அத்தியாயம் 13

எனது வார்த்தைகள் மற்றும் பேச்சுக்களுக்குள் பல எண்ணிக்கையிலான என் நோக்கங்கள் மறைந்துள்ளன, ஆனால் இவற்றிலிருந்து மக்கள் எதனையும் தெரிந்து கொள்ளுவதோ மற்றும் புரிந்துகொள்ளுவதோ கிடையாது; அவர்கள் வெளியிலிருந்து என் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு, வெளியிலிருந்து அவற்றைப் பின் பற்றிக்கொண்டே இருக்கிறார்கள், அவர்களால் என் இருதயத்தைப் புரிந்து கொள்வதோ அல்லது என் வார்த்தைகளுக்குள் இருக்கும் என் சித்தத்தின் மெய்யுணர்வைப் புரிந்து கொள்ளவோ முடியாது. நான் என் வார்த்தைகளைத் தெளிவுபடுத்தினாலும், அவற்றைப் புரிந்துகொள்ளுகிறவர் யார்? சீயோனிலிருந்து நான் மனிதர்களிடையே வந்தேன். நான் சாதாரண மனிதத் தன்மையையும் மனிதத் தோலையும் உடுத்தியிருப்பதால், ஜனங்கள் என் தோற்றத்தை வெளியிலிருந்து தெரிந்துகொள்கிறார்கள்—ஆனால் எனக்குள் இருக்கும் ஜீவனை அவர்கள் அறிவதில்லை, மேலும் ஆவியான தேவனை அவர்கள் அடையாளம் காண்பதுமில்லை, அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மாம்சமான மனிதன் மட்டுமே. நீங்கள் அவரை அறிய முயலுவதற்கு உண்மையான தேவன் தாமே தகுதியற்றவராக இருக்க முடியுமா? அவரைப் “பிளந்து” பார்க்கிற உங்கள் முயற்சிக்கு உண்மையான தேவனுக்குத்தாமே தகுதியில்லாமல் இருக்குமா? ஒட்டுமொத்த மனித இனத்தின் சீர்கேட்டையும் நான் வெறுக்கிறேன், ஆனால் அவர்களின் பலவீனத்திற்கு நான் மனதுருக்கம் கொள்கிறேன். மேலும் ஒட்டுமொத்த மனித இனத்தின் பழைய தன்மையையும் நான் எதிர்கொள்கிறேன். சீனாவில் உள்ள எனது ஜனங்களில் ஒருவர் என்கிற வகையில், நீங்களும் மனித இனத்தின் ஒரு பகுதிதான், அல்லவா? என்னுடைய எல்லா ஜனங்களுக்குள்ளும், என்னுடைய எல்லா குமாரர்களுக்குள்ளும், அதாவது, முழு மனித இனத்திலிருந்தும் நான் தெரிந்துகொண்டிருக்கிற, நீங்கள் மிகச் சிறிய கூட்டத்தினரைச் சேர்ந்தவர்களாவர். இந்தக் காரணத்தினால், நான் உங்களிடம் மிகப்பெரிய முயற்சியாக, அதிகச் சக்தியைச் செலவிட்டிருக்கிறேன். இன்று நீங்கள் அனுபவிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை நீங்கள் இன்னும் பராமரிக்கவில்லையா? எனக்கு எதிராகக் கலகம் செய்யும்படிக்கும் உங்கள் சொந்த வடிவமைப்புகளின்மீது அமைக்கவும் உங்கள் இருதயத்தை இன்னும் நீங்கள் கடினமாக்குகிறீர்களா? என் தொடர்ச்சியான இரக்கமும் அன்பும் இல்லாதிருந்தால், முழு மனித குலமும் நீண்ட காலத்திற்கு முன்பே சாத்தானால் சிறைப் பிடிக்கப்பட்டு அதன் வாயில் “மனநிறைவளிக்கும் பலகாரங்களாக” மாறிப்போயிருக்கும். இன்று, எல்லா ஜனங்களிடையேயும், எனக்காக உண்மையாகவே தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்கள், என்னை உண்மையாக நேசிப்பவர்கள் இன்னும் விரல்விட்டு எண்ணப்படும் அளவுக்கு அரிதாகவே இருக்கிறார்கள். இன்று, “எனது ஜனம்” என்ற தலைப்பு உங்கள் தனிப்பட்ட சொத்தாக இருக்க முடியுமா? உனது மனச்சாட்சி வெறுமனே பனிக்கட்டியைப் போலக் குளிரில் உறைந்துபோய் விட்டதா? எனக்குத் தேவைப்படும் ஜனமாக மாறுவதற்கு நீ உண்மையிலேயே தகுதியானவனா? கடந்த காலத்தை மீண்டும் சிந்தித்து, இன்றைய தினத்தை மீண்டும் பார்—உங்களில் யார் என் இருதயத்தைத் திருப்திப்படுத்தியிருக்கிறீர்கள்? உங்களில் யார் எனது நோக்கங்களுக்காக உண்மையான அக்கறையைக் காண்பித்திருக்கிறீர்கள்? நான் உங்களை எழுப்பாமல் இருந்திருந்தால், நீங்கள் இன்னும் விழித்திருக்க மாட்டீர்கள், மாறாக உறைந்துபோனதைப் போலவும், மீண்டும் உறக்கநிலையில் இருப்பதைப் போலவும் இருந்திருப்பீர்கள்.

கோரமான அலைகளுக்கு நடுவே, மனிதன் என் கோபத்தைக் காண்கிறான்; கார்மேகங்களின் சுவடுகளில், மனிதன் திகைத்து, பயந்து போகிறான், எங்கே தப்பி ஓடுவது என்று தெரியாமல், இடியும் மழையும் அவர்களைத் துடைத்து எடுத்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறான். பின்னர், சுழன்று வீசும் பனிப்பொழிவு கடந்த சென்றபிறகு, இயற்கையின் அழகிய காட்சிகளில் அவர்கள் மகிழ்ச்சியடைவதால் அவர்களின் மனநிலை எளிதாகவும் வெளிச்சமாகவும் மாறுகிறது. ஆனால், அது போன்ற தருணங்களில், மனிதகுலத்தின்மீது நான் கொண்டுள்ள எல்லையற்ற அன்பை அவர்களில் யார் அனுபவித்து உணர்ந்திருக்கிறார்கள்? அவர்களின் இருதயங்களில் என் உருவம் மட்டுமே இருக்கிறது, ஆனால் என் ஆவியின் சாராம்சம் இல்லை: மனிதன் என்னை வெளிப்படையாக நிந்திக்கவில்லையா? பெருங்காற்று வீசி முடிந்த பிறகு, மனிதர்கள் அனைவரும் புதுப்பிக்கப்பட்டதைப் போல இருக்கிறார்கள்; இன்னல்களின் மூலம் சுத்திகரிப்பைப் பின்பற்றி, அவர்கள் ஒளியையும் வாழ்க்கையையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். உங்களுக்கும்கூட, நான் கொடுத்த அடிகளைத் தாங்கியபிறகு, இன்று வருவதற்கான நல்ல அதிர்ஷ்டம் இருக்கிறது இல்லையா? ஆனால், இன்று போனபின்பு, நாளை வரும்போது, மழையைத் தொடர்ந்து வரும் தூய்மையை நீங்கள் பராமரிக்க முடியுமா? உங்கள் சுத்திகரிப்புக்குப் பின் வந்த பக்தியை உங்களால் பராமரிக்க முடியுமா? இன்றைய கீழ்ப்படிதலை நீங்கள் பராமரிக்க முடியுமா? உங்கள் பக்தி உறுதியாகவும் மாறாமலும் இருக்குமா? இந்தக் கோரிக்கை மனிதன் நிறைவேற்றுவதற்கான திறனுக்கு அப்பாற்பட்டதா? நான் மனிதர்களிடையே ஒவ்வொரு நாளும் வாழ்கிறேன், மனிதர்களோடு அவர்கள் மத்தியில் சேர்ந்து செயல்படுகிறேன், இருப்பினும் இதை யாரும் கவனிக்கவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்திலும், என் ஆவியின் வழிகாட்டுதலுக்காக இல்லாவிட்டால், தற்போதைய யுகத்தில் யார் இன்னும் இருக்கக்கூடும்? நான் மனிதர்களுடன் இணைந்து வாழ்கிறேன், செயல்படுகிறேன் என்று சொல்லும்போது, நான் மிகைப்படுத்துகிறேனா? கடந்த காலத்தில், “நான் மனிதர்களை உருவாக்கி, மனிதகுலம் முழுவதையும் வழிநடத்தி, மனிதகுலம் முழுவதிற்கும் கட்டளையிட்டேன்” என்று சொன்னேன்; இது உண்மையில் அவ்வாறு இல்லையா? இந்த விஷயங்களைப் பற்றிய உங்கள் அனுபவம் போதுமானதாக இல்லை என்பது சாத்தியமா? “சேவை-செய்கிறவர்” என்ற வெறும் சொற்றொடரை விரித்துரைக்க உங்கள் முழு வாழ்க்கையையும் எடுத்துக்கொள்ளும். உண்மையான அனுபவம் இல்லாமல், ஒரு மனிதன் என்னை ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்—அவர்கள் ஒருபோதும் என் வார்த்தைகளின் மூலம் என்னை அறிந்து கொள்ள முடியாது. எவ்வாறாயினும், இன்று நான் நேரடியாக உங்கள் மத்தியில் வந்துள்ளேன்—இது உங்கள் புரிதலுக்கு அதிகப் பயனளிக்கும் அல்லவா? எனது அவதரிப்பு உங்களுக்கு இரட்சிப்பும் ஆகுமல்லவா? நான் நேரடியாக எனது சொந்த ஆள்தத்துவத்தில் மனிதர்களிடம் வரவில்லை என்றால், முழு மனித இனமும் நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் எண்ணங்களால் ஊடுருவப்பட்டிருக்கும், அதனால் சாத்தானின் உடைமைகளாக மாறியிருக்கும், ஏனென்றால் நீ நம்புவது சாத்தானின் உருவம் மட்டுமே, தேவனுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது என் இரட்சிப்பு இல்லையா?

சாத்தான் என் முன் வரும்போது, நான் அதன் மூர்க்கத்தனத்திலிருந்து பின்வாங்குவதுமில்லை, அதன் கொடூரத்தைக் கண்டு நான் பயப்படுவதுமில்லை: நான் அதை வெறுமனே புறக்கணிக்கிறேன். சாத்தான் என்னைச் சோதிக்கும்போது, அதனுடைய தந்திரத்தின் ஊடாய் நான் பார்க்கிறேன், அதனால் அது வெட்கத்தாலும் அவமானத்திலும் பதுங்கிப்போய் விடுகிறது. சாத்தான் என்னுடன் சண்டையிட்டு, என் தெரிந்துகொண்ட ஜனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும்போது, நான் அதனோடு என் மாம்சத்தில் போரிடுகிறேன்; என் ஜனங்கள் எளிதில் வீழ்ந்து விடவோ அல்லது தொலைந்து போகவோ கூடாது என்பதற்காக நான் என் மாம்சத்தில் பராமரிக்கிறேன், மேய்ப்பனாக இருக்கிறேன், நான் அவர்களை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்துகிறேன். சாத்தான் தோல்வியில் பின்வாங்கும்போது, நான் என் ஜனங்களால் மகிமைப்படுத்தப்பட்டிருப்பேன், என் மக்கள் எனக்கு அழகான, ஆரவாரம் கொண்ட சாட்சியம் தருவார்கள். எனவே, எனது நிர்வாகத் திட்டத்தில் பிரதிபலிப்புப் படலங்களாக இருப்பவர்களை எடுத்து அவர்களை இறுதியில் ஒட்டுமொத்தமாக பாதாளத்துக்குள் போடுவேன். இது எனது திட்டம்; இது எனது கிரியை. உங்கள் வாழ்க்கையில், நீ இத்தகைய சூழ்நிலையைச் சந்திக்கும் ஒரு நாள் வரலாம்: நீ சாத்தானைச் சிறைபிடிக்க உன்னை மனமுவந்து அனுமதிப்பாயா அல்லது உன்னைப் பெற என்னை அனுமதிப்பாயா? இது உனது சொந்த விதி, நீ அதைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ராஜ்யத்தில் இருக்கிற வாழ்க்கை என்பது ஜனங்களின் வாழ்க்கை மற்றும் தேவனையே குறிக்கிறது. மனிதகுலம் முழுவதும் எனது கவனிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ளது, மேலும் அனைவரும் மரண பரியந்தம் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துடன் போரில் ஈடுபட்டுள்ளனர். இந்த இறுதிப் போரில் வெற்றிபெற, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை அழித்து முடிக்க, எல்லா ஜனங்களும் தங்களை முழுமையாக என் ராஜ்யத்தில் எனக்கு அர்ப்பணிக்க வேண்டும். இங்கே பேசப்படும் “ராஜ்யம்” என்பது தெய்வீகத்தின் நேரடி ஆளுகைக்கு உட்பட்ட ஒரு வாழ்க்கையைக் குறிக்கிறது, அதில் என் பயிற்சியை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் எல்லா மனிதர்களுக்கும் நான் மேய்ப்பனாக இருக்கிறேன், இதனால் அவர்கள் வாழ்க்கையானது, அப்போது பூமியில் இருந்தாலும் பரலோகத்தில் இருப்பதைப் போல—ஒரு மூன்றாவது பரலோகத்தில் வாழும் மெய்யான உணர்வுடன் இருப்பார்கள். நான் மாம்சத்தில் இருந்தாலும், மாம்சத்தின் வரம்புகளின் சிரமங்கள் எனக்கு ஏற்படுவதில்லை. மனிதனின் ஜெபங்களைக் கேட்க நான் பல முறை அவனுக்கு மத்தியில் வந்துள்ளேன், மனிதர்களிடையே இருந்து, அவர்களின் துதியைப் பலமுறை அனுபவித்தேன்; என் இருப்பை மனிதர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாலும், நான் இன்னும் என் கிரியையை இந்த வழியிலேயே செய்கிறேன். நான் மறைந்திருக்கும் இடமாகிய என் வாசஸ்தலத்திலே—ஆயினும், என் வாசஸ்தலத்திலே, நான் என் சத்துருக்கள் யாவரையும் தோற்கடித்துவிட்டேன்; என் வாசஸ்தலத்திலே, நான் பூமியில் வாழும் உண்மையான அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்; என் வாசஸ்தலத்திலே, நான் மனுஷனின் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் கவனித்து வருகிறேன், மேலும் மனித இனம் முழுவதையும் கண்காணித்து நடத்துகிறேன். என் நோக்கங்களுக்காக மனிதகுலம் அக்கறையை உணர முடிந்தால், அதன் மூலம் என் இருதயத்தைத் திருப்திப்படுத்தி, எனக்கு மகிழ்ச்சியளித்தால், நான் நிச்சயமாக எல்லா மனிதர்களையும் ஆசீர்வதிப்பேன். மனிதகுலத்திற்கு நான் விரும்புவது இதுதான் அல்லவா?

மனிதகுலம் மயக்க நிலையில் கிடப்பதைப் போல, என் இடியின் முழக்கம் மட்டுமே அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை எழுப்புகிறது. அவர்கள் கண்களைத் திறக்கும்போது, அவர்கள் திசை உணர்வை இழக்கும்படியாக, குளிர்ந்த பிரகாசத்தின் ஊடுருவல் அவர்களில் பலரது கண்களையும் காயப்படுத்துகிறது, மேலும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. பெரும்பாலான ஜனங்கள் லேசர் போன்ற கற்றைகளால் தாக்கப்படுகிறார்கள், பெருங்காற்றின் கீழ் ஒரு குவியலில் இடிந்து விழுகிறார்கள், அவர்களின் உடல்கள் பீரிட்டு வரும் பெருவெள்ளத்தில் எந்தத் தடயமுமின்றி அடித்துச் செல்லப்படுகின்றன. வெளிச்சத்தில், தப்பிப்பிழைத்தவர்கள் இறுதியாக என் முகத்தைத் தெளிவாகக் காண முடிகிறது. அப்போதுதான் அவர்கள் எனது வெளிப்புறத் தோற்றத்தை அறிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் என்னை நேரடியாக முகத்தில் பார்க்கத் துணிவதில்லை. இல்லாவிடில் அவர்களுடைய மாம்சத்தின் மீது மீண்டும் ஒரு முறை என் சிட்சையால் துன்புறுத்துவேன் மேலும் சபித்துவிடுவேன் என்ற ஆழ்ந்த பயம் கொண்டிருக்கிறார்கள். அதனால் பலர் கூக்குரலிட்டுப் பலமாக அழுகிறார்கள்; பலர் விரக்தியில் விழுகிறார்கள்; பலர் தங்கள் இரத்தத்தால் ஆறுகளை உருவாக்குகிறார்கள்; பலர் சடலங்களாக மாறுகிறார்கள், குறிக்கோள் இல்லாமல் இங்கும் அங்குமாக அலைகிறார்கள்; பல மக்கள், வெளிச்சத்தில் தங்கள் சொந்த இடத்தைக் கண்டுபிடித்து, திடீரென மன வேதனையை உணர்கிறார்கள் மற்றும் அவர்களின் நீண்டகால துயரத்துக்காகக் கண்ணீர் சிந்துகிறார்கள். ஒளியால் நிர்பந்திக்கப்பட்ட பலர், தங்கள் அசுத்தத்தை ஒப்புக்கொண்டு, தங்களை சீர்திருத்திக்கொள்ளத் தீர்மானிக்கிறார்கள். பலர் குருடர்களாக இருப்பதால், ஏற்கனவே வாழ்வின் மகிழ்ச்சியை இழந்துவிட்டார்கள், இதன் விளைவாக ஒளியைக் கவனிக்க மனம் இல்லை, இதனால் தொடர்ந்து தேங்கி நின்று, அவர்களின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். மேலும் பலர் அவர்களின் நாளைய தினத்தை எதிர்பார்த்து, ஒளியின் வழிகாட்டுதலின் கீழ், வாழ்க்கை என்ற கப்பலின் பாய்மரத்தை மேலேற்றுகிறார்கள். … இன்று, மனுஷர்களில் யார் இந்த நிலையில் இல்லை? என் வெளிச்சத்திற்குள் வாழாதவன் யார்? நீ பலமுள்ளவனாக இருந்தாலும், அல்லது நீ பலவீனமானவனாக இருந்தாலும், என்னுடைய வெளிச்சத்தின் வருகையை நீ எவ்வாறு தவிர்க்க முடியும்?

மார்ச் 10, 1992

முந்தைய: அத்தியாயம் 12

அடுத்த: அத்தியாயம் 14

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக