அத்தியாயம் 97

ஒவ்வொரு தனி மனுஷனையும் என் அற்புதச் செயல்களைப் பார்க்கவும், என் ஞான வார்த்தைகளைக் கேட்கவும் வைப்பேன். இது ஒவ்வொரு தனி நபரையும் உள்ளடக்கியிருக்க வேண்டும், மேலும் இது ஒவ்வொரு தனிப்பட்ட விஷயத்தின் மூலமாக நடக்க வேண்டும். இதுவே எனது ஆட்சிமுறை ஆணையாக இருக்கிறது, மேலும் இதுவே எனது உக்கிரக் கோபமாகும். பிரபஞ்சம் மற்றும் பூமியின் எல்லைகள் வரை உள்ள எல்லா ஜனங்களும் தங்கள் சொந்தக் கண்களால் பார்க்கும் வகையில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு விஷயத்தையும் நான் தொடுவேன்; இது நிறைவேறியிருக்கும் வரை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். என் உக்கிர கோபமானது, ஒரு துளியளவு கூட நிறுத்தி வைக்கப்படாமல், முழுவதுமாக ஊற்றப்பட்டிருக்கிறது. இந்த நாமத்தை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு நபரின் மீதும் இது செலுத்தப்படுகிறது (இது விரைவில் உலகின் அனைத்துத் தேசங்களின் மீதும் திருப்பப்படும்). என் உக்கிரக் கோபம் என்றால் என்ன? அது எவ்வளவு கடுமையானதாக இருக்கிறது? என் கோபம் எப்படிப்பட்ட நபர் மீது வருகிறது? பெரும்பாலான ஜனங்கள் கோபத்தின் மிகக் கடுமையான அளவே உக்கிரம் என்று நினைக்கிறார்கள், ஆனால், இது அதை முழுமையாக விளக்குவதில்லை. எனது கோபமும் எனது ஆட்சிமுறை ஆணைகளும் பிரிக்க முடியாத இரண்டு பகுதிகளாக இருக்கின்றன; எனது ஆட்சிமுறை ஆணைகளை நான் இயற்றும்போது, உக்கிர கோபம் அவற்றைத் தொடர்ந்து வருகிறது. எனவே உண்மையிலேயே உக்கிர கோபம் என்றால் என்ன? உக்கிர கோபம் என்பது ஜனங்களுக்கு நான் அளிக்கும் நியாயத்தீர்ப்பின் அளவாக இருக்கிறது, மேலும், இது எனது ஆட்சிமுறை ஆணைகளில் ஏதேனும் ஒன்றை இயற்றுவதற்குப் பின்னால் உள்ள கொள்கையாகும். எனது ஆணைகளில் ஒன்றை யார் மீறினாலும், எந்த அளவில் மீறப்பட்டது என்பதைப் பொறுத்து எனது கோபம் அதற்கேற்ற அளவில் இருக்கும். என்னுடைய உக்கிர கோபம் இருக்கும் போது, என்னுடைய ஆட்சிமுறை ஆணைகளும் இருப்பது உறுதி, அது அப்படியே அதற்கு நேர்மாறாகவும் இருக்கும். எனது ஆட்சிமுறை ஆணைகளும் உக்கிரக் கோபமும் பிரிக்க முடியாத முழுமையை உருவாக்குகின்றன. இது யாரும் குற்றம் செய்ய முடியாதபடிக்கு, மிகக் கடுமையான நியாயத்தீர்ப்புகளாய் இருக்கின்றன. எல்லா ஜனங்களும் அதில் நிலைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் என் கரத்தால் தாக்கப்படுவதிலிருந்து எளிதில் தப்ப மாட்டார்கள். காலங்காலமாக ஜனங்கள் இதைப் பற்றி ஒருபோதும் அறிந்திருக்கவில்லை (பெரும் பேரழிவுகளால் வேதனையை அனுபவித்த சிலர் இருந்தபோதிலும், அவர்கள் அதைப் பற்றி இன்னும் அறியவில்லை; இருப்பினும், இந்த ஆட்சிமுறை ஆணையை நிறைவேற்றுவது முக்கியமாக இப்போதிலிருந்தே தொடங்குகிறது), ஆனால், நீங்கள் குற்றம் செய்வதைத் தவிர்க்கும்படிக்கு, இன்று நான் இவை அனைத்தையும் உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன்.

எல்லா ஜனங்களும் என் குரலைக் கேட்டு என் வார்த்தைகளை விசுவாசிக்க வேண்டும். இல்லையெனில், நான் செயல்படவும் மாட்டேன், எந்தக் கிரியையும் செய்யவும் மாட்டேன். எனது ஒவ்வொரு வார்த்தையும் செயலும் நீங்கள் பின்பற்ற வேண்டிய எடுத்துக்காட்டுகளாகும்; அவை உங்களுக்கு உதாரணப்புருஷனாகவும் மற்றும் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியாகவும் இருக்கின்றன. நான் மாம்சமாக மாறியதற்குக் காரணம் என்னவென்றால், நான் என்னவாக இருக்கிறேன் என்பதையும், என் மனிதத்தன்மையில் நான் என்ன கொண்டிருக்கிறேன் என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்பதே ஆகும். எதிர்காலத்தில், நான் என்னவாக இருக்கிறேன், என்னுடைய தெய்வீகத்தன்மையில் என்ன கொண்டிருக்கிறேன் என்பதற்குச் சாட்சியாக இருக்க உங்களை அனுமதிப்பேன். இவ்வாறு விஷயங்கள் படிப்படியாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், ஜனங்களால் வெறுமனே விசுவாசிக்க முடியாது, மேலும் அவர்கள் என்னைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அவர்கள் புரிந்து கொள்ள முடியாத மற்றும் தெளிவற்ற தரிசனங்களை மட்டுமே காணக் கூடியவர்களாக இருப்பார்கள், மேலும் அவர்கள் என்னைப் பற்றிய தெளிவானப் புரிதலைப் பெற முடியாதவர்களாய் இருப்பார்கள். என்னுடைய நபர் உங்களுக்கு முழுமையாகத் தோன்றியிருக்கிறார் என்பதை என் வார்த்தைகள் காட்டியிருக்கின்றன, ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேட்டாலும், இன்னும் என்னை அறியாதிருக்கிறார்கள்—இந்தக் காரணத்தினால் மட்டுமே, அவர்கள் மூடர்களாகவும் அறியாமையில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நான் மாம்சமாகியிருக்கிற இப்போதும் கூட, ஜனங்கள் இன்னும் என்னை எதிர்க்கிறார்கள், எனவே, நான் இந்தப் பொல்லாத மற்றும் விபச்சாரம் நிறைந்த பழைய காலத்தைத் தண்டிக்கவும் சாத்தானையும் பிசாசுகளையும் முற்றிலும் அவமானப்படுத்தவும், எனது உக்கிரக் கோபத்தையும் எனது ஆட்சிமுறை ஆணைகளையும் பயன்படுத்துகிறேன். இதுதான் ஒரே வழியாகும்; இது மனிதகுலத்திற்கான இலக்காகவும் இருக்கிறது, இதுவே மனிதகுலத்திற்கு காத்திருக்கும் முடிவாகும். ஒருவரும் அதிலிருந்து தங்கள் வழியை மாற்றவோ பேசவோ முடியாது என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவாகும். நான் மட்டுமே இறுதி வாக்கைக் கொண்டிருக்கிறேன்; இது எனது நிர்வாகமும் மற்றும் இதுவே எனது திட்டமுமாகும். ஜனங்கள் அனைவரும் விசுவாசித்து, இருதயத்திலும் வார்த்தையிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுபவர்கள் நிச்சயமாக நித்திய காலமாகத் துன்பத்தை அனுபவிப்பார்கள், அதே சமயம் இந்த வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் நித்திய காலமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்—இதை நான் முன்னரே தீர்மானித்திருக்கிறேன், அதை யாராலும் மாற்ற முடியாது. என் இருதயத்தை மாற்றக் கூடியவர்கள் யாரும் இல்லை, மேலும் என் வார்த்தைகளோடு ஒரு வார்த்தையை அதிகமாக சேர்க்கக் கூடியவர்கள் யாரும் இல்லை, மேலும் ஒரு வார்த்தையைக் கூட தன்னிச்சையாக நீக்குவதற்கு அனுமதிக்கப்படுபவர்களும் இருப்பதில்லை; யாராவது இதை மீறினால், நான் அவர்களைக் கண்டிப்பாகத் தண்டிப்பேன்.

என்னுடைய இரகசியங்கள் உங்களுக்கு அனுதினமும் வெளிப்படுத்தப்படுகின்றன—நீங்கள் உண்மையிலேயே அவற்றைப் புரிந்து கொள்கிறீர்களா? நீங்கள் உண்மையிலேயே அவற்றைக் குறித்து நிச்சயமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? சாத்தான் உன்னை வஞ்சிக்கும் போது, உன்னால் அதைக் காண முடிகிறதா? இது வாழ்க்கையில் உங்கள் வளர்ச்சிகளுக்கு ஏற்றபடி தீர்மானிக்கப்படுகிறது. எல்லாக் காரியங்களும் என்னால் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை என்று நான் கூறுவதால், என் முதற்பேறான குமாரர்களை பரிபூரணப்படுத்துவதற்காக நான் ஏன் தனிப்பட்ட முறையில் மனுவுருவாகியிருக்கிறேன்? மேலும், பயனற்றது என்று ஜனங்கள் நினைக்கும் அளவுக்கு நான் ஏன் இவ்வளவு கிரியைகளைச் செய்திருக்கிறேன்? நான் தான் குழப்பத்தில் இருக்கிறேனா? இதை நினைவில் வையுங்கள்! நான் செய்கிற அனைத்தும் என்னுடைய முதற்பேறான குமாரர்களை ஆதாயப்படுத்துவதற்காக மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, சாத்தானை வெட்கப்படுத்துவதற்காகவே செய்யப்படுகின்றன. சாத்தான் என்னை எதிர்த்தாலும், அதன் சந்ததியை அதற்கு எதிராகக் கலகம் செய்ய வைத்து, என்னைத் துதிக்கச் செய்யும் வல்லமை எனக்கு இருக்கிறது. மேலும், நான் செய்வதெல்லாம் அடுத்த கட்ட கிரியைகள் சீராக நடக்கவும், முழு உலகமும் என்னை ஆர்ப்பரித்துத் துதிக்கவும், சுவாசமுள்ள அனைத்தும் எனக்கு முன்பாக முழங்கால்படியிட்டு என்னை மகிமைப்படுத்தவுமே ஆகும்; அந்த நாள் உண்மையிலேயே மகிமையின் நாளாக இருக்கும். நான் எல்லாவற்றையும் என் கரங்களில் வைத்திருக்கிறேன், ஏழு இடிமுழக்கங்கள் ஒலிக்கும் போது, அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும், ஒருபோதும் மாறாது, அனைத்தும் நிலையானதாக இருக்கும். அந்த நேரம் முதற்கொண்டு, புதிய வானம் மற்றும் பூமியின் புதிய ஜீவன் பிரவேசிக்கும், முற்றிலும் புதிய சூழ்நிலைகள் பிரவேசிக்கும், மற்றும் ராஜ்யத்தின் வாழ்க்கை தொடங்கும். ஆனால் ராஜ்யம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? ஜனங்களால் அதைத் தெளிவாக உணர முடியாது (ஏனென்றால் ராஜ்யத்தின் வாழ்க்கையை இதற்கு முன்பு யாரும் ருசித்ததில்லை, எனவே அது ஜனங்களின் மனதில் கற்பனை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது, அவர்களின் இருதயங்களில் சிந்திக்கப்பட்டிருக்கிறது). தற்போதைய நிலையிலிருந்து எதிர்கால நிலைக்குத் திரும்புவதாகிய, திருச்சபை வாழ்க்கையிலிருந்து ராஜ்யத்தின் வாழ்க்கைக்குத் திரும்புவதில், ஜனங்கள் இதற்கு முன் கற்பனை செய்திராத பல விஷயங்கள் இந்தக் காலகட்டத்தில் நடக்கும். திருச்சபை வாழ்க்கையானது ராஜ்யத்தின் வாழ்க்கைக்குள் பிரவேசிப்பதற்கான முன்னோடியாகும், எனவே ராஜ்யத்தின் வாழ்க்கை எழும்புவதற்கு முன்பு, திருச்சபை வாழ்க்கையை வளர்ப்பதற்கு நான் எந்த முயற்சியையும் விட்டு வைக்கமாட்டேன். திருச்சபை வாழ்க்கை என்றால் என்ன? இது இப்படிப்பட்டதாகும்: என் முதற்பேறான குமாரர்கள் உட்பட அனைவரும், என் வார்த்தைகளைப் புசித்து, பானம்பண்ணி, மகிழ்ந்து, மற்றும் என்னை அறிந்து, அதன் மூலம் அவர்கள் என் புடமிடுதல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றைப் பெறுகிறார்கள், அதனால் அவர்கள் என் ஆட்சிமுறை ஆணைகளையும், என் நியாயத்தீர்ப்பையும், என் உக்கிர கோபத்தையும் புரிந்து கொண்டு, ராஜ்யத்தின் வாழ்க்கையில் குற்றங்களைச் செய்வதைத் தவிர்க்கலாம். மேலும் “ராஜ்யத்தின் வாழ்க்கை” என்றால் என்ன? ராஜ்யத்தின் வாழ்க்கை என்பது எனது முதற்பேறான குமாரர்கள் என்னுடன் சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வதும், எல்லா ஜனங்களையும் மற்றும் அனைத்து தேசங்களையும் ஆட்சி செய்வதாகும் (எனது முதற்பேறான குமாரர்களும் நானும் மட்டுமே ராஜ்யத்தின் வாழ்க்கையை அனுபவிக்க முடியும்). எல்லா தேசங்களிலிருந்தும் எல்லா ஜனங்களிலிருந்தும் என் குமாரர்களும் என் ஜனங்களும் ராஜ்யத்தில் பிரவேசித்தாலும், அவர்களால் ராஜ்யத்தின் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை. ஆவிக்குரிய உலகில் பிரவேசிப்பவர்களால் மட்டுமே ராஜ்யத்தின் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். ஆகவே, நானும் என் முதற்பேறான குமாரர்களும் மட்டுமே சரீரத்தில் வாழ முடியும், என் குமாரர்களும் என் ஜனங்களும் மாம்சத்திலேயே இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். (இருப்பினும், இது சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட மாம்சம் அல்ல. இதுவே என் முதற்பேறான குமாரர்கள் என்னுடன் சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்வதின் முக்கியத்துவமாகும்.) மற்ற எல்லா ஜனங்களும் தங்கள் ஆவிகள், ஆத்துமாக்கள் மற்றும் சரீரங்களுடன் பாதாளத்திற்குள் தள்ளுண்டு போவார்கள். அதாவது, இந்த ஜனங்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள், மற்றும் வாழ்வதற்குத் தடை செய்யப்படுவார்கள் (ஆனாலும், அவர்கள் துன்பங்கள் மற்றும் பேரழிவுகள் போன்ற, சாத்தானின் அனைத்து கட்டுகள் மற்றும் அனைத்துக் கொடுமைகளையும் கடந்து செல்ல வேண்டும்). இது முடிந்தவுடன், ராஜ்யத்தின் வாழ்க்கை அதிகாரப்பூர்வமாகச் சரியான பாதையில் வந்துவிடும், மேலும் நான் எனது செயல்களை அதிகாரப் பூர்வமாக வெளிப்படுத்தத் தொடங்குவேன் (வெளிப்படையாக வெளிப்படுத்தப்பட வேண்டும், மறைவாக அல்ல). அப்போதிலிருந்து பெருமூச்சும் கண்ணீரும் நிச்சயமாக இருக்காது. (ஏனென்றால், ஜனங்களைப் புண்படுத்தும், அவர்களை அழவைக்கும் அல்லது அவர்களுக்குத் துன்பம் தரக்கூடிய எதுவும் இனி இருக்காது, இது என் குமாரர்களுக்கும் என் ஜனங்களுக்கும் கூட பொருந்தும்; ஆனால் ஒரு விஷயத்தை வலியுறுத்த வேண்டும், அது என்னவென்றால், என் குமாரர்களும் என் ஜனங்களும் என்றென்றும் மாம்சமாக இருப்பார்கள் என்பதேயாகும்.) அனைவரும் சந்தோஷமாக—மகிழ்ச்சியின் தரிசனமாக இருப்பார்கள். அது மாம்சீகமான ஒன்றாக இருக்காது, மாறாக மாம்சீகக் கண்களால் பார்க்க முடியாத ஒன்றாக இருக்கும். என்னுடைய முதற்பேறான குமாரர்களாலும் அதை அனுபவிக்க முடியும்; இதுவே என்னுடைய அற்புதமான செயல், மற்றும் இதுவே என்னுடைய மகத்தான வல்லமையாக இருக்கிறது.

நீங்கள் எல்லா நேரங்களிலும் என் சித்தத்தைத் தேடக் கூடியவர்களாக இருக்கவும், என் இருதயத்தின் மீது அக்கறையுள்ளவர்களாய் இருக்கவும் நான் விரும்புகிறேன். தற்காலிக இன்பம் உன்னுடைய முழு வாழ்க்கையையும் அழித்து விடும், அதே சமயம் தற்காலிக துன்பம் நித்திய ஆசீர்வாதங்களைத் தரும். மனம் தளர வேண்டாம்; இது தான் நடக்க வேண்டிய பாதை. நான் முன்பு: “எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்” என்று அடிக்கடி கூறியிருக்கிறேன். மேலும் அவை எத்தகைய “ஆசீர்வாதங்கள்”? அவை இன்று பெற்றுக் கொண்டவைகள் மட்டுமல்ல, மேலும் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியவைகளும் ஆகும்—இவை மட்டுமே உண்மையான ஆசீர்வாதங்களாகும். நீங்கள் சீயோன் மலைக்குத் திரும்பி வரும்போது, உங்கள் தற்போதைய துன்பத்திற்கு முடிவில்லாத நன்றியைக் காண்பிப்பீர்கள், ஏனென்றால் இது என்னுடைய ஆசீர்வாதமாகும். இப்போது மாம்சத்தில் வாழ்வது என்பது சீயோன் மலையில் இருப்பதாகும் (நீ எனக்குள் வாழ்கிறாய் என்று அர்த்தம்), அதே நேரத்தில் நாளை சரீரத்தில் வாழ்வது என்பது மகிமையின் நாளாக இருக்கும், மேலும், இன்னும் அதிகமாக, இது சீயோன் மலையில் இருப்பதாகும். நான் பேசும் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, “சீயோன் மலை” என்பதன் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சீயோன் மலை என்பது ராஜ்யம் என்பதற்கான ஒரு அர்த்தமாகும், மேலும் இது ஆவிக்குரிய உலகமும் கூட. இன்றைய சீயோன் மலையில், நீங்கள் மாம்சத்தில் இருந்து ஆறுதல் அடைந்து என் கிருபையைப் பெறுகிறீர்கள்; எதிர்காலத்தின் சீயோன் மலையில், நீங்கள் ராஜாக்களாக ஆளுகை செய்யும் ஆசீர்வாதத்தை அனுபவிக்கும் சரீரத்தில் இருப்பீர்கள். இது திட்டவட்டமாக புறக்கணிக்கப்படக் கூடாது. ஆசீர்வாதங்களைப் பெறக்கூடிய நேரங்கள் நழுவிப்போக எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது; எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று என்பது இன்றைய நாளாகவே இருக்கிறது, அது நாளையிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. நீ ஆசீர்வாதங்களை அனுபவிக்க வரும்போது, இன்றைய கிருபை குறிப்பிடத் தகுந்ததல்ல என்று நீ நினைப்பாய். இதைத் தான் நான் உன்னிடம் ஒப்படைக்கிறேன், இதுவே எனது இறுதி ஆலோசனையாகும்.

முந்தைய: அத்தியாயம் 96

அடுத்த: அத்தியாயம் 98

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக