அத்தியாயம் 33

உண்மையில், தேவன் ஜனங்களிடத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதன் அடிப்படையிலும், அவர் அவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்பதன் அடிப்படையிலும், அதோடு கூட ஜனங்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையிலும், ஜனங்களிடத்தில் அவரது கோரிக்கைகள் அளவுக்கு அதிகமாக இல்லை என்றும், அவர் அதிகம் கேட்பதில்லை என்றும் கூறலாம். அப்படியானால், அவர்களால் எப்படி தேவனைத் திருப்திப்படுத்த முயற்சிக்காமல் இருக்க முடியும்? தேவன் மனுஷனுக்கு நூறு சதவிகிதம் கொடுக்கிறார், ஆனாலும் அவர் ஒரு சதவிகிதத்தில் சிறு பகுதியை மட்டுமே ஜனங்களிடம் கேட்கிறார்—இது அதிகமாகக் கேட்பதா? தேவன் ஒன்றுமில்லாத விஷயத்திலிருந்து பிரச்சனையை உண்டாக்குகிறாரா? பெரும்பாலும், ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்துகொள்வதில்லை; அவர்கள் தேவனுக்கு முன்பாக தங்களைத் தாங்களே பரிசோதிப்பதில்லை, அதனால் அவர்கள் பல சமயங்களில் கண்ணியில் சிக்குவதும் உண்டு—இதை தேவனுடன் ஒத்துழைப்பது என்று எப்படிக் கருத முடியும்? தேவன் ஜனங்கள் மீது அதிக பாரத்தை சுமத்தாத ஒரு காலம் இருந்திருந்தால், அவர்கள் சேற்றைப் போல உருவழிந்து போவார்கள், மேலும் அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்களைத் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜனங்கள் இப்படித்தான்—செயலற்றவர்களாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கிறார்கள், எப்போதும் தேவனுடன் சுறுசுறுப்பாக ஒத்துழைக்க இயலாதவர்களாக, எப்போதும் தங்களைத் தாங்களே விட்டுக்கொடுக்க எதிர்மறையான காரணத்தைத் தேடுகிறார்கள். நீ உண்மையிலேயே எல்லாவற்றையும் உனக்காகச் செய்யாமல், தேவனைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்பவனா? நீ உண்மையிலேயே உணர்ச்சிகளைச் சார்ந்திருக்காத, தங்கள் சொந்த விருப்பங்களைக் கொண்டிராத, தேவனுடைய கிரியையின் தேவைகளை நிறைவேற்றுபவனா? “ஜனங்கள் ஏன் எப்போதும் என்னுடன் பேரம் பேச முயற்சிக்கிறார்கள்? நான் வர்த்தக மையத்தின் பொது மேலாளரா? ஜனங்கள் என்னிடம் கோருவதை நான் ஏன் முழு மனதுடன் நிறைவேற்றுகிறேன், ஆனாலும் மனுஷனிடம் நான் கேட்பது ஒன்றும் நடப்பதில்லை?” தேவன் ஏன் இப்படிப்பட்ட காரியங்களை பலமுறை தொடர்ச்சியாகக் கேட்கிறார்? அவர் ஏன் இவ்வாறு திகைத்து அழுகிறார்? தேவன் ஜனங்களிடத்தில் எதையும் ஆதாயப்படுத்தியிருக்கவில்லை; அவர் பார்ப்பது அனைத்தும் அவர்கள் தெரிவு செய்து, தேர்ந்தெடுக்கும் கிரியையை மட்டுமேயாகும். “ஆனாலும் மனுஷனிடம் நான் கேட்பது ஒன்றும் நடப்பதில்லை” என்று தேவன் ஏன் கூறுகிறார்? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: துவக்கம் முதல் முடிவு வரை, தாங்கள் செய்ய வேண்டிய கடமையான கிரியையை, தங்களுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாத ஒரு கிரியையை யாரால் செய்ய முடியும்? தங்கள் இருதயத்தில் உள்ள உணர்வுகளின் அடிப்படையில் செயல்படாதவன் யார்? மூன்று நாட்கள் மீன்பிடிப்பது போலவும், பின்னர் வலைகளை விட்டுவிட்டு அடுத்த இரண்டு நாட்களைச் சும்மா செலவிடுவது போலவும், அவர்கள் செய்வதை ஒருபோதும் விடாமுயற்சியுடன் செய்யாமல், ஜனங்கள் தங்கள் ஆளுமைக்கு தடையில்லாமல் சுதந்திரம் கொடுக்கிறார்கள். அவர்கள் அனலாகவும் குளிராகவும் மாறி மாறி இருக்கின்றனர்: அவர்கள் அனலாக இருக்கும்போது, பூமியில் உள்ள அனைத்தையும் எரித்துவிட முடியும், மேலும் அவர்கள் குளிர்ச்சியாக இருக்கும்போது, பூமியில் உள்ள அனைத்து நீரையும் உறைய வைக்கும் திறன் கொண்டவர்களாய் இருக்கிறார்கள். இது மனுஷனுடைய செயல்பாடு அல்ல, இருப்பினும் இது மனுஷனின் நிலையைப் பற்றிய மிகவும் பொருத்தமான ஒப்புமையாகும். இது உண்மையல்லவா? ஒருவேளை என்னிடம் ஜனங்களைப் பற்றிய “கருத்துகள்” இருக்கலாம், ஒருவேளை நான் அவர்களை இழிவுபடுத்தலாம்—ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், “சத்தியத்தால் நீங்கள் உலகம் முழுவதும் நடப்பீர்கள்; சத்தியம் இல்லாமல், நீங்கள் எங்கும் செல்ல முடியாது.” இது ஒரு மனுஷீகப் பழமொழியாக இருந்தாலும், இதை இங்கே பயன்படுத்துவது பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே ஜனங்களின் ஆவியை மட்டுப்படுத்தவில்லை மற்றும் அவர்களின் செயல்களை மறுக்கவில்லை. சில கேள்விகளைக் குறித்து நான் உங்களிடம் ஆலோசனை கேட்கட்டும்: தேவனுடைய கிரியையை யார் தங்கள் சொந்த கடமையாகப் பார்க்கிறார்கள்? “நான் தேவனைத் திருப்திப்படுத்தும் வரையில், என்னுடைய அனைத்தையும் கொடுப்பேன்” என்று யாரால் கூற முடியும்? “மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், தேவனுக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன், தேவனுடைய கிரியைக்கான நேரம் நீண்டதாக இருந்தாலும் சரி, குறுகியதாக இருந்தாலும் சரி, நான் என் கடமையை நிறைவேற்றுவேன் என்று யாரால் கூற முடியும்; அவருடைய கிரியையை முடிவுக்குக் கொண்டுவருவது தேவனுடைய வேலை, அதைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருக்கவில்லையா?” அத்தகைய அறிவைப் பெறத் தகுதியுள்ளவர்கள் யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை—ஒருவேளை உனக்கு உயர்ந்த நுண்ணறிவுகள் இருக்கலாம், அதை நான் ஒப்புக்கொள்கிறேன், நான் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்—ஆயினும் தேவன் விரும்புவது விசுவாசமான இருதயமும், உண்மையும் உணர்ச்சியும் கொண்ட இருதயமுமே, நன்றியற்ற ஓநாயின் இருதயம் அல்ல என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இந்த “பேரம் பேசுதல்” பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, நீங்கள் “உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறீர்கள்.” ஒரு கணம் நீங்கள் “குன்மிங்” நகரத்தில் அதன் நித்திய வசந்தகாலத்தில் இருக்கிறீர்கள், மற்றும் கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் கடும் குளிரான, பனி மூடிய “தென் துருவத்திற்கு” வந்துவிட்டீர்கள். ஒருபோதும் தாங்களாகவே திரும்பிச் செல்லாதவர்கள் யார்? தேவன் கேட்பது “மரணபரியந்தம் ஓய்வெடுக்காத” ஆவியைத்தான்; அவர் விரும்புவது ஜனங்கள் “அவர்கள் தெற்கு சுவரைத் தாக்கும் வரை பின்வாங்காத” ஓர் ஆவியை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். இயற்கையாகவே, தேவனுடைய நோக்கம் ஜனங்கள் தவறான பாதையில் செல்ல வேண்டும் என்பதல்ல, மாறாக, அத்தகைய ஆவியை ஏற்றுக்கொள்வதாகும். தேவன்சொல்வது போல், “அவர்கள் கொடுத்திருக்கிற ‘பரிசுகளை’ நான் என் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஜனங்கள் உடனடியாக என் விலையேறப்பெற்ற தன்மையை அடையாளம் கண்டுகொள்கிறார்கள், அப்போதுதான் அவர்கள் என் அளவிட முடியாத தன்மையைப் பார்க்கிறார்கள்.” இந்த வார்த்தைகளை எவ்வாறு விளக்குவது? ஒருவேளை, மேலே உள்ள வார்த்தைகளைப் படிப்பது உனக்குக் கொஞ்சம் அறிவைத் தரலாம், ஏனென்றால், தேவன் மனுஷனுடைய முழு இருதயத்தில் உள்ள அனைத்தையும் பிரித்தெடுப்பதற்காக வெளியே எடுக்கிறார், இந்த நேரத்தில்தான் ஜனங்கள் இந்த வார்த்தைகளை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தைகளின் ஆழமான உள் அர்த்தத்தின் காரணமாக, ஜனங்கள் பழைய மாம்சத்தைப் பற்றி தெளிவற்றவர்களாகவே இருக்கிறார்கள், ஏனென்றால், அவர்கள் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கவுமில்லை, மற்றும் அவர்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அல்ல, எனவே, இந்தப் புதிய சொல் புரிந்துகொள்ள முடியாதது என்று அவர்கள் உணர்கிறார்கள்—அதன் பிறகுதான் அவர்கள் குறைந்த பலனைத் தருகிறார்கள். ஏனெனில், பழைய மாம்சத்தின் முன் ஜனங்கள் வல்லமையற்றவர்களாய் இருக்கிறார்கள்; அது ஒரு கொடூரமான மிருகம் போல் இல்லை என்றாலும், அல்லது அணுகுண்டு போல மனிதகுலத்தை அழிக்கும் திறன் இல்லை என்றாலும், அதைக் கொண்டு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை, மேலும் ஏதோ அவர்கள் வல்லமையற்றவர்கள் போல இருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, பழைய மாம்சத்தை கையாள்வதற்கான வழிகள் உள்ளன. ஓர் எதிர் நடவடிக்கையைப் பற்றி சிந்திக்க மனுஷன் எந்த முயற்சியும் செய்யாத தன்மை மனுஷனின் பல்வேறு தனித்தன்மைகளுக்கு வழிவகுத்துள்ளது என் கண்களுக்கு முன்பாக தொடர்ந்து ஒளிருகின்றன; தேவன் சொன்னது போல்: “நான் என்னை முழுமையாக அவர்களுக்குக் காட்டும்போது, உப்புத் தூணைப் போல அசையாமல் என் முன் நின்று முழுவதும் திறந்த கண்களால் என்னை நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்களின் விசித்திரநிலையை நான் பார்க்கும்போது, என்னால் சிரிப்பதை நிறுத்த முடியவில்லை. அவர்கள் என்னிடமிருந்து பொருட்களைக் கேட்பதால், நான் அவர்களுக்கு என் கையில் உள்ள பொருட்களைக் கொடுக்கிறேன், அவர்கள் அவற்றைத் தங்கள் மார்போடு அணைத்துக்கொண்டு, புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல பேணுகிறார்கள், அவர்கள் செய்கிற செயல் கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே நிலைக்கிறது.” இவை பழைய மாம்சத்தின் செயல்கள் அல்லவா? இன்று ஜனங்கள் புரிதலைப் பெற்றிருந்தும், அவர்கள் ஏன் கைவிடவில்லை, அதற்குப் பதிலாக இன்னும் தொடர்கிறார்கள்? உண்மையில், தேவனுடைய கோரிக்கைகளில் ஒரு பகுதியானது மனுஷனால் அடைய முடியாதது அல்ல, மாறாக, ஜனங்கள்தான் அதில் கவனம் செலுத்தவில்லை, ஏனென்றால் “நான் மனுஷனை இலகுவாகச் சிட்சிப்பதில்லை. இந்தக் காரணத்திற்காகவே ஜனங்கள் எப்போதும் தங்கள் மாம்சத்திற்குச் சுதந்திரமான ஆளுகையைக் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் என் சித்தத்தைக் கடைபிடிப்பதில்லை, ஆனால் என் நியாயாசனத்திற்கு முன் எப்போதும் என்னை முகஸ்துதி செய்தார்கள்.” இதுதான் மனுஷனுடைய வளர்ச்சி அல்லவா? தேவன் வேண்டுமென்றே ஒன்றுமில்லாத விஷயத்திலிருந்து குற்றம் கண்டுபிடிக்கிறார் என்பதல்ல, ஆனால் இது தான் யதார்த்தம்—இதை தேவன் விளக்க வேண்டுமா? தேவன் சொல்வது போல், “ஜனங்களின் ‘விசுவாசம்’ மிக அதிகமாக இருப்பதால்தான் அவர்கள் ‘போற்றத்தக்கவர்களாய் இருக்கிறார்கள்.’” இந்தக் காரணத்திற்காகவே, நான் தேவனுடைய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிகிறேன், ஆகவே, நான் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை; ஜனங்களின் “விசுவாசம்” காரணமாக, நான் இதைப் பற்றிக்கொள்கிறேன், நான் அவர்களுக்கு நினைவூட்டாமல் அவர்களின் செயல்பாட்டைச் செய்ய வைக்க அவர்களின் விசுவாசத்தைப் பயன்படுத்துகிறேன். இப்படி செய்வது தவறா? துல்லியமாக தேவனுக்குத் தேவையானது இது அல்லவா? ஒருவேளை, இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், சில ஜனங்கள் சலிப்படைந்து போகலாம்—அதனால் நான் அவர்களிடம் அதிகக் கடினமாய் நடந்துகொள்ளாதபடி வேறு ஏதாவது பேசுவேன். பிரபஞ்சம் முழுவதிலும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் அனைவரும் சிட்சையைக் கடந்து செல்லும்போது, மனுஷனுக்குள் இருக்கும் நிலை சரிசெய்யப்படும்போது, ஜனங்கள் உபத்திரவத்திலிருந்து தப்பித்ததைப் போல தங்கள் இருதயங்களில் இரகசியமாக மகிழ்ச்சியடைவார்கள். இந்த நேரத்தில், ஜனங்கள் இனி தங்களுக்காகத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள், ஏனென்றால், இது தேவனுடைய இறுதிக் கிரியையின் போது அடையப்பட்ட சரியான பலனாகும். இன்றுவரை அவரது அடிகளுடன் கூட முன்னேறியிருந்தும், தேவனுடைய குமாரர்கள் மற்றும் ஜனங்கள் அனைவரும் சிட்சைக்குள் நுழைந்துள்ளனர், மேலும் இஸ்ரவேலர்களும் இந்தக் கட்டத்திலிருந்து தப்ப முடியாது, ஏனென்றால் ஜனங்கள் தங்களுக்குள் அசுத்தத்தால் கறைபட்டுள்ளனர், எனவே தேவன் அனைத்து ஜனங்களையும் சுத்திகரிப்புக்கு தேவையான பாதையாகிய, பெரிய உருக்கும் உலைக்குள் நுழையச் செய்கிறார். இது கடந்து சென்றவுடன், ஜனங்கள் மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்படுவார்கள், இது துல்லியமாக “ஏழு ஆவிகளின் வாக்கியங்கள்” என்பதில் தேவன் முன்னறிவித்ததாகும். ஜனங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்பதனால், இதைப் பற்றி நான் இனி பேசமாட்டேன். தேவனுடைய கிரியை அதிசயமாக இருப்பதால், தேவனுடைய வாயினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் இறுதியில் நிறைவேற்றப்பட வேண்டும்; ஜனங்கள் தங்கள் கருத்துக்களை மீண்டும் ஒருமுறை பேச வேண்டும் என்று தேவன் கேட்கும் போது, அவர்கள் ஊமையாகிறார்கள், எனவே யாரும் கவலைப்படவோ அல்லது மனவேதனையடையவோ வேண்டாம். நான் சொன்னது போல், “எனது எல்லாக் கிரியைகளிலும், மனுஷனுடைய கைகளால் எப்போதாவது ஒரு படியாவது நிறைவேற்றப்பட்டதா?” இந்த வார்த்தைகளின் சாராம்சம் உனக்குப் புரிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 32

அடுத்த: அத்தியாயம் 35

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக