அத்தியாயம் 8

சர்வவல்லமையுள்ள தேவன், ராஜ்யத்தின் ராஜாவானவர் காணப்பட்ட காலத்தில் இருந்து, தேவனுடைய நிர்வாகத்தின் நோக்கம் முழு பிரபஞ்சம் முழுவதிலும் முழுமையாக விரிவடைந்துள்ளது. தேவனுடைய தோற்றம் சீனாவில் காணப்பட்டது மட்டுமில்லாமல் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் காணப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்தப் பரிசுத்த நாமத்தை அழைத்து, தேவனோடு ஏதாவது ஒரு வகையில் ஐக்கியங்கொள்ள முயன்று, சர்வவல்லமையுள்ள தேவனுடைய சித்தத்தைக் கிரகித்து, திருச்சபையில் ஒத்துழைப்புடன் அவருக்கு ஊழியஞ்செய்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் செயல்படும் அதிசய வழி இதுவாகும்.

பல்வேறு நாடுகளின் மொழிகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன, ஆனால் ஒரே ஒரு ஆவியானவர் மட்டுமே உள்ளார். இந்த ஆவியானவர் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள திருச்சபைகளை இணைக்கிறார், மற்றும் ஒரு சிறு வேறுபாடு கூட இல்லாமல் தேவனுடன் ஒன்றாயிருக்கிறார். இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். பரிசுத்த ஆவியானவர் இப்போது அவர்களை அழைக்கிறார், அவருடைய குரல் அவர்களை எழுப்புகிறது. அது தேவனுடைய இரக்கத்தின் குரலாகும். அவர்கள் அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்த நாமத்தை அழைக்கிறார்கள்! அவர்கள் துதி செலுத்திப் பாடுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஒருபோதும் எந்த வழி பிறழ்தலும் இருக்க முடியாது; இந்த ஜனங்கள் சரியான பாதையில் முன்னேற எதையும் செய்வார்கள், அவர்கள் பின் வாங்க மாட்டார்கள், அதிசயங்கள் மேல் அதிசயங்கள் நடக்கும். இது ஜனங்கள் கற்பனை செய்யக் கடினமானதும், ஊகிக்க இயலாத ஒன்றுமாகும்.

சர்வவல்லமையுள்ள தேவன் பிரபஞ்சத்திலுள்ள ஜீவனின் ராஜாவானவர்! அவர் மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் அமர்ந்து உலகை நியாயந்தீர்க்கிறார், எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார், எல்லா தேசங்களையும் ஆளுகை செய்கிறார்; எல்லா ஜனங்களும் அவரிடம் தங்கள் முழங்காலை முடக்குகிறார்கள், அவரிடம் ஜெபித்து, அவரிடம் நெருங்கி, அவருடன் தொடர்பு கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு காலம் தேவனை நம்புகிறீர்கள், உங்கள் அந்தஸ்து எவ்வளவு உயர்ந்தது அல்லது உங்களின் மேல்நிலை எவ்வளவு பெரியது என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் உங்கள் இருதயங்களில் தேவனுக்கு எதிராகச் சென்றால், நீங்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டும், வலிமிகுந்த வேண்டுகோளின் சத்தங்களை வெளியிட்டு, அவருக்கு முன்பாகச் சிரம் பணிய வேண்டும்; இது உண்மையில் உங்கள் சொந்தச் செயல்களின் பலனை அறுவடை செய்கிறதாகும். இந்த அழுகையின் சத்தம் அக்கினியும் கந்தகமுமான கடலில் துன்புறுத்தப்படுகையில் உண்டாகும் சத்தமாகும், மேலும் இது தேவனுடைய இருப்புக்கோலால் தண்டிக்கப்படுகையில் உண்டாகும் சத்தமாகும்; இதுவே கிறிஸ்துவின் இருக்கைக்கு முன்பான நியாயத்தீர்ப்பாகும்.

சிலர் பயப்படுகிறார்கள், சிலர் குற்ற மனசாட்சிக்கு இடங்கொடுக்கிறார்கள், சிலர் விழிப்புடன் இருக்கிறார்கள், சிலர் கவனத்துடன் கவனிக்கப் பார்த்துக் கொள்கிறார்கள், சிலர் மிகுந்த வருத்தத்தை உணர்ந்து, மனந்திரும்பிப் புதிதாகத் தொடங்குகிறார்கள், சிலர் வேதனையில் மனங்கசந்து அழுகிறார்கள், சிலர் எல்லாவற்றையும் கைவிட்டு தீவிரமாகத் தேடுகிறார்கள், சிலர் தங்களையே ஆராய்ந்து பார்த்து இனிமேல் மோசமாக நடக்கத் துணிவதில்லை, சிலர் தேவனிடம் நெருங்கிச் செல்லத் துரிதமாக முயல்கிறார்கள், ஏன் தங்கள் வாழ்க்கை முன்னேறுவதில்லை என்று கேட்டு சிலர் தங்கள் சொந்த மனசாட்சியை ஆராய்கிறார்கள். சிலர் குழப்பத்தில் இருக்கிறார்கள், சிலர் தங்கள் கால்களைக் கட்டவிழ்த்துத் தைரியமாக முன்னேறி திறவுகோலைப் புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் உடனடியாகக் கவனங்கொள்கிறார்கள். சிலர் இன்னும் தயங்கிக் கொண்டு தரிசனங்களைப் பற்றித் தெளிவற்றிருக்கிறார்கள், அவர்கள் தங்கள் இருதயங்களில் தாங்கிச் சுமந்துகொண்டிருக்கும் சுமையானது உண்மையில் கனமானதாகும்.

உங்கள் மனம் தெளிவாக இல்லையென்றால் பரிசுத்த ஆவியானவர் எவ்வகையிலும் உங்களுக்குள் செயல்பட வழியிருக்காது. நீ கவனம் செலுத்துகின்ற அனைத்தும், நீ நடக்கிற வழியும், உன் இருதயம் ஏங்குகிற அனைத்தும் உன் கருத்துக்களாலும் உன்னுடைய சுயநீதியாலும் நிரம்பியிருக்கின்றன! உன்னை இப்போதே முழுமையாக்கி, அதனால் விரைவில் உன்னை நான் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையவனாக மாற்றவும், என்னுடைய பாரமான சுமையைக் குறைக்கவும் வேண்டும் என்று எப்படியெல்லாம் விரும்பி நான் பொறுமையின்றி எரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களை இவ்வழியில் பார்க்கும்போது, விரைவான விளைவுகளைப் பெற அப்படி செய்தல் ஆகாது என்று நான் காண்கிறேன். ஆனால் நான் பொறுமையாகக் காத்திருந்து, மெதுவாக நடந்து, மெதுவாக ஆதரவளித்து உங்களை வழிநடத்த வேண்டும். ஆ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்! எதைக் கைவிட வேண்டும், உன் பொக்கிஷங்கள் என்ன, உன் அபாயகரமான பலவீனங்கள் என்ன, உன் தடைகள் என்ன? இந்தக் கேள்விகளைக் குறித்து உன் ஆவியிலும் என்னுடனான ஐக்கியத்திலும் சிந்தித்துப் பார்! நான் விரும்புவது என்னவென்றால், உங்கள் இருதயங்கள் அமைதியுடன் என்னை நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதே; உங்கள் உதட்டளவிலான ஊழியத்தை நான் விரும்பவில்லை. எனக்கு முன்பாக வந்து உண்மையிலேயே என்னைத் தேடுபவர்களாகிய உங்களுக்கு, நான் அனைத்தையும் வெளிப்படுத்துவேன். என் வேகம் விரைவுபடுகிறது; உன் இருதயம் என்னை நோக்கியும், நீ எல்லா நேரங்களிலும் என்னைப் பின்பற்றும் வரையிலும், எந்த நேரத்திலும் என் சித்தம் ஏவுதலுடன் உனக்குத் தரப்படும், உனக்கு வெளிப்படுத்தப்படும். காத்திருக்கக் கவனமாக இருப்பவர்கள், ஊட்டத்தைப் பெறுவார்கள், மேலும் முன்னேற ஒரு வழியையும் பெறுவார்கள். சிந்தனையற்று இருப்பவர்களுக்கு என் இருதயத்தைப் புரிந்து கொள்வது கடினம், அவர்கள் முட்டுச் சந்துக்குள் நடந்து போவார்கள்.

நீங்கள் அனைவரும் துரிதமாக எழுந்து என்னுடன் ஒத்துழைக்க வேண்டும், ஏதோ ஒரு நாள் ஒரு இரவு மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் எனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கரம் எப்பொழுதும் உன்னை என்னுடன் இழுத்துக் கொள்ளவும், உன்னை உற்சாகப்படுத்தவும், தொடர்ந்து பயணிக்க உன்னை உந்தித் தள்ளி, தொடர்ந்து செல்ல உன்னை இணங்கச் செய்து, முன்னேற உன்னிடம் அவசர வேண்டுகோள் ஒன்று செய்ய வேண்டும்! நீ என் சித்தத்தைப் புரிந்து கொள்வதே இல்லை. உங்கள் சொந்தக் கருத்துக்களின் தடைகளும் உலகச் சிக்கல்களின் தடைகளும் மிகத் தீவிரமாக இருக்கின்றன, மேலும் நீங்கள் என்னுடன் ஆழமான நெருக்கத்தைக் கொண்டிருக்க முடிவதில்லை. வெளிப்படையாகச் சொல்வதென்றால், உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கும் போது நீங்கள் என்னிடம் வருகிறீர்கள், ஆனால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாத போது, உங்கள் இருதயங்கள் கலக்கமடைகின்றன. உங்கள் இருதயங்கள் ஒரு திறந்த சந்தையைப் போல மாறி, சாத்தானிய மனப்பான்மையால் நிரப்பப்படுகின்றன; உலகக் காரியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, என்னுடன் ஐக்கியங்கொள்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் எப்படி உங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும்? ஆனால் கவலைப்படுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நேரம் மிகவும் குறைவாகவும் பணியானது மிகவும் கடினமானதாகவும் இருக்கின்றது. என் அடிகள் முன்னோக்கிச் செல்கின்றன; நீங்கள் உங்களிடம் உள்ள அனைத்தையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு நொடியும் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டு, என்னுடன் நெருக்கமாக ஐக்கியங்கொள்ள வேண்டும். அப்போது, எந்த நேரத்திலும் என் சித்தம் உனக்கு நிச்சயமாக வெளிப்படுத்தப்படும். நீங்கள் என் இருதயத்தைப் புரிந்து கொள்ளும்போது உங்களுக்கு முன்னேறுவதற்கு ஒரு வழியிருக்கும். இனி நீங்கள் தயங்கக் கூடாது. என்னுடன் உண்மையான ஐக்கியங்கொள்ளுங்கள், வஞ்சிக்க முயலாதீர்கள் அல்லது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்க முயற்சிக்காதீர்கள்; அது உங்களையே ஏமாற்றுவதாகவும் கிறிஸ்துவின் இருக்கைக்கு முன்பாக எந்த நேரத்திலும் வெளிப்படுத்தப்படுவதாகவும் இருக்கும். உண்மையான பொன் நெருப்பால் பரீட்சிக்கப்படுவதற்கு அஞ்சாது, இதுவே சத்தியம்! எந்தவிதமான தடுமாற்றங்களும் வேண்டாம், சோர்வடையவோ பலவீனமாகவோ இருக்க வேண்டாம். உங்கள் ஆவியில் என்னுடன் நேரடியாக ஐக்கியம் கொள்ளுங்கள், பொறுமையாகக் காத்திருங்கள், நான் எனக்கே உரிய நேரத்தில் உங்களுக்கு நிச்சயமாக வெளிப்படுத்துவேன். நீ கண்டிப்பாகக் கவனமாக இருக்க வேண்டும், என் முயற்சி உன்னிடம் வீணாகி விட அனுமதிக்கக் கூடாது; ஒரு கணத்தைக் கூட இழந்து விடாதே. உன்னுடைய இருதயம் என்னுடன் தொடர்ந்து ஐக்கியங்கொள்ளும்போது, உன் இருதயம் எனக்கு முன்பாகத் தொடர்ந்து வாழும்போது, ஒருவராலும், எந்த ஒரு நிகழ்வாலும், எந்த ஒரு காரியத்தாலும், எந்த கணவனோ, மகனோ மகளோ, உன் இருதயத்திற்குள்ளிருக்கும் என்னுடனான ஐக்கியத்தைத் தொந்தரவு செய்ய முடியாது. உன் இருதயம் பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு, ஒவ்வொரு நொடியிலும் நீ என்னுடன் ஐக்கியங்கொள்ளும்போது என் சித்தம் நிச்சயமாக உனக்கு வெளிப்படும். உன்னுடைய சூழல் எப்படியிருந்தாலும், அல்லது எந்த நபர், எந்த நிகழ்வு அல்லது காரியத்தை நீ சந்தித்தாலும், இவ்வழியில் நீ தொடர்ந்து என்னிடம் நெருங்கி வரும்போது, நீ குழப்பமடைய மாட்டாய் ஆனால் முன்னோக்கிச் செல்ல ஒரு வழி இருக்கும்.

சாதாரணமாக, நீ பெரிய அல்லது சிறிய விஷயங்களில் எதையும் நழுவ விடாவிட்டால், உன்னுடைய ஒவ்வொரு எண்ணமும் யோசனையும் சுத்திகரிக்கப்பட்டிருந்தால், உன் ஆவியில் நீ அமைதியாக இருந்தால், அப்போது நீ ஏதேனும் சிக்கலை எதிர்கொள்ளும்போதெல்லாம், உடனடியாக என் வார்த்தைகள் உன்னையே பரிசோதித்துக் கொள்ளும்படியான ஒரு பிரகாசமான கண்ணாடியைப் போல உனக்குள் ஏவப்படும், முன்னோக்கிச் செல்ல உனக்கு ஒரு வழி உண்டாகும். இதுவே நோய்க்கான சரியான மருந்தைப் பரிந்துரைப்பது என்று அழைக்கப்படுகிறது! இந்த நிலை நிச்சயமாக குணமாகும், இப்படிப்பட்டதே தேவனுடைய சர்வவல்லமை ஆகும். நீதிக்காக பசிதாகம் உள்ளவர்களையும் உண்மையுடன் தேடுபவர்களையும் நான் நிச்சயமாக ஒளியூட்டி, பிரகாசிப்பிப்பேன். ஆவிக்குரிய உலகின் மர்மங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழியை நான் உங்கள் அனைவருக்கும் காண்பிப்பேன், எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய பழைய சீர்கேடான மனப்பான்மையைத் தூக்கி எறியச் செய்வேன், இதனால் நீங்கள் வாழ்க்கையின் முதிர்ச்சியையடைந்து, என் பயன்பாட்டிற்கு ஏற்றவர்களாக இருப்பீர்கள், இதனால் சுவிசேஷத்தின் பணியும் எந்தத் தடையுமின்றித் துரிதமாகத் தொடர முடியும். அப்போது தான் எனது சித்தம் திருப்தியடையும், அப்போது தான் தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மிகக் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படும். தேவன் ராஜ்யத்தைப் பெறுவார், பூமிக்கு வருவார், நாம் அனைவரும் ஒன்றாக மகிமைக்குள் நுழைவோம்!

முந்தைய: அத்தியாயம் 7

அடுத்த: அத்தியாயம் 9

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக