அத்தியாயம் 12

நீ நிலையற்ற மனநிலையைப் பெற்றிருப்பாயானால், காற்றையும் மழையையும் போல இங்கும் அங்கும் அலைமோதிக்கொண்டிருப்பாயானால், உன் முழுப் பலத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல முடியவில்லை என்றால், என் கோல் உன்னை விட்டு ஒருபோதும் தூரம் போகாது. நீ கையாளப்படும்போது, சுற்றுச்சூழல் எவ்வளவு மோசமாக உள்ளதோ மற்றும் நீ எவ்வளவு அதிகமாகத் துன்புறுத்தப்படுகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் மீதான உன்னுடைய அன்பு அதிகரிக்கும், மேலும் நீ உலகத்துடன் ஒட்டிக்கொள்வதை நிறுத்திக்கொள்வாய். முன்னோக்கிச் செல்ல ஒரு மாற்று வழி இல்லாமல், நீ என்னிடம் வந்து உனக்கான பலத்தையும் நம்பிக்கையையும் திரும்பப் பெறுவாய். இருப்பினும், எளிதான சூழல்களில், நீ குழப்பமடைவாய். நேர்மறையான பக்கத்திலிருந்து நீ பிரவேசிக்க வேண்டும். செயல்படுகிறவனாக இருக்க வேண்டும் மற்றும் செயலற்றவனாக இருக்கக்கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் நீ எவராலும் அல்லது எதனாலும் அசைக்கப்படக்கூடாது மற்றும் நீ யாருடைய வார்த்தைகளாலும் தூண்டப்படக்கூடாது. நீ ஒரு நிலையான மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும். ஜனங்கள் என்ன சொன்னாலும், நீ சத்தியம் என்று அறிந்ததை உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும். நீ யாரை எதிர்கொண்டாலும், என் வார்த்தைகள் உனக்குள் எப்போதும் கிரியை செய்ய வேண்டும்; நீ எனக்காக உன்னுடைய சாட்சியில் உறுதியாக நிற்கக் கூடியவனாகவும், என் பாரங்களுக்குக் கரிசனை காட்டக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். நீ உன் சொந்த யோசனைகளைக் கொண்டிருக்காமல் மற்றவர்களுடன் கண்மூடித்தனமாக உடன்படக் கூடாது; மாறாக, சத்தியத்துடன் ஒத்துப்போகாத விஷயங்களுக்கு எதிர்த்து நிற்க உனக்குத் தைரியம் இருக்க வேண்டும். ஏதோ தவறாக இருக்கிறது என்பது உனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தும் கூட, அதை வெளிப்படுத்துவதற்கான தைரியம் உனக்கு இல்லையென்றால், அப்போது, நீ சத்தியத்தைக் கைக்கொள்பவன் அல்ல. நீ ஏதோ சொல்ல விரும்புகிறாய், ஆனால் அதை வெளிப்படையாக பேசுவதற்கான தைரியம் உனக்கு இல்லை, அதனால் எதையோ பேசிவிட்டு, பின்னர் தலைப்பை மாற்றுகிறாய்; சாத்தான் உனக்குள் இருந்து உன்னைப் பிடித்து வைத்திருக்கிறான், நீ எந்தப் பலனும் இல்லாமல் பேசும்படிக்கும், கடைசிவரை விடாமுயற்சியுடன் இருக்க முடியாமல் போகும்படிகும் செய்கிறான். உன் இருதயத்தில் நீ இன்னும் பயத்தைக் கொண்டிருக்கிறாய், இது உன்னுடைய இருதயம் இன்னும் சாத்தானின் கருத்துக்களால் நிறைந்திருப்பதனால்தான் அல்லவா?

ஜெயங்கொள்ளுபவர் என்பவர் யார்? கிறிஸ்துவின் நல்ல போர் வீரர்கள் ஆவிக்குரிய ரீதியில் பலமுள்ளவர்களாய் இருக்கும்படி, தைரியமாக இருந்து என்னைச் சார்ந்துகொள்ள வேண்டும்; அவர்கள் போர்வீரர்களாக மாறுவதற்கும், மரணம் வரை சாத்தானுடன் யுத்தம் பண்ணுவதற்கும் போராட வேண்டும். நீ எப்போதும் விழித்திருக்க வேண்டும், அதனால்தான் ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் உற்சாகமாக ஒத்துழைத்து என்னிடம் நெருங்கிவரக் கற்றுக்கொள் என்று நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன். எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், என் பேச்சைக் கேட்டு, என் வார்த்தைகளிலும் செயல்களிலும் கவனம் செலுத்தி, உன்னால் எனக்கு முன்பாக அமைதியாக இருக்க முடியமானால், அப்போது நீ அலைந்துதிரிகிறவனாய் இருக்க மாட்டாய், உன் நிலையையும் இழக்க மாட்டாய். எனக்குள் இருந்து நீ பெற்றுக்கொள்ளும் எதையும் கைக்கொள்ள முடியும். எனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன்னுடைய நிலையை நோக்கியதாக உள்ளது, மேலும் அவை உன்னுடைய இருதயத்தைக் குத்துகின்றன. நீ வார்த்தையின் மூலம் அவற்றை மறுத்தாலும், உன் இருதயத்தால் அவற்றை மறுக்க முடியாது. மேலும், நீ என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்தால், நீ நியாயந்தீர்க்கப்படுவாய். ஏனெனில், என் வார்த்தைகள் சத்தியமும், ஜீவனும் மற்றும் வழியுமாக இருக்கின்றன; அவைகள் கூர்மையான இருபுறமும் கருக்குள்ள பட்டயமாக இருக்கின்றன, அவைகளால் சாத்தானைத் தோற்கடிக்க முடியும். என் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அவைகளைக் கைக்கொள்வதற்கான பாதையைக் கொண்டிருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவற்றைக் கைக்கொள்ளாதவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நியாயந்தீர்க்கப்படுவார்கள்; இது மிகவும் நடைமுறையானது. இப்போதெல்லாம், நான் நியாயந்தீர்க்கிறவர்களின் வரம்பு விரிவடைந்திருக்கிறது: என்னை அறிந்தவர்கள் மட்டுமே எனக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்பதாக இல்லாமல், என்னை விசுவாசிக்காதவர்களும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கவும் தடுக்கவும் முயற்சிப்பவர்களும் கூட நியாயந்தீர்க்கப்படுவார்கள். எனக்கு முன்னால் என் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் தேவன் பட்சிக்கும் அக்கினியாக இருப்பதைக் காண்பார்கள்! தேவன் மகத்துவமானவர்! அவர் தமது நியாயத்தீர்ப்புகளைச் செயல்படுத்தி, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கிறார். திருச்சபையில் இருந்தும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தாதவர்கள், அந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிப்பவர்கள், பகட்டாக வெளிக்காட்டிக்கொள்பவர்கள், தவறான நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களைக் கொண்டவர்கள், தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதற்கும் பானம்பண்ணுவதற்கும் முயற்சி செய்யாதவர்கள், குழப்பத்தில் உள்ளவர்கள் மற்றும் சந்தேகப்படுபவர்கள், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆராய்கிறவர்கள்—ஆகிய இந்த ஜனங்களுக்கு எந்த நேரத்திலும் நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் வெளிப்படும். ஜனங்களுடைய செயல்கள் அனைத்தும் வெளிப்படும். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் உள்ளான இருதயங்களைத் தேடுகிறார், எனவே முட்டாள்தனமாக இருக்க வேண்டாம்; கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். கண்மூடித்தனமாக நீயாக செயல்படாதே. உன்னுடைய செயல்கள் என் வார்த்தைகளுக்கு ஏற்ப இல்லை என்றால், அப்போது நீ நியாயந்தீர்க்கப்படுவாய். அது பாசாங்கு செய்வதற்கோ, உண்மையாக இருப்பதைப்போல காண்பிப்பதற்கோ, அல்லது உண்மையாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கோ அல்ல; நீ எனக்கு முன்பாக வந்து அடிக்கடி என்னுடன் பேச வேண்டும்.

எனக்குள் இருந்து நீ எதை எடுத்துக் கொண்டாலும் அது உனக்குக் கைக்கொள்வதற்கான பாதையை அளிக்கும். நீயும் என் வல்லமைகளுடன் கூட இருப்பாய், என் சமூகத்தைக் கொண்டிருப்பாய், மேலும் எப்போதும் என் வார்த்தைகளில் நடந்துகொள்வாய்; நீ எல்லா உலக விஷயங்களையும் கடந்து உயிர்த்தெழுதலின் வல்லமையைப் பெற்றிருப்பாய். உன்னுடைய வார்த்தைகள், நடத்தை மற்றும் செயல்கள் ஆகியவற்றில் என்னுடைய வார்த்தைகளையும் என் பிரசன்னத்தையும் நீ பெற்றிருக்கவில்லை என்றால், நீ என்னிடமிருந்து உன்னையே தூரமாக்கிக்கொண்டு நீயாகவே வாழ்ந்தால், மனதின் கருத்துகளிலும், உபதேசங்களிலும், விதிகளிலும் வாழ்ந்தால், நீ பாவங்களில் உன் மனதை வைத்திருக்கிறாய் என்பதற்கு அதுவே சான்றாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன்னுடைய பழைய சுயத்தை நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறாய், மற்றவர்கள் உன் சுயத்திற்குத் தீங்கு விளைவிக்கவோ அல்லது உன்னுடைய ஆத்துமாவைச் சிறிதளவும் சேதப்படுத்தவோ அனுமதிக்காதிருக்கிறாய். இதைச் செய்யும் ஜனங்கள் மிகவும் குறைவான திறன் கொண்டவர்கள் மற்றும் மிகவும் முட்டாள்தனமானவர்கள், மேலும் அவர்களால் தேவனுடைய கிருபையைப் பார்க்கவோ அல்லது அவருடைய ஆசீர்வாதங்களை உணர்ந்துகொள்ளவோ முடியாது. நீ தொடர்ந்து தட்டிக்கழிக்கும் நோக்குடன் நடந்துகொண்டால், எப்போது நான் உனக்குள் கிரியை செய்வதை அனுமதிக்கக் கூடியவனாவாய்? நான் பேசி முடித்த பிறகு, நீ கவனித்திருக்கிறாய், ஆனால் எதையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை, உன்னுடைய பிரச்சனைகள் உண்மையில் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம், குறிப்பாக நீ பலவீனமாகிவிடுவாய். அது எத்தகைய வளர்ச்சியைக் குறிக்கிறது? நீ எப்போதும் கவர்ந்திழுக்கப்பட வேண்டும் என்றால், நான் எப்போது உன்னை முழுமையாக்க முடியும்? நீ உடைக்கப்படுதலுக்கும் காயப்படுதலுக்கும் பயப்படுகிறாய் என்றால், மற்றவர்களை எச்சரிக்க நீ விரைந்து சென்று, “என்னைக் கையாள யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்; என் இயல்பான, பழைய மனநிலையை நானே விட்டுவிட முடியும்” என்று கூற வேண்டும். அப்போது, யாரும் உன்னை விமர்சிக்க மாட்டார்கள் அல்லது உன்னைத் தொட மாட்டார்கள், மேலும் யாரும் உன்னைப் பற்றி அக்கறைகொள்ளாதபடிக்கு, நீ விரும்பும் விதத்தில் நீ விசுவாசிக்கும்படி விடுதலையுடன் இருப்பாய். உன்னால் என் அடிச்சுவடுகளை இப்படிப் பின்பற்ற முடியுமா? நான் உன்னுடைய தேவன் மற்றும் உன்னுடைய கர்த்தர் என்பதில் நீ நிச்சயமுள்ளவனாய் இருக்கிறாய் என்று கூறுவது வெற்று வார்த்தைகளைத் தவிர வேறில்லை. நீ உண்மையிலேயே சந்தேகமில்லாமல் இருந்தால், இந்த விஷயங்கள் ஒரு பிரச்சனையாக இருக்காது, மேலும் தேவனுடைய அன்பும் ஆசீர்வாதமும் உன் மீது வந்திருக்கிறது என்று நீ விசுவாசிப்பாய். நான் பேசும்போது, என் குமாரர்களிடம் பேசுகிறேன், என் வார்த்தைகளுக்கான நன்றிகளும் துதிகளும் ஏறெடுக்கப்பட வேண்டும்.

முந்தைய: அத்தியாயம் 11

அடுத்த: அத்தியாயம் 13

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக