அத்தியாயம் 58

என் நோக்கத்தைப் புரிந்து கொண்டதால், என் பாரத்துக்காக அக்கறை கொள்பவனாக ஆகி விடுவாய், மேலும், உன்னால் ஒளியையும் வெளிப்பாட்டையும் பெற முடிவதோடு, விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற முடியும். இது என்னைத் திருப்திப்படுத்தும், உனக்காக என் சித்தத்தை நிறைவேற்ற வைக்கும், பரிசுத்தவான்கள் அனைவருக்கும் பக்திவிருத்தியைக் கொண்டுவரும், மேலும், பூமியில் என் ராஜ்யத்தை உறுதியானதாக மற்றும் நிலையானதாக உருவாக்கும். என் நோக்கத்தைப் புரிந்து கொள்வதே இப்போது முக்கியமான விஷயமாகும்; இது தான் பிரவேசிக்க வேண்டிய பாதை ஆகும், மேலும், இது ஒவ்வொரு நபரும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகும்.

என் வார்த்தையானது அனைத்து வகையான பிணிகளையும் குணப்படுத்தும் நல்ல மருந்தாகும். என் முன்னால் வர நீ விரும்பும் வரை, நான் உன்னைக் குணப்படுத்தி, என் சர்வவல்லமை, என் அற்புதமான செயல்கள், என் நீதி மற்றும் என் மகத்துவம் உள்ளிட்டவற்றைக் காண உன்னை அனுமதிப்பேன். மேலும், உங்களின் சொந்தச் சீர்கேடு மற்றும் பலவீனங்களின் ஒரு சிறு காட்சியை உங்களுக்கு நான் வழங்குவேன். உனக்குள் இருக்கும் ஒவ்வொரு நிலைமையையும் நான் முழுவதுமாகப் புரிந்து கொண்டுள்ளேன்; விஷயங்களை நீ எப்போதும் உன் இருதயத்திற்குள் செய்கிறாய் மற்றும் அவற்றை வெளியே காட்டுவதில்லை. நீ செய்யும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் நான் தெளிவாக உள்ளேன். இருப்பினும், நான் எந்த விஷயங்களைப் பாராட்டுவேன், எந்த விஷயங்களைப் பாராட்ட மாட்டேன் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும்; இவற்றை நீ தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும், மற்றும் இதைப் பற்றிய ஒரு அலட்சியமான அணுகுமுறையை எடுக்கக் கூடாது.

“தேவனின் பாரத்தில் நாம் அக்கறை காட்ட வேண்டும்,” என்று சொல்வதில், நீங்கள் உதட்டளவில் மட்டும் தான் ஆராதனை செய்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் உண்மைகளை எதிர்கொள்ளும்போது, தேவனின் பாரம் என்னவென்று உங்களுக்கு முழுவதும் நன்றாகத் தெரியும் என்றபோதும் கூட, நீங்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. நீங்கள் உண்மையில் முற்றிலும் குழப்பம் நிறைந்த மனதுடன் முட்டாளாக இருக்கிறீர்கள், மேலும், நீங்கள் மிகவும் அலட்சியத்துடன் இருக்கிறீர்கள். மனிதர்களைக் கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை இது விளக்குகிறது; “என்னால் தேவனின் நோக்கத்தை வெறுமனே புரிந்து கொள்ள முடியவில்லை, ஆனால் நான் அதைப் புரிந்து கொள்வதில் வெற்றியடைந்தால், நான் நிச்சயம் அதைக் கடைப்பிடித்துச் செயல்படுவேன்” என்பது போன்ற நல்ல வார்த்தைகளைப் பேசுவதை மட்டும் தான் அவர்கள் செய்கிறார்கள். இது உங்களின் உண்மையான நிலை அல்லவா? உங்கள் அனைவருக்கும் தேவனின் சித்தம் குறித்தும், உங்களின் பிணிக்கான காரணம் என்னவென்றும் தெரியும் என்ற போதும், நீங்கள் கடைப்பிடிக்க விரும்பவே இல்லை என்பது தான் முக்கியப் பிரச்சனை ஆகும்; இது தான் உங்களின் மிகப் பெரிய சிரமம். இதை நீங்கள் உடனடியாகத் தீர்க்கவில்லை என்றால், இதுவே உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய தடையாக இருக்கும்.

முந்தைய: அத்தியாயம் 57

அடுத்த: அத்தியாயம் 59

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக