மூன்று புத்திமதிகள்
தேவனை விசுவாசிக்கிற ஒருவராக, எல்லாவற்றிலும் அவரையல்லாமல் வேறு யாருக்கும் நீங்கள் விசுவாசமாக இருக்கக்கூடாது, எல்லாவற்றிலும் அவருடைய சித்தத்திற்கு இணக்கமுள்ளவராக இருக்க வேண்டும். இருந்தபோதிலும், இந்தச் செய்தியை எல்லோரும் புரிந்துக்கொண்டாலும், மனிதனின் பல்வேறு சிரமங்கள் காரணமாக—உதாரணமாக, அவனுடைய அறியாமை, முட்டாள்தனம் மற்றும் சீர்கேட்டின் காரணமாக, எல்லாவற்றிலும் மிகத்தெளிவானதும் அடிப்படையானதுமாக இருக்கும் இந்தச் சத்தியங்கள் அவனில் முற்றிலும் வெளியரங்கமாகத் தெரியவில்லை, எனவே, உங்கள் முடிவு தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு, உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை நான் முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும். நான் தொடர்வதற்கு முன்பு, நீங்கள் முதலில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்: நான் பேசுகிற வார்த்தைகள் சகல மனுஷருக்கும் நேராக பேசப்படுகிற சத்தியங்களாகும்; அவை ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது ஒரு வகை நபருக்கு மட்டுமே கூறப்பட்டதல்ல. ஆகையால், சத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து என் வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும், மேலும் நீங்கள் முழுமையான கவனம் நிறைந்த மனப்பான்மையையும் நேர்மையையும் கொண்டிருக்க வேண்டும்; நான் பேசுகிற ஒரு வார்த்தையையோ அல்லது சத்தியத்தையோ புறக்கணிக்காதீர்கள், மேலும் நான் பேசுகிற சகல வார்த்தைகளையும் லேசாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சத்தியத்திற்குப் பொருத்தமில்லாத பல காரியங்கள் செய்திருப்பதை நான் காண்கிறேன், ஆகவே துன்மார்க்கத்தினாலும் அருவருப்பினாலும் அடிமைப்படுத்தப்படாமல், மேலும், நீங்கள் சத்தியத்தை மிதித்துப்போடவோ அல்லது தேவனுடைய வீட்டின் எந்த மூலையையும் தீட்டுப்படுத்தவோ கூடாதபடிக்கு, நீங்கள் சத்தியத்தின் ஊழியக்காரராகும்படிக்கு நான் குறிப்பாகக் கேட்கிறேன். இதுவே உங்களுக்கான எனது புத்திமதி. இப்போது கையில் இருக்கும் தலைப்பைப் பற்றி நான் பேசுகிறேன்.
முதலாவதாக, உங்களது தலைவிதியின் பொருட்டு, நீங்கள் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அது என்னவென்றால், நீங்கள் தேவனுடைய வீட்டிலே ஓர் உறுப்பினர் என்பதை ஒப்புக்கொள்ளுகிறபடியினால், தேவனுக்கு சமாதானத்தைக் கொண்டுவந்து எல்லாவற்றிலும் அவரை நீங்கள் திருப்திப்படுத்த வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், உங்களுடைய செயல்களில் கொள்கையுடையவர்களாக நீங்கள் இருக்க வேண்டும், மற்றும் அவற்றில் உள்ள சத்தியத்திற்கு இணக்கமாக இருக்க வேண்டும். இது உனக்கு அப்பாற்பட்டது என்றால், நீ தேவனால் வெறுக்கப்படுவாய், நிராகரிக்கப்படுவாய், மற்றும் ஒவ்வொரு மனிதராலும் வெறுத்து ஒதுக்கப்படுவாய். நீ அப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலைக்கு வந்துவிட்டால், தேவனுடைய வீட்டிலே ஒருவனாக அவர்கள் மத்தியில் உன்னைக் கணக்கிட முடியாது, இதுதான் தேவனால் அங்கீகரிக்கப்படாமல் இருப்பதன் அர்த்தமாகும்.
இரண்டாவதாக, நேர்மையானவர்களை தேவன் விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பொதுவாகவே, தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார், எனவே அவருடைய வார்த்தைகளை எப்போதும் நம்பலாம்; மேலும், அவருடைய செயல்கள் குற்றமற்றவை மற்றும் நிச்சயமானவைகளாக இருக்கின்றன, அதனால்தான் தம்மிடம் முற்றிலும் நேர்மையானவர்களாக இருக்கிறவர்களைத் தேவன் விரும்புகிறார். நேர்மை என்பது உங்களுடைய இருதயத்தை தேவனுக்குக் கொடுப்பதும், எல்லாவற்றிலும் தேவனுடன் உண்மையாக இருப்பதும், எல்லாவற்றிலும் அவருடன் வெளிப்படையாக இருப்பதும், உண்மைகளை ஒருபோதும் மறைக்காமல் இருப்பதும், உங்களுக்கு மேலே மற்றும் கீழே உள்ளவர்களை ஏமாற்ற முயற்சிக்காமல் இருப்பதும், மற்றும் தேவனிடத்தில் தயவைப் பெறுவதற்காக மட்டுமே காரியங்களைச் செய்யாமல் இருப்பதுமாகும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், நேர்மையாக இருப்பது என்பது உங்களுடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் தூய்மையாக இருப்பதும், மற்றும் தேவனையும் மனிதனையும் ஏமாற்றாமல் இருப்பதுமாகும். நான் என்ன சொல்கிறேன் என்பது மிகவும் எளிமையானது, ஆனால் உங்களுக்கு இது இரு மடங்கு கடினமானதாக இருக்கிறது. பலருக்கு நேர்மையாகப் பேசுவதையும் செயல்படுவதையும் விட நரகத்திற்குள்ளாக தண்டிக்கப்படுவதே மேலானதாக இருக்கும். நேர்மையற்றவர்களுக்காக நான் வேறு வழிமுறை வைத்திருப்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை. நீங்கள் நேர்மையாக இருப்பது உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை மெய்யாகவே நான் நன்கு அறிவேன். ஏனெனில் நீங்கள் அனைவரும் மிகவும் புத்திசாலிகள், உங்கள் சொந்த சிறிய அளவுகோல் கொண்டு மக்களை அளவிடுவதில் மிகவும் சிறந்தவர்கள், இது எனது கிரியையை மிகவும் எளிதாக்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இரகசியங்களை உங்கள் மார்போடு கட்டியணைத்துக் கொள்வதால், நான் உங்களை ஒவ்வொருவராகப் பேரழிவின் அக்கினிக்குள் அனுப்புவேன், அதன்பிறகு நீங்கள் என் வார்த்தைகளில் உள்ள உங்கள் நம்பிக்கையின்படியே மரித்துப் போகலாம். இறுதியில், “தேவன் உண்மையுள்ள தேவன்” என்கிற வார்த்தைகளை உங்கள் வாயிலிருந்து நான் வர வைப்பேன், அதன்பின் நீங்கள் உங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு, “மனிதனின் இருதயம் வஞ்சகமானது!” என்று புலம்புவீர்கள். இந்த நேரத்தில் உங்களது மனநிலை என்னவாக இருக்கும்? நீங்கள் இப்போது இருப்பதைப்போல வெற்றிகரமாக இருக்கமாட்டீர்கள் என்று நான் கற்பனைசெய்துப் பார்க்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதைப் போலவே “ஆழ்ந்த நிலையிலும் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத” நபராகவும் இருப்பீர்கள். தேவனுடைய சமுகத்தில், சிலர் அனைத்திலும் முதன்மையானவர்களாகவும் சரியானவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்கள் “நன்னடத்தையுடன்” இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்கிறார்கள், ஆனாலும் அவர்கள் ஆவியானவரின் சமுகத்தில் தங்களுடைய நச்சுப்பற்களைத் திறந்து, தங்கள் நகங்களைக் காற்றில் வீசுகிறார்கள். இப்படிப்பட்டவர்களை நீங்கள் நேர்மையானவர்கள் கூட்டத்தில் ஒருவராக எண்ணுவீர்களா? நீ ஒரு மாய்மாலக்காரனாக இருந்தால், “தனிப்பட்டவர்களுக்கிடையேயான உறவுகளில்” நீ திறமையான ஒருவனாக இருந்தால், நிச்சயமாக நீ தேவனை அற்பமாக நடத்த முயற்சி செய்கிறாய் என்று நான் சொல்கிறேன். உன்னுடைய வார்த்தைகள் சாக்குபோக்குகள் மற்றும் பயனற்ற நியாயங்களைக் கொண்ட புதிராக இருந்தால், நீ சத்தியத்தைப் பின்பற்றுவதை வெறுக்கிற ஒரு நபர் என்று நான் சொல்கிறேன். நீ வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளத் தயங்குகிற பல இரகசியங்கள் உன்னிடம் இருக்குமானால், உன் இரகசியங்களையும் உன் சிரமங்களையும் வெளிப்படுத்துவதற்கு மற்றவர்கள் வெளிச்சத்தின் வழியைத் தேடுவதற்கு முன்பாக நீ மிகவும் தயங்கி வெறுக்கிறாய் என்றால், நீ இரட்சிப்பை எளிதில் அடைய முடியாதபடிக்கு, இருளிலிருந்து எளிதில் வெளியே வராத ஒருவனாகவே இருக்கிறாய் என்று நான் சொல்கிறேன். சத்தியத்தின் வழியைத்தேடும் காரியம் உன்னை மிகவும் மகிழ்விக்கிறது என்றால், நீ எப்போதும் வெளிச்சத்தில் வசிக்கும் ஒருவனாக இருக்கிறாய். தேவனுடைய வீட்டில் ஓர் ஊழியக்காரனாக இருப்பதில் நீ மிகவும் மகிழ்ச்சியடைகிறாய், மேலும் தெளிவற்ற நிலையிலும் விடாமுயற்சியுடன், மனசாட்சியுடன் பணிபுரிந்து, எப்போதும் கொடுப்பவனாக ஒருபோதும் எடுத்துக்கொள்ளாதவனாக இருக்கிறாய் என்றால், நீ ஒரு விசுவாசமுள்ள பரிசுத்தவான் என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் நீ எந்தப் பிரதிபலனையும் தேடாமல், வெறுமனே ஒரு நேர்மையான நபராக மட்டுமே இருக்கிறாய். நீ கபடற்றவனாக இருக்க விரும்பினால், உன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கத் தயாராக இருந்தால், தேவனுக்காக உன் உயிரையும் தியாகம் செய்து, அவருக்கு சாட்சியாக உறுதியாக உன்னால் நிற்க முடியுமானால், உன்னைக் கருத்தில் கொள்ளாமல் மற்றும் உனக்காக எதையும் எடுத்துக்கொள்ளாமல், தேவனைத் திருப்திப்படுத்துவது ஒன்று மட்டுமே உனக்குத் தெரியும் என்ற அளவிற்கு நீ நேர்மையாக இருந்தால், அப்படிப்பட்டவர்கள்தான் வெளிச்சத்தில் வளர்க்கப்படுபவர்கள், மற்றும் ராஜ்யத்தில் என்றென்றும் வாழ்வார்கள் என்று நான் சொல்கிறேன். உனக்குள்ளாக உண்மையான நம்பிக்கையும் உண்மையான விசுவாசமும் இருக்கிறதா என்றும், தேவனுக்காக நீ பாடுகளை அனுபவித்ததற்கான பதிவு உன்னிடம் இருக்கிறதா என்றும், மற்றும் நீ தேவனுக்கு உன்னை முழுமையாகச் சமர்ப்பித்திருக்கிறாயா என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். இவை உன்னிடம் இல்லாவிட்டால், பிறகு உன்னிடம் கீழ்ப்படியாமை, வஞ்சகம், பேராசை மற்றும் முறையீடு ஆகியவையே உள்ளன. உன்னுடைய இருதயம் நேர்மையிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால்தான், நீ ஒருபோதும் தேவனிடமிருந்து நேர்மறையான அங்கீகாரத்தைப் பெறுவதில்லை, மேலும் நீ ஒருபோதும் வெளிச்சத்தில் வாழ்வதுமில்லை. இவ்வாறாக, ஒருவருக்கு நேர்மையான மற்றும் சுத்த இருதயம் இருக்கிறதா, அவர்களுக்குப் பரிசுத்தமான ஆத்துமா இருக்கிறதா என்பதைப் பொறுத்து ஒருவரின் தலைவிதி செயல்படும். நீ மிகவும் நேர்மையற்ற ஒருவனாக இருக்கிறாய் என்றால், தீங்கிழைக்கும் இருதயம் கொண்ட, அசுத்தமான ஆத்துமா கொண்ட ஒருவன் என்றால், உன் தலைவிதியின் பதிவேட்டில் எழுதப்பட்டுள்ளபடியே, மனிதன் தண்டிக்கப்படும் இடத்தில் நீயும் சென்றடைவது உறுதி. நீ மிகவும் நேர்மையானவனாக இருக்கிறாய் என்று கூறிக்கொண்டு, அதேநேரத்தில் ஒரு போதும் சத்தியத்திற்கு ஏற்பச் செயல்படவோ அல்லது உண்மையான வார்த்தையைப் பேசவோ நீ ஒரு போதும் முற்படவில்லை என்றால், தேவன் உனக்கு வெகுமதி அளிப்பாரென்று நீ இன்னுமா காத்திருக்கிறாய்? தேவன் உன்னை அவருடைய கண்ணின் மணிபோலப் பாதுகாத்துக் கொள்வார் என்று நீ இன்னும் நம்புகிறாயா? இவ்வாறு சிந்திப்பது முட்டாள்தனமானதல்லவா? நீ எல்லாவற்றிலும் தேவனை ஏமாற்றுகிறாய்; அசுத்தமான கைகளைக் கொண்டுள்ள உன்னைப் போன்ற ஒருவனுக்கு தேவனுடைய வீடு எப்படி இடமளிக்கும்?
மூன்றாவதாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்பும் காரியம் இதுதான்: தேவன் மீது விசுவாசமாக வாழ்கின்ற முறையில், ஒவ்வொரு நபரும் தேவனை எதிர்க்கிற மற்றும் ஏமாற்றுகிறச் செயல்களையே செய்திருக்கிறார்கள். சில தவறான செயல்கள் ஒரு குற்றமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை, ஆனால் சில தவறுகள் மன்னிக்க முடியாதவையாகும்; தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறும் பல செயல்கள் உள்ளன, அவை அவரின் மனநிலையைப் புண்படுத்துகின்றன. தங்களுடைய சொந்தத் தலைவிதிகளைப் பற்றிக் கவலைப்படுபவர்களில் பலர் இந்தச் செயல்கள் எவை என்று கேட்கலாம். நீங்கள் சுபாவத்திலேயே ஆணவமும் மனமேட்டிமையும் கொண்டவர்கள் என்பதையும், உண்மைகளுக்கு அடிபணிய விரும்பாதவர்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தக் காரணத்திற்காகவே, உங்களைப் பற்றி நீங்களே சிந்தித்துப் பார்த்த பிறகு நான் உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேன். தேவனுடைய நிர்வாக ஆணைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும், அவரது மனநிலையை அறிந்து கொள்ள முயற்சி செய்யவும் வேண்டுமென்று நான் உங்களுக்குப் புத்திச் சொல்லுகிறேன். இல்லையென்றால், உங்கள் உதடுகளை மூடிக் கொள்ளுவது உங்களுக்குக் கடினமாக இருக்கும், உங்கள் நாவுகள் அதிகப் பேச்சுச் சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கும், மேலும் நீங்கள் அறியாமல் தேவனுடைய மனதைப் புண்படுத்தி இருளிலே விழுவீர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தையும் ஒளியையும் இழந்து விடுவீர்கள். ஏனென்றால், நீங்கள் உங்கள் செயல்களில் கொள்கை இல்லாதவர்கள், ஏனென்றால் நீ செய்யக் கூடாத மற்றும் சொல்லக் கூடாத காரியங்களையே செய்வதால் மற்றும் பேசுவதால், நீ அதற்குத் தகுந்த பிரதிபலனையே பெறுவாய். உன்னுடைய வார்த்தையிலும் செயலிலும் நீ கொள்கை இல்லாதவன் என்றாலும், தேவன் அப்படியிராமல் அவை இரண்டிலும் அவர் மிகவும் கொள்கை ரீதியானவர் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நீ இப்படி பிரதிபலனைப் பெறுவதற்கான காரணம், நீ ஒரு நபரையல்ல, தேவனைப் புண்படுத்தியதே ஆகும். உன் வாழ்க்கையில், தேவனுடைய மனநிலைக்கு எதிராக நீ பல குற்றங்களைச் செய்தால், நீ நரகத்தின் பிள்ளையாக மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய். மனிதனைப் பொறுத்தமட்டில், சத்தியத்திற்கு முரணான ஒரு சில காரியங்களை மட்டுமே செய்திருக்கிறாய், அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. எவ்வாறாயினும், தேவனுடைய பார்வையில் நீ ஏற்கனவே பாவநிவாரணபலி எதுவும் இல்லாத ஒருவனாக இருக்கிறாய் என்பதை நீ அறிவாயா? ஏனென்றால், நீ தேவனுடைய நிர்வாக ஆணைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை மீறியுள்ளாய், மேலும் நீ எந்த மனந்திரும்புதலின் அறிகுறியையும் காண்பிக்கவில்லை, ஆகவே தேவன் மனிதனை நரகத்தில் தள்ளித் தண்டிக்கிற அந்த நரகத்தில் நீயும் மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே தேவனைப் பின்பற்றுகிற போது, அவரது கொள்கைகளை மீறும் ஒரு சில செயல்களைச் செய்தார்கள், ஆனாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர், அவர்கள் படிப்படியாக தங்கள் சீர்கேட்டைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு யதார்த்தம் என்னும் சரியான பாதைக்கு வந்தார்கள், அவர்கள் இன்று நன்கு உறுதியானவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் முடிவு வரையிலும் நிலைத்திருப்பார்கள். ஆகிலும், நான் தேடுவது நேர்மை மட்டுமே; நீ ஒரு நேர்மையான நபராகவும், கொள்கையின்படி செயல்படும் ஒருவனாகவும் இருந்தால், உன்னால் தேவனுடைய நம்பிக்கைக்குரியவனாக இருக்க முடியும். உன்னுடைய செயல்களில் நீ தேவனுடைய மனதைப் புண்படுத்தாமல், அவரது சித்தத்தை நாடி, அவர் மீது பயபக்தியுள்ள ஓர் இருதயத்தைக் கொண்டிருந்தால், உன் விசுவாசமானது சரியான தரத்தைக் கொண்டதாகும். தேவனுக்குப் பயந்து அவருக்கு நடுங்கும் இருதயம் இல்லாத எவரும் தேவனுடைய நிர்வாக ஆணைகளை மீறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பலர் தங்கள் ஆர்வத்தினுடைய பலத்தின் பேரில் தேவனுக்கு ஊழியம் செய்கிறார்கள், ஆனால் தேவனுடைய நிர்வாக ஆணைகளைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை, அவருடைய வார்த்தைகளின் தாக்கங்கள் சிறிதளவும் இல்லாமல் இருக்கின்றனர். ஆகவே, அவர்களின் நல்ல நோக்கங்களைக் கொண்டு, தேவனின் நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் விஷயங்களை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள். கடுமையான சந்தர்ப்பங்களில், அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள், தேவனைப் பின் தொடர்வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் இழக்கிறார்கள், மேலும் முடிவில் தேவனுடைய வீட்டிலே இணைந்திருக்கும் காரியத்தில் விடுபட்டு அவர்கள் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இந்த மக்கள் தங்களுடைய அறிவற்ற நல்ல நோக்கங்களின் பலத்தின் அடிப்படையில் தேவனுடைய வீட்டில் வேலை செய்கிறார்கள், அது தேவனுடைய மனநிலையைக் கோபப்படுத்துவதிலே முடிவடைகிறது. மக்கள் தங்கள் அதிகாரிகளுக்கும் பிரபுக்களுக்கும் சேவை செய்யும் வழிமுறைகளைத் தேவனுடைய வீட்டிற்கும் கொண்டு வந்து எந்த ஒரு சிரமமுமில்லாமல் எளிதில் காரியங்களை அடைய அவற்றைக் கொண்டு முயற்சிக்கலாம் என விருதாவாக நினைக்கிறார்கள். தேவனுக்கு ஆட்டுக்குட்டியின் மனநிலை இல்லை, ஆனால் ஒரு சிங்கத்தின் மனநிலை இருக்கிறது என்று அவர்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, முதன் முறையாக தேவனோடு இணைந்தவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால் தேவனுடைய இருதயம் மனிதனைப் போல இருப்பதில்லை. நீ பல சத்தியங்களைப் புரிந்து கொண்ட பின்னரே உன்னால் தொடர்ந்து தேவனை அறிந்து கொள்ள முடியும். இந்த அறிவு வெறுமனே சொற்களாலும் கோட்பாடுகளாலும் ஆனது அல்ல, மாறாக நீ தேவனோடு நெருங்கிய நம்பிக்கையில் நுழைவதன் மூலமாகவும், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகிறார் என்பதற்கான சான்றாகவும் நீ இதை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்தலாம். நீ இந்த அறிவைப் பற்றிய யதார்த்தத்தைக் கொண்டிருக்கவில்லை என்றால் மற்றும் சத்தியத்தைத் தரித்திருக்கவில்லை என்றால், உன் உணர்ச்சிவசப்பட்ட ஊழியமானது தேவனுக்கு வெறுப்பையும் அருவருப்பையும் மட்டுமே உன் மீது கொண்டு வர முடியும். தேவன் மீது விசுவாசம் வைப்பது என்பது வெறும் இறையியல் படிப்பைப் போன்றது அல்ல என்பதை இப்போது நீ கண்டுபிடித்திருக்க வேண்டும்!
நான் உங்களுக்கு புத்திச் சொல்லுகிற வார்த்தைகள் சுருக்கமாக இருந்தாலும், நான் விவரித்தவை அனைத்தும் உங்களிடம் இல்லாதவைகளாகும். நான் இப்போது பேசுகிற காரியம் மனிதனிடையேயான எனது இறுதி கிரியைக்காகவும், மனிதனின் முடிவை தீர்மானிப்பதற்காகவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு நோக்கமும் இல்லாமல் அதிக கிரியைகளை நான் செய்ய விரும்பவில்லை, பட்டுப்போன மரத்தைப் போல நம்பிக்கையற்றவர்களைத் தொடர்ந்து வழிநடத்த நான் விரும்பவில்லை, மற்றும் தவறான நோக்கங்களை இரகசியமாக வைத்திருப்பவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு நான் இன்னும் சிறிதளவும் விருப்பமில்லாமல் இருக்கிறேன். என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள தீவிரமான நோக்கங்களையும் மனிதகுலத்திற்காக நான் செய்த பங்களிப்புகளையும் ஒரு நாள் நீங்கள் அநேகமாய்ப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் சொந்த முடிவைத் தீர்மானிக்க உதவும் செய்தியை ஒரு நாள் நீங்கள் அநேகமாய்ப் புரிந்து கொள்வீர்கள்.