக்கிறது என்பதன் ஒரு பகுதியைப் பற்றிய மறைமுகமான சித்தரிப்பை வழங்குகிறார். தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதால் எந்த நன்மையும் வரமுடியாது என்பதை இது ஜனங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. அவர்கள் அவமானத்தின் நித்திய அடையாளமாக மாறுவார்கள், மேலும் அவர்கள் சாத்தானின் உருவகமாகவும், சாத்தானின் நகலாகவும் மாறுவார்கள். தேவனுடைய இருதயத்தில், இந்த அர்த்தத்தின் அம்சம் இரண்டாம் நிலை முக்கியத்துவம் வாய்ந்ததேயாகும், ஏனென்றால், இந்த வார்த்தைகள் ஏற்கனவே ஜனங்களை நடுங்கச் செய்து, என்ன செய்வது என்று தெரியாத அளவிற்குத் திணறச் செய்துவிட்டன. இதன் நேர்மறையான அம்சம் என்னவென்றால், ஜனங்கள் பயத்தால் நடுங்கும்போது, அவர்கள் ஆவிக்குரிய உலகின் சில விவரங்களையும் பெறுகிறார்கள்—ஆனாலும் சிலர் மட்டுமே பெறுகிறார்கள், எனவே நான் ஒரு சிறிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆவிக்குரிய உலகின் வாசலில் இருந்து எல்லா வகையான ஆவிகளும் இருப்பதைக் காணலாம். இருப்பினும், சில பாதாளத்தில் உள்ளன, சில நரகத்தில் உள்ளன, சில அக்கினிக் கடலில் உள்ளன, சில அதல பாதாளத்தில் உள்ளன. நான் இங்கே இன்னும் கொஞ்சம் சேர்க்க வேண்டி உள்ளது. மேலோட்டமாகக் கூற வேண்டுமானால், இந்த ஆவிகளை இடத்திற்கு ஏற்றபடி பிரிக்கலாம்; இருப்பினும், குறிப்பாகக் கூற வேண்டுமானால், சில நேரடியாக தேவனுடைய தண்டனையால் நடத்தப்படுகின்றன, மேலும் சில சாத்தானின் அடிமைத்தனத்தில் உள்ளன, அதை தேவன் பயன்படுத்துகிறார். இன்னும் குறிப்பாக, அவர்களின் தண்டனை அவர்களின் சூழ்நிலைகளின் தீவிரத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது. இந்த இடத்தில், இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன். தேவன் தம்முடைய கையால் நேரடியாகத் தண்டிக்கப்படுபவர்களுக்கு பூமியில் ஆவி இல்லை, அதாவது அவர்களுக்கு மறுபடியும் பிறப்பதற்கான வாய்ப்பு இல்லை. சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ஆவிகள்—“என் சத்துருக்களாகவும் மாறிவிட்டார்கள்” என்று தேவன் கூறும்போது, தேவன் கூறுகிற சத்துருக்கள்—பூமிக்குரிய விஷயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பூமியில் உள்ள பல்வேறு பொல்லாத ஆவிகள் அனைத்தும் தேவனுடைய சத்துருக்களாய் இருக்கின்றன, சாத்தானின் ஊழியர்கள் மற்றும் அவர்கள் இருப்பதற்கான காரணம் ஊழியம் செய்வதற்கேயாகும், அதன் மூலம், அவர்கள் தேவனுடைய கிரியைகளுக்கான பிரதிபலிப்புப் படலங்களாக இருந்து ஊழியம் செய்வதற்கேயாகும். எனவே, தேவன் கூறுகிறார், “இந்த ஜனங்கள் சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், நித்திய பாவிகளாகவும், என் சத்துருக்களாகவும் மாறிவிட்டார்கள், அவர்கள் என்னை நேரடியாக எதிர்க்கிறார்கள்.” அடுத்து, இந்த வகையான ஆவிக்கு என்ன வகையான முடிவு இருக்கிறது என்று தேவன் ஜனங்களுக்குக் கூறுகிறார்: “அவர்கள் என் கோபத்தின் உச்சத்தில் என் நியாயத்தீர்ப்பின் பொருள்களாக இருக்கிறார்கள்,” தேவன் அவர்களின் தற்போதைய நிலைமைகளையும் தெளிவுபடுத்துகிறார்: “இன்றும் அவர்கள் குருடர்களாக, இருண்ட நிலவறைகளுக்குள் இருக்கிறார்கள்”.

தேவனுடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையை ஜனங்களுக்குக் காட்ட, தேவன் ஓர் உண்மையான உதாரணத்தை ஆதாரமாகப் பயன்படுத்துகிறார் (அவர் பேசும் பவுலின் காரியம்) அதனால் அவருடைய எச்சரிக்கை ஜனங்கள் மீது ஆழமான உணர்வை ஏற்படுத்துகிறது. பவுலைப் பற்றிக் கூறப்பட்டிருப்தைக் கதையாகக் கருதுவதைத் தடுப்பதற்கும், அவர்கள் தங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக நினைத்துக்கொள்வதைத் தடுப்பதற்கும்—மேலும், தேவனிடமிருந்து கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்களைப் பற்றி அவர்கள் பெருமை பேசுவதைத் தடுக்கவும்—தேவன் பவுலின் வாழ்நாள் முழுவதும் அவனது அனுபவங்களில் கவனம் செலுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, பவுலுக்கான விளைவுகள் மற்றும் அவன் எந்த வகையான முடிவைச் சந்தித்தான், பவுல் ஏன் தேவனை எதிர்த்தான் என்பதற்கான காரணம் மற்றும் பவுல் அவன் செய்ததைப்போலவே எப்படி அடையப்பெற்றான் என்பதில் தேவன் கவனம் செலுத்துகிறார். தேவன் கவனம் செலுத்துவது என்னவென்றால், பவுலின் விருப்பமான நம்பிக்கைகளை அவர் எவ்வாறு இறுதியில் மறுத்தார் என்பதை வலியுறுத்துகிறது, மேலும் ஆவிக்குரிய உலகில் பவுலின் நிலையை நேரடியாக இவ்வாறு வெளிப்படுத்துகிறது: “பவுல் தேவனால் நேரடியாக சிட்சிக்கப்படுகிறான்.” ஜனங்கள் உணர்ச்சியற்றவர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளில் எதையும் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பதால், தேவன் ஒரு விளக்கத்தை (வாக்கியத்தின் அடுத்த பகுதி) சேர்த்து, வேறு ஒரு அம்சம் தொடர்பான ஒரு பிரச்சினையைப் பற்றி பேசத் தொடங்குகிறார்: “யார் என்னை எதிர்க்கிறார்களோ (என் மாம்ச உருவத்தை மட்டுமல்ல, மிக முக்கியமாக, என் வார்த்தைகளையும், என் ஆவியையும்—அதாவது, என் தெய்வீகத்தன்மையை எதிர்ப்பது), அவர்கள் என் நியாயத்தீர்ப்பை அவர்களின் மாம்சத்தில் பெறுகிறார்கள்.” மேலோட்டமாகக் கூற வேண்டுமானால், இந்த வார்த்தைகள் மேலே உள்ளவைகளுடன் தொடர்பில்லாததாகத் தோன்றினாலும், மேலும் அவைகள் இரண்டிற்கும் இடையே எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும், பீதியடைய வேண்டாம்: தேவன் தமக்கென சொந்த நோக்கங்களை வைத்திருக்கிறார்; “மேலே உள்ள உதாரணம் அதை நிரூபிக்கிறது” என்ற எளிய வார்த்தைகள், வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாத இரண்டு பிரச்சனைகளை இயல்பாக ஒருங்கிணைக்கிறது—இதுதான் தேவனுடைய வார்த்தைகளின் புத்திசாலித்தனமாகும். இவ்வாறு, பவுலுடைய விவரத்தின் மூலம் ஜனங்கள் வெளிச்சத்தைப் பெறுகிறார்கள், எனவே, பவுலால் வழங்கப்பட்ட பாடத்தின் மூலம், முந்தைய மற்றும் பின்வரும் உரைகளுக்கு இடையே உள்ள தொடர்பின் காரணமாக, அவர்கள் தேவனை இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளும்படி பின்தொடர்கிறார்கள், இது துல்லியமாக அந்த வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் தேவன் அடைய விரும்பிய விளைவு ஆகும். அடுத்து, ஜனங்கள் ஜீவனுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி செய்யும் மற்றும் வெளிச்சத்தை வழங்கும் சில வார்த்தைகளை தேவன் பேசுகிறார். இதைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் இல்லை; இந்த விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது என்று நீ உணருவாய். இருப்பினும், நான் விளக்க வேண்டியது என்னவென்றால், தேவன் கூறும்போது, “நான் சாதாரண மனிதத்தன்மையில் கிரியை செய்தபோது, அநேகர் ஏற்கெனவே என் கோபத்திற்கும் மகத்துவத்திற்கும் எதிராகத் தங்களை அளவிட்டுக் கொண்டனர், ஏற்கெனவே எனது ஞானத்தையும் மனநிலையையும் சிறிதளவு அறிந்திருக்கிறார்கள். இன்று, நான் தெய்வீகமாக நேரடியாகப் பேசுகிறேன், செயல்படுகிறேன், இன்னும் சிலர் என் கோபத்தையும் நியாயத்தீர்ப்பையும் தங்கள் கண்களால் பார்ப்பார்கள்; மேலும், நியாயத்தீர்ப்பின் யுகத்தின் இரண்டாம் பாகத்தின் முக்கிய கிரியை என்னவென்றால், என் ஜனங்கள் அனைவருமே மாம்சத்தில் என் கிரியைகளை நேரடியாக அறிந்து கொள்வதும், உங்கள் அனைவரையும் என் மனநிலையை நேரடியாகப் பார்க்க வைப்பதும் ஆகும்.” இந்தச் சில வார்த்தைகள் சாதாரண மனிதத்தன்மையில் தேவனுடைய கிரியையை முடித்து, தெய்வீகத்தன்மையில் செயல்படுத்தப்படும் நியாயத்தீர்ப்பு யுகத்தின் தேவனுடைய கிரியைக்கான இரண்டாம் பகுதியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி, ஒரு கூட்ட ஜனங்களின் முடிவை முன்னறிவிக்கிறது. இந்தக் கட்டத்தில், அவர்கள் தேவனுடைய ஜனங்களாக மாறியபோது, இது நியாயத்தீர்ப்பு யுகத்தின் இரண்டாம் பகுதி என்று தேவன் ஜனங்களுக்குச் சொல்லவில்லை என்பதை விளக்குவது தகுதியானதாகும். மாறாக, தேவனுடைய சித்தம் மற்றும் இந்த காலகட்டத்தில் தேவன் அடைய விரும்பும் குறிக்கோள்கள் மற்றும் பூமியின் மீதான தேவனுடைய இறுதி கட்ட கிரியை ஆகியவற்றை ஜனங்களுக்குச் சொன்ன பிறகு, இது நியாயத்தீர்ப்பு யுகத்தின் இரண்டாம் பகுதி என்று மட்டுமே அவர் விளக்குகிறார். இதில் தேவனுடைய ஞானமும் இருக்கிறது என்று சொல்லத் தேவையில்லை. ஜனங்கள் தங்கள் வியாதிப் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், அவர்கள் கவலைப்படும் ஒரே விஷயம், அவர்கள் மரித்துவிடுவார்களா இல்லையா, அல்லது அவர்களின் வியாதியை அவர்களின் சரீரத்திலிருந்து வெளியேற்ற முடியுமா இல்லையா என்பதுதான். அவர்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வார்களா அல்லது சரியான ஆடைகளை அணிவார்களா என்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இவ்வாறு, ஜனங்கள் தாங்கள் தேவனுடைய ஜனங்களில் ஒருவர் என்று முழுமையாக விசுவாசிக்கும்போதுதான், தேவன் தமது கோரிக்கைகளைப் பற்றி படிப்படியாகப் பேசுகிறார், மேலும் இன்றைய யுகம் எப்படிப்பட்டது என்பதை ஜனங்களுக்குச் சொல்கிறார். ஏனென்றால், குணமடைந்த சில நாட்களுக்குப் பிறகுதான் தேவனுடைய நிர்வாகத்தின் படிகளில் கவனம் செலுத்துவதற்கான ஆற்றலை ஜனங்கள் பெற்றிருப்பார்கள், எனவே, இதுவே அவர்களுக்குச் சொல்ல மிகவும் பொருத்தமான நேரமாகும். ஜனங்கள் புரிந்துகொண்ட பின்னரே அவர்கள் பகுப்பாய்வு செய்யத் தொடங்குகிறார்கள்: இது நியாயத்தீர்ப்பு யுகத்தின் இரண்டாம் பகுதி என்பதால், தேவனுடைய கோரிக்கைகள் கடுமையாகியிருக்கின்றன, மேலும் நான் தேவனுடைய ஜனங்களில் ஒருவனாகிவிட்டேன். இவ்வாறு பகுப்பாய்வு செய்வது சரியானது, இந்த பகுப்பாய்வு முறை மனுஷனால் அடையக்கூடியதாகும்; அதனால்தான் தேவன் இந்த பேசும் முறையைப் பயன்படுத்துகிறார்.

ஜனங்கள் கொஞ்சம் புரிந்துகொண்டவுடன், தேவன் பேசுவதற்காக மீண்டும் ஒருமுறை ஆவிக்குரிய மண்டலத்திற்குள் பிரவேசிக்கிறார், அதனால் அவர்கள் மீண்டும் ஒரு மறைவான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்தத் தொடர் கேள்விகளின் போது, தேவனுடைய சித்தம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல், தேவனுடைய எந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும் என்று தெரியாமல், மேலும், தேவனுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க எந்த மொழியைப் பயன்படுத்துவது என்று தெரியாமல், ஒவ்வொருவரும் குழப்பமடைந்து, தலையைச் சொறிந்து கொள்கிறார்கள். ஒருவன் சிரிப்பதா அழுவதா என்று வியப்படைகிறான். ஜனங்களுக்கு, இந்த வார்த்தைகள் மிகவும் ஆழமான இரகசியங்களைக் கொண்டிருப்பது போல் தெரிகிறது—ஆனால் உண்மைகள் துல்லியமாக எதிர்மாறாக உள்ளன. உனக்காக ஒரு சிறிய விளக்கத்தையும் நான் இங்கே சேர்க்கலாம்—இது உன் மூளைக்கு ஓர் இளைப்பாறுதலைக் கொடுக்கும், மேலும் இது ஓர் எளிய விஷயம் மற்றும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை என்று நீ உணருவாய். உண்மையில், பல வார்த்தைகள் இருந்தாலும், அவை தேவன் வைத்திருக்கும் ஒரே ஒரு நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன, அதாவது: இந்தக் கேள்விகளின் மூலம் ஜனங்களின் விசுவாசத்தைப் பெறுதலே ஆகும். ஆனால் இதை நேரடியாகக் கூறுவது பொருத்தமானதல்ல, எனவே தேவன் மீண்டும் ஒருமுறை கேள்விகளைப் பயன்படுத்துகிறார். இருப்பினும், அவர் பேசும் தொனி ஆரம்பத்தில் இருந்ததைப் போலல்லாமல் குறிப்பாக மென்மையாக உள்ளது. அவர்கள் தேவனால் கேள்விகள் கேட்கப்பட்டாலும், இந்த வகையான மாறுபாடு ஜனங்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொண்டுவருகிறது. நீ ஒவ்வொரு கேள்வியையும் ஒவ்வொன்றாகப் படிக்கலாம்; கடந்த காலத்தில் இந்த விஷயங்கள் அடிக்கடி குறிப்பிடப்படவில்லையா? இந்தச் சில எளிய கேள்விகளில், அதிக உள்ளடக்கம் உள்ளது. சில ஜனங்களின் மனநிலையை விவரிப்பதாய் இருக்கின்றன: “பரலோகத்தின் வாழ்க்கைக்கு ஒத்திருக்கிற வாழ்கையை பூமியில் அனுபவிக்க உங்களுக்கு விருப்பமா?” அவற்றில் சில, தேவனுக்கு முன்பாக எடுக்கும் “யுத்தவீரர்களின் சத்தியப் பிரமாணம்” ஆகும்: “ஓர் ஆடு போல என்னால் நீங்கள் வழிநடத்தப்படவும், கொல்லப்படவும் உங்களால் மெய்யாகவே உங்களை அனுமதிக்க இயலுமா?” அவற்றுள் சில மனுஷனிடம் வைக்கும் தேவனுடைய கோரிக்கைகள்: “நான் நேரடியாகப் பேசவில்லை என்றால், உன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் நீ கைவிட்டு, நான் உன்னைப் பயன்படுத்திக்கொள்ள நீ என்னை அனுமதிப்பாயா? எனக்குத் தேவைப்படும் உண்மை இது அல்லவா? …” அவை மனுஷனுக்கான தேவனுடைய அறிவுரைகளையும் நிச்சயப்படுத்துதல்களையும் உள்ளடக்குகின்றன: “ஆயினும்கூட, இனியும் என் வார்த்தைகளின் தவறான புரிதலினால் நீங்கள் பாரமடையக் கூடாது என்றும், உங்கள் பிரவேசத்தில் நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றும், என் வார்த்தைகளின் மிகவும் பெரிதான ஆழத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இது எனது வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதிலிருந்தும், என் அர்த்தம் குறித்துத் தெளிவாகத் தெரியாமலிருப்பதிலிருந்தும், இதனால் எனது ஆளுகைக் கட்டளைகளை மீறுவதிலிருந்தும் உங்களைத் தடுக்கும்.” இறுதியாக, தேவன் மனுஷன் மீதான தமது நம்பிக்கைகளைப் பற்றி பேசுகிறார்: “உங்களுக்கான எனது நோக்கங்களை என் வார்த்தைகளில் இருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் சொந்த எதிர்பார்ப்புகளைப் பற்றி மேலும் சிந்திக்காதீர்கள், எல்லாவற்றிலும் தேவனின் திட்டங்களுக்குக் கீழ்படிய நீங்கள் எனக்கு முன்பாகத் தீர்மானித்தபடி செயல்படுங்கள்.” இறுதிக் கேள்வி ஆழமான அர்த்தம் கொண்டது. இது சிந்திக்கத் தூண்டுகிறதாயும், இது ஜனங்களின் இருதயங்களில் தன்னைத் தானே கவர்கிறதாயும் மற்றும் மறக்கக் கடினமாகவும், அவர்களின் காதுகளுக்கு அருகில் இருக்கும் மணி போல, இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது …

மேற்கூறியவைகள், நீ குறிப்புகளாகப் பயன்படுத்துவதற்கான ஒரு சில விளக்கமளிக்கிற வார்த்தைகளாகும்.

முந்தைய: அத்தியாயம் 3

அடுத்த: அத்தியாயம் 5

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக