அத்தியாயம் 78

நான் மட்டும் தான் கிரியை செய்கிறேனே தவிர எந்தவொரு மனிதரும் அதைச் செய்வதில்லை என்று நான் முன்பே கூறியிருக்கிறேன். அனைத்தும் என்னுடன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன, ஆனால் உங்களுடன் விஷயங்கள் மிகவும் வேறுபட்டுள்ளன; நீங்கள் செய்யும் அனைத்திலும் அதிகமான சிரமத்தை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். நான் அங்கீகரிக்கும் எதையும், நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன்; நான் அங்கீகரிக்கும் எவரையும் நான் பரிபூரணப்படுத்துவேன். மனிதர்களே: என் கிரியையில் தலையிட வேண்டாம்! நீங்கள் என் வழிகாட்டுதலைப் பின்பற்றி மட்டுமே செயல்பட வேண்டும், நான் நேசிப்பவற்றைச் செய்து, நான் வெறுக்கும் அனைத்தையும் நிராகரித்து, உங்களை நீங்களே பாவத்திலிருந்து வெளியே கொண்டுவந்து, எனது அன்பான அரவணைப்புக்குள் உங்களை நீங்களே எறிய வேண்டும். நான் உங்களிடம் பெருமை பேசவுமில்லை, மிகைப்படுத்திக் கூறவுமில்லை; இது உண்மையில் சத்தியமாகும். நான் உலகை அழிக்கப் போகிறேன் என்று கூறினால், நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில், உலகம் சாம்பலாகிவிடும். நீங்கள் அடிக்கடி அதிகக் கவலை கொண்டு, உங்களின் சொந்தச் சுமைகளைச் சேர்த்துக் கொண்டு, எனது வார்த்தைகள் வெறுமையானவை என்று பெரிதும் அஞ்சுகிறீர்கள். இவ்வாறு, எனக்கான “வெளியேறும் வழியைக் கண்டறிய” முயற்சி செய்ய நீங்கள் சுற்றி ஓடுகிறீர்கள். இது குருட்டுத்தனமானது! முட்டாள்தனமானது! நீங்கள் உங்களின் சொந்த மதிப்பைக் கூட அறியாமல், எனது ஆலோசகராக இருக்க முயற்சிக்கிறீர்கள். நீ தகுதியானவனா? நீ கண்ணாடியில் உன்னைப் பார்.

நான் உன்னிடம் ஒன்றைக் கூறுகிறேன்! கோழைகளுக்கு அவர்களின் கோழைத்தனத்திற்காகச் சிட்சை வழங்கப்பட வேண்டும், அதே நேரத்தில் மிக உயர்ந்த விசுவாசி அவனது விசுவாசத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுவான். தெளிவாகக் கூறினால், இப்போது மிகவும் முக்கியமான விஷயம் விசுவாசமாகும். உங்கள் மேல் வரவுள்ள ஆசீர்வாதங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு முன், எனக்காக ஒப்புக் கொடுப்பதற்காக இப்போதே நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும். இது துல்லியமாக “ஆசீர்வாதங்களைப் பெறுதல்” மற்றும் “துன்புறும் பேராபத்து” ஆகியவற்றைக் குறிக்கும் அம்சமாகும். என் குமாரர்களே! என் வார்த்தைகள் இன்னும் உங்கள் இருதயத்தில் பொறிக்கப்பட்டுள்ளனவா? “எனக்காக மனமார ஒப்புக் கொடுப்பவர்களுக்கு, நான் நிச்சயமாக உன்னைப் பெரிதும் ஆசீர்வதிப்பேன்.” இன்று, உள்ளே இருக்கும் அர்த்தத்தை நீ உண்மையிலேயே புரிந்து கொள்கிறாயா? நான் வெற்று வார்த்தைகளைப் பேசவில்லை; இப்போதிருந்து, எதுவும் மறைக்கப்படாது. அதாவது, எனது வார்த்தைகளில் மறைந்திருந்த விஷயங்கள் எந்தவொரு ஒளிவு மறைவுமின்றி ஒவ்வொன்றாக இப்போது உங்களுக்குக் கூறப்படும். மேலும், ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய உண்மையான அர்த்தமாக இருக்கும், அத்துடன் என் முன்னால் மறைந்திருக்கும் ஜனங்கள், நிகழ்வுகள், மற்றும் விஷயங்களை வெளிப்படுத்துவது எளிதாகச் செய்யப்படும், மேலும் அது எனக்குக் கடினமானதாகவே இருக்காது என்று குறிப்பிட வேண்டியதில்லை. நான் செய்யும் அனைத்தும் என் இயல்பான மனிதத்தன்மையின் ஒரு அம்சத்தையும், அத்துடன் என்னுடைய முழுத் தெய்வீகத் தன்மையின் அம்சத்தையும் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகளைப் பற்றியத் தெளிவானப் புரிதல் உங்களிடம் இருக்கிறதா? அதனால் தான் நீங்கள் மிகவும் அவசரப்படக் கூடாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். ஒரு நபர் அல்லது விஷயத்தை வெளிப்படுத்துவது எனக்குக் கடினமான காரியம் அல்ல, மேலும், அதற்கென ஒரு நேரம் இருக்கிறது. அப்படித் தானே அல்லவா? எனவே ஜனங்கள் பலரின் உண்மையான ரூபங்கள் என் முன்னால் வெளிப்படுத்தப்பட்டன. அவர்கள் நரி-ஆவிகள், நாய்கள், அல்லது ஓநாய்களாக இருந்தாலும், நான் நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் அனைவரும் அவர்களின் உண்மையான ரூபத்தை வெளிப்படுத்துவார்கள், ஏனெனில், நான் செய்யும் அனைத்தும் என் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த விஷயத்தில் நீங்கள் முற்றிலும் தெளிவான ஒரு புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்!

“நேரம் தூரமில்லை” என்ற பழமொழி எதைக் குறிப்பிடுகிறது என்று உனக்கு உண்மையாகவே புரிகிறதா? கடந்த காலத்தில், அது எனது நாளைக் குறிக்கிறது என்று நீ எப்போதும் நினைத்தாய், ஆனால் நீங்கள் அனைவரும் உங்களின் கருத்துகளின் அடிப்படையில் என் வார்த்தைகளைப் பொருள் கொள்கிறீர்கள். நான் ஒன்று உன்னிடம் கூறுகிறேன்! இப்போதிருந்து, எனது வார்த்தைகளைத் தவறாகப் பொருள் கொள்பவர் எவரும் சந்தேகத்திற்கிடமின்றிப் பொருந்தாதவர் ஆவர்! “நேரம் தூரமில்லை” என்று நான் கூறிய வார்த்தைகள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் உங்கள் நாட்களைக் குறிக்கின்றன; அதாவது, அனைத்துப் பொல்லாத ஆவிகளும் அழிக்கப்பட்டு, என் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு, விஷயங்களைச் செய்வதற்கான மனித முறைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும் நாளாகும். மேலும், இந்தச் சொற்றொடரானது பெரும் பேரழிவுகள் அனைத்தும் கீழிறங்கும் நாட்களைக் குறிக்கிறது. இதை நினைவில் கொள்ளுங்கள்! இவை அனைத்தும் பெரும் பேரழிவுகளாகும்; இனியும் இதைத் தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது. எனது பெரும் பேரழிவுகள் என் கைகளிலிருந்து ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த உலகின் மீதும் இறங்கும். எனது நாமத்தை ஆதாயப்படுத்திக் கொண்ட எவரும் ஆசீர்வதிக்கப்படுவர், மேலும், நிச்சயமாக அத்தகைய துன்பத்தைத் தாங்க வேண்டியதில்லை. இன்னும் உங்களுக்கு அது நினைவில் இருக்கிறதா? நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? நான் பேசும் நேரம் தான் துல்லியமாக நான் கிரியை செய்யத் தொடங்கும் நேரமாகும் (பெரும் பேரழிவுகள் இறங்கும் அத்தகைய நேரமாகும்). நீங்கள் என் நோக்கங்களை உண்மையில் புரிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு இரக்கம் எதுவும் காட்டாமல், உங்கள் மீது அத்தகைய கண்டிப்பான கோரிக்கைகளை நான் ஏன் வைத்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? சர்வதேசச் சூழ்நிலை பதற்றமாக இருக்கும் போது, சீனாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள் (பெயரளவிலானவர்கள்) அனைத்து ஆயத்தங்களையும் மேற்கொள்ளும் போது, இது ஒரு டைம் பாம் வெடிக்கப் போகிற அதே நேரமாகும். உண்மையான வழியைத் தேடும் அந்த ஏழு நாடுகளும், செலவைப் பொருட்படுத்தாமல், மதகுகளின் வழியே பாயும் தண்ணீரைப் போல் சீனாவிற்குள் தீவிரமாக நுழைவார்கள். சிலர் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மற்றவர்கள் எனக்காக ஊழியம் செய்ய வேண்டியவர்கள், ஆனால் அவர்களின் மத்தியில் முதற்பேறான குமாரன் இல்லை. இது என் செயல் ஆகும்! இது நான் உலகைச் சிருஷ்டித்த போது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். உங்களின் மனிதக் கருத்துகளை விட்டுவிடுங்கள். நான் அர்த்தமற்றவற்றைப் பேசுவதாகக் கருத வேண்டாம்! நான் எதைப் பற்றிச் சிந்திக்கிறேனோ அதை நான் ஏற்கனவே நிறைவேற்றி விட்டேன், மேலும், என் திட்டமும் நான் ஏற்கனவே நிறைவேற்றிய ஒன்றாகும். இதைப் பற்றி நீங்கள் தெளிவாக இருக்கிறீர்களா?

அனைத்தும் என் எண்ணங்கள் மற்றும் திட்டத்துடன் உள்ளது. என் குமாரனே! உன் பொருட்டு நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன், ஏனெனில் நான் உன்னை நேசிக்கிறேன். எண்ணங்களில் கீழ்ப்படியாமல் இருக்கவும் அல்லது பொறாமை கொள்ளவும் துணியும் எவரும், என் சாபம் மற்றும் எரித்தலால் இறப்பார்கள். இது என் ராஜ்யத்தின் ஆட்சிமுறை ஆணைகளையும் உள்ளடக்கியதாகும், ஏனெனில், இந்த நாளின் ராஜ்யம் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டது. இருப்பினும், என் குமாரனே, நீ எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் இதை ஒரு மூலதனமாகக் கருதக் கூடாது. நீ உன் பிதாவின் இருதயத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும், அதன் மூலம், உன் பிதாவின் கடின முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து, எவ்வகை நபரை நான் அதிகம் நேசிக்கிறேன் என்றும், எவ்வகை நபரை நான் இரண்டாவதாக நேசிக்கிறேன் என்றும், எவ்வகை நபரை நான் அதிகம் வெறுக்கிறேன் என்றும், எவ்வகை நபரை நான் வெறுத்து ஒதுக்குகிறேன் என்றும் என் குமாரன் புரிந்து கொள்ள வேண்டும். உன் மீது அழுத்தத்தைக் குவித்துக் கொண்டே இருக்க வேண்டாம். உன்னிடம் உள்ள எந்தவொரு மனநிலையும் என்னால் முன்னேற்பாடு செய்யப்பட்டதாகும், மேலும், இது என் தெய்வீக மனநிலையின் ஒரு அம்சத்தின் வெளிப்பாடாகும். உன் சந்தேகங்களைத் தூக்கி எறி! எனக்கு உன் மீது வெறுப்பு இல்லை. நான் இதை எப்படிச் சொல்வது? நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? நீ இன்னும் உன் பயங்களால் கட்டுண்டிருக்கிறாயா? யார் விசுவாசி, யார் உணர்ச்சி மிக்கவர், யார் நேர்மையுள்ளவர், யார் ஏமாற்றுகிறவர் என்று எனக்கு எல்லாம் தெரியும், நான் முன்பே கூறியது போல, என் கையின் பின்பக்கத்தைப் போல் பரிசுத்தவான்களின் சூழ்நிலையைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

என் கண்களில், அனைத்தும் நீண்ட காலமாக நிறைவேற்றப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. (நான் ஜனங்களின் இருதயங்களின் ஆழத்தை ஆராய்கிற தேவன் ஆவேன்; வெறுமனே என் இயல்பான மனிதத்தன்மையின் அம்சத்தை உங்களுக்குக் காட்டுவது தான் என் நோக்கமாகும்.) எனினும், உங்களின் கண்ணோட்டத்திலிருந்து, அனைத்தும் இன்னும் மறைக்கப்பட்டுள்ளது, எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உங்களுக்கு என்னைத் தெரியாது என்பது தான் இதற்கு முழுக் காரணமாகும். அனைத்தும் என் கையில் இருக்கின்றன, அனைத்தும் என் காலின் கீழே இருக்கின்றன, மேலும், என் கண்கள் அனைத்தையும் ஆராய்கின்றன; என் நியாயத்தீர்ப்பிலிருந்து யாரால் தப்பிக்க முடியும்? தூய்மையற்றவர்கள், மறைப்பதற்கான விஷயத்தை வைத்திருப்பவர்கள், என் முதுகிற்குப் பின்னால் நியாயத்தீர்ப்பிடுபவர்கள், தங்கள் இருதயத்தில் எதிர்ப்பைக் கொண்டவர்கள் மற்றும் அதே போல மதிப்பற்றவர்கள் என்று என் கண்களால் கருதப்பட்ட இவர்கள் அனைவரும் என் முன்னால் மண்டியிட்டு அவர்களின் சுமையை இறக்க வேண்டும். ஒருவேளை, இதைக் கேட்ட பின்னர், சிலர் சற்று ஊக்கத்தைப் பெறுவர், அதே நேரத்தில் மற்றவர்கள் இதை ஒரு தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன்! விவேகமுள்ளவர்கள் மனந்திரும்ப விரையட்டும்! நீங்கள் முட்டாளென்றால், நீங்கள் வெறுமனே காத்திருங்கள்! நேரம் வரும்போது, யார் பேராபத்தால் துன்புறுவார்கள் என்று காணுங்கள்!

பரலோகம் இன்னும் உண்மையான பரலோகமாக உள்ளது, மேலும், பூமி இன்னும் உண்மையான பூமியாக உள்ளது, ஆனால் என் பார்வையில், இரண்டும் ஏற்கனவே மாறிவிட்டன, மேலும், இனி அவை ஒரு காலத்தில் இருந்த பரலோகம் மற்றும் பூமியாக இருக்காது. பரலோகம் என்பது எதைக் குறிக்கிறது? உங்களுக்குத் தெரியுமா? மேலும், இன்றைய பரலோகம் எதைக் குறிக்கிறது? கடந்த காலத்தின் பரலோகம் எதைக் குறிக்கிறது? இதை நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: கடந்த காலத்தின் பரலோகமானது நீங்கள் விசுவாசித்த ஆனால் யாரும் பார்க்காத தேவனைக் குறிக்கிறது, மேலும், அவர் ஜனங்களால் உண்மையான நேர்மையுடன் விசுவாசிக்கப்பட்ட தேவனாவார் (ஏனெனில் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை). மறுபுறம், இன்றைய பரலோகமானது, எனது இயல்பான மனிதத்தன்மையையும் என் முழுத் தெய்வீகத் தன்மையையும் குறிப்பிடுகிறது; அதாவது, இது நடைமுறைக்குரிய இந்தத் தேவனைக் குறிக்கிறது. இரண்டும் ஒரே தேவன் ஆவார், ஆனால் நான் ஏன் என்னைப் புதிய பரலோகம் என்று கூறுகிறேன்? இவை அனைத்தும் மனிதனின் எண்ணங்களைச் சார்ந்தது. இன்றைய பூமி என்பது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. கடந்த காலத்தின் பூமியில் பரிசுத்தமான இடம் ஒன்று கூட இல்லை, அதே சமயம், இன்று நீங்கள் பார்வையிடும் இடங்கள் புனிதமானவையாக அமைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் நான் இதைப் புதிய பூமி என்று கூறுகிறேன். இங்கு “புதியது” என்பது “புனிதத்தைக்” குறிக்கிறது. புதிய பரலோகமும் பூமியும் இப்பொழுது முழுமையாக உணரப்பட்டுள்ளன. இப்போது உங்களுக்கு இது புரிகிறதா? பக்கம் பக்கமாக, அனைத்து இரகசியங்களையும் நான் உங்களுக்கு வெளிப்படுத்துவேன். அவசரப்பட வேண்டாம், பெரிய இரகசியங்கள் கூட உங்களால் வெளிப்படுத்தப்படும்!

முந்தைய: அத்தியாயம் 77

அடுத்த: அத்தியாயம் 79

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக