அத்தியாயம் 31

ஜனங்களுடைய இருதயங்களில் ஓர் இடத்தை நான் ஒருபோதும் பெற்றிருந்ததில்லை. உண்மையிலேயே நான் ஜனங்களைத் தேடும்போது, நான் செய்வது அனைத்தும் அவர்களைப் பிரியப்படுத்துவதற்கான முயற்சியைப் போலவும், அதன் விளைவாக அவர்கள் எப்போதும் என் செயல்களால் வெறுக்கத்தக்கவர்களாகிறார்கள் என்பது போலவும் அவர்கள் தங்கள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு என் செயல்களைப் புறக்கணிக்கிறார்கள். இது எனக்குச் சுய விழிப்புணர்வு இல்லாதது போலவும், நான் எப்போதும் மனுஷனுக்கு முன்பாக என்னைப் பறைசாற்றிக்கொண்டிருப்பது போலவும், அதன் மூலம் “நேர்மையானவர்கள் மற்றும் நீதிமான்களைக்” கோபப்படுத்திக்கொண்டிருப்பது போலவும் இருக்கிறது. ஆயினும், இதுபோன்ற பாதகமானச் சூழ்நிலைகளிலும் நான் சகித்துக்கொண்டு, எனது கிரியையைத் தொடர்கிறேன். இவ்வாறு, மனித அனுபவத்தின் இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரமான சுவைகளை நான் ருசித்திருக்கிறேன் என்றும், மற்றும் காற்றில் வந்து மழையுடன் செல்கிறேன் என்றும் சொல்கிறேன்; நான் குடும்பத்தின் உபத்திரவத்தை அனுபவித்திருக்கிறேன் என்றும், மற்றும் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை அனுபவித்திருக்கிறேன் என்றும், சரீரத்தை விட்டுப் பிரியும் வலியை அனுபவித்திருக்கிறேன் என்றும் சொல்கிறேன். இருப்பினும், நான் பூமிக்கு வந்தபோது, அவர்களுக்காக நான் பட்ட கஷ்டத்தின் நிமித்தமாக என்னை வரவேற்பதற்குப் பதிலாக, ஜனங்கள் எனது நல்ல நோக்கங்களைப் “பணிவாக” மறுத்துவிட்டனர். இதன் விளைவாக என்னால் எப்படி வேதனைப்படாமல் இருக்க முடியும்? நான் எப்படி வருத்தப்படாமல் இருக்க முடியும்? இப்படி எல்லாம் முடிவதற்காகத்தான் நான் மாம்சமாகியிருக்கக் கூடுமோ? மனுஷன் ஏன் என்னை நேசிப்பதில்லை? என் அன்பு ஏன் மனுஷனின் வெறுப்பாகத் திருப்பிக் கொடுக்கப்படுகிறது? நான் இந்த வழியில்தான் கஷ்டப்பட வேண்டியதாக இருந்திருக்குமோ? பூமியில் நான் பட்ட கஷ்டத்தின் காரணமாக ஜனங்கள் அனுதாபக் கண்ணீர் வடித்திருக்கின்றனர், மேலும் எனது துரதிருஷ்டத்தின் அநீதியை இகழ்ந்து பேசியிருக்கின்றனர். ஆயினும் என் இருதயத்தை உண்மையிலேயே அறிந்திருக்கிறவன் யார்? என் உணர்வுகளை யாரால் உணர முடியும்? ஒரு காலத்தில் மனுஷன் என்மீது ஆழ்ந்த பாசம் கொண்டிருந்தான், அவன் ஒருகாலத்தில் தன் கனவில் எனக்காக அடிக்கடி ஏங்கினான்—ஆனால் பூமியில் உள்ள ஜனங்களால் பரலோகத்தில் உள்ள எனது சித்தத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? ஜனங்கள் ஒருமுறை என் துக்க உணர்வுகளை உணர்ந்திருந்தாலும், என் துயரங்களுக்காகச் சேர்ந்து துன்பப்படும்படி அனுதாபம் கொண்டிருந்தவன் யார்? பூமியில் உள்ள ஜனங்களின் மனச்சாட்சியால் என் துயரம் நிறைந்த இருதயத்தை அசைத்து மாற்ற முடியுமா? பூமியில் உள்ள ஜனங்கள் தங்கள் இருதயத்தில் உள்ள சொல்ல முடியாத கஷ்டங்களை என்னிடம் சொல்ல முடியாதவர்களாய் இருக்கிறார்கள் அல்லவா? ஆவிகளும் ஆவியானவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றனர், ஆனால் மாம்சத்தின் தடைகள் காரணமாக, ஜனங்களின் மூளைகள் “கட்டுப்பாட்டை இழந்திருக்கின்றன.” நான் ஒருமுறை ஜனங்களை என் முன் வருமாறு நினைவூட்டினேன், ஆனால் எனது அழைப்புகள் நான் கேட்டுக்கொண்டதை ஜனங்களை நிறைவேற்ற வைக்கவில்லை; அவர்கள் சொல்ல முடியாத கஷ்டங்களைச் சுமந்துகொண்டிருந்ததைப் போலவும், தங்கள் வழியில் ஏதோ குறுக்கே நின்றுகொண்டிருந்ததைப் போலவும், கண்ணீரால் நிரம்பிய கண்களுடன் அவர்கள் வெறுமனே வானத்தைப் பார்த்தார்கள். இவ்வாறு, அவர்கள் தங்கள் கைகளைக்கூப்பி வானத்தின் கீழே தலைவணங்கி வேண்டுதல் செய்தனர். நான் இரக்கமுள்ளவராக இருப்பதால், நான் மனுஷர்கள் மத்தியில் எனது ஆசீர்வாதங்களை வழங்குகிறேன், மேலும் கண் இமைக்கும் நேரத்தில், மனுஷர்கள் மத்தியில் எனது தனிப்பட்ட வருகையின் தருணம் வருகிறது—ஆயினும் மனுஷன் நீண்ட காலமாகப் பரலோகத்திடம் செய்த தனது பொருத்தனையை மறந்திருக்கிறான். இது மனுஷனின் அதிகப்படியான கீழ்ப்படியாமை அல்லவா? மனுஷன் ஏன் எப்போதும் “ஞாபக மறதியால்” அவதிப்படுகிறான்? நான் அவனைக் குத்தியிருக்கிறேனா? நான் அவனது சரீரத்தை அடித்திருக்கிறேனா? என் இருதயத்திற்குள் உள்ள உணர்வுகளை மனுஷனுக்குச் சொல்கிறேன்; அவன் ஏன் என்னை எப்போதும் தவிர்த்துவிடுகிறான்? ஜனங்களின் நினைவுகளில், அவர்கள் எதையோ இழந்துவிட்டதாகவும், அதை எங்கும் கண்டுபிடிக்க முடியாது என்பதைப் போலவும் இருக்கிறது, ஆனால் அவர்களின் நினைவுகள் துல்லியமாக இல்லை என்பதைப் போலவும் இருக்கிறது. இதனால், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஞாபக மறதியால் அவதிப்படுகிறார்கள், மேலும் முழு மனிதகுலமும் வாழ்நாட்களில் குழப்பத்தில் காணப்படுகிறது. ஆனாலும் இதை நிவர்த்தி செய்ய யாரும் எதுவும் செய்வதில்லை; ஜனங்கள் ஒருவரையொருவர் மிதித்துக் கொலை செய்வதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை, இது இன்று பேரழிவுக்கான தோல்வி நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது, மேலும் இரட்சிப்பின் வாய்ப்பே இல்லாமற்போகும் அளவிற்குப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் அசுத்தமான தண்ணீரிலும் சேற்றிலும் விழச் செய்துவிட்டது.

மேலும் நான் எல்லா ஜனங்களுக்கு மத்தியிலும் வந்த தருணமே ஜனங்கள் எனக்கு விசுவாசமாக இருந்த தருணமாகும். இந்த நேரத்தில்தான், சிவப்பான பெரிய வலுசர்ப்பமும் தனது கொலைசெய்யும் கைகளை ஜனங்கள் மீது வைக்கத் தொடங்கியது. நான் “அழைப்பை” ஏற்றுக்கொண்டு, மனிதகுலத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட “அழைப்புக் கடிதத்தை” கையில் வைத்துக் கொண்டு, மனுஷர்கள் மத்தியில் “விருந்து மேசையில் உட்கார” வந்தேன். ஜனங்கள் என்னைப் பார்த்ததும், அவர்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை, ஏனென்றால் நான் என்னை ஆடம்பரமான ஆடைகளால் அலங்கரிக்கவில்லை, மேலும் மனுஷர்களுடன் பந்தியில் அமர எனது “அடையாள அட்டையை” மட்டுமே கொண்டு வந்திருந்தேன். என் முகத்தில் விலையுயர்ந்த அலங்காரம் இல்லை, என் தலையில் கிரீடம் இல்லை, நான் என் காலில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி சாதாரணக் காலணிகளை மட்டுமே அணிந்திருந்தேன். ஜனங்களை மிகவும் ஏமாற்றியது என்னவென்றால், என் வாயில் உதட்டுச்சாயம் இல்லாததுதான் ஆகும். மேலும், நான் பணிவான வார்த்தைகளைப் பேசவில்லை, மேலும் என் நாவு ஓர்ஆயத்த எழுத்தாளரின் எழுதுகோலாக இருக்கவில்லை; அதற்குப் பதிலாக, எனது ஒவ்வொரு வார்த்தையும் மனுஷனுடைய உள்ளார்ந்த இருதயத்தைத் துளைத்தது, இது என் வாயைப் பற்றிய ஜனங்களுடைய “சாதகமான” கருத்தை ஓரளவு சேர்த்தது. ஜனங்கள் எனக்குச் “சிறப்பு உபசரிப்பை” வழங்குவதற்கு மேற்கூறிய தோற்றம் போதுமானதாக இருந்தது, இதனால் அவர்கள் என்னைக் கிராமப்புறங்களில் இருந்து வரும் உலகத்தைப் பற்றிய அறிவும் மற்றும் எந்தவித ஞானமும் இல்லாத ஓர் எளிய நாட்டுப்புறத்தான் என்று கருதினர். எல்லோரும் “பணப் பரிசுகளைக்” கொடுத்தபோதும், ஜனங்கள் இன்னும் என்னை கனத்துக்குரியவராகக் கருதவில்லை, ஆனால் எந்த மரியாதையும் இல்லாமல், தங்கள் செருப்பைத் தேய்த்துக்கொண்டு, முன் கோபத்துடன் வெறுமனே என் முன் வந்தார்கள். என் கை நீட்டப்பட்டதும், அவர்கள் உடனே ஆச்சரியப்பட்டார்கள், அவர்கள் மண்டியிட்டு பெரும் கூச்சலிட்டனர். அவர்கள் எனது “பணப் பரிசுகள்” அனைத்தையும் சேகரித்தனர். தொகை அதிகமாக இருந்ததால், உடனடியாக என்னை ஒரு கோடீஸ்வரன் என்று நினைத்து, என் சம்மதம் இல்லாமல் என் சரீரத்திலிருந்த கிழிந்த ஆடைகளைக் கிழித்து, அதற்குப் பதிலாக புதிய ஆடைகளை அணிவித்தார்கள்—இருப்பினும் இது என்னை மகிழ்ச்சியாக்கவில்லை. நான் அவ்வளவு எளிதான வாழ்க்கைக்குப் பழக்கப்படாததாலும், மற்றும் இந்த “முதல் வகுப்பு” உபசரிப்பை வெறுத்ததாலும், நான் பரிசுத்த வீட்டில் பிறந்ததாலும், மற்றும் நான் “வறுமையில்” பிறந்ததால், பணியாட்கள் ஆயத்தமாகக் காத்திருக்கும் ஆடம்பர வாழ்க்கையில் எனக்குப் பழக்கமில்லை என்று சொல்லலாம். அவர்கள் என் வாயிலிருந்து வருகிற சங்கடமான சத்தியங்களை ஏற்றுக்கொள்வதற்காக ஒரு சிறிய கஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள இயலும்படியாக, என் இருதயத்தில் உள்ள உணர்வுகளை ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன். என்னால் ஒருபோதும் கோட்பாட்டைப் பற்றியும் பேச முடியவில்லை என்பதாலும், ஜனங்களுடன் ஈடுபடுவதற்காகச் சமூகத்தில் ஒருவன் நடந்துகொள்ள வேண்டிய மனிதகுலத்தின் இரகசிய வழிகளைப் பயன்படுத்தத் திறமையும் இல்லை என்பதாலும், மேலும் ஜனங்களின் முகபாவனை அல்லது அவர்களின் மனநிலைக்கு ஏற்ப எனது வார்த்தைகளை வடிவமைக்க என்னால் இயலவில்லை என்பதாலும், ஜனங்கள் எப்போதும் என்னை வெறுத்து வருகிறார்கள், என்னைத் தொடர்புகொள்ளத் தகுதியற்றவன் என்று நம்பி வருகிறார்கள், மேலும் நான் கருக்குள்ள நாவைப் பெற்றிருப்பதாகவும் மற்றும் ஜனங்களை எப்போதும் புண்படுத்துவதாகவும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை: ஜனங்கள் பேசுவதற்குப் பயன்படுத்தும் வழிமுறைகளில் நானும் தேர்ச்சி பெறும்படியாகவும், அவர்களின் முகத்திற்கு ஏற்றவாறு பேசும்படியாகவும், நான் ஒருமுறை மனுஷனின் உளவியலைப் “படித்தேன்”, ஒருமுறை மனுஷனின் வாழ்வதற்கான தத்துவத்தைப் “பின்பற்றினேன்”, ஒருமுறை மனுஷனின் மொழியைக் கற்றுக்கொள்வதற்காக “மொழிக் கல்லூரிக்குச்” சென்றேன்—ஆனால் நான் அதிக முயற்சி செய்து பல “நிபுணர்களைச்” சந்தித்தாலும், அது ஒன்றும் பலனளிக்கவில்லை. என்னில் மனிதத்தன்மையைச் சேர்ந்த எதுவுமே ஒருபோதும் இருந்ததில்லை. இத்தனை வருடங்களாக, எனது முயற்சிகள் சிறிதளவு பலனைக் கூட ஒருபோதும் தந்ததில்லை, மனுஷனின் மொழியில் சிறிதளவு கூட புலமையை நான் ஒருபோதும் பெற்றிருந்ததில்லை. இவ்வாறு, “கடின உழைப்பு பலனளிக்கிறது” என்ற மனுஷனின் வார்த்தைகள் என்னிடமிருந்து “திரும்பிச் சென்றுவிட்டன”, இதன் விளைவாக, இந்த வார்த்தைகள் பூமியில் முடிவுக்குவந்துவிட்டன. ஜனங்களுக்குத் தெரியாமலே, இதுபோன்ற வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று போதுமான அளவு சரிபார்க்கப்பட்டுப் பரலோகத்திலிருக்கிற தேவனால் இந்தப் பழமொழி பொய்யாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நான் மனுஷனிடம் மன்னிப்புக் கோருகிறேன், ஆனால் எதுவும் செய்ய முடியாது—மிகவும் “மூடனாய்” இருப்பதற்காக நான் பெற்றுக்கொண்டது அதைத் தான். மனுஷனின் மொழியைக் கற்கவும், வாழ்வதற்கான தத்துவத்தில் தேர்ச்சி பெறவும், ஜனங்களுடன் சகஜமாகப் பழகவும் நான் திறமையற்றவராய் இருக்கிறேன். நான் ஜனங்களிடம் சகிப்புத்தன்மையுடன் இருக்கவும், தங்களது இருதயத்திற்குள் உள்ள கோபத்தை அடக்கவும், என் காரணமாக தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும் மட்டுமே நான் அறிவுறுத்துகிறேன். நம்மை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வைத்தது யார்? இந்தத் தருணத்தில் நம்மைச் சந்திக்க வைத்தது யார்? ஒரே கருத்துக்களை நம்மைப் பகிர்ந்து கொள்ளச் செய்தது யார்?

என்னுடைய எல்லா வார்த்தைகளிலும் என் மனநிலை வெளிப்படுகிறது, ஆனாலும் ஜனங்கள் என் வார்த்தைகளில் அதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். நான் சொல்வதைப் பற்றி அவர்கள் குறை கூறுகிறார்கள்—அதனால் என்ன பயன்? என்னைப் பற்றிய அவர்களின் எண்ணங்கள் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியுமா? பூமியின் மீது உள்ள காரியங்களால் என் சித்தத்தை நிறைவேற்ற முடியுமா? என் வார்த்தைகளை எப்படிப் பேச வேண்டும் என்று ஜனங்களுக்குக் கற்றுக்கொடுக்க நான் தொடர்ந்து முயற்சி செய்தேன், ஆனால் மனுஷன் பேச முடியாதவனாய் இருந்ததைப் போலவும், மேலும் நான் விரும்புகிறபடி என் வார்த்தைகளை எப்படிப் பேசுவது என்பதை அவனால் ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் போலவும் அது இருந்தது. நான் அவனுக்கு ஒவ்வொரு வார்த்தையாகக் கற்றுக் கொடுத்தேன், ஆனாலும் அவன் ஒருபோதும் கற்றுக்கொள்ள இயலாதவனாய் இருந்திருக்கிறான். இதற்குப் பிறகுதான் நான் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தேன்: பூமியில் உள்ள ஜனங்களால் பரலோகத்தின் வார்த்தைகளை எப்படிப் பேச முடியும்? இது இயற்கையின் விதிகளை மீறுகிறதல்லவா? ஆனால், என் மீது ஜனங்கள் கொண்டிருக்கிற வைராக்கியத்தினாலும், ஆர்வத்தினாலும், நான் மனுஷனில் மற்றொரு கிரியையின் பகுதியைத் தொடங்கினேன். மனுஷனுடைய குறைபாடுகளின் நிமித்தமாக நான் ஒருபோதும் அவனை வெட்கப்படுத்தியிருக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனுஷன் எதில் குறைவுபட்டிருக்கிறான் என்பதற்கு ஏற்றபடி அவனுக்கு வழங்குகிறேன். இதன் காரணமாகவே ஜனங்கள் என்னைப் பற்றி ஓரளவுக்குச் சாதகமான அபிப்ராயத்தைக் கொண்டுள்ளனர், மேலும் எனது ஜசுவரியத்தின் மற்றொரு பகுதியை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஜனங்களை மீண்டும் ஒருமுறை ஒன்று சேர்ப்பதற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். இந்த நேரத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியிலும், ஆரவாரத்திலும், சிரிப்பிலும் மூழ்கி வானத்தில் பல வண்ண மேகங்களைச் சுற்றிச் வருகிறார்கள். நான் மனுஷனின் இருதயத்தைத் திறக்கிறேன், மனுஷன் உடனடியாகப் புதிய உற்சாகத்தைப் பெறுகிறான், மேலும் அவன் இனி என்னிடமிருந்து மறைந்துகொள்ள விரும்பவில்லை, ஏனென்றால், அவன் தேனின் இனிப்பான சுவையைச் சுவைத்திருக்கிறான், அதனால், நான் குப்பைகளைச் சேகரிக்கும் இடமாக அல்லது கழிவு மேலாண்மை நிலையமாக மாறியிருப்பதைப் போல, அவனுடைய குப்பைகள் அனைத்தையும் பரிமாற்றிக்கொள்ள அவன் வெளியே கொண்டு வருகிறான். இவ்வாறு, ஒட்டப்பட்டிருக்கிற “விளம்பரங்களைப்” பார்த்த பிறகு, ஜனங்கள் என் முன் வந்து ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒரு சில “நினைவுப் பரிசுகளை” வாங்கலாம் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது, எனவே அவர்கள் அனைவரும் நான் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக எனக்குக் “கடிதங்களை” அனுப்புகிறார்கள். இந்தத் தருணத்தில் அவர்கள் இழப்புகளுக்குப் பயப்படுவதில்லை, ஏனென்றால், இந்தச் செயல்களில் ஈடுபட்டுள்ள “மூலதனம்” பெரியதாக இல்லை, எனவே அவர்கள் பங்கேற்கத் துணிகிறார்கள். பங்கேற்பதன் மூலம் நினைவுப் பரிசுகள் எதுவும் பெறப்படாவிட்டால், ஜனங்கள் அரங்கை விட்டு வெளியேறி, தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்பார்கள், மேலும் நான் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய “வட்டியையும்” அவர்கள் திரும்பப் பெற முயற்சி செய்வார்கள். இன்றைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாலும், “சுமாரான செழிப்பை” அடைந்து, “நவீனமயமாக்கலை” அடைவதாலும், “மூத்த அதிகாரியுடன்” தனிப்பட்ட முறையில் “கிராமப்புறங்களுக்குச் சென்று” வேலை ஏற்பாடு செய்வதாலும், ஜனங்களுடைய விசுவாசம் உடனடியாகப் பல மடங்கு அதிகரிப்பதாலும், அவர்களின் “அரசியல் சாசனம்” மேலும் சிறப்பானதாக மாறுவதனாலும், அவர்கள் என்னை வியப்புடன் நோக்கிப் பார்க்கிறார்கள், மேலும் என் நம்பிக்கையைப் பெறுவதற்காக என்னுடன் இணைந்துகொள்ள விருப்பமாய் இருக்கிறார்கள்.

ஏப்ரல் 11, 1992

முந்தைய: அத்தியாயம் 30

அடுத்த: அத்தியாயம் 32

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக