அத்தியாயம் 102

நான் குறிப்பிட்ட அளவிற்குப் பேசியிருக்கிறேன் மேலும் என்னுடைய கிரியை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டியுள்ளது; என்னுடைய சித்தத்தை நீங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு, பல்வேறு அளவுகளில், என் பாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். மாம்சம் ஆவிக்குரிய உலகத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் இப்போது தான் திருப்பு முனை—காலங்களுக்கு இடையில் கடந்து செல்லும் முன்னோடிகள் நீங்கள், பிரபஞ்சத்தையும் பூமியின் முனைகளையும் ஊடுருவும் பிரபஞ்சத்தின் ஜனங்கள் நீங்கள். நீங்கள்தான் எனக்கு மிகவும் அன்பானவர்கள்; உங்களைத் தான் நான் நேசிக்கிறேன். உங்களைத் தவிர நான் வேறு யாரையும் நேசிக்கவில்லை என்று கூறலாம், ஏனெனில் என்னுடைய அனைத்துக் கடுமையான முயற்சிகளும் உங்களுக்காகத் தான். அதை நீங்கள் அறியாமல் இருக்க முடியுமா? எல்லாவற்றையும் நான் ஏன் சிருஷ்டிக்க வேண்டும்? உங்களுக்குச் சேவை செய்வதற்காக அவற்றை எல்லாம் நான் ஏன் இயக்க வேண்டும்? இந்தச் செயல்கள் எல்லாம் உங்கள் மேல் இருக்கும் என் அன்பின் வெளிப்பாடுகள் தான். மலைகளும் அவற்றில் உள்ள யாவும், பூமியும் அதிலுள்ள யாவும், உங்களை நான் ஆதாயப்படுத்தியதால் என்னைத் துதித்து மகிமைப்படுத்துகின்றன. உண்மையில், எல்லாம் செய்து முடிக்கப்பட்டு விட்டன; மேலும், எல்லாம் முற்றிலுமாகச் செய்யப்பட்டுவிட்டன. நீங்கள் எனக்கு மாபெரும் சாட்சியைக் கொண்டுள்ளீர்கள், நீங்கள் எனக்காகச் சாத்தானையும் பிசாசுகளையும் அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். எனக்கு வெளியில் இருக்கும் எல்லா ஜனங்களும், விவகாரங்களும், பொருட்களும் என் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிகின்றன, மேலும் என்னுடைய நிர்வாகத் திட்டம் நிறைவடைந்து விட்டதால், அனைத்தும் தங்கள் சொந்த வகையினரைப் பின்பற்றுகிறார்கள் (என் ஜனங்கள் எனக்குச் சொந்தமானவர்கள், மற்றும் சாத்தானின் வகையைச் சேர்ந்தவர்கள் அக்கினிக் கடலுக்கு சொந்தமானவர்கள்—அவர்கள் பாதாளத்துக்குள் விழுந்து, நித்தியமாகப் புலம்பி என்றைக்குமாக அழிந்து போவார்கள்). “அழிந்துபோதலைப்” பற்றியும் “அப்போதிலிருந்து அவர்களின் ஆவி, ஆத்துமா மற்றும் உடலை எடுத்துபோடுதல்” பற்றியும் நான் பேசும்போது, அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்து மிதித்துப் போடும்படி அனுமதிப்பதை நான் குறிப்பிடுகிறேன். வேறு வார்த்தையில் கூறினால், என் வீட்டைச் சாராதவர்கள் எல்லோரும் அழிவின் பொருளாவார்கள், மேலும் அவர்களின் இருப்பு இல்லாமல் போகும். இதற்கு, ஜனங்கள் கற்பனை செய்வது போல, அவர்கள் எல்லோரும் போய்விடுவார்கள் என்று அர்த்தம் அல்ல. என்னுடைய கருத்தின்படி, எனக்கு வெளியில் இருக்கும் எல்லாம், இருப்பில் இல்லை என்றும் கூறலாம், இதுவே அழிவு என்பதற்கான உண்மையான அர்த்தம். மனுஷீகக் கண்களுக்கு, இவை இன்னும் இருப்பில் இருப்பதாகத் தோன்றும், ஆனால் என் பார்வையில், அவை ஒன்றுமில்லாத நிலைக்கு மாறிவிட்டன மற்றும் நித்தியமாக அவை அழிந்துபோகும். (யாரிடம் நான் இனிமேலும் கிரியை செய்யவில்லையோ அவர்கள் எனக்கு வெளியில் இருக்கிறார்கள் என்று நான் வலியுறுத்துகிறேன்.) மனுஷர்களில், அவர்கள் எப்படிச் சிந்தித்தாலும், அவர்களால் இதைக் கண்டுணர முடியாது, மேலும் அவர்கள் எப்படிப் பார்த்தாலும், அவர்களால் அதை ஊடுருவ முடியாது. நான் ஜனங்களைப் பிரகாசமாக்காவிட்டால், அவர்களை ஒளியூட்டாவிட்டால், மற்றும் அவர்களுக்கு வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாவிட்டால், அவர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது. மேலும், அவர்கள் இதைக் குறித்து மிக அதிக அளவில் தெளிவற்றவர்களாகிறார்கள், எப்போதும் வெறுமையாக உணர்கிறார்கள், இதற்கும் மேலாக, பின்பற்றுவதற்குப் பாதை எதுவும் இல்லாததால்—அவர்கள் ஏறக்குறைய மரித்தவர்களாகவே இருக்கின்றனர். தற்போது, பெரும்பாலான மனுஷர்கள் (முதல்பேறான குமாரர்களைத் தவிர எல்லோரும்) இந்த நிலையில் தான் இருக்கிறார்கள். நான் இந்த விஷயங்களை மிகவும் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறேன், இருப்பினும் இந்த ஜனங்கள் எந்த எதிர்வினையும் இன்றி தங்கள் மாம்ச இன்பங்களிலேயே கவனமாக இருக்கின்றனர். அவர்கள் சாப்பிடுகிறார்கள் பின் தூங்குகிறார்கள்; அவர்கள் தூங்குகிறார்கள் பின் சாப்பிடுகிறார்கள். அவர்கள் என் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திப்பதில்லை. அவர்கள் ஆற்றல் பெற்றாலும், அது கொஞ்ச நேரத்துக்கே இருக்கும்; அதன்பிறகு அவர்கள் முன்பிருந்தபடிதான் இருக்கிறார்கள், முற்றிலுமாக மாற்றமின்றி, அவர்கள் நான் கூறியதைக் கேட்கவே இல்லை என்பது போலவே இருக்கிறார்கள். இவர்களே பாரங்களற்ற பயனற்ற உதாரணமான மனுஷர்கள். அவர்கள் மிகவும் வெளிப்படையான ஒட்டுண்ணிகள். பின்னொரு நாளில், நான் அவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கைவிடுவேன்; கவலைப்படாதே! ஒருவர் பின் ஒருவராக, அவர்களை மீண்டும் பாதாளத்துக்குள் அனுப்புவேன். பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் இத்தகையவர்களிடம் கிரியை செய்ததில்லை, அவர்கள் பெற்ற வரங்களில் இருந்தே அவர்கள் செய்கிறதெல்லாம் பாய்ந்து வருகின்றன. வரங்களைப் பற்றி நான் பேசும்போது, இந்த ஜனங்கள் ஜீவனற்றவர்கள் என்று நான் அர்த்தப்படுத்துகிறேன், இவர்கள் எனக்கு ஊழியம் செய்பவர்கள்; அவர்களில் ஒருவரும் எனக்குத் தேவை இல்லை, மேலும் நான் அவர்களைப் புறம்பாக்குவேன் (ஆனால் இப்போதைக்கு அவர்கள் இன்னும் கொஞ்சம் உதவிகரமாக இருக்கிறார்கள்). ஊழியம் செய்பவர்களே, கேளுங்கள்! நான் உன்னைப் பயன்படுத்துவதனால் நான் உன்னை ஆதரிக்கிறேன் என்று நினைக்காதே; அது அத்தனை எளிமையானது அல்ல. நான் உன்னை ஆதரிக்க வேண்டுமானால், நீ நான் அங்கீகரிக்கும் ஒருவனாகவும் மற்றும் தனிப்பட்ட முறையில் நானே பரிபூரணப்படுத்துகிறவனாகவும் இருக்க வேண்டும். இத்தகைய நபரையே நான் நேசிக்கிறேன். நான் ஒரு தவறைச் செய்துவிட்டதாக ஜனங்கள் கூறினாலும், நான் என் வாக்குறுதியில் இருந்து பின்வாங்க மாட்டேன். இது உனக்குத் தெரியுமா? ஊழியம் செய்பவர்கள் கால்நடைகளும் குதிரைகளுமேயன்றி வேறல்லர்; அவர்கள் எப்படி என் முதற்பேறான குமாரர்களாக இருக்க முடியும்? அது அபத்தமாக இருக்குமல்லவா? அது இயற்கை விதிகளுக்கு ஒரு மீறலாக இருக்குமல்லவா? எனது ஜீவனையும் எனது பண்புகளையும் கொண்டிருக்கும் யாராக இருந்தாலும், அவர்களே என்னுடைய முதல்பேறான குமாரர்கள். இதுவே ஒரு நியாயமான விஷயம்; ஒருவராலும் அதை மறுக்க முடியாது. அது அப்படித்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், இந்தப் பங்கை வகிக்ககூடிய ஒருவரும் இருக்கமாட்டார்கள், மேலும் அதற்கு ஒருவரும் பதிலீடு செய்யும் ஒருவரும் இருக்கமாட்டார்கள். இது உணர்வு நிலையில் இருந்து செயல்படக் கூடிய விஷயம் அல்ல, ஏனெனில் நானே நீதியுள்ள தேவன்; நானே பரிசுத்தமுள்ள தேவன். நான்னே மகத்துவமான அவமதிக்கப்பட முடியாத தேவன்!

மனுஷர்களுக்குச் சாத்தியமற்ற எல்லாம் எனக்கு சுமூகமாகவும் சுதந்திரமாகவும் நடக்கிறது. அதை யாராலும் தடுக்க முடியாது, மேலும் யாராலும் அதை மாற்ற முடியாது. இந்த உலகம் தன் மிகுபேரளவுடன் முற்றிலுமாக என் கரத்தில் இருக்கிறது என்றால் சிறிய பிசாசாகிய சாத்தானைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. என்னுடைய நிர்வாகத் திட்டத்துக்காகவும், என்னுடைய முதற்பேறான குமாரர்களுக்காகவும் இல்லையென்றால் நான் வெகு காலத்திற்கு முன்னரே மரணத்தின் துர்நாற்றம் மிகுதியாய் ஊடுருவியுள்ள இந்தப் பழைய தீமையையும் இந்த ஒழுங்கற்ற யுகத்தையும் வெகு காலத்திற்கு முன்பே அழித்திருப்பேன்; இருப்பினும், நான் நேர்மையுடன் செயலாற்றுகிறேன், மேலும் நான் இலகுவாகப் பேசுவதில்லை. நான் ஒருமுறை ஒன்றைக் கூறினால், அது நிறைவேற்றப்படும்; இது இப்படி இல்லாமல் இருந்தாலும், எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்து என் செயல்களுக்கு வழியைத் திறக்கும் என்னுடைய ஞானத்தின் அம்சம் எப்போதும் இருக்கிறது. இது ஏனெனில் என் வார்த்தைகளே என் ஞானம்; என் வார்த்தைகளே எல்லாம். ஜனங்களால் அடிப்படையில் அவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை, மற்றும் அவர்களால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அடிக்கடி “அக்கினிக் கடல்” பற்றிக் குறிப்பிடுகிறேன். அதற்கு அர்த்தம் என்ன? அது அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் சாத்தானின் செல்வாக்கைக் குறிக்கிறது, அதே வேளையில் அக்கினிக் கடல் என்பது சாத்தானின் ஆளுகையின் கீழ் இருக்கும் முழு உலகத்தையும் குறிக்கிறது. உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் அக்கினிக் கடலில் எரிக்கப்படக் கூடியவர்கள் (அதாவது, அவர்கள் அதிகமாக சீர்கேடடைகிறார்கள், மேலும் அவர்களது சீர்கேடு ஓர் அளவை எட்டியதும் அவர்கள் ஒவ்வொருவராக என்னால் அழிக்கப்படுவார்கள், இதை நான் என் பேச்சின் ஒரு வார்த்தையால் எளிதாகச் செய்துவிடுவேன்). என் கோபம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அக்கினிக் கடல் முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரியும். ஜனங்கள் எவ்வளவு தூரம் மேலும் மேலும் தீயவர்களாக மாறுகின்றனர் என்பதை இது குறிக்கிறது. என் கோபம் வெடிக்கும் நேரமே அக்கினிக் கடல் வெடித்துச் சிதறும் நேரமாக இருக்கும்; அதாவது, அதுவே முழு பிரபஞ்சமும் அழியும் நேரமாக இருக்கும். அந்த நாளில், பூமியில் என் ராஜ்யம் முழுமையாக உணரப்படும் மேலும் புதிய ஜீவிதம் தொடங்கும். இது சீக்கிரமாக நிறைவேறப் போகும் ஒன்று. நான் அதைப் பற்றி பேசும்போது, எல்லாம் முழுமையாகக் காட்சிக்கு வரும். இதுவே விஷயத்தை மனுஷன் பார்க்கும் பார்வை, ஆனால் என் பார்வையில், விஷயங்கள் ஏற்கெனவே முன்கூட்டியே முடிந்துவிட்டன, ஏனெனில் எனக்கு, எல்லாமே எளிது. நான் பேசுகிறேன், அது நடக்கிறது; நான் பேசுகிறேன், அது ஸ்தாபிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும், நீங்கள் என் வார்த்தைகளைப் புசித்து, என் ஆலயத்திலுள்ள சம்பூரணத்தை அனுபவிக்கிறீர்கள், என்னுடைய ஜீவ நதியில் இருந்து தண்ணீர் குடிக்கிறீர்கள், மற்றும் என் ஜீவ விருட்சத்தின் கனியைப் பறிக்கிறீர்கள். அப்படியானால், என் ஆலயத்திலுள்ள சம்பூரணம் என்பது என்ன? என் ஜீவ நதியின் தண்ணீர் என்றால் என்ன? ஜீவ விருட்சம் என்பது என்ன? ஜீவ விருட்சத்தின் கனி என்றால் என்ன? இந்தச் சொற்றொடர்கள் எல்லாம் பொதுவானவையாக இருந்தாலும், அவை குழப்பமடைந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும் புரிவதில்லை. அவற்றை அவர்கள் பொறுப்பற்றுப் பேசி, கவனமற்ற முறையில் பயன்படுத்தி, சீரற்ற முறையில் பயன்படுத்துகிறார்கள். ஆலயத்திலுள்ள சம்பூரணம் என்பது நான் பேசிய வார்த்தைகளையோ அல்லது உங்களுக்கு நான் அருளிய கிருபையையோ குறிக்கவில்லை. பின், எதை அது உண்மையில் குறிக்கிறது? ஆதிகாலத்தில் இருந்தே, என் ஆலயத்திலுள்ள சம்பூரணத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் பெற்ற ஒருவரும் இருந்ததில்லை. கடைசி நாட்களில் தான், என் முதற்பேறான குமாரர்களின் மத்தியில், என் ஆலயத்திலுள்ள சம்பூரணத்தை ஜனங்களால் பார்க்க முடிகிறது. இந்த சொற்றொடரில் “ஆலயம்” என்பது எனது நபரைக் குறிக்கிறது; அது என் வாசஸ்தலமான சீயோன் மலையைக் குறிக்கிறது. என்னுடைய அனுமதி இல்லாமல், அதற்குள் யாரும் நுழையவோ அல்லது அதிலிருந்து வெளியேறவோ முடியாது. “சம்பூரணம்” என்பது எதைக் குறிக்கிறது? சரீரத்தில் என்னோடு கூட ஆளுகை செய்யக் கூடிய ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது. பொதுவாகப் பேசும் போது, சரீரத்தில் என்னோடு கூட ஆளுகை செய்யக் கூடிய முதற்பேறான குமாரர்களுக்கான ஆசீர்வாதத்தை இது குறிக்கிறது, மேலும் இதைப் புரிந்து கொள்ளுவது கடினமானதல்ல. ஜீவ நதியின் தண்ணீருக்கு இரு அர்த்தங்கள் உள்ளன: ஒருபுறம், என் உள்ளத்தில் இருந்து ஓடும் ஜீவத் தண்ணீரை அது குறிக்கிறது—அதாவது என் வாயில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் குறிக்கிறது. மறுபுறம், என் செயல்களின் பின்னால் இருக்கும் ஞானம் மற்றும் உத்தி மட்டுமல்லாமல் நான் என்னவாக இருக்கிறேன் மற்றும் என்னிடத்தில் என்ன இருக்கிறது என்பதையும் அது குறிக்கிறது. என் வார்த்தைகள் முடிவில்லாத, மறைந்திருக்கும் இரகசியங்களைக் கொண்டுள்ளன (மற்றும் இறந்த காலத்துக்கு முரணாக அந்த இரகசியங்கள் மறைந்திருக்கவில்லை எனக் குறிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் நிகழும் பொது வெளிப்பாட்டுடன் ஒப்பிடும்போது, அவை இன்னும் மறைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு “மறைக்கப்பட்டிருக்கின்றன” என்பது முழுமையானதல்ல, சார்புடையது). வேறு வார்த்தைகளில் கூறினால், ஜீவநதியின் தண்ணீர் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. என்னில் முடிவிலா ஞானம் இருக்கிறது, நான் என்னவாக இருக்கிறேன் மற்றும் நான் என்ன கொண்டிருக்கிறேன் என்பதை ஜனங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது; அதாவது ஜீவ நதியின் தண்ணீர் எப்போதும் பாய்கிறது. மனுஷக் கண்ணோட்டத்தில், பல வகையான தொட்டுணரக்கூடிய மரங்கள் இருக்கின்றன, ஆனால் ஒருவனும் ஜீவ விருட்சத்தைக் கண்கொண்டு பார்த்ததில்லை, இருப்பினும், இன்று அதைப் பார்த்தாலும், ஜனங்களால் அதை இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை—ஆனாலும், அவர்கள் ஜீவ விருட்சத்தில் இருந்துப் புசிப்பதைப் பற்றி பேசுகிறார்கள். இது உண்மையில் வேடிக்கையானது! அவர்கள் அதில் இருந்து கண்மூடித்தனமாகப் புசிப்பார்கள்! இன்று ஜனங்கள் அதைப் பார்க்கிறார்கள் ஆனால் அதை அறிந்து கொள்ளவில்லை என்று நான் ஏன் கூறுகிறேன்? நான் ஏன் அதைச் சொல்லுகிறேன்? என்னுடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நீ புரிந்து கொள்ளுகிறாயா? இன்றைய நடைமுறை தேவன் தாமாகவே நான் இருக்கிறேன், மேலும் அவரே ஜீவ விருட்சம். என்னை அளவிட மனுஷீக எண்ணங்களைப் பயன்படுத்தாதே. புறம்பாக, நான் ஒரு மரத்தைப் போல் இல்லை, ஆனால் உண்மையில் நான் தான் ஜீவ விருட்சம் என்பதை நீ அறிவாயா? என்னுடைய ஒவ்வொரு அசைவும், என்னுடைய பேச்சும், என்னுடைய நடத்தையும் ஜீவ விருட்சத்தின் கனி, மேலும் அவை என் ஆள்தத்துவம்—அவையே என்னுடைய முதற்பேறான குமாரர்கள் புசிக்க வேண்டியவை, ஆகவே, முடிவாக, நானும் என் முதற்பேறான குமாரர்களும் மாத்திரமே ஒரே போல் இருப்போம். அவர்கள் என்னைப் போல ஜீவிக்கவும் எனக்குச் சாட்சி கொடுக்கவும் முடியும். (நாங்கள் ஆவிக்குரிய உலகத்துக்குள் பிரவேசித்த பின்னர் இந்த விஷயங்கள் நடைபெறும். சரீரத்தில் மட்டுமே நாங்கள் ஒன்று போல் இருப்போம்; மாம்சத்தில் நாங்கள் ஏறக்குறைய அதே போல் இருக்கலாம், ஆனால் இன்னும் எங்களுக்கு எங்களுடைய சொந்த முன்னுரிமைகள் இருக்கும்.)

நான் என் முதற்பேறான குமாரர்களில் என் வல்லமையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எல்லாத் தேசங்கள் மேலும் மற்றும் எல்லா ஜனங்கள் மேலும் இருக்கும் அவர்களின் ஆளுகையிலும் அதை வெளிப்படுத்துவேன். இது என் கிரியையின் ஒரு படிநிலை. இப்போது தான் முக்கியமானது, மேலும், இப்போது தான் திருப்புமுனை. எல்லாம் நிறைவேற்றப்பட்டதும், என் கரம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள், மேலும் நான் எப்படித் திட்டமிடுகிறேன் நான் எப்படி நிர்வகிக்கிறேன் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்—இருந்த போதிலும், இது ஒரு தெளிவற்ற விஷயம் அல்ல. உலகின் எல்லா நாடுகளிலுமுள்ள இயங்கியலின் வெளிச்சத்தில் பார்க்கும் போது, அது வெகுதூரத்தில் இல்லை; அது ஜனங்களால் கற்பனை செய்யக்கூடிய ஒன்றல்ல, மேலும், இது அவர்களால் முன்னறியக் கூடிய ஒன்றுமல்ல. ஆசீர்வதிக்கப்படவும் பிரதிபலனைப் பெறுவதற்குமான வாய்ப்பை இழந்து விடாதபடி, நீங்கள் நிச்சயமாகக் கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. ராஜ்யத்தின் வாய்ப்பு தெரிகிறது, மேலும் முழு உலகமும் செத்துப் படிப்படியாகக் கீழே விழுகிறது. பாதாளத்தில் இருந்தும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில் இருந்தும் புலம்பலின் சத்தங்கள் ஒலித்து, ஜனங்களைப் பயமுறுத்துகிறது மற்றும் ஒளிந்து கொள்வதற்கு இடமின்றி அவர்களைத் திகிலடையச் செய்கிறது. என் நாமத்தினால் தெரிந்தெடுக்கப்பட்டு பின்னர் புறம்பாக்கப்பட்டவர்கள் யாவரும் பாதாளத்தில் சென்று சேர்வார்கள். இவ்வாறு, நான் பல முறை கூறியபடியே, நான் புறம்பாக்கப்பட வேண்டியவர்களை பாதாளத்துக்குள் வீசுவேன். உலகம் முழுவதும் அழிக்கப்பட்ட பின்னர், அழிக்கப்பட்ட எல்லாம் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலுக்குள் விழும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தக் காரியங்கள் அக்கினிக் கடலிலிருந்து அக்கினி மற்றும் கந்தகமும் எரிகிற கடலுக்குள் மாற்றப்படும். அப்போது, ஒவ்வொருவரும் நித்திய அழிவுக்கு (எனக்கு வெளியே இருக்கும் அனைவரும் என்று அர்த்தம்) அல்லது நித்திய ஜீவனுக்கு (எனக்குள் இருக்கும் அனைவரும் என்று அர்த்தம்) தீர்மானிக்கப்பட்டிருப்பார்கள். அப்போது நானும் எனது முதற்பேறான குமாரர்களும் ராஜ்யத்தில் இருந்து வெளிப்பட்டு நித்தியத்துக்குள் பிரவேசிப்போம். இது பின்னர் நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று; நான் இப்போது உங்களிடம் கூறினாலும், நீங்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். என் வழிநடத்துதலை மட்டுமே நீங்கள் பின்தொடர்ந்து, என் வெளிச்சத்தில் நடந்து, என் அன்பில் என்னோடு கூட இருந்து, என்னுடைய வீட்டில் என்னுடனே மகிழ்ச்சியை அனுபவித்து, என்னுடைய ராஜ்யத்தில் என்னோடு ஆளுகை புரிந்து, எல்லாத் தேசங்களையும் எல்லா ஜனங்களையும் என் அதிகாரத்தின் கீழ் அரசாள மட்டுமே முடியும். மேலே நான் விவரித்த எல்லாவற்றிலும் நான் உங்களுக்குக் கொடுக்கும் முடிவற்ற ஆசீர்வாதங்களை உள்ளடக்கியிருக்கிறது.

முந்தைய: அத்தியாயம் 101

அடுத்த: அத்தியாயம் 103

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக