அத்தியாயம் 32

தேவனுடைய வார்த்தைகள் ஜனங்களின் தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கின்றன; அவர் பேசும்போது, தேவன் மனுஷனை விலக்கிவிட்டு, காற்றினிடத்தில் பேசுவதைப் போலவும், மனுஷனின் செயல்களில் கவனம் செலுத்த அவருக்கு எந்த எண்ணமும் இல்லை என்பது போலவும், அவர் பேசும் வார்த்தைகள் மனுஷனின் வளர்ச்சியின் மீது முற்றிலும் அக்கறையின்றி இருப்பது போலவும், அவர் பேசுகிற வார்த்தைகள் ஜனங்களின் எண்ணங்களை நோக்கி அல்ல, மாறாக தேவனின் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப மனுஷனை விலக்கிவைக்கிறார் என்பதைப் போலவும் இருக்கிறது. எண்ணற்ற காரணங்களால், தேவனின் வார்த்தைகள் மனுஷனுக்குப் புரிந்துகொள்ள முடியாதவையாகவும் ஆராய்ந்து அறிய முடியாதவையாகவும் இருக்கின்றன. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தேவனுடைய எல்லா வார்த்தைகளின் உண்மையான நோக்கமானது, ஜனங்கள் அறிவைப் பெறுவது அல்லது அவைகளிலிருந்து திறம்பட காரியங்களைச் செய்யக் கற்றுக்கொள்வது அல்ல; மாறாக, அது தேவன் தொடக்கம் முதல் இன்று வரை செயல்பட்ட வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. நிச்சயமாக, ஜனங்கள் தேவனின் வார்த்தைகளிலிருந்து விஷயங்களைப் பெறுகிறார்கள்: இரகசியங்கள் தொடர்பான விஷயங்கள், அல்லது பேதுரு, பவுல் மற்றும் யோபு தொடர்பான விஷயங்கள் போன்றவை—ஆனால் இதுதான் அவர்கள் அடைய வேண்டியதும், அவர்கள் அடையத் தகுதியானதுமாகும், மேலும், அவர்களின் அந்தஸ்துக்கு ஏற்றதாக இருக்குமாறு, அவர்கள் இந்த விஷயங்களை அடையும்படி, ஏற்கனவே கூடுமானமட்டும் தூரமாய் சென்றிருக்கிறார்கள். தேவன் அடையும்படி கேட்கும் பலன் உயர்ந்ததாக இல்லாதிருந்தும், இன்னும் அவர் பல வார்த்தைகளை ஏன் பேசினார்? இது அவர் பேசுகிற சிட்சையுடன் தொடர்புடையது, இயற்கையாகவே, இவைகள் அனைத்தும் ஜனங்கள் உணராமலேயே அடையப்படுகின்றன. இன்று, தேவனுடைய வார்த்தைகளின் தாக்குதலால் ஜனங்கள் அதிக துன்பங்களைச் சகிக்கிறார்கள். மேலோட்டமாக, அவைகளில் எதுவும் கையாளப்பட்டதாகத் தெரியவில்லை, ஜனங்கள் தங்கள் கிரியையைச் செய்வதில் சுதந்திரம் பெறத் தொடங்கியுள்ளனர், ஊழியம் செய்பவர்கள் தேவனின் ஜனங்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்—இதில், அவர்கள் மகிழ்ச்சிக்குள் பிரவேசித்ததாக ஜனங்களுக்குத் தோன்றுகிறது. உண்மையாகவே, யதார்த்தம் என்னவென்றால், சுத்திகரிப்பிலிருந்து, அவர்கள் அனைவரும் மிகவும் கடுமையான சிட்சைக்குள் நுழைந்திருக்கின்றனர். தேவன் சொல்வது போல், “என் கிரியையின் படிகள் ஒன்று அடுத்ததோடு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் எப்போதும் உயர்ந்தவை.” தேவன் ஊழியம் செய்பவர்களை பாதாளத்திலிருந்து எழுப்பி, அவர்களை அக்கினி மற்றும் கந்தகக் கடலில் தள்ளிவிட்டார், அங்கு சிட்சை மிகவும் கடுமையானது. இதனால், அவர்கள் இன்னும் பெரிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், அதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சிட்சை இன்னும் கொடுமையானதல்லவா? ஒரு உயர்ந்த மண்டலத்தில் நுழைந்துவிட்ட பிறகு, ஜனங்கள் மகிழ்ச்சியை விட துக்கத்தை ஏன் உணர்கிறார்கள்? அவர்கள் சாத்தானின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதாக ஏன் கூறப்படுகிறது? “சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் வீட்டில் கிரியையின் கடைசிப் பகுதி முடிவடைந்துவிட்டது” என்று தேவன் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா? “இறுதித் துன்பம் என்பது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் முன் தேவனுக்காக உறுதியான, பலமான சாட்சி பகருவது” என்று தேவன் கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? சிவப்பான பெரிய வலுசர்ப்பத்திற்கு ஜனங்கள் கொடுக்கப்படவில்லை என்றால், அவர்களால் எப்படி அதற்கு முன் சாட்சி பகர முடியும்? தங்களைக் கொன்ற பிறகு, “நான் பிசாசைத் தோற்கடித்திருக்கிறேன்” என்பது போன்ற வார்த்தைகளை இதுவரை கூறியது யார்? தங்கள் சொந்த மாம்சத்தையே எதிரியாகப் பார்த்து, பின்னர் தங்களையே மாய்த்துக்கொள்வது—இதன் நடைமுறை முக்கியத்துவம் எங்கே இருக்கிறது? தேவன் ஏன் இப்படி பேசினார்? “நான் ஜனங்களின் தழும்புகளைப் பார்ப்பதில்லை, ஆனால் அவர்களின் தழும்புகள் இல்லாத பகுதியைப் பார்க்கிறேன், இதிலிருந்து நான் திருப்தி அடைகிறேன்.” தழும்புகள் இல்லாதவர்கள் அவருடைய வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பது உண்மையாக இருந்திருந்தால், அவர் ஜனங்களின் கருத்துக்களுக்கு எதிராகத் திருப்பித் தாக்கும்படியாக, மனுஷனின் கண்ணோட்டத்திலிருந்து ஏன் பொறுமையாகவும் ஆர்வமாகவும் பல வார்த்தைகளைப் பேசியிருப்பார்? அவர் ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? அவர் இப்படி ஒரு காரியத்தைச் செய்வதன் மூலம் ஏன் தேவையில்லாத பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டும்? இவ்வாறு, தேவனின் மனுவுருவாதலுக்கு உண்மையான முக்கியத்துவம் இருப்பதையும், அவர் மாம்சமாகி தமது கிரியையை முடித்த பிறகு மாம்சத்தைத் “தூக்கி எறிந்துவிட” மாட்டார் என்பதையும் இது காட்டுகிறது. “பொன் தூய்மையாக இருக்க முடியாது, மனுஷன் பரிபூரணமானவனாக இருக்க முடியாது” என்று ஏன் கூறப்படுகிறது? இந்த வார்த்தைகளை எவ்வாறு விளக்குவது? தேவன் மனுஷனின் சாராம்சத்தைப் பற்றி பேசும்போது, அவருடைய வார்த்தைகள் எதைக் குறிக்கின்றன? ஜனங்களின் மாம்சீகக் கண்களுக்கு, மாம்சம் ஒன்றுக்கும் உதவாததாகத் தோன்றுகிறது, இல்லையெனில், அது மிகவும் குறைவுள்ளதாகத் தோன்றுகிறது. தேவனின் பார்வைக்கு, இது முக்கியமானதே இல்லை—ஆனாலும் ஜனங்களுக்கு, இது மிக அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். இதைத் தீர்க்க அவர்கள் முற்றிலும் திறமையற்றவர்கள் போலவும், தனிப்பட்ட முறையில் ஒரு பரலோகக் குழுவால் கையாளப்பட வேண்டும் என்பது போலவும் இருக்கிறது—இது மனுஷனுடைய கருத்தல்லவா? “ஜனங்களின் பார்வையில், நான் வானத்திலிருந்து இறங்கி வந்திருக்கிற ஒரு ‘சிறிய நட்சத்திரமே’ அல்லாமல் வேறல்ல, நான் வானத்தில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரமே, மேலும் இன்று பூமியின் மீதான என் வருகை தேவனால் கட்டளையிடப்பட்டதாகும். இதன் விளைவாக, தேவனும் நானும் ஒன்றாகவும் மற்றும் ஒரே மாதிரியாகவும் இருப்பதாகக் கருதுவதற்கு ஜனங்கள் மிக அதிகமாகப் பயந்து ‘நான்’ மற்றும் ‘தேவன்’ என்ற வார்த்தைகளுக்கான அதிகமான விளக்கங்களுடன் வந்திருக்கின்றனர்.” மனுஷர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாக இருப்பதால், தேவன் ஏன் அவர்களின் கருத்துக்களை வெவ்வேறு கண்ணோட்டங்களில் வெளிப்படுத்துகிறார்? இதுவும் தேவனின் ஞானமாக இருக்க முடியுமா? அத்தகைய வார்த்தைகள் கேலிக்குரியவை அல்லவா? தேவன் சொல்வது போல், “ஜனங்களின் இருதயங்களில் நான் ஓர் இடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நான் அங்கு வசிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதில்லை. மாறாக, தங்கள் இருதயங்களில் ‘பரிசுத்தர்’ திடீரென்று வருவார் எனக் காத்திருக்கிறார்கள். எனது அடையாளம் மிகவும் ‘குறைவானது’ என்பதால், ஜனங்களின் கோரிக்கைகளுக்கு நான் பொருத்தமானவராக இல்லை, ஆகவே, அவர்களால் துரத்திவிடப்படுகிறேன்.” தேவனைப் பற்றிய ஜனங்களின் மதிப்பீடு “மிக அதிகமாக” இருப்பதால், பல விஷயங்கள் தேவனால் “அடைய முடியாதவையாக” இருக்கின்றன, இது அவரை “சிரமத்திற்குள்” தள்ளுகிறது. தேவனிடம் கேட்பது அவர்களின் கருத்துக்கள் என்பதை ஜனங்கள் அறியாதிருக்கிறார்கள். “ஒரு புத்திசாலி தனது சொந்த புத்திசாலித்தனத்தினாலேயே பலியாகலாம்” என்பதன் உண்மையான அர்த்தம் இதுவல்லவா? இது உண்மையிலேயே “விதிப்படி ஒரு புத்திசாலி, ஆனால் இந்த முறை ஒரு முட்டாள்”! என்பது போலானதாகும். உங்கள் பிரசங்கத்தில், ஜனங்கள் தங்கள் எண்ணங்களின் தேவனை கைவிட வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் உங்கள் கருத்துகளின் தேவன் போய்விட்டாரா? “மனுஷனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் எந்த வகையிலும் பெரியவை அல்ல” என்ற தேவனின் வார்த்தைகளை எவ்வாறு விளக்குவது? அவைகள் ஜனங்களை எதிர்மறையாக ஆக்குவதற்கும் ஒழுக்கக்கேடு அடையச்செய்வதற்கும் அல்ல, மாறாக, தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய தூய்மையான புரிதலை அவர்களுக்கு வழங்குவதற்காகவே ஆகும்—உங்களுக்குப் புரிகிறதா? உண்மையில், மனுவுருவான தேவன் என்பது ஜனங்கள் கற்பனை செய்வது போல் “உன்னதமானவர் மற்றும் வல்லமையானவராகிய ‘நான்’” தானா?

தேவனால் உரைக்கப்பட்ட எல்லா வார்த்தைகளையும் படித்து, அவற்றைப் பற்றிய பொதுவான விளக்கத்தை வழங்கக்கூடியவர்கள் இருந்தாலும், தேவனின் இறுதி நோக்கம் என்ன என்பதைப் பற்றி யாரால் பேச முடியும்? இதில்தான் மனிதகுலம் குறைவுபட்டிருக்கிறது. தேவன் எந்தக் கண்ணோட்டத்தில் பேசினாலும், மாம்சத்தில் உள்ள தேவனை ஜனங்களை அறியச் செய்வதே அவருடைய ஒட்டுமொத்த நோக்கமாகும். அவரிடம் மனிதத்தன்மை எதுவும் இல்லை என்றால்—அவரிடம் உள்ள அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனின் பண்பு நலன்களாக இருந்திருந்தால்—தேவன் இவ்வளவு சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. ஜனங்களின் குறைபாடுகளே தேவனின் வார்த்தைகளுடன் சம்பந்தப்படுத்துகிற புதிதான பொருட்களாகச் செயல்படுகின்றன என்று கூறலாம். அதாவது, மனுஷனில் வெளிப்படுவது ஜனங்களின் கருத்துக்களைப் பற்றி தேவன் என்ன சொல்கிறார் என்பதற்கான பின்னணியாகும், இதனால், ஜனங்கள் தேவனின் வாக்கியங்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். இயற்கையாகவே, இது ஜனங்களின் கருத்துக்களைப் பற்றி தேவன் கூறுவதை அடிப்படையாகக் கொண்டது—இந்த வழியில் மட்டுமே, இது கோட்பாடு மற்றும் யதார்த்தத்தின் கலவை என்று கூற முடியும்; அப்போதுதான், ஜனங்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்வதில் தீவிரமாக மாற்றிக்கொள்ள முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் ஜனங்களின் கருத்துக்களுடன் இணக்கமாக இருந்தால், தேவனும் அவரைப் பற்றி சாட்சி பகர்ந்தால் என்ன பயன்? இதன் காரணமாகவே, துல்லியமாக, தேவன் எதிர்மறையான பக்கத்திலிருந்து செயல்படுகிறார், அவரது பெரிய வல்லமையை முன்னிலைப்படுத்தும்படியாக ஜனங்களின் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார். இது தேவனின் ஞானம் இல்லையா? ஒவ்வொருவருக்கும் தேவன் செய்யும் அனைத்தும் நன்மைக்காகவே இருக்கிறது—ஆகவே, இந்த நேரத்தில் ஏன் துதி செலுத்தக்கூடாது? விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடைந்தால், அல்லது அந்த நாள் வந்துவிட்டது என்றால், பேதுருவைப் போல, உன்னால் உபத்திரவங்களுக்கு மத்தியில் உன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபங்களை ஏறெடுக்க முடியுமா? பேதுருவைப் போல், சாத்தானின் கைகளில் இருக்கும்போதும், உன்னால் தேவனைத் துதிக்க முடிந்தால் மட்டுமே, “சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுதல், மாம்சத்தை மேற்கொள்ளுதல் மற்றும் சாத்தானை மேற்கொள்ளுதல்” ஆகியவை உண்மையான அர்த்தமுள்ளவையாக இருக்கும். இது தேவனுக்கான மிக உண்மையான சாட்சியல்லவா? “தெய்வீகத்தன்மை செயல்பட வெளிப்படுவதாலும், ஏழு மடங்கு உக்கிரமான ஆவியானவர் மனுஷனில் செயல்படுவதாலும்” அடையப்படும் விளைவு இதுவே ஆகும், மேலும் இது “மாம்சத்திலிருந்து வெளிவருகிற ஆவியானவரால்” அடையப்பட்ட விளைவுமாகும். இத்தகைய செயல்கள் உண்மையல்லவா? நீங்கள் வழக்கமாக யதார்த்தத்தில் கவனம் செலுத்துகிறீர்கள், ஆனால் இன்று நீங்கள் யதார்த்தத்தைப் பற்றிய உண்மையான அறிவைப் பெற்றிருக்கிறீர்களா? “மனுஷனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் எந்த வகையிலும் பெரியவை அல்ல, ஆனால் ஜனங்கள் வேறுவிதமாக நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் அவர்களின் ‘தாழ்மை’ வெளிப்படுகிறது. நான் தொலைந்துவிடுவேனோ என்ற ஆழ்ந்த பயத்துடன், ஆழமான மலைகளுக்குள் இருக்கிற பழங்காலக் காடுகளுக்குள் அலைந்து திரிவேனோ என்று பயந்து, அவர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நடப்பதற்குக் கடமைப்பட்டவர்களாய் இருந்து, என்னை வழிநடத்துகிறார்கள். இதன் விளைவாக, நான் பாதாளச் சிறைக்குள் சென்றுவிடுவேன் என்ற ஆழ்ந்த பயத்தினால், ஜனங்கள் எப்போதும் என்னை முன்னே விட்டு வழிநடத்தினர்.” இந்த எளிமையான வார்த்தைகளைப் பற்றிய உங்களுடைய அறிவு என்ன—அவற்றில் உள்ள தேவனின் வார்த்தைகளின் வேர்களை உங்களால் உண்மையிலேயே புரிந்து கொள்ள முடிகிறதா? உங்களின் கருத்துகளில் எந்த விஷயத்தைப் பற்றி தேவன் அத்தகைய வார்த்தைகளைப் பேசினார் என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நாளும் இந்த முக்கிய கருத்தில் உங்கள் கவனத்தைச் செலுத்துகிறீர்களா? அடுத்தப் பகுதியிலுள்ள ஒரு வாக்கியத்தில், தேவன் இவ்வாறு கூறுகிறார், “ஆனாலும் ஜனங்கள் என் சித்தத்தை அறியாமல், நான் அவர்களுக்கு வழங்கியவைகள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதது போலவும், தேவை விநியோகத்தை விட அதிகமாக உள்ளது போலவும் என்னிடமிருந்து பொருட்களுக்காக ஜெபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.” இந்த வாக்கியத்தில், உங்களுக்குள் உள்ள கருத்துக்கள் என்ன என்பதைக் காணலாம். கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை தேவன் நினைவில் கொள்ளவில்லை அல்லது விசாரிக்கவில்லை, எனவே கடந்த கால விஷயங்களைப் பற்றி இனி சிந்திக்க வேண்டாம். எதிர்காலப் பாதையில் “இறுதி காலத்தில் பேதுருவின் ஆவியை” உங்களால் உருவாக்க முடியுமா என்பதுதான் மிகவும் முக்கியமானது—இதை அடைய உங்களுக்கு விசுவாசம் இருக்கிறதா? தேவன் மனுஷனிடம் கேட்பது என்னவென்றால், இறுதியில் ஜனங்கள் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் மீது வெட்கத்தைக் கொண்டுவருவதற்கான பாதையை உருவாக்குவாக்கும்படியாக, பேதுருவின் முன்மாதிரியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதன் காரணமாகவே தேவன் கூறுகிறார், “ஜனங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை மட்டுமே கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் எனக்கு நல்ல உணவைச் சமைத்துத் தருமாறோ, அல்லது எனக்குத் தலை சாய்க்கத் தகுந்த இடத்தை ஏற்பாடு செய்யுமாறோ நான் கேட்பதில்லை….” உலகத்தில், “லீ ஃபெங்கின் ஆவியை” 1990 களில் கொண்டு வரும்படி ஜனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், ஆனால் தேவனுடைய வீட்டில், நீங்கள் “பேதுருவின் விசேஷித்தவிதமான பாணியை” உருவாக்க வேண்டும் என்று தேவன் கேட்கிறார். தேவனுடைய சித்தத்தை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? இதற்காக நீங்கள் உண்மையிலேயே பாடுபட முடியுமா?

“நான் பிரபஞ்சங்களுக்கு மேலே அசைவாடுகிறேன், மேலும் நான் நடக்கும்போது முழு பிரபஞ்சத்தின் ஜனங்களையும் கவனிக்கிறேன். பூமியில் உள்ள பெரும் திரளான ஜனங்கள் மத்தியில், என் கிரியைக்கு ஏற்றவர்களோ அல்லது என்னை உண்மையாக நேசிப்பவர்களோ இதுவரை ஒருவர்கூட இருந்ததில்லை. எனவே, இந்த நேரத்தில் நான் திகைப்புடன் பெருமூச்சு விடுகிறேன், நான் ‘அனைவரையும் ஒரே வலையில் பிடிப்பார்’ என்ற ஆழ்ந்த பயத்துடன் இனி ஒன்றுகூட வேண்டாம் என்று, ஜனங்கள் உடனடியாகக் கலைந்து செல்கின்றனர்.” பெரும்பாலான ஜனங்களுக்கு, இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம். தேவன் ஏன் மனுஷனிடம் அதிகம் கேட்பதில்லை என்று அவர்கள் கேட்கிறார்கள், ஆனாலும் அவரது கிரியைக்குப் பொருத்தமானவர்கள் யாரும் இல்லை என்பதால் திகைப்புடன் பெருமூச்சு விடுகிறார்கள். இதில் முரண்பாடு இருக்கிறதா? உண்மையாக சொல்லப்போனால், இருக்கிறது, ஆனால் உண்மையில் எந்த முரண்பாடும் இல்லை. ஒருவேளை, “என்னுடைய வார்த்தைகள் அனைத்தும் நான் விரும்பும் பலனைப் பெற்றிருக்கும்” என்று தேவன் கூறியதை நீ இன்னும் நினைவுகூரலாம். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் சரியாக என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க அவரது ஒவ்வொரு செயலையும் ஜனங்கள் நோக்கிப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆவிக்குரிய உலகில் சாத்தானை இலக்காகக் கொண்டு தேவன் தமது புதிய கிரியையைச் செய்யும்போது, வேறுவிதமாகக் கூறினால், மாம்சத்தில் உள்ள தேவனின் காரணமாக, பூமியில் உள்ள ஜனங்கள் மத்தியில் எல்லா விதமான கருத்துக்களும் உருவாக்கப்படுகின்றன. தேவன் திகைப்புடன் பெருமூச்சு விடும்போது—அதாவது, மனுஷனைக் குறித்த எல்லாக் கருத்துகளையும் பேசும்போது, ஜனங்கள் அவற்றைச் சமாளிக்க தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள், மேலும் தாங்கள் நம்பிக்கையற்று இருப்பதாக நம்புபவர்களும் இருக்கிறார்கள், ஏனென்றால், அவரைப் பற்றிய எண்ணங்களைக் கொண்டவர்கள் அனைவரும் அவருடைய சத்துருக்கள் என்று தேவன் கூறுகிறார்—இதன் காரணமாக ஜனங்கள் எப்படிக் “கலைந்து செல்லாமல்” இருக்க முடியும்? குறிப்பாக இன்று, தண்டனை வந்திருப்பதால், தேவன் தங்களை அழித்துவிடுவாரோ என்று ஜனங்கள் இன்னும் பயப்படுகிறார்கள். அவர்கள் தண்டிக்கப்பட்ட பிறகு, தேவன் “அனைவரையும் ஒரே வலையில் பிடிப்பார்” என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், அப்படி இல்லை: தேவன் சொல்வது போல், “அவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாதபடி, எனது சிட்சையின் மத்தியில் ஜனங்களைத் ‘தடுக்க’ நான் விரும்பவில்லை. எனது நிர்வாகத்தில் மனுஷனின் கிரியைகள் இல்லாததால், எனது கிரியையை வெற்றிகரமாக முடிப்பது சாத்தியமில்லை, இது எனது கிரியையைத் திறம்பட முன்னேறிச்செல்லவிடாமல் தடுக்கிறது.” எல்லா ஜனங்களும் கொல்லப்பட்டவுடன் அவருடைய கிரியை முடிவடைய வேண்டும் என்பது தேவனின் சித்தம் அல்ல—அதன் காரணம் என்னவாக இருக்கும்? ஜனங்களிடத்தில் கிரியை செய்வதன் மூலமும், அவர்களை சிட்சிப்பதன் மூலமும், தேவன் அவர்கள் மூலம் தமது செயல்களை வெளிப்படுத்துகிறார். தேவனின் வார்த்தைகளின் தொனியில் ஏற்கனவே சிட்சை இருப்பதை ஜனங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளாததால், அவர்கள் தங்கள் உணர்வில் ஒருபோதும் பிரவேசித்திருக்கவில்லை. ஜனங்கள் தங்கள் தீர்மானத்தை வெளிப்படுத்த இயலாதவர்களாய் இருக்கிறார்கள், இதனால், தேவனால் சாத்தானுக்கு முன்பாக எதையும் சொல்ல முடியவில்லை, மேலும் இது தேவனின் கிரியையை முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கிறது. ஆகவே, தேவன் கூறுகிறார், “ஒருமுறை நான் ஒரு மனிதனை விருந்தினனாக என் வீட்டுக்கு அழைத்தேன். ஆனாலும் அவனை நான் ஒரு விருந்தினனாக அழைப்பதற்குப் பதிலாக கொலைக்களத்திற்குக் கொண்டுவந்து விட்டதைப்போல் என்னுடைய அழைப்புகளால் அவன் அங்கும் இங்கும் ஓடினான். இவ்வாறு என் வீடு வெறுமையாக விடப்பட்டது, ஏனெனில் மனுஷன் எப்போதும் என்னை ஒதுக்கினான், மற்றும் எப்போதும் எனக்கு எதிராகத் தற்காப்பாகவே இருந்து வந்தான். என்னுடைய கிரியையின் ஒரு பகுதியை இதனால் என்னால் நடத்த முடியாமல் போய்விட்டது.” மனுஷன் தனது கிரியையில் செய்யும் தவறுகளின் காரணமாகவே, தேவன் மனுஷனுக்கான தமது கோரிக்கைகளைத் தெளிவாக முன்வைக்கிறார். மேலும், ஜனங்கள் இந்தக் கட்ட கிரியையைச் செய்யத் தவறியதால்தான், தேவன் இன்னும் அதிகமான வார்த்தைகளைக் கூட்டுகிறார்—இது துல்லியமாக தேவன் பேசுகிற “மனுஷன் மீதான கிரியையின் மற்றொரு பகுதி” ஆகும். ஆனால் தேவன் பேசுகிற விஷயமாகிய “அனைவரையும் ஒரே வலையில் பிடிப்பார்” பற்றி நான் நீண்ட நேரம் பேசமாட்டேன், ஏனெனில், இது இன்றைய கிரியையில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையாகவே, “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள்” என்பதில், அவருடைய பல வார்த்தைகள் மனுஷனைப் பற்றியே பேசுகின்றன—ஆனால் ஜனங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; அவர் என்ன சொன்னாலும், அவருடைய நோக்கங்கள் எப்போதும் நன்மையானதாகவே இருக்கின்றன. தேவன் பேசும் வழிமுறைகள் பல விதமாக இருப்பதால், ஜனங்கள் தேவனின் வார்த்தைகளில் நூறு சதவீதம் உறுதியாக இல்லை, மேலும் தேவனின் பெரும்பாலான வார்த்தைகள் அவருடைய கிரியையின் தேவைகளால் பேசப்படுகின்றன என்று நம்புகிறார்கள், மேலும் உண்மையைக் குறைவாகவே கொண்டுள்ளன என்று கூறலாம். இது அவர்களை தெளிவற்றவர்களாக்குகிறது மற்றும் அவர்களின் எண்ணங்களால் மேலும் பாரமடையச் செய்கிறது—ஏனெனில், அவர்களின் கருத்துக்களில், தேவன் மிகவும் ஞானமுள்ளவர், மேலும் அவர்கள் அடைய முடியாத அளவுக்கு முற்றிலும் தூரமானவராக இருக்கிறார், தேவனின் வார்த்தைகளை எப்படிப் புசிப்பது என்பதைப் பற்றி அவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக மற்றும் ஒரு குறிப்பும் அற்றவர்களாக இருப்பது போல தெரிகிறது. ஜனங்கள் தேவனின் வார்த்தைகளைப் பலனளிக்காததாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறார்கள்—தேவன் சொல்வது போல், “ஜனங்கள் எப்போதும் என் வாக்கியங்களுக்கு சுவை சேர்க்க விரும்புகிறார்கள்.” அவர்களுடைய கருத்துக்கள் மிகவும் சிக்கலானவையாகவும், தேவனால் “அரிதாய் அடையக்கூடியவையாகவும்” இருப்பதால், தேவனின் வார்த்தைகளின் ஒரு பகுதி மனுஷனால் கட்டுப்படுத்தப்படுவதால், அவருக்கு நேரடியான முறையில் பேசுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகச் செய்கிறது. ஜனங்களின் கோரிக்கைகள் “மிக அதிகமாக” இருப்பதாலும், அவர்களின் கற்பனை வளம் அதிகமாக இருப்பதாலும்—அவர்களால் சாத்தானின் செயல்களைக் காண ஆவிக்குரிய உலகத்திற்குள் கடந்து செல்ல முடிவது போல—இது தேவனின் வார்த்தைகளை மட்டுப்படுத்திவிட்டது, ஏனென்றால், எவ்வளவு அதிகமாக தேவன் சொல்கிறாரோ, அவ்வளவு அதிகமாக ஜனங்களின் முகங்களில் துக்கம் அதிகரிக்கிறது. அவர்களின் முடிவைப் பற்றி சிந்திக்காமல், ஏன் அவர்களால் வெறுமனே கீழ்ப்படிய முடியாது? இதில் பலன் எங்கே இருக்கிறது?

முந்தைய: அத்தியாயம் 31

அடுத்த: அத்தியாயம் 33

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக