அத்தியாயம் 100

என்னால் முன்குறிக்கப்படாத மற்றும் தெரிந்துகொள்ளப்படாத அனைவரையும் நான் வெறுக்கிறேன். எனவே எனது ஆலயத்தைப் பரிசுத்தமாகவும் மாசற்றதாகவும் மாற்ற நான் இந்த ஜனங்களை என் வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும், என் வீடு எப்போதும் புதியது ஒருபோதும் பழையது அல்ல, என் பரிசுத்த நாமம் என்றென்றும் பரவக்கூடியது, என் பரிசுத்த ஜனங்களால் எனக்குப் பிரியமானவர்களாக முடியும். இவ்வகையான காட்சி, இவ்வகையான வீடு, இவ்வகையான ராஜ்யம் ஆகியவையே என் குறிக்கோளும் என் வசிப்பிடமுமாகும்; இதுவே சகலத்தையும் நான் சிருஷ்டித்ததன் அடிப்படையாகும். யாராலும் அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. அதற்குள் நானும் என் பிரியமானக் குமாரர்கள் மட்டுமே ஒன்றாக வாழ்வோம், அதைக் காலின்கீழ் மிதிக்க ஒருவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள், அதை ஆக்கிரமிக்க ஒன்றும் அனுமதிக்கப்பட மாட்டாது, மேலும் விரும்பத் தகாத எதுவும் நடக்க அனுமதிக்கப்படமாட்டாது. அனைத்தும் துதியாகவும் ஆரவாரமாகவும் இருக்கும், அனைத்தும் மனிதனால் கற்பனை செய்ய முடியாதக் காட்சியாக இருக்கும். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் மனதோடும், உங்கள் சிறந்த திறனுக்கேற்ப, உங்கள் முழு பலத்தையும் எனக்காக அளிக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்புகிறேன். இன்றோ அல்லது நாளையோ, நீங்கள் எனக்காக ஊழியஞ்செய்பவராக இருந்தாலும் அல்லது ஆசீர்வாதங்களைப் பெறுகிறவராக இருந்தாலும், நீங்கள் அனைவரும் எனது ராஜ்யத்திற்காக உங்கள் பலத்தின் அளவை தீவிரமாக உபயோகப்படுத்த வேண்டும். இது அனைத்து சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களும் எடுக்க வேண்டிய ஒரு உறுதிமொழியாகும், மேலும் இது இவ்வாறே செய்யப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். எனது ராஜ்யத்தின் அழகு எப்போதும் புதியதாக இருக்கவும் என் வீடு இணக்கமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவும், நான் எல்லாவற்றையும் எனக்கு ஊழியஞ்செய்யும்படி தயாராக்குவேன். என்னை எதிர்த்து நிற்க யாருக்கும் அனுமதி இல்லை, அவ்வாறு செய்யும் எவரும் நியாயத்தீர்ப்பை அனுபவிக்கவும் சபிக்கப்படவும் வேண்டும். இப்போது என் சாபங்கள் எல்லாத் தேசங்களின் மேலும் எல்லா ஜனங்களின் மேலும் விழத் தொடங்குகின்றன, மேலும் என் சாபங்கள் எனது நியாயத்தீர்ப்பை விட மிகக் கடுமையானவையாகும். எல்லா மக்களையும் ஆக்கினைக்குள்ளாக்க வேண்டிய நேரம் இது, எனவே இது சாபங்கள் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் இப்போது இறுதிக் காலம், என் சிருஷ்டிப்பின் காலம் அல்ல. காலங்கள் மாறிவிட்டதால் எனது கிரியையின் வேகம் இப்போது மிக வித்தியாசமாக இருக்கிறது. என் கிரியையின் தேவைகள் காரணமாக, எனக்குத் தேவையான நபர்களும் வித்தியாசமானவர்களே; கைவிடப்பட வேண்டியவர்கள் கைவிடப்படுவார்கள்; நீக்கப்பட வேண்டியவர்கள் நீக்கப்படுவார்கள்; கொல்லப்பட வேண்டியவர்கள் கொல்லப்படுவார்கள், இருக்கும்படி விடப்பட வேண்டியவர்கள் விடப்பட வேண்டும். இது மனித சித்தத்தைச் சாராத, தவிர்க்கமுடியாத போக்காகும், அதை ஒரு மனிதனாலும் மாற்ற முடியாது. அது என் சித்தத்தின்படி செய்யப்பட வேண்டும்! நான் யாரைக் கைவிட விரும்புகிறேனோ அவர்களை நான் கைவிடுகிறேன், நான் யாரை புறம்பாக்க விரும்புகிறேனோ அவர்களைப் புறம்பாக்குகிறேன்; யாரும் தன்னிச்சையாக செயல்பட மாட்டார்கள். நான் யாரை விட்டுவிட விரும்புகிறேனோ அவர்களை நான் விட்டு விடுகிறேன், நான் யாரை நேசிக்க விரும்புகிறேனோ அவர்களை நான் நேசிக்கிறேன்; இது என் சித்தப்படி செய்யப்பட வேண்டும்! நான் உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதில்லை; என்னிடத்தில் நீதி, நியாயத்தீர்ப்பு மற்றும் கோபம் மட்டுமே உள்ளது, எந்த உணர்ச்சியும் சிறிதளவேனும் இல்லை. மனிதனின் சுவடு சிறிதளவுகூட என்னுள் இல்லை, ஏனென்றால் நானே தேவனானவர், தேவனுடையவர். எனது அம்சமான மனிதத்தன்மையை ஜனங்கள் எல்லோரும் பார்க்கிறபடியால் அவர்கள் என் தெய்வீகத்தன்மையின் அம்சத்தைப் பார்க்கவில்லை. உண்மையில், அவர்கள் குருடாகவும் குழம்பியும் இருக்கிறார்கள்!

நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் உங்கள் இருதயங்களில் வைத்திருக்க வேண்டும், நீங்கள் என் வார்த்தைகள் மூலம் என் இருதயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் என் பாரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது, நீங்கள் என் சர்வவல்லமையை அறிந்து, என் ஆள்தத்துவத்தைப் பார்ப்பீர்கள். என் வார்த்தைகள் ஞானத்தின் வார்த்தைகளாய் இருப்பதால், என் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகளையும் விதிகளையும் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது. நான் வஞ்கத்தையும் வக்கிரத்தையும் கடைப்பிடிப்பதாக ஜனங்கள் நினைக்கிறார்கள் மற்றும் என் வார்த்தைகள் மூலமாக அவர்கள் என்னை அறியவில்லை, மாறாக, அவர்கள் எனக்கு எதிராக தூஷணம் செய்கிறார்கள். அவர்கள் மிகவும் கண்மூடித்தனமானவர்களும் அறிவற்றவர்களுமாவர்! அவர்களிடம் சிறிதளவு பகுத்தறிவு கூட இல்லை. நான் சொல்லும் ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரத்தையும் நியாயத்தீர்ப்பையும் கொண்டுள்ளது, என் வார்த்தைகளை யாராலும் மாற்ற முடியாது. என் வார்த்தைகள் வெளிவந்தவுடன், என் வார்த்தைகளுக்கேற்ப காரியங்கள் நிச்சயமாக நிறைவேறும்; இதுவே என் மனநிலையாகும். என் வார்த்தைகள் அதிகாரமுடையவை மற்றும் அவற்றை மாற்றுகிற யாரானாலும் என் தண்டனையை அவமதிக்கிறார்கள், நான் அவர்களை அடித்துக் கீழே தள்ள வேண்டும். தீவிர நிகழ்வுகளில் அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் அழிவை வருவித்துக் கொள்கிறார்கள் மேலும் அவர்கள் பாதாளத்திற்கு, அல்லது பாதாளக் குழிக்குள் செல்கிறார்கள். இதுவே நான் மனுக்குலத்தைக் கையாளும் ஒரே வழியாகும், அதை மாற்ற மனிதனுக்கு எந்த வழியும் இல்லை, இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும். இதை நினைவில் கொள்ளுங்கள்! எனது ஆணையை அவமதிக்க ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை; காரியங்கள் என் சித்தப்படியே செய்யப்பட வேண்டும்! கடந்த காலத்தில், நான் உங்களைக் கனிவாக நடத்தினேன், நீங்கள் என் வார்த்தைகளை மட்டுமே எதிர்கொண்டீர்கள். ஜனங்களை அடிப்பதைப் பற்றி நான் பேசின வார்த்தைகள் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால் இன்று முதல், எனது சித்தத்திற்கு இணங்காத அனைவரையும் தண்டிக்கும்படி அனைத்துப் பேரழிவுகளும் (இவை எனது ஆட்சிமுறை ஆணைகளுடன் தொடர்புடையவை) ஒன்றன்பின் ஒன்றாக வரும். உண்மைகளின் வருகை இருக்க வேண்டும் இல்லையெனில் ஜனங்கள் என் கோபத்தைப் பார்க்க முடியாமல் தங்களை மீண்டும் மீண்டும் சீர்கெடுத்துக் கொள்வார்கள். இது எனது நிர்வாகத் திட்டத்தின் ஒரு படியாகும், எனது கிரியையின் அடுத்த படியை நான் இவ்வாறே செய்கிறேன். நான் இதை முன்கூட்டியே உங்களுக்குச் சொல்லுகிறேன், அதனால் நீங்கள் குற்றம் புரிவதையும் நித்திய அழிவை அனுபவிப்பதையும் என்றென்றும் தவிர்க்க முடியும். அதாவது, இன்று முதல் என் முதற்பேறான குமாரர்களைத் தவிர அனைத்து ஜனங்களையும் என் சித்தத்திற்கேற்ப உரிய இடங்களை எடுத்துக் கொள்ளச் செய்வேன், நான் அவர்களை ஒவ்வொருவராகத் தண்டிப்பேன். அவர்களில் ஒருவரைக் கூட நான் தண்டிக்காமல் விட மாட்டேன். நீங்கள் மீண்டும் சீரழியத் துணிகிறீர்கள்! நீ மீண்டும் கலகம் பண்ணத் துணிகிறாய்! நான் எல்லோரிடமும் நீதியாக இருக்கிறேன் என்று முன்பே நான் சொல்லியிருக்கிறேன், நான் கொஞ்சம் கூட உணர்ச்சிவசப்படாமல் இருக்கிறேன், இது என் மனநிலை அவமதிக்கப்படக் கூடாது என்பதைக் காண்பிக்க உதவுகிறது. இதுவே என் ஆள்தத்துவமாகும். இதை யாராலும் மாற்ற முடியாது. எல்லா ஜனங்களும் என் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், எல்லா ஜனங்களும் என் மகிமையான முகத்தைப் பார்க்கிறார்கள். அனைத்து ஜனங்களும் எனக்கு முழுமையாக நிச்சயமாகக் கீழ்ப்படிய வேண்டும், இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாகும். பிரபஞ்சம் முழுவதிலும் மற்றும் பூமியின் கடையாந்தரங்களில் உள்ள அனைத்து ஜனங்களும் என்னைத் துதித்து மகிமைப்படுத்த வேண்டும், ஏனென்றால் நானே தனித்துவமான தேவனானவர், ஏனென்றால் நான் தேவனுடையவர். யாராலும் என் வார்த்தைகளையும் என் பேச்சுக்களையும், என் பிரசங்கத்தையும் நடத்தையையும் மாற்ற முடியாது, ஏனெனில் இவை எனக்கு மட்டுமே சொந்தமானவையும், மிகவும் பழங்காலத்திலிருந்தே நான் கொண்டிருப்பவையும் என்றென்றும் இருக்கக் கூடியவையும் ஆகும்.

ஜனங்கள் என்னைச் சோதிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் என் வார்த்தைகளுக்குள் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்து, அதை எனக்கு எதிராகப் பயன்படுத்தி என்னை அவதூறாகப் பேசலாம் என்று விரும்புகின்றனர். நான் உன்னால் அவதூறாகப் பேசப்பட வேண்டுமா? நான் சாதாரணமாக நியாயத்தீர்ப்பளிக்கப்பட வேண்டுமா? எனது தொழில் சாதாரணமாக விவாதிக்கப்பட வேண்டுமா? உங்களுக்கு எது நல்லது என்று தெரியாத ஒரு தொகுப்பு நீங்கள்! உங்களுக்கு என்னைப் பற்றி சிறிதளவேனும் தெரியாது! சீயோன் மலை என்றால் என்ன? எனது வசிப்பிடம் எது? கானானின் நல்ல தேசம் எது? சிருஷ்டிப்பின் அடிப்படை என்ன? ஏன் கடந்த சில நாட்களாக, இந்த வார்த்தைகளை நான் தொடர்ந்து குறிப்பிடுகிறேன்? சீயோன் மலை, என் வசிப்பிடம், கானானின் நல்ல தேசம், சிருஷ்டிப்பின் அடிப்படை அனைத்தும் என் ஆள்தத்துவத்தைப் பற்றியே (சரீரத்தைக் குறித்தே) பேசப்படுகின்றன. இவை அனைத்தும் பொருள் சார்ந்து இருக்கின்ற இடங்கள் என்று மக்கள் அனைவரும் நினைக்கிறார்கள். எனது ஆள்தத்துவமே சீயோன் மலை; அதுவே என் வசிப்பிடம். ஆவிக்குரிய உலகில் நுழைகிற யாராயிருந்தாலும் சீயோன் மலையில் ஏறி என் வசிப்பிடத்திற்குள் நுழைவார்கள். நான் என் ஆள்தத்துவத்திற்குள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தேன்; அதாவது, அனைத்துக் காரியங்களும் சரீரத்திற்குள் உருவாக்கப்பட்டன, எனவே அதுவே அடிப்படையாகும். நீங்கள் என்னுடன் சேர்ந்து சரீரத்திற்குள் திரும்புவீர்கள் என்று நான் ஏன் சொல்கிறேன்? அதில் உண்மையான அர்த்தம் உள்ளது. “தேவன்” என்ற நாமத்தைப் போலவே, இந்தப் பெயர்ச்சொற்களுக்குச் சொந்தமாக எந்த அர்த்தமும் இல்லை, மாறாக அவை நான் வெவ்வேறு இடங்களுக்குக் கொடுக்கும் வெவ்வேறு பெயர்களே ஆகும். எனவே அவற்றின் நேரடி அர்த்தங்களுக்கு அதிகக் கவனம் செலுத்த வேண்டாம், ஆனால் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மட்டுமே கவனம் செலுத்துங்கள். நீங்கள் அவற்றை இவ்வாறாக பார்க்க வேண்டும், அப்போது உங்களால் என் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். என் வார்த்தைகளில் ஞானம் இருக்கிறது என்பதை நான் ஏன் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்? இதற்குப் பின்னால் உள்ள அர்த்தத்தைக் கண்டுபிடிக்க உங்களில் எத்தனை பேர் முயற்சித்திருக்கிறீர்கள்? நீங்கள் அனைவரும் கண்மூடித்தனமாக பகுப்பாய்வு செய்து நியாயமற்றவர்களாக இருக்கிறீர்கள்!

கடந்த காலத்தில் நான் சொன்னப் பெரும்பாலான விஷயங்கள் உங்களுக்கு இன்னும் புரியவில்லை. நீங்கள் சந்தேக நிலையில் இருக்கிறீர்கள் மற்றும் என் இருதயத்தை உங்களால் திருப்திப்படுத்த முடியாது. நான் சொல்கிற ஒவ்வொரு வாக்கியத்தைக் குறித்து நீங்கள் எந்த நேரத்தில் உறுதிப்பட முடியுமோ, அந்த நேரமே உங்கள் வாழ்க்கை முதிர்ச்சியடைகிறது. என்னைப் பொறுத்தவரை, ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களைப் போலவும் ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போன்றதுமாகும்; நான் பேசுகிற நேரத்தைப் பற்றி நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? நீங்கள் அதை எப்படி விளக்குவீர்கள்? நீங்கள் அதைத் தவறாக அர்த்தங்கொள்கிறீர்கள்! மேலும், பெரும்பாலான மக்கள் எனக்கு எதிராகப் பயன்படுத்த ஏதாவது கண்டுபிடிக்க விரும்பி, என்னுடன் இதைக் குறித்து மிகவும் வம்பு செய்கிறார்கள், உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்குத் தெரியாது! கவனமாக இருங்கள், இல்லையெனில் நான் உன்னை அடித்து விடுவேன்! எல்லாமே தெளிவுபடுத்தப்படும் நாள் வரும்போது, நீங்கள் முழுமையாக புரிந்து கொள்வீர்கள். நான் இப்போது உங்களிடம் சொல்ல மாட்டேன் (இதுவே ஜனங்களை வெளிப்படுத்துவதற்கான நேரமாகும்; ஒவ்வொருவரும் என் சித்தத்தைத் திருப்திப்படுத்தும்படி கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்). நான் என் வார்த்தைகள் மூலம் அனைத்து ஜனங்களையும் வெளிப்படுத்துவேன், அவர்கள் உண்மையானவர்களா இல்லையா என்பதைக் காண்பிக்க அவர்களின் உண்மையான வடிவங்கள் வெளிப்படும். யாராவது ஒருவர் வேசியோ அல்லது யேசபேலோ என்றால், நான் அவர்களை வெளிப்படுத்த வேண்டும். நான் உதவும்படி எந்த முயற்சியையும் செய்யாமல் விஷயங்களைச் செய்கிறேன் மேலும் ஜனங்களை வெளிப்படுத்த நான் என் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். எந்த வேஷத்திற்கும் நான் அஞ்ச மாட்டேன்; என் வார்த்தைகள் சொல்லப்பட்டவுடன், நீ உன் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்த வேண்டும், நீ எவ்வளவு நன்றாக வேஷமிட்டிருந்தாலும் நான் உண்மையானத் தன்மையைக் கண்டுபிடித்து விடுவேன். வெறும் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துதல் மற்றும் முற்றிலும் எந்த வலிமையையும் செலவழிக்காமல் இருத்தல்—இதுவே எனது செயல்களின் கொள்கையாகும். என் வார்த்தைகள் நிறைவேறுமா நிறைவேறாதா என்று ஜனங்கள் தங்களையே பதற்றப்படுத்திக் கொள்கிறார்கள், அவர்கள் என் பொருட்டு விசாரப்படுகிறார்கள், எனக்காகக் கவலை கொள்கிறார்கள், ஆனால் இந்த முயற்சிகள் உண்மையில் தேவையில்லை; அவை கொடுக்க வேண்டியதல்லாத விலையாகும். நீ என்னைப் பற்றி கவலைப்படுகிறாய், ஆனால் உன் சொந்த வாழ்க்கை முதிர்ச்சியடைந்திருக்கிறதா? உன் சொந்த விதி எப்படி இருக்கிறது? அவ்வப்போது உன்னை நீயே கேட்டுக்கொள், நழுவ வேண்டாம். ஜனங்கள் அனைவரும் எனது கிரியையைக் கருத்தில் கொள்ள வேண்டும், மேலும் என் செயல்கள் மற்றும் என் வார்த்தைகள் மூலம் என் ஆள்தத்துவத்தைப் பார்த்து, என்னைக் குறித்து அதிக அறிவைப் பெற்று, என் சர்வவல்லமையை அறிந்து, என் ஞானத்தை அறிந்து, நான் எல்லாவற்றையும் சிருஷ்டித்த வழிவகைகளையும் மற்றும் முறைகளையும் அறிந்து, அதன் மூலம் எனக்கு முடிவில்லாத துதியைச் செலுத்த வேண்டும். என் ஆட்சிமுறை ஆணைகளின் கரங்களை நான் யார் மீது வைக்கிறேன், நான் யாரிடத்தில் கிரியை செய்கிறேன், நான் என்ன செய்ய விரும்புகிறேன், நான் செய்து முடிக்க வேண்டியது என்ன என்று எல்லா ஜனங்களையும் காணப் பண்ணுவேன். இது ஒவ்வொரு தனி நபரும் அடைய வேண்டிய ஒன்று, ஏனென்றால் இது எனது ஆட்சிமுறை ஆணையாகும். நான் சொல்வதை நான் நிறைவேற்றுவேன். என் வார்த்தைகளை யாரும் சாதாரணமாகப் பகுப்பாய்வுச் செய்யக் கூடாது; எனது வார்த்தைகள் மூலம் எனது செயல்களுக்குப் பின்னால் உள்ளக் கோட்பாடுகளை அனைவரும் பார்க்க வேண்டும், என் கோபம் என்ன, என் சாபம் என்ன, என் நியாயத்தீர்ப்பு என்ன என்பதை என் வார்த்தைகளில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் என் வார்த்தைகளைச் சார்ந்திருக்கின்றன மற்றும் இவை என் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒவ்வொரு நபரும் பார்க்க வேண்டிய விஷயங்களாகும்.

முந்தைய: அத்தியாயம் 99

அடுத்த: அத்தியாயம் 101

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக