அத்தியாயம் 96

என் கோபம், என் பெரிதான வல்லமை, மற்றும் என் முழு ஞானத்தை வெளிப்படுத்தப் பண்ணும்படி, என்னிடமிருந்து பிறந்தும் கூட என்னை அறியாத அனைவரையும் நான் தண்டிப்பேன். என்னில் அனைத்தும் நீதியுள்ளவையாகும், எந்த அநீதியும், வஞ்சகமும், கபடமும் முற்றிலும் இல்லை; கபடமும் வஞ்சகமுமுள்ள எவனும் பாதாளத்தில் பிறந்த, நரகத்தின் குமாரனாகவே இருக்க வேண்டும். என்னில் எல்லாம் வெளிப்படையாய் இருக்கின்றன; நான் என்ன சொன்னாலும் அது நிறைவேறும், அது நிச்சயமாக நிறைவேறும்; நான் என்ன சொன்னாலும் அது நிறுவப்படும், நிறுவப்படும், மேலும் இந்த விஷயங்களை மாற்றவோ அல்லது பாசாங்கு செய்யவோ ஒருவராலும் கூடாது ஏனென்றால் நான் ஒருவரே ஒன்றான தேவனானவர். வரவிருக்கும் விஷயங்களில், முன்குறிக்கப்பட்ட மற்றும் தெரிந்துகொள்ளப்பட்ட முதற்பேறான குமாரர்களின் குழுவில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொருவராக வெளிப்படுத்தப்படுவார்கள், மேலும் முதற்பேறான குமாரர்களின் குழுவில் இல்லாத ஒவ்வொருவரும் இதன் மூலமாக என்னால் புறம்பாக்கப்படுவார்கள். இவ்வாறே நான் என் கிரியையைச் செய்து நிறைவேற்றுகிறேன். இப்போதே, என் முதற்பேறான குமாரர்கள் என் அற்புதமானச் செயல்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, நான் சிலரை மட்டுமே வெளிப்படுத்துகிறேன், ஆனால் பின்னர் நான் இப்படியே கிரியை செய்ய மாட்டேன். மாறாக, அவர்களின் உண்மையான சுபாவங்களை ஒவ்வொருவராகக் காண்பிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, பொதுவான சூழ்நிலையில் இருந்து நான் தொடர்வேன் (ஏனென்றால் பிசாசுகள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றுபோலவே இருக்கின்றன, உதாரணமாக விளங்கும்படி சிலற்றை மட்டுமே தேர்ந்தெடுத்தால் அதுவே போதுமானது). என் முதற்பேறான குமாரர்கள் அனைவரும் தங்கள் இருதயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், நான் விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை (ஏனென்றால் நியமிக்கப்பட்ட நேரத்தில், அவர்கள் நிச்சயமாக ஒருவர் பின் ஒருவராக வெளிப்படுவார்கள்).

என் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவது என் மனநிலையாகும், என்னில் எதுவும் ஒளிக்கப்படவில்லை அல்லது மறைக்கப்படவில்லை. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒவ்வொன்றையும் பற்றி நான் உங்களுக்குச் சொல்வேன், மேலும் நீங்கள் தெரிந்துகொள்ளக் கூடாத எதைப் பற்றியும் நான் உங்களுக்கு நிச்சயமாகச் சொல்ல மாட்டேன், இல்லையென்றால் உங்களால் உறுதியாக நிற்க முடியாமல் போகும். சிறிய விஷயங்களைப் பற்றிக் கொண்டு அதனால் முக்கியமான விஷயங்களை இழந்து போகாதீர்கள், அது உண்மையில் தகுதியானது அல்ல. நான் சர்வவல்லமையுள்ள தேவன் என்று நம்புங்கள், பின்னர் அனைத்தும் நிறைவேறும் மற்றும் அனைத்தும் எளிதாகவும் இனிமையாகவும் மாறும். இப்படித்தான் நான் காரியங்களைச் செய்கிறேன். விசுவாசிக்கிற யாராக இருந்தாலும் நான் பார்க்க அனுமதிக்கிறேன், விசுவாசிக்காத யாராக இருந்தாலும் அவனை நான் அறிந்து கொள்ள அனுமதிப்பதில்லை, புரிந்து கொள்ளவும் ஒருபோதும் விடுவதில்லை. என்னில் எந்த உணர்வும் இரக்கமும் இல்லை, என் தண்டனையை யார் அவமதித்தாலும், நிச்சயமாக என் கைகளைத் தடுக்காமல் அவர்களைக் கொன்று விடுவேன், அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவேன். நான் அனைவரிடமும் ஒன்று போலவே இருக்கிறேன், எனக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் இல்லை, எவ்விதத்திலும் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதில்லை. இதன் மூலம் ஜனங்களால் எப்படி என் நீதியையும் மாட்சிமையையும் பார்க்க முடியாமல் இருக்க முடியும்? இதுவே என் ஞானமும் என் மனநிலையும் ஆகும், அதை யாராலும் மாற்ற முடியாது மற்றும் யாராலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. என் கரங்கள் எப்பொழுதும் எல்லாவற்றையும் ஆளுகிறது, நான் எப்போதும் எல்லாவற்றையும் எனக்கு ஊழியஞ்செய்யவும், உடனடியாக என் கட்டளைகளுக்குத் தயாராகிக் கீழ்ப்படியவும் ஏற்பாடு செய்கிறேன். எனது நிர்வாகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பலரும் என் சார்பாக ஊழியஞ்செய்கிறார்கள், ஆனால் இறுதியில் அவர்கள் ஆசீர்வாதங்களைப் பார்க்கிறார்கள் ஆனால் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை, எவ்வளவு பரிதாபமானது! ஆனால் ஒருவராலும் என் இருதயத்தை மாற்ற முடியாது. இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும் (எப்போதெல்லாம் ஆட்சிமுறை ஆணைக் குறிப்பிடப்படுகிறதோ, யாராலும் மாற்ற முடியாத ஒன்றை இது குறிக்கிறது, எனவே எதிர்காலத்தில் நான் பேசும்போது, நான் எதிலாவது எனது மனதை வைத்திருந்தால், அது நிச்சயமாக எனது ஆட்சிமுறை ஆணையாகவே இருக்கும். நினைவில் கொள்ளுங்கள்! இதை எதிர்த்து இடறலுண்டாக்க வேண்டாம், இல்லையென்றால் நீங்கள் இழப்பை அனுபவிப்பீர்கள்), மேலும் இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியுமாகும். இது என்னுடைய சொந்தக் கிரியையாகும், எந்த ஒரு மனிதனும் செய்யக்கூடிய ஒன்றில்லை. நான் இதைச் செய்ய வேண்டும், நான் இதை ஏற்பாடு செய்ய வேண்டும், இது என் சர்வவல்லமையைக் காட்டவும் என் கோபத்தை வெளிப்படுத்தவும் போதுமானதாகும்.

பெரும்பாலான மக்கள் இன்னும் என் மனிதத்தன்மையைப் பற்றி அறியாமல் தெளிவின்றி இருக்கிறார்கள். நான் பலமுறை சொல்லியிருக்கிறேன், ஆனால் நீங்கள் இன்னும் மந்தமாக, அதிகம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். ஆனால் இதுவே என் கிரியை ஆகும், இப்போது, இந்த நேரத்தில், தெரிந்திருக்கிற யாரானாலும், தெரிந்திருக்கிற மேலும் தெரியாத யாரானாலும் நான் கட்டாயப்படுத்துவதில்லை. இது இப்படித் தான் இருக்க முடியும். நான் அதைப் பற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறேன், பின்னர் அதைப் பற்றி நான் மீண்டும் பேச மாட்டேன் (ஏனென்றால் நான் அதிகமாகச் சொல்லியிருக்கிறேன், மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறேன். என்னை அறிந்தவன் நிச்சயமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டிருக்கிறான் மற்றும் சந்தேகமின்றி அவன் என்னுடைய முதற்பேறான குமாரர்களில் ஒருவனாவான். என்னை அறியாத ஒருவனோ, நான் ஏற்கனவே எனது ஆவியை அவனிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டேன் என்பதை நிரூபிக்கும்படி நிச்சயமாக அப்படி இருக்க மாட்டான்). ஆனால் இறுதியில் அனைவரும் என்னை அறிந்து கொள்ளும்படி செய்வேன், என் மனிதத்தன்மை என் தெய்வீகத்தன்மை இரண்டிலும் என்னை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வேன். இவை எனது கிரியையின் படிகள் ஆகும், நான் இவ்வாறே கிரியை செய்ய வேண்டும். இதுவே எனது ஆட்சிமுறை ஆணையும் ஆகும். ஒரே மெய்யான தேவனான என்னை ஒவ்வொருவரும் கூப்பிட வேண்டும், மேலும் இடைவிடாமல் என்னைத் துதித்து மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ய வேண்டும்.

எனது நிர்வாகத் திட்டம் ஏற்கனவே முழுமையாக முடிந்து விட்டது, எல்லாம் நீண்ட காலத்திற்கு முன்பாகவே நிறைவேறிவிட்டது. மனிதர்களின் பார்வையில், என்னுடைய கிரியைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது, ஆனால் நான் ஏற்கனவே அதை ஒழுங்காக ஏற்பாடு செய்துவிட்டேன், மீதமிருக்கிறது எல்லாம் என் படிகளின்படி ஒரு நேரத்தில் ஒரு கிரியையை முடிப்பது மட்டுமே (ஏனென்றால், உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு முன்னமே சோதனையில் யாரால் உறுதியாக நிற்க முடியும், எவர்கள் என்னால் தெரிந்துகொள்ளப்படவும் முன்குறிக்கப்படவும் முடியாதவர்கள், எவர்கள் என் துன்பத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள் என்று முன்குறித்து விட்டேன். என் துன்பத்தில் பங்குகொள்ளக் கூடியவர்கள், அதாவது, என்னால் முன்குறிக்கப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும் இருக்கிறவர்களை நிச்சயமாகக் காத்துக் கொள்வேன், மேலும் அவர்களை எல்லாவற்றையும் தாண்டிச் செல்லச் செய்வேன்). ஒவ்வொரு பொறுப்பிலும் யார் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி என் இருதயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். யார் எனக்கு ஊழியஞ்செய்கிறார்கள், முதற்பேறான குமாரன் யார், யார் என் குமாரர்கள் மற்றும் யார் என் ஜனங்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் நான் நன்கு அறிவேன். அதை நான் நன்கு விவரமாக அறிந்திருக்கிறேன். கடந்த காலத்தில் நான் யாரை முதற்பேறான குமாரர் என்று சொன்னேனோ அவரே இப்பொழுதும் முதற்பேறான குமாரராக இருக்கிறார், மேலும் கடந்த காலத்தில் நான் யாரை முதற்பேறான குமாரர் இல்லை என்று சொன்னேனோ அவர் இப்பொழுதும் முதற்பேறான குமாரராக இல்லை. நான் எதைச் செய்தாலும், நான் வருத்தப்படுவதில்லை, நான் அதை எளிதில் மாற்றுவதுமில்லை. என் உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்கிறேன் (என்னில் ஒன்றும் அற்பமானதல்ல), அது ஒரு போதும் மாறாது! எனக்கு ஊழியஞ்செய்பவர்கள் எப்போதும் எனக்கு ஊழியஞ்செய்கிறார்கள்: அவர்கள் என்னுடைய கால்நடைகள் அவர்கள் என்னுடைய குதிரைகளாவர் (ஆனால் இந்த ஜனங்கள் தங்களுடைய ஆவியில் ஒருபோதும் பிரகாசமடைவதில்லை; நான் அவர்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களை நான் பயன்படுத்தாத போது அவர்களைக் கொன்று விடுகிறேன். கால்நடைகள் மற்றும் குதிரைகளைப் பற்றி பேசும்போது, ஆவியில் பிரகாசிப்பிக்கப்படாத, என்னை அறியாத, எனக்குக் கீழ்ப்படியாதவர்களைப் பற்றிக் கூறுகிறேன், மேலும் அவர்கள் கீழ்ப்படிபவர்களாக, பணிவானவர்களாக, எளிமையானவர்களாக மற்றும் நேர்மையானவர்களாக இருந்தாலும், அவர்கள் இன்னும் உண்மையான கால்நடைகள் மற்றும் குதிரைகளே ஆவர்). இப்போது, பெரும்பாலானவர்கள் எனக்கு முன்பாகப் பொறுப்பற்றும், கட்டுப்பாடற்றும், ஒழுங்கின்றிப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும், பயபக்தியின்றியும் நடந்து கொள்கிறார்கள், அவர்கள் என் தெய்வீகத்தன்மையைப் பார்க்காமல் மனிதத்தன்மையை மட்டுமே பார்க்கிறார்கள். என் மனிதத்தன்மையில் இந்த நடத்தைகள் கடந்து போகும், மேலும் நான் அவர்களை மன்னிக்கும்படி என்னையே கட்டாயப்படுத்தக் கூடும், ஆனால் என் தெய்வீகத்தன்மையில் அது அவ்வளவு எளிதானதல்ல. எதிர்காலத்தில், நீ தூஷணப் பாவத்தைச் செய்ததாக நான் முடிவு செய்வேன். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், என் மனிதத் தன்மை அவமதிக்கப்படலாம், ஆனால் என் தெய்வீகத் தன்மையை அப்படிச் செய்ய முடியாது, யார் என்னிடம் சிறிதளவேனும் முரண்பட்டாலும், நான் எந்தத் தாமதமுமின்றி உடனடியாக நியாயந்தீர்ப்பேன். நான் இருக்கும் நபராக நீ என்னுடன் பல வருடங்களாகப் பழகி, எனக்குப் பரிச்சயமாகி விட்டதால், நீ பொறுப்பற்று பேசவும் செயல்படவும் முடியும் என்று நினைக்காதே. உண்மையில் நான் கவலைப்பட மாட்டேன்! அது யாராக இருந்தாலும், நான் அவர்களை நீதியுடன் நடத்துவேன். இதுவே என் நீதியாகும்.

எனது இரகசியங்கள் நாளுக்கு நாள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை வெளிப்பாடுகளின் நிலைகளைத் தொடர்ந்து நாளுக்கு நாள் தெளிவாகி வருகின்றன, இது எனது கிரியையின் வேகத்தைக் காட்டப் போதுமானதாகும். இது என்னுடைய ஞானமாகும் (நான் அதை நேரடியாகச் சொல்லவில்லை. என் முதற்பேறான குமாரர்களை நான் பிரகாசமாக்கி சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியைக் குருடாக்குகிறேன்). மேலும், இன்று நான் என் குமாரன் மூலமாக என் இரகசியத்தை உங்களுக்கு வெளிப்படுத்துவேன். மக்களால் கற்பனை செய்ய முடியாத விஷயங்களை, நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளவும் தெளிவானப் புரிதலைப் பெறவும் நான் உங்களுக்கு இன்று வெளிப்படுத்துவேன். மேலும் என் முதற்பேறான குமாரர்களுக்கு வெளியே உள்ள அனைவருக்குள்ளும் இந்த இரகசியம் உள்ளது, ஆனால் அதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அது ஒவ்வொரு நபருக்குள்ளும் இருந்தாலும் கூட, அதை யாராலும் அடையாளங்காண முடியாது. நான் என்ன சொல்கிறேன்? இந்தக் காலகட்டத்தில் என் கிரியை மற்றும் என் வார்த்தைகளில், நான் அடிக்கடி சிவப்பான பெரிய வலுசர்ப்பம், சாத்தான், பிசாசு மற்றும் பிரதான தேவதூதனைக் குறிப்பிடுகிறேன். அவை என்னவாக இருக்கின்றன? அவற்றின் உறவுகள் என்ன? இவற்றில் என்ன வெளிப்படுகிறது? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வெளிப்பாடுகள் என்னை எதிர்ப்பது, என் வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில், அறியும் சக்தியில் குறைவுபடுதல், என்னை அடிக்கடித் துன்புறுத்துவது, எனது நிர்வாகத்தைக்கு இடையூறு செய்யத் திட்டங்களைப் பயன்படுத்த முற்படுதல் ஆகியவையாகும். சாத்தான் பின்வருமாறு வெளிப்படுகிறான்: அதிகாரத்திற்காக என்னுடன் போராடுகிறான், நான் தெரிந்துகொண்ட ஜனங்களைச் சொந்தமாக்க விரும்புகிறான், என் ஜனங்களை வஞ்சிக்க எதிர்மறை வார்த்தைகளை வெளியிடுகிறான். பிசாசின் வெளிப்பாடுகள் (என் நாமத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், நம்பாதவர்கள், அனைவரும் பிசாசுகளே) பின்வருமாறு: மாம்சத்தின் இன்பங்களை ஆவலுடன் பெற விரும்புவது, தீய இச்சைகளில் ஈடுபடுவது, சாத்தானின் அடிமைத்தனத்தில் வாழ்வது, சிலர் என்னை எதிர்ப்பது மற்றும் சிலர் என்னை ஆதரிப்பது (ஆனால் அவர்கள் என் பிரியமானக் குமாரர்கள் என்று நிரூபிக்காமல் இருப்பது). பிரதான தூதனின் வெளிப்பாடுகள் பின்வருமாறு: அகந்தையாகப் பேசுவது, தேவபக்தியற்று இருப்பது, மக்களுக்கு உரையாற்ற அடிக்கடி எனது தொனியைப் பின்பற்றுவது, வெளிப்படையாக மட்டும் என்னைப் போலவே நடந்து கொள்வது, நான் உண்பதை உண்பது மற்றும் நான் பயன்படுத்துவதைப் பயன்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவது; சுருக்கமாக, என்னுடன் சமமாக இருக்க விரும்புவது, பேராவலுடன் ஆனால் என்னுடைய தகுதிப்பாடு இல்லாமல் இருப்பது மற்றும் என்னுடைய ஜீவன் இல்லாமல் இருப்பது மற்றும் ஒரு கழிவுப் பொருளாக இருப்பது. சாத்தான், பிசாசு மற்றும் பிரதான தேவதூதன் ஆகிய அனைத்தும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அடையாளமான செயல் விளக்கங்களே ஆகும், எனவே என்னால் முன்குறிக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்படாத அனைவரும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியினர் ஆவர்: முற்றிலும் அது இப்படியே இருக்கிறது! இவர்கள் அனைவரும் என் எதிரிகளாவர். (எனினும் சாத்தானின் இடையூறுகள் சேர்க்காது விடப்பட்டுள்ளன. உன்னுடைய சுபாவம் என் பண்பாக இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது. நீ இப்போது இன்னும் மாம்சத்தில் வாழ்கிறபடியால், அவ்வப்பொழுது நீ சாத்தானின் சோதனைகளை எதிர்கொள்வாய், இது தவிர்க்க முடியாதது, ஆனால் நீ எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.) ஆகையால், எனது முதற்பேறான குமாரர்களுக்கு வெளியே இருக்கும் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அனைத்துச் சந்ததியையும் நான் கைவிடுவேன். அவர்களின் சுபாவம் ஒருபோதும் மாறாது, அது சாத்தானுடைய பண்பாகும். அவர்கள் வெளிப்படுத்துவது பிசாசு, மேலும் அவர்கள் பிரதான தேவதூதனைப் போல் வாழ்கிறார்கள். இது முற்றிலும் உண்மையாகும். நான் சொல்கிற சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் அல்ல; மாறாக அது எனக்கு எதிரான பொல்லாத ஆவி ஆகும், “சிவப்பான பெரிய வலுசர்ப்பம்” என்பது அதன் மற்றொரு பெயராகும். எனவே, பரிசுத்த ஆவியானவரைத் தவிர மற்ற அனைத்து ஆவிகளும் பொல்லாத ஆவிகளாகும், மேலும் அவற்றைச் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததிகள் என்றும் கூறலாம். இவை அனைத்தும் அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 95

அடுத்த: அத்தியாயம் 97

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக