அத்தியாயம் 26

என் புத்திரர்களே, என் வார்த்தைகளைக் கவனியுங்கள். அமைதியாக என் சத்தத்தைக் கேளுங்கள், நான் உனக்கு வெளிப்பாடுகளைத் தருவேன். எனக்குள் அமைதியாக இரு, ஏனென்றால் நானே உன் தேவன், உங்கள் ஒரே மீட்பர். நீங்கள் எல்லா நேரங்களிலும் உங்கள் இருதயங்களை அமைதிப்படுத்தி எனக்குள் ஜீவிக்க வேண்டும். நான் உன் கன்மலை, உங்களை ஆதரிப்பவன் நான். வேறு எதைக் குறித்தும் சிந்திக்காமல் உங்களது முழு இருதயத்தோடு என்னை நம்புங்கள். நான் நிச்சயமாக உங்களுக்குத் தோன்றுவேன்—நான் உங்கள் தேவன்! ஆ, அந்தச் சந்தேகக்காரர்கள்! அவர்களால் நிச்சயமாக உறுதியாக நிற்க முடியாது. அவர்கள் எதையும் பெற மாட்டார்கள். இப்போது நேரம் என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், அது என்ன ஒரு முக்கியமான தருணம்! அது எவ்வளவு முக்கியமானதாகும்! பயனற்ற விஷயங்களில் உங்களை ஈடுபடுத்த வேண்டாம். என்னுடன் விரைவாக நெருங்கி வாருங்கள். என்னுடன் கலந்துரையாடுங்கள். எல்லா மர்மங்களையும் நான் உங்களுக்கு வெளிப்படுத்துவேன்.

பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் கேட்க வேண்டும், மேலும் ஒவ்வொன்றையும் இருதயத்திற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். என் வார்த்தைகளை நீங்கள் பலமுறை கேட்டு, பின்னர் அவற்றை மறந்துவிட்டீர்கள். ஓ, சிந்தனையற்றவர்களே! நீங்கள் பல ஆசீர்வாதங்களை இழந்து விட்டீர்கள்! நீங்கள் என் வார்த்தைகளை இப்போது கவனமாகக் கேட்டு, அவற்றுக்குச் செவிசாய்க்க வேண்டும். என்னுடன் கலந்துரையாடுங்கள். என்னிடம் இன்னும் நெருக்கமாக வாருங்கள். உனக்குப் புரியாத எல்லாவற்றிலும், நான் உனக்கு வழிகாட்டுவேன். நான் உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்வேன். மற்றவர்களுடன் அதிகமாக ஐக்கியம் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டாம். இப்போது எழுத்துக்களையும் உபதேசங்களையும் போதிக்கும் பலர் இருக்கிறார்கள், மேலும் என் யதார்த்தத்தை உண்மையாகக் கொண்டவர்கள் மிகக் குறைவு. அவர்களுடைய கலந்துரையாடல் ஒருவரைக் குழப்பமடைந்து செயலற்றுப் போகச் செய்கிறது. எப்படி முன்னேற வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் கலந்துரையாடலைக் கேட்டவுடன், ஒருவர் எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புரிந்து கொள்ளக்கூடும். நீங்கள் உங்கள் அடியை கவனமாக எடுத்து வையுங்கள். உங்கள் இருதயத்தை எல்லா நேரங்களிலும் எனக்கு முன்பாக வைத்திருக்க வேண்டும். நீ என்னுடன் தொடர்பு கொண்டு என்னிடம் நெருங்கி வர வேண்டும். உனக்குப் புரியாததை நான் காண்பிப்பேன். உன் பேச்சில் கவனமாக இரு. எல்லா நேரங்களிலும் உன் இருதயத்தைக் கவனித்துக்கொள். நான் நடந்து செல்லும் பாதையில் நீ நடந்து செல்.

இப்போதும் நீண்ட காலம் ஆகாது. இன்னும் சிறிது நேரம் மீதம் உள்ளது. என்னைத் தவிர எல்லாவற்றையும் கைவிட்டு, என்னைப் பின்பற்றுங்கள்! நான் உங்களைத் தவறாக நடத்த மாட்டேன். என் செயல்களை நீங்கள் பலமுறை தவறாகப் புரிந்து கொண்டீர்கள். ஆனாலும் நான் உங்களை எவ்வளவாக நேசிக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? ஆ, நீங்கள் வெறுமனே என் இருதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் எப்படிச் சந்தேகித்தாலும், நீங்கள் எனக்கு எவ்வளவு கடன்பட்டிருந்தாலும், நான் அதை நினைக்க மாட்டேன். இந்நிலையில் வெளியே சென்று என் சித்தத்திற்கு ஏற்ப செயல்பட நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்நாள் இளைப்பாறுவதற்கான நேரம் அல்ல. இனிமேல், நீங்கள் ஏதேனும் உள்நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டுமானால், என் நியாயத்தீர்ப்பு உங்கள் மேல் வரும். நீங்கள் என்னை விட்டு ஒரு கணம் வெளியேறினாலும், நீங்கள் லோத்தின் மனைவியாகி விடுவீர்கள். இப்போது பரிசுத்த ஆவியானவரின் கிரியை விரைவுபடுத்துகிறது. புதிய ஒளியைப் பின்பற்ற முடியாதவர்கள் ஆபத்தில் இருக்கின்றனர். கண்காணிக்காதவர்கள் கைவிடப்படுவார்கள். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உன்னைச் சுற்றியுள்ள சூழலில் உள்ள அனைத்தும் எனது அனுமதியால் இருக்கின்றன. அவை அனைத்தும் நான் திட்டமிட்டவை என்பதை நீ அறிவாய். நான் உனக்கு வழங்கிய சூழலில், தெளிவாகப் பார்த்து என் இருதயத்தைத் திருப்திப்படுத்து. பயப்படாதே, சர்வவல்லமையுள்ள சேனைகளின் தேவன் நிச்சயமாக உன்னுடன் இருப்பார். அவர் உங்களுக்குப் பின்னால் நிற்கிறார், அவர் உங்கள் கேடகம். இன்று, ஜனங்கள் பல கருத்துக்களைக் கொண்டுள்ளனர். கர்வமானவர்களாகவும், சுயநீதியுள்ளவர்களாகவும், பெருமையாகவும், லட்சியத்துடனும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களிடமும் என் சித்தத்தை மற்றவர்கள் குறைத்துப் பார்க்கும் ஜனங்கள் மூலமாக வெளிப்படுத்த அது என்னைக் கட்டாயப்படுத்துகிறது. என் சுமையை நீங்கள் நேர்மையாகக் கருத்தில் கொள்ளும் வரை, நான் உங்களுக்காக எல்லாவற்றையும் தயார் செய்வேன். நீங்கள் என்னைப் பின்பற்றுவதே போதுமானதாகும்!

முந்தைய: அத்தியாயம் 25

அடுத்த: அத்தியாயம் 27

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக