அத்தியாயம் 66

என் கிரியை இந்த நிலை வரை தொடர்ந்துள்ளது, மற்றும் அவை அனைத்தும் என் கரத்தின் ஞானமுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றினதாகும், மற்றும் அவை அனைத்தும் என்னுடைய பெரும் வெற்றியாகும். மனுக்குலத்தில் யாரால் அத்தகைய விஷயத்தைச் செய்ய முடியும்? அதற்குப் பதிலாக ஜனங்கள் எனது நிர்வாகத்தில் குறுக்கிடுகிறார்கள் அல்லவா? இருப்பினும், எனக்குப் பதிலாக என் கிரியையை யாராலும் செய்ய முடியாது என்பதை நீ அறிய வேண்டும், அதைத் தடுக்கவும் முடியாது, ஏனெனில், நான் செய்யும் மற்றும் கூறும் விஷயங்களைச் சொல்லவோ செய்யவோ ஒரு நபர் கூட இல்லை. இது தான் விஷயம் என்றாலும், ஜனங்கள் இன்னும் என்னை அறியவில்லை, நானே ஞானமுள்ள, சர்வவல்லமையுள்ள தேவன்! வெளிப்புறத்தில், நீங்கள் என்னை வெளிப்படையாக எதிர்க்கத் துணிய மாட்டீர்கள், ஆனால் உங்கள் இருதயங்களிலும், உன் மனங்களிலும், நீங்கள் என்னை எதிர்த்து நிற்கிறீர்கள். முட்டாள்களே! மனிதனின் உள் இருதயத்தைக் கூர்ந்து நோக்கும் தேவன் நான் என்று உங்களுக்குத் தெரியாதா? நான் உன் ஒவ்வொரு வார்த்தையையும் செயலையும் கூர்ந்து நோக்குகிறேன் என்று உனக்குத் தெரியாதா? நான் இதை உன்னிடம் கூறுகிறேன்: மீண்டும் என் உதடுகளிலிருந்து கனிவான வார்த்தைகள் வெளிப்படாது. மாறாக, என்னுடையவை அனைத்தும் கடுமையான நியாயத்தீர்ப்பின் வார்த்தைகளாக இருக்கும், மேலும், அவற்றை உன்னால் தாங்க முடியுமா இல்லையா என்று நான் பார்ப்பேன். இப்போதிருந்து, யாருடைய இருதயங்கள் எனக்கு நெருக்கமாக இல்லையோ—அதாவது, யார் என்னை மனமார நேசிக்கவில்லையோ—அவர்கள் என்னை வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் ஆவர்.

இன்று, பரிசுத்த ஆவியானவரின் கிரியை, முந்தைய முறை இனிப் பயன்படுத்தப்படாது என்ற நிலைக்கு வந்துள்ளது; மாறாக, ஒரு புதிய முறை செயல்படுத்தப்படுகிறது. என்னிடம் நேர்மறையாகவும், முனைப்புடனும் ஒத்துழைக்காதவர்கள் மரணத்தின் படுகுழியான பாதாளத்திற்குள் விழுவார்கள் (மற்றும் இவர்கள் என்றென்றைக்கும் அழிவை அனுபவிப்பார்கள்). புதிய முறை பின்வருமாறு: உங்களுடைய இருதயம் மற்றும் மனது சரியாக இல்லை என்றால், பின்னர் என் நியாயத்தீர்ப்பு உங்களுக்கு உடனடியாக நேரும். உலகம், செல்வம், உங்களின் குடும்பம், கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள், புசிப்பது மற்றும் பானம்பண்ணுவது, உடை, மற்றும் ஆவிக்குரிய உலகின் பகுதியாக இல்லாத அத்தகைய அனைத்து விஷயங்களைப் பற்றிக்கொள்வது இதில் அடங்கும். பரிசுத்தவான்களின் பிரகாசமானது அதிகளவில் புலப்படும்; அதாவது, வாழ்வின் உணர்வுகள் இன்னும் தெளிவாகும், மற்றும் தொடர்ந்து இயக்கத்திலேயே இருக்கும். சிறிதளவு குறுக்கீடு செய்யும் எவரும் ஒரு பேரழிவு மிக்க வீழ்ச்சியை அனுபவித்து, வாழ்க்கையின் ஓட்டப் பந்தயத்தில் மிகவும் பின்தங்கியிருப்பார்கள். அலட்சியமாக உள்ளவர்களையும், பக்தியுடன் தேடாதவர்களையும், நான் முற்றிலுமாகக் கைவிடுவேன், மற்றும் எந்தவொரு விதிவிலக்குமின்றி அவர்கள் அனைவரையும் நான் புறக்கணிப்பேன். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பேரழிவுகளில் வாடும்படி நான் செய்வேன். தீவிரமாகத் தேடுபவர்களைப் பொறுத்தவரை—அதாவது, எப்போதும் இடையூறு செய்பவர்களுக்கு—நான் அவர்களின் அறியாமையைக் களைந்து, அவர்களை எனக்கு விசுவாசமானவர்களாக்குவேன். மேலும், அவர்கள் ஞானமும், அறிவாற்றலையும் கொண்டிருப்பர், மற்றும் அதன் மூலம் இன்னும் அதிக விசுவாசத்துடன் தேடுவர். என் முதற்பேறானக் குமாரர்கள் அனைவர் மீதும் நான் எனது ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக்குகிறேன், மேலும் என் நேசம் உங்கள் மீது எல்லா நேரமும் வரும். நான் எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டு பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன், மேலும், நீங்கள் சாத்தானின் வலைக்குள் விழ நான் அனுமதிக்க மாட்டேன். அனைத்து ஜனங்களுக்கு மத்தியிலும் என் கிரியையை நான் ஆரம்பிக்கத் தொடங்கிவிட்டேன்; அதாவது, நான் மற்றொரு கிரியை திட்டத்தைச் சேர்த்துள்ளேன். இவர்களே ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வார்கள், மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்கள் என் ராஜ்யத்திற்குள் கூடுவார்கள்.

என் குமாரர்களே, நீங்கள் உங்கள் பயிற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும். உங்களுக்காக, நீங்கள் பொறுப்பேற்று நிறைவேற்ற வேண்டிய அதிகமானக் கிரியை காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் விரைந்து முதிர்ச்சியடைய வேண்டும் என்று மட்டும் தான் நான் விரும்புகிறேன், எனவே நான் உங்களிடம் ஒப்படைத்த கிரியையை நீங்கள் முடிக்கலாம். இது உங்களின் தெய்வீகமான பொறுப்பாகும், மேலும், இது என் முதற்பேறானக் குமாரர்களான உங்களால் செய்யப்பட வேண்டிய கடமை ஆகும். பாதையின் முடிவை நீங்கள் அடையும் வரை நான் உங்களைக் காப்பேன், மற்றும் நான் உங்களைப் பாதுகாப்பேன், அதனால் நீங்கள் என்னுடன் என்றென்றும் பேரின்பத்தை அனுபவிப்பீர்கள்! உங்களைப் பரிபூரணப்படுத்துவதற்காக, பல பலிகளையும், பல சூழல்களையும் நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பது பற்றிய நுண்ணறிவை நீங்கள் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் என்னுடைய ஆசீர்வாதங்கள் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? நீங்கள் அனைவரும் என் அன்புக்குரிய குமாரர்கள். என்னை நீங்கள் மனமார நேசிக்கும் வரை, உங்களின் ஒருவரைக் கூட நான் கைவிட மாட்டேன்—ஆயினும் இது, உங்களால் என்னுடன் இணக்கமாக ஒத்துழைக்க முடியுமா இல்லையா என்பதைச் சார்ந்திருக்கிறது.

முந்தைய: அத்தியாயம் 65

அடுத்த: அத்தியாயம் 67

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக