அத்தியாயம் 37

உண்மையிலேயே நீங்கள் என் பிரசன்னத்தில் விசுவாசத்தில் குறைவுபட்டிருக்கிறீர்கள் மற்றும் நீங்கள் செயல்பட அடிக்கடி உங்களைத் தான் நம்பியிருக்கிறீர்கள். “என்னையன்றி உங்களால் எதுவும் செய்ய முடியாது!” ஆயினும், சீர்கெட்டவர்களான நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளை ஒரு காதில் வாங்கி, மறு காதில் விட்டுவிடுகிறீர்கள். இன்றைய நாட்களில் வாழ்க்கை என்பது வார்த்தைகளின் ஜீவனாக இருக்கின்றது; வார்த்தைகள் இல்லாமல், வாழ்க்கை இல்லை மற்றும் அனுபவம் இல்லை, மேலும் விசுவாசமும் இல்லை என்பதைக் குறிப்பிடாமல் இல்லை. விசுவாசமானது வார்த்தைகளில் உள்ளது; தேவனுடைய வார்த்தைகளுக்குள் உங்களை அதிகமாக ஊற்றுவதன் மூலம் மட்டுமே உங்களால் அனைத்தையும் பெற முடியும். நீங்கள் வளர மாட்டீர்கள் என்று கவலைப்பட வேண்டாம்: ஜனங்களின் கவலைகளிலிருந்து அல்ல, வாழ்க்கை வளர்கிறது.

நீங்கள் எப்போதும் கவலையுடன் இருப்பதற்கு ஏற்றவர்களாய் இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் எனது அறிவுரைகளுக்குச் செவி சாய்ப்பதில்லை. நீங்கள் எப்பொழுதும் என் வேகத்தை மீற விரும்புகிறீர்கள். இது என்ன? இதுவே மனுஷனின் இலட்சியமாகும். தேவனிடமிருந்து வருவது எது மற்றும் உங்களிடமிருந்து வருவது எது என்பதை நீங்கள் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். ஆர்வமானது என் சமூகத்தில் ஒருபோதும் புகழப்படாது. நீங்கள் எப்போதும் மாறாத விசுவாசத்துடன் இறுதிவரை என்னைப் பின்பற்றக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படிச் செய்வது தேவ பக்தி என்று நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் குருட்டு ஜனங்கள்! நீங்கள் ஏன் அடிக்கடி என் முன் வந்து தேடாமல், நீங்களாகவே குழப்பமடைகிறீர்கள்? நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும்! இப்போது கிரியை செய்பவர் நிச்சயமாக மனுஷன் அல்ல, மாறாக அனைவருக்கும் மகா உன்னதமானவராகிய, ஒன்றான மெய்த்தேவனான—சர்வவல்லமையுள்ளவர் ஆவார்! நீங்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது, ஆனால் நீங்கள் பெற்றிருக்கிற அனைத்தையும் தொடர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் எனது நாள் சமீபமாக இருக்கிறது. நீங்கள் அத்தகைய நேரத்தில் உண்மையிலேயே இன்னும் விழித்துக்கொள்ளாது இருப்பீர்களா? நீங்கள் இன்னும் தெளிவாகப் பார்த்திருக்கவில்லையா? நீங்கள் இன்னும் உலகத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறீர்கள்; உங்களால் அதிலிருந்து விடுபட முடியாது. ஏன்? நீங்கள் என்னை மெய்யாகவே நேசிக்கிறீர்களா? நான் பார்க்கும்படி உங்கள் இருதயங்களை உங்களால் வெளிப்படுத்த முடியுமா? உங்களை முழுமையாக எனக்கு அர்ப்பணிக்க முடியுமா?

எனது வார்த்தைகளைக் குறித்து அதிகமாக சிந்தியுங்கள், எப்போதும் அவற்றைக் குறித்த தெளிவான புரிதலைப் பெற்றிருங்கள். குழப்பத்துடனோ அரை மனதுடனோ இருக்க வேண்டாம். என் சமூகத்தில் அதிக நேரம் செலவிடுங்கள், என்னுடைய தூய வார்த்தைகளை அதிகமாகப் பெறுங்கள், மற்றும் என்னுடைய நோக்கங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது என்னிடம் இன்னும் என்ன இருக்கிறது? ஜனங்களின் இருதயங்கள் கடினமானவையாக இருக்கின்றன; ஜனங்கள் கருத்துக்களால் அதிக பாரத்தைச் சுமக்கிறார்கள். அவர்கள் அதைக் கடந்து சென்றுவிட்டால் மட்டுமே போதுமானது என்று எப்பொழுதும் நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையைக் கேலி செய்கிறார்கள். மூடத்தனமான பிள்ளைகளே! நேரம் தாமதமாகிவிட்டது; கேளிக்கையைத் தேடுவதற்கான நேரம் இது அல்ல. நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து நேரம் என்ன என்று பார்க்க வேண்டும். சூரியன் அடிவானத்தைக் கடந்து பூமியை ஒளிரச் செய்யப் போகிறது. உங்கள் கண்களை விரிவாகத் திறந்து பாருங்கள்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

இது ஒரு மிகப் பெரிய விஷயமாகும், ஆனாலும் நீங்கள் அதை ஒரு வழியாகச் சுலபமாக்கி, அதை அப்படியாக நடத்துகிறீர்கள்! நான் கவலையாக இருக்கிறேன், ஆனால், என் இருதயத்தின் மீது அக்கறையுள்ளவர்களும், என்னுடைய நல்ல அறிவுறுத்தல்களைக் கேட்டு, என் ஆலோசனையைக் கவனிக்கக் கூடியவர்களும் சிலர் இருக்கிறார்கள்! ஊழியம் கடினமானதாக இருக்கிறது, ஆனால் உங்களில் சிலரே எனக்காக பாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் அத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், நீங்கள் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், எப்போதும் இந்த நிலையிலேயே இருந்துவிட முடியாது! எனது அடிச்சுவடுகள் வேகமாக முன்னோக்கிச் செல்கின்றன, ஆனாலும் உங்கள் வேகம் அப்படியே இருக்கிறது. உங்களால் இன்றைய ஒளி மற்றும் எனது படிகளின் வேகத்துக்கு எப்படி ஈடுகொடுக்க முடியும்? இனி ஒருபோதும் தயங்க வேண்டாம். எனது நாள் இனி தாமதிக்காது என்று நான் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வலியுறுத்தியிருக்கிறேன்!

இன்றைய நாளுக்குச் சொந்தமான இன்றைய ஒளியை, நேற்றைய ஒளியுடனும் ஒப்பிட முடியாது, நாளைய ஒளியுடனும் ஒப்பிட முடியாது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், புதிய வெளிப்பாடுகள் மற்றும் புதிய ஒளி வலுவாகவும் பிரகாசமாகவும் அதிகரிக்கும். இனி கலங்காதீர்கள்; இனி முட்டாள்தனமாக இருக்காதீர்கள்; பழைய வழிகளை இனி கடைப்பிடிக்காதீர்கள்; மேலும் எனது நேரத்தைத் தாமதப்படுத்தவோ அல்லது வீணாக்கவோ கூடாது.

விழிப்புடன் இருங்கள்! விழிப்புடன் இருங்கள்! என்னிடம் அதிகமாக ஜெபியுங்கள், என் சமூகத்தில் அதிக நேரம் செலவிடுங்கள், நீங்கள் நிச்சயமாகவே எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வீர்கள்! அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ள நிச்சயமுடையவர்களாய் இருக்கிறீர்கள் என்று நம்புங்கள்!

முந்தைய: அத்தியாயம் 36

அடுத்த: அத்தியாயம் 38

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக