அத்தியாயம் 5

மலைகளும் ஆறுகளும் மாறுகின்றன, சமுத்திரமானது அதன் பாதையில் பாய்கிறது, மேலும் பூமியையும் வானத்தையும் போலவே மனுஷனின் ஜீவிதமும் நீடித்திருப்பதில்லை. சர்வவல்லமையுள்ள தேவன் மட்டுமே நித்தியமானவராகவும் உயிர்த்தெழுப்பப்பட்டவராகவும் இருக்கிறார், இது என்றென்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது! எல்லா விஷயங்களும் எல்லா நிகழ்வுகளும் அவருடைய கைகளில் இருக்கின்றன, சாத்தான் அவருடைய காலடியில் இருக்கிறான்.

இன்று, தேவனின் முன்குறிக்கப்பட்ட தெரிந்துகொள்ளுதலின் மூலமே அவர் சாத்தானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறார். அவர்தான் உண்மையிலேயே நமது மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவின் நித்தியமான, உயிர்த்தெழுந்த ஜீவனால் உண்மையில் நமக்குள் கிரியை செய்யப்படுகிறது, நம்மால் உண்மையில் அவரை முகமுகமாய்க் காணவும், அவரைப் புசித்துக் குடிக்கவும், அவரை அனுபவிக்கவும் முடியும் என்பதற்காக தேவனின் ஜீவனோடு இணைவதற்கு கிறிஸ்துவின் ஜீவன் நம்மை விதிக்கிறது. தேவன் தம்முடைய இருதயத்தினுடைய இரத்தத்தின் விலைக்கிரயத்தில் வழங்கிய தன்னலமற்ற காணிக்கை இது.

பருவகாலங்களானது காற்று மற்றும் உறைபனி வழியாக வந்து செல்கின்றன, ஜீவிதத்தின் பல துன்பங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் உபத்திரவங்களையும், உலகின் பல மறுப்புக்கள் மற்றும் அவதூறுகளையும், அரசாங்கத்தின் பல தவறான குற்றச்சாட்டுகளையும் சந்தித்திருக்கின்றன, ஆனாலும் தேவனின் விசுவாசமோ அல்லது அவருடைய தீர்மானமோ சிறிதளவும் குறையவே இல்லை. தேவனின் சித்தம், தேவனின் நிர்வாகம் மற்றும் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அவற்றுக்கு முழு மனதுடன் அர்ப்பணித்து, அவர் தமது சொந்த ஜீவிதத்தை ஒதுக்கி வைக்கிறார். பெருந்திரளான தம்முடைய ஜனங்களுக்கு, அவர் எந்த வேதனையையும் கொடுக்காமல், கவனமாக அவர்களுக்கு போஜனமளித்து, பருகத் தண்ணீர் தருகிறார். நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தாலும், அல்லது எவ்வளவு கடினமானவர்களாக இருந்தாலும், நாம் அவருக்கு முன்பாக மட்டுமே கீழ்ப்படிய வேண்டும், மேலும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனானது நமது பழைய சுபாவத்தை மாற்றிவிடும்…. இந்த முதற்பேறான குமாரர்களுக்காக அவர் போஜனத்தையும் ஓய்வையும் துறந்து அயராது உழைக்கிறார். எவ்வளவு சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் உறைபனி குளிர் ஆகியவற்றின் மூலம் எத்தனை பகலிரவுகள் அவர் சீயோனில் முழு மனதுடன் கண்காணிக்கிறார்.

உலகம், வீடு, கிரியை மற்றும் அனைத்தும் மகிழ்ச்சியுடன், விருப்பத்துடன் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன, மேலும் உலக இன்பங்களுக்கு அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை…. அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நமக்குள் சென்று தாக்கி, நமது இருதயத்தில் ஆழமாக மறைந்திருக்கும் விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன. நாம்மால் எப்படி நம்பமுடியாமல் இருக்க முடியும்? அவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கியமும் எந்த நேரத்திலும் நமக்குள் நிறைவேறக்கூடும். அவருடைய பிரசன்னத்திலோ அல்லது அவரிடமிருந்து மறைந்திருந்தோ நாம் எதைச் செய்தாலும், அவருக்கு எதுவும் தெரியாமல் போவதும் இல்லை, அவருக்குப் புரியாமல் போவதும் இல்லை. நம்முடைய சொந்தத் திட்டங்களும் ஏற்பாடுகளும் இருந்தபோதிலும், அனைத்தும் உண்மையில் அவருக்கு முன்பாக வெளிப்படும்.

அவருக்கு முன்பாக அமர்ந்து, எளிமையாகவும் அமைதியாகவும் நம்முடைய ஆவிக்குள் மகிழ்ச்சியை உணர்கிறோம், ஆனால் எப்போதும் வெறுமையாகவும் தேவனுக்கு உண்மையிலேயே கடன்பட்டிருப்பதாகவும் உணர்கிறோம்: இது கற்பனைக்கு எட்டாத மற்றும் அடைய முடியாத ஓர் அதிசயமாகும். சர்வவல்லமையுள்ள தேவன்தான் ஒரே உண்மையான தேவன் என்பதை நிரூபிக்கப் பரிசுத்த ஆவியானவர் போதுமானவராக இருக்கிறார்! இது மறுக்க இயலாத சான்றாகும்! இந்தக் கூட்டத்தாராகிய நாம் விவரிக்க முடியாத வகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்! தேவனின் கிருபை மற்றும் இரக்கத்திற்காக இல்லாவிட்டால், நாம் கெட்டுப்போய் சாத்தானைத்தான் பின்பற்றவேண்டியதாக இருந்திருக்கும். சர்வவல்லமையுள்ள தேவனால் மட்டுமே நம்மை இரட்சிக்க முடியும்!

ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறை தேவனே! ஆவிக்குரிய உலகின் இரகசியங்களைக் காண எங்களை அனுமதிக்க எங்கள் ஆவிக்குரிய கண்களைத் திறந்தது நீர்தான். ராஜ்யத்தின் வாய்ப்புகள் எல்லையற்றவையாக இருக்கின்றன. நாம் காத்திருக்கும்போது விழிப்புடன் இருப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இருக்க முடியாது.

யுத்தத்தின் தீப்பிழம்புகள் சுழல்கின்றன, பீரங்கிப் புகை காற்றை நிரப்புகிறது, வானிலை வெப்பமாக மாறுகிறது, காலநிலை மாறுகிறது, கொள்ளை நோய் ஒன்று பரவுகிறது, மேலும் உயிர்வாழும் நம்பிக்கையில்லாமல் ஜனங்கள் இறக்க மட்டுமே முடிகிறது.

ஆ! சர்வவல்லமையுள்ள தேவனே, நடைமுறை தேவனே! நீர் தான் எங்களது அசைக்க முடியாத கோட்டையாக இருக்கிறீர். நீர்தான் எங்களுக்கு அடைக்கலமாக இருக்கிறீர். நாங்கள் உமது சிறகுகளின் கீழ் தஞ்சமடைகிறோம், பேரழிவு எங்களை அணுக முடியாது. இதுவே உமது தெய்வீகப் பாதுகாப்பாகவும் பராமரிப்பாகவும் இருக்கிறது.

நாங்கள் அனைவரும் பாடலில் எங்கள் குரல்களை உயர்த்துகிறோம்; நாங்கள் துதித்துப் பாடுகிறோம், சீயோன் முழுவதும் எங்களது துதியின் சத்தம் ஒலிக்கிறது! நடைமுறை தேவனாகிய சர்வவல்லமையுள்ள தேவன் அந்த மகிமைமிக்க சென்றடையும் இடத்தை நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார். விழிப்புடன் இருங்கள்—ஓ, ஜாக்கிரதையாக இருங்கள்! இன்னும், நேரம் தாமதமாகிவிடவில்லை.

முந்தைய: அத்தியாயம் 4

அடுத்த: அத்தியாயம் 6

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக