அத்தியாயம் 26

தேவன் பேசும் அனைத்து வார்த்தைகளிலிருந்தும், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் தேவனின் நாள் சமீபமாயிருக்கிறது என்பதைக் காணலாம். இந்த நாள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக இருப்பதுபோலவும் நாளையே வருவதுபோலவும் உள்ளது. இவ்வாறு, தேவனின் வார்த்தைகளைப் படித்த பிறகு, தென்றலில் விழும் இலைகள் போல, அத்துடன் இணைந்து விழும் லேசான சாரல் மழை போல, அவர்கள் உலகின் அழிவின் ஒரு பகுதியை உணர்கிறார்கள். அவர்கள் அனைவரும் முற்றிலும் மறைந்துவிட்டதுபோல, ஒரு தடயமும் இல்லாமல் ஜனங்கள் காணாமல் போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னறிகுறியான உணர்வு இருக்கிறது, தேவனின் சித்தம் சீராகவும் தடையில்லாமல் தொடரட்டும் என்பதற்காக, எல்லா ஜனங்களும் கடினமாக முயற்சி செய்தாலும், தேவனின் சித்தத்தைத் திருப்திப்படுத்த விரும்பினாலும், ஒவ்வொரு நபரும் தேவனின் சித்தத்தைத் திருப்தி செய்யத் தங்கள் முழுச் சக்தியையும் பயன்படுத்தினாலும், அத்தகைய உணர்ச்சிப் பிணைப்பு எப்போதும் ஒரு முன்னறிகுறி உணர்வுடன் பிணைந்துள்ளது. இன்றைய பேச்சுக்களை எடுத்துக் கொள்ளுங்கள்: அவை ஜனங்களிடம் ஒலிபரப்பப்பட்டு, முழுப் பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கப்பட்டால், “நான் பூமி முழுவதையும் கவனிப்பேன், உலகின் கிழக்கில் நீதியுடனும், பிரதாபத்துடனும், உக்கிர கோபத்துடனும், தண்டனையுடனும் தோன்றுவேன், பெருந்திரளான மனிதர்களுக்கு நான் என்னை வெளிப்படுத்துவேன்!” என்ற வார்த்தைகளுக்காக எல்லா ஜனங்களும் குனிந்து வணங்குவார்கள், புலம்பி அழுவார்கள். ஆவிக்குரிய விஷயங்களைப் புரிந்துகொள்ளும் அனைவரும் தேவனின் சிட்சையிலிருந்து யாராலும் தப்ப முடியாது என்பதையும், சிட்சையின் துன்பத்தை அனுபவித்த பிறகு, அனைவரும் அவரவர் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுவதையும் பார்க்கிறார்கள். உண்மையாக, இது தேவனின் கிரியையின் ஒரு கட்டம், அதை யாராலும் மாற்ற முடியாது. தேவன் உலகைப் படைத்தபோது, அவர் மனுக்குலத்தை வழிநடத்தியபோது, அவர் தனது ஞானத்தையும் அற்புதத்தன்மையையும் காட்டினார், மேலும் அவர் இந்தச் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும்போது மட்டுமே ஜனங்கள் அவருடைய உண்மையான நீதி, பிரதாபம், கடுங்கோபம் மற்றும் சிட்சையைப் பார்ப்பார்கள். அதற்கும் மேலாக, சிட்சையினால் மட்டுமே அவர்கள் அவருடைய நீதியையும், பிரதாபத்தையும், உக்கிர கோபத்தையும் பார்க்க முடியும்; கடைசி நாட்களில் தேவனின் மனுஷ ரூபமெடுத்தல் அவசியம் மற்றும் இன்றியமையாதது என்பது போல, இது எடுக்கப்பட வேண்டிய ஒரு பாதையாகும். முழு மனுக்குலத்தின் முடிவையும் பிரகடனப் படுத்திய பிறகு, தேவன் இன்று செய்யும் கிரியையை மனுஷர்களுக்குக் காட்டுகிறார். உதாரணமாக, தேவன் கூறுகிறார், “பழைய இஸ்ரவேல் இல்லாது போய்விட்டது, இன்றைய இஸ்ரவேல் உலகில் உயர்ந்து, நிமிர்ந்து, எழுந்தது, மேலும் அனைத்து மனிதர்களின் இதயங்களிலும் எழுந்து நிற்கிறது. இன்றைய இஸ்ரவேல் நிச்சயமாக என் மக்கள் மூலமாக இருப்பதற்கான ஆதாரத்தை அடையும்!” “ஆ, வெறுக்கத்தக்க எகிப்து! … என் தண்டனையில்லாது நீ போகமுடிவது எங்கனம்?” தேவன் வேண்டுமென்றே இரண்டு நேர் விரோதமான நாடுகள் அவரது கைகளில் சந்திக்கும் விளைவுகளை ஜனங்களுக்குக் காட்டுகிறார், ஒரு வகையில் இஸ்ரவேலைக் குறிப்பிடுகிறார், அது உலகத்துக்குரியது, மற்றொரு வகையில் தேவன் தேர்ந்தெடுத்த அனைத்தையும்—அதாவது, இஸ்ரவேல் மாறும்போது தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதைக் குறிப்பிடுகிறார். இஸ்ரவேல் முழுமையாக அதன் அசல் வடிவத்திற்குத் திரும்பியவுடன், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அதனைத் தொடர்ந்து பரிபூரணமாக்கப்படுவார்கள்—அதாவது, இஸ்ரவேல் ஆனது தேவனை நேசிப்பவர்களின் ஒரு அர்த்தமுள்ள அடையாளமாகும். அதேசமயம், எகிப்து, தேவனை வெறுப்பவர்களின் பிரதிநிதித்துவ மையமாகும். அது எவ்வளவு சிதைந்து போகிறதோ, அந்த அளவுக்கு தேவனால் வெறுக்கப்படுபவர்கள் சீர்கெட்டவர்களாக மாறுகிறார்கள்—அதனைத் தொடர்ந்து பாபிலோன் விழுகிறது. இது ஒரு தெளிவான மாறுபாட்டை உருவாக்குகிறது. இஸ்ரவேல் மற்றும் எகிப்தின் முடிவை பிரகடனப்படுத்துவதன் மூலம், தேவன் அனைத்து ஜனங்களின் சென்றடையும் இடத்தையும் வெளிப்படுத்துகிறார்; இவ்வாறு, இஸ்ரவேலைக் குறிப்பிடும்போது, தேவன் எகிப்தைப் பற்றியும் பேசுகிறார். இதிலிருந்து, எகிப்தின் அழிவு நாள் என்பது இந்த உலகத்தை நிர்மூலமாக்கும் நாள், தேவன் அனைத்து ஜனங்களையும் சிட்சை செய்யும் நாள் என்பதைக் காணமுடியும். இது விரைவில் நடக்கும்; தேவன் அதை முடிக்க உள்ளார், அது மனுஷரின் வெறும் கண்ணுக்குத் தெரியாத, இன்றியமையாத மற்றும் மாற்ற முடியாத ஒன்று. தேவன் கூறுகிறார், “எனக்கு எதிராக நிற்பவர்கள் அனைவரும் நித்தியமாக என்னால் தண்டிக்கப்படுவார்கள். ஏனென்றால், நான் எரிச்சலுள்ள தேவன், அவர்கள் செய்த எல்லாவற்றிற்கும் மனிதர்களைச் சும்மா விடமாட்டேன்.” தேவன் ஏன் இப்படி சர்வாதிகார வார்த்தைகளில் பேசுகிறார்? மற்றும் அவர் ஏன் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் உள்ள தேசத்தில் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாறினார்? தேவனின் வார்த்தைகளிலிருந்து, அவருடைய நோக்கத்தைக் காணலாம்: அவர் ஜனங்களை இரட்சிக்கவோ, இரக்கம் காட்டவோ, அவர்கள் மீது அக்கறை கொள்ளவோ அல்லது அவர்களைப் பாதுகாத்திடவோ வரவில்லை—அவரை எதிர்ப்பவர்களை எல்லாம் சிட்சை செய்ய வந்திருக்கிறார். ஏனெனில், “என் சிட்சையிலிருந்து எவரும் தப்ப முடியாது” என்று தேவன் கூறுகிறார். தேவன் மாம்சத்தில் ஜீவிக்கிறார், மேலும், அவர் ஒரு சாதாரண மனிதர், ஆனாலும் அகநிலையாக அவரை அறிய முடியாமல் ஜனங்கள் பலவீனமாக இருப்பதை அவர் மன்னிப்பதில்லை; மாறாக, அவர் ஒரு “சாதாரண நபராக” இருப்பதன் மூலம் மனுஷர்களை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிக்கிறார், அவர் தனது மாம்சத்தைப் பார்க்கும் அனைவரையும், சிட்சை செய்யப்பட்டவர்களாக ஆக்குகிறார், இதனால் அவர்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் உள்ள தேசத்தின் ஜனங்கள் அல்லாத அனைவருக்கும் பலியிடப்படுபவர்கள் ஆகிறார்கள். ஆனால் இது தேவன் மனுஷரூபமெடுப்பதன் முதன்மை இலக்குகளில் ஒன்றல்ல. தேவன் மாம்சமானது, முக்கியமாக மாம்சத்தில், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துடன் போரிடுவதற்கும் அந்தப் போர் மூலம் வெட்கப்பட வைப்பதற்குமேயாகும். ஆவியானவரை விட மாம்சத்தில் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்துடன் சண்டையிடுவதன் மூலம் தேவனின் மாபெரும் வல்லமை மிகவும் சான்றாக இருப்பதால், தேவன் தனது காரியங்களையும் சர்வ வல்லமையையும் காட்ட மாம்சத்தில் போராடுகிறார். எண்ணற்ற ஜனங்கள் தேவனின் மனுஷரூபத்தால் “தீங்கில்லாமல்” தண்டிக்கப்படுகின்றனர், மேலும் எண்ணற்ற ஜனங்கள் நரகத்தில் தள்ளப்பட்டு சிட்சைக்கு ஆளாகி, மாம்சத்தில் துன்பப்படுகிறார்கள். இதுவே தேவனின் நேர்மையான மனநிலையின் அத்தாட்சியாகும், இன்று தேவனை எதிர்ப்பவர்கள் எப்படி மாறினாலும், அதனைப் பொருட்படுத்தாது, தேவனின் நேர்மையான மனநிலை ஒருபோதும் மாறாது. ஒருமுறை தண்டிக்கப்பட்டால், ஜனங்கள் என்றென்றும் தண்டிக்கப்படுகிறார்கள், மீண்டும் எழ முடிவதில்லை. மனிதனின் மனநிலை தேவனுடையதைப் போல் இருக்க முடியாது. தேவனை எதிர்ப்பவர்களை நோக்கி, ஜனங்கள் அனலாகவும் குளிராகவும் இருக்கிறார்கள்; அவர்கள் இடதுபுறமும் வலது புறமும், இப்போது மேலே, இப்போது கீழே என அலைகிறார்கள்; அவர்களால் தொடர்ந்து நிலைத்திருக்க இயலவில்லை, சில நேரங்களில் தேவனை எதிர்ப்பவர்களை மிகவும் ஆழமாக வெறுக்கிறார்கள், சில சமயங்களில் அவர்களை நெருக்கமாக வைத்திருக்கிறார்கள். ஜனங்களுக்கு தேவனின் கிரியை தெரியாது என்பதால் இன்றைய சூழ்நிலைகள் வந்துள்ளன. தேவன் ஏன், “தேவதூதர்கள் இன்னும் தேவதூதர்களே; தேவன் இன்னும் தேவனே; பேய்கள் இன்னும் பேய்களே, அநியாயக்காரர்கள் இன்னும் அநியாயக்காரர்களே; மற்றும் பரிசுத்தவான்கள் இன்னும் பரிசுத்தவான்களே” எனும் இத்தகைய வார்த்தைகளைச் சொல்கிறார்? உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? தேவனால் தவறாக நினைவில் வைத்திருக்க முடியுமா? இவ்வாறு, தேவன் கூறுகிறார், “ஒவ்வொரு நபரும் அவரவர் வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் தங்களையும் அறியாமல், அவர்களது குடும்பத்தின் அரவணைப்புக்கு மீண்டும் வர தங்கள் வழியைக் கண்டுபிடிப்பார்கள்.” இதிலிருந்து, இன்று, தேவன் ஏற்கனவே எல்லாவற்றையும் அவற்றின் குடும்பங்களாக வகைப்படுத்தியிருப்பதைக் காணலாம், அதனால் அது இனி “முடிவில்லா உலகம்” அல்ல, ஜனங்கள் இனி ஒரே பெரிய பானையிலிருந்து சாப்பிட மாட்டார்கள், ஆனால், தங்கள் சொந்தப் பாத்திரத்தை வகித்து, தங்கள் சொந்தக் கடமையை தங்கள் சொந்த வீட்டில் செய்கிறார்கள். உலகத்தைப் படைக்கும்போது இது தேவனின் அசல் திட்டமாக இருந்தது; அதன் வகைப்படி பிரிக்கப்பட்ட பிறகு, ஜனங்கள் “ஒவ்வொருவரும் தங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டனர்”, அதாவது தேவன் நியாயத்தீர்ப்பைத் தொடங்கினார். இதன் விளைவாக, தேவனின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்தன: “படைத்தவற்றின் முந்தைய நிலையை நான் மீட்டெடுப்பேன்; எல்லாவற்றையும் மூல முதலாக இருந்த விதத்திற்கு மீட்டெடுப்பேன், எல்லாவற்றையும் அளவிடமுடியாதவாறு மாற்றுவேன், இதனால் எல்லாமும் எனது திட்டத்தின் அரவணைப்புக்குத் திரும்பும்.” மேலும் நிச்சயமாக இதுவே தேவனின் எல்லாக் கிரியைகளின் நோக்கமுமாகும், மேலும் இது புரிந்து கொள்வதற்கு கடினமானது அல்ல. தேவன் தமது கிரியையை முடிப்பார்—மனுஷர் அவரது கிரியையின் வழியில் நிற்க முடியுமா? அவருக்கும் மனுஷருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையை தேவன் கிழித்துவிட முடியுமா? தேவனுடைய ஆவியானவரால் செய்யப்படுவதை யார் மாற்ற முடியும்? எந்த மனிதராலும் அவ்வாறு செய்ய முடியுமா?

கடந்த காலத்தில், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளில் ஒரு சட்டத்தைப் புரிந்து கொண்டனர்: தேவனின் வார்த்தைகள் பேசப்படும்போது, அவை விரைவில் யதார்த்தமானவையாகின்றன. இதில் எந்த பொய்யும் இல்லை. எல்லா ஜனங்களையும் தாம் சிட்சை செய்வதாக தேவன் கூறியதால், அதற்கும் மேலாக, அவர் தமது நிர்வாகக் கட்டளைகளை பிறப்பித்துள்ளதால், தேவனின் கிரியை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம். அனைத்து ஜனங்களுக்கும் வழங்கப்பட்ட சட்டதிட்டங்கள் அவர்களின் வாழ்க்கையையும் தேவனைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையையும் விவரித்தது. அதன் மூல காரணம் புரிந்துகொள்ளப் படவில்லை; அது தேவன் முன்குறித்தவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லவில்லை, ஆனால் அந்த நேரத்தில் மனிதனின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய நிர்வாகக் கட்டளைகள் அசாதாரணமானவை மற்றும் அவை இவ்வாறு பேசுகின்றன “மக்கள் எல்லோரும் அவரவர் சொந்த வகையின்படி பிரிக்கப்படுவார்கள், மேலும் அவர்களின் செயல்களுக்குத் தகுந்த அளவிலான தண்டனைகளைப் பெறுவார்கள்.” ஒரு ஆழ்ந்த வாசிப்பு இல்லாமல், அதில் எந்த பிரச்சனையையும் காணமுடியாது. ஏனென்றால், இறுதிக் காலத்தில் மட்டுமே தேவன் எல்லாவற்றையும் அவரவர் வகைக்கு ஏற்பப் பிரிக்கிறார், இதைப் படித்த பிறகு, பெரும்பாலான ஜனங்கள் குழப்பமாகவும் திகைப்புடனும் இருக்கிறார்கள்; அவர்கள் இன்னும் அனலுமில்லாத குளிருமில்லாத மனநிலையைப் பின்பற்றுகிறார்கள், காலத்தின் அவசரத்தைப் பார்ப்பதில்லை, எனவே அவர்கள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த சமயத்தில், முழு பிரபஞ்சத்திற்கும் அறிவிக்கப்படும் தேவனின் நிர்வாகக் கட்டளைகள் மனிதனுக்கு ஏன் காட்டப்படுகின்றன? இந்த ஜனங்கள் பிரபஞ்சம் முழுவதும் உள்ள அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களா? தேவன், பிறகு, இந்த ஜனங்கள் மீது அதிக இரக்கம் காட்ட முடியுமா? இவர்கள் இரண்டு தலைகளை வளர்த்திருக்கிறார்களா? தேவன் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள ஜனங்களைச் சிட்சை செய்யும்போது, எல்லா விதமான பேரழிவுகளும் தாக்கும்போது, இந்த பேரழிவுகளின் விளைவாக சூரியன் மற்றும் சந்திரனில் மாற்றங்கள் ஏற்படும், மேலும், இந்தப் பேரழிவுகள் முடிவடையும் போது, சூரியனும் சந்திரனும் மாற்றப்பட்டிருக்கும்—மேலும் இது “நிலைமாறல்” என்று அழைக்கப்படுகிறது. எதிர்காலத்தின் பேரழிவுகள் கொடூரமானதாக இருக்கும் என்று சொல்வது போதுமானது. இரவு பகலின் இடத்தைப் பிடிக்கலாம், சூரியன் ஒரு வருடத்திற்குத் தோன்றாது இருக்கலாம், பல மாதங்களுக்குச் சூடான வெப்பம் இருக்கலாம், தேய்பிறையான சந்திரன் எப்போதும் மனுக்குலத்தை எதிர்கொள்ளலாம், சூரியனும் சந்திரனும் ஒன்றாக எழும் விநோதமான நிலை தோன்றலாம், மேலும் அது போன்று. பல சுழற்சி மாற்றங்களைத் தொடர்ந்து, இறுதியில், காலம் செல்லச் செல்ல அவை புதுப்பிக்கப்படும். பிசாசுக்குச் சொந்தமானவர்களுக்குத் தேவன் அவருடைய திட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார். இவ்வாறு, அவர் வேண்டுமென்றே கூறுகிறார், “பிரபஞ்சத்திற்குள் இருக்கும் மனிதர்களில், பேய்க்குச் சொந்தமானவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்.” இந்த “ஜனங்கள்” அவர்களின் உண்மையான நிறங்களைக் காண்பிப்பதற்கு முன்பு, தேவன் எப்போதும் ஊழியம் செய்ய அவர்களைப் பயன்படுத்துகிறார்; இதன் விளைவாக, அவர் அவர்களின் செயல்களைக் கவனிப்பதில்லை, அவர்கள் நன்றாகச் செய்யும்போது அவர்களுக்கு “வெகுமதியும்” கொடுப்பதில்லை, அல்லது அவர்கள் மோசமாகச் செயல்படும்போது அவர்களது “கூலியை” அவர் பிடித்தம் செய்வதும் இல்லை. ஆகவே, அவர் அவர்களைப் புறக்கணித்து அவர்களை உதாசீனம் செய்கிறார். அவர்களுடைய “நற்குணத்தின்” காரணமாக அவர் திடீரென மாற மாட்டார், ஏனென்றால், நேரம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல், மனிதனின் சாராம்சம் மாறாது, தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை போல, மற்றும் மனிதன் சொல்வது போல், “கடல்கள் வறண்டு பாறைகள் நொறுங்கினாலும் அதில் மாற்றம் இருக்காது.” எனவே, தேவன் அந்த ஜனங்களை அவரவர் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துகிறார், அவர்கள் கூறுவதை உடனடியாகக் கவனிப்பதில்லை. படைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, பிசாசு தனக்குத் தானே நன்றாக நடந்து கொண்டதில்லை. அது எப்போதும் குறுக்கீடுகள், தொந்தரவுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது. தேவன் செயல்படும்போது அல்லது பேசும்போது, பிசாசு எப்போதும் பங்கேற்க முயற்சிக்கிறது, ஆனால் தேவன் அதை கவனிப்பதில்லை. பிசாசைக் குறிப்பிடும்போது, தேவனின் கோபம் பொங்குகிறது, அடக்கமுடியாததாகிறது; ஏனென்றால் அவர்கள் ஒரே ஆவியை உடையவர்கள் அல்ல, ஆகவே எந்தத் தொடர்பும் இல்லை, தூரமும் பிரிவும் மட்டுமே உள்ளன. ஏழு முத்திரைகள் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பூமியின் நிலை எப்போதும் மோசமாக மாறுகிறது, மேலும் அனைத்தும் “ஏழு முத்திரைகளுடன் தோளோடு தோள் சேர்ந்து முன்னேறுகிறது”, சிறிதும் பின்வாங்குவதில்லை. தேவனின் வார்த்தைகள் முழுவதிலும், ஜனங்கள் தேவனால் முட்டாள்தனமாக்கப் பட்டவர்களாக காணப்படுகிறார்கள், ஆனாலும் அவர்கள் எழுந்திருக்கவே இல்லை. ஓர் உயர்ந்த நிலையை அடைய, எல்லா ஜனங்களின் வலிமையையும் வெளிப்படுத்துவதற்காக, மேலும், தேவனின் கிரியையை அதன் உச்சத்தில் முடிப்பதற்காக, தேவன் ஜனங்களின் வயிற்றை ஊதி உப்பச் செய்வதுபோல பல கேள்விகளைக் கேட்கிறார், இப்படியாக அவர் அனைத்து ஜனங்களையும் நிரப்புகிறார். இந்த ஜனங்களுக்கு மெய்யான வளர்ச்சி இல்லாததால், உள்ளபடியான சூழ்நிலைகளின் அடிப்படையில், உப்பியவர்கள் தரத்திற்கு ஏற்ப நல்லவர்களாகஇருக்கிறார்கள், அதே நேரத்தில் அவ்வாறு இல்லாதவர்கள் பயனற்ற குப்பை. இதுதான் மனுஷர் மீதான தேவனின் தேவை, மற்றும் அவர் பேசும் முறையின் நோக்கம். குறிப்பாக, “நான் வானத்தில் இருக்கும் அதே விதமாக நான் பூமியில் இருக்கும்போது, இல்லையா? வானத்தில் இருக்கும்போது நான் கீழே பூமிக்கு இறங்கிவர முடியவில்லை என்பதாலா? நான் பூமியில் இருக்கும்போது, வானத்துக்குச் செல்லத் தகுதியற்றவன் என்பதாலா?” என்று தேவன் கூறுகிறார். இந்தக் கேள்விகள் மனிதன் தேவனை அறியக்கூடிய தெளிவான பாதையகச் செயல்படுகின்றன. தேவனின் வார்த்தைகளிலிருந்து, தேவனின் அவசரச் சித்தம் காணப்படுகிறது; ஜனங்களால் அதை அடைய இயலாது, மேலும் தேவன் மீண்டும் மீண்டும் நிபந்தனைகளைச் சேர்க்கிறார், இப்படியாக எல்லா ஜனங்களும் பூமியில் பரலோக தேவனை அறிந்து கொள்ளவும், வானத்தில் இருக்கும் ஆனால் பூமியில் வாழும் தேவனை அறியவும் நினைவூட்டுகிறார்.

தேவனின் வார்த்தைகளிலிருந்து மனிதனின் நிலைகளைக் காணலாம்: “எல்லா மனுஷர்களும் என் வார்த்தைகள் மீது சக்தியைச் செலவிடுகிறார்கள், என் வெளிப்புறச் சாயல் ஒற்றுமை மீது அவர்களுடைய சொந்த ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் தோல்வியைச் சந்திக்கிறார்கள், அவர்களது முயற்சிகள் பலனளிக்கவில்லை, அதற்குப் பதிலாக என் வார்த்தைகளால் வீழ்த்தப்படுகிறார்கள், மீண்டும் எழுந்திருக்கத் துணிவதில்லை.” தேவனின் துயரத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? தேவனின் இருதயத்தை யாரால் ஆறுதல்படுத்த முடியும்? அவர் கேட்பதில் தேவனின் இதயத்துடன் ஒத்துப்போகிறவர் யார்? ஜனங்கள் எந்தப் பலனையும் அளிக்காதபோது, அவர்கள் தங்களை மறுத்து தேவனின் திட்டமிடுதலுக்கு உண்மையாக அடிபணிவார்கள். படிப்படியாக, அவர்கள் தங்கள் உண்மையான இருதயத்தைக் காட்டும்போது, ஒவ்வொருவரும் அவரவர் வகைக்கு ஏற்ப பிரிக்கப்படுகிறார்கள், இப்படியாக தேவதூதர்களின் சாராம்சம் தேவனுக்கு தூய கீழ்ப்படிதல் என்று காணப்படுகிறது. அதனால், தேவன் கூறுகிறார், “மனித குலம் அதன் மூல முதல் வடிவத்திற்கு வெளிப்படுத்தப்படும்.” தேவனின் கிரியை இந்தப் படியை அடையும் போது, அவை அனைத்தும் பரிபூரணமாக்கப்பட்டிருக்கும். தேவன் தமது குமாரர்களுக்கும் ஜனங்களுக்கும் ஓர் உதாரணப்புருஷனாக இருப்பதைப் பற்றி எதுவும் சொல்வதாகத் தெரியவில்லை, மாறாக அனைத்து ஜனங்களும் தங்கள் அசல் வடிவத்தைக் காண்பிக்கச் செய்வதில் கவனம் செலுத்துகிறார். எனது வார்த்தைகளின் ஆழமான அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா?

முந்தைய: அத்தியாயம் 24 மற்றும் 25

அடுத்த: அத்தியாயம் 27

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக