அத்தியாயம் 111

உன் நிமித்தமாக எல்லா தேசங்களும் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படும்; உன் நிமித்தமாக எல்லா ஜனங்களும் என்னைப் பாராட்டிப் புகழ்வார்கள். என் ராஜ்யம் செழித்து, மேம்பட்டு, என்றென்றைக்கும் நிலைக்கும். அதை மிதித்துப்போட ஒருவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனக்கு இணக்கமாக இல்லாத எதுவும் இருக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஏனெனில் நானே மகத்துவமான தேவனானவர். நான் குற்றம் எதையும் அனுமதிக்க மாட்டேன். யாரும் என்னை நியாயந்தீர்க்கவும் யாரும் என்னோடு மாறுபாடு கொள்ளவும் நான் அனுமதிக்க மாட்டேன். என் மனநிலையையும் மகத்துவத்தையும் காட்ட இதுவே போதுமானதாகும். ஒருவன் என்னை விரோதிக்கும் போது நான் என்னுடைய வேளை வரும்போது அவனைத் தண்டிப்பேன். நான் யாரையும் தண்டிப்பதை ஏன் ஒருவரும் காணவில்லை? ஏனென்றால் என் நேரம் இன்னும் வரவில்லை, என் கரம் உண்மையில் இன்னும் செயலாற்றவில்லை. பெரும் பேரழிவுகள் மழைபோல் இறங்கினாலும், இது வரவிருக்கும் பெரும் பேரழிவுகளைப் பற்றிய பேச்சை மட்டுமே உள்ளடக்கியுள்ளது, அதேநேரத்தில் எந்த மனுஷருக்கும் இன்னும் பெரும் பேரழிவுகளின் யதார்த்தம் ஏற்படவில்லை. என் வார்த்தைகளில் இருந்து எதையாவது நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? இன்று, பெரும் பேரழிவுகளின் யதார்த்தத்தை நான் வெளியிட ஆரம்பிப்பேன். இதன் பிறகு, என்னை எதிர்ப்பது யாராக இருந்தாலும் என் கரத்தால் அடித்து வீழ்த்தப்படுவார்கள். கடந்த காலத்தில், ஒரு சிலரை வெளிப்படுத்துவதே நான் செய்தது எல்லாம்; பெரும் பேரழிவுகள் எதுவும் இன்னும் வரவில்லை. இன்று கடந்த காலத்தை விட வித்தியாசமானது. பெரும் பேரழிவுகள் உண்டாகுமென்று நான் உங்களுக்குக் கூறி இருப்பதால், ஒரு குறிக்கப்பட்ட காலத்தில், நான் பொதுமக்களுக்குப் பெரும் பேரழிவுகளின் யதார்த்தத்தை அறிவிப்பேன். இதற்கு முன்னால், யாரும் பெரும் பேரழிவுகளால் தொடப்படவில்லை, அதனால் பெரும்பாலான மக்கள் (அதாவது சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் குமாரர்கள்) தொடர்ந்து தன்னிச்சையாகவும் முரட்டாட்டமாகவும் செயல்பட்டு வருகிறார்கள். யதார்த்தம் வரும்போது, இந்த இழிவான ஜந்துக்கள் முற்றிலுமாக நம்புவார்கள். இல்லாவிட்டால், எல்லோரும் என்னைப் பற்றிய நிச்சயம் இல்லாமல் இருப்பார்கள். ஒருவருக்கும் என்னைப் பற்றிய தெளிவு இருக்காது. இதுவே என் ஆட்சிமுறை ஆணையாகும். இதில் இருந்து, நான் கிரியை செய்யும் விதம் (எல்லா மக்களிலும் நான் கிரியை செய்யும் விதத்தைக் குறிக்கிறது) மாறத் தொடங்கிவிட்டது என்பதைப் பார்க்கலாம்: என் உக்கிரகோபம், என் நியாயத்தீர்ப்பு, சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் சந்ததியின் வழியாக என் சாபம் ஆகியவற்றை நான் காட்டுகிறேன். என்னை எதிர்க்கும் எல்லோரையும் என் கரம் சிட்சிக்கத் தொடங்கிவிட்டது. என் இரக்கத்தையும் தயவையும் முதற்பேறான குமாரர்களின் மூலமாகக் காண்பிக்கிறேன். இன்னும் அதிகமாக, எந்தக் குற்றத்தையும் பொறுத்துக்கொள்ளாத என் பரிசுத்த மனநிலையை முதற்பேறான குமாரர்கள் மூலமாகக் காட்டுகிறேன்; என் அதிகாரத்தைக் காட்டுகிறேன், என் ஆள்தத்துவத்தைக் காட்டுகிறேன். ஊழியம் செய்பவர்கள் எனக்கு ஊழியம் செய்வதற்காக ஒழுங்கமைந்து விட்டார்கள். என் முதற்பேறான குமாரர்கள் மேலும் மேலும் அறியப்பட்டு வருகிறார்கள். என்னை எதிர்ப்பவர்களை அடித்து வீழ்த்துவதை ஊழியம் செய்பவர்கள் என் இரக்கமற்ற கரத்தைப் பார்க்க நான் அனுமதிக்கிறேன், அதனால் எனக்குப் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஊழியம் செய்கிறார்கள். மேலும், என் முதற்பேறான குமாரர்களை என் அதிகாரத்தைப் பார்த்து என்னைச் சிறந்த முறையில் புரிந்துகொள்ள நான் அனுமதிப்பதால் அவர்கள் ஜீவிதத்தில் வளர்கிறார்கள். இறுதிக் காலக்கட்டத்தில் நான் பேசும் வார்த்தைகள் (ஆட்சிமுறை ஆணைகள், தீர்க்கதரிசனம், எல்லா வகையான மக்களின் நியாயத்தீர்ப்பு உட்பட) வரிசையாக நிறைவேறத் தொடங்குகிறது; அதாவது, தங்கள் கண் முன் வார்த்தைகள் நிறைவேறுவதை ஜனங்கள் பார்ப்பார்கள். என் வார்த்தைகள் ஒன்றும் பயனற்றது அல்ல, ஆனால் ஒவ்வொன்றும் நடைமுறையானது என்று பார்ப்பார்கள். என் வார்த்தைகள் நிறைவேறும் முன்னர், பலர் அவைகள் நிறைவேறாததால் விட்டுவிலகுவார்கள். இதுவே நான் கிரியை செய்யும் விதமாகும்—இது என் இருப்புக் கோலின் செயல்பாடு மட்டுமல்ல, ஆனால் அதைவிட மேலானது, அது என் வார்த்தைகளின் ஞானமாகும். இவற்றில் இருந்து, என்னுடைய சர்வவல்லமையையும், சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் மேல் எனக்குள்ள வெறுப்பையும் ஒருவர் பார்க்கலாம். (நான் என் கிரியையைத் தொடங்கிய பின்தான் இதைப் பார்க்க முடியும். இப்போது சிலர் வெளிப்படுத்தப்படுகிறார்கள்—இது என் சிட்சையின் ஒரு சிறு பகுதிதான், ஆனால் இதைப் பெரும் பேரழிவுகளில் சேர்க்க முடியாது. இது புரிந்துகொள்ள கடினமானது இல்லை. இவ்வாறு இப்போதில் இருந்து நான் கிரியை செய்யும் விதம் ஜனங்கள் புரிந்துகொள்ள இன்னும் கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக நேரம் வரும்போது நீங்கள் பலவீனம் அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இன்று இதைச் சொல்லுகிறேன். நான் உங்களிடம் ஒப்படைப்பது இதுவே. ஏனெனில், பழங்காலம் முதற்கொண்டு ஜனங்கள் பார்த்திராத விஷயங்களும், தங்கள் உணர்வுகளையும் சுய நீதியையும் ஜனங்களால் ஒதுக்கிவைக்கக் கடினமாக்கும் விஷயங்களும் நடைபெறும்.) சிவப்பான பெரிய வலுசர்ப்பம் எனக்கு எதிரியும் விரோதியுமாக இருப்பதால்தான் நான் அதைத் தண்டிக்க பல வழிகளைப் பயன்படுத்துகிறேன். அதனுடைய எல்லா சந்ததிகளையும் நான் அழிக்க வேண்டும்—அதன் பின்னர்தான் வெறுப்பை என் இருதயத்தில் இருந்து அகற்ற முடியும், அதன் பின்தான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை என்னால் சரியாக அவமானப்படுத்த முடியும். இது மட்டும்தான் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தை முற்றிலுமாக அழித்து அதை அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலில், பாதாளக் குழிக்குள் தள்ளும்.

எல்லா தேசங்களையும் என்னோடு சேர்ந்து அரசாளவும் நிர்வகிக்கவும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் என் முதற்பேறான குமாரர்களை நான் அனுமதித்தது நேற்று மட்டுமல்ல; இன்றும் நான் அனுமதிக்கிறேன், மற்றும் மிக முக்கியமாக நாளையும் அனுமதிப்பேன். நான் வெற்றிகரமாக என் கிரியையை நிறைவேற்றியிருக்கிறேன்—நான் தொடர்ந்து இவ்வாறே கூறி வருகிறேன், சிருஷ்டிப்பின் தொடக்க காலம் முதல் நான் இவ்வாறு சொல்லத் தொடங்கினேன் என்று கூடக் கூறலாம், ஆனால் நான் என்ன சொல்லுகிறேன் என்று மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. சிருஷ்டிப்பின் காலம் முதல் இன்றுவரை, நான் தனிப்பட்ட முறையில் கிரியை செய்யவில்லை; வேறு வார்த்தைகளில் கூறினால், பேசவும் கிரியை செய்யவும் என் ஆவி ஒருபோதும் மனிதனின் மேல் இறங்கவில்லை. ஆனால் கடந்த காலத்தை விட இன்று வேறானது: பிரபஞ்ச உலகில் எங்கும் என் ஆவி தனிப்பட்ட முறையில் கிரியை செய்து வருகிறது. ஏனெனில் கடைசி நாட்களில் என்னோடு அதிகாரத்தில் இருந்து ஆட்சி செய்ய நான் ஒரு கூட்ட மக்களை ஆதாயம் செய்ய விரும்பினேன். முதலில் என்னோடு ஒரு மனதாய் இருக்கும், என் பாரத்தின் மேல் கருத்தாய் இருக்கும் ஒரு நபரைப் பெறுகிறேன். பின்னர், என் குரலை வெளிப்படுத்தவும் என் ஆட்சிமுறை ஆணைகளை வெளியிடவும் பிரபஞ்ச உலகத்திற்கு என் இரகசியங்களை வெளியிடவும் என் ஆவி முழுவதுமாக அவன் மேல் இறங்கும். என் ஆவி தனிப்பட்ட முறையில் அவரைப் பரிபூரணப்படுத்தும்; என் ஆவி தனிப்பட்ட முறையில் அவரை ஒழுங்குபடுத்தும். ஏனெனில் அவர் சாதாரண மனிதத்தன்மையில் வாழ்கிறார், யாராலும் தெளிவாகப் பார்க்க முடியாது. என் முதற்பேறான குமாரர்கள் சரீரத்தில் பிரவேசிக்கும்போது, நான் இப்போது செய்வது யதார்த்தமா என்பது முற்றிலுமாகத் தெளிவாகும். நிச்சயமாக, மனிதக் கண்களில், மனித எண்ணங்களில், விசுவாசிகள் யாரும் மற்றும் ஒருவரும் கீழ்ப்படிதலோடு இருக்க முடியாது. ஆனால் மக்களை நான் இவ்வாறுதான் சகித்துக்கொள்ளுகிறேன். ஏனெனில் யதார்த்தம் இன்னும் வரவில்லை. அதனால் மக்களால் நம்பவோ புரிந்துகொள்ளவோ முடியாது. மனித கருத்துக்களுக்கு நடுவே என் வார்த்தைகளை விசுவாசிக்கும் ஒருவரும் இருந்ததில்லை. ஜனங்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்: ஒன்று அவர்கள் என் மாம்ச சுயம் சொல்வதை மட்டும் விசுவாசிக்கிறார்கள், அல்லது அவர்கள் என் ஆவிக்குரிய குரலை மட்டும் விசுவாசிக்கிறார்கள். மக்களைக் கையாளுவதில் இதுவே மிகவும் கடினமான விஷயம். தங்கள் கண்முன் நிகழும் ஒன்றை பார்க்காவிட்டால், யாரும் தங்கள் சொந்தக் கருத்துக்களை விட மாட்டார்கள், மேலும் நான் சொல்வதை ஒருவரும் கேட்க மாட்டார்கள். அதனால்தான் அந்த கீழ்ப்படியாமையின் குமாரர்களைத் தண்டிக்க நான் என் ஆட்சிமுறை ஆணைகளைப் பயன்படுத்துகிறேன்.

இப்படிப்பட்ட விஷயங்களை இதற்கு முன்னும் கூறியிருக்கிறேன்: நான் முந்தினவரும் பிந்தினவருமாய் இருக்கிறேன், ஆதியில் இருந்து முடிவுபரியந்தம் நானே எல்லாவற்றிற்கும் பொறுப்பாய் இருக்கிறேன். கடைசி நாட்களில், எனக்கு 144,000 ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள் கிடைப்பார்கள். “ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள்” என்ற இந்த வார்த்தைகளைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லுக்குச்சொல் நேரான புரிதல் இருக்கிறது, ஆனால் 144,000 என்ற இந்த எண்ணைப் பொறுத்த வரையில் உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. மனித கருத்துக்களில், ஓர் எண்ணானது மக்கள் எண்ணிக்கையை அல்லது பொருட்களின் எண்ணிக்கையைக் குறிக்க வேண்டும். “144,000” மாற்றம் பெற்ற “ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள்”—“144,000 ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள்” என்பதைப் பொறுத்தவரையில் 144,000 ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள் இருப்பதாக ஜனங்கள் நினைக்கிறார்கள். மேலும், சிலர் இந்த எண்ணின் உண்மைக்குள் ஏதோ குறியீட்டு அர்த்தம் இருப்பதாக நினைக்கிறார்கள், மேலும் அவர்கள் 140,000 மற்றும் 4,000 ஐ தனித்தனிப் பகுதியாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். ஆனால் இந்த இரு விளக்கங்களும் தவறானவை. இது ஓர் உண்மையான எண்ணைக் குறிக்கவில்லை. அதைவிட எந்தக் குறியீட்டு அர்த்தத்தையும் குறிக்கவில்லை. மனுக்குலத்திலுள்ள யாராலும் இதில் நுழைய முடியாது—கடந்த காலத் தலைமுறையினர் இது குறியீட்டு அர்த்தத்தைக் கொண்டிருக்குமோ என்று நினைத்தார்கள். “144,000” என்ற எண் ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. அவ்வகையில், 144,000 என்பது கடைசி நாட்களில் ஆளுகை செய்யும், நான் நேசிக்கும் ஒரு கூட்ட ஜனங்களைக் குறிக்கிறது. அதாவது, சீயோனில் இருந்து வந்து சீயோனுக்குத் திரும்பிச் செல்லும் ஒரு கூட்ட மக்கள் என்று 144,000 விளக்கப்பட வேண்டும். 144,000 ஜெயங்கொண்ட ஆண் பிள்ளைகள் என்பதன் முழு விளக்கம் பின்வருமாறு: சீயோனில் இருந்து உலகத்திற்கு வந்து சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு பின்னர் இறுதியாக என்னால் மறுபடியும் ஆதாயம் செய்யப்பட்டு என்னோடு சீயோனுக்குத் திரும்பும் ஜனங்கள் ஆவார்கள். என் வார்த்தைகளில் இருந்து, ஒருவர் என் கிரியைகளின் படிநிலைகளைப் பார்க்கலாம். அதாவது நீங்கள் சரீரத்துக்குள் பிரவேசிக்கும் நேரம் அதிக தூரத்தில் இல்லை. அதனால்தான் நான் இந்த அம்சம் பற்றி உங்களுக்குத் திருப்பித்திருப்பி விளக்கி அதைப் பற்றிய நினைவூட்டல்களையும் அளித்தேன். நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம், மற்றும் என் வார்த்தைகளில் இருந்து கடைபிடிக்கும் வழிகளையும் காணலாம்; என் கிரியையின் வேகத்தையும் என் வார்த்தைகளில் இருந்து கண்டுபிடிக்கலாம். பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வேகத்தைக் கண்டுபிடிக்க, நான் வெளிப்படுத்தும் இரகசியங்களில் இருந்து நீங்கள் அதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் (ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஒருவராலும் பார்க்க முடியாது மற்றும் ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது). அதனால்தான் நான் கடைசி நாட்களில் இரகசியங்களை வெளிப்படுத்துகிறேன்.

என் வீட்டில், எனக்கு இணக்கமாக இல்லாத ஒன்றும் இல்லை, மேலும் இப்போதில் இருந்து நான் அசுத்தங்களை அகற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தம் செய்யப் போகிறேன். மக்கள் மத்தியில் ஒருவரும் தலையிட முடியாது, மேலும் ஒருவராலும் இந்தக் கிரியையைச் செய்ய முடியாது. ஏன் கடைசி நாட்களில் நானே கிரியைச் செய்கிறேன் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இதனால்தான் நீங்கள் சும்மா அனுபவித்து மகிழுங்கள் ஒரு விரலைக் கூட அசைக்க வேண்டிய தேவை இல்லை என்று நான் உங்களிடம் பல முறை கூறியிருக்கிறேன். இதன் மூலம்தான் என் வல்லமை வெளிப்படுத்தப்படுகிறது, என் நீதியும் மக்கத்துவமும் வெளிப்படுத்தப்படுகின்றன, மற்றும் ஜனங்களால் திறக்க முடியாத என் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. (என் நிர்வாகத் திட்டம் பற்றிய எந்த அறிவும் என் கிரியையின் படிநிலைகள் பற்றி எந்த ஒரு புரிதலும் ஜனங்களுக்கு ஒருபோதும் இல்லாத காரணத்தால், அவை “இரகசியங்கள்” என அழைக்கப்படுகின்றன.) நான் எதை ஆதாயம் செய்வேன், கடைசி நாட்களில் நான் என்ன செய்வேன் என்பவையே இரகசியங்கள். உலகத்தை நான் சிருஷ்டிக்கும் முன், நான் இன்று செய்வதை ஒருபோதும் செய்யவில்லை மற்றும் என் மகிமையான முகத்தையோ அல்லது என் ஆள்தத்துவத்தின் எந்த ஒரு பகுதியையோ நான் ஒருபோதும் காட்டியதில்லை; என் ஆவி மட்டுமே சிலரில் கிரியை செய்தது. (ஏனென்றால், சிருஷ்டிப்பின் காலம் முதலாய், என்னை ஒருவராலும் வெளிப்படுத்த முடியவில்லை, என் ஆள்தத்துவத்தைக் காண நான் ஒருவரையும் அனுமதிக்கவில்லை, மற்றும் என் ஆவி சிலரில் கிரியை செய்தது.) இன்றுதான் நான் என் மகிமையான சாயலையும் என் ஆள்தத்துவத்தையும் மனுஷனுக்கு வெளிப்படுத்தி இருக்கிறேன், மேலும் இப்போதுதான் அவர்கள் இந்த விஷயங்களைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இன்று நீங்கள் பார்ப்பதும் இன்னும் முழுமையானது அல்ல, மற்றும் நீங்கள் என்னப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேனோ அதுவும் அல்ல. நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புவது சரீரத்தில் மட்டுமே. இதுவரை ஒருவரும் இந்த நிலையைச் சந்தித்தது இல்லை. வேறு வார்த்தையில் சொன்னால், அவர்கள் சரீரத்துக்குள் பிரவேசிக்காமல் ஒருவரும் என் ஆள்தத்துவத்தைப் பார்க்க முடியாது. ஆகவே, நான் என ஆள்தத்துவத்தைச் சீயோன் மலையில் பிரபஞ்ச உலகத்துக்குக் காட்டுவேன். இதில் இருந்து சீயோன் மலைக்குள் பிரவேசிப்பதுதான் என் திட்டத்தின் இறுதிப் பகுதி என்று அறியலாம். சீயோன் மலைக்குள் பிரவேசிக்கும் போது, என் ராஜ்யம் வெற்றிகரமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். வேறு வார்த்தைகளில் கூறினால், என் ஆள்தத்துவமே ராஜ்யம். ராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் நேரமே முதற்பேறான குமாரர்கள் சரியாக சரீரத்துக்குள் பிரவேசிக்கும் நேரமாகும். இதனால்தான் முதற்பேறான குமாரர்கள் சீயோன் மலைக்குள் பிரவேசிப்பதைப் பற்றி நான் திரும்பத்திரும்பக் கூறியிருக்கிறேன். என்னுடைய முழு நிர்வாகத் திட்டத்தின் மையக் கருத்தும் இதுதான். இதை இதற்கு முன்னால் யாரும் புரிந்துகொண்டதில்லை.

கிரியை செய்யும் முறையை ஒருதடவை நான் மாற்றினால், மனிதச் சிந்தனைக்கு எட்டாத இன்னும் பல விஷயங்கள் இருக்கும், ஆகவே இதைப் பொறுத்தவரையில் கவனமாக இருங்கள். மனிதச் சிந்தனைக்கு எட்டாத விஷயங்கள் உள்ளன. ஆனால் அதற்காக நான் கூறுவது தவறு என்று ஆகாது. இன்னும் அதிகமாய் ஜனங்கள் துன்பப்பட வேண்டிய தேவை இருக்கிறது மற்றும் ஜனங்கள் இன்னும் அதிகமாக என்னுடன் ஒத்துழைக்க வேண்டி இருக்கிறது. முரட்டாட்டமாக ஒழுங்கீனமாய் இருக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை மட்டுமே பின்பற்றாமல் இருங்கள். இந்த விஷயத்தில்தான் எனக்கு ஊழியம் செய்யும் பலர் விழுந்துவிடுகின்றனர். மனித சுபாவத்தையும் மனிதக் கருத்துக்களையும் வெளியரங்கமாக்க நான் என் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். (ஆனால் எனக்கு ஊழியம் செய்பவர்களின் கருத்துக்களை நான் மாற்றாததால் அவர்கள் விழுந்துபோகிறார்கள், அதேநேரத்தில் என் முதற்பேறான குமாரர்களின் கருத்துக்களை மாற்றி இதன் மூலம் அவர்கள் சிந்தனையை அகற்றுகிறேன்.) ஆகவே முடிவில் நான் வெளிப்படுத்தும் இரகசியங்களின் நிமித்தமாய் என் முதற்பேறான குமாரர்கள் எல்லாரும் பரிபூரணப்படுத்தப்படுவார்கள்.

முந்தைய: அத்தியாயம் 110

அடுத்த: அத்தியாயம் 112

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக