அத்தியாயம் 12

கிழக்கிலிருந்து மின்னல் வெட்டும் சமயம், நான் என் வார்த்தைகளைப் பேசத் தொடங்கும் தருணமும் அதுவே—மின்னல் வெட்டும்போது, முழு பிரபஞ்சமும் ஒளிர்கிறது, அனைத்து நட்சத்திரங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்கிறது. மனித இனம் முழுவதும் நிவர்த்தி செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. கிழக்கிலிருந்து வரும் இந்த வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ், மனுஷர் அனைவரும் அவர்களது உண்மையான வடிவத்தில் வெளிப்படுகின்றனர், அவர்களின் கண்கள் என்ன செய்வது என்று தெரியாமல், மேலும் தங்களது அசிங்கமான அம்சங்களை எவ்வாறு மறைப்பது என்று உறுதியாகத் தெரியாமல் திகைத்து நிற்கின்றன. அவர்கள் என் வெளிச்சத்திலிருந்து தப்பி மலைக் குகைகளில் தஞ்சம் புகும் விலங்குகளைப் போல இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட என் வெளிச்சத்திலிருந்து வெளியேற முடியவில்லை. எல்லா மனுஷரும் திகைத்துப்போகிறார்கள், அனைவரும் காத்திருக்கிறார்கள், அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; என் வெளிச்சத்தின் வருகையால், அவர்கள் பிறந்த நாளில் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள், அதேபோல் அவர்கள் பிறந்த நாளை சபிக்கவும் செய்கிறார்கள். முரண்பட்ட உணர்ச்சிகளைத் தெளிவாகப் பேசுவது சாத்தியமில்லாதது; சுய-சிட்சையினால் வழியும் கண்ணீர் ஆறுகளாகி, அவை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன, ஒரு நொடியில் தடயமின்றி செல்கின்றன. மீண்டும், என் நாள் அனைத்து மனுஷரையும் நெருங்குகிறது, மீண்டும் மனுஷ இனத்தைத் தூண்டி மனுஷருக்கு மற்றொரு புதிய தொடக்கத்தை அளிக்கிறது. என் இருதயம் துடிக்கிறது, என் இருதய துடிப்பின் தாளங்களைப் பின்பற்றி, மலைகள் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றன, கடல் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது, அலைகள் கற்பாறைகள் மீது மோதுகின்றன. என் இருதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது கடினம். அசுத்தமான எல்லாவற்றையும் என் பார்வையினால் சாம்பலாக எரிக்க விரும்புகிறேன்; கீழ்ப்படியாமையின் மகன்கள் அனைவரும் என் கண்களுக்கு முன்பாக மறைந்து போக நான் விரும்புகிறேன், ஒருபோதும் காலம் தாழ்த்தப்போவதில்லை. சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வசிப்பிடத்தில் நான் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல், பிரபஞ்சத்தில் புதிய கிரியைகளையும் தொடங்கியிருக்கிறேன். விரைவில், பூமியின் ராஜ்யங்கள் என் ராஜ்யமாக மாறும்; விரைவில், என் ராஜ்யத்தின் காரணமாக பூமியின் ராஜ்யங்கள் என்றென்றும் முடிவிற்கு வரும், ஏனென்றால் நான் ஏற்கெனவே வெற்றியை அடைந்துவிட்டேன், ஏனென்றால் நான் வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறேன். பூமியில் எனது கிரியையை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையில், சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனது திட்டத்தைச் சீர்குலைப்பதற்குச் சாத்தியமான ஒவ்வொரு வழியையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டது, ஆனால் அதன் வஞ்சகத் தந்திரங்களால் நான் சோர்வடைந்து விடுவேனா? அதன் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி என் நம்பிக்கையை என்னால் இழக்க முடியுமா? பரலோகத்திலோ பூமியிலோ நான் ஒருபோதும் என் உள்ளங்கையில் வைத்திருக்காத ஜீவன் எதுவுமில்லை; இந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு ஒரு பிரதிபலிப்புப் படலமாக செயல்படும் என்பது எந்தளவிற்கு உண்மை? இது என் கைகளால் கையாளப்பட வேண்டிய ஒரு பொருளல்லவா?

மனித உலகில் நான் அவதரித்த போது, மனுஷர் என் வழிகாட்டுதலின் கீழ், அவர்கள் அறியாமலேயே இன்றுவரை வந்துள்ளனர், அவர்கள் அறியாமலேயே என்னை அறிந்துகொண்டுள்ளனர். ஆனால், முன்னோக்கிச் செல்லும் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது பற்றி யாருக்கும் சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை—மேலும் அந்தப் பாதை எந்தத் திசையில் செல்லும் என்பது பற்றி யாருக்கும் எந்தத் துப்பும் தெரிந்திருக்கவில்லை. சர்வவல்லவர் அவர்களைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே எவரும் இறுதியை நோக்கிச் செல்லும் பாதையில் நடக்க முடியும்; கிழக்கில் வெட்டும் மின்னலால் வழிநடத்தப்பட்டால் மட்டுமே என் ராஜ்யத்திற்கு வழிவகுக்கும் வாசலை யாராலும் கடக்க முடியும். மனுஷரிடையே, என் முகத்தைப் பார்த்த ஒருவர், கிழக்கில் மின்னலைக் கண்ட ஒருவர் என ஒருபோதும் எவரும் இருந்ததில்லை; என் சிங்காசனத்திலிருந்து ஒலிக்கும் சொற்களைக் கேட்ட ஒருவர் இருக்கிறாரா? உண்மையில், பண்டையக் காலங்களிலிருந்து, ஒரு மனுஷன் கூட எனது ஆள்தத்துவத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை; இன்று மட்டுமே, இப்போது நான் உலகிற்கு வந்திருப்பதால், மனுஷருக்கு என்னைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இப்போது கூட, மனுஷர் இன்னும் என்னை அறியவில்லை, ஏனென்றால் அவர்கள் என் முகத்தை மட்டுமே பார்க்கிறார்கள், என் குரலை மட்டுமே கேட்கிறார்கள், இன்னும் என் அர்த்தத்தை அறியவில்லை. எல்லா மனுஷரும் இப்படிப்பட்டவர்கள்தான். என் ஜனங்களில் ஒருவராக இருப்பதால், என் முகத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஆழ்ந்த பெருமையை உணரவில்லையா? நீங்கள் என்னை அறியாததால் நீங்கள் வெட்கப்படுவதை உணரவில்லையா? நான் மனுஷரிடையே நடக்கிறேன், மனுஷரிடையே வாழ்கிறேன், ஏனென்றால் நான் மாம்சமாகியிருக்கிறேன், மனுஷ உலகத்திற்கு வந்திருக்கிறேன். என் நோக்கம் வெறுமனே என் மாம்சத்தை மனுஷரைப் பார்க்க வைப்பது மட்டுமல்ல; மிக முக்கியமாக, மனுஷர் என்னை அறிந்துகொள்ள வைப்பதற்காகும். மேலும், நான் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், மனுஷர் செய்த பாவங்களை அவர்களுக்கு உணர்த்துவேன்; நான் என் மனுஷனாக அவதரித்த மாம்சத்தின் மூலம், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை வென்று அதன் குகையை அழிப்பேன்.

பூமியை நிரப்பும் மனுஷர், நட்சத்திரங்களைப் போல் ஏராளமானவர்கள் என்றாலும், அவர்கள் அனைவரையும் என் சொந்த உள்ளங்கையைப் போல் நான் தெளிவாக அறிவேன். மேலும், என்னை “நேசிக்கும்” மனுஷரும் கடற்கரை மணலத்தனையாய் எண்ணற்றவர்களாக இருந்தாலும், ஒரு சிலரே என்னால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்: என்னை “நேசிப்பவர்களை” விடுத்து, பிரகாசமான வெளிச்சத்தைப் பின்தொடர்பவர்களை மட்டுமே நான் தேர்ந்தெடுக்கிறேன். நான் மனுஷனை மிகைப்படுத்தவும் இல்லை, அவனை குறைத்து மதிப்பிடவும் இல்லை; மாறாக, மனுஷனின் இயல்பான பண்புகளின்படி நான் அவனிடம் கோரிக்கைகளை வைக்கிறேன், ஆகவே, ஜனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான எனது இலக்கை நான் அடையும்படி, என்னை உண்மையாக நாடி வருபவர்களே எனக்குத் தேவை. மலைகளில் எண்ணற்ற காட்டு மிருகங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் எனக்கு முன்பாக நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஆடுகளைப் போலவே உள்ளன. புரிந்துகொள்ள முடியாத மர்மங்கள் அலைகளுக்கு அடியில் உள்ளன, ஆனால் அவை பூமியின் முகத்தின் மீதுள்ள எல்லாவற்றையும் போலத் தெளிவாகத் தங்களை என்னிடம் வெளிப்படுத்துகின்றன; மேலேயுள்ள வானத்தில் மனுஷனால் ஒருபோதும் அடைய முடியாத பகுதிகள் உள்ளன, ஆனாலும் அணுக முடியாத அந்தப் பகுதிகளில் நான் சுதந்திரமாக நடக்கிறேன். மனுஷன் என்னை ஒருபோதும் வெளிச்சத்தில் அடையாளம் காண்பதில்லை, ஆனால் என்னை இருண்ட உலகில் மட்டுமே பார்க்கிறான். இன்று நீங்கள் அதே சூழ்நிலையில் இல்லையா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வெறித்தனங்களின் உச்சக்கட்டத்தில்தான் நான் என் கிரியையைச் செய்ய மாம்சத்தை முறையாக அணிந்துக்கொண்டேன். சிவப்பான பெரிய வலுசர்ப்பம் முதல் முறையாக அதன் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தியபோது, நான் என் நாமத்திற்குச் சாட்சி கொடுத்தேன். நான் மனுஷரின் சாலைகளில் சுற்றித் திரிந்தபோது, ஒருவன் அல்லது ஒரு நபர் கூட விழித்திருக்கவில்லை, அதனால் நான் மனுஷ உலகில் அவதரித்தபோது, அது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நான் மனுஷனாக அவதரித்த மாம்சத்தில் என் கிரியையை மேற்கொள்ளத் தொடங்கியபோது, மனுஷர் விழித்தெழுந்தனர், என் இடிமுழக்கக் குரலால் அவர்களின் கனவுகளிலிருந்து திடுக்கிட்டு எழுந்தனர், இந்தத் தருணத்திலிருந்து, அவர்கள் என் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினர். எனது ஜனங்களிடையே, நான் மீண்டும் புதிய கிரியைகளைத் தொடங்குகிறேன். பூமியில் எனது கிரியை இன்னும் முடிவடையவில்லை என்ற விஷயம், நான் பேசிய எனது ஜனங்கள் என் இருதயத்தில் எனக்குத் தேவைப்படுபவர்கள் அல்ல என்பதைக் காட்ட போதுமானது என்று சொன்னாலும், அவர்களில் இருந்து நான் இன்னும் சிலரைத் தேர்வு செய்கிறேன். இதிலிருந்து, நான் மனுஷரூபமெடுத்த தேவனை அறிந்துகொள்ள என் ஜனங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அவர்களை நான் தூய்மைப்படுத்துவதும் தெளிவாகத் தெரிகிறது. எனது நிர்வாகக் கட்டளைகளின் தீவிரத்தினால், அநேக ஜனங்கள் இன்னும் என்னால் புறம்பாக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். உங்களைச் சமாளிக்க, உங்கள் சொந்த சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்யாவிட்டால்—நீங்கள் இதைச் செய்யாவிட்டால், பவுல் என் கைகளிலிருந்து நேரடியாக தப்பிக்கவே முடியாத சிட்சையைப் பெற்றதைப் போல, நரகத்தினுள் தள்ளும்படிக்கு நான் வெறுக்கும், நிராகரிக்கும் பொருளாக நீங்கள் நிச்சயம் மாறிப்போவீர்கள். நீங்கள் என் வார்த்தைகளிலிருந்து ஏதாவது சேகரித்திருக்கிறீர்களா? முன்பு போலவே, திருச்சபையைச் சுத்தப்படுத்துவது, எனக்குத் தேவையானவர்களைத் தொடர்ந்து தூய்மைப்படுத்துவது ஆகியவையே எனது நோக்கம், ஏனென்றால் நான்தான் முற்றிலும் பரிசுத்தமான, மாசற்ற தேவன். எனது ஆலயத்தை வானவில்லின் வண்ணங்களைக் கொண்டு தீட்டுவது மட்டுமல்லாமல், களங்கமில்லாமல் சுத்தமாகவும், அதன் வெளிப்புறத்துடன் பொருந்தக்கூடிய வகையில் உட்புறத்தையும் மாற்றுவேன். என் பிரசன்னத்தில், நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் செய்ததைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும், பின்னர் இன்று என் இருதயத்தில் எனக்குப் பரிபூரணமான திருப்தியை அளிக்க உங்களால் உறுதிகொள்ள முடியுமா என்பதை முடிவு செய்யுங்கள்.

மனுஷன் என் மாம்சத்தில் என்னை அறிந்திருக்கவில்லை; அதற்கும் மேலாக, அவன் மாம்ச சரீரத்தில் வசிக்கும் தனது சுயத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டான். அநேக ஆண்டுகளாக, மனுஷர் என்னை ஏமாற்றி வருகிறார்கள், என்னை வெளியில் இருந்து வரும் விருந்தினராக நடத்துகிறார்கள். அநேக முறை, அவர்கள் “தங்கள் வீடுகளின் கதவுகளுக்கு” வெளியே என்னை நிறுத்தியிருக்கிறார்கள்; அநேக முறை, அவர்கள், என் முன் நின்று, எனக்குச் செவிசாய்க்க மறுத்திருக்கிறார்கள்; மற்ற மனுஷரிடையே அவர்கள் என்னைக் கைவிட்டிருக்கிறார்கள்; அநேக முறை, அவர்கள் என்னைப் பிசாசுக்கு முன்பாக மறுதலித்திருக்கிறார்கள்; அநேக முறை, அவர்கள் தங்கள் வாயால் என்னைத் தூற்றியிருக்கிறார்கள். ஆயினும்கூட, மனுஷனின் பலவீனங்களை நான் கணக்கில் வைக்கவில்லை, அவனுடைய கீழ்ப்படியாமை காரணமாக, பழிக்குப் பழி வாங்கவில்லை. அவன் என்னை அறிந்துகொள்ளும் பொருட்டு, நான் செய்ததெல்லாம், அவனது குணப்படுத்த முடியாத நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் அவனை ஆரோக்கியமாக மீட்டெடுப்பதற்காகவும் அவனது நோய்களுக்கு மருந்தைப் பயன்படுத்தியது மட்டுமே. நான் செய்ததெல்லாம் மனுஷரின் உயிர்வாழ்விற்காகவும், மனுஷருக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவும் தான், இல்லையா? நான் அநேக முறை மனுஷரின் உலகத்திற்கு வந்திருக்கிறேன், ஆனால் நான் என் சொந்த ஆள்தத்துவத்தில் உலகிற்கு வருவதால், மனுஷர் என்னை எவ்விதத்திலும் கருதுவதில்லை; அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மனுஷனும் அவனுக்குப் பொருத்தமாகத் தோன்றிய வழியில் செயல்பட்டு, தனக்கென ஒரு வழியைத் தேடுகிறான். பரலோகத்திற்கு கீழே உள்ள ஒவ்வொரு சாலையும் என் கைகளிலிருந்து வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது! பரலோகத்திற்கு கீழே உள்ள ஒவ்வொன்றும் என் நியமனத்திற்கு உட்பட்டவை என்பது அவர்களுக்குத் தெரியாது! உங்களில் யார் தங்களின் இருதயத்தில் மனக்கசப்பை வைத்திருக்கத் துணிகிறார்கள்? உங்களில் யார் ஒரு தீர்வுக்கு வர லேசான தைரியம் கொண்டிருக்கிறீர்கள்? மனுஷரின் மத்தியில் நான் செய்யும் கிரியையை நான் அமைதியாகச் செய்துவருகிறேன்—அவ்வளவுதான். என் மனுஷ அவதரிப்புக் காலகட்டத்தில், நான் மனுஷரின் பலவீனத்திற்கு அனுதாபம் காட்டவில்லை என்றால், மனுஷர் அனைவரும், என் அவதரிப்பின் காரணமாக மட்டுமே, அவர்களின் புத்தி பேதலிக்கும் அளவிற்குப் பயந்து, அதன் விளைவாகப் பாதாளத்தினுள் விழுவர். நான் என்னைத் தாழ்த்தி, என்னை மறைத்து வைப்பதால்தான், மனுஷர் பேரழிவிலிருந்து தப்பித்து, என் சிட்சையிலிருந்து விடுதலையைச் சந்திக்கிறார்கள், இவ்விதமாக, இன்றைய தினத்தை வந்தடைந்திருக்கிறார்கள். இன்றைய தினத்திற்கு வருவது எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை நினைவில் வைத்து, இனி வரவிருக்கும் நாளைய தினத்தை நீங்கள் அதிகம் சிந்தையில் வைத்திருக்க வேண்டாமா?

மார்ச் 8, 1992

முந்தைய: அத்தியாயம் 11

அடுத்த: அத்தியாயம் 13

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

விசுவாசிகள் என்ன விதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்

மனிதன் தேவனை விசுவாசிக்கத் தொடங்கியதிலிருந்து எதை மனிதன் தனக்கென்று ஆதாயப்படுத்தியுள்ளான்? நீ தேவனைக் குறித்து என்ன தெரிந்து...

இரட்சகர் ஏற்கனவே ஒரு “வெண் மேகத்தின்” மீது திரும்பியுள்ளார்

பல ஆயிரம் ஆண்டுகளாக, இரட்சகரின் வருகையைக் காண்பதற்காக மனிதன் ஏங்குகிறான். இரட்சகராகிய இயேசு, அவருக்காக ஏங்கிய மற்றும் அவருக்காக காத்திருந்த...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக